Skip to content
Post Views: 5,797
அதிகாலை ஐந்து மணி.
மது வழக்கம் போல் ரகு எழும் முன் எழுந்து குளித்து விட்டு, பாத்ரூமுக்கு அருகில் உடை மாற்ற தோதாக இருக்கும் இடத்தில், தான் முந்தின நாள் இரவே அயர்ன் பண்ணி எடுத்து வைத்து விட்டுப் போன சாரி ப்ளவுசை காணாது திடுக்கிட்டாள்.
குளிக்க போகும் முன் பார்த்தேனே இருந்துச்சே!.
ஒரு வேளை எடுத்து வச்ச நினைப்புல குளிக்கப் போயிட்டோமோ என்று குழம்பியபடியே உடம்பில் டவலை சுற்றிக் கொண்டு வெளியே எட்டிப் பார்த்தாள்.
Advertisement
ரகு இன்னும் அசந்து தான் தூங்கிக் கொண்டிருந்தான்.
மெல்ல வெளியே வந்து அயர்ன் பண்ணும் டேபிளில் பார்த்தாள்.
அங்கு இல்லை! அப்ப எங்க வச்சோம்?
Advertisement
சத்தமிடாமல் வார்ட்ரோபை திறந்தாள்.
Advertisement
ஆனால் அது பூட்டப்பட்டிருந்தது!
இத எப்போதுமே பூட்டுவதில்லையே குழப்பத்துடன் அவனின் வார்ட்ரோபை திறக்க முயன்றால் அதுவும் பூட்டியிருந்தது.
சாவி எங்கே என்று தேட, அது ரகுவின் பில்லோ கவரில் துருத்திக்கொண்டு வெளியே தெரிந்தது.
Advertisement
இவன் தான் பூட்டி சாவியை தன் பில்லோ கவரில் போட்டு வைத்துள்ளான்!
மெல்ல அதை உருவி எடுக்க முயன்ற போது, அவன் விழித்துக்கொண்டு அவள் கையைப் பிடித்துக் கொண்டு விட்டான்!
“ஏய், யார் அது?” என்றபடி
“ஹ்ம்ம் திருடன்.. சாவியை கொடுங்க, எதுக்கு இத போய் பூட்டி வச்சுருக்கீங்க?”
அவன் கண் விழித்து அவளை பார்த்து விட்டு, “வாவ் சூப்பர் டார்லிங்! தினமும் இப்படியே வந்து என்னை எழுப்பு! கண்ணுக்கு குளிர்ச்சியாய்!”
அவள் கடுப்பாகி, “சாவியை கொடுங்க, நான் கிளம்பனும்! இன்னிக்கி நான் காண்டீன் போகணும்!
உங்களுக்கு என்ன கலியுக கண்ணன்ன்னு நினைப்பா? ட்ரெஸ்ஸ எடுத்து ஒளிச்சு வைக்கறீங்க?”
“நான் கண்ணன் எல்லாம் இல்லடி! ராமன்! உன்னோட ராமன்!
ஏக பத்தினி விரதன்! ஏகத்துக்கும் கோபமா இருக்கிற பத்தினியோட புருஷன்!”
“காலங்கார்த்தால இந்த டயலாக் எல்லாம் வேணாம் கீய (Key) கொடுங்க முதல்ல!”
“உண்மையை சொன்னா டயலாக் ன்னு சொல்ற?
சரி இந்தா பிடி!” என்று தூக்கிப் போட, அது சரியாக அவளின் டவலின் உள்ளே விழுந்து விட்டது!
“ஹேய். நான் சும்மா தான் தூக்கிப் போட்டேன் அது அங்க போய் விழுந்துடுச்சு! முறைக்காதே!”
“ம்ம்.. கொடுத்து வச்ச சாவி!”
அவள் முறைத்து விட்டு திரும்பி நின்று சாவியை எடுத்து, வார்ரோபை திறந்து, அவள் புடவையை எடுத்துக் கொண்டு பாத்ரூம் உள்ளே சென்றாள்.
—————
ஹாஸ்பிட்டல்.
மதிய வேளை.
“ஹாய் பொண்டாட்டி , சீக்கிரம் ஜூஸ் எடுத்துட்டு வாடி!” போனில் பழைய மாதிரியே மதுவை அழைத்தான் ரகு!
