Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ராம் வெட்ஸ் சீதா – 8 (1)

ராம் வெட்ஸ் சீதா-8(1)

 

“யாரு அந்த சீதா, எனக்கு தெரியாம என்ன நடக்குது இங்க, ஆமா அது என்ன  என் ஆளை கட்டிலா புடிச்சிட்டு இருந்த, உண்மையை சொல்லு ராம் ” என்று முதன்முதலாக தன் உடன்பிறந்த அண்ணனை பெயர் சொல்லி அழைத்தாள் அபிநயா.

 



Advertisement

“எதே, ராம் மா யேய் குட்டி சாத்தன், உன்னைய விட நான்  ஐஞ்சி வயசு பெரியவன், இனிமேல் பேர் சொல்லி கூப்பிட்ட வாயை கிழிச்சிடுவேன், போ டி “என்றவன் மேலும் முருகேசு பக்கம் திரும்பி “முருகேசு நீ போ டா அத்தை உனக்காக சாப்பிடாம காத்திருப்பாங்க “என்றவனிடம் “சரி டா நான் போறேன், நாளைக்கு காலையில மேத்ஸ் டெஸ்ட் இருக்கு மறந்துடாத டா ” என்று கூறிவிட்டு அபிநயா புறம் திரும்பி “குட் நைட் அபி “என்றவன் அவனின் இருப்பிடத்தை நோக்கி சென்று விட்டான்.

 

அவன் சென்றதும் தங்கையிடம் வந்த ராம்  “ஆமா அது என்ன உன் ஆளு ன்னு சொல்ற, ஒரு அண்ணன் கிட்ட பேசற பேச்சா அது, முருகேசு அனுமன் பக்தன் அவன் கல்யாணம்லாம் பண்ணிக்க மாட்டான். நீ ஒழுங்கா அவனை மறந்துட்டு படிக்கற வழியை பாரு, அப்புறம் சீதா ன்னு பேர் பொண்ணுங்களுக்கு மட்டும் வைக்க மாட்டாங்க பையனுக்கு இருக்கும், சீதாராமன், ன்னு ஒரு பிரண்ட் இருக்கான் எனக்கு அவனை பத்தி தன் பேசிட்டு இருந்தோம் “என்ற தமையனை மேலும் கீழும் பார்த்தவள் “நான் நம்ப மாட்டேன் “என்றவுடன் “நீ நம்புனா நம்பு நம்பாட்டி போ எனக்கு என்ன, ஐ டோன்ட் கேர் “என்றவன் அபியின் நெற்றியில் ஒரு அடி அடித்து விட்டு சாப்பிட சென்றுவிட்டான் ராம்.

Advertisement

 

Advertisement

அபியும் செல்லும் தமையனை பார்த்து “எத்தனை நாள் தன் என்கிட்ட பொய் சொல்லுவ ன்னு நானும் பாக்குறேன், ஒரு நாள் சிக்குவ நீ கண்டிப்பா அப்போ இருக்கு உனக்கு ஆப்பு ” என்று தனக்கு தானே பேசிகொண்டவள், உறங்க சென்றுவிட்டாள்.

 

ராதாவின் இல்லம்.

Advertisement

 

அனைவரும் நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தனர்.

 

ராதா தனது அறையின் இயற்கையின் காற்றை வாங்க, சாரளத்தை திறந்து கொண்டும்

மேலே சுற்றி கொண்டிருந்த மின்விசிறியும் அவளுக்கு நல்ல சுகமான காற்றை கொடுக்க அவ்ளோ மஞ்சத்தில் படுத்து கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் குறட்டை அடித்து உறங்கி கொண்டிருந்தாள்..

 

நள்ளிரவு பன்னிரண்டு மணி ஊரே மாயணஅமைதியில் நரி ஊளையிடும் சத்தம் கேட்க ஐந்து பேர் கொண்ட முகமூடிகள் ராதாவின் வீட்டையே மூண்று முறை  சுற்றி வந்து எங்கேயாவது கதவு ஏதேனும் திறந்து இருக்கிறதா என்று பார்த்தார்கள்.

