Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ஸ்டேன்ஸா காஃபே!!

        ஸ்டேன்ஸா காஃபே!!

          “அழகான மாலை நேரம் ஸ்டான்ஸா காபி ஷாப் எனக்கு பிடிச்ச காபி ஷாப் டிப்ரெண்ட் லைட்டிங் எப்போவும் மெல்லிசா இசைக்கிற யுவன் நீங்க நினைக்கிறது சரி ஆமா ஒருத்தவங்களுக்காக வெயிட் பண்ணிட்டு தான்  இருக்கேன் வானம் கூட இருட்டிட்டு மழை வர்ற மாதிரி இருந்துச்சு லக்கிலி அதே டேபிள் கிடைச்சுது இதோ அஞ்சு வருஷம் ஆகிடுச்சு இதே இடத்துலே என் கை பிடிச்சுட்டு வரேன்னு சொல்லிட்டு போனான் இன்னிக்கு தான் வர்ரான் அதோ அவன்தான் ஆனா அடையாளமே தெரியலை தாடி வச்சிட்டு கொஞ்சம் வெயிட் போட்டுட்டு ஆனா மாறாதது அவனோட க்யூட் ஸ்மைல்”??..

“ஹாய் இளா”



Advertisement

இளா நான்தான் இளமதி..

“ஹாய் இளன்”…

             அவன் இளங்கோ வந்ததுல இருந்து  ரொம்ப நேரம் ஏதேதோ பேசினான் ஆனா எதுவுமே எங்கள கனெக்ட் பண்ணல அவன் ஜாப் பத்தி இப்ப இருக்குற லைஃப் ஸ்டைல் பத்தி இன்னும் கடைசியா ஒன்னு சொன்னான் பாருங்க எனக்கு கண்ணுல இருந்து கண்ணீர் அருவி கொட்டுச்சு சொன்னது மட்டுமில்லாம போட்டோ வேற காண்பிச்சான் …

Advertisement

“சோ சொல்லாம மறைச்சுட்ட இளன்”

Advertisement

“சொல்லக்கூடாதுன்னு இல்லடி நீ மனசு கஷ்டப்படுவியோன்னு”

  “இப்படிதான் உனக்கும் வலிச்சுருக்கும் இல்ல”

“அப்படி எல்லாம் இல்ல இளா நீ என்ன வேணும்னே விட்டு போல சூழ்நிலை அதே சூழ்நிலை எனக்கும்”

Advertisement

“என்ன கூப்பிட்டு இருக்கலாமே சந்தோஷமா உன் கல்யாணத்த பாத்துருப்பேன்”

 “நெவர் இளா நீ எனக்கு கொடுத்த தண்டனையை நானும் உனக்கு கொடுக்க விரும்பல”

    ஆர்டர் வந்தது,
” ம்ம் பரவாயில்லையே  இளா எனக்கு பிடிச்ச காப்பச்சினோ ஆர்டர் பண்ணிருக்க ஆனா உனக்கு பிடிக்காதே”

“நகுலுக்கு ரொம்ப பிடிக்கும் அதுனால குடிக்க பழகிட்டேன்”

“நகுல் மேல செம்ம பொறாமை வருது எனக்காக கூட இத நீ குடிக்க மாட்ட அது சரி உன்ன ஒழுங்கா பாத்துக்குறானா ஆர் யூ ஹேப்பி”

“ம்ம் ரொம்ப உன் ரதி”

“அவளுக்கென்ன சூப்பரா இருக்கோம்”

“ரதிக்கு”

“தெரியாது ஷீ இஸ் நாட் டூ மெர்ச்யூர்ட் லைக் நகுல்”

“ம்ம்”

         இளா-இளன் லவ் ஸ்டோரி காலேஜ் லவ் ஸ்டோரி நகுல் என்னோட அத்தை யைபன் மூனு பேருக்குமே தெரியும் திடீருன்னு வீட்டில எனக்கும் நகுலுக்கும் கல்யாணத்து பிக்ஸ் ஆச்சு உண்மைய சொன்னோம் வழக்கம் போல வேற ஜாதின்னு ப்ளாக்மெயில் தற்கொலை டிராமாக்கள் வழிஇல்லை ஒத்துக்கிட்டோம்…

          இளன் இதே இடத்துலே உண்மைய புரிஞ்சுட்டான் நான் அவன வேற  கல்யாணம் பண்ண சொன்னேன் பண்ணிட்டு என்ன பாக்க வரனும்னு ப்ராமிஸ் வாங்கிட்டு அனுப்பி வச்சேன் இன்னிக்கு தான் வந்தான்..

       அப்புறம் நிறைய பேசினோம் ஆனா கண்கள்ள காதல் இல்ல  டைம் ஆச்சு..நான் கால் பண்ணேன் என்ன கூப்பிட நகுல் வந்தான் மூனு  பேரும் சிரிச்சு பேசிட்டு குட் பை சொல்லிட்டு நடந்தோம்  எங்க காதலுக்கும் ஸ்டேன்ஸாவுக்கும் எங்கள பார்த்து மழை துளிகள் கண்ணீர் விட்டது போல் ஒரு பிம்பம்❤️❤️❤️

                     ? கீர்த்திகா ஆனந்த் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!