இருவருமே, திருமணத்திற்கு பின் இன்று தான் ஹாஸ்பிட்டல் வந்திருந்தனர்.
ரகு எப்போதும் போல் இருக்க, மதுவிற்கு தான் பல சங்கடங்கள்!
அங்கிருந்த பலருக்கும் அவளை எப்போதும் போல் மது என்று அழைப்பதா? இல்லை மேடம் என்று அழைப்பதா என்ற சந்தேகம்!
வாட்ச்மேன் தொடங்கி, கமலா மேடம் வரை!
அவள் எப்போதும் போல் எல்லோரிடமும் புன்னகைத்து விட்டு உள்ளே போனாள்.
அங்கே கீதா தான் இதுவரை எல்லா பொறுப்புகளையும் மதுவின் இடத்திலிருந்து பார்த்து கொண்டிருந்தாள்!
மதுவைப் பார்த்ததும் உற்சாகமாய், “ஹாய் மதுக்கா? எப்படி இருக்கே?” என்று நலம் விசாரித்து விட்டு, அன்றைக்கு செய்யவிருந்த வேலைகள் பற்றி அப்டேட் செய்தாள்.
மதுவும் கேண்டீன் உணவு தயார் ஆவதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது தான் ரகுவின் போன், பழைய மாதிரி, வழக்கமாக அவன் அழைக்கும் அதே நேரத்தில்!
“என்ன டாக்டர்.. அதிகாரமெல்லாம் தூள் பறக்குது! கொஞ்சம் அடக்கி வாசிங்க!”
‘என்ன? அடக்கி வாசிக்கணுமா, இதோ நானே நேரே அங்க வந்து வாசிக்கறேன்!”
“அய்யோ வேண்டாம், நானே வந்து தொலைக்கறேன்!”
“ஏய்! என்ன வாய் ரொம்ப நீளுது! முதல்ல நீ இங்க வா டார்லிங், அப்புறம் பாரு என் ஆட்டத்தை!”
ஜூஸ் கொண்டு போனாள்.
கையில் எக்ஸ்ட்ராவாக ஒரு சுகர் பாக்கெட் வேறு!
அவன் ரூமிற்கு சென்று அவனிடம் ஜூசை கொடுத்த போது, அவன் கேட்டான். “என்ன அது கையில்?”
“அதுவா நாட்டு சக்கரை!”
“எதுக்கு?”
“ம்ம். எப்படியும் நீங்க ஜூஸ் குடித்து விட்டு இனிப்பு பத்தலைன்னு சொல்வீங்க!
நான் கரெக்டா தான் போட்டுருக்கேன்ன்னு சொல்வேன்.
நீயே குடிச்சுப் பாரு நான் என்ன பொய்யா சொல்றேன்னு சொல்லி என்னை குடிக்க வைப்பீங்க, நான் குடிச்சிட்டு கரெக்டா தானே இருக்குன்னு சொன்னா,
ஆமா நீ குடிச்சுட்டு தந்ததால் இப்ப சுகர் கூடிருக்குன்னு ஒரு பழைய சிவாஜி காலத்து மொக்கைய போடுவீங்க!
பழைய மொக்கை போடுவதில் உங்கள அடிச்சுக்க ஆள் இல்லன்னுனு தான் நேத்தே அந்த வைஷ்ணவி மேட்டர்ல நீங்க பண்ணுனதில் தெரிஞ்சுடுச்சே!”
“அத மொக்க டயலாக் எல்லாம் கேக்க வேணாம்னு தான் இத முன் கூட்டியே எடுத்து வந்துட்டேன்!”
“ஓ ரொம்ப உஷார்தான் மேடம் நீங்க!” சொல்லிவிட்டு ஜூசை குடித்தான்.
அவள் இந்த ரூமிற்குள் நுழைந்த போது, கல்யாணத்திற்கு முன் இங்கு அவன் செய்த சேட்டைகள் எல்லாம் அவளுக்கு நினைவுக்கு வந்தது.
இப்போதும் அவன் அவற்றை எல்லாம் செய்யக்கூடும் என்று அவள் கொஞ்சம் உஷாராக தான் இருந்தாள்.
ஆனால் அவனோ ஒன்றுமே செய்யாமல், நிஜமாகவே ஜூஸ் தாகம் எடுத்து தான் அவளை கொண்டு வர சொன்னவன் போல் குடித்து முடித்தான்.
