Skip to content
Post Views: 42
ரிதம் 13
“அப்புறம் ஐ அம் ப்ரவுட் டு அனௌன்ஸ் அனதர் பியூட்டிஃபுல் டேலண்ட் சிங்கர், மிஸ் நத்தாஷா” என்று கூறியபடி அவளைக் காட்டினான்.
Advertisement
நத்தாஷாவின் புறம் கேமராவை திருப்பினார்கள். அவளோ தயக்கத்தோடு எழுந்து நின்றாள்.
“இவங்க?? எஸ், இவங்க கூட இந்த மியூசிக் ஷோல கண்டஸ்டன்டா இருந்தவங்க இல்லையா?? பைனல் வரைக்கும் வந்துட்டு டெர்மினேட் ஆனவங்க.” அந்த நிருபர் கண்டுபிடித்து கேட்டார்.
Advertisement
Advertisement
“எஸ் ரைட், இவங்க மூணு வருஷத்துக்கு முன்னாடி என் கூட இணைய இருந்தவங்க. பட், அப்ப அவங்களோட படிப்பு முக்கியன்றதுனால படிக்கப் போயிட்டாங்க. இப்ப என்கூட இணைய இருக்கிறாங்க. ஐ மீன் எங்க ட்ரூப்போட இணைய இருக்கிறாங்க. மிஸ்டர் ராகவோட படத்துல இவங்களை இண்ட்ரடியூஸ் பண்ண போறேன். அதை இங்க பெருமையா சொல்லிக்கிறேன். கண்டிப்பா இந்த வருஷம் இவங்களுக்கு நல்லபடியா அமையணும்னு அந்த கடவுளை நான் வேண்டிக்குறேன். நீங்களும் வேண்டிக்கோங்க” என்றபடி அவளை அறிமுகப்படுத்தி வைத்தான்.
அவளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான். குறைந்தது மூன்று மாதங்களுக்கு பயிற்சி இருக்கும் என்று தானே ப்ரீத்தி கூறினாள்?? ஆனால் இவன் என்னவென்றால் வேறு கூறுகிறானே?? அதுவும் அனைவரின் முன்பும் கூறிவிட்டானே??? அவள் தவித்துப்போய் நின்றாள். ஆனால் ப்ரீத்திக்கு குதூகலமாகிவிட்டது.
Advertisement
தன் மீது இவனுக்கு அவ்வளவு நம்பிக்கையா?? நான் இதற்கு தகுதியானவளா?? தன்னால் ஒரு படத்தில் பாட முடியுமா?? அதுவும் பயிற்சி எடுக்காமல்?? அவள் மனதினுள்ளே கேள்வி எழுந்து நின்றது.
அந்த நிருபர் இறங்கி வந்து, ஒவ்வொருவராக பேட்டி எடுக்க ஆரம்பித்திருந்தார். அவனை மட்டும் எடுக்க வந்தவர்கள், பெரிய நிகழ்ச்சியாக இருக்கட்டும் என்று, எல்லா பாடகர்களையும் சேர்த்து எடுத்துக் கொண்டிருந்தார்கள். கடைசியாக அவளிடமும் மைக் நீட்டப்பட்டது.
அவள் தடுமாறினாள்.
“நீங்க இந்த ட்ரூப்ல இணைஞ்சதை பத்தி என்ன சொல்ல வரீங்க?? எப்படி ஃபீல் பண்றீங்க?? உங்களுக்கு கௌதம் சார் ஒரு ஆப்பர்சூனிட்டி கொடுத்திருக்காங்க. அதை நீங்க கரெக்டா பிரசீட் பண்ணுவீங்களா”? என்று அடுக்கடுக்கான கேள்விகள் தொடுக்கப்பட்டது.
அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் ‘பதில் சொல்’ என்று கண்களை மூடி செய்கை செய்தான்.
அவள் மிடறு விழுங்கினாள். “ஐ அம் ப்ரவுட் டு பார்ட் ஆஃப் திஸ் ட்ரூப்” என்று பதில் உரைத்தாள்.
“உங்களுக்கு கிடைச்ச இந்த ஆப்பர்சூனிட்டியை பத்தி நீங்க எதுவும் சொல்லலையே?? இந்த குரூப்ல இருக்க நிறைய பேரு ஸ்டேஜ் ஏறி பாடி, நிறைய நாள் போராடி அதுக்கப்புறம் தான் படத்துல பாடுறதுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. ஆனா உங்களுக்கு உடனே கிடைச்சிடுச்சு, அதை பத்தி ஏதாவது சொல்லுங்க”? என்று கேட்டார்.
