Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

29. ஷேஹா ஸகி - விழி கொல்லும் விஷமா நீ

விழி கொல்லும் விஷமா நீ Epi 20

 

விழி கொல்லும் விஷமா நீ..

Episode 20



Advertisement

 

அந்த ஆடம்பரமான ஹோட்டலின் பார்ட்டீ ஹால் முழுக்க டாப் மாடல்களும் தொழில்துறை நண்பர்களும் பணக்காரர்களுமே கூடியிருந்தனர்.

 

Advertisement

ஒரு பக்கம் புஃபே முறையில் உணவு அடுக்கப்பட்டிருக்க, பார்ட்டீ ஹால் மூலையில் பார் ஏரியாவை வைக்க தவறவில்லை.

Advertisement

 

நடுவே நடனத்திற்காகவே பெரிய மேடை அமைக்கப்பட்டிருக்க, பல விதமான ஆடைகளை அணிந்து வந்திருந்தனர் அத்தனை பேரும்.

 

Advertisement

அந்த கூட்டத்திற்கு மத்தியில் வெள்ளை கோர்ட் மற்றும் பேன்ட்டில் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியபடி எரிச்சலோடு நின்றிருந்தான் சித்தார்த்.

 

“ஐ நோ, நான் ஏன் ஆதிராவுக்கு இந்தளவுக்கு இம்பார்ட்டன்ஸ் கொடுக்குறேன்னு நீ யோசிச்சிருப்ப. பட்… யூ நோ வாட் சித்து, அவ இதுக்கு முன்னாடி வேலை பார்த்த கம்பனிக்கு நான் போனப்போ தான் ஆதிராவ ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேன்.

 

அப்போவே எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு. லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்! பட்… அப்போ அவகிட்ட பேசுறதுக்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கல. அப்போதான் நம்ம கம்பனிக்கு வந்த புது மாடல் அப்ளிகேஷன்ஸ்ல ஆதிராவோட ஃபோட்டோவ பார்த்தேன்.

 

ஹவ் குட் ஐ ரிஜெக்ட் ஹெர்? உடனே அவள என் பக்கத்துல வர வச்சுட்டேன். எப்படியாச்சும் இன்னைக்கு அவகிட்ட என் லவ்வ சொல்லிடணும். இதுக்குமேல என்னால வெயிட் பண்ண முடியல”

 

விழிகளில் காதலோடு வருண் பேசிக்கொண்டே போக, இறுகிய முகமாக அவன் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தவனின் பார்வை எதேர்ச்சையாக வாசல்புறம் பதிந்தது.

 

அவன் விழிகள் அந்த இடத்திலேயே நிலைக்குத்தி நிற்க, “சித்து… சித்து…” என்று உலுக்கியவனும் அவன் பார்வை செல்லும் திசையை நோக்கினான்.

 

அங்கு மயில் கழுத்து வண்ணத்திலான நீண்ட ஃப்ராக்கில் ஒப்பனையோடு தலைமுடியை ஒரு பக்கமாக விரித்துவிட்டு தேவதையாய் வந்துக்கொண்டிருந்தாள் ஆதிரா.

 

இரு ஆடவர்களும் தங்களை மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருக்க, மற்றவர்களின் பார்வை தன்மேல் விழுவதை கண்டுகொண்டவளோ சிறு கூச்சத்தோடு தட்டுத்தடுமாறினாள்.

 

‘அய்யோ எல்லாரும் என்னையே பார்க்குற மாதிரி இருக்கே! ஆனா இந்த நேரம் பார்த்து கால் வேற ஃப்ராக்ல மாட்டிக்கிது. அந்த முட்டாள் டெயிலர்கிட்ட நான் அப்போவே சொன்னேன், எங்க என் பேச்சை கேட்டான்! இப்போ தடுக்கி கிடுக்கி விழுந்தேன்னு வை, மானமே போயிரும்’

 

உள்ளுக்குள் புலம்பாத குறையாக அவள் மெல்ல நடையிட்டு வர, அவளிடம் வேகமாக ஒடி வந்தான் வருண்.

 

ஆதிராவின் கரத்தை உரிமையோடு பற்றிக்கொண்டவன், “வாவ் யூ லுக் கோர்ஜியஸ் ஆதி” என்றுக்கொண்டே அவளை அணைக்க, அசடுவழிந்தவாறு அவனிடமிருந்து மெல்ல விலகிக்கொண்டவளின் விழிகள் அந்த ஒருவனைதான் சுற்றிமுற்றி தேடின.

