Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kuzhalisai Azhagae

குழலிசை அழகே – 3

அத்தியாயம் – 3

“நிச்சயதார்த்தமா..????”

காணொலி வழியே கருவிழிகள் கழன்று விழுந்துவிடும் போல் அதிர்ச்சியாய் பார்த்த சக்தியின் பாவனையில் ஆரியனுக்கு சிரிப்பு வர
அமைதியாய் அதனை ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுத்துக் கொண்டாலும் வாயோ,



Advertisement

“ஹே..மேகிக்கு தான் நிச்சயதார்த்தம்.. ஏதோ எனக்கே நிச்சயம்னு சொன்னா மாதிரி நீ ஏன் இப்ப இவ்வளவு ஷாக் ஆகிற..”
என்று கிண்டலாய் பேச  அதில் அதிர்ச்சி மறைந்து ஒற்றை புருவம் தூக்கி முறைத்தவள்,

“சார்-க்கு அப்படி சொல்ல வேற ஆசை இருக்கோ… பிச்சுடுவேன் பாத்துக்க..”
என்று மிரட்டிவிட்டு,

“ரெண்டு நாள் முன்னாடி தான் பொண்ணு பார்க்க வராங்கன்னு சொன்ன.. அதுக்குள்ள அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்.. அத்தோட இரண்டு மாசத்தில் கல்யாணம்.. எனக்கு என்னமோ ஃபாஸ்ட் ஃபார்வர்ட்ல  எல்லாம் நடக்கிறா மாதிரி இருக்கு.. ஏன் இந்த அவசரம்..”
என்றாள் மனதை மறையாமல்..

Advertisement

அப்பார்ட்மெண்ட் பிள்ளைகள் இப்பொழுது தான் கிளம்பி இருக்க ஆரியனும் வீடியோ காலில் வரவே இன்னும் யாமினி வீடு திரும்பாததால் ஃபோனோடு கூடத்திலே அமர்ந்து விட்டாள்.

Advertisement

“அவசரம் எல்லாம் இல்ல சக்தி.. மேகி கல்யாண பேச்சு ஒரு வருஷமாவே வீட்ல ஓடிட்டு தான் இருக்கு.. ஆனால் ஆரம்பத்திலே மோஸ்ட்லீ எல்லாம் தட்டி போயிடுச்சு.. பொண்ணு பார்க்க எல்லாம் அப்பா அவ்வளவு சீக்கிரம் யாரையும் அழைச்சுட்டு வந்திட மாட்டாங்க.. ஆனால் இவங்களை அப்பாவுக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.. வீட்ல எல்லாருக்கும் திருப்தி தான்..
சோ நல்ல விஷயத்தை ஏன் தள்ளி போடணும்னு அப்பா நினைக்கிறாங்க..

இப்பவே வீடு கல்யாண கலை கட்ட ஆரம்பிச்சா மாதிரி இருக்கு.. நான் வளர்ந்த அப்புறம் முதல் முறையா வீட்ல விஷேஷம்.. சோ எக்ஸைய்டட்..”

என ஆர்வமாய் அவன் சொல்ல அதனை இரசித்தாலும்,

Advertisement

“ஐயா ரொம்ப பிஸி ஆகிடுவீங்க.. சும்மாவே பிடிக்க முடியாது.. இனி ம்ஹும்..”
என்றாள் போலியாய் சலித்துக் கொண்டு..

அதற்கு,

“என்ன வேலைல இருந்தாலும் என் எண்ணமெல்லாம் உன்னை சுத்தி மட்டும் தான் கண்ணம்மா..”
பட்டென்று சொன்னவன் பின் தன் டைமிங்கை உணர்ந்து,

“ஹே.. கலக்குற போடா..” என தன்னையே மெச்சிக்கொள்ள சிரிப்பிலும் சிவப்பிலும் மலர்ந்த முகத்தோடு,

“ஹலோ.. ஹலோ.. அதை நாங்க சொல்லணும்..”

என்று அவள் வாரவும்,

“அதான்.. அந்த லிப்ஸும் கன்னமும் ஆயிரம் கதை சொல்லுதே..”
என அவன் உல்லாசமாய் சொல்லவே விரிந்த புன்னகையை உதட்டை மடக்கி மறைக்க முயல அது இன்னும் அழகாய் தான் தெரிந்தது.

