Skip to content
Post Views: 1,123
விழாக் காணுமே வானம் 09 (01)
வத்சலா ராகவன் – மது ஹனி
“காதல் தூது சொல்லிடுமோ கணையாழி!”
Advertisement
மௌனம். பல பதில்களை சொல்லும் மௌனம். பல கேள்விகளை அள்ளி வீசும் மௌனம். மௌனத்தை விட ஒரு பெரிய மொழி இந்த உலகத்தில் இல்லை என்பதை அவன் பல முறை உணர்ந்திருந்த போதிலும் அரவிந்தின் மௌனம் அவனுக்கு இதை இன்னொரு முறை உணர்த்தியது.
ஒரு வேகத்தில் அந்த புகைப்படத்தை பார்க்க வேண்டும் எனும் ஆவலில் சட்டென அழைத்து விட்டான் அவனை. சட்டென கேட்டு விட்டான் அவளது எண்ணை. இது அரவிந்தனுக்குள் எப்படிப் பட்ட பிரளயத்தை உருவாக்கி இருக்கும் என அவனால் உணர முடியாமல் இல்லை.“ஸாரி அரவிந்த்” பல நாட்களாக அவனிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்ததை இன்று கேட்டும் விட்டான். “நடந்த எல்லாத்துக்குமே நான் ஸாரி கேட்டுக்கறேன்”
பதில் எழவில்லை மறுமுனையில்
Advertisement
“உங்களை டிஸ்டர்ப் பண்ணனும்ன்னு கால் பண்ணலை. நானும் ஸ்வாதியும் இருக்கும் போட்டோ பார்க்கணும்னு ஒரு ஆர்வத்திலே அவங்க நம்பர் கேட்டு உங்களை கால் பண்ணிட்டேன். சாரி அகைன்” இவன் பேசி முடிப்பதற்குள் மறுமுனை அழைப்பை துண்டித்திருந்தது.
Advertisement
கைகளுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தான் அர்ஜுன்.
கைப்பேசியை படுக்கையின் மீது வீசி எறிந்துவிட்டு அறைக்குள் இங்கமங்கும் நடக்கலானான். ஸ்வாதி கேட்டதும் அவள் எண்ணை கொடுக்க முடிந்தவனால் இவனிடம் கொடுத்துவிட முடியவில்லை.
இவர்கள் திருமண வரவேற்பு முடிந்து அடுத்த இரண்டாம் நாளில் நடந்த அந்த ஹோடேலில் நடந்த நிகழ்வுகள் இவன் வாழ்க்கையையே மாற்றி போட்டதே.!
Advertisement
“ஸாரி அரவிந்த்” எத்தனை இயல்பாக சொல்கிறான் இவன்.
இங்கமங்கும் அலைபாய்ந்து கொண்டவனின் கண்களுக்குள் வைஷாலி வந்து வந்து போய்க் கொண்டிருந்தாள்.
என்னதான் மனமெங்கும் ஏமாற்றம் பரவியிருந்தாலும் அவள் மீது கோபம் மட்டும் வரவில்லையே. அது ஏன்?” அந்த கேள்விக்கு மட்டும் இந்த நொடி வரை அரவிந்துக்கு பதில் கிடைக்கவில்லை.
பால்கனிக்கு சென்று நின்றுக் கொண்டான். குளிர் காற்று தேகம் வருடியது.
அவளது குடும்பத்தில் எப்போதும் அனைவருக்கும் மனதளவில் மிகவும் நெருக்கமானவன் அரவிந்த். வியாபார வகையில் இரண்டு குடும்பங்களுக்கும் மிக நெருங்கிய பழக்கம் உண்டு.
திருமணதிற்கு முன்பு அவளை இரண்டொரு முறை பார்த்திருக்கிறான் அரவிந்தன். அவளிடம் எது பிடித்திருக்கிறது என்று சொல்லத் தெரியவில்லை அவனுக்கு. அனால் அவளுடனான திருமண பேச்சு வந்தவுடனேயே சம்மதித்திருந்தான் அரவிந்தன்
சித்தப்பா பெரியப்பா என கூட்டுக் குடும்பமாக வசிக்கும் அவள் குடும்பத்தில் இவள் மட்டுமே இளவரசி. வைபவ் வைகுந்த் வைத்திக் என மூன்று ஆண் வாரிசகளுக்கு இடையில் பிறந்த இளவரசி.
