Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

வரம் 💘 25(Final)

அத்தியாயம் – 25

“ஹேப்பி மார்னிங் வதனா!!!!” என பின்னிருந்து அவளை பாந்தமாய் தனக்குள் அடக்கிக் கொண்டே புன்னகையுடன் அவன் காலை வணக்கம் சொல்ல,

இன்னும் தூக்கம் கலையாமல் திரும்பிப் படுத்து வாகாய் அவனின் மார்பில் அடைக்கலம் புகுந்த அவனின் மனையாள், “லவ்லி மார்னிங் வினய்!!!” என விட்ட தூக்கத்தை மீண்டும் தொடர,

“ராஸ்கல்!! உதை விழும் உனக்கு இப்போ!! டைம் என்ன தெரியுமா??” என வினய் அடக்கப்பட்ட புன்னகையுடன் மிரட்ட(?),



Advertisement

அதற்கெல்லாம் அவள் அசைந்து கொடுக்கவே இல்லை. அப்படி ஒரு ஆழ்ந்த உறக்கம்!!!

“தூங்குறப்போ கூட இவளோ அழகா இருந்து கொல்றியே டா வதனா!!! க்யூட்டி பொண்ணு!!!” என அவளின் அழகை ரசித்து, கொஞ்சிக் கொண்டவன் நேரமாவதை உணர்ந்து, அவளிடமிருந்து மனமே இல்லாமல் தன்னைப் பிரித்து எழுந்து கொண்டான்.

வினய்யின் வேலையை காரணம் காட்டி, இருவரும் திருமணம் முடிந்த கையோடு மும்பையில் ஒரு வீடு வாங்கி அங்கேயே குடி வந்து விட, வந்தனாவின் ஆசைப்படி அவள் வீட்டிலிருந்தே தொலைதூர கல்வி மூலம் பிஜி படித்துக் கொண்டிருக்கிறாள்.

Advertisement

திருமணமாகி ஒரு வருடம் எப்படி சென்றது என்றே தெரியாமல் கண்மூடித் திறப்பதற்குள் காலம் ஓடி விட்டிருந்தது.

Advertisement

வாழ்க்கை இத்தனை அழகானதா??? என இருவரும் வியக்கும் வகையில், இந்த ஒரு வருடம் அத்தனை நிறைவாக கடந்திருந்தது.

கிராமம் எனும் கட்டமைப்புக்குள் வளர்ந்த வந்தனாவிற்கு புது இடம், அதுவும் மும்பை போன்ற ஒரு இடத்தில் தன்னை பொருத்திக் கொள்ள ஆரம்பத்தில் மிகவும் சிரமமாகவே இருந்தது.

அதிலும், அவனின் வேலை!! அதைக்கொண்டு அவன் கலந்து கொள்ளும் பார்ட்டிகள், சில சமயம் எழும் கிசுகிசுக்கள் என முதல் சில மாதங்களில் அதையெல்லாம் கையாள இன்னும் பக்குவப்பட்டிராத வந்தனா மிகவும் சோர்ந்து போக, அதை உணர்ந்த வினய், மிக கவனமாய் அவளைக் கையாண்டு, நிதர்சனத்தை அவளுக்கு மெதுவாய் உணர வைத்து, தன் காதலால் அவளை அந்த சூழலுக்கும் தன் வேலைக்கும் பழக்கியிருந்தான்.

Advertisement

இப்போதும் செல்லச் செல்ல சண்டைகள் அவ்வப்போது இருவருக்கு இடையிலும் உதித்தாலும், அதைக் காதலால் அழகாய் கடக்கும் வித்தையை வினய் கற்று கை தேர்ந்திருக்க, வந்தனாவும் கொஞ்சம் கொஞ்சமாய் அவனிடமிருந்து அனைத்தையும் கற்றுக் கொண்டிருக்கிறாள் காதலுடன்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வந்தனாவின் நாசியை இதமாய் வந்து தீண்டியது அந்த மணம்.

அதில் ஒட்டிக்கொண்டிருந்த மிச்சத் தூக்கமும் பறக்க, கண்களைக் கசக்கிக் கொண்டு பட்டென அவள் எழுந்து அமர, புன்னகையுடன் அவள் முன் அந்த காஃபிக் குவளையை நீட்டினான் வினய்!!!

