Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

79. M and V - வான் தழுவிடிலோ வெண்ணிலவே

வான் தழுவிடிலோ வெண்ணிலவே 16 (02)

விக்ரம் பார்த்தசாரதி 13

மெல்ல கையை விலக்கிக் கொண்டேன். எனக்குள்ளே சற்று முன் பொங்கிய சந்தோஷ ஊற்று மொத்தமாக தணிந்து போயிருந்தது.

“சரி. டின்னர் இஸ் ரெடி பெல்லா. நாம போகலாமா?” என்று எங்களுக்கு தலை அசைத்து விட்டு அங்கே விருந்து நடந்து கொண்டிருந்த இடத்திற்கு ஆராவை நகர்த்திக் கொண்டு நகர்ந்திருந்தான் எட்வர்ட்.

இரவு உணவு பிரம்மாண்டமான முறையில் நடந்து கொண்டிருந்தது அங்கே.  நடந்ததை பற்றி என்னிடம் எதையும் கேட்காமல் என்னுடன் அந்த உணவு அரங்கம் நோக்கி நடந்தான் அர்ஜுன்.



Advertisement

அவளது விரலில் நிச்சய மோதிரம்  இல்லை எனும் உண்மை மெது மெதுவாக எனக்குள்ளே இறங்கியது.

‘அப்படி என்றால் அவள் மொத்தமாக முடித்து விட்டாள் என்றுதானே பொருள்’ உயிர் தடதடத்து நின்றது எனக்கு.

‘அடுத்து என்ன செய்யப் போகிறாய் விக்ரம்?’ கேள்வி எனக்குள்ளே உதித்த வேளையில் ஒலித்தது எனது கைப்பேசி. அழைத்து இருந்தாள் குட்டி ஆராதனா.

Advertisement

“விக்ரம் அங்கிள் நான் நீங்க அவார்ட் வாங்கின வீடியோ பார்த்துட்டேன். கங்ராட்ஸ் அங்கிள்” அவளது குரலில் தணிந்து போயிருந்த எனது உற்சாகம் மீண்டு இருந்தது.

Advertisement

அவளிடம் நான் மகிழ்வுடன் பேசுவதை புன்னகையுடன் பார்த்து இருந்தான் அர்ஜுன்.

அடுத்து பல்வேறு நாட்டு உணவுகள் அங்கே வரிசை கட்டி நிற்க ஆரா எட்வர்ட் இருவரும் இருந்த திசைக்கு எதிர் திசையில் நின்று எங்களது இரவு உணவை முடித்துக் கொண்டோம் நானும் அர்ஜுனும்.

அப்போதுதான் எங்களின் அருகில் வந்தான் எனது உதவியாளன் பாலா.

Advertisement

“சாப்பிட்டியா பாலா?” கேட்டேன் நான்.

“ஆச்சு சர்” என்றான் அவன். “இந்த டாகுமென்ட்ஸ் லே உங்க சிக்னேச்சர்ஸ் வேணும் சர்” என்று தனது கையில் இருந்த ஒரு கோப்பை என்னிடம் நீட்டினான்.

அவை நான் கையொப்பம் இட வேண்டிய சில முக்கியமான ஒப்பந்தங்கள். அடுத்த நான்கு மணி நேரத்தில் அவற்றை எடுத்துக் கொண்டு பாலா இந்தியா திரும்புகிறான். நான் இங்கே நியூயார்க்கில் சில நாட்கள் தங்கி விட்டு செல்லலாம் என்றே எண்ணி இருக்கிறேன்.

“கொஞ்சம் வெயிட் பண்ணு அர்ஜுன்” என அங்கே யாருடனோ கைப்பேசியில் பேசிக்கொண்டிருத்த அர்ஜுனுக்கு சைகை காட்டி விட்டு நானும் பாலாவும் அங்கே இருந்த ஒரு மேஜையை அடைந்தோம்.