“நல்லா சொல்லுமே..”
என அவள் முணுமுணுக்க அவள் அழகில் சொக்கியவனாய்,

“பாவம் டி.. நானு.. இப்படி எல்லாம் சிரிச்சு தாக்காத.. மனசு நினைகிறதை கொடுக்க முடியாத தூரத்தில் இருக்கேன்..”
என்று பாவமாய் சொல்ல அதனை  பிடித்துக் கொண்டு,

“யாரு  நீதானே..?? பக்கத்துல இருந்தப்ப மட்டும் என்ன செஞ்சீங்கலாம்.. ஒன் அர்ம் டிஸ்டன்ஸில் நின்னு பேசுறவன் தானே நீ..”
என்று அவனை வம்பிழுத்தாள்.

அதில் அசடு வழிய,

“சரிடி.. அதையே இன்னும் எத்தனை வருஷம் சொல்லி காட்டுவ..”
என்று  ஜகா வாங்க,

“நீயும் நானும் தாத்தா – பாட்டி ஆகுற வரை”
என்றாள் நகைப்போடு..

அவர்கள் காதலை உணர்ந்து பகிர்ந்த சில மாதங்களில் அவன் படிப்பை முடித்திருக்க ஸ்போர்ட்ஸ் கோட்டா வழியே  டெல்லியில் பிஜி படிக்க வாய்ப்பு கிடைக்கவும் அங்கே சென்றுவிட்டான். மீண்டும் அவன் வேலூர் திரும்பிய கொஞ்ச நாளில் சக்தியும் சென்னை திரும்ப வேண்டி இருந்தது.

ஆகையால் அவர்கள் சேர்ந்து இருந்த நாட்கள் மிகவும் சொர்ப்பமே.. அதிலும் படிக்கும் காலத்தில் கண்ணியம் காக்க வேண்டும் என்று கொள்கையை கொண்டு தள்ளி நின்றே காதலை வளர்த்தவன்..!

அவனின் முதல் முத்தம் என்பதே அவள் சென்னை கிளம்பும் முன் கடைசியாய் சந்திந்த பொழுது தான்..!!

அந்த ஒற்றை முத்தம் உணர்த்திய நெருக்கமும் அந்நோன்யமும் அவள் ஆயுள் வரை நெஞ்சம் மறவாது என்றாலும் இதனை சொல்லி அவனை வம்பிழுப்பதில் அவளுக்கொரு சந்தோஷம்..!!

அப்படியே ‘ஸ்வீட் நத்திங்ஸ்..’ பேச்சுகளில் சில மணிநேரங்கள் ஓட அவனாக தன் கேடடான்.

“ஹே.. உங்க அம்மாட்ட ஷோ பத்தி கேட்டியா.. இல்லையா..”
ஆரியனின் கேள்வியில் அவள் முகம் விழுந்துவிட,

“கேட்டாச்சு.. கேட்டாச்சு..”
என்றாள் வேண்டாவெறுப்பாய்..

“அதுக்கு ஏன்டி முகம் அப்படி போகுது.. மாட்டேன்னு சொல்லிட்டாங்களா..”

“அப்படி சொல்லி இருந்தா கூட பரவாயில்லையே.. ‘பார்க்கலாம்..’ணு சொன்னாங்க.. இப்ப வரை ஒரு பதிலும் இல்ல.. நான் பேசினதை முழுசா கேட்டாங்களாணு கூட தெரியல…”

“அதெல்லாம் கேட்டு இருப்பாங்க.. நீ ஏன் நெகடிவ் ஆ யோசிக்கற..”

“யோசிக்க என்ன இருக்கு.. அது தான் உண்மை.. நான் வந்து பேசினது கூட அவங்களுக்கு மறந்து இருக்கும்.. எனக்கு இப்படி தான் நடக்கும்னு ஏற்கனவே தெரியும்.. பசங்க தான் பாவம்.. ரொம்ப எதிர்பார்த்து இருந்தாங்க.. ம்ஹும்.. அதுக்கு நான் என்ன பண்ண முடியும் சொல்லு..”

கேள்வியும் நானே பதிலும் நானே என்று மரத்த குரலில் சொல்லியவள் அத்தோடு அவ்விஷயத்தை விட நினைத்தாள்.
ஆனால் ஆரியனுக்கு அப்படி விட பிடிக்கவில்லை. இது தொடர்ந்தால் வாக்குவாதம் தான் மிஞ்சும் என்று உணர்ந்தாலுமே,

“ஏன்.. எவ்வளவோ பண்ணலாம்.. உனக்கு ஆரம்பத்தில் இருந்தே இதை பேச இன்ட்ரெஸ்ட் இல்ல.. அது இருந்திருந்தா உங்கம்மா மறந்து  இருந்தாலும் நீ மறுபடியும் ஒரு தடவை நியாபகம் படுத்தி இருப்ப.. அதனால என்ன குறைய போகுது.. இது எவ்வளவு பெரிய சான்ஸ் உங்களுக்கு..!!  அதுக்காக ஆச்சும் திரும்ப கேட்டு பாரேன் சக்தி..”

