Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

29. ஷேஹா ஸகி - விழி கொல்லும் விஷமா நீ

விழி கொல்லும் விஷமா நீ Epi 19

 

விழி கொல்லும் விஷமா நீ..

EPISODE 19



Advertisement

 

“ஆமா… இது யாரோட கார்?” கார் சீட்டில் அமர்ந்து சுற்றி முற்றி பார்த்தவாறு நிஹாரிகா கேட்க, “அப்பாவோட கார்” என்றான் யாதவ் பட்டென்று.

 

Advertisement

“ஓ…” என்று இழுத்தவள், “எப்போ இங்க வந்த?” என்று தன் அடுத்த கேள்வியை கேட்க, “நேத்து நைட்” மீண்டும் பட்டென்று பதில் வந்தது அவனிடமிருந்து.

Advertisement

 

“ஓ…” என்று மீண்டும் நீட்டி முழக்கியவள் அவனைத் திரும்பியும் பார்க்காது சுற்றிமுற்றி பார்த்தபடியே இருக்க, அவனோ அவளுக்கு சளைத்தவன் இல்லை போல  விழி மூடாமல் தன்னவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

 

Advertisement

அதை பெண்ணவளும் அறியாமல் இல்லை. அந்த பார்வை வீச்சை தாங்க முடியாமல்தானே அவள் இத்தனை பாவனை செய்வதே!

 

“ஏசி ரொம்ப கூலா இருக்குல்ல” என்று அவள் அடுத்து கேட்டதும்தான் தாமதம், “இல்லயே, எனக்கு சூடா இருக்கு” என்றபடி அவள் கரத்தைப் பற்றியிழுத்தவன் நிஹாரிகா கொஞ்சமும் எதிர்பார்க்காத சமயம் அவள் இதழை கவ்விக்கொண்டான்.

 

அவளோ திக்குமுக்காடிப் போய் அப்படியே சிலையாகி இருக்க, ஹார்மோன்களின் தாக்கம் அந்த ஆண்மகனை மேலும் சூடேற்றியது.

 

அவளிடையைப் பற்றி தன்னருகே இழுத்தபடி அவன் அவளிதழை சுவைக்க, சில கணங்களில் சுதாகரித்த நிஹாரிகா முழு பலத்தையும் பயன்படுத்தி அவன் மார்பில் கை வைத்து தள்ளினாள்.

 

“நான் இன்னும் லவ் பண்றேன்னு சொல்லவே இல்ல” அவள் பதற்றமாக சொல்ல, “ஓ ஷீட்! அதை பத்தி நான் யோசிக்கவே இல்லயே, சரி பரவாயில்ல இப்போ சொல்லு சீக்கிரம்” என்று பதிலுக்கு அவளை சீண்டினான் யாதவ்.

 

பெண்ணவளோ அவனை முறைத்துப் பார்த்தாள்.

 

அதில் மெல்ல இதழ் பிரித்து சிரித்தவனோ அவளின் முகத்தில் தவழ்ந்துக்கொண்டிருந்த முடிக்கற்றையை காதோரம் ஒதுக்கிவிட்டு, “உனக்கு பிடிக்கலன்னா இந்நேரம் என் கன்னம் பழுத்திருக்கும். ஆனா…” என்று இழுத்த வண்ணம் பெருவிரலால் அவளின் சிவந்த கன்னத்தை வருடினான்.

 

நிஹாரிகா கூச்சத்தில் மேலும் வெட்கப்பட்டவளாய் நெளிய ஆரம்பிக்க, “ஆனா உன் கன்னம் சிவந்திருக்கே நீஹா” என்றவன் மீண்டும் அவள் கன்னத்தைப் பற்றி அவளிதழை நெருங்கப் போக, அவனிதழில் ஒற்றை விரலை வைத்து தடுத்தாள் நிஹாரிகா.

 

அவளுடைய விழிகள் அவன் விழிகளை ஆழமாகப் பார்க்க, இப்போது தன்னவளின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் முகத்தை திருப்பிக்கொள்வது யாதவ்வின் முறையாயிற்று.

 

ஆண்களின் வெட்கமும் தனி அழகுதான்..

 

“சேலையில வந்து என்னை கொல்லுற நீஹா!” என்று அவன் கிறக்கமான குரலில் சொல்ல, நிஹாரிகாவுக்கு இந்த தருணங்கள் எல்லாம் புதிதாக இருந்தது.

