Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ராம் வெட்ஸ் சீதா – 13 (1)

ராம் வெட்ஸ் சீதா 13{1}

திருமணம் நல்லப்படியாக முடிந்தது, ஆனால் சீதாவின் சந்தேக பார்வை சேட்டுவீட்டம்மாவை  நோக்கி செல்ல, அவரோ யாருக்கும் எந்த சந்தேகம் வராததை போல் பக்கத்தில் இருந்த பெண்மணியிடம் சிரித்து பேசிக்கொண்டு இருந்தார்.



Advertisement

திருமணம் முடித்து விட்டு காலைஉணவுக்காக முனுசாமி ஏற்கனவே சொல்லிவைத்தர் போல் பக்கத்தில் இருக்கும் உணவுவிடுதிக்கு திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.

அனைவரும் சாப்பிட செல்ல கோமளத்தின் விழிகள் மட்டும் ராதாவிடம் நெருப்பாய் நோக்கியது.

Advertisement

Advertisement

அவளோடு துணைக்கு சீதாவும் ஹரிணியும் இருக்க, அவரால் ஏதும் செய்ய முடியவில்லை.

என்ன செய்யலாம், என்று சுற்றும் முற்றும் சுத்தி பார்த்தவரின் விழிகள் அங்கு திருமணத்திற்கு கொண்டு வந்த சீர் தட்டில் இருக்கும் வாழைப்பழம் தென்பட்டது.

Advertisement

உடனே அங்கு சென்று மூணு வாழைப்பழத்தை எடுத்து, தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த மயக்க மருந்து ஸ்ப்ரேயை எடுத்து பழத்தை பிரித்து அதில் ஸ்ப்ரே அடித்தார்.

யாரும் பார்க்கவில்லை என்று எண்ணி பெருமூச்சை ஒன்று வெளியிட்டவர் நேராய் புதுமணதம்பதியை நோக்கி வந்தார், வந்தவர் அவர்களை பார்த்து வாயெல்லாம் பல்லாக “தம்பிங்கோ, கல்யாணம் முடிஞ்ச பிறக்கோ, பொண்ணுக்கு பால் பழம் கொடுக்கணுமுங்கோ, நீங்க செத்த நாழி அங்க போயி அமருங்கோ, நான் பொண்ணுக்கு பழம் கொண்டு வந்திருக்கேனுங்கோ , இந்தாங்கோ பழம் “என ஏற்கனவே பிரித்த பழத்தை பிரிப்பது போல் பாவ்லா காட்டி பழத்தை பிரித்து ராதாவின் முன்னால் காட்ட, அதை வெற்றி வாங்கிகொண்டான்.

“நாங்க அங்க போய் கொஞ்சம் நேரம் உட்கார்ந்து சாப்பிடறோம், ஆமா நீங்கள் யாரு?, நான் உங்களை பார்த்ததே இல்லை,”என்றவனின் கேள்வியில் அதிர்ந்த சேட்டும்மா, திக்கி திணறி “அதுவந்து தம்பிங்கோ நான் தானுங்கோ உங்களோடியா சேட்டம்மா, நோக்கு தெரியாதாங்கோ “என்று கூற “இல்லைங்க எனக்கு உங்களை எங்கையும் பார்த்ததா ஞாபகம் இல்லைங்கோ “என்று கூறினார்.

“அட என்ன தம்பிங்கோ நீங்க, செத்த அந்த பழத்தை பொண்ணு வாயில போடுங்கோ, நாணும் என் வேலையை பார்க்க போகணுமுங்கோ,”என்றவரின் சொல்லுக்கு மரியாதை கொடுக்கவும், கையில் இருந்த பழத்தை ராதாவுக்கு ஊட்டும் போது அதை கீழே தட்டி விட்டது நமது நாயகன் ராமின் கரம்.

கீழ விழுந்த பழத்தை பார்த்து திகைந்த அந்த சேட்டம்மா, அதை தட்டி விட்டவணை நோக்கி சென்று அவனை ஓங்கி அறையை கையை ஓங்கும் போது சட்டென்று குறுக்கே வந்து தடுத்தது முருகேசுவின் கரங்கள்.