திருமண பேச்சு வார்த்தைகள் நடந்துக் கொண்டிருந்த போதும் அவள் அவனிடம் சரியாக பேசவில்லை எனும் உறுத்தல் அவனுக்கு இருந்து கொண்டேதான் இருந்தது.
திருமண நிச்சயதார்த்த மோதிரம் அளவு கேட்கும் சாக்கில் அவள் வீட்டுக்கு சென்ற நாளின் ஞாபக தோரணங்கள் அவனுக்குள்ளே.
அவன் சென்ற விஷயம் அறிந்தும் அவள் அறையை விட்டு வெளியே வரவில்லை. அவளது உடன் பிறந்தவர்களில் இளையவனான வைத்திக்தான் இவனுடன் வம்பளந்துக் கொண்டிருந்தான்
“பாவம் அரவிந்த் வகையா அதுகிட்டே மாட்டிக்கிட்டீங்க. பேசியே கொன்னுடும்”
“அப்படியா?” விழிகள் விரித்தான் இவன் “நான் இன்னும் அவ குரலை கூட சரியா கேக்கலையே?”
இவன் ஆதங்கம் அவளது மற்ற இரு அண்ணன்களுக்கு புரிந்திருக்க வேண்டும்.
“சரி அவளோட அளவு மோதிரம் ஏதாவது குடுங்க. நான் அப்படியே கிளம்பறேன்” அவன் எழுந்துக் கொள்ள
“இதுக்கு எதுக்கு அரவிந்த் அளவு மோதிரம் கேட்கிறீங்க. ஒரு நூல் எடுத்திட்டு போய் நீங்களே அவ விரலை அளந்துக்க வேண்டியது தானே?” சொன்னான் அவள் அண்ணன் வைபவ்.
“அதெல்லாம் வேண்டாம் வைபவ். நீங்க..” இவன் ஏதோ சொல்ல வர
“அட இதுதான் சாக்குன்னு நீங்க அவகிட்டே போய் பேசுவீங்களா? அதை விட்டுட்டு என்னமோ யோசிக்கறீங்களே? சும்மா போய் பேசுங்க அரவிந்த் சொன்னான் வைபவ்
“அவளுக்கு டென்னிஸ் ரொம்ப பிடிக்கும் அப்புறம் போட்டோகிராஃபி அதுக்கும் மேலே ஸ்வீட்ஸ். இதை எல்லாம் வெச்சு ஏதாவது பேசுங்க”
கதவை தட்டிவிட்டு கையில் ஒரு நூலுடன் அவள் அறைக்குள் நுழைந்தான் அரவிந்தன். நேர்த்தியாக இருந்த அந்த அறை அவளுக்கு டென்னிஸ் மீதிருந்த காதலை மிக அழகாக பறைசாற்றியது.
அவளது மேஜை மீது அர்ஜுன் ஸ்வாதியின் புகைப்படம் ஒன்று அமர்ந்திருக்க அவனது அதைப் பார்த்து அவனுக்குள் கொஞ்சம் வியப்புக் கோடுகள்.
தன்னுடைய மடிக் கணிணியில் எதையோ செய்து கொண்டிருந்தவள் அவனைப் பார்த்ததும் சட்டென எழுந்து நின்றாள். புன்னகைக்கலாமா வேண்டாமா என யோசித்து யோசித்து அவள் இதழ்கள் கொஞ்சம் சிரமப் பட்டு விரிந்தன
.”உனக்கு டென்னிஸ் ரொம்பவும் பிடிக்குமோ?” முதல் கேள்வியாக கேட்டான் அவளிடம். அவளது விழிகள் சடக்கென விரிந்த அழகை பார்க்க வேண்டுமே.
“எஸ் எஸ் ரொம்பவும் பிடிக்கும்” சந்தோஷமாக வெளி வந்தது அவளது குரல். அவள் புன்னைகையை இன்னமும் பெரிதாக்க வேண்டுமென தோன்றியது அவனுக்கு.
“உனக்கு ஒரு சீக்ரெட் சொல்லவா? என்றான் புன்னகை பூத்த கண்களுடன்.