“கௌதம் சார், என் மேல வச்ச நம்பிக்கையை நான் காப்பாத்துவேன். என்னோட முழு முயற்சியையும் அந்த பாடலில் கொடுத்துப் பாடுவேன். இந்த வாய்ப்பு கிடைச்சதுக்கு நான் ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன். நிறைய நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். என்னோட முதல் பாடல் வெளியீட்டு விழாவில் கண்டிப்பா இதேபோல ஒரு பேட்டியில் நான் எல்லாருக்கும் நன்றி சொல்லுவேன்” என்றாள் நத்தாஷா.
“உங்களோட குரலை கேட்டிருக்கோம். அப்பயே நிறைய ரசிகர்களை பெற்றிருந்தீங்க. நீங்க வித்தியாசமா இரண்டு குரலில் பாடுற திறமை படைச்சவங்க. அதனாலதான் கௌதம் சார் உங்களுக்கு உடனே ஆப்பர்சூனிட்டி கொடுத்திருக்காரு போல?? இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?? உங்களோட முதல் பாடல் வெற்றியடைந்து பெரிய பாடலா உருவெடுக்குமா? உங்களோட பிளஸ் மைனஸ்னு சொல்லுங்களேன்”? என்று கேட்டார்.
“நானே என்னை பத்தி சொன்னா நல்லதா தான் சொல்லுவேன். பாடல் வெளிவந்ததுக்கப்புறம் நீங்களா சொன்னா அது நல்லா இருக்கும்னு தோணுது. வெற்றி தோல்வின்றது பொருட்டில்ல, பாடலை நாம எப்படி பாடுறோன்றது தான் முக்கியம். வெற்றியடைஞ்சால்தான் நல்ல பாடல், இல்லனா அந்தப் பாடல் தோல்வி அடைஞ்சதா அர்த்தமில்ல.”
“ஒவ்வொரு பாடகரும் தங்கள் மூச்சை பிடிச்சுகிட்டு தான் பாடலை பாடுவாங்க. அவங்களை பொறுத்த வரைக்கும் பாடி முடித்த எல்லா பாடலுமே வெற்றி அடைந்த பாடல் தான். பூமியில் பிறக்கிற குழந்தையை போல, பாடகர்களுக்கு ஒவ்வொரு பாடலும் புது பிரசவம் தான். நான் சொல்றது பாடகர்களுக்கு சரியா புரியும்னு நினைக்கிறேன். மத்தபடி, பாடல் வெளிவந்த பிறகு நிர்ணயிக்கிறதை பத்தி நான் இப்பவே யோசிக்கல” என்று ஆணவம் இல்லாமல் பொறுமையாக பதில் அளித்தாள்.
அவளின் பதிலில் மென்னகை படர்ந்தது கௌதமிற்கு.
“நைஸ் ஆன்சர்” என்றார் நிருபர். அவள் என்று இல்லை எல்லோருமே அப்படித்தான் பதில் அளித்தார்கள். ஆணவம் இல்லாமல் துடுக்குத்தனம் இல்லாமல் பேசினார்கள். தேவையில்லாத வார்த்தைகளை தவிர்த்தார்கள். அவர்கள் வாயிலிருந்து எதையாவது பிடுங்கி சென்சேஷன் ஆக்கலாம் என்று நினைத்த நிருபருக்கு தோல்விதான் கிட்டியது. இவர்கள் பாடலில் மட்டுமல்ல, பேச்சிலும் ட்ரெயினிங் பெற்றிருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றியது.
ஆனால் அவருக்குத் தெரியாத ஒன்று, ஒவ்வொருவரும் தோல்வியின் விளிம்பில் இருந்து வெற்றிக்கு தூக்கி நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது. அனுபவத்தை விட ஒரு சிறந்த ஆசான் இல்லை. உச்சியில் கொண்டு சென்று தோல்வியை திகட்ட திகட்ட கொடுத்து, அங்கிருந்து தள்ளப்பட்டு, எல்லாராலும் புறக்கணிக்கப்பட்டு, இப்பொழுது கௌதம் என்ற ஒரு தனி மனிதனால் தூக்கி நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஆணவமோ பொறாமையோ அவர்கள் பேச்சில் எப்பொழுதுமே வராது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதில் யாராவது மாறுபடலாம், ஆனால் எல்லோரும் மாற மாட்டார்கள். கௌதம் என்று ஒருவன் இல்லையென்றால், இன்று அவர்களும் இல்லை, இந்தப் பாராட்டுகளுமில்லை. அதை அங்கிருந்த ஒவ்வொருவரும் தெளிவாக புரிந்து வைத்திருந்தார்கள்.
கௌதம் அமைதியாக கைகளை கட்டிக்கொண்டு ஒவ்வொருவரும் கூறும் பதிலை தான் அவதானித்துக் கொண்டிருந்தான். நத்தாஷா பேசியது மட்டுமல்ல, ஒவ்வொருவரின் பதிலும் அவனை பெருமைப்படுத்துவதாக இருந்தது.
