Skip to content
Post Views: 4,123
ரீங்காரமாய் என்னுள்ளே – 10 .2
“மம்மி… நீங்க ரொம்ப ஓவர் ஆஹ் போய்ட்டு இருக்கீங்க…” என சூரி கடுப்பாக சொல்ல,
விசாலாட்சியோ வாயே திறக்காமல் அமைதியாக அவனை பார்த்தார்.
“ஏதாவது பேசுங்க மம்மி… இப்படி தான் பண்ணுறீங்க நைட்ல இருந்து… என்னனு கேட்டா… நீயே சொல்லுன்னு சொல்லுறீங்க… என்னனு தெரிஞ்சா தானே சொல்ல முடியும்…” என கெஞ்சி கேக்க,
Advertisement
“நீயே யோசி… என்னத்த என்கிட்டயிருந்து மறச்சன்னு…” என சொல்லிவிட்டு வாயை மூடிக்கொண்டார்.
“படுத்துறீங்க மீ… நான் கேக்கும் போது, இதை மட்டும் தான் சொல்லுறீங்க…” என அவன் கெஞ்சலாக சொல்ல,
அவரோ கருணையே இல்லாமல் அவனை முறைத்து பார்த்தார்.
Advertisement
“இதுலாம் ரொம்ப டூ மச் சொல்லிட்டேன்…” என அவரிடம் சொல்லி, “என்னத்த மறச்சி தொலைச்சேன்னு வேற தெரியலையே…” என அவனுக்கு அவனே புலம்ப,
Advertisement
அச்சமயம் அவசரமாய் கிளம்பி மாடியிலிருந்து கீழே வந்தான் விஷ்ணு.
அவன் வருவதை பார்த்த சூரியோ, வேகமாய் ஓடிப்போய் அவனை இழுத்து வந்து சோபாவில் அமர்த்தினான்.
“டேய் விடுடா என்னைய… எனக்கு முக்கியமான இடத்துக்கு போகணும்…” என விஷ்ணு அவனை திட்ட,
Advertisement
“அதுலாம் அப்பறம் பாத்துக்கோ… முதல்ல இந்த மீ எதுக்கு இப்படி மூஞ்சியை தூக்கி வச்சிட்டு இருக்காங்கன்னு சொல்லு… ரொம்ப பன்றாங்க… நான் இன்னைக்கு வேலைக்கு கூட போல தெரியுமா…” என அவன் அடுக்காய் சொல்ல,
“அதுக்கு எதுக்கு என்னை கேக்குற… உங்க மீ கிட்டயே கேளு…” என அவனின் கையை தட்டிவிட்டு எழ,
அவனை எழவிடாமல் தடுத்து, “இங்கபாரு நீ எங்களுக்குள்ள சமரசம் பண்ணிட்டு எங்க வேணும்னாலும் போ…” என அவன் முடிவாய் சொல்ல,
அவனை முறைத்து, “என்ன ம்மா…” என அவன் கடுப்பாக அவரை பார்க்க,
அவரோ கண்டுகொள்ளாமல் போனை எடுத்து, டயல் செய்தார்.
“இங்க பாருடா… இவங்க நாம பேசுறதை கூட கேக்காம யாருக்கோ கால் பண்ணுறாங்க…” என சூரி சொல்ல,
விஷ்ணுவோ அன்னையை பார்த்தான்.
அந்த பக்கம் போனை அட்டென்ட் செய்ததும், விசாலாட்சி போனை ஸ்பீக்கர் மோடில் போட்டார்.
“சொல்லுங்க அத்தை…” என அந்த பக்கம் சொல்ல,
மகன்கள் இருவரையும் ஒரு முறைப்பார்த்து விட்டு, “ம்… சொல்லு மானசி… என்ன பண்ணிட்டு இருக்க…” என அவர் கேக்க,
சூரியா நண்பனை பார்க்க, அவனோ அன்னையின் பேச்சில் தன் கண்ணை வைத்திருந்தான்.
