Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vinmeengalin Sathiraattam

விண்மீன்களின் சதிராட்டம் – 38

அத்தியாயம் – 38

“உன்ன யார் கூடவும் ஷேர் பண்ணவேண்டாம்.”,  என்று ராஜன் கூரியதைக் கேட்டு வாய்விட்டு சிரித்தவள் ,“ சரி, நம்ம டைம் இது. என்ன பண்ணலாம் சொல்லுங்க.”

“சாப்பிட்டு படுக்கலாம். நாள் பூரா அலச்சல்.”

“கேடி, தூங்க விடுவீங்க ?”, இரண்டு நாட்களில் அவனை தெரிந்திருந்தாள்.



Advertisement

“ படுக்கலாம்னுதான் சொன்னேன். தூங்கற பேச்சு எங்க வந்தது. இன்னைக்கு ஸ்பெஷல் ஷோ இருக்கு. கிளம்பு.” என்று அவசரப்படுத்தினான்.

ஹோட்டலில்தான் ஏதோ ஸ்பெஷல் ஷோ, என்று நினைத்த மஞ்சரி, குளித்துக் கிளம்பினாள். ராஜேந்திரனும் ரெடியாகி அவளுடன் சென்று உண்வருந்தி முடித்தும் ஒன்றும் இல்லாது போகவே, “ என்ன ஷோ, எங்க நடக்குது ? கிளம்புன்னு விரட்டினீங்க. மணி எட்டாகுது, இன்னும் ஒண்ணும் காணோம். வேற எங்காச்சம் நடக்குதா ?”

நமட்டுச் சிரிப்புடன், “ம்ம்… வா போகலாம்.”, என்று மீண்டும் அறைக்கே அழைத்து வந்தான்.

Advertisement

“என்னாச்சுபா ? ஷோ கான்சலா ? என்ன ஷோன்னு ஒரு டீடேய்லும் சொல்ல மாட்டேன்றீங்க ?”, மஞ்சரி பொரிந்தாள்.

Advertisement

“என்ன அவசரம் ? ஷோ இனிதான் ஸ்டார்ட் ஆகுது. இங்கதான்.”, என்றவன் அங்கிருந்த சிறிய மேசையின் இழுப்பறையைத் திறந்து, எதையோ எடுத்தான். என்ன என்று பார்த்தவள் பார்வை அதிலேயே நின்றது.

மகிழ்ச்சியுடன், வாங்கிக்கொள்ள வந்தவளிடம் கொடுக்காமல் உயர்த்திப்பிடித்தவன், “ ஹ… ஹான்… இது உனக்கில்லை, எனக்கு. வேணா கொஞ்சம் தரேன். நீ நல்ல பொண்ணா என்னோட விளையாண்டா …”, கண்ணடித்தான்.

Advertisement

[the_ad id=”6605″]

கிட்டே வந்தவள் உஷாராக ஒரு அடி பின்னால் வைத்தாள். “ என்ன விளையாடணும்…”, குரல் சற்று தேய்ந்திருந்தது. ராஜன் முன்னொரு முறை சொன்னது ஃப்ளாஷ் அடித்தது. ‘நைட்டெல்லாம் புரண்டது எனக்குத்தானே தெரியும் ?…. நீ என்னை சீண்டிக் கலாச்சதுக்கெல்லாம் கல்யாணத்துக்கப்பறம் பதில் சொல்லணும்…’.  ராஜேந்திரனின் கையிலிருந்த காட்பரி சில்க் சாக்லேட்டையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“ம்ம்…  ஞாபகம் வருதுபோல உனக்கும். யெஸ், இது பே பாக் டைம். மாமாட்ட வாடி செல்லம்…” வில்லன் சிரிப்பு சிரித்து ஒரு எட்டில் அவளை இழுத்துத் தூக்கிக் கட்டிலில் சாய்த்தான்.

“ஹ.. எனக்கு ஒண்ணும் பயமில்லை. என்ன கேம் சொல்லுங்க ஆடலாம். நான் வின் பண்ணுவேன்.”, உள்ளுக்குள் உதறல் இருந்தாலும்  வீரமாய் பேசினாள்.

“சொல்றேன்…” என்று, சாக்லேட்டைப் பிரித்து ஒரு சதுரத்தை வாயில் போட்டுக்கொண்டான். சற்று இளகியிருந்தது.