 

அவனோ வேண்டுமென்றே அவளை கண்டுகொள்ளாதது போல மற்ற மாடல்களோடு சிரித்துப் பேசிக்கொண்டிருக்க, அவளோ உதட்டை சுழித்தவள் வருணைத் தாண்டி அவனின் அருகே சென்றாள்.

 

“சித்து…” அவள் அழைத்ததும் திரும்பியவன், என்னவென்று கேள்வியாகப் பார்த்தான்.

 

அந்த பார்வையில் வெறுமையை மட்டுமே உணர்ந்தாள் பெண்ணவள்.

 

அவளோ அவன் பக்கத்திலிருந்த மற்ற பெண்களை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, “ரொம்ப அழகா இருக்க சித்து, நா.. நான் எப்படி இருக்கேன்?” என்று விழிகளில் ஆர்வத்தோடு கேட்க, “ம்ம் குட்!” என்றுவிட்டு அலட்சியமாக முகத்தை திருப்பிக்கொண்டான் சித்தார்த்.

 

அந்த செயலில் அவளுக்கு மூகம் அவமானத்தில் கறுத்துவிட்டது.

 

தன்னை குனிந்து ஒருதரம் பார்த்துக்கொண்டவள், ‘நல்லாதானே இருக்கேன், நீஹா கூட ஏன்ஜல் மாதிரி இருக்கேன்னு சொன்னாளே, ஒருவேள இவனுக்கு பிடிக்கலயோ? அன்னைக்கு கிஸ் பண்ணதுலயிருந்து ஏன் ஒரு மாதிரி நடந்துக்குறான்?’ என்று மானசீகமாக கேட்டுக்கொண்டாள்.

 

அவனோ அவளுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல நின்றுக்கொண்டிருக்க, பட்டென்று அவன் கரத்தைப் பற்றி தள்ளி அழைத்துச் சென்றாள் அவள்.

 

“சித்து, என்னாச்சு உனக்கு? ஏன் ஒரு மாதிரியா இருக்க, நான் அழகா இல்லையா, உனக்.. உனக்கு இந்த ட்ரெஸ் பிடிக்கலயா? அன்னைக்கு… ஐ மீன் அப்போதிலிருந்து உன்கூட சரியா பேசவே முடியல, பார்ட்டீ அர்ரேன்ஜ்மென்ட்ஸ் பிஸின்னு சொன்ன, ஐ அன்டர்ஸ்டேன்ட். ஆனா இப்போவும் ஏன் இப்படி இருக்க?”

 

தன் மனதிலிருந்ததை வெளிப்படையாகக் கேட்டுவிட்டாள் ஆதிரா. ஆனால், ஆடவனிடத்தில்தான் சிறு தடுமாற்றம்.

 

“அது… அப்படியெல்லா இல்ல ஆதி, ஆமா… வருண் எங்க? உன்கிட்ட பேசணும்னு சொல்லிட்டு இருந்தான்” என்று சுற்றிமுற்றி வருணைத் தேடியவாறு சொன்னவன், “டான்ஸ் ஸ்டார்ட் ஆக போகுது, ஐ ஹேவ் டூ கோ! ரோஷினி என்னை தேடிட்டு இருப்பா” என்றுவிட்டு செல்லப் போக, அவன் கரமோ அவளுடைய கரத்திற்குள் இருந்தது.

 

ஆதிராவுக்கு அவன் என்ன பேசுகிறான் என்றே புரியவில்லை.

 

உள்ளுக்குள் எழுந்த அதிர்சசியோடு, “வெயிட் சித்து, ஐ லவ் யூ! இது உனக்குமே நல்லா தெரியும், என்ட் ஐ நோ யூ லவ் மீ! தென் எதுக்கு நீ ரோஷினி கூட…” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, நடனத்திற்கான பாடல் ஒலித்தது.

 

“ஆதிரா…” என்ற வருணின் குரலில் சித்தார்த் பட்டென்று அவள் கரத்தை உதறிவிட, “ஷெல் வீ…” என்று கேட்டடடடி வருணோ அவளை நோக்கி கரத்தை நீட்டினான்.