“இப்போ சொல்லு மானசி… நீ சூரியாவை பிடிச்சிருக்கு சொன்னல்ல… அதை கொஞ்சம் தெளிவா சொல்லு… அப்போ தான் நான் ஒரு முடிவுக்கு வர முடியும்…” என பொதுவாக பேசிவிட்டு, விசயத்திற்கு வர,
மானசியின் குரல் கொஞ்சம் தயங்கி, “ஆமா அத்தை…” என பதில் வர,
விசாலாட்சி சூரியாவை ஒரு பார்வை பார்த்து, “நீ நல்லா ஸ்ட்ரோங் ஆஹ் பேசுனா தான் மானசி… நான் முடிவு பண்ண முடியும்…” என அவர் அழுத்தமாக சொல்ல,
“ஆஹ் அத்தை… ஆனா சூரியா அத்தான்…” என அவளின் குரல் இன்னும் தயங்கி ஒலிக்க,
“இங்க பாரு மானசி… நீ முதல்ல உன்னோட காதல்ல உறுதியா இருக்கியா… நீ லவ் பண்றதை சூர்யாகிட்ட சொன்னியா?… நீ உன்னோட காதல் கைகூடுறதுக்காக என்ன செஞ்சிருக்க…” என அவர் வரிசையாக கேள்விகைகளை அடுக்க,
ஒரு நொடி அமைதிக்கு பின், “ஆஹ் அத்தை… எனக்கு சூரியா அத்தானை தான் பிடிச்சிருக்கு… நான் ஒரு தடவை அத்தான்கிட்ட பேச செஞ்சேன் அத்தை… ஆனா அவங்க அவாய்ட் பண்ணிட்டாங்க… அதுக்கப்பறம் நான் பேச போனாலே கழண்டுக்குறாங்க… அவன்கை எனக்கு தெரியும்…” என அவள் கண்கலங்க சொல்ல,
“சரி அழாம… அப்பறம் சொல்லு…” என அவர் கேக்க,
இங்கு விஷ்ணுவோ, சூரியாவை கோவமாக பார்க்க, சூரியாவோ அவனை பார்க்காது முகத்தை திருப்பினான்.
“இங்க அம்மா விஷ்ணு அத்தான்னுக்கு, எப்படியாவது என்னை பேசி முடிச்சிடணும்னு சொல்லிட்டு இருக்காங்க… அப்படி நீங்க சம்மதிக்கலைனா, வேற வரன் பாக்குறதுல ரொம்ப உறுதியா இருக்காங்க… எனக்கு என்ன பண்றதுனே தெரியல… அதுக்கு தான் அத்தை உங்க கிட்ட ஹெல்ப் கேட்டேன்…” என அவள் வரிசையாய் பரிதவிப்புடன் சொல்ல,
விசாலாட்சி, “நீ அவனை லவ் பண்ணுறன்னு சொல்லுற… சூரிக்கு உன்னை பிடிக்கும்னு எப்படி நீ சொல்லுற?…”
“அவங்களுக்கும் என்னை பிடிக்கும் அத்தை… இல்லனா இப்படி என்னை அவாய்ட் பண்ணிட்டே இருக்க மாட்டாங்க தானே… பிடிக்கலைன்னா அப்போவே சொல்லிருப்பாங்க தானே…” என கேள்வியாய் கேக்க,
“இதுல இப்படி வேற ஒன்னு இருக்கோ…” என அவளிடம் சொல்லி, சூரியை பார்த்துக்கொண்டே போனில் “சரி மானசி… நான் பேசிட்டு உனக்கு சொல்லுறேன்…” என அவர் வைக்க போக,
“சூரி அத்தானுக்கு விருப்பம் இல்லனா கம்பெல் பண்ணாதீங்க அத்தை… எனக்கு தெரியும் அவங்களுக்கு என்னை பிடிக்கும்ன்னு நான் பாத்துருக்கேன் அவங்க கண்ணுல… எங்க அம்மாவால தான், அவங்க என்னை அவாய்ட் பண்றதுக்கு காரணமா இருக்கும்… எனக்கே புரியுது இருந்தாலும் எனக்கு என்ன பண்றது தெரியல அத்தை…” என நிராசையாய் சொல்லிவிட்டு வைத்துவிட்டாள் மானசி.