அவள் ஜூஸ் டம்ளரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
மனதுள் “பரவாயில்ல பய புள்ள திருந்திட்…” என்று எண்ணி முடிப்பதற்குள் அவள் உடல் அவனின் கைகளின் சிறையில்!
உதடுகளோ அவனின் வாய் சிறையில்!
“ஷ்.. வலிக்குதுடா டாக்டர்! விடுடா.. ஷ்..ப்பா! அவள் உதடுகளை தடவிக் கொண்டு மெல்ல கத்தினாள்.
“இந்த வாய் தானே, நேத்து என்னை அப்படி திட்டியது! அதை..”
மீண்டும் ஒரு வன் முத்தம் அவள் இதழ்களில்!
“என்ன சொன்ன? எல்லாத்துக்கும் சார்ஜ் பண்ணுவியா?
பண்ணிக்கோ இந்தா..” அவன் பான்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு ஐநூறு ரூபாய் எடுத்து, அவள் ஜாக்கெட்டில் வைத்து விட்டான்.
“போ, போய் எனக்கு பிடிச்ச அந்த ஜாதி மல்லியை வாங்கி தலை நிறைய வச்சுட்டு மாமாவுக்காக நீ வெயிட்பண்ணு, நான் சீக்கிரம் வந்துடுறேன்!”
“நீ இந்த ரகு நந்தனை ஹீரோவா தானே ! உன் பாஷையில் மொக்க ஹீரோவதானே பார்த்திருக்க?
இன்னிக்கு ரகுவரனா பார்ப்ப? அதாவது வில்லனா பார்ப்ப?
அதுவும் எப்படி ரொம்ப்ப.. வயலண்டா!”
அவள் அதிர்ந்து போனாள்!
ரகு இப்படிக் கூட பேசுவானா?
அவள் வெளியே வந்த போது, ரிசப்சன் அருகே தர்ஷினி ஒரு அம்மாவோடும், அது அவள் அம்மாவாக இருக்க கூடும் ஒரு சின்ன பெண்ணோடும் கொஞ்சம் கவலையோடு பேசிக் கொண்டிருந்தாள்.
அந்த சின்ன பெண்ணின் கழுத்தில் புதிதாக கட்டப்பட்ட தாலி சரடு!
ஆம், மதுவின் திருமணம் அன்று தான் தர்ஷினி அவள் தங்கைக்கும் திருமணம் என்று சொல்லியிருந்தாள்.
இப்போது அந்த பெண் மட்டும் தனியே வந்துருக்கா? அவள் புருஷன் எங்கே!
இப்போது போக வேண்டாம். அவர்கள் இங்கிருந்து போன பின் விசாரிக்கலாம் என்று மது நினைத்துக் கொண்டு காண்டீன் சென்றாள்.
பின் கொஞ்ச நேரம் கழித்து அவள் தர்ஷினியை அழைத்து விசாரித்தாள்.
தர்ஷினி சொன்னாள். அந்த சின்ன பெண் அவளின் தங்கை தான்.
அவள் யு ஜி முதல் வருடம் தான் படித்துக் கொண்டிருந்தாளாம்.
இவர்களின் அத்தை, அப்பாவிடம் வந்து விடாப்பிடியாக பேசி, மண்டையை கழுவி, அவள் மகனுக்கு தர்ஷினியின் தங்கையை, படித்துக்கொண்டிருந்த சின்னப் பெண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைத்து விட்டாள்.
“என்ன அவசரம்? அவள் டிகிரி படித்து முடிக்கட்டுமே” என்றதற்கு,
“நீ இப்படி தான் தர்ஷினிய பெண் கேட்டப்போ சொன்ன,
ஆனா என்ன ஆச்சு, அவ படிச்சு முடிச்சதும் எவனோ ஒருத்தனை லவ் மேரேஜ் பண்ணிகிட்டா!
இப்ப இவளையும் அப்படியே சொல்ற!
என் பையனுக்கு நீயே பொண்ணு தரலைன்னா, நான் வெளியே எப்படி போய் பொண்ணு கேப்பேன்” என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து தான் இந்த கல்யாணம் நடந்தது.
“சரி தர்ஷினி, இப்ப என்ன ப்ராப்ளம்?”
“அது.. வந்து.. இவ ரொம்ப சின்ன பொண்ணுல்ல, அவ புருஷன் எடுத்தவுடனே ரொம்ப போர்சா இவ கிட்ட நெருங்கி இருப்பான் போல, இவ கத்திட்டா!”