அதை வாங்கி, ரசித்து ருசித்து கடைசி சொட்டு வரை பருகி முடித்த பின்பே அவனை நிமிர்ந்து பார்த்த வந்தனா, அங்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே முறைத்துக்(?) கொண்டிருந்த வினய்யைக் கண்டு அசட்டுச் சிரிப்பை உதிர்த்தாள்.

“நீ இப்படி பத்து மணி வரைக்கும் தூங்கி, பிரஷ் பண்ணாம காஃபி குடிக்கிற அழகை எல்லாம் என் மாமனார் பார்க்கணும்.. ரொம்ப பெருமைப்பபடுவாரு!!” என கிண்டல் போல் அவன் சொல்ல,

“என்ன பத்து மணி ஆய்டுச்சா?? என்ன வினய் நீங்க??? இப்படி பொறுப்பே இல்லாம இருக்கீங்க!! நகருங்க!!” என அதிர்ந்து போய் அவள் மெத்தையில் இருந்து குதித்திறங்க,

“ஹேய் வாலு!!! ரிலாக்ஸ்!! நாளைக்கு தானே ஃபங்ஷன்!! பொறுமையா போகலாம்” என்றான் இலகுவாக அவன்,

“நல்லா இருக்கே!!! நடக்கப் போறது நம்ம வீட்டு ஃபங்ஷன்!! நியாயப்படி நம்ம தான் அங்க இருந்து வேலை பார்த்திருக்கணும்!!! உங்களுக்கு இங்க ஷூட் இருக்குன்னு வந்ததும் இல்லாம என்னையும் கூட்டிட்டு வந்துட்டீங்க.. பாவம் சதீஷ் மாமாவும், சந்தோஷ் அண்ணாவும்!! தனியா எவ்ளோ வேலை பார்ப்பாங்க?? அட்லீஸ்ட் இன்னைக்காச்சும் சீக்கிரம் கிளம்பி போய் மிச்ச வேலையை பார்க்கணும்” என அவள் அடுக்கிக் கொண்டே போக,

அவனின் பார்வை ரசனையாய் மனைவியின் பேச்சில் பதிந்திருந்தது.

“நான் இங்க பேசிட்டு இருக்கேன்.. நீங்க என்ன சிரிச்சிட்டே இருக்கீங்க??” என அதற்கும் அவள் பொரிய,

“இல்லை!! நான் லவ் பண்ண அந்த குட்டிப்பொண்ணை ரொம்ப நாளா காணோம்!! அதான் தேடிட்டு இருக்கேன்” என அவன் விளையாட்டாய் சொல்ல,

“இந்த கிண்டல் எல்லாம் வேண்டாம்!! போய் அந்த ரூம்ல குளிச்சிட்டு ரெடி ஆகுங்க!! கிளம்பலாம் லேட் ஆச்சு” என அவள் கராறாய் இருக்க,

“தனித்தனியாக குளிச்சா லேட் ஆகும்!!! வா!! டைம், வாட்டர் எல்லாத்தையும் எப்படி கன்ஸ்யூம் பண்றதுன்னு சொல்லித்தரேன்” என அவள் சுதாரிக்கும் முன் அவளை கைகளில் அள்ளிக்கொண்டு குளியலறைக்குள் புகுந்திருந்தான்.

“அச்சோ!!! விடுங்க வினய்!!!” என அவள் வெட்கத்தில் கதறியதெல்லாம் அவனின் இதழ்களில் அடங்கிப் போக, அடுத்த ஒரு மணி நேரத்தில் இருவருமாய் குளித்துவிட்டு(?) வெளியே வர, அதற்குள் அவர்களின் கைபேசி பலமுறை அடித்து ஓய்ந்திருந்தது.

“உங்களை வச்சிட்டு!!!” என செல்லமாய் அவனை முறைத்தவள்,

“நான் போய் சிம்பிளா ஏதாவது பண்றேன்!! நீங்க கிளம்பி வாங்க” என சொல்லிக்கொண்டே வெளியே சென்று விட,

இவன் புன்சிரிப்புடன் தன் கைபேசியில் வந்த தவறிய அழைப்புகளில் கவனம் செலுத்தினான்.

சதீஷ் தான் மூன்று முறை அழைத்திருந்தான்.