போனை வைத்த விசாலாட்சி சூரியை, அழுத்தமாக பார்க்க அவனோ தலையை குனித்துக்கொண்டான்.
“அப்பறம் சூரி, இதென்ன பொண்ணு போல குனிஞ்சிக்குற… இப்படி உங்க மம்மியை பாரு…” என்று சொல்லி முகத்தை நிமிர்த்த,
அவனோ முறைத்து வைத்தான் நண்பனை.
“அப்பறம் விசாலாட்சி… விசாரணையை ஆரம்பிக்குறது… இன்னும் எவ்வளவு நேரம் தான் பார்வையாலே கேக்குறது…” என விஷ்ணு சிரிப்பை அடக்கியபடி சொல்ல,
“இதுல நீ கூட்டு இல்லையா அப்போ…” என அன்னை கேட்க,
“நான் கூட்டும் இல்ல… பொரியலும் இல்ல…” என சொல்லி, “இருந்தாலும் எனக்கு ஒரு டவுட் வருது இங்க…” என சேர்த்தும் சொல்ல,
“என்னடா…” என்றார் அன்னை.
“ஒருவேளை இவன் கமிட் ஆகிட்டா, பொண்ணுங்க கூட கடலை வறுக்க முடியாதுனு மானு குட்டிக்கிட்ட பதில் சொல்லாம இழுத்தடிக்குறானோ…” என அவனாகவே சொல்ல,
“டேய்…” என சொல்லி அவனை அடிக்க பாய்ந்தான் சூரி.
“அடேய்… இப்போ நான் உன்னைய வெளுக்க போறேன் பாரு…” என அன்னை சூரியை திட்ட,
“என்ன மம்மி…” என்றான் அவன்.
“மம்மி… அம்மி தான்… ஒழுங்கா சொல்லுடா… ” என அவர் கடிய,
“என்ன மம்மி சொல்லணும்…” என சூரி கேக்க,
“இவன் சரிப்பட்டு வரமாட்டான் விசாலாட்சி… நாமளே மான் குட்டிக்கு வேற நல்ல மாப்பிளை பாக்கலாம்…” என விஷ்ணு முந்திக்கொண்டு சூரியை பார்த்து சொல்ல,
அவனின் தொடையில் கிள்ளி, “டேய் அடெங்குடா…” என சூரி சொல்ல,
“என்ன அடங்கு… இல்ல என்ன அடங்குன்னு கேக்குறேன்… நீ அவங்க அம்மாவை யோசிச்சி மான் குட்டிய வேணாம் முடிவு பண்ணிடல்ல… அப்பறம் என்ன ஈர வெங்காயத்துக்கு இப்போ இப்படி பேசுற…” என விஷ்ணு பல்லைக்கடிக்க,
“சூரி… நீ உன் முடிவை சொல்லு…” என்றார் விசாலாட்சி.
“எனக்கு தெரியல மம்மி… நீங்க சொல்லுறது தான்…” என்றான் சூரி.
“இந்த பூசணிக்காயை தான் நீ மறைக்காம முன்னாடியே சொல்லிருக்கணும்…” என விஷ்ணு இடைச்சொருக,
அவனை முறைத்து, “என்ன சொல்லணும்னு சொல்லுற என்னை… அவங்க அம்மா, நாங்க என்னமோ அவங்க இடத்தை பரிச்சிட மாறி எவ்வளோ பேசுனாங்க… அதுக்கு நீயும் பேசி பெரிய பிரச்சனை ஆகல… அதுக்கு அப்பறம் அவங்க கொஞ்சம் அமைதியா போனாலும், அந்த அம்மாவோட பார்வையே அப்படி இருக்கும்… இதுல அவங்க பொண்ணை பிடிக்கதுன்னு சொன்னா… அப்பறம் என்ன நடக்கும்னு யோசிச்சியா?…” என சூரி எரிந்து விழ,
“என்ன சூரி சொல்லவரா இப்போ?…” என விசாலாட்சி கேக்க,
“அவனுக்கு மானை பிடிக்குமாம்… ஆனா அவங்க அம்மா பாத்தா மட்டும் தான் பயமாம்…” என விஷ்ணு கவுண்டர் குடுத்தான்,
சூரி, “பச்… ஏண்டா…”
“என்ன ஏண்டா… இவ்வளோ யோசிக்குறவன், எதுக்குடா கண்ணுல ஹார்டின் விட்டு அவளை பாத்த…” என அவனை அடிக்க.