அங்கே அமர்ந்து அவன் கொடுத்த காகிதங்களை ஒவ்வொன்றாக படித்துப் பார்த்து அதில் கையெழுத்து போட்டு முடித்தேன் நான்.

பாலா அங்கிருந்து விலகியவுடன் நான் நிமிர, அங்கே மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு என்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் ஆரா.

அவள் எத்தனை நேரமாக அப்படி நிற்கிறாள் என்பதே எனக்குத் தெரியவில்லை. நான் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு மெல்ல எழுந்தேன்.

எட்வர்ட் கண்ணுக்கெட்டும் தூரத்தில் யாருடனோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது எனக்கு.

“புதுசா படிச்சுப் பார்த்து எல்லாம் சைன் பண்றாரு” வாயினுள்ளேதான் முணுமுணுத்துக்   கொண்டாள் அவள். இருந்தாலும் அதைப் புரிந்து கொண்டேன் நான்.

 “என் கூட ஆரா ஆரான்னு ஒரு பொண்ணு இருந்தா. அவ மேலே ரொம்ப நம்பிக்கை வெச்சிருந்தேன். அவ எந்த டாகுமென்ட் காட்டினாலும் கண்ணை மூடிட்டு சைன் பண்ணிடுவேன். அவ இப்போ என் கூட இல்ல. அதனாலே இப்போவெல்லாம் என் மேலேயே எனக்கு நம்பிக்கை இல்லை.  என்ன பண்ணலாம் சொல்லு?” அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு வார்த்தையாக நான் கோர்த்த நேரத்தில் அவளது உடல் மொழியில் மெலிதான ஒரு மாற்றம்.

பதில் எதுவும் பேசாமல் அவள் என்னைத் தவிர்க்க வேண்டி திரும்பிய நேரத்தில், எங்கள் இருவர் பார்வையும் அந்த அழகான ஜோடி மீது சென்று நின்றது. சொல்லி வைத்தார் போல் அவர்கள் இருவரும் எங்களை அப்படியே ஈர்த்து வைத்தார்கள்.

அதில் இருந்த பெண் நான் முதலில்  பார்த்த சேலைப் பெண். அவளும் எனக்கு விருதை கொடுத்த ஜேடனும் அருகருகே நின்றிருக்க போட்டோகிராபர் அவர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.

ஜேடனின் கரம் ஒன்று அந்தப் பெண்ணை அணைத்திருக்க அவள் மிக உரிமையாக மிக இயல்பாக அவர் மார்பின் மீது அவளது கரத்தைப் பதித்திருந்தாள்.

அவள் ஜேடனின் மனைவி என்பது அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது.

அது எப்படி என்று சொல்லத் தெரியவில்லை அவர்களில் ஒருவரைப் பார்த்து ஒருவர் செய்த புன்னகையில் கூட அத்தனை அன்பும், பெருமையும் நிரம்பி இருந்தது.

என்னருகில் நின்றிருந்த ஆரா அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள்.

அவள் முகத்தில் பல விதமான உணர்வுகளின் கலவை. காரணமே இல்லாமல் எட்வர்ட் எனது நினைவில் வந்து போக ஓர் நடுக்கம் என்னுள்ளே.

எங்களை கவனித்து இருந்தார் ஜேடன். அவரது மனைவி அவரிடம் ஏதோ சொல்ல அடுத்து அவர்கள் இருவரும் எங்களை நோக்கி நடந்து வந்தனர்.

என்னை தனது மனைவிக்கு  அறிமுகம் செய்து வைத்த ஜேடென் தனது மனைவியை  லேசாக அணைத்தவாறே “மை வைஃப் மாயா” என்றார் என்னிடம்.

அதைச் சொன்ன போது ஜேடென் குரலில் சந்தோஷம், பெருமை, நிறைவு அனைத்தும் கலந்து ஒலிக்க அதை அப்படியே மாயாவின் முகம் பிரதிபலித்து கொண்டிருந்தது.