 

யாதவ்விடத்தில் காதலின் ஆழத்தை உணர ஆரம்பித்தாள் அவள்.

 

ஆனால் சட்டென அவளுக்குள் எழுந்தது ஒரு குற்றவுணர்ச்சி.

 

“அர்ஜூ, அது… நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” நிஹாரிகா மெல்ல பேச்சை ஆரம்பிக்க, “சொல்லு நீஹா…” என்றவனோ அவள் கரத்தை தன் கரங்களுக்குள் பொத்தி அவள் விழிகளை காதல் பொங்கப் பார்த்தான்.

 

பெண்ணவளுக்கு வார்த்தைகள் வர மறுத்தன. ‘உண்மையை சொன்னால் இந்த காதலை காண முடியாமல் போய்விடுமோ?’ என்ற பயம் அவளை அச்சுறுத்தியது.

 

அவள் விழிகள் அலைபாய, கைகளைப் பிசைந்துக்கொண்டவள், “அது… அது வந்து யாதவ்… அம்மாகிட்ட எப்படி சொல்லி புரிய வைக்குறதுன்னு தெரியல அதான்.. வேறொன்னு இல்ல” என்று பயத்திலேயே பேச்சை மாற்றிக்கொண்டாள்.

 

யாதவ்வின் இதழ்கள் சிறு புன்னகையில் விரிந்தன.

 

“அதான் விஷயமா.. உன் அம்மாகிட்ட நான் பேசுறேன். ஆனா இப்போ இல்ல நீஹா, நீ எனக்காக ரொம்ப வெயிட் பண்ண வேண்டியிருக்கும். நேஷனல் டீமுக்கு நான் செலக்ட் ஆகணும். ட்ரீம் ஆஃப் மை லைஃப், அது நடந்ததுமே உன் அம்மாகிட்ட நம்மள பத்தி பேசுவேன், ட்ரஸ்ட் மீ!”

 

யாதவ்வின் விழிகளில் ஒருவித அழுத்தம் குடியிருந்தது. அந்த விழிகளில் தெரிந்த உறுதியில் சற்று ஆசுவாசமானவள் தனக்குள் ஒன்றை தீவிரமாக யோசித்தாள்.

 

அன்றிரவு,

 

‘இதை பத்தி யாதவ்க்கு தெரியவே கூடாது, நாம… நாம ஆரவ்கிட்ட பேசலாம், அவன நான் காதலிக்கல அப்படிங்குறத அவன்கிட்ட சொல்லிட்டா எவ்ரிதிங் வில் பீ ஓவர். அதுக்கப்பறம் யாதவ்க்கு தெரிய வந்தாலும் ஆரவ் என்னோட பாஸ்ட்டுன்னு சொல்லிக்கலாம்ல,

 

யாரும் ஹர்ட் ஆக மாட்டாங்க. இந்த சூழ்நிலையில யாதவ் இல்லன்னா கூட நான் ஆரவ்வ விட்டு பிரியதான் யோசிச்சிருப்பேன். கண்டிப்பா ஆரவோட கால்ல நான் விழணும்னா கூட தயாராதான் இருக்கேன்’

 

அவள் தனக்குள் தீவிரமாக யோசித்தபடி அமர்ந்திருக்க, சரியாக ஆரவ்விடமிருந்தே அழைப்பு வந்தது.

 

“ஹெலோ…” அவளுடைய குரல் ஒலித்ததும்தான் தாமதம், “ஏன் நீஹா இப்படி பண்ற, இப்போ எல்லா ஏன் என்னை ரொம்ப அவாய்ட் பண்ற, நான் என்ன பண்ணேன்? சொல்லுடீ, பிஸ்னஸ் விஷயமா நான் லணடன் வந்ததுலயிருந்து நீ என்கூட சரியா பேசுறதே கிடையாது, நானா ஃபோன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்குற வாட் இஸ் ரோங் வித் யூ?” என்றவனின் குரல் மறுமுனையில் ஆதங்கத்தோடு வந்தது.

 

அந்த வார்த்தைகளில் நிஹாரிகாவுக்கு ஒரு மாதிரியாகிப் போனது என்னவோ உண்மைதான்.