“இந்தா மா ஆரு நீயி, என் நண்பனை கையை நீட்டி அடிக்கிற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா உனக்கு?”என அவரை பார்த்து சத்தம் போட்டவன் பிடித்து இருந்த அவரின் கையை கீழே விட்டு, ராமிடம் திரும்பி “வாடே ராமு நாம போவலாம் “என்று அவனின் கையை பிடித்து இழுக்க, ராமோ “கொஞ்சம் இரு டா, உண்மையை உரக்க வச்சிட்டு வரேன் “என்றவன் தனது சட்டை பாக்கெட்டில் இருந்த கைபேசியை எடுத்து, அதில் சற்று முன் பிடித்த திரையை வெற்றியிடம் காட்டினான் ராம்..

அதை வாங்கி பார்த்த வெற்றியின் விழிகள் கோவத்தில் கோவப்பழமாய் சிவந்தது…

ஏதும் அறியாததை போல் ராமை முறைத்து கொண்டு இருந்த சேட்டம்மாவின் கன்னத்தை பதம் பார்த்தது வெற்றியின் கைவிரல் தடம்.

ஒரு பெரியவரை கை ஓங்கி அடித்த வெற்றியை அதிர்ச்சியோடு திரும்பி பார்த்தாள் ராதா.

“அத்தான் என்ன இது, வயசு பெரியவங்களை கை ஓங்கி அடிக்கிறது, அது ரொம்ப தப்புனு உங்களுக்கு தெரியாதா “என்று நடந்ததை ஏதும் அறியாமல் பேசிய ராதாவை பார்த்தான் வெற்றி.

முதன்முதலில் அவளோடு கரம் பிடித்த வரைக்கும் அமைதியாக இருந்தவள் இப்பொது அவனை எதிர்த்து கேள்விகளை அதுக்கும் புதிய மனையாளை முறைத்து பார்த்தான் அந்த காளையவன்.

“ராதா, நடந்தது என்னவென்று தெரிஞ்சிட்டு அப்புறம் என்னைய கேள்வி கேளு, ஆமா இந்த பொம்பளை யாரு,? எங்க பக்கம் இந்த மாதிரி குண்டு பொம்பள யாருமே கிடையாது, உங்க பக்கமிருந்து தான் வந்திருக்கணும், யாருனு நல்லா பார்த்து சொல்லு “என்ற கணவனின் கூற்றை செவியில் வாங்கி அந்த சேட்டம்மா வேடத்தில் நின்று இருந்த கோமளத்தை பார்த்தாள் ராதா.

நன்றாக அவளின் கோலிகுண்டு விழிகள் உருட்டி உருட்டி பார்த்தாலும் அவளால் கண்டுபிடிக்க முடியாமல் போக அருகில் நின்று இருந்த சீதைவிடம் அவளின் பார்வையை திரும்பினாள்.

சீதாவோ ராமை தான் மெய்மறந்து பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அவளின் கையை பிடித்து கிள்ளி நிஜவுலகிற்கு கொண்டு வந்த ராதா அவளிடம் “அடியேய் சீதா, இந்த பொம்பள யாரு டி, நம்ம சைடுல இருந்து தான் வந்திருக்கணும்ன்னு அத்தான் சொல்றாரு, நீயாச்சு நல்லா பாரு, யாருனு தெரிதான்னு “என்ற தோழி கூறியதை தொடர்ந்து சீதாவின் பார்வை அந்த பொம்பளை மேல் படிந்தது.

அவளின் சந்தேகம் இப்பொது உறுதியானது தான். சரியானது தான். ஆம் அவள் முன்னமே அந்த சேட்டம்மாவின் மேல் விழிகள் வைத்து அவரை சந்தேகம் கொண்டாள்.

உடனே “இவங்க யாருனு கூடவா உனக்கு தெரில ராதா, இவங்க தான் டி உன் ஜென்மத்து எதிரி, கோமளம் “என்று கூற அங்கு நைசாக தப்பிக்க பார்த்த கோமளத்தை பிடித்துக்கொண்டான் ராமகிருஷ்ணன்.