“சொல்லு டா நல்லவனே!!!” என வினய் மீண்டும் அழைப்பு விடுத்து பேசத் துவங்கிவிட,

இங்கே வந்தனா அதற்குள், வினய்க்கு பிடித்தவாறு ஃப்ரெஞ்ச் டோஸ்ட் மற்றும் ப்ரூட் சாலட் செய்திருந்தவள்,

“வினய்!!! வாங்க சாப்பிடலாம்!!” என அழைத்துவிட்டாள்.

“ஓகே டா!! வில் பீ தேர் பை ஈவ்னிங்!! பார்க்கலாம் அங்க” என சதீஷிடம் விடைபெற்று அவன் சாப்பிட அமர,

எப்போதும் போல் முதல் வாய் உணவை அவனின் வதனாவிற்கு ஊட்டிவிட்டு, அவன் உண்ணத்துவங்க,

அவனையே காதலாய் பார்த்திருந்தாள் அவனின் மனையாள்.

அவள் தந்தையிடம் எதற்கெல்லாம் ஏங்கினாளோ, அவை எல்லாம் கேட்காமலே, அளவுக்கதிகமாக அவளின் கணவனின் மூலம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்.

இந்தக் காதல், அவளை அவளுக்கே புதிதாய் அறிமுகப் படுத்தியிருக்க, நித்தம் நித்தம் அவனின் காதலில் புதிதாய் பூத்த மலர் போல் மலர்ந்து மணம் வீசுகிறாள் மங்கை அவள்!!!

அவளின் மெல்லிய உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்தும் அவளுக்காக என வாழ்ந்து கொண்டிருக்கும் வினய்யை எண்ணுகையில் நெஞ்சம் விம்ம,

“லவ் யூ வினய்!!!” என காதலுடன் அவள் உரைத்ததும்,

புன்னகையுடன், “லவ் யூ மோர் வதனா!!!” என்றவன்,

“என்ன யோசனை சாப்பிடாம உனக்கு??” எனக்கேட்டு

லேசாய் அவள் தலையைக் கலைத்துவிட்டு கண்சிமிட்டிய வினய், அவளுக்கு ஊட்டிவிடத் துவங்க,

அவளும் அவனையும் உணவையும் சேர்த்தே தித்திப்பாய் உள்ளே விழுங்கினாள்.

“ஓகே டா!! நீ போய் கிளம்பி வா.. நான் நம்ம லக்கேஜ் எல்லாம் காருக்கு கொண்டு போறேன்.. கொஞ்சம் வீட்டுக்கு ஷாப்பிங் பண்ணிட்டு ஏர்போர்ட் போனா சரியா இருக்கும்” என அவன் உண்ட பாத்திரங்களை கழுவி வைத்து, சமையலறையை ஒதுங்க வைத்துக் கொண்டே சொல்ல,

“ஓகே வினய்!!! டென் மினிட்ஸ்!! வந்துடுறேன்” என அவள் உள்ளே செல்ல, வினய்யும் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு தயாரானான்.

சொன்னது போலவே வந்தனாவும் வந்துவிட, முதலில் இருவரும் நாளை நடக்கவிருக்கும், கணேஷ் – அகிலாவின் அறுபதாம் கல்யாண நாள் விழாவிற்கு கொடுக்க ஒரு பரிசை வாங்கிக் கொண்டு விமான நிலையம் செல்ல சரியாய் இருந்தது.

மதியம் மூன்று மணி போல் சென்னையை அவர்கள் வந்தடைய, அவர்களுக்காகவே அங்கே காத்துக் கொண்டிருந்தான் சந்தோஷ்.

அவனைக் கண்டதுமே, “அண்ணா!!!” என வந்தனா ஓடிச் செல்ல,

புன்னகையுடன் பயணப் பொதிகளை தள்ளிக் கொண்டு அவர்களை நெருங்கினான் வினய்.