 

“ஆரவ் அது… காலேஜ் அஸ்ஸைன்மென்ட்ஸ், வர்க்னு கொஞ்சம் பிஸியா இருக்கேன் அதான்..” அவள் பேசி முடிக்கவில்லை, “நோ நீஹா, எனக்கு ஏதோ புதுசா இருக்கு. யூ நோ வெல், நான் உன்ன ரொம்ப லவ் பண்றேன். நான் எனக்கு பிடிச்ச மாதிரி உன்ன மாத்த நினைக்கிறது தப்புன்னு தோனுது, பட் எல்லாமே உன்ன கேர் பண்றதுக்காகதான், அதை நீ புரிஞ்சுக்கிட்டேல்ல” என்று கேட்டவனிடத்தில் நாக்கு நுனி வரை வந்ததை கத்த வேண்டும் போல தோன்றியது அவளுக்கு.

 

ஆனால், தைரியம்தான் மண்ணளவும் இல்லையே!

 

நெற்றியை நீவி விட்டுக்கொண்டவாறு, “புரியுது ஆரவ், என்ட் நா.. நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்று அவள் உண்மையை சொல்லி விடலாமென மெல்ல ஆரம்பிக்க, மறுமுனையில் பலத்த அமைதி.

 

அந்த அமைதியே அவளின் இதயத்தை படுவேகமாக துடிக்க வைத்தது.

 

“என்னன்னு சொல்லு..” ஆரவ்வின் குரலில் திடீரென ஒரு கடினம் தோன்றியிருக்க, அதை கண்டுகொண்டவளுக்கு நா எழவில்லை.

 

“அது… நான் உன்னை மீட் பண்ணணும், அதான் எப்போ வருவேன்னு கேக்க வந்தேன்” சமாளித்துவிட்டு ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டாள் நிஹாரிகா.

 

“அதுவா… தெரியல ஸ்வீட்ஹார்ட். சர்ப்ரைஸ்ஸா வருவேன், எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டே இரு. சரி ஐ ஹேவ் டூ கோ, அப்பறமா பேசுறேன். லவ் யூ!”

 

வேகமாக சொல்லிவிட்டு ஆரவ் அழைப்பை துண்டித்திருக்க, விழிகளை அழுந்த மூடித் திறந்தவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

 

அன்று நடந்ததை யோசித்தவாறு அறையிலிருந்த நிஹாரிகாவுக்கு ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது, தான் எத்தனைப் பெரிய முட்டாளென்று.

 

அன்றே தைரியத்தை வரவழைத்து சொல்லியிருந்தால் இத்தனை பிரச்சனையை சந்தித்திருக்க மாட்டாள்.

 

தன்னிலையை நினைத்து ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவள் அப்படியே உறங்கிப் போக, அடுத்தநாளும் விடிந்தது.

 

“வாவ் ஆதி! இன்னைக்குதான் உன் ஃபோட்டோவ அந்த ஜவுளி கடை வாசல்ல இருந்த பேன்னர்ல பார்த்தேன். ரொம்ப அழகா இருக்கடீ, ஃபைனல்லி மாடல் ஆகிட்ட சூப்பர் சூப்பர்!”

 

அலைப்பேசியில்  தன் தோழியோடு பேசியபடி ஆஃபீஸ் அறைக்குள் நுழைந்தாள் நிஹாரிகா.

 

“ஹ்ர்ம் ஹ்ர்ம்..” என்று குரலை செருமியபடி யாதவ் அவள் முன் வந்து நின்றதும், “குட் மார்னிங் சார்” என்று ராகமிழுத்தபடி அலைப்பேசியை துண்டித்தவள், புன்னகையோடு அவனைப் பார்த்தாள்.

 

“ஒரு முக்கியமான ஒருத்தர மீட் பண்ண போகணும், என் கூட வா!” அவன் சொல்லிவிட்டு அவன் பாட்டிற்கு வேக எட்டுக்களை வைத்து முன்னே செல்ல, அவன் பின்னே ஓடாத குறையாக சென்றாள் அவள்.

 

அடுத்த பதினைந்தே நிமிடங்களில் ஆடம்பரமான கஃபே ஒன்றின் ப்ரைவேட் ஏரியாவில் தன் நண்பனொருவனை சந்தித்து பேசினான் யாதவ்.

 

நிஹாரிகாவோ அறைக்கு வெளியில் பாவமாக நின்றுக்கொண்டிருக்க, இருபது நிமிட கலந்துரையாடலுக்கு பின்னர் அந்த ஆள் வெளியேறியதும் அவனும் அவளை உள்ளே அழைத்தான்.