 

ஆனால் ராதா அறையின் பக்கம் இருந்து குறட்டை சத்தம் கேட்க, வந்து இருந்த ஐந்து தடிமாடுகள் அந்த குறட்டை சத்தத்தில் பயந்து தன் போனார்கள்.

நொடிக்கொருமுறை நன்றாக இழுத்து நரியை போல் சத்தமாக குறட்டை விட்டுக்கொண்டு நன்றாக உறங்கி கொண்டிருந்தாள் அந்த பெண்ணவள்.

 

வந்த தடிமாடுகளோ, அங்கு கிழவி தான் உறங்கும், வயதானவர்கள் தன் குறட்டை விடுவார்கள் என்று நினைத்து, கீழே இருந்த ஒரு செங்கல்லை எடுத்து ராதா அறையின் உள்ளே போட, அந்த சத்தத்திலும் நன்றாக குறட்டை அடித்தாள் ராதா.

 

வந்த தடிமாடுகளின் வளவன் என்றவன்  “ஏன் மச்சி, இது யாரு மிருகத்தை விட பயங்கரமா குறட்டை விடுது, அவசரத்துக்கு லைட் வேற எடுத்துட்டு வரல, எனக்கு வேற பயமா இருக்கு, இது கண்டிப்பா அந்த பேச்சி கிழவியா தான் இருக்கும், கல்லை தூக்கி போட்டும் இன்னும் நல்லா சத்தமா குறட்டை அடிக்கிது, வா டா நம்ம போயிட்டு நாளைக்கு வரலாம் “என்றவனை முறைத்த கோபு “உனக்கு பயமா இருந்தா ஓடிப்போங்க டா, இன்னக்கி அந்த ராதாவை தூக்கிட்டா இருபது லட்சம் கிடைக்கும், நீங்க வேணும்னா போங்க நான் கதையை முடிச்சிட்டு வரேன் “என்றவனை பார்த்த மற்ற நால்வருக்கும் அச்சம் தான் வந்தது.

 

அதை கவனித்த கோபு,”என்ன டா எல்லாரும் என்னையே பார்த்துட்டு இருக்கீங்க, அந்த ராதா புள்ள மேல பரிதாபம் படறீங்களா, “என்றவனிடம்

 

“வேணாம் டா கோபு அந்த ராதா புள்ள கையில நீ மட்டும் தனியா மாட்டிகிட்டின்னா, அப்புறம் உனக்கும் நம்ம இளவரசன் கதியே தான், நம்ம அவளை அப்புறம் தாக்குவோம், இப்போ வா நம்ம வந்த வழியாவே ஓடி போவோம் “என்ற வளவனின் கன்னத்தில் ஒரு அறை அறைந்தான் கோபு.

 

“த்த்தூ, போங்க டா கோழைங்களா நான் இன்னக்கி அவளை முடியாம விட போறது இல்லை டா, வாங்க போற பணத்துக்காவது விசுவாசமா இருக்கனும், உங்களை மாதிரி பணத்தை வாங்கிட்டு ஏமாத்துற வேலைலாம் பண்றவன் இல்லை டா நானு நான் கோபு, நீங்க வேணா போங்க நான் அவளை தேடி கண்டுபிடிச்சி அவ கதையை முடிச்சிட்டு நாளைக்கு அவ காரியத்துல கலந்துக்குவேன் டா “என்று வீராப்பாய் மீசையை முறுக்கி கூறுபவனுக்கு தெரியவில்லை, வர போகும் ஆபத்தை அவன் வாழ்நாளின் மறக்க கூடாதென்று..