“ஸோ  ஆரா, ஹவ் டூ யூ நோ மிஸ்டர் விக்ரம்?” ஆராதனாவைப் பார்த்துக் கேட்டார் ஜேடன்.

ஆராவுக்கும் ஜேடனுக்கும் எப்படி பரிச்சயம் என்று  நான் யோசித்துக் கொண்டிருக்கையில்

“ஐ வாஸ் ஹிஸ் லீகல் அட்வைசர் பிஃபோர்” (முன்பு இவரது லீகல் அட்வைசராக இருந்தேன்) என்றாள் ஆராதனா.

‘இப்போது இல்லையாமா?’ ஆக என்னோடு எல்லா பந்தங்களையும் துண்டித்துக் கொள்ளும் நோக்கத்தில் இருக்கிறாள் இவள்.

“வெல் தட்ஸ் கிரேட் தென். நான் நமது இந்திய கொலபரேஷனை விக்ரமோட செய்யலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். வாட் டூ யூ சே மிஸ்டர் விக்ரம்?” என்னைப் பார்த்துக் கேட்டார் ஜேடன்.

அவர் என்னைக் கேட்பார் என்று எனக்கு கண்டிப்பாகத் தெரியும்.

ஆனால் நமது கொலபரேஷன் என்று ஆராவையும் சேர்த்துக் கொண்டு இவர் ஏன் சொல்கிறார் என்பதுதான் எனக்குப் புரியவில்லை  நான் ஆராதனாவின் முகத்தைப் பார்த்தேன்.

அவளது  முகத்தில் கொஞ்சம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்!

உடனே பதிலேதும் சொல்லி விடவில்லை நான்.

“மிஸ்டர் விக்ரம் கன்வின்ஸ் ஆகலை போலிருக்கே” என்ற ஜேடன் ஆராவைப் பார்த்து  “நெகோஷியேஷன் குவீன், இட்ஸ் யுவர் ஜாப் நீதான் அவரை  கன்வின்ஸ் பண்ணணும்” என்று லேசாக சிரித்தார்.

அவள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாள் என்ற ஆர்வம் என்னுள்.

“சர், ஐ வில் டூ மை பெஸ்ட்” ஆரா ஜேடனைப் பார்த்துச் சொல்ல அவர் புன்னகைத்தார்.

இந்த சம்பாஷணைகள் அனைத்தையும் சிறு புன்னகையுடன் கவனித்துக் கொண்டிருந்தார் ஜேடனின்  மனைவி.

அந்தச் சமயம் என்னருகில் வந்து நின்றான் என் தம்பி.

நான் அவனை அறிமுகம் செய்து வைக்கும் முன் “அர்ஜூன்” என்று அவனை அடையாளம் கண்டு கொண்டார் மாயா.

அர்ஜூன் ஸ்வாதி இருவரையும் அவருக்குத் தெரிந்திருந்தது.

“மாயா லவ்ஸ் டென்னிஸ்” ஜேடன் மிக ஆனந்தமாகச் சொன்னார்.

மாயாவிற்கு டென்னிஸ் பிடிக்கும் என்பதில் அப்படி என்ன ஆனந்தம் இருக்கக் கூடும் இவருக்கு.

அவரைப் பற்றி நானும் விசாரித்து இருந்தேன் தான். பக்கா பிஸ்னஸ்மேன். நொடிகளைக் கூட டாலர்களில் கணக்கிடுபவர்.

அவருடன் பேச இதோ இந்த அரங்கத்திலேயே பலர் காத்துக் கொண்டு நிற்பதை கவனித்துக் கொண்டு தான்  இருக்கிறேன்.

ஆனால் அவரோ அர்ஜூனிடம் மாயா பேசிக் கொண்டிருப்பதை ரசனையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

மேட்ச் பற்றி அர்ஜுனிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த மாயா, ஜேடனின் பக்கம் மெல்லத் திரும்பிப் பார்க்க, அவர் ஏதோ புரிந்து கொண்டது போலத் தலையாட்டினார்.

