Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ரீங்காரமாய் என்னுள்ளே

ரீங்காரமாய் என்னுள்ளே – 10.1

ரீங்காரமாய் என்னுள்ளே – 10.1

அவனுடைய வாகனத்தில் அமர்ந்து, டேஷ்போர்டில் தன் இரு கைகளிலாலும் தாளம் தட்டி கொண்டு இருக்க, குமாரோ அவனை பாராது பார்த்து கொண்டிருக்க,

“என்ன குமாரண்ணா… என்னைய சைட் அடிக்குறிங்களா என்ன?…” என தாளம் தட்டி கொண்டே கேக்க,

“ஆ… என்னங்க தம்பி… இல்லிங்களே தம்பி…” என பதறி சொல்ல,



Advertisement

“பரவால்லலயே… நல்லா பதறுறீங்களே… அப்போ உங்களை அடுத்த கேஸ்க்கு இப்படி யூஸ் பண்ணிக்கலாம்…” என அசால்ட்டாக சொல்ல,

“என்னங்க தம்பி நீங்க இப்படி பண்ணுறீங்க… எனக்கு இன்னும் ஆறு மாசத்துல ரிட்டையர்மெண்ட் தம்பி…” என அவர் பாவமாக சொன்னார் குமார்.

“அது தான் நானும் சொல்லுறேன்… ரிட்டையர்மெண்ட் ஆகும் போது சும்மா நீங்க கெத் ஆஹ் ஆகணும்ல… அதனால சிறப்பான சம்பவம் உங்களுக்காக ஒன்னு பண்ணியே ஆகணும் அப்போ…” என விஷ்ணு தீவிரமாக சொல்ல,

Advertisement

குமார், “என்னைய விட்ருங்க தம்பி… ஏற்கனவே இப்போ என்ன நடக்க போதுன்னு வேற பக் பக்ன்னு இருக்கு… இதுல நீங்க என்னைய வேற இழுத்து விடுறிங்க…”

Advertisement

“எங்க இழுத்து விடுறாங்க உங்களையே… நீங்கி தான் அல்ரெடி வந்து சிக்கிட்டிங்களே… அப்பறம் என்ன சும்மா பக் பக்ன்னு சொல்லுங்க… என்ஜோய் தி மொமெண்ட் குமாரண்ணா…” என அவன் கூலாக சொல்ல,

“நீங்க இளரத்தம்… நான் கிழம் தம்பி…” என அவர் இன்னும் பாவமாய் சொல்ல,

“அப்படியா! அப்போ உங்க ரத்தம் ரெட் கலர் இல்லையா?… உங்களுக்கு வேற கலர் ஆஹ்… எங்க பாப்போம்…” என டேஷ்போர்டில் இருந்தா சின்ன கத்தியை எடுக்க,

Advertisement

“அட… என்னங்க தம்பி நீங்க…” என பீதியாகி சொல்ல,

“ஹா ஹா… போலீஸ் ஆஹ் இருந்துட்டு கத்திய பாத்து இப்படி பீதியாரிங்க…” என குமாரிடம் விளையாட்டாக கேட்டான்.

“போங்க தம்பி நீங்க…” என அவனிடம் சொல்லி, “அங்க கனகவேல் வராரு பாருங்க…” என அவனை பார்க்க சொல்ல,

தனது விளையாட்டை விட்டு,”சொல்லுங்க கனகவேல்…” என எதிரில் நின்றிருந்த, இன்ஸ்பெக்டரை பார்த்து கேக்க,

“சார்… அந்த எம்.எல்.ஏ வோட அல்லக்கை கிட்டயிருந்து பக்காவா எல்லாத்தையும் சொல்ல சொல்லி, வீடியோ பதிவு பண்ணியாச்சு… எல்லாம் விரிவா இந்த பஃயில்ல இருக்கு சார்…” என இன்ஸ்பெக்டர் சொல்ல,

