கொற்றவனின் கொற்றவை 2
அத்தியாயம் 2
ஐ லவ் யூ சோ மச் என்று கொற்றவை சொன்னதும் அதிர்ச்சியில் சிரிப்பை நிறுத்தியவன்
“இப்ப என்ன சொன்ன கொற்றவை” என்றான்.
“பரவாயில்லை மேன். ஷாக்ல எப்போதும் சொல்ற மேடமை கட் பண்ணிட்ட”
Advertisement
“ப்ச் விளையாடாதீங்க மேடம். இப்ப என்ன சொன்னீங்க”
“உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னேன் மேன். நீ என் கூடவே லைப் லாங் இருக்கணும்னு ஆசைப்படறேன். அதுக்கு நீ என்ன சொல்ற மேன்”
“நா ஒன்னும் உங்க ஹோட்டல் இடியாப்பம் இல்ல கொற்றவை மேடம். நீங்க ஆசைப்பட்ட உடனே கிடைக்கிறதுக்கு. எனக்கு நிறைய வேலையிருக்கு. நா வரேன் மேடம்” என்று கிளம்பியவனை
Advertisement
“நில்லு மேன். எனக்கு பதில் சொல்லிட்டு போ. என்ன உனக்கு பிடிக்குமா பிடிக்காதா” என்று கூறி நிறுத்தினாள்.
Advertisement
சலிப்பாக நின்றவன் “உங்கள எனக்கு பிடிக்கும். ஆனா பிடித்தம் வேற லவ் வேற மேம்” என்றான்.
அதற்கு கொற்றவை “ஐ டோன்ட் அண்டர்ஸ்டேண்ட் மேன். எனக்கு புரியும்படி சொல்லு” என்றாள்.
“கொற்றவை மேடம் எனக்கு வேல இருக்கு. கஸ்டமர் வெயிட் பண்றாங்க” என்று விட்டு கிளம்ப போனான்.
Advertisement
“ஹே நில்லு மேன். நா இங்க எவ்ளோ பெரிய விஷயம் பேசிட்டு இருக்கேன். நீ எங்க போற” என்று கேட்டு நிறுத்தியதும்,
“இருங்க. இது இங்க பேசற விஷயம் இல்ல. இன்னொரு நாள் வேற இடத்துல பேசலாம்” என்றான் விக்ரம்.
“ம்ஹும் இப்பவே நீ என்கூட வெளில கிளம்பி வர்ற. நா கார்ல வெயிட் பண்றேன்” என்று சொல்லிக்கொண்டே வெளியில் கிளம்பி சென்று விட்டாள் கொற்றவை.
அவள் செல்வதை பார்த்து நின்ற விக்ரமும், வேறு வழியில்லாமல் அவனுக்கு கீழ் உள்ளவனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கொற்றவையின் காருக்கு அருகில் சென்று
“மேம் எங்க வரணும்னு சொல்லுங்க. நா என் கார்ல வரேன்” என்றான்.
“கடுப்பேத்தாத மேன். உன் கார்ல நீ கிளம்பி வரதுக்குள்ள நா கிழவியாயிடுவேன். ஒழுங்கா வந்து கார்ல ஏறு” என்று கொற்றவை கூறியதும் காரில் ஏறினாலும் அவளிடம்
“என் கார் செகண்ட் ஹாண்ட் கார்னாலும் நானே பார்ட் டைம் ஜாப் பாத்து வாங்குனது. அதனால அத கிண்டல் பண்ணாதீங்க மேடம்”
“ஹே நா மட்டும் இந்த கார எங்க அப்பா காசுல வாங்குனேனு நினைச்சிட்ருக்கியா. பத்து வயசுல இருந்து பேபி சிட்டர் வேலை, கார் வாஷ் பண்ற வேலைனு பாத்துருக்கேன். இப்பவும் எங்க அப்பாக்கு அட்மினிஸ்ட்ரேஷன்ல ஹெல்ப் பண்ணி மன்த்லி சேலரி வாங்குறேன். என் காரும் என் உழைப்புல வாங்குனது தான் மேன்” என்று கொற்றவை விடாமல் பேசியதும்
“ஹலோ கொற்றவை மேடம். மூச