“ம்?” அவள் புருவங்கள் உயர
“ஸ்வாதி இஸ் மை கசின் சிஸ்டர். அது உனக்குத் தெரியுமா?” என்றான் கண்சிமிட்டி
“ரியலி?” விழி விரித்து கூவினாள் அவள். “எனக்கு அவங்களை ரொம்பவும் பிடிக்கும்”
“அதான் இந்த ரூமே சொல்லுதே” அழகாய் சிரித்தான் அவன்.
“வேறே என்னென்ன பிடிக்கும் உனக்கு?” என்றான் அவள் மேஜைக்கு அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தபடியே.
“நான் அர்ஜுனுக்கும் பெரிய ஃபேன்.”
“அப்படியா குட்” என்றான் சற்றே தழைந்து விட்ட குரலில்.
“அப்புறம் வேறே.?”
“வேறே.. போட்டோகிராஃபி” சொல்ல வந்தவளுக்கு என்ன தோன்றியதோ அங்கேயே நிறுத்திக் கொண்டாள்.
“ஏன் நிறுத்திட்டே சொல்லு..”
“இல்ல அவ்வளவுதான்” என்றவள் அமர்ந்து மடிக்கணினியை பார்க்க ஆரம்பிக்க அவளது மருதாணி விரல்கள் அதில் விளையாடுவதை ரசிப்புடன் பார்த்திருந்தான் அவன்.
“உனக்கு மருதாணி பிடிக்குமா ஷாலு” அவன் கேட்க சடக்கென இரு கைகளையும் ஒன்றோடு ஒன்று பிணைத்துக் கொண்டாள்.
“இப்போ உங்களுக்கு என்ன வேணும்” வெட்டி விடும் பாவம் அவள் தொனியில்.
“உன் விரலோட அளவு வேணும்.” என்றான் அவள் கண்களை பார்த்தபடியே.
‘எதுக்கு?” கொஞ்சம் கடினம் அவள் குரலில்.
“உனக்கு நிச்சயதாரத்த மோதிரம் வாங்கப் போறேன் உனக்கு என்னோட முதல் கிஃப்ட். வைர மோதிரம். அதுக்கு இந்த நூல் வெச்சு அளவு எடுத்துக்கலாமா?” அவன் விழிகளில் நிறையவே தவிப்பு.
“அவ்வளவுதானே குடுங்க” வாங்கிக் கொண்டவள் அவளே அளவெடுத்து அந்த நூலை வெட்டி அவனிடம் கொடுத்திருந்தாள்.
அதற்கு மேல் அவள் பேச்சை தொடருவாள் என்று தோன்றவில்லை அவனுக்கு,
“ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு உனக்கு என்னை பிடிக்கலையா என்ன?” அவன் கேட்டே விட சடக்கென நிமிர்ந்தாள் அவள். ஒரு வித பரிதவிப்பு அவள் முகத்தில்.
“அப்படி அப்..டி.. எல்லாம் இல்லையே. எனக்கு பிடிச்சிருக்கு. கல்யாணத்திலே எல்லாம் சம்மதம்தான்”
“அப்போ ஏன் ஷாலு டென்ஷனா இருக்கே”
“”நான் கொஞ்சம் வேலையா இருக்கேன். ப்ளீஸ்.. அப்புறம் பேசறேன்” அவசரம் அவளது தொனியின் தன்மையாக இருந்தது.
“சரி ஒகேமா. அப்புறம் பார்க்கலாம்” முடித்துவிட்டு கிளம்பியிருந்தான் அவன்.
அதன் பிறகு அந்த மோதிரத்தை அவன் ரசித்து ரசித்து வாங்கியதும் கற்பனையிலேயே அதை பலமுறை அவள் கையில் சேர்த்து மகிழ்ந்ததும் அவன் மட்டுமே அறிந்த ரகசியங்கள்.
அதன் பிறகும் திருமணம் வரை அவள் அவனுடன் சரியாக பேசவில்லை. திருமணம் முடிந்தும் சற்றே ஒதுக்கம் காட்டிக் கொண்டுதான் இருந்தாள் அவள்.