“அப்புறம் என்னாச்சு?”
“அவ புருஷன், ரொம்ப கோபமாயிட்டனாம்!
நேரே வெளியே வந்து எங்க அம்மாவைப் பார்த்து, பெரியவங்கன்னு கூட பார்க்காம, மாமா பொண்டாட்டின்னு கூட மரியாதை இல்லாம,
என்ன.. உங்க பொண்ணுக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுத்து அனுப்ப மாட்டீங்களான்னு ஒரே சத்தம் ..சண்டையாம்!”
“எங்கம்மாவுக்கு ஒரு மாதிரி அசிங்கமா போச்சு! ஒரு பக்கம்! என் தங்கச்சிய நினச்சி கவலை ஒரு பக்கம்!
“அவ பாவம்.. படிச்சுட்டு இருந்த சின்னப் பொண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணமும் செய்துகிட்டு , இப்ப இதுக்கு வேற இப்படி பறக்குறான் அவன்!
என்ன ஜென்மங்களோ இதுங்க எல்லாம்!
நான் அதுங்க கிட்ட இருந்து தப்பிச்சுட்டு, என் தங்கச்சிய பலியாக்கிட்டனோன்னு ஒரே கில்டியா இருக்கு மது!”
“எதுக்கும் வைஷு டாக்டர் கிட்ட அட்வைஸ் கேட்டுட்டு முடிவெடுக்கலாம்னு தான் இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்!”
மது அதிரிச்சியில் விக்கித்து போனாள்!
“ச்சே.. இப்படி கூட ஆண்கள் இருப்பார்களா?
சின்ன பொண்ணு தானே அவள்! கொஞ்சம் நாள் வெயிட் பண்ணினா தான் என்ன? பறக்காவட்டி பயல்!”
அப்போது தான் அவளுக்கு ரகுவின் அருமை கொஞ்சம் தெரிந்தது!
அவன் அப்படி பேசியது தப்பு தான் என்றாலும், இப்போது தான் நடந்து கொண்டு இருப்பது மட்டும் யோக்கியமா?
அவனை நெருங்க விடாமல் செய்து கொண்டிருப்பதோடு, தினமும் வார்த்தையால் குத்தி கொன்று கொண்டல்லவா இருக்கிறாள்!
ஆனால்,
இன்று அவன் பேசியது?
அப்போ அவனும் இன்று அப்படி நிஜமாலுமே அப்படி வயலன்ட்டா நடந்துப்பானா?
அய்யோ, நான் தான் அவனை இப்படி கொண்டு வந்து நிறுத்தியிருக்கேன்! பேசி பேசி திட்டி திட்டி..
அவள் ஜாக்கெட்டில் அவன் வைத்து விட்ட நோட்டு உள்ளே உறுத்தியது!
இரவும் வந்தது.
அவள் பயந்த படியே அவன் சொன்னது போல பூ எல்லாம் வைத்துக் கொண்டுதான் காத்திருந்தாள்.
அவன் வந்தான். ஒன்றும் பேசவில்லை.
கொஞ்ச நேரம் போன் பார்த்துக் கொண்டு இருந்து விட்டு படுத்து தூங்கியே விட்டான்.
அவன் தூங்கி விட்டான் என்று நன்கு தெரிந்தாலும் மதுவால் நிம்மதியாக தூங்க முடியவில்லை!
அவனை நம்ப முடியாது.
திடீரென்று எதிர்பார்க்காத போது ஏதாவது செய்து விடுவான்!
அந்த பயம் மதுவுக்கு!
அவள் தூங்காமல் ரொம்ப நேரம் விழித்திருந்து விட்டு, விடியற்காலையில் தான் தூங்கினாள்.
அவள் கண் விழித்த போது, அவன் குளித்து முடித்து ஹாஸ்பிட்டல் கிளம்பி கொண்டிருந்தான்!
மணி பார்த்தாள்.
எட்டரை!
அய்யோ! என்று அலறியடித்து எழுந்தாள் மது!
“என்ன? மது மேடம் ராத்திரி பூராவும் தூங்கல போல?”
அவள் அவனை முறைத்தாள்!