“எங்க டா அவனைக் காணோம்??” என சதீஷை விசாரிக்க,

“சங்கீக்கு புளியங்காய் சாப்பிடணும் போல இருக்காம்.. அதான் அவரு தெருத் தெருவா புளியமரத்தைத் தேடி அலைஞ்சுட்டு இருக்காரு!!!” என அவன் கிண்டலடிக்க,

“இந்த சங்கீக்கே இது ஓவரா இல்லை!! இங்க எங்க போய் மாமா புளியமரத்தை தேடுவாரு??” என சதீஷிற்காக வந்தனா வருத்தப்பட,

“போன மாசம் வந்தப்போ, மிட்நைட்ல இலந்த பழம் வேண்டும்னு மாப்பிள்ளையை சுத்தல்ல விட்ட நீ இதை பேசலாமே தங்கம்??? அவளாச்சும் பாவம் மாசமா இறுக்கப்போ தான் அந்த மனுஷனை படுத்துறா.. ஆனா நீ???” என சந்தோஷ் அவளை கிண்டல் செய்ய,

“போடா எருமை!!” என பொய்க்கோபம் கொண்டு அவனை அடித்தவள்,

“நான் உங்களை படுத்துறேனா வினய்???” என்று வேறு கணவனிடம் பாவமாய் கேட்க,

“ச்ச!! ச்ச!! அவன் கிடக்கிறான் லூசுப் பய!! நீ ஃபீல் பண்ணாத டா” என அவளைத் தோளோடு அணைத்துக் கொள்ள,

“உங்க அலும்பு தாங்க முடியலை டா சாமி!! இதுக்காகவாச்சும் சீக்கிரம் கல்யாணம் பண்றேன்!!! அப்பறம் நாங்களும் ரொமான்ஸ் பண்ணுவோம்” என சந்தோஷ் சந்தோஷமாக அலுத்துக் கொண்டான்.

“சரி அப்பா அம்மா வந்தாச்சா?? நான் கால் பண்ணேன்.. ரீச் ஆகலை” என வந்தனா கேட்டுக் கொண்டே நடக்க,

“யெஸ் டா!! மார்னிங்கே வந்தாச்சு!! ரெஸ்ட் எடுக்குறாங்க.. நீங்க வீட்டுக்கு போய்ட்டு ஃப்ரெஷ் ஆய்ட்டு டின்னர் அங்க வந்துடுங்க.. அம்மா சொல்ல சொன்னாங்க” என்றான் சந்தோஷ்.

அதற்குள் பார்க்கிங் வந்துவிட, நேராக வினய் வீட்டிற்கு வண்டியைக் கிளப்பினர்.

பேசிக்கொண்டே வந்ததில் நேரம் போனதே தெரியாமல், விரைவிலே வீடு வந்து விட, அவர்களுக்காக வாசலிலே காத்துக் கொண்டிருந்தார் அகிலா.

“மாம்!!!” என வினய் அவரை அணைத்துக் கொள்ள,

“வா வினய்!! வாடா வந்தனா!! சந்தோஷ் உள்ள வாப்பா” என அனைவரையும் உள்ளே அழைத்தவர்,

“அப்பா கொஞ்சம் வெளிய போய்டுக்காங்க வினய்!! சாப்பிடலாம் வாங்க!! இப்போவே ரொம்ப லேட்” என நேராக டைனிங் ஏரியாவிற்கு சென்றுவிட,

அவர்களும் தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து சாப்பிட அமர்ந்தனர்.

“நீங்க சாப்பிட்டீங்களா அத்தை??” என வந்தனா கேட்க,

“நானும் மாமாவும் அப்போவே ஆச்சு மா!!” என்றவர், மகனுக்கும் மருமகளுக்கும் பார்த்து பார்த்து பரிமாறினார்.

சற்று நேரத்தில் கணேசனும் வந்துவிட, பேச்சு மறுநாளுக்கான விழாவின் பக்கம் திரும்ப,

அனைத்தும் சரியாக இருக்கிறதா என ஒரு முறை மீண்டும் உறுதி செய்து கொண்டவர்கள், மிச்சமிருந்த வேலையை பட்டியலிட்டு எழுதி வைத்துக் கொண்டனர்.