“விடுடா… டேய் விடுடா…” என சூரி அலற,
“விஷ்ணு போதும்…” என விசாலாட்சி அவனின் கையை பிடிக்க,
“என்னமா பாவம் பாக்குறீங்க… மானு பாவம்… ரொம்ப அழுத்தத்துல இருக்கா… நான் தான் உங்களுக்கு சொல்ல சொன்னேன்…” என சொல்லி முடித்தான் விஷ்ணு.
“என்னடா சொல்லுற… உனக்கு தெரியாதுன்னு சொன்ன?…” என அன்னை கேக்க,
“இப்போ இந்த கேள்வி ரொம்ப முக்கியமா?… ஒழுங்கா பெரியவங்களா என்ன பேசி முடிவெடுக்கணும்னு பாருங்க…” என விஷ்ணு சொல்ல,
சூரியா அமைதியாக இருந்தான்.
“சூரி… நீ என்ன யோசிக்குற… இப்படி இருந்தா என்ன அர்த்தம்…” என அன்னை அர்த்தமாய் கேக்க,
“அவன்ட என்ன கேட்டுட்டு இருக்கீங்க… கட்டுடா தாலியைனா கட்ட போறான்…” என்று விஷ்ணு இடையில் சொல்ல,
“ஏண்டா… இப்போ தானே பெரியவங்க பேசுங்கன்னு சொன்ன…” என அன்னை கோவமாய் கேக்க,
விஷ்ணு, “நீங்க சட்டுனு முடிவு எடுக்குற போல தெரியலையே… இவனென்னமோ அமைதியின் சிகரமாய் இருக்கான்…” என மீண்டும் பேச,
“நீ உனக்கு வேலை இருந்தா போயி பாருடா…” என விசாலாட்சி அவனை விரட்ட,
அப்பொழுதுதான் மணியை பார்த்தான் விஷ்ணு.
“ஓ காட்…” என தலையில் தட்டி போனை எடுக்க, அதில் இரண்டு மெசேஜ் வந்திருந்தன.
அதை ஓபன் செய்து பார்த்த விஷ்ணுவின் முகத்தில் அடக்கப்பட்ட புன்னகை. “இவங்களால இன்னைக்கு போக முடியாம போயிடுச்சா…” என்று நினைத்துக்கொண்டே போனை எடுத்துக்கொண்டு அவனின் அறைக்கு செல்ல போக,
“எங்கடா… வெளில போனும்னு சொன்ன…” என சூரி கேக்க,
“உன் பஞ்சாயத்தை பாருடா முதல்ல… என்னைய கேக்க வந்துட்டான்… கிளம்புனவை பிடிச்சி உக்காரவச்சிட்டு, கேள்வி கேக்க வந்துட்டான்…” என அவனை பார்த்து கடுப்படித்து மேலேறினான்.
——
“சுண்டக்கா போனை எடு…” என சொல்லிக்கொண்டே போனை காதில் வைத்திருந்தான் விஷ்ணு.