அவன் கோபமாக அவளிடம் “என்னமோ என்னை நல்லா புரிஞ்சு வச்சுருக்கேன் அது இதுன்னு சொல்லிட்டு இருப்பியே!”
“நீ என்ன புரிஞ்சு வச்சுருக்க லட்சணம் இது தானா?”
“நான் உன்கிட்ட போய் வயலன்ட்டா நடப்பேனா? இது வரைக்கும் எப்பவாவது அப்படி நடந்துருக்கேனா? சொல்லுடி!”
“என்னன்ன பேசுன? உன் உடம்பு மேல தான் ஆசை, ஈர்ப்பு.. உன் மேல லவ் எல்லாம் இல்ல.. அபெக்ஸன் இல்ல! அப்பப்பா..”
“அப்படி உன் உடம்பு தான் எனக்கு வேணுமின்னா, நான் உன்கிட்ட எப்படி வேணுமின்னாலும் நடந்துட்டு இருக்கலாம்.”
“நான் பண்ணின தப்பு.. அன்னிக்கு உன்கிட்ட அப்படி பேசுனது தப்பு தான்! நான் அத மறுக்கவே இல்லை!
நான் பண்ணின மிகப்பெரிய லூசுத்தனம் அது!”
“உன் மனக்காயமும் பெருசு தான் ஒத்துக்கிறேன்!”
“அது ஆறட்டும் தாண்டி நானும் வெயிட் பண்றேன்! புரிஞ்சுக்கோ!”
“என்னால அந்த ஹனுமான் மாதிரி எல்லாம் நெஞ்ச கிழிச்சு காட்ட முடியாது!”
“ஆனா, நீ இப்ப விடிய விடிய பயந்துட்டு உட்கார்ந்து இருந்தத பார்த்த போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடி!
ரொம்ப அவமானமா கூட இருக்கு!
“நான் இன்னிக்கு சும்மா உன்னை பிரான்க்(Prank) தான் பண்ணியிருப்பேன்னு நீ புரிஞ்சிட்டு எப்பவும் போல தான் இருப்பன்னு நான் நினைச்சேன்!
ஆனா நீ இப்படி விடிய விடிய பயந்துட்டு உட்கார்ந்துட்டு இருக்க!
நீ என்னை அவ்வளவு தான் புரிஞ்சு வச்சுருக்க இல்ல?
உன் நந்துவ நீ அவ்வளவு சீப்பா நினச்சுட்டு இருக்க இல்ல?
இத்தனை நாள் பார்த்ததுல, நான் உன் மனசுல கொஞ்சம் கூட நல்லவனா தெரியலையா மது!
அவ்வளவு மோசமான இமேஜ் தானா எனக்கு உன்னிடம்? ரொம்ப வலிக்குதுடி!”
அவள் அதிர்ந்து தான் போனாள்!
இந்த அளவா காயப்படுத்தி இருக்கோம் இவனை?
அவன் செய்தது தெரியாமல் செய்த தவறு!
அவனின் ஈகோ குணத்தால், மே பி அந்த பார்த்தியின் தூண்டுதலால் கூட அவன் பேசியிருக்கலாம்!
ஆனால் இவள் பண்ணிக்கொண்டிருப்பது!
தெரிந்தே செய்யும் தவறு! வேண்டுமென்றே அவனை தொடர்ந்து காயப்படுத்தி கொண்டு!
ஊர் உலகத்தில் எப்படி எப்படியோ எல்லாம் ஆம்பிளைங்க இருக்காங்க, இந்த தர்ஷினியின் தங்கை கணவன் மாதிரி!
ஆனால்.. இவனை நம்ப தானே இவள் மனம் மறுக்கிறது! பயப்படுகிறது!
ஆசையாய் கை கோர்த்து காதல் வானில் அவனோடு பறக்க அவளுக்கும் ஆசை தான்!
ஆனால் அப்படி பறக்கையில், மீண்டும் மேலே இருந்து எப்ப வேண்டுமானாலும் கீழே தள்ளப்பட்டு விடுவோம் என்று பயம்!
இனி அதை தாங்கும் சக்தி தனக்கு இல்லையே!
மது பெரும் குழப்பத்தில் இருந்தாள். அது அவளுக்கு மிகவும் மனச் சோர்வை கொடுத்தது!
அங்கே அவன் நிலையும் அது தானே!
மது எப்போது அவனை முழுவதும் நம்புவாள்?
error: Content is protected !!