என்று சொல்ல,

“எது.. மறுபடியுமா.. போய்யா யோவ்.. ஒரு தடவை கேட்கவே என் தன்மானத்தை அடகு வைச்சு போய் நின்னேன்.. திரும்ப எல்லாம் கேட்டு அசிங்க பட நான் ஆளில்லை ப்பா..”
என அவள் நீட்டி முழக்கினாள்.

“உனக்கு இவ்ளோ ஈகோ ஆகாதுடி…”

என பல்லை கடிக்க,

“எப்படி வேணாலும் சொல்லிக்கோ..’ என்பது போல் அவள் பார்க்கவும் பெருமூச்சோடு,

“சக்தி.. நமக்கு வேண்டியதை நாம ஏற்படுத்திகிறதுல எந்த தப்பும் இல்ல.. அவங்க நார்மல் அப்பா அம்மாவா இல்ல.. அதனால என்ன.. நீ அவங்களை சரி படுத்த முயற்சி செய்யேன்.. அவங்க பேசலேனாலும் நீ பேசு.. அவங்க ஏன் இப்படி இருக்காங்கன்னு உரிமையா சண்டை போடு.. என்கிட்ட நல்லா சிலிர்த்துகிட்டு வர்றேல.. அதுல கொஞ்சம் ஆச்சும் உன் அப்பா அம்மா கிட்டயும் காட்டேன்.. அவங்க உன்
பேரண்ட்ஸ் சக்தி.. அவங்க கிட்ட உரிமை எடுத்து பேச உன்னை தவிர யார் இருக்கா சொல்லு..”

என பொறுமையாகவே எடுத்து சொல்ல அவளோ,

“பேசுறதுக்கு எல்லாம் ஈசியா தான் இருக்கும் ஆரியா.. உன்னை மாதிரி வளரல நான்.. என் இடத்தில் இருந்தால் தெரியும் என்னோட கஷ்டம்..”
என்று வெடுக்கென பதில் கொடுத்தாள்.

‘அவர்களே என்மீது அக்கறை இல்லாமல் இருக்கும் போது நான் போய் அவர்களிடம் கெஞ்சணும்ணு எந்த அவசியமும் இல்ல..’
என  விறைத்துக் கொண்டது மனம்..

அவளை ஆழ்ந்து நோக்கியவன்,

“உன்னை உணர முடிஞ்சதால தான் சொல்லியாவது.. அம்மா அப்பாவே இல்லாம எந்த ஆதரவும் இல்லாம எத்தனையோ பிள்ளைங்க நம்ம சுத்தியே இருக்காங்க.. சிலருக்கு இருந்தும் அவங்களால் கஷ்டத்தை மட்டுமே அனுபவிச்சு நரகமான ஒரு வாழ்க்கையில் இருக்காங்க.. அதையெல்லாம் பார்க்கும்போது உன்னை உன் பேரன்ஸ் நல்லா தான் வைச்சு இருக்காங்க சக்தி.. உன்னோட லைப்பை உன் இஷ்டபடி லீட் பண்ண அவங்களும் காரணம் தானே.. அவங்க இல்லாம நீயா வளர்ந்திடல.. எப்பவுமே  வேண்டாதவங்களா வெறுப்போடு பார்க்காத…”

என்று சொல்லவும் மறுப்பாய் தலையசைத்தவள்,

“என்னை வளர்த்த அவங்களை எப்பவும் வெறுக்க மாட்டேன் தான்.. அந்த நன்றி எனக்கு எப்பவும் இருக்கும்.. ஆனால் பாசம்??? பாசமும் உரிமையும் நன்றி அடிப்படையில் வலுக்கட்டாயமா எல்லாம் வர வைக்க முடியாது..”
என்று பிடிவாதமாய் நின்றாள்.

இத்தனை வருடங்களில் இதை பற்றி பல கோணலில் விவாதித்து இருந்தாலும் இந்த விஷயத்தில் மட்டும் அவளை துளியும் அசைக்க முடியவில்லை அவனால்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!