Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வேள்வி செய்கிறாய் விழியிலே

வேள்வி செய்கிறாய் விழியிலே – 2.1

ஒரு வாரம் முன்,

“என்ன வெங்கடேஷ் சொல்ற? அந்த மது, நம்ம ஹாஸ்பிட்டல் கான்டீன் காண்ட்ராக்ட்டுக்கு ஏற்கனவே அப்ளை பண்ணி ரிஜெக்ட் ஆனவளா?”

கோபத்தில் ரகு நந்தனின் முகம் சிவந்தது!

ஆமா சார், அவங்க பர்சனல் இன்போர்மேசன்களை நம் சிஸ்டத்தில் ஏற்றும் போதுதான் தெரிந்தது!



Advertisement

ரகுநந்தன் ராமநாதன் – நகரத்தின் பேர் சொன்னால் அறியக் கூடிய பிரபல டாக்டர்!

காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட்– Gastroenterologist  – இரைப்பை குடல் சம்பந்தமான நோய் களையும் நிபுணன்!

அவன் குடும்பமே டாக்டர் குடும்பம்! அப்பா, பெரியப்பா, தாத்தா, அத்தை, மாமா, அக்கா, அத்தான், அண்ணன் அப்புறம் அண்ணி கூட!

Advertisement

நகரின் புறநகர் சென்னை  பைபாஸ் சாலையில்  அமைந்து இருந்தது அவர்கள் மருத்துவ சாம்ராஜ்ஜியம்!

Advertisement

அவன் இரைப்பை நோய் சம்பந்தப்பட்ட டாக்டர் என்பதால், ஹாஸ்பிட்டல் கான்டீன் காண்ட்ராக்ட் மட்டும் அவன் கட்டுப்பாட்டில் இருந்தது!

மற்ற மானேஜ்மென்ட் விசயங்களை எல்லாம் அவன் அண்ணன் டாக்டர் ராகவன் தான் பார்த்துக் கொள்வான்!

இப்போ அந்த  காண்டீன் காண்ட்ராக்ட் எடுத்து இருப்பவள் மேல் தான் இவ்வளவு கோபம் அவனுக்கு!

Advertisement

அவள் எங்கே எடுத்தாள்?

இவர்கள் அல்லவா கூப்பிட்டு கொடுத்தார்கள்!

கொடுக்கும்படி செய்து விட்டாளே!

கடைசியில்,  நாம் ஏற்கனவே ரிஜெக்ட் செய்த ஒருவளுக்கா, நாம் வலிய போய் டீல் பேசி, தாம்பாளத்தில் வைத்துக் கொடுப்பது போல காண்ட்ராக்ட்டை கொடுத்து இருக்கோம்?

பேசப்போன ஹாஸ்பிட்டல் அட்மின் ஆபிசர் கமலா ஆண்ட்டி கூட இதைப் பற்றி சொல்லவே இல்லையே!

என்னமோ அவன் சொல்வதற்காகவே காத்து இருந்த மாதிரி ஓடிப்போய் அவளிடம் காண்ட்ராக்ட் போட்டு விட்டு வந்து விட்டாரே!

“பெரிய கை காரி தான் போல இந்த மது!

உன் க்ளோஸ் பிரெண்ட் நான் எடுத்து இருந்த காண்ட்ராக்ட்டை எப்படியோ என் கிட்ட இருந்து பிடுங்கி விட்டாளே!” என்று ஏற்கனவே அங்கே காண்டீன் நடத்தி வந்த   அவன் ஸ்கூல் பிரண்ட் பார்த்திபன் சொல்லியிருந்தான்!

எங்கேயோ அவமானப்பட்டு போனதுபோல் ஆனது அவனுக்கு!

அந்த பெண்ணின் மேல் அளவு கடந்த ஆத்திரம் ஏற்பட்டது!

அவள்..அந்த பெண்!

மதுமிதா – மில்லெட் மது!

சிறு தானிய உணவு தயாரிப்பதில் ஸ்பெஷலிஸ்ட்! அவார்ட் வின்னர்!