 

சித்தார்த்தை திரும்பி ஒரு பார்வைப் பார்த்தவள், வராத புன்னகையை வரவழைத்த வண்ணம் வருணின் கரத்தைப் பற்ற, அவன் மேடைக்கு அழைத்துச் சென்ற மறுகணம் ரோஷினியோடு அதே மேடைக்கு வந்தான் சித்தார்த்.

 

ஆண்களும் பெண்களும் ஜோடிகளாக நடனமாட, வருணோடு இணைந்து ஆடினாலும் ஆதிராவின் பார்வை சித்தார்த்தின் மீதே பதிந்திருந்தது.

 

அதை அவனும் அறியாமலில்லை. ஆனால் காரணமே இன்றி அவளை தவிர்க்க ஆரம்பித்தான் அவன்.

 

வருணோ அவளை நெருங்கி உரசிக்கொண்டு ஆட, ஆதிராவுக்கு ஒருபக்கம் அது வேறு அசௌகரியத்தைக் கொடுத்தது.

 

காதல் இல்லாமல் ஒரு ஆணின் தொடுகையை எந்தப் பெண்ணால் ஏற்க முடியும்!

 

நன்றாகத்தான் சென்றுக்கொண்டிருந்தது. சட்டென பாடல் நிறுத்தப்பட அத்தனை பேர் மத்தியில் ஆதிராவுக்கு முன்னே ஒற்றைக் காலை மடக்கியமர்ந்தான் வருண்.

 

கோர்ட்டிற்குள் வைத்திருந்த மோதிரத்தை எடுத்து, “ஐ லவ் யூ ஆதி” என்று அவன் நீட்ட, அத்தருணத்தை சுதாகரிக்கவே பெண்ணவளுக்கு சில நிமிடங்கள் எடுத்தன.

 

இத்தனை பேர் மத்தியில் அவன் காதலை சொல்வான் என்று அவள் அறிந்து வைத்திருந்தாளா என்ன!

 

ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தவளுக்கு அடுத்து என்னவென்று யோசிக்க கூட முடியவில்லை.

 

அவளுடைய பார்வை தானாக தன்னெதிரே பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை இட்டவாறு நின்றிருந்த சித்தார்த்தின் மீது பதிய, அவனுடைய முகமோ உணர்ச்சிகள் துடைக்கப்பட்டிருந்தது.

 

அவளுடைய விழிகள் அவனிடம் யாசிப்பது போல் தெரிந்தது. ஆனால், கண்டுகொள்ளாதது போல முகத்தைத் திருப்பிக்கொண்டான் அவன்.

 

ஒருபக்கம் திடுதிப்பென வருண் செய்த காரியத்தால் அவன்மேல் கோபம் எக்குத்தப்பாக எகிறியிருக்க, இன்னொரு புறம் தன்னை இப்படியொரு நிலையில் அம்போவென்று விட்ட தன்னவனின் மீது கொலைவெறியே வந்தது அவளுக்கு.

 

ஆனால், அக்கணம் சுற்றியிருந்து கத்தி கூச்சலிட்டுக்கொண்டிருந்த அத்தனை பேரையும் ஒரு பார்வைப் பார்த்தவள், விழிகளை அழுந்த மூடித் திறந்து தனக்குள் ஒரு முடிவெடுத்தவளாக வருணிடம் தன் கரத்தை நீட்டினாள்.

 

அவனுக்கோ அளவில்லா மகிழ்ச்சி.

 

அவள் விரலில் மோதிரத்தை போட்டுவிட்டதும் வருண் அவளை அணைத்துக்கொள்ள, வராத புன்னகையை வரவழைத்து புன்னகைத்தவள் சித்தார்த்தைத் தேட, அவன் அங்கு இருந்தால்தானே!

 

சுற்றியிருந்த அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிக்க, “எக்ஸ்கியூஸ் மீ!” என்று சொல்லிவிட்டு தன்னவனை தேடிச் சென்றவள் சிறு சந்தேகத்தோடு நீச்சல்குளம் இருக்கும் பக்கம் எட்டிப் பார்த்தாள்.

 

அவள் எதிர்பார்த்தது போல தண்ணீரை வெறித்தபடி அங்கு நின்றுக்கொண்டிருந்தான் சித்தார்த்.

 

“ஹ்ர்ம் ஹ்ர்ம்.. இங்க என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியுதா இல்லையா?” அவள் அழுகையை அடக்கிய குரலில் காட்டமாகக் கேட்க, பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்தவனோ அவளை அலட்சியப் பார்வைப் பார்த்தான்.