“ரிட்டர்ன் கிஃப்ட் எல்லாமே அவங்களே பேக் பண்ணி கொடுத்திடுறேன்னு சொல்லிட்டாங்க தான்.. இருந்தும் இப்போ ஒன்ஸ் கால் பண்ணி செக் பண்ணிக்கோங்க.. கடைசி நேரத்துல சொதப்பிடப் போறாங்க” என வந்தனா சொல்லவும்,

“நான் பார்த்துக்கிறேன் அதை” என்ற சந்தோஷ்,

“ஓகே அப்போ நான் கிளம்புறேன்.. வீட்டுல கொஞ்சம் வேலை இருக்கு” என சந்தோஷும் கிளம்பி விட,

அதன் பின் இவர்கள் நால்வரும் அமர்ந்து குடும்பமாய் பல கதைகள் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

அதுவும் கணேசன் அவர்களுடைய காதல் கதையை சொல்லத் துவங்க,

“இப்போ இது ரொம்ப அவசியமா???” என்றார் பொய்கோபத்துடன் அகிலா.

“இல்லையா பின்ன?? இப்போதான் உன்னை கூட்டிட்டு ஓடி வந்து அந்த பிள்ளையார் கோவில்ல தாலி கட்டுன மாதிரி இருக்கு.. இதோ அதுக்குள்ள அறுபதாம் கல்யாணம் நடக்கப் போகுது!!! பேசாம அப்போவே நான் கொஞ்சம் சுதாரிப்பா இருந்திருக்கணும்” என கணேசன் கிண்டல் செய்ய,

அகிலா அதற்கு அவரை செல்லமாய் அடிக்க, பதிலுக்கு கணேசன் அவரை அவரின் பாணியில் செல்லம் கொஞ்சி மறையிறக்க, அந்தக் காட்சியை அழகோவியமாய் இருந்தது.

அவர்களின் காதல் இளைய ஜோடிகளின் மனதில் ஏக்கத்தை தூவி விட்டுச் சென்றது.

‘நாமளும் வயதானாலும் இப்படி ஒரு நிறைவான வாழ்க்கையைத் தான் வாழ வேண்டும்’ என்பது போல் ஒரு அர்த்தம் பொதிந்த பார்வையை இருவரும் பரிமாறிக் கொண்டனர்.

திருமண நாளும் அழகாக விடிய, வினய் தான் அவனின் பெற்றோரை போட்டு படுத்தி எடுத்துக் கொண்டிருந்தான்.

“வினய்!!! இந்த வயசுல என்ன மேக்கப் எல்லாம்.. வேண்டாம் வினய்!! ஒரு மாதிரி இருக்கும்” என அகிலாவின் மறுப்பை காதிலே வாங்காமல்,

தன் அன்னைக்கு ஆசையுடன் அலங்காரம் செய்து கொண்டிருந்தான் வினய்.

“டேய்!! உனக்கு மேக்கப் செய்ய ஆசையா இருந்தா உன் பொண்டாட்டிக்கு செய்!! என் பொண்டாட்டியை விட்டுடு!! அவ சும்மாவே பேய் மாதிரி தான் இருப்பா!! இதுல நீ வேற மேக்கப் போட்டு ஃபில்டர் போட்ட பேய் மாதிரி ஆகிடப் போறா” என கணேசன் வேறு கேலி செய்ய,

“நான் உங்களுக்குப் பேயா??” என அகிலா முறைத்தாலும், வினய் அவரை விடுவதாய் இல்லை.

அவன் நினைத்ததை சாதித்துவிட்டே நிமிர,

“வாவ்!!!!”

“ஜஸ்ட் அமேசிங் அத்தை!!”

“அகி!!!!! அசத்துற போ!!!” என அகிலாவின் அழகைக் கண்டு அனைவரும் வாயைப் பிழந்திருந்தனர்.

சரியாக அதே நேரம் அங்கு மகளைக் காண வந்த நாட்டரசன், அங்கு அமர்ந்திருந்த அகிலாவைக் கண்டு குழப்பமாகி,

“இந்தா!! யாரு இது??? இன்னைக்குமா உன் வீட்டுக்காரர் இந்த மேக்கப் போடுற வேலையைப் பார்க்கணும்!!” என கடுப்புடன் மகளின் காதைக் கடிக்க,

“அச்சோ!! அத்தைப்பா அது” என்றாள் வந்தனா பதறிப்போய்.

“என்ன???” என அதிர்ந்த நாட்டரசன்,

மீண்டும் அகிலாவை உற்று உற்று நோக்க, அகிலாவிற்கே சங்கடமாக போய்விட்டது.

