Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ராம் வெட்ஸ் சீதா -6(2)

ராம் வெட்ஸ் சீதா -6(2).

“ஹாய் மதனி ” என்ற படியே ஓடிவந்தாள் வெற்றியின் தங்கை ஹரிணி.

அவளை கண்டதும் ராதா புருவத்தை தூக்கி அவளை முறைத்து பார்த்தாள்.

தனது மதனி தன்னை முறைப்பதை கண்ட ஹரிணி,  என்னவா இருக்கும், என்ற கேள்வியோடு ராதாவை நோக்கினாள்.



Advertisement

“யேய் உனக்கு இப்போதானே எங்க வூட்டு வழி தெரிஞ்சிதா, இல்லை உன் நொண்ணனை கட்டிக்க போறதுனால தான் எங்க வீட்டுக்கு வந்தியா? இத்தனை வருஷம் உனக்கு என் ஞாபகம் இல்லையா. என் அப்பா இறந்ததன்னைக்கு தான் கடைசியா வந்த, அதுக்கு அப்புறம் ஏன் எங்கே வீட்டு பக்கமே வரல, ஆமா நீ குண்டா மாதிரி குண்டுபூசணிக்கா போல தானே இருந்த, இப்போ என்ன இளைச்சிட்டு  வந்து நிக்கிற “என்று அன்போடும் சற்று கோவத்தோடும் கலந்து கேட்டாள் ராதா.

தனது வருங்கால மதனியை பற்றி அறியாதவளா ஹரிணி, தினமும் அவள் தாய் கமலம் ராதாவை பற்றி பேசும் போது பொறாமை தான் வரும் அவளுக்கு. வார்த்தைக்கு வார்த்தை மருமவளே மருமவளே என்று உருகி கொண்டிருப்பார் கமலம்.

வெற்றியும் ராதாவின் பூப்பெய்தல் விழாவிற்கு வந்தது தான் கடைசியே. அதன் பிறகு ராதாவின் ஊர் பக்கம் வராதவன், இன்று ஏனோ அவளை மணமுடிக்க கூட ஆர்வமில்லாது தாய் தந்தையின் விருப்பத்திற்காக இந்த திருமணத்திற்கு சம்மதித்தான்.

Advertisement

வெளியில் திண்ணையோரத்தில் ஒரு மேஜையை போட்டு அதில் மீது சிகப்பு சால்வை ஒன்றை விரித்து, அதன் மேல் பண்ணீர், ஒரு தட்டில் கற்கண்டு, ஒரு வெள்ளி கிண்ணத்தில்  சந்தனம், அடுத்து ஒரு பிளாஸ்டிக் தட்டில் புதியதாய் பூத்த ரோஜா இருந்தது..

Advertisement

தனது தாய்மாமனின் வீட்டுக்கு வந்தவன் வீட்டின் உள்ளே செல்லாமல் வெளியே பந்தலில் அமர்ந்து இருந்த வெற்றியின் மீது அங்கிருந்த ராதாவின் ஊர் மக்களின் கண்கள் பட்டது..

அதில் அங்கு அமர்ந்து இருந்த  ஒரு கன்னி பெண் வெற்றியை பார்த்துவிட்டு ”  அடியேய் இந்த கருவாச்சி ராதாவுக்கு இம்புட்டு வெள்ளையா இருக்கற மாப்பிள்ளை டி, அதுவும் சொந்த அத்தை மகன், பாக்க படிச்சவரு போல இருக்காரு டி, க்கும் நமக்கு தான் கொடுப்பினை இல்லையே, வெறும் பன்னிரெண்டாவது படிக்குற ராதாவுக்கு இம்புட்டு அழகான மாப்பிள்ளை “என்று தன்னை விட சிறியவளான ராதாவிற்கு நல்ல இடம் அமைந்தது குறித்து சலித்து கொண்டு பக்கத்தில்  அமர்ந்து இருந்த அவளின் தோழிடம் கூறினாள் அந்த கன்னிப்பெண்.

இதையெல்லாம் ஓரமாக நாற்காலியில் அமர்ந்து கொண்டு கைபேசியை நோண்டி இருந்த வெற்றியின் செவியில் விழ “எதே பொண்ணு கருவாச்சியா, அவ பெரிய மனுஷியா ஆவும் போது நம்ம வந்து பார்த்த அப்போ கொஞ்சம் கலரா தானே இருந்தா, கலரா இருந்தவ எப்படி கருவாச்சியா ஆனா???, சரி கொஞ்சம் பொறுமையா இருப்போம், எப்படி இருந்தாலும் பொண்ணை பாக்க தானே போறோம் வரட்டும், அவ கருவாச்சியா இல்லை வெள்ளையா இருக்காளான்னு பாப்போம் “என மனதில் புலம்பி கொண்டிருந்தான் வெற்றி..