 

“எனக்கென்ன கண்ணு தெரியாதா? நடக்குறது எல்லாமே நல்லாவே தெரியுது. ஓ ஷீட்! எனிவேய் கங்கிராட்ஸ், வருண் உனக்கு நல்ல சாய்ஸ்தான்” என்று சித்தார்த் அவன் பாட்டிற்கு பேசிக்கொண்டு போக, வேகமாக அவனை நெருங்கி அவன் சட்டைக் காலரைப் பற்றினாள் ஆதிரா.

 

“என்ன பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறீயா, ப்ளீஸ் இப்படியெல்லா பேசாத! சத்தியமா பயமா இருக்கு. எனக்.. எனக்கு ஒரு உண்மைய மட்டும் சொல்லு, நீ என்னை காதலிக்கிறல்ல, சொல்லு சித்து”

 

ஆதிராவின் இதயம் ‘இல்லை’ என்று சொல்லிவிடுவானோ என்ற பயத்தில் படுவேகமாக அடித்துக்கொண்டது.

 

விழிகளில் வலியும் காதலும் போட்டி போட அவள் அவனையே பார்த்துக்கொண்டிருக்க, தன் சட்டையைப் பற்றியிருந்த அவள் கரத்தை உதறிவிட்டான் சித்தார்த்.

 

“ஆதிரா, ரிலாக்ஸ்! நான் எப்போவாச்சும் உன்ன காதலிக்கிறதா சொல்லியிருக்கேனா, கண்டிப்பா இருக்காது. எனக்கு இந்த கல்யாண வாழ்க்கையில சுத்தமா நம்பிக்கை இல்லை. பிடிச்சா பழகணும் இல்லன்னா விட்டுரணும். எந்தவொரு கமிட்மென்ட்ஸ்லயும் சிக்க கூடாது. இதுதான் நான்.. ஆனா நீ என்னடான்னா…”

 

அவன் விழிகளை எரிச்சலோடு உருட்ட, இவளுக்கோ அழுகை தொண்டையை அடைத்தது.

 

“அப்.. அப்போ அன்னைக்கு என்னை கிஸ் பண்ண. அந்த ஃபீலிங்ஸ் லவ் இல்லையா?” அவளுடைய வார்த்தைகள் தந்தியடித்தன.

 

அந்த கேள்வியில் சித்தார்த்தின் முகம் இறுக, அவனுடைய வார்த்தைகளில் அனல் தெறித்தது.

 

“லுக் ஆதிரா, இதையெல்லா நீ சீரியஸா எடுப்பேன்னு நான் நினைச்சும் பார்க்கல. நான் ரோஷினி கூடவும்தான் இருக்கேன், அதுக்காக அவ லவ்வு கல்யாணம்னு வந்துட்டாளா என்ன! ஓ காட்… உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்குறதுன்னே எனக்கு புரியல. நான் உன்ன கிஸ் பண்ணேன்தான், இல்லன்னு சொல்லல. பட் அதுல காதல் எல்லா இல்ல. ஜஸ்ட் ஃபீலிங்ஸ் அவ்வளவுதான்.

 

நான் எப்போவும் யாரையும் காதலிக்க மாட்டேன், உனக்கு என்மேல அந்த மாதிரி ஏதாச்சும் எண்ணம் இருந்தா ஐ அம் சோரி ஆதிரா.. வருண் உன்ன ரொம்ப காதலிக்கிறான், ஹீ இஸ் பர்ஃபெக்ட் மேட்ச்”

 

அவன் பேசிக்கொண்டே போக, இதயத்தை குத்திக் கிழிப்பது போல உள்ளுக்குள் வலித்தது அவளுக்கு.

 

விழிகளிலிருந்து விழிநீர் அருவியாய் ஓட, கண்ணீரை அழுந்தத் துடைத்தவள், “வருணுக்கு என்மேல ஃபீலிங்க்ஸ் இருக்குன்னு உனக்கு முன்னாடியே தெரியும், தெரிஞ்சுக்கிட்டுதானே என்னை கிஸ் பண்ண” என்று அழுத்தமாகக் கேட்க, அந்த கேள்விக்கு சித்தார்த்திடம் பதிலே இல்லை.