“என்ன டி சொல்ற அந்த பொம்பளையா இது, ஆமா இத யாரை கல்யாணத்துக்கு பத்திரிகை வைச்சி வாங்க ன்னு கூப்பிட்டது”, என்றவள்  கோமளத்தை நோக்கி “இந்தா சாராயக்காரி நீலாம் கல்யாணத்துக்கு வரலைன்னு யாரு அழுதா, முதல உன் வூட்டுக்கு யாரு பத்திரிகை வச்சது, இந்தா என்ன மொறைப்பு, ஒழுங்கா வாயை திறந்து பதில் சொல்லு, இல்லை நீ ஸ்ப்ரே அடிச்ச வாழப்பழத்தை உனக்கே கொடுத்துடுவேன் “என்று விரலை நீட்டி பேசிய ராதாவை ஆவென பார்த்தான் வெற்றி.

இவ நம்ம ரதி குட்டி தானா, இம்புட்டு வாயி பேசறா, ஆத்தி அடேய்ய் வெற்றி தெரியாம வந்து இவ கிட்ட சிக்கிட்டோம் டா, என்று அவனின் மனசாட்சி சொல்ல அவனோ “நான் யாரு வெற்றி,வெற்றிவேந்தனாக்கும் என்கிட்ட இவ வாயி பலிக்காது, நான் சொல்றது தான் இவ கேட்கணும், நீ கொஞ்சம் உள்ள போயி அடங்கிட்டு இரு “என்று மனசாட்சியை விரட்டினான் அந்த புது மாப்பிள்ளை.

ராதாவும் சீதாவும் எவ்வளவு கேள்வி கேட்டும் கோமளம் வாயை திறந்த பாடில்லை.

சீதாவுக்கு வந்த கோவத்தில் கீழே மண் தரையில் இருந்த வாழை பழத்தை எடுத்து கோமளத்தின் வாயில் வம்படியாக வைக்க அதை வெளியில் துப்பினார் கோமளம்.

“ஏய் வெள்ளை பன்னி, நீ அந்த பார்த்தசாரதி மவ தானே, ஏன் டி என்ன திகிரியம் இருந்தா என் வாயை புடிச்சி, நான் கொடுத்த பழத்தை எனக்கே வாயில போடுவ “, இரு டி உனக்கும் இதேபோல நடத்தி காட்டுறேன், என்று தப்பித்து ஓட பார்த்தவரை கெட்டியாக பிடித்த ராம் முருகேசுவிடம் “டேய் இதை கொண்டு போயி அப்பா கிட்ட கொடுத்து போலீஸ்க்கு போன் பண்ணி சொல்ல சொல்லுவோம் “என்றதும் ஆமா டா என்பது போல் தலையை ஆட்டினான் முருகேசு.

அவனும் கோமளத்தை பிடித்து இழித்து கொண்டு ராமின் தந்தை நிற்குமிடத்துக்கு சென்று நடந்ததை கூற அவரோ பழனி காவல் நிலையத்திற்கு போன் போட்டு வர சொல்லி கோமளத்தை ஒப்படைத்து விட்டு சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தார்.

வெற்றிக்கும் ராதாக்கும் தனிமை தேவை பட்டது போல, ராமும் சீதாவும் அங்கு ஓரத்தில் இருந்த ஒரு மரத்தின் நிழலின் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க, அந்த வழியாக அவளின் அண்ணன் ராமை தேடி வந்தாள்  அபிநயா.