“ஒகே… அந்த பைலை குடுங்க… நான் பாத்துட்டு இன்னும் பாய்ண்ட்ஸ் வேணுமான்னு சொல்லுறேன்… அவன் என்ன சொல்லுறான்…” என விஷ்ணு கேக்க,

இன்ஸ்பெக்டர், “முதல்ல பயந்தான் சார்… அப்பறம் நீங்க வந்துட்டு போனதுக்கு அப்பறம் கச்சிதமா வேலையை முடிச்சிட்டான் சார்…”

விஷ்ணு, “ஹ்ம்ம்… அப்போ மொளகா ஜூஸ்  நல்லா வேலை செய்யுதுனு சொல்றிங்க…”

“அப்பறம் கேப் விடாம வாயில ஊத்திட்டே இருந்தா…” என மனதிற்குள் சொல்லி, வெளியே தலையை மட்டும் ஆட்டி வைத்தார்.

“எம்.எல்.ஏ கிளம்பியாச்சா கமிஷனர் ஆஃபீஸ்க்கு…” என அவன் கேக்க,

இன்ஸ்பெக்டர், “எஸ் சார்… புறப்பட்டதா நியூஸ் வந்துச்சி…”

“வெல்… நீங்க கிளம்புங்க கனகவேல்… வேற எதும்னா நான் உங்களுக்கு சொல்லுறேன்… எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல என்னை கமிஷனர் வர சொல்லுவார்… அதுக்கு முன்ன நான் அங்க கிளம்புறேன்…” என அவரிடம் தலையசைத்தான் விஷ்ணு.

“குமாரண்ணா… ரெடி ஜூட்…” என அவன் குமாரிடம் சொல்ல,

அவனின் வாகனம் கமிஷனர் ஆஃபீஸிற்கு முன்னர் சில நூறு அடி பின்தங்கி ஒரு ஓரத்தில் நின்றது.

“என்னங்க தம்பி…” என குமார் கேட்க,

விஷ்ணு, “ஒடனே போனா, இதுக்காகவே காத்துட்டு இருந்தது போல இருக்காது…” என அவன் கேக்க,

“அது தான் கமிஷனர் கால் பண்ணியாச்சே தம்பி உங்களுக்கு…” என அவரும் கேள்விகேட்க,

“நீங்க எப்படி அண்ணா போலீஸ் ஆகுனீங்க…” என விஷ்ணு அவரிடம் எதிர்கேள்வி கேக்க,

“தம்பி…” என சொல்லி அவர் பரிதாபமாக பார்த்தார்.

“உடனே போனா, நமக்கு வேலை இல்லையான்னு நினைக்க மாட்டாங்களா?…” என விஷ்ணு கேக்க,

ஆமாம் என நாலாபுறமும் மண்டையை ஆட்டினார் குமார்.

“வரவர நீங்க நல்லா மண்டையை ஆட்டுறிங்க…” என சொல்லி, வண்டியை கமிஷனர் அலுவலகத்திற்கு விட சொன்னான்.

அவன் இறங்காமல், “குமாரண்ணா நீங்களும் வாங்க…” என அவரை அழைக்க,

“நானா… நான் எதுக்கு சார்…” என சுற்றும் முற்றும் பார்த்து கேக்க,

“நான் வேற இளரத்தம்… அதான் ஒரு சப்போர்ட்க்கு…” என கண்சிமிட்டி சொல்ல,

“போங்க தம்பி… கமிஷனர் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காரு அந்த எம்.எல்.ஏ வேற கூட இருக்காரு…” என்று சேர்த்து சொல்ல,

“அவங்க வெயிட் பண்ணட்டும்… நல்லா ஒரு சுக்கு டீ சொல்லுங்க… குடிச்சிட்டு போவோம்… தொண்டை வேற கீச்கீச்ன்னு இருக்கு… அப்பறம் அவங்க முன்னாடி என்னால பேச முடியாம போய்டபோது…” என அவன் இருமிகொண்டே சொல்ல,

அவனின் இந்த பேச்சில், வாயில கை வைத்து விட்டார் குமார்.