“நெசமா அவங்க தானா??” என நம்பாமல் அவர் மீண்டும் கேட்க,

“எனக்கும் கூட அதே சந்தேகம் தான் சம்மந்தி!! இம்புட்டு அழகா இருக்கது நிச்சயம் என் அகியா இருக்க முடியாது” என கணேசன் கிண்டல் செய்ய,

“அட நான் அப்படி சொல்லலை மா!! நிஜமா நல்லா இருக்க நீ” என்றார் நாட்டரசன் உடனடியாக.

“என் பையனோட திறமை அப்படி!! அவன் கைவண்ணத்தில தான் ஏதோ கொஞ்சம் பார்க்குற மாதிரி இருக்கா!!” என அப்போதும் கணேசன் அடங்கவில்லை.

உண்மையில், நாட்டரசனுக்கு வினய்யின் திறமையை எண்ணி ஆச்சரியம் தான் என்றாலும், இன்றளவும் ஏனோ அவரால் அவனின் தொழிலை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இப்போதும் இருவரிடமும் அளவான பேச்சுக்கள் மட்டும் தான். அதுவும் தேவைக்கேற்ப.

கணேசனுக்கும் மிதமாய் ஒப்பனை செய்து விட்ட வினய், நேரம் ஆவதைத் தொடர்ந்து இருவரையும் மேடைக்கு அழைத்துச் செல்ல,

அங்கே ஐயர் அனைத்தையும் தயாராக வைத்திருந்தார்.

பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது பாக்கியம் என்றால், பிள்ளைகள் பெற்றவருக்கு மீண்டும் திருமணம் செய்து பார்ப்பது பெரும் பாக்கியம் அல்லவா???

அதை வினய் செய்திருந்தான்!!!

சுற்றங்கள் இருந்தும் யாருமில்லாமல் அநாதரவாக செய்து கொண்ட முதல் திருமணத்தின் வலியை போக்குவதைப் போல், இப்போது உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து மிக விமர்சையாய் அவனின் பெற்றோருக்கு சஷ்டியப் பூர்த்தி விழாவை ஊரே மெச்சும் படி நடத்தி முடித்திருந்தான்.

விழாவில் எந்த ஒரு குறையும் வந்துவிடக் கூடாது என அவன் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருக்க, இப்படி ஒரு மகனைப் பெற்றதை எண்ணி கணேசனும் அகிலாவும் மிகவும் பூரித்துப் போய்விட்டனர்.

“பிள்ளைங்களை வந்து ஆசிர்வாதம் வாங்கிக்க சொல்லுங்க” என ஐயர் பணிக்க,

சதீஷ் – சங்கீதா முதலில் ஆசிர்வாதம் வாங்கிச் சென்றதும், வினய் – வந்தனா ஜோடியாய் அவர்களின் பாதம் பணிய, பெண்ணவளிடம் லேசாய் தடுமாற்றம்.

“என்னாச்சு வதனா??” வினய் பதற,

“நத்திங்!! கால் சேரில தட்டிருச்சு.. ஐ அம் ஆல்ரைட்!!” என்றாள் அவள் சமாளித்துக் கொண்டு!!!

“ரெண்டு பேரும் இன்னைக்கு போல என்னைக்கும் சந்தோஷமா, ஒற்றுமையா, காதலோட இருக்கணும்” என பெரியவர்கள் வாழ்த்த,

இன்முகத்துடன் அவர்களிடம் ஆசி வாங்கி அவர்கள் கீழே வர, வந்தனாவின் முகம் ஏதோ யோசனையிலே இருந்தது.

அப்போது, “ஹாய் கைய்ஸ்!!” எனத் தன் ஆர்ப்பாட்டமான சிரிப்புடன் ரஞ்சித் அங்கு வர,

“ஹேய் ரஞ்சித் வாங்க!!! என்ன இவளோ லேட்!!” என்றான் புன்னகையுடன் வினய்.

“வாங்க!! எப்படி இருக்கீங்க??” என வந்தனாவும் தன் பங்கிற்கு வரவேற்க,

“போலீஸ் எல்லாம் கிளைமாக்ஸ்ல தான் வருவாங்க வினய் பிரோ!!! என்ட் கார்ட் போடுறதுக்குள்ள கரெக்டா வந்துட்டேன் தான??” என்றவனின் கண்கள் வண்டாய் மாறி அவனின் மலரைத் தேட,

“யாரைத் தேடுறீங்க போலீஸ் சார்!!” என அங்கே வந்தான் சதீஷ்.