அதன் பிறகும் பேட்டிகள் நீண்டு கொண்டே போனது. கௌதம் சிறு பிசகும் இல்லாமல் பதிலளித்துக் கொண்டிருந்தான். கடைசியாக கேள்விகள் அந்த ஷோவை பற்றி வந்து நின்றது.
“எப்படி சார் அதுல ரிஜெக்ட்டான எல்லா பைனல் கண்டஸ்டன்ட்டையும் நீங்க தேர்ந்தெடுத்து, உங்களோட ட்ரூப்ல ஜாயின் பண்ணி, வாய்ப்பு கொடுத்து அவங்க எல்லாரையும் சிங்கராக்கி இருக்கீங்க. தொடர்ந்து அவங்களுக்கு உங்களோட படங்கள்ல பாட வச்சிட்டிருக்கீங்க. இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?? இப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு எப்படி வந்துச்சு”? முதலில் கேட்ட கேள்வியை சற்று ஆல்டர் செய்து மாற்றி கேட்டார்.
“வெரி சிம்பிள், இதுக்கு நான் முதலிலேயே பதில் சொல்லிட்டேன். நீங்க சொல்றது போல இல்ல, நான் நல்லா பாடுறவங்களை தேர்ந்தெடுத்தேன். அவங்களும் என்னை தேர்ந்தெடுத்தாங்க. எனக்கு ரொம்ப பிடிச்ச குரலை தேடி போய் நான் அவங்களோட என்னை இணைச்சிக்கிட்டேன். ஒரு சிலர் என்னோட ட்ரூப்ல வரவும் இல்ல. அதையும் நான் இங்கே சொல்லித்தான் ஆகணும். அவங்க இப்ப வந்தாலும், அவங்களுக்கு வாய்ப்பு கொடுக்க நான் காத்திருக்கேன். நாங்கள் இணையும்போது நான் இவ்வளவு பெரிய மியூஷிசியன் இல்ல. ஆரம்ப கட்டத்துல ஸ்ட்ரகிள் பண்ணிட்டிருந்த ஒரு மியூஷிசியன் தான். என்கிட்ட கொஞ்சம் பணம் இருந்தது. அதனால சின்னதா என்னால அகாடமி ஆரம்பிக்க முடிஞ்சது. அதை வச்சு இவங்களுக்கு எல்லாம் ட்ரெயினிங் கொடுத்து என்னோட ஆல்பங்களை முதல்ல பாட வச்சேன். அப்புறம் படங்கள்ல வாய்ப்பு கிடைச்சது. அதையும் யூட்டிலைஸ் பண்ணிக்கிட்டோம். இப்ப வெற்றின்னு அடைஞ்சதுக்கப்புறம் தான் நீங்க எங்களை தேடி வரீங்க. ஸ்ட்ரகிள் பண்ணிட்டிருக்கும்போது என்னை நம்பி என் கூட துணையா இருந்த இவங்களுக்கு காலம் முழுக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். என்னை நம்பி நம்பிக்கையோடு இணைந்தவங்க மேல, எனக்கும் அலாதி நம்பிக்கை இருக்கு. சோ, என்னோட மியூசிக் அகாடமி இருக்கிற வரைக்கும், இந்த ட்ரூப்பும் இந்த சிங்கர்ஸும் என் கூட இருப்பாங்கன்றதை நான் பெருமையோட சொல்லிக்கிறேன். இது கூட இன்னும் சில பேர் இணைஞ்சாலும் இணையலாம்” என்று தோள்களைக் குலுக்கி கூறினான்.
அந்த போட்டியை பற்றியோ, அந்த டெலிவிஷனை பற்றியோ அவன் வெளியிடவில்லை. அது அவனுக்கு அவசியமற்றது. ஏமாற்றப் பட்டவர்களுக்கு கரம் கொடுத்து தூக்கி விட்டிருக்கிறான். அவர்களின் வளர்ச்சிக்கு அவனுடைய பங்கு இருக்கிறது என்றால், அவனுடைய இந்த இமாலய வளர்ச்சிக்கும் அவர்களின் பங்கு இருக்கிறதை தான் அவன் வெளிப்படையாக தொலைக்காட்சிக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறான்.
அவர்களும் அந்தத் தொலைக்காட்சியை பற்றி ஏதாவது வாயை பிடுங்கலாம் என்று தான் முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவன் கில்லாடி என்று நிரூபித்துக் கொண்டிருந்தான். அவர்கள் எப்படி தோண்டி துருவினாலும் கௌதம் வாயிலிருந்து எதையும் பிடுங்க முடியவில்லை. மற்றவர்களும் அது போல தான் இருந்தார்கள்.