திருமணம் வரவேற்பு முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு இந்த ஹோடேலுக்கு இரவு உணவுக்கு செல்வதற்கு முன் உன்னை முத்தமிட்டேனே ஒரு முறை. அது இன்னமும் இனிக்கிறதடி பெண்ணே. சொல்லிகொண்டான் தனக்குள்ளே
அந்த ஒரு வாரமும் அவன் சென்னையில் அவள் வீட்டிலேயேதான் தங்கியிருந்தான்.
அன்று இரவு ஹோடேலுக்கு செல்ல வேண்டும் என கைப்பேசியில் அழைத்து சொல்லிவிட்டு அடுத்த கால் மணி நேரத்தில் வீட்டுக்கு வந்திருந்தான் வெளியில் சென்றிருந்த அரவிந்தன்.
அங்கே உணவு மேஜையில் அவளது அம்மா குலாப் ஜாமுன் செய்து தயாராக வைத்திருக்க ஒரு கிண்ணத்தில் இரண்டு ஜாமூன்களை எடுத்துக்கொண்டு தனது அறைக்கு வந்திருந்தான் அவன்.
அவளுக்கு இனிப்புகள் பிடிக்கும் என அவளது அண்ணன் சொன்னது இன்னமும் நினைவில் இருந்தது அவனுக்கு.
அவளுக்கு ஹோடேலுக்கு செல்வதற்கு பெரிதாக ஆர்வம் இல்லை. தன்னை அத்தனை சிரத்தையுடன் அலங்கரித்துக் கொள்ளவில்லைதான் அவள், ஆனாலும் அத்தனை மிகச் சாதாரண அலங்கரத்திலேயே அத்தனை அழகாய் மிளிர்ந்து கொண்டிருந்தாள் அவள். அந்த மயில் வண்ண சல்வாரில் நின்றவளிடம் அவனது உள்ளம் தாவி ஓடியது.
அத்தனை மகிழ்ச்சியாய் அவளை ரசித்து ரசித்து மணந்தவன் இவன். அதன் பிறகு இரண்டு நாட்களாக அவள் காட்டிக் கொண்டிருக்கும் ஒதுக்கம் அவனுக்கு ஒரு வித தவிப்பை ஏற்படுத்தி இருந்தது.
“ஜாமுன் ஷாலு” கட்டிலில் அமர்ந்திருந்தவளை பார்வையால் ரசித்தபடியே கேட்டான்
“இல்ல எனக்கு வேண்டாம்” அவள் எழப் போக அவள் கரம் பிடித்து அமர்த்தினான் தனதருகில்
“ஒரு சின்ன பீஸ் மட்டும். ம்? என்றான் ஒரு ஜாமுனை சுவைத்தபடியே “உனக்கு ஸ்வீட்ஸ் பிடிக்கும்தானே.?”
“ம்ஹூம்” அவள் மறுத்து எழ அவன் அவள் இடைவளைத்து இழுக்க கிட்டதட்ட அவன் மீது விழுந்து சமாளித்து அவன் அருகில் அமர்ந்தாள்.
‘என்னை விட்டு இப்படி விலகி விலகி போகாதே ஷாலும்மா” என்றான் அவள் கண்களுக்குள் பார்த்து.
“எனக்கு வேண்டாம்”
‘என்ன வேண்டாம் ? ம்?” அவன் இதழ்கள் இதமாய் அவள் கன்னத்தில் பதிந்தன.
‘ம்ஹூம். ப்ளீஸ்” அவள் கெஞ்சி விலக முயல அவன் பிடி இறுகி அவன் இதழ்கள் இன்னொரு கன்னத்தில் பதிந்தன. அவள் உடலின் நடுக்கத்தை அவனால் உணர முடிந்தது.
“அரவிந்த்..” அவள் சற்றே கோபமாக எழ
“வாவ்” என் பேரை முதல் தடவையா சொல்லி இருக்கே ஷாலும்மா. அதுக்கு உனக்கு எதாவது பரிசு கொடுத்தே ஆகணும்” என்றவனின் இதழ்கள் அவள் இதழ்களில் பதிந்திருந்தன.
அடுத்த சில நொடிகளில் அவனை தள்ளிவிட்டு எழுந்திருந்தாள் அவள். அவள் கண்களும் முகமும் அப்படி கோபத்தை வெளிப்படுத்தின.