Advertisement

உள்ளே ராதாவின் அறையில் ” ராதா பள்ளிக்கூடத்துக்கு வரும் போது கறுப்பு மைய்ய எடுத்து முகத்துல பூசிக்கிட்டு வரும்போது நீ எனக்கு கருவாச்சியா தெரிஞ்ச டி, இந்த ரகசியம் ஊருக்கே தெரியாது, ஆனா இன்னக்கி தெரிய போகுது டி, என்னைய விட அழகா வெள்ளையா இருக்கற உன்னைய பார்த்து என் கண்ணே பட்டுடும், என் கண்ணு மட்டுமில்லை, ஊரே உன்னைய தான் புதுசா பாக்கற போல பாக்க போகுது “என்று சொன்ன சீதாவை பார்த்து பார்த்த ஹரிணி “அக்கா நீங்க என்ன சொல்றீங்க, பள்ளிக்கூடத்துக்கு மைய்ய எடுத்து பூசிக்கிட்டு போகுமா மதனி “என்று அவளின் வருங்கால அண்ணியை ஆச்சர்யமாய் ஆவென வாயை பிளந்து பார்த்த ஹரிணி மேலும் தொடர்ந்தாள்.

“மதனி அப்போ நீங்க கறுப்பு கலருன்னு தான் ஊருக்கு தெரியுமா? ஏன் மதனி பள்ளிக்கூடத்துக்கு போகும் போது கருப்பா வேஷம் போட்டுக்கிட்டு போறீங்க, அது எதனாலன்னு நான் தெரிஞ்சிக்கணும், எனக்கு இப்போவே சொல்லுங்க “என்ற ஹரிணியை பார்த்து சிரித்தார்கள் ராதாவும் சீதாவும்..

“என் செல்ல நாத்தி, கல்யாணம் முடிஞ்சதும் நான் உங்க வூட்டுல தானே இருப்பேன், அப்போ சொல்றேன் டா “என்றவள் ஹரிணியின் கன்னத்தை பிடித்து கிள்ளி கொண்டிருக்கும் போது ” அடியாத்தி இம்மா அழகா இருக்கா என் மருமவள், பாக்க அந்த மீனாட்சி அம்மனே வந்திருப்பா போல இருக்கு, என் கண்ணே பட்டுடும் என் மவராசி இங்க பாரு உன் மாமா, அதன் என் மவன் வெளியே உட்கார்ந்து இருக்கான், அவனையும் உன்னையும் பக்கத்துல நிக்க வச்சி பாக்கணும் ன்னு இப்போவே ஆசையா இருக்கு மா மருமவளே “என்ற அத்தையின் வார்த்தையில் முகமே சிவந்தது…

“அய் மதனி உங்களுக்கு வெட்கலாம் பட தெரியுமா?, வெட்கம் படும் போது கூட அழகா இருக்கீங்க மதனி, என் அண்ணன் மட்டும் உங்களை பார்த்தான், அவன் தான் உங்களை பார்த்து வெட்கப்படுவான் ” என்று கூற அங்கு சிரிப்பொலி சத்தம் கேட்டது.

ஆனால் ராதாவோ “அது என்ன டி, உன்னைய விட வயசு அதிகமா இருக்கற உன் அண்ணனை அவன் இவன் ன்னு சொல்றது, அவரு, இவரு அப்படினு சொல்லணும் “என்று தனது வருங்கால கணவருக்கு திருமணத்திற்கு முன்னமே வக்காலத்து பேசுகிறாளென்றால் அவளுக்கு வெற்றியை பிடித்து விட்டதோ என்னவோ !!…

தனது தமையனின் மீது மதனி வைத்திருக்கும் மரியாதையை நினைத்து ராதாவை பெருமை பொங்க பார்த்த ஹரிணி “உத்தரவு என் அன்பு மதனியே இனி நான் உங்களின் வருங்கால கணவரை மரியாதை நிமித்தமாக தமையன் என்றே அழைக்கிறேன் “என்று கூறினாள் வெற்றியின் தங்கை.

பக்கத்தில் நின்று இருந்த கமலமோ, தனது அண்ணன் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்குமே, கலங்கிய கண்களோடு யாருமறியாமல் அறையில் இருந்து வெளியே சென்றார்.. ஆனால் அவரின் மருமகளோ அதை பார்த்து விட்டு அதற்கான காரணத்தை புரிந்து கொண்டாள்.

நிச்சியதார்தம் ஆரம்பித்தது.

முதலில் மாப்பிள்ளையை  அழைத்து நிச்சியதார்ததிற்கான உடையை சிவகாமியின் தலைமையில் சீதாவின் பெற்றோர் பார்த்தசாரதியும் காமாட்சியும் மாப்பிள்ளையிடம்  கொடுக்க அதை பெற்று கொண்ட வெற்றியின் கரத்தை பிடித்து உடை மாற்றும் அறைக்கு அழைத்து சென்றான் சீதாவின் உடன்பிறந்த ஒரே அண்ணன் சேதுபதி.

அடுத்து பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ என்று ஐயர் கூற,  அறையின் உள்ளே இருந்து குனிந்த தலையோடு, முகத்தில் ஞாணம் மேலிட தங்கச்சிலை போல் வந்தவளை பார்த்து சீதாவின் தாயார் காமாட்சி, தாயார் சிவகாமி, அவளின் அப்பத்தா பேச்சியம்மாளை தவிற   ஊரே அதிர்ச்சி அடைத்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!