அந்த பக்கம் அட்டென்ட் செய்த சிந்துவோ எடுத்ததும், “வந்துட்டீங்களா?… எங்க இருக்கீங்க…” என அவள் சற்று பரபரப்பாய் கேக்க,
அவளின் பேச்சின் தொனியை கேட்ட விஷ்ணுவோ, “அவ்வளோ ஆர்வமா… என்னைய பாக்குறதுக்கு…” என மெல்லியதாக விசில் அடித்துக்கொண்டே கேக்க,
“அப்படியா அவரை எதிர்பாக்கிறோம்…” என அவளுக்கு அவளே மனதில் கேட்டுக்கொண்டு, “இல்ல… இல்ல… நீங்க தான் அஞ்சு மணிக்கு வரேன் சொன்னிங்க… அதனால் தான்…” என அவளின் குரல் நலிந்து ஒலிக்க,
“என்ன சுண்டக்கா வாய்ஸ் உள்ள போகுது…” என அவன் கேக்க,
“ஹா… இல்ல இல்ல…” என மறுப்பாய் சொல்ல,
“ஒகே இல்ல தான்… சாமி எல்லாம் கும்பிட்டு பிரகாரம் எல்லாம் சுத்தியாச்சா?…” என அவன் கேக்க,
“அதுலாம் வந்ததும் பண்ணிட்டேன்…” என அவசரமாய் சொன்னாள் சிந்து.
“குட்… அப்படி தான் இருக்கனும்… அப்பறம் என்ன வேண்டின…” என அவன் அடுத்து கேக்க,
சிந்து, “ஹான்… அதுலாம் சொல்ல கூடாது…”
“அப்பறம் எப்படி மெசேஜ் பண்ணிருந்த?…” என அவன் கேக்க,
“நீங்க தான் சாமி கும்பிட்டே இரு… வந்திருவேன்னு சொன்னிங்க… அதான் சொன்னேன்…” என்றாள் பதிலாக,
விஷ்ணு, “ஓஹ்… அதுக்கு சாமி கும்பிட்டு முடிச்சி அரைமணி ஆச்சு… ஆள காணும்னு மெசேஜ் அனுப்புவியா…”
“நீங்க தான் போன்ல சொன்னிங்க… அதுக்கு தான் பதில் சொன்னேன்…” என்றாள் முறுக்கியவளாக,
“நீ அந்த சாமிகிட்ட எனக்காக என்ன வேண்டிகிட்டன்னு சொல்லு…” என்று அவன் பேச்சை வளர்க்க,
சிந்து, “நானா…”
விஷ்ணு, “ஆமா நீதான்… நீ தானே அவினாஷியப்பர் கோவிலை இருக்க…”
“அப்போ நீ தான் வேண்டணும் எனக்கும் சேர்த்து…” என அவன் சட்டமாய் சொல்ல,
“நீங்க…” என அவள் ஆரம்பிக்க,
“அப்போ நீ எனக்காக வேண்டலல்ல… அது எனக்கு தெரிஞ்சதுனால தான் உன்னைய பாக்காம கிளம்பிட்டேன்…” என இடையிட்டு சொல்ல,
“நீங்க வரலையா அப்போ…” என அவளின் குரல் அப்பட்டமான ஏமாற்றத்துடன் கேக்க,
இங்கு விஷ்ணுவோ நெற்றியை நீவிக்கொண்டே, “ஆமா வரலை… நீ உடனே எதுக்கு இப்போ பரங்கிப்பூ போல மூஞ்ச சுருக்குற…”
“இல்ல… அப்படிலாம் இல்ல…” என்றாள்.
“என் வேலையை பத்தி தெரியும் தானே… இல்லனாலும் இப்போ தெரிஞ்சிக்க… பிளான் பண்ணுனாலும் இப்படி நிறைய நேரம் நடக்காம போயிடும்…” என அவன் பேச,
“ஆஹ்… தெரிஞ்சிகிட்டேன் இப்போ…” என முயன்று தன் பேச்சில் கவனமாய் சொன்னாள், மனதை அடக்கியபடி.
“ரைட்… நீ கிளம்பு… அதான் சாமி தரிசனம் கிடைச்சுதுள்ள…” என அவன் அடுத்து சொல்ல,
சிந்து, “சரி…”
“குட் கேர்ள்… ரோட்டை கிராஸ் பண்ணும் போது பாத்து பண்ணனும் புரிஞ்சிதா…”
“ஹ்ம்… ஒகே சார்…” என போனை வைத்தாள் சிந்து.
“சுண்டக்கா கிட்ட என்னமோ மாற்றம் தெரியுதே இன்னைக்கு பேச்சுல…” என மூளையில் அவளுடைய பேச்சை அசை போட்டவனாய் வெளியேறினான்.
error: Content is protected !!