 

வந்த தடிமாடுகளில் அனைவரும் வந்த வழியாகவே ஓடிவிட, கோபு மட்டும் ரொம்ப நேரமாய் ராதாவின் வீட்டையே சுற்றி வந்தவன், ராதாவின் அறை எதுவென்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

தண்ணீர் தாகம் எடுப்பதற்காக உறக்கத்தில் இருந்து எழுந்த பேச்சி கிழவி மின் விளக்கை கூட போடாதது, எழுந்து சமையலறையின் பக்கம் சென்று தண்ணீரை எடுத்து குடித்து விட்டு, ராதாவின் அறைக்கு வந்து கீழ தரையில் படுத்து கொண்டார்.

 

இன்னும் மூணு மாதங்களில் தான் பேத்தியை பார்க்க முடியுமே, அவருக்கு பேத்தியை விட்டு பிரிய மனது வரவில்லை, கீழே படுத்து கொண்டவருக்கு உறக்கம் தான் வர மறுத்தது.

 

அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த கோபுவின் உருவம் பேச்சியின் விழியில் விழுந்தது..

 

“இந்த நேரத்துல யாரு இங்க சுத்துறது, “என்று அவன் சென்ற பிறகு சாரளத்தின் அருகில் வந்து சுவற்றோரம் மறைந்து நின்று கொண்டு மறுபடியும் வருகிறானா என்று பார்த்துக்கொண்டிருந்தார்..

 

அவன் நான்குமுறை தங்கள் வீட்டையே சுற்றி வருவதை பார்த்த பேச்சி, சத்தமில்லாமல் மெதுவாக நடந்து சென்று சிவகாமி உறங்கி கொண்டு இருந்த கூடாரத்தை நோக்கி சென்று அவரை எழுப்பினார், “என்ன இது அதுக்குள்ள மணி ஐஞ்சு ஆகிடுச்சு “என்று தலையை சொரிந்து கேட்ட சிவகாமியை பார்த்து “அடியேய் மெதுவா பேசு, நம்ம வூட்டுல திருடன் எவனோ ரொம்ப நேரமா சுத்திட்டு இருக்குறான், எனக்கு வேற கைகால்லாம் நடுங்குது, நீ போயி புல் வெட்டுற அரிவாளை எடுத்தா, நான் மொளகா பொடி எடுத்தாரேன் “என்று கூறி மறுபடியும் சமயலறைக்கு சென்று மொளகா பொடியை எடுத்து கொண்டும், சிவகாமி ஒரு பெரிய அரிவாளை எடுத்து கொண்டு சத்தம் இல்லாமல் கதவின் தாழ்ப்பாளை திறந்து கொண்டு வெளியே வந்த போது, கோபு அவர்களின் வீட்டு வாசலுக்கு வரவும் சரியாக இருந்தது..

 

அதே சமயத்தில் அங்கே சரசரவென வந்துகொண்டிருந்தது நாகம்..

 

கோபு நின்ற இடத்தில் இருந்து மூணு அடி தள்ளி அது அவனையே பார்த்துக்கொண்டிருந்தது..

 

வெளியே வந்த பேச்சி  புடவை தலைப்பால் மூக்கை கட்டி கொண்டு,அவனை கண்டதும் கையில் இருந்த மொளகா பொடியை அவன் முகம் மீது தூவினார், அந்த நேரத்தில் தனது பாம்பு உருவத்தில் இருந்து மனித உருவத்துக்கு மாறின அந்த நாகம், கையை நீட்டி ஏதோ மந்திரம் உச்சரிக்க, கையில் நீண்ட கயிறு ஒன்று வந்தது அதனின் மந்திரத்தால்.

 

“ஆஆஆஆ ஏறிது, என்று கூவி கொண்டே கண்ணை கசக்கினான், மிளகாய் பொடி  இன்னும் விழியின் உள்ளே சென்றது.. அவனின் கத்தும் சத்தத்தை கேட்டு உறங்கி கொண்டிருந்த  ராதா விழித்து கொண்டாள்..