அங்கு அண்ணன் அமர்ந்து இருப்பதை பார்த்து அவனின் சென்று “ஏண்டா தடிமாடு, உன்னைய எங்கெல்லாம் தேடறது, தெரியாத தனமா உன்கூட பொறந்து தொலைஞ்சதுக்கு இப்படியா என்னைய அங்குட்டு இங்குட்டு ன்னு அலைய வுடுவ, அவனின் தங்கை பேசிக்கொண்டே செல்ல அவனும் அய்யோ இவ எதுக்கு இந்த பக்கம் வந்தா, இன்னேரம் பார்த்தா இவ இங்க வரணும், அய்யோ கம்முனு இரு டி, சும்மா இரு டி, ப்ளீஸ்” என்று அவனும் கெஞ்ச, அவனின் செல்ல தங்கை அதை காதில் வாங்கினா தானே, அவளும் அவள் பாட்டுக்கு அண்ணனை கழுவிகழுவி ஊத்த, இரண்டு அடி தள்ளி அமர்ந்து இருந்த சீதா இதை வேடிக்கை பார்த்தாலும் அவளுக்கு சிரிப்பு தான் வந்தது, ஆனால் அவள் வாயை திறந்து சிரிக்க வில்லை, மாறாக ராமை காதலோடு பார்த்தாள்.

“ஏண்டா தடிமாடு நான் பாட்டுக்கு கத்திட்டு இருக்கேன், நீ என்ன சும்மா இரு வாயை மூடு ன்னு சொல்ற, சரிவா உன்னைய அப்பா கூப்பிட்டாரு, “என்று அவனின் கையை பிடித்து இழுக்க, அவளின் தமையனோ “நீ போ நான் முருகேசு வந்த உடனே வரேன் “என்றவனை ஒரு மார்க்கமாக பார்த்த அபிநயா “அய்யோ அண்ணா அந்த முறுக்கு அங்க தான் சாமி பார்க்க லைன்ல நின்னுட்டு இருக்கான், அப்பா தான் உன்னைய மட்டும் காணோமே ன்னு தேடி கூப்பிட்டு வர சொன்னாரு “என்றதும் அவனுக்கு நண்பனின் மீது தான் கொலை வெறியே வந்தது..

அட கிராதகா, இப்படியாடா பழி வாங்குவ, கொஞ்ச நேரம் இப்படி என் சீதை கூட பேச விடமாட்டான் போல, இப்ப இந்த மொசக்குட்டிகிட்ட என்ன பதில் சொல்லி அனுப்புறது, என்று யோசித்தவனுக்கு  சட்டென்று அவனின் மூளையில் பல்பு எறிந்தது.

“என் செல்ல அபிநயா, அபி செல்லம், என் கூட பொறந்த மொசக்குட்டி, அண்ணா உனக்கு புடிச்ச ரோஸ் கலர் பஞ்சிமுட்டாய் வாங்கி கொடுக்கறேன், நீ போ நான் உனக்கு பஞ்சிமுட்டாயி வாங்கிட்டு பத்தே நிமிசத்துல வந்துடறேன்டா செல்லம் “என்று முயல் போன்று இருந்த அவளின் கன்னத்தை பிடித்து கிள்ளினான் ராம்.

“அடேச்சே கன்னத்துல இருந்து கையை எடு, எனக்கு பஞ்சிமுட்டாயி குச்சிமுட்டாயி ஒன்னும் வேணாம் நீ வந்தா மட்டும் போதும் எனக்கு “என்று அவளும் வம்படியாக அவனை அழைத்து செல்லவதிலே குறியாக இருக்க, அவனோ “ஏய் மொசக்குட்டி ஒரு தரம் சொன்னா விளங்காது ஒனக்கு, ஆமா உன் மூளையில என்ன தான் ஓடும், நீ பொறந்ததுல இருந்து நாணும் பார்த்துட்டே இருக்குறேன், ஏதாவது சொல்லி என்னைய எழுத்துட்டு போறதுலே அடம்பிடிச்சி நிக்கிற, போ முதல இங்கிருந்து “என்று அவன் ஒரு அதட்டு அதட்ட அவனின் தங்கையோ கலங்கி விழியோடு அங்கிருந்து ஓடி விட்டாள்.

அவள் சென்றதும் சீதாவை நோக்கி பார்வை திரும்ப, சீதாவோ அவனை முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தாள்.