 

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவன் தடுமாற, அதைக் கண்டுகொண்டவளின் இதழ்களோ ஏளனமாக வளைந்தன.

 

சரியாக, “ஆதிரா…” என்ற வருணின் குரல் கேட்டதும் விருட்டெனத் திரும்பிப் பார்த்தவளுக்கு ஒருகணம் அதிர்ச்சியாக இருந்தாலும் அடுத்தகணமே அவனை அழுத்தமாககப் பார்த்தாள்.

 

“ஐ அம் சோரி வருண், எல்லார் மூன்னாடியும் நீ லவ்வ சொல்லும் போது நான் முடியாதுன்னு சொன்னா அது எந்தளவுக்கு உனக்கு அவமானமா இருந்திருக்கும்னு நான் யோசிச்சதாலதான் அத்தனை பேர் முன்னாடியும் சரின்னு சொன்னேன், பட் எனக்.. எனக்கு உங்கமேல காதல் இல்ல, ஐ லவ் சித்தார்த்”

 

அவள் உண்மையை உடைத்துவிட்டு சித்தார்த்தை திரும்பி எரிக்கும் பார்வைப் பார்த்தாள்.

 

அவனுக்கு அந்த பார்வையில் தெரிந்த கோபம் அவன் செய்த தவறை குத்திக் காட்டுவது போலிருக்கவும், உடனே முகத்தை திருப்பிக்கொள்ள, அதற்குமேல் அங்கு நிற்காமல் ஹோட்டலிலிருந்து வெளியேறினாள் ஆதிரா.

 

வருணுக்கு அவள் தன்னை மறுத்ததை நினைத்து வேதனைதான், ஆனால் வேறுவழி..

 

சித்தார்த்தை அதிருப்தியோடு ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அவன் சென்றுவிட, தலையை அழுந்தக் கோதிக்கொண்டவனோ , “ஷீட்!” என்று கோபத்தில் காலை தரையில் உதைத்தான்.

 

வீட்டிற்குள் நுழைந்த ஆதிரா சோஃபாவில் தனக்காக காத்திருந்த தோழியை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.

 

“ஆதி… என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட, என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” நிஹாரிகாவின் வார்த்தைகள் காற்றில் கரைந்த கற்பூரமாகிப் போக, காதிற்கும் வாங்காதது போல தனதறைக்குள் நுழைந்து கதவை அடித்துச் சாத்தினாள் அவள்.

 

நிஹாரிகாவுக்கு ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தது, கதவை தட்டிப் பார்த்தவள் அவளிடமிருந்து பதில் வராததில் அவளுக்கு தனிமையை கொடுத்துவிட்டு நகர்ந்துவிட, அறைக்குள் கால்களை கட்டிக்கொண்டு கதவின்மேல் சாய்ந்தமர்ந்திருந்தாள் ஆதிரா.

 

தனக்குள் ஏற்பட்ட காயத்தையும் வலியையும் கண்ணீரால் அவள் குணப்படுத்த முயற்சிக்க, அவளுடைய முயற்சி என்னவோ தொல்விதான்

 

“ஏன் சித்து இப்படி பண்ண, என் ஃபீலிங்க்ஸ் கூடதான் விளையாடுவியா? நீ பழகுற பொண்ணுங்களும் நானும் ஒன்னா? என்னால உன்ன ஈஸியா கடந்து போக முடியலடா”

 

வேதனையில் துடித்த மனதை அடக்க, ஒரு மூச்சு அழுதுத் தீர்த்தாள். அப்போதும் மனம் ஆறவில்லை.

 

அன்றைய இரவு தன்னவனை நினைத்து எத்தனை மணிநேரம் அழுதிருப்பாளோ!

 

அடுத்தநாள் காலை, அறையிலிருந்து வெளியில் வந்த ஆதிராவிடம் நிஹாரிகா எதுவும் கேட்கவில்லை.

 

அவளும் தோழியை நிமிர்ந்தும் பார்க்காமல் அவள் பாட்டிற்கு வீட்டிலிருந்து வெளியேறியிருக்க, சரியாக தன் மகளை சந்திக்க வென்று  சென்னை பஸ் நிலையத்தில் இறங்கினார் மார்த்தாண்டம்.

 

 

************

 

கதை எப்படி போகுதுன்னு மறக்காம உங்க கருத்த சொல்லிருங்க டியர்ஸ்… 😍😍

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!