“ஃப்ரிட்ஜ்ல வெச்சிருக்கலாமில்ல, பாருங்க கொஞ்சம் இளகிருச்சு..”, அவன் அவளுக்கு ஒன்றை வேண்டுமென்றே கன்னத்திலும் உதட்டிலும் ஈஷுமாறு கொடுத்ததை துடைக்கச் சென்றவளை தடுத்து,

“அப்பதான், எனக்கு வசதி.”,  என்று அவன் இதழ்களைக் கொண்டு துடைத்தான்.

“பிராடு… இதை செய்யத்தானா இவ்ளோ பில்டப்பு..”, என்று சிரித்தவள், அடுத்து அடுத்து அவன் அந்த சாக்லேட் கொண்டு வரைந்து துடைத்ததில் காட்பரியை விடவும் வேகமாகக் கரைந்துபோனாள்.

சென்னையில், கல்யாண வேலைகள் முடிந்து, அன்றாட வாழ்க்கைத் தொடங்கியிருந்தது. வேதாவிற்குதான் இன்னும் களைப்பு தீரவில்லை. ஒரு வேளை புது வீடு, புது வேலை என்பதால் பழக சற்று நேரமெடுக்கிறது என்று நினைத்தாள்.

காலையில் வீட்டு வேலைக்கு உதவவும், இவர்கள் வேலைக்கு சென்ற பின், குழந்தையுடன் கீழே பர்வதம்மாவுடன் இருக்கவும் ஒரு பெண்ணை  ஏற்பாடு செய்திருந்தார்கள். மாலை வரையிலும் இருந்துவிட்டு செல்லுவாள்.

சனிக்கிழமை காலையில் படுக்கைவிட்டு எழாமல் இருந்தாள் வேதா.  விக்ரமே குழந்தைக்கு பாலைக் காய்ச்சி, அவர்களுக்கும் காபியைக் கொண்டு வந்தான்.

“என்னாச்சு, கல்யாணம் முடிஞ்சே ரெண்டு வாரமாகப்போது. இன்னும் டையர்ட்ன்னு சொல்ற ? ஹனிமூன் போனவங்களே வந்துட்டாங்க… சாயந்திரம் உங்க அம்மா வீட்டுக்குப் போயி அவங்களை பார்த்துட்டு வருவோமா ?”

[the_ad id=”6605″]

“ம்ம்.. பெட்டைவிட்டே எழவேண்டாம்ன்னு சொல்லுது உடம்பு…மாசாந்திரத் தொல்லையா ? என்ன தேதி இன்..னை…க்கு….”, என்று இழுத்தவள், விக்ரமை சற்று கலவரத்துடன் நோக்கினாள்.

“என்ன தேனூ….”?

“பத்து நாள் தள்ளி போயிருக்கு வீரு…”, அதற்குள் கணக்கிட்டிருந்தாள்.

‘ஙே’, என்று விழித்தான் விக்ரம்.

லூப் போடுவதாய் இருந்த வேதா, அவள் அம்மா ஒரு நாள் எதோ ஜோசியரைப் பத்தி மறுபடியும் பெருமை பேசவும்… காண்டாகி அதான் ‘அந்த மனுஷன் இன்னும் ஏழு வருஷத்துக்கு குழந்தை வராதுன்னு சொன்னானே, அப்பறம் எதுக்கு அதைப் போடுவானே’, என்று போடாமல் சிங்கப்பூர் கிளம்பிவிட்டாள்.

விஷயம் அறிந்து விக்ரம் கடிய, மாத்திரை வேண்டாம் என்றும், அவன் பார்த்துக்கொள்வதாய் கூற, அதுவும் நாளடைவில் விட்டுப்போனது.

“இத்தனை மாசமா ஒண்ணும் ஆகலைன்னு ப்ரொடெக்ஷன் இல்லாம விட்டது தப்போ ?”, என்றான் விக்ரம்.

“ம்ம்… ஆனா இப்ப எப்படி… அந்தாள் கணக்குபடி இன்னும் அஞ்சு , ஆறு வருஷம் இருக்கே ?”

ஒரு நிமிடம் அவளையே பார்த்தவன், “நீ படிப்ப முடிச்சு, நான் உன்னை கல்யாணம் பண்ணிருந்தா, ஒரு வருஷம் கழிச்சு, நாம குழந்தை வேணும்னு ரெடியாகிருப்போம், நீயும் கன்சீவ் ஆகிருப்ப… “

“ஹ்ம்ம்… “, அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள். எவ்வளவு ஏக்கங்கள், கஷ்டங்களைத் தந்தது அந்தப் பிரிவு. விபரீதமான யோசனைகளை யோசிக்க வைத்தது.