குறைச்சல் இல்லை!

அவள் ஏற்கனவே இங்கு அப்ளை பண்ணி ரிஜெக்ட் ஆன விஷயம் ஒருவேளை அண்ணன் ராகவனுக்கு தெரியாதோ?

அது தெரியாமல் தான் அவன் இந்த காண்ட்ராக்ட்டை அவளுக்கு கொடுத்து விட்டானா?

போனை கட் செய்து விட்டு, நேரே அண்ணன் ராகவன் கேபினுக்கு சென்றான் ரகு நந்தன்!

“அந்த மது நம்ம ஹாஸ்பிட்டல்ல காண்டீன் காண்ட்ராக்ட்க்கு ஏற்கனவே அப்ளை பண்ணி ரிஜெக்ட் ஆனவ தெரியுமா உனக்கு?” என்றான் கோபமாக!

“தெரியும்!” ராகவனின் பதில் வந்தது வெகு நிதானமாய்!

“தெரிஞ்சுமா அவளுக்கு காண்ட்ராக்ட் கொடுத்து இருக்க?

 அதுவும் நான் ரெகமன்ட் பண்ணி காண்ட்ராக்ட் கொடுத்த என் பிரண்ட டெர்மினேட் செஞ்சுட்டு!

அதுவும் என்னை விட்டே கமலா ஆண்டிக்கிட்ட பேச வச்சு! அவளுக்கே காண்ட்ராக்ட் கொடுக்க வச்ச!”

“அவ ரிஜெக்ட் ஆனதுக்கு பெரிசா ஒண்ணும் காரணம் இல்லை! நான் வெஜ் சமைக்க தெரியாதுன்னு மென்சன் பண்ணியிருந்துருக்கா அதான் ரிஜெக்ட் ஆகிட்டா!”

“ரொம்ப வருஷமா நல்ல ஹோட்டல் நடத்துன பாரம்பர்ய குடும்பத்துப் பெண்! அவங்க ஹோட்டல் பத்தி அந்த ஏரியாவில் விசாரித்தேன்!  ரொம்ப நல்லா தான் சொல்றாங்க!

நல்ல எத்திக்ஸ் வச்சு இருக்கு அந்த பொண்ணு!  புட் அண்ட் நியூட்ரிசியன் படிச்சுருக்கா!

மில்லெட்ஸ் வச்சு வித விதமா டேஸ்டியா சமைக்கிறா! ஹெல்தியா சாப்பாடு போடணும்னு கொள்கையோட இருக்கா!”

“உன் பிரண்ட மாதிரி புட் பிசினெஸ் ஹண்ட்ரட் பெர்சன்ட் லாபம் தரும் தொழில்னு இத அவ நினச்சுட்டு வரல! “

“உன் பிரண்ட் கிட்ட குறைஞ்ச பட்ச டிசிப்ளின் கூட இல்ல..  டெடிகேசனும் இல்ல! லாபம் மட்டும் தான் அவன் டார்கெட்!”

“அவனோட FSSAI லைசென்ஸ் (உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி சான்று)கூட அவனோடது இல்ல தெரியுமா? இதை கூட நீங்க செக் பண்ணலையான்னு அவ கேட்டபோ எனக்கு ஒரு மாதிரி ஆகிட்டுது!”

ஆமாம் பார்த்திபன் காண்டீன் நடத்த எடுக்க வேண்டிய FSSAI லைசென்ஸ்

கூட வாங்க வில்லை!

அவனிடம் வேலை செய்த குக்கின் பெயரில் உள்ளதை தான் அவன் இங்கு மாட்டி வைத்து இருக்கிறான்!

“சார் அது வெறும் ரெஜிஸ்டரேசன் தான்! என் வொய்ப் வீட்டுல வச்சு மசாலா பொடி பிஸ்னெஸ் செய்யுறா.. அதுக்கு வாங்கியது!

காண்டீன் நடத்துவதற்கு வேற மாதிரி மென்சன் பண்ணி  வாங்கணும்! ஒரு அரை மணி நேர ஆன்லைன் வேலை தான் சார்!