“நீங்க எங்க  கிறிஸ்மஸ்  பார்ட்டிக்கு கண்டிப்பா வரணும். இது மாயாவோட விருப்பம்” என்று எனக்கும் அர்ஜூனுக்கும் அழைப்பு விடுத்தார் ஜேடன்.

“ஸ்வாதியையும் கூட்டிட்டு வாங்க” என்ற மாயாவின் ஆங்கிலம் அத்தனை இனிமையாக இருந்தது.

ஒரு பார்வையிலேயே தனது  மனைவியின் விருப்பத்தை எப்படித் தெரிந்து கொண்டார் இந்த மனிதர்.

எனது  பதிலை எதிர்பார்த்து காத்திருந்த இருவரிடமும் “ஷூர்  கண்டிப்பாக வரோம் ” என்று நான் சொல்ல

“தேங்க் யூ ஸோ மச்” என்று சந்தோஷமாகச் சிரித்தார் மாயா.

மாயா மீண்டும் கண்ஜாடை செய்ய “ஸீ யூ தென்” என்று கைகுலுக்கி விடைபெற்றனர் ஜேடனும் மாயாவும்.

“லவ்லி கப்பிள்” ஆரா சொல்லிய நொடிப் பொழுதில்  எங்களது அருகில் வந்து விட்டிருந்தான் எட்வர்ட்.

அர்ஜூனைப் பார்த்து “ஹாய்” சொன்னவன் “லெட்ஸ் கோ பெல்லா’ என்று ஆராவின் கரத்தை ஓர் கையில் பற்றிக் கொண்டு  “ஸீ யூ மிஸ்டர் விக்ரம்’ என்று என்னுடன் கை குலுக்கினான்.

“வொய் டோன்ட் யூ  போத் ஜாயின் அஸ் ஃபார் டின்னர்  டுமாரோ? மன்ஹட்டன்லே ஒரு நல்ல  சவுத் இண்டியன் ரெஸ்டரன்ட் இருக்கு. நாளைக்கு டின்னருக்கு அங்கே மீட் பண்ணுவோமா? இட்ஸ் மை ட்ரீட்” இப்போது நான் அழைப்பு விடுத்தேன் எட்வர்ட்க்கும் ஆராவுக்கும்.

நான் ஏன் அப்படி சட்டென அழைத்தேன் என்பது எனக்கே புரியவில்லை.

மாயா ஜேடனைப் பார்த்த பாதிப்பா!

அவளை இன்னும் கொஞ்ச நேரம் என்னுடனே இருத்திக் கொள்ள எனது மனம் தவித்ததா!

‘அதுவெல்லாம் இல்லை. அவள் மோதிரத்தை கழற்றி விட்டாள் எனும் பொழுது நான் அப்படி எல்லாம் நினைக்க மாட்டேன். நினைப்பதிலும் அர்த்தமே இல்லை’ எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன் நான்.

நான் அப்படி அழைப்பேன் என்று ஆராதனா எதிரே பார்த்திருக்கவில்லை என்று அவளது முக பாவத்தில் இருந்தே புரிந்தது.

அதுவும் நான் எட்வர்டை அப்படி அழைப்பேன் என்று அவள் கனவிலும் நினைத்திருக்க மாட்டாள்.

எட்வர்ட் அவளது முகம் பார்த்து விட்டு எனது முகம் பார்த்தான் “எனக்கு நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு”

“நோ நோ நோ” மறுத்தேன் நான் “எந்த எக்ஸ்கியூஸும் எனக்கு வேண்டாம். இது உங்க ரெண்டு பேருக்கும் நான் கொடுக்க போற ஸ்பெஷல் ட்ரீட். ரெண்டு பேரும் கண்டிப்பா வரணும்”

எட்வர்ட் மறுப்பதற்கு வாயெடுக்க அதற்குள்ளாக முந்திக்  கொண்டிருந்தாள் ஆராதனா.

“நாங்க வரோம் விக்ரம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!