“என்ன குமாரண்ணா… இந்த ஷாக்கிங் எக்ஸ்பிரெஷன் கூட அடி தூள்…” என மீண்டும் சொல்ல,

அதற்குள் கமிஷனர் அவரிடம் இருந்து போன் வர, “போங்க போங்க… சார் போன் வந்துருச்சி…” என குமார் சொல்ல,

“அப்போ எனக்கு நீங்க டீ வாங்கிட்டு வர மாட்டீங்க…” என அவன் சீட்டில் சாய்ந்து அமர்ந்து அவரிடம் கேட்டுக்கொண்டே, போனை அட்டென்ட் செய்து, “எஸ் சார்… ஆன் தி வே… ” என சொல்லி வைத்தான்.

“என்னங்க தம்பி… கமிஷனர் கிட்டயே இப்படி சொல்லிட்டீங்க…” என அவர் விழித்து கொண்டு கேக்க,

“போயி நீங்க டீ வாங்கிட்டு வந்தா தான் உள்ள போவேன்… இல்லனா எமர்ஜெண்சின்னு சொல்லிட்டு இன்னும் லேட்டா போவேன்… எப்படி வசதி…” என அவன் கேக்க,

“இந்தா போயிட்டேன் தம்பி…” என அவசரமாக ஓடினார் குமார்.

—–

“குட் மார்னிங் சார்…” என சல்யூட் அடித்து கமிஷனரின் முன்னே நின்றான் விஷ்ணு.

அவனுக்கு முறைப்பான தலையசைப்பை அவர் குடுக்க,

அங்கே அமர்ந்திருந்த எம்.எல்.ஏ நாச்சிமுத்து , “அந்த சல்யூட் அப்பறம் அடிச்சிக்கோ போலீசு… நீ இங்க என்னையா பாரு…” என அவர் அவசரமாக பேச,

“முதல்ல என் மேலதிகாரி எனக்கு பர்மிஷன் குடுக்கணும் சார்…” என அவன் பவ்யமாக சொல்ல,

“பண்றதையும் பண்ணிட்டு இந்த லொள்ளுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…” என மனதில் அவனை புகைந்துகொண்டு, பல்லைக்கடித்து அவனை பார்த்தார் கமிஷனர்.

அவன் அவரை பாத்து கண்சிமிட்ட, மேலும் முறைத்து பார்த்தார் மேலதிகாரி.

“என்னையா கமிஷனர்… என்னோட அவசரம் புரியாம… நான் வேற யாருக்கும் தெரியாம வந்திருக்கேன்…” என கோவமாக சொல்ல,

இப்போது கமிஷனர் விஷ்ணுவிடம், ” அவரோட வீட்டுல இருந்து இந்த டைம் ஒரு பல்க் அமௌன்ட் யாரோ திருடிட்டு போனதா சொல்லறாரு… என்னனு டீடெயில்ஸ் கேட்டுட்டு, ப்ரொசீட் பண்ணுங்க…” என்று சொல்ல,

விஷ்ணுவும் தலையசைத்து, “என்ன சார்… பத்து நாளைக்கு முன்னாவும் இப்படி தான் சொன்னிங்க… கடைசில ஆள கண்டுபிடிச்சதும், என் ஆளு தான்… நான் வேற மாதிரி பிளான் பண்ணுனேன்… இப்போ அந்த நேரம் வரல… விட்டுடுன்னு சொல்லிட்டு இப்போ திரும்பியும் இப்படியே சொல்லுறீங்க… இந்த தடவ என்ன பண்ணனும் நீங்களே சொல்லிடுங்க… அதுக்கேத்த மாறி பண்ணிடுறேன்… எங்களுக்கும் நேரம், வேல எல்லாம் மிச்சமாகும்…” என கொஞ்சம் எரிச்சலாக சொல்ல,

“அட என்ன போலீசு நீ வேற நேரங்காலம் தெரியாம பேசிட்டு… இது உண்மையாவே எனக்கு தெரியாம நடந்துருக்குயா… அமௌன்ட் வேற ரொம்ப பெருசுயா…” என அவர் சொல்ல,