 உங்க பேர்ல வாங்கிடுங்க அது தான் ஸேப்! “

சொன்ன அவனை “போடா ரூல்ஸ் ராமனுஜம்! இங்க எவன் வந்து கேட்க போறான்? பாக்க போறான்!

இத எடுத்து காட்டினால் கூட வாங்கி முழுசா படிக்க தான் போறானா? விடு பார்த்துக்கலாம்!” என்று சொல்லி விட்டான் அந்த பார்த்திபன் அப்போது!

இதையும் ராகவனிடம் சொல்லி விட்டாள் மது!

அந்த குக் ஒரு நாள் இவளை மார்க்கெட்டில் பார்த்த போது புலம்பியது இது!

“இப்ப அவ மட்டும் என்ன சாரிட்டியா(Charity) நடத்த போறா?”

ரகுவின் ஈகோ அவளை அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்க விட வில்லை!

“இதுக்கு அவ சொன்ன பதிலையே நான் உனக்கு சொல்றேன் கேட்டுக்கோ” ராகவன் அவர்களுக்குள் நடந்த பேச்சை அப்படியே சொல்ல ஆரம்பித்தான்!

“சார் நானும் ஒண்ணும் லாபமே இல்லாம நடத்த போறதில்லே தான்! ஆனா எங்க மாமா சொல்லுவாங்க நம்ம கிட்ட சாப்பாடு வாங்கி சாப்பிடறவங்க வயிறு வாழ்த்தும்படி நல்ல தரமான சாப்பாடு போடணும்! அப்படி செஞ்சாலே கூட  நியாயமான லாபம் வர்ற தொழில் தான் இது!”

“ஏம்மா இப்படி இவ்வளவு நியாயம் தர்மம் எத்திக்ஸ் பத்தி பேசுற நீ, எப்படி ஒருத்தன் காண்ட்ராக்ட் எடுத்து நடத்திட்டு இருக்கிற பிசினெஸ்சை கெடுக்கிற மாதிரி எதுக்கு எங்க ஹாஸ்பிடல் அருகே உன் புட் ட்ரக்கை  வைத்து பிஸ்னெஸ் பண்ற?”

“சார் உங்க ஹாஸ்பிட்டல் பேசன்ட்களும் சரி அட்டெண்டர்களும் சரி, இந்த ஏரியாவில் ஒரு நல்ல ஹெல்த்தியான சாப்பாடு கிடைக்காம கஷ்டப் பட்டுட்டு இருந்தாங்க!

இங்கே சுற்றி சுற்றி பாஸ்ட்புட் கடைகளும் பிரியாணி கடைகளும் தான் இருக்கு!

உங்க காண்டீன் சாப்பாடும் நல்லா இல்ல! அவங்களுக்கு நல்ல புட் கொடுக்கணும்னு தான் சார் நான் இங்கே வண்டியை நிறுத்தி இருக்கேன்!

மற்றபடி நான் வேற எங்க நிறுத்தினாலும் எனக்கு பிசினெஸ் நடக்கும்!”

“உங்க பிரதர் டாக்டர் ரகு நந்தன் ஒரு  காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட்! அவர்  ஹெல்தி புட் எடுத்துக்க வேண்டிய அவசியம் பத்தி அடிக்கடி ஆர்டிக்கிள்ஸ் எழுதுவார் .. யூட்யுபில் பேசுவார் என்று என் சிஸ்டர் சொன்னாள்! ஆனா நான் பார்த்து இல்லை! “

“டிசிப்ளின் சொல்லித் தர டீச்சர்க்கே டிசிப்ளின் இல்லன்னா எப்படி நல்லா இருக்காதோ அது மாதிரி தான் இருக்கு இதுவும்!”

 ஊருக்கே அட்வைஸ் பண்ற டாக்டரின் ஹாஸ்பிட்டலிலேயே தரமான புட் இல்லைனா எப்படி சார்? எதிர்க்கேள்வி கேட்ட மதுவுக்கு பதில் சொல்ல முடியாமல் பேச்சிழந்து போனான் ராகவன்!