“கல்யாணத்துக்கு வந்து அக்யூஸ்டையா தேடுவாரு!! எல்லாம் கல்யாணப் பொண்ணைத்தான்!! அப்படித்தானே போலீஸ்??” என தன் மேடிட்ட வயிற்றைத் தள்ளிக் கொண்டு சங்கீதா வர,

“அட அதெல்லாம் இல்லைங்க!! நான் சும்மா டெகரேஷன் எல்லாம் நல்லா இருக்கே!! நம்ம கல்யாணத்துக்கும் இப்படி பண்ணலாமான்னு பார்த்தேன்.. ” என ரஞ்சித் சமாளிக்க,

“ஹம்.. நம்பிட்டோம் நம்பிட்டோம்” என கோரசாய் அவனை கிண்டல் செய்ய,

“மலர் அண்ணாக்கு இன்னைக்கு பொண்ணு பார்க்க போறாங்க!! சோ மலர் வரலை” என அவனுக்கான தகவலை வந்தனா வழங்க,

“ஓஹ்!!” என உள்ளே போன குரலுடன் கேட்டுக் கொண்டான் ரஞ்சித்.

அதன் பின் இளசுகளின் ஆட்டம் பாட்டத்தில், ரஞ்சித்தின் தேடல் கூட மறைந்து விட, பொழுதும் மிக இனிமையாய் கடந்திருந்தது.

மதிய உணவை உண்டுவிட்டு, பெரியவர்கள் கிளம்ப, அனைத்தையும் சரிபார்த்து மண்டபத்தை காலி செய்யும் பொறுப்பை சதீஷிடம் ஒப்படைத்த வினய், வந்தனாவை கூட்டிக்கொண்டு கிளம்ப,

“வினய்!! வீடு இந்த சைட்!!” என்றாள் அவன் செல்லும் வழியைக் கண்டு குழம்பி,

“ஐ க்நோ ஏஞ்சல்!!” என்றவன், நேராய் ஒரு மருத்துவமனை முன்பு சென்று காரை நிறுத்த,

வந்தனாவிற்கு புரிந்து போனது.

“எப்படி வினய்????” என அவள் ஆச்சரியத்துடன் கண்களை விரிக்க,

“உன்னைப்பத்தி உன்னை விட எனக்குத் தெரியாதா என்ன??? ஒன் வீக் தள்ளிப் போனப்போவே எனக்கு டவுட் தான்.. டவுட் கிளியர் பண்ணிடலாம் இப்போ” என அவன் உல்லாசமாக சொல்லிவிட்டு இறங்கப் போக,

அவன் கைகளை பயத்துடன் பற்றிக் கொண்ட வந்தனா, “ஒருவேளை இல்லைனா???” என தவிப்புடன் கேட்க,

“இல்லைனா என்ன?? எதுக்கு இவளோ டென்ஷன் உனக்கு!! யூ ஆர் ஜஸ்ட் 23.. இதுவே ஏர்லி என்னைப் பொறுத்த வரைக்கும்!!! நடக்கணும்ன்னு இருக்கப்போ எல்லாம் தன்னால நடக்கும்!! ரிலாக்ஸ் கேர்ள்” என அவள் கைகளில் அழுத்தம் கொடுத்து அவளை சமன்படுத்தியவன், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல,

அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல், மருத்துவரும் குழந்தை வரப்போவதை உறுதிப் படுத்திவிட, இருவரும் உணர்ந்த அந்த நொடி நேர இன்பத்தை வார்த்தைகளில் வடித்து விட முடியாது.

அவர்கள் அணுவில் ஓர் உயிர் உருவாகியிருக்கிறது எனும் செய்தியே அவர்களுக்கு புல்லரிக்கச் செய்ய, ஒருவரை ஒருவர் பற்றுகோலாக பற்றிக்கொண்டு அந்த அதீத சந்தோஷத்தை கொண்டாடினர்.