 

“நம்ம ஹோட்டல்ல எந்த டிஷ் ரொம்ப ஸ்பெஷல்” என்று அவன் கேட்டதும், “ஐ திங் நோர்த் இந்தியன் சௌத் இந்தியன் டிஷஷ்” என்றாள் அவள் பட்டென்று.

 

கால் மேல் கால் போட்டு நாடியை நீவி விட்டவாறு யோசித்தவன், “நாம ஹோட்டல்ல இட்டாலியன் என்ட் தாய்லாந் டிஷஷ் இன்ட்ரடியூஸ் பண்ணணும். அதோட, நம்ம ஹோட்டலோட ஆம்பியன்ஸ்லயும் சில சேஞ்சஸ் கொண்டு வரணும். சோ, அதை நோட் பண்ணிக்கோ!”என்று சொல்லச் சொல்ல, கையிலிருந்த ஆஃபீஸ் ஐபேட்டில் சரியாக குறித்துக்கொண்டாள் நிஹாரிகா.

 

அவளை ஆழ்ந்த பார்வைப் பார்த்த யாதவ்வோ சட்டென எழுந்து அவள் பக்கத்தில் வந்தமர, அவளிதயமோ படபடவென அடித்துக்கொண்டது.

 

“என்ன.. என்னாச்சு சார்?” அவள் பதறியபடி கேட்க, அவளை நெருங்கி அவள் கையிலிருந்த ஐபேட்டில் அவள் குறித்து வைத்ததை சரிபார்ப்பது போல பாவனை செய்தான் அவன்.

 

“ஐ ஹேவ் மோர் ஐடியாஸ், ஒவ்வொன்னா எக்ஸ்கியூட் பண்ணணும், சீக்கிரமே ஆரம்பிக்கலாம்” என்று அவன் பேசிக்கொண்டே போக, அவளுடைய காதில் எதுவுமே விழவில்லை.

 

இருக்கும் பதட்டத்தில் அவன் பேசுவதை கேட்கும் நிலையிலா இருந்தாள் அவள்!

 

சட்டென, “நீஹா…” அவனுடைய குரல் ஆழ்ந்து ஒலிக்க, பக்கவாட்டாகத் திரும்பி அவனுடைய விழிகளைப் பார்த்தவளுக்கு அவனுடைய விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்று அவனிடத்தில் கட்டி இழுப்பது போலிருந்தது.

 

“அர்ஜூ…” அவளுடைய இதழ்களும் அவன் பெயரை மெல்ல முணுமுணுத்தன.

 

யாதவ்வின் பார்வை அவளிதழில் மீது பதிந்தது.

 

அவனுடைய பார்வை செல்லும் திசையை உணர்ந்து அந்த ஏசி குளிரிலும் அவளுக்கு பதற்றத்தில் வியர்க்கத் தொடங்கியது.

 

யாதவ்வின் கரம் மெல்ல எழுந்து அவள் கன்னத்தை வருட, அவளிதழை நோக்கி குனிந்தான் அவன்.

 

நிஹாரிகா பட்டென்று விழிகளை இறுக மூடிக்கொள்ள, இத்தனை நேரம் உணர்ந்த அவனின் ஸ்பரிசம் விலகிய உணர்வு.

 

வேகமாக அவள் ஒற்றைக் கண்ணை திறந்துப் பார்க்க, சிறிது நேரத்திற்கு முன் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்பது போல அலைப்பேசியை நோண்டியபடி அமர்ந்திருந்தான் யாதவ்.

 

பெண்ணவளுக்கு அவனின் செயலில் தலை சுற்றாத குறைதான்.

 

‘என்ன இது, கண்ண திறந்துக்கிட்டே கனவு காணுறேனா என்ன?’ தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள் அவள்.

 

ஆனால், அவன் வருடிய கன்னம் இப்போதும் அவனின் ஸ்பரிசத்தை உணர்ந்து கூசச் செய்ய, நிஹாரிகாவுக்கு கனவில்லை என்று மட்டும் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.

 

அடுத்தநாள் காலை லேப்டாப்பில் எதையோ தீவிரமாக டைப் செய்துக்கொண்டிருந்தவளின் முன்னே பத்திரிகையை தூக்கிப் போட்டான் யாதவ்.

 

“என்னாச்சு சார்…” புரியாமல் கேட்டபடி அந்த பத்திரிகையை புரட்டி பார்த்தவளின் இதழ்கள் புன்னகையில் அழகாக விரிய, பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை இட்டவாறு நின்றிருந்தவனோ அவளின் சிரிப்பை விழிகளை சுருக்கிப் பார்த்தான்.