“உங்க அல்லக்கை தான் வீட்டை சுத்தி வச்சிருப்பீங்களே… எப்படியும் அவனுங்க தான் எடுத்துருப்பாங்க… அவனுங்ககிட்டயே நல்லா நாலு பாட்டில் வாங்கி தரேன்னு சொல்லுங்க… உண்மையை சொல்லிடுவான் எடுத்தவன்…” என விஷ்ணு நக்கலாக சொல்ல,

“அடப்போய்யா… நீ வேற இந்த நேரத்துல நக்கல் பேசிட்டு இருக்க… போன தடவை மாறி இந்த பணத்தை எப்படியாது கண்டுபிடிச்சி கொடுக்க பாரு சீக்கரம்… இது வேற யாருக்காது தெரிஞ்சிதுன்னா, நான் அப்பறம் தலையில துண்டை போட்டுட்டு போக வேண்டியதுதான்… விசாரணைன்னு ஆரம்பிச்சிடுவாங்க… எப்படியாது காதும் காதும் வச்ச மாறி கண்டுபுடுச்சி குடு, உனக்கு என்ன பண்ணணுமோ சிறப்பா கவனிச்சிடுறேன்… ஆனா நீ எதும் வாங்க வேற மாட்ட….” என அரசியல்வாதி நயமாய் பேச,

“அமௌன்ட் வேற ரொம்ப பெருசா இருக்கு… அதுனால சீக்கரமெல்லாம் கண்டுபிடிக்குறது கஷ்டம்…” என அவன் விட்டேற்றியாய் சொல்ல,

அரசியல்வாதி, “என்ன போலீசு… நீயே இப்படி சொல்லலாமா?…”

“வேற என்ன சொல்ல சொல்லுறீங்க… வேணும்னா நீங்க கமிஷ்னர் கிட்ட சொல்லி, வேற எந்த போலீஸ் ஆஃபீசர் வச்சாவது பாத்துக்கோங்க…” என அவன் தெனாவெட்டாக சொல்ல,

“இல்ல இல்ல… அதுலாம் வேணாம்… நீ தான் பாக்கணும்…” என நாச்சிமுத்து அவசரமாய் சொல்ல,

“நான் தான் ஹாண்டில் பண்ணனும்னா… அப்போ நீங்க பொறுத்து தான் ஆகணும்… போனவாட்டி போல படுத்த கூடாது…” என அவன் கராறாய் சொல்ல,

“நீ கண்டுபிடிச்சிட்டு சொல்லு…” என சொல்லிவிட்டு கெளம்பி சென்றார் அரசியல்வாதி.

அவர் கிளம்பியதும் அவனை முறைத்த கமிஷனரோ, “எதுக்கு இந்த வேலை உனக்கு…” என கேக்க,

“பின்ன… சும்மா விட சொல்லுறீங்க.. போன தடவை என்ன பாடு படுத்தினாரு… அதுக்குதான்… ஒரு வாரம் பணம் பணம்ன்னு நெஞ்ச பிடிச்சிக்கிட்டு உக்காந்திருக்கட்டும்…” என விஷ்ணு கூலாக சொல்ல,

“இது அவருக்கு தெரிஞ்சா…” என சொல்ல வர,

விஷ்ணு, “அதுக்குதான் கமிஷனர் சார் இருக்காங்களே… எல்லாம் அவரு பாத்துப்பாரு…”

“உன்கிட்ட ஸ்ட்ரிக்ட் ஆஹ் இல்லாம விட்டதுக்கு…” என அவர் மறுபடியும் சொல்ல,

“அது உங்க தப்பு… இப்போ சொல்லி ஒன்னும் ஆக போறது இல்ல…” என கண்சிமிட்டி சொல்லிவிட்டு, சல்யூட் வைத்து கிளம்பினான் காவல்காரன் விஷ்ணு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!