அதன் பிறகு அவளை அந்த ஹோடேலுக்கு அழைத்து செல்வதே பெரும்பாடகி போனது அவனுக்கு.
“ஷாலும்மா ப்ளீஸ் ஷாலும்மா கோபப் படாதே” கெஞ்சலுக்கு அவள் செவி சாய்க்கவே இல்லை.
அப்போதுதான் அவளுக்கு அந்த வாக்கை கொடுத்தான் அரவிந்தன்.
“ஷாலும்மா இனிமே உனக்கு பிடிக்காததை செய்ய மாட்டேன்.” கைகளை கட்டிக்கொண்டு அவனுக்கு முதுகை காட்டிக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தாள் அவள்
“இங்கே பாரு உன் சந்தோஷத்துக்காக எதை வேணும்னாலும் நான் விட்டுக் கொடுக்கத்தயார் போதுமா..” அவள் கை பிடித்து இழுத்து அதன் மேல் தனது கைவைத்தான் “இட்ஸ் அ ப்ராமிஸ்”
அப்படியும் அவள் கோபம் தணியவில்லை என்பதுதான் நிஜம். இருந்தாலும் அவன் தனது வார்த்தையை காப்பாற்றிக் கொண்டிருக்கிறான்.
பழைய நினைவுகள் விட்டு வெளியே வந்தவன் தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டான் அரவிந்தன். இப்போது அணிந்திருக்கும் ஸ்லீவ்லெஸ் டி ஷர்ட் அவனது கம்பீரத்தை இன்னமும் கூட்டித்தான் காட்டியது. உயரமும் அதற்கேற்ற உடல்வாகும் நேர்த்தியான மீசையும் பார்ப்பவர்கள் அவனை ஒரு முறை அவனைத் திரும்பி பார்த்துவிட்டுத்தான் செல்வார்கள்.
ஆனால் அவளுக்கு மட்டும் அவனை பிடிக்கவில்லை.
இங்க உன்னைப் பார்த்தது கூட ஒரு விதத்தில நல்லதா போச்சு. ஒரு வருஷத்துக்கு மேல் ஆச்சு. சோ கேஸ் பைல் செய்திடலாம்ன்னு லாயர் சொன்னார்” சொல்கிறேன் நான். ஒற்றை எதிர்வினை இருக்கிறதா அவளிடம் சில நொடிகள் அங்கலாய்த்து கிடந்தது அவனது மனது.
யாராக இருந்தாலும் சிரித்து மகிழ்ந்து பேசுபவள் இவனிடம் மட்டும் மனம் திறந்ததே இல்லை இதுவரை
ஒரு வேளை அவள் வாழ்கையில் நான் இல்லாமல் இருந்தால்தான் மகிழ்ச்சியாக இருப்பாளோ என்னவோ?” ஒரு வித ஆழ் ஸ்வாசம் அவனிடம்.
அதன் பிறகு அன்று அந்த ஹோடேலில் நடந்த அந்த களேபரத்துக்கு பிறகும் வந்த வார்த்தை பரிமாற்றங்களுக்கு பிறகும் பெங்களூருக்கு அவள் வரவே இல்லையே, சென்னையிலேயே தங்கி விட்டிருந்தாளே. அந்த நாளில் அவள் விழிகள் வடித்த கண்ணீர் இன்னமும் அவனுக்கு நினைவில் இருக்கிறதுதான்.
“இதுக்கு மேலே என்னாலே அவளோட வாழ முடியாது”
அன்று அந்த ஹோடேலில் இருந்து திரும்பி அவன் அழுத்தம் திருத்தமாக சொன்ன நிமிடத்தில் இருந்து அவளது வீட்டில் அனைவரும் அவனை மனதளவில் வெறுத்து இருப்பார்கள் என்பதே நிஜம். அவனது வீட்டிலுமே கிட்டதட்ட அதே நிலைதான்.
இப்போது ஏனென்றே தெரியாமல் ஒரு முறை ஒரே ஒரு முறை அவளிடம் பேசிவிட தவித்தது மனம்.
கைப்பேசி மறுமுனையில் ஒலித்ததா என்பது கூட இவனுக்கு தெரியவில்லை. அதற்குள் ஏற்கப் பட்டிருந்தது அழைப்பு.
error: Content is protected !!