 

புன்னகையோடு அவனை நிமிர்ந்துப் பார்த்தவளோ உடனே இதழுக்குள் சிரிப்பை மறைத்தபடி, “அடக்கடவுளே! இதென்ன? உங்களையும் என்னையும் சேர்த்து வச்சு நியூஸ் பேப்பர்ல போட்டிருக்காங்க. ஒரு செக்ரட்டரி பொண்ணா இருக்க கூடாதே, அபத்தமா பேச வேண்டியநு கலிகாலம்” என்று போலி கோபத்தோடு பேசிக்கொண்டே போனாள்.

 

அவளைப் பற்றி அறியாதவனா அவன்!

 

“ஆஹான்!” ஒற்றைப் புருவத்தைத் தூக்கி நக்கலாகக் கேட்டவன் கொடுப்புக்குள் சிரித்தபடி செல்ல, இதை விட வேறென்ன வேண்டும் அவளுக்கு!

 

ஆனால், விதி அவளிதயத்தை குத்திக் கிழிக்க காத்திருப்பதை பற்றி பாவம் பேதை, அப்போது அறியவில்லை.

 

அதேநேரம், தன் ஆஃபீஸ் அறையின் சுழலும் நாற்காலியில் சுழன்றபடி யாதவ் மற்றும் நிஹாரிகா பற்றிய வதந்தி தகவல்களை யோசனையோடு பார்த்துக்கொண்டிருந்தான் ஆரவ்.

 

சரியாக கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்த மஹாதேவனோ, “என்ன ஆரவ், எதுக்காக என்னை வர சொல்லியிருந்த?” என்று கேட்டபடி அவனுக்கு எதிரே அமர்ந்துக்கொள்ள, அவரை நோக்கி ஒரு பத்திரத்தை தள்ளிவிட்டான் அவன்.

 

புருவ முடிச்சுகளோடு அதை கையிலெடுத்துப் பார்த்தவருக்கு அதிர்ச்சி.

 

“வாட்! யாதவ்வோட நிவ் ஹோட்டல் ப்ராஜெக்ட்ட உன் பேருல மாத்த சொல்லி கேட்டிருக்க, ஹவ் கென் ஐ?”

 

அவர் குறையாத அதிர்ச்சியோடு கேட்க, அலட்சியமாக தோளைக் குலுக்கினான் ஆரவ்.

 

“நிஹாரிகாவ நெருங்குறதுக்கு எனக்கு கிடைச்ச ஒரு வழி. யூ டோன்ட் ஹேவ் சாய்ஸ் மிஸ்டர் மஹாதேவன்  இன்ஃபேக்ட் இப்போ உன் கம்பனி ஸ்டேபிளா இருக்குறதுக்கு காரணமே நான்தான்”

 

என்று அவன் அழுத்தமாக சொன்ன விதத்தில் மஹாதேவனுக்கு மறு வார்த்தை பேச முடியவில்லை.

 

சரிவில் சென்ற இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தை மீண்டும் கட்டியெழுப்ப பக்கபலமாக இருந்ததே ஆரவ்தானே!

 

வேறுவழியின்றி அந்த ப்ராஜெக்ட்டில் தனக்கு சம்பந்தமான ஷெயார்ஸை ஆரவ்வின் பெயரில் மாற்றியவர் அங்கிருந்து செல்லப் போக, “வெயிட்…” என்று மீண்டும் அவரை நிறுத்தினான் அவன்.

 

மஹாதேவனோ திரும்பி கேள்வியாக பார்க்க, “உங்க பொண்ணுகிட்ட இருந்து மறுபடியும் எனக்கு மெசேஜ் வந்துச்சு அவ்வளவுதான் சொல்லிட்டேன்” என்று கிட்டத்தட்ட மிரட்ட, அதிர்ந்த மஹாதேவனோ உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார்.

 

தன் மகளின் பிடிவாதத்தைப் பற்றி அறியாதவரா அவர் !

 

உள்ளுக்குள் சிரித்தபடி அவர் சென்றுவிட, இப்படியே நான்கைந்து நாட்கள் கடந்து அந்த விளம்பர மாடலிங் கம்பனியின் பார்ட்டீக்கான நாளும்  வந்தது.

 

 

***********

 

-Sheha zaki..

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!