 

அது தான் சமயமென எண்ணி கோபுவை கயிற்றால் கைகால்களை கட்டி  அவனை இழுத்து கொண்டு வீட்டின் முன்னால் இருந்த வேப்பமரத்தில் நிற்க வைத்து மரத்தை அவனோடு சுற்றி கட்டியது அந்த மனித நாகம்..

 

வெற்றியின் இல்லம்.

 

வீட்டில் நன்றாக உறங்கி கொண்டிருந்த வெற்றி திடீரென வந்த கனவால் எழுந்து அமர்ந்துகொண்டான்.

 

ஏசியில் உறங்கி கொண்டு இருந்தவனுக்கு  முகமெல்லாம் வியர்த்து கொட்டியது..

 

“ச்சே என்ன கனவு இது, என் ரதி குட்டியை ஏன் ஒருத்தன் சுத்தி வரணும், மணி என்னாகுது ” என்று தனது தலையணையில் அருகில் இருந்த கைபேசியை எடுத்து பார்த்த போது அது நேரம் ஒரு மணியை காட்டியது…

 

உடனே எழுந்து முகத்தை கழுவி விட்டு , சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு யாருமறியாமல் வண்டி சாவியை எடுத்து வெளியே வந்து அவனது ராயல் என்பீல்டை   செலுத்தினான் ராதாவின் இல்லம் நோக்கி.

 

ராயல் என்பீல்ட் சத்தம் கேட்டு விழித்தாள் அவனின் தங்கை ஹரிணி, உடனே எழுந்தவள் மின்விளக்கை போட்டு விட்டு, சுவற்றில் இருந்த கடிகாரத்தை பார்த்தாள், அது விடிய இன்னும் ஆறு மணி நேரம் இருக்க அவளுக்கோ மிகவும் குழப்பியது.

 

“மணி இப்போ தான் ஒன்னு பத்து ஆகுது, இந்த அண்ணா எதுக்கு இந்த நேரத்துல வெளியே போகுது, என்னவா இருக்கும் என்றவள் தாயை எழுப்புவதற்காக அவர்கள் உறங்கும். அறைக்கு சென்று பார்த்த போது அங்கு தாய் இல்லாததை கண்டு அந்த அறையின் இருட்டில் அச்சம் தான் வந்தது ஹரிணிக்கு..

 

உடனே முன் வாசல் கதவை பார்த்தாள் அது வெறுமனமே திறந்து கொண்டிருக்க, அவளுக்கு பயத்தில் வேர்த்தது..

 

அப்போது அவளின் தோளில் யாரோ கைவைக்க அவளோ பயத்தில் திரும்பாமல் விழிகள் இரண்டையும் முழித்து கொண்டு எச்சிலை விழுங்கி “யாரு, என் மேல இருந்து கையை எடுங்க “என்றவளின் மண்டையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்தார் கமலம்.

 

“அட திரும்பு டி இப்படி, உனக்கு என்ன இந்த நேரத்துல கதவை திறந்து வேடிக்கை பாக்கறது, வெளியே என்ன கூத்தா நடக்குது, இந்தா டி நான் பேசிட்டே இருக்கேன் நீ என்ன பாட்டுக்கு முழிக்குற என்னாச்சு உனக்கு “என்று அவளின் தோள்களை உலுக்கிய போது தான் சுயநினைவுக்கு வந்தாள் ஹரிணி.

 

உடனே அவள் தாயை நோக்கி “அம்மா அண்ணா இப்போ தான் வண்டிய எடுத்துக்கிட்டு வெளியே போச்சி, சவுண்ட் கேட்டுது எனக்கு, வெளியே வந்து பாக்கற அண்ணா வண்டில போகுது, ஏம்மா நீ எங்கே தான் போயி தொலைஞ்ச, உன்னைய எங்கெல்லாம் தேடறது, நீயும் அண்ணனை பார்த்தியா, அண்ணன் ஏன் இப்படி சொல்லாம கொள்ளாம இந்த நடுராத்திரில வெளியே போகணும் “என்று தாயவளை பார்த்து கேள்வி கேட்டாள் ஹரிணி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!