சொல்லி முடித்த ராகவன், “இப்ப என்ன சொல்ற இதுக்கு?”

ரகுவின் அறிவு அதில் உள்ள உண்மையை, நியாயத்தை  உணர்ந்தாலும் அவனது ஈகோ ஏற்றுக்கொள்ள மறுத்தது!

முகத்தை உர்ர்ரென வைத்துக்கொண்டு இருக்க, அவனைப் பார்த்து சிரித்த ராகவன், “நீ சரிப்பட்டு வர மாட்டே! சொல்றவங்க சொல்ற மாதிரி சொன்னாதான் கேப்ப!” என்று போனில் அவன் மனைவி வைஷாலியை அழைத்தான்!

வைஷாலி ஒரு கைனகாலஜிஸ்ட் – மகப்பேறு மருத்துவர்!

அவள் அவன் ரூமுக்கு வந்தாள்!

“என்னப்பா? என்ன அவசரம்! நான் ஓபி பார்த்துட்டு இருக்கிற போது கூப்பிட மாட்டீங்களே!”

ராகவன் அவளிடம் விபரம் சொன்னான்!

“நீயே உன் பிரெண்ட்கிட்ட பேசும்மா”

அவளும் ரகுவும் எல்கேஜியில் இருந்து எம்பிபிஎஸ் வரை ஒன்றாக படித்தவர்கள்!

ரகுவின் பிரியத் தோழி!

அவள் தன் அண்ணனின் மீது காதல் கொண்டதை அறிந்து, அவன் தூது போய் தான் அவர்கள் கல்யாணம் நடந்தது!

இப்போது அவர்களுக்கு தாரிகா, தன்வி என்று இரு பெண் குழந்தைகள் ஆறு வயதிலும் நான்கு வயதிலும்!

ரகு அவள் பேச்சுக்கு தான் கட்டுப்படுவான் அவர்கள் அம்மா விஜிக்குப் பிறகு! அவர்கள் அக்கா டாக்டர் ராகினிக்குப் பிறகு! அக்கா இப்போது இருப்பது பெங்களூரில்!

“என்னடா இப்ப! அதான் உன் அண்ணன் இவ்வளவு தூரம் சொல்றாரு இல்ல?

அந்த மது வரட்டும். காண்டீன் நடத்தட்டும்.

சரியில்லனா அவளை அனுப்பிட்டு பார்த்திய கூப்ட்டுக்கலாம்!

ஆனா எனக்கும் அதுல விருப்பமே இல்ல தான்!

அவன் மாறவே இல்லடா! இன்னமும் அதே திருட்டுத்தனம் தான்!

அவனைப் போய் உனக்கு ஏன் தான் இன்னுமும் புடிக்குதோ தெரியல!

என்ன சரியா?

அவள்.. அந்த மது வரலாம் இல்ல? உனக்கு ஓகே தான?”

ரகு இன்னமும் மவுனமாகவே இருக்க. வைஷு திட்ட ஆரம்பித்தாள்!

“ம்ம்னு சொல்றானா பாருப்பா? சொல்லுடா!

உன் ஈகோ தாண்டா உனக்கு சத்ருவே! அத தூண்டி தூண்டி தான் அந்த பார்த்தி உன்கிட்ட காரியம் சாதிச்சுக்கிறான்! அந்த நாள்ல இருந்து இன்னிக்கு வர!

சரின்னு சொல்லேண்டா” அவன் தலையில் நறுக்கென்று கொட்டினாள்!

ரகு அண்ணனை முறைத்தான்.

“டேய் ராகவ், உன்னால முடியலன்னு அடியாள் வச்சு சொல்ல வைக்குறீயா?”

“எதே நான் அடியாளா உனக்கு? டேய்! நான் உன் அண்ணிடா!”

“சீ! போடி!” என்று எழுந்து போய் விட்டான் ரகு!

ராகவன் சிரித்துக்கொண்டே சொன்னான் “நீ போ வைஷு! அவன் சமாதானம் ஆகிடுவான்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!