“வினய்!!!!” என்றவள் அதிகத்திற்குமே உணர்ச்சிவசப்பட்டிருக்க,

“ரிலாக்ஸ் டா வதனா!!!” என ஆறுதலாய் அவளின் தோளை அனைத்துப் பிடித்தவன்,

மருத்துவரிடம் தன் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்துவிட்டு, அவளை அழைத்துக் கொண்டு நேராக வந்த இடம், ரெயின்போ கஃபே!! அவளைக் கண்டு காதலில் அவன் இதயம் இடறி விழுந்த அதே இடம்!!!

“வீட்டுக்கு சொல்லணுமே வினய்!!! இங்க வந்துருக்கோம்!!” என அவள் கேட்க,

“எனக்கு இந்த ஃபீல்!!!” என நெஞ்சைத் தடவி விட்டுக் கொண்டவன்,

“ஐ நீட் சம் டைம் வதனா!! அவ்ளோ சந்தோஷமா இருக்கேன்!! கொஞ்ச நேரம் என் கூட இரேன்” என பார்வையால் இரைஞ்சியவன், அவள் விரலோடு விரல் கோர்த்துக் கொள்ள,

அவனைத் தான் காதலோடு பார்த்தபடி அமர்ந்துவிட்டாள் அவள்!!

சில நொடிகள் மௌனத்தில் கழிய,

அதைக் கலைத்து,”ரொம்ப தேங்க்ஸ் வதனா!!!” என்றான் அவன் ஆத்மார்த்தமாக,

“இதோ இந்த இடத்தில தான், இதே மாதிரி ஒரு சன்செட் டைம்!! உன்னைப் பார்த்தேன்!!! ஒரே ஒரு செகண்ட் ஐ காண்டாக்ட் இந்த அளவுக்கு ஒரு இம்பாக்டை கொடுக்கும்னு எனக்கு சத்தியமா தெரியலை வதனா!!!” என பழைய நினைவுகளை மீட்டிப் பார்த்தவனின் முகம் கனிந்து போய் கிடக்க,

“மின்னல் மாதிரி என் கண்ணுல விழுந்த!!! புயல் மாதிரி என் மனசுல நுழைஞ்சு!! இன்னைக்கு எனக்குள்ள மொத்தமும் நீதான் நிறைஞ்சிருக்க வதனா!!” என உணர்ந்து சொல்லியவன்,

“தேங்க் யூ வதனா!!! ஃபார் கம்மிங் இன்டூ மை லைஃப்!!! அண்ட் மேக்கிங் இட் மோர் மீனிங்ஃபுல்” என காதலோடு அவள் கரம் பற்றிக் கொள்ள,

“இதெல்லாம் நான் சொல்ல வேண்டியது வினய்!! நீங்க என் லைஃப்ல வராம மட்டும் போய்டுந்தா நான் என்ன பண்ணிருப்பேன்னு எனக்கே தெரியலை!! என்னை எனக்கே உணர வச்சது நீங்க தான் வினய்!!! என்னை நானா இருக்க விட்டதும் நீங்க தான்!! ஐ அம் ஃபாரெவர் கிரேட்ஃபுல் ஃபார் யுவர் லவ்!!! தேங்க் யூ வினய்!! ஃபார் எவிரிதிங்..” என அவள் அவனின் தோள் சாய, அவனும் தன்னியல்பாய் அவளின் பிறைநுதலில் மென்முத்தம் ஒன்றைப் பதித்திருந்தான்.

வாழ்க்கை மேலும் வண்ணமயமாகிவிட்டதைப் போல் ஒரு மாயை இருவருக்கும்.

வேற்றுமைகளை விலக்கி, வெவ்வேறு துருவங்களாக இருந்த இருவரையும் இன்று ஒன்றென ஆக்கி, அவர்களின் உலகை அழகாக்க ஒரு குட்டி வசந்தத்தையும் அவர்களுக்கு பரிசளிக்க காதலால் மட்டுமே முடியும்.

காதலே அவர்களைக் கண்டு காதல் கொள்ளும் படி, இருவரும் காதலோடு கரை சேர்வர் எனும் நம்பிக்கையுடன் நாமும் அவர்களிடம் இருந்து விடை பெறுவோம்!!

“உன் விரல் கோர்த்திடும் வரம் ஒன்றே போதுமே!!

இனி வாழும் என் நாட்கள் நீளுமே!!

இதயமும் இதயமும் சேரும் அந்த நேரமே!!

உன் விழி பார்த்தே வாழும் என் ஜீவனே!!”

நன்றி!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!