மணி பார்த்தவன், “நான் அப்பாயிண்ட்மெண்ட் போடறேன், டாக்டர் கீதாகிட்ட. குழந்தைன்னு கன்ஃபர்ம் ஆகட்டும், அப்பறம் பேசிக்கறேன்.

[the_ad id=”6605″]

அன்று பின் மதியம், வேதாவின் பெற்றோர், ராஜேந்திரன் மஞ்சரி  எல்லோரும் ராகவனின் வீட்டிலிருந்தனர். முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று மாமனாருக்கு போன் செய்து அவர்களை வர வைத்திருந்தான் விக்ரம். உஷாராக சிந்துவை அவள் தோழி வீட்டிற்கு பாக் செய்திருந்தான்.

அவர்களை வரவேற்று முடிக்கவும், விக்ரமைப் பார்த்த சௌந்தர்ராஜன், “என்ன மாப்பிள்ளை விசேஷம் ? வர சொல்லிருந்தீங்க ?”, என்று அவன் முகம் பார்த்தார்.

“ம்ம்..விசேஷந்தான். வேதா மாசாமாயிருக்கா. காலையில டாக்டர்கிட்ட கன்ஃபர்ம் பண்ணிட்டு வந்தோம்.”, இறுக்கமான குரலில் விஷயத்தைப் போட்டுடைத்தான்.

கேட்டவர்கள் அனைவருக்கும் ஒரு நொடி பிடித்தது, உள் வாங்க. அடுத்த நிமிடம், சாப்பாட்டு மேசையின் அருகில் நாற்காலியில் அமர்ந்து யாரையோ பற்றி பேசுகிறார்கள் என்பது போல,  மகனை மடியில் வைத்து விளையாட்டு காட்டிக்கொண்டிருந்த வேதாவின்புறம் சென்றது.

கோமதிதான் மலர்ந்து, “அப்படியா… சந்தோஷம் மாப்பிள்ளை”, என்றவாறே எழுந்து மகள் அருகில் செல்ல முயல,

பர்வதம்மாவோ, “விவேக் கொஞ்சம் வளரட்டும்னு பார்த்திருக்கலாமேப்பா…”, என, அவரை ஒரு தீப்பார்வை பார்த்தவன்,

“இருங்க அத்தை. என்னவோ அப்ப விட்டா ஏழு வருஷம் எங்களுக்கு குழந்தையே பிறக்காதுன்னு சொன்னாரே உங்க ஜோசியர். அவர் கிட்ட,இப்ப எப்படி  ரெண்டு வருஷத்துல  குழந்தைன்னு போய் பதில் கேட்டுட்டு அப்பறம் போங்க வேதாகிட்ட.”, அவன் குரலின் அழுத்தம் கோமதியை அப்படியே அமர வைத்தது.

அந்த நொடிதான் விக்ரமின் தீவிரம் உணர்ந்தார்கள் அனைவரும். அதானே, அவர்கள் யோசித்ததுபோல வேதா படிப்பை முடித்தே கல்யாணம் செய்திருக்கலாமே, என்றுதான் தோன்றியது எல்லோருக்கும். ராகவன் ஏதோ சொல்ல முற்பட, அவன் பின் நின்றிருந்த மாலினி, அவன் அசைவு அறிந்தே, லேசாய் முதுகை அழுத்தவும், அமைதியானான்.

பர்வதம்மாவோ, “ அதானே… அன்னைக்கு அடிச்சி சொன்னாரே ஜோசியர்…”, என்று கோமதியம்மாவைப் பார்க்க, கோமதி விழித்துக்கொண்டிருந்தார். மஞ்சரி நடப்பதை சுவாரசியமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஜோசியரால் மாமியார் மாட்டிக்கொண்டு முழிப்பது ஆறுதலாய் இருந்தது. அவளும் சராசரிப் பெண்தானே.

ராஜேந்திரனுக்கும் சௌந்தர்ராஜனுக்கும் சங்கடமாய் இருந்தது. நிக்க வைக்காமல் கோமதியை உட்கார வைத்துக் கேட்டாலும், விக்ரமின் தொனி இரண்டில் ஒன்று முடிவு எடுக்கப் போவது உறுதி என்பதுபோல இருந்தது.

அமைதியைக் கலைத்து, “ ம்ம்.. அர்ஜண்ட் அப்பாயிண்ட்மெண்ட் வாங்குங்க… இன்னைக்கே… உங்க குடும்ப ஜோசியராச்சே, இந்த சலுகை கிடைக்காதா ?”, நக்கலாய் ஒலித்தது விக்ரம் குரல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!