ஒரு வழியாக பேட்டி முடிவடைந்து மைக்குகள் எல்லாம் அகற்றப்பட்டது. அவரவர்கள் சற்று ஓய்ந்து ஆங்காங்கே அமர்ந்து, தங்களுக்குள் பேசிக்கொள்ள.
ப்ரீத்தியும் தன் தோழியை நோக்கி வந்து கட்டி அணைத்துக் கொண்டு சந்தோஷப்பட்டாள். “ஒரே நாள்ல உன்னை பெரிய ஆள் ஆகிட்டாரு டி. நீ இப்ப திரும்பவும் வி. ஐ. பி ஆயிட்ட” என்று பெருமையாக பேசினாள்.
ஆம், அந்த உண்மை அவளுக்கும் புரிந்தது. எந்த படத்திலும் பாடாமல் பாடகி ஆக்கிவிட்டான். பேட்டியையும் கொடுக்க வைத்து விட்டான். எல்லோரையும் போல அவளையும் தூக்கி முன்னால் நிறுத்தி விட்டான். அதற்குக் காரணமானவனை அவள் பார்வை தீண்டி நின்றது.
அவன் அமைதியாக அங்கு நிருபர்களிடம் எதையோ பேசி கொண்டிருந்தான். அவர்கள் விடைபெற்றுச் செல்லும் வரை, இவளும் அமைதி காத்தாள். அவர்கள் சென்ற பிறகு, அவனை நோக்கி நடந்தாள் நத்தாஷா.
“சார்” என்று அழைக்க, அவளை திரும்பி பார்த்தவன்,
“கால் மீ கௌதம்” என்றான்.
“ஓகே சார், ஆனா ஒரு விஷயம் சொல்லணும். இந்த ஒன் இயரா நான் எந்த பிராக்டீஸும் பண்ணல. என் மேல எனக்கே நம்பிக்கை இல்லை. ஆனால் பெரிய ஹீரோவோட படத்துல பாடுறதா சொல்லிட்டீங்க?? என்னால சரியா பெர்ஃபார்ம் பண்ண முடியுமான்னு தெரியல”? என்று தயக்கத்தோடு நிறுத்தினாள்.
“உன்னால கண்டிப்பா நல்லா பாட முடியும், உன் மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. பிராக்டிஸ் பண்ணாததுனால உன் குரலும் டேலண்டும் மாறிட போறதில்ல. முதல்ல நான் கூட உனக்கு பிராக்டிஸ் தேவைப்படும்னு யோசிச்சேன், ப்ரீத்தி கிட்டையும் சொன்னேன். ஆனா நேத்து உன்கிட்ட பேசின பிறகு, அது தேவையில்லைன்னு தோணுச்சு. ஏன்னா, உன்னோட குரலிலேயே அந்த இனிமை இருக்கு. அதை என்னால ஃபீல் பண்ண முடியுது. கான்ஃபிடென்ட்டா இரு, எல்லாம் சரியா வரும்” என்று கூறினான்.
“இன்னொன்னு, நா.. நான் வந்து மிஸ் நத்தாஷா இல்ல, மிஸஸ் நத்தாஷா” என்றாள்.
அவன் அவளை ஆழமாக பார்த்தான்.
அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவள் தலை கவிழ்ந்தாள்.
“உனக்கு லீகலா மேரேஜ் ஆச்சா?? உன்னோட ஹஸ்பண்ட் உயிரோட இருக்காரா”? என்று கேட்டான்.
அவள் மீண்டும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“இந்து சட்டப்படி கோயிலில் திருமணமானாலே, திருமணமானதா தான் சார் சொல்லுவாங்க” என்றாள் சிறு குரலில்.
“ஓகே, உங்க வழிக்கே வரேன். உனக்கு தாலின்னு ஒன்னு கட்டுனவன் இறந்துட்டானில்லையா?? ராசி இல்லாதவனு சொல்லி அவன் வீட்டிலிருந்தும் உன்னை வெளியே அனுப்பிட்டாங்க இல்லையா?? அவங்களுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு உன்கிட்ட லீகல் நோட்டீஸ்ல கையெழுத்து வாங்கிட்டாங்க, அப்படித்தானே”??
“உனக்கு தாலி கட்டினவன் உயிரோட இல்ல, அவங்க வீட்டுக்கும் உங்க வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, எங்க சொத்தை, உனக்கு கொடுக்க வேண்டியதிருக்குமோன்னு இருந்த எல்லா எவிடன்ஸையும் அவங்களே அழிச்சிட்டாங்க. உனக்கு திருமணமானதுக்கான எந்த எவிடன்ஸும் இல்லை. அப்ப நீ மிஸ் தானே”? என்று கேட்டான்.
‘தன்னை பற்றி இவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதா’? அவள் அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள்.
error: Content is protected !!