‘இவ எதுக்கு நம்மளை இப்போ முறைச்சி பாக்குறா ‘எனவும் அவளிடம் ஈஈஈஈ வென்று இளிச்சு வைக்க அவளோ “ராம் உங்கிட்ட தனியா பேசணும் அதோ அந்த மணமகள் அறைன்னு ஒன்னு இருக்குல்ல அங்க வா, நான் முன்னாடி போறேன், என் பின்னாடியே நீயும் வா ” என்று அவள் கூறியதை கேட்டு திகைந்த ராம் “ஏய் என்னை என்ன அவ்வளவு கேவலம் ன்னு நினைச்சியா “என்று அவன் கூற, அவளோ “அடச்சீ நீ ஏதாவது தப்பா கற்பனை பண்ணி தொலைச்சா அதுக்கு நான் பொறுப்பேர்க்க முடியாது, ஒழுங்கா வா “என்று கூறி சென்று விட்டாள்.

அவள் முதலில் செல்ல, அவளின் பின்னாலே அவனும் சென்றான்.

அவன் அறைக்கு வந்ததும் கதவை தாழ்ப்பாள் போட்டவள், ராமிடம் வந்து அவளின் இரு கைகளை ஒன்றாக தேய்த்து சூட்டை வரவைத்து,அவனிடம் திரும்பி நிற்க சொல்லி, அதே சூடான கைகள் ராமின் முதுகை பதம் பார்த்தது.

“ஆஆஆஆ ஐயோஓஓ அம்மே “வென்று கத்த, அவனை முறைத்து பார்த்துக்கொண்டே “ஷ்ஸ்ஷ், சவுண்ட் வெளிய வர கூடாது, என்னடா நினைச்சிட்டு இருக்க நீயி, ஆமா நான் இங்க வந்தது உனக்கு எப்படி தெரியும், என்னைய பின்தொடர்ந்து வரத்து தான் உன் வேலையா,?” என்று கேள்வி கேட்டவளை புரியாமல் பார்த்தான் ராமகிருஷ்ணன்.

‘இவ என்ன லூசா, நான்  இவளை பின்தொடர்ந்து போகணும் ன்னு என் தலையெழுத்து , இவ இங்க இருப்பான்னு நான் என்ன கனவா கண்டேன் ‘, என்று யோசித்து கொண்டு அவளிடம் ” இங்க பாரு சீதா நான் இன்னும் உன்னைய பின்தொடர்ந்து வரல, இன்னும் சொல்ல போனா இன்னக்கி ராதாக்கு கல்யாணம் ன்னு எனக்கு தெரியாது, ஏன் நீயே இங்க இருப்ப ன்னு எனக்கு தெரியாது, ஆனா இங்க வந்து பார்த்ததுக்கு அப்புறம் என் தேவதையே இங்க தான் இருக்கான்னு தெரிஞ்சதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துது தெரியுமா உனக்கு, நீ என்னனா இப்படி ரூம்க்கு கூட்டுயாந்து சூடா அடி கொடுக்கற, “என்றான் அவளின் காதலவன்.

அவனின் வார்த்தைகள் அவளின் உள்ளம் சில்லென்று இருந்தாலும், அதை வெளிகாட்டி கொள்ளாமல் “என்ன சொன்ன தேவதையா, அது யாரு? எங்கே இருக்கா அவ? “என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்காமல் இருக்க

அவனின் இதழை கொண்டு அவளின் கோவப்பழஇதழை சிறை பிடித்து கொண்டான் ராமகிருஷ்ணன்.

அவனின் திடீர் இந்த இதழ் முத்தத்தால் அதிர்ந்தாலும் அவனின் காதலன் தானே என்று அவளும் அதற்கு இசைத்து கொண்டு இருந்தாள், அதே வேளையில் திடீரென்று வெளியே கதவு தட்டும் சத்தம் கேட்டத்தில் இருவருவின் இதழ்கள் பிரிக்க பட்டு, முகத்தில் அச்சம் பரவியது.

கதவை தட்டியது யார்,? சீதா-ராமின் காதல் எந்த போராட்டமும் இல்லாமல் திருமணத்தின் வரைக்கும் செல்லுமா? என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து கதையை வாசித்து மகிழுங்கள்.

அன்புடன்

ரஞ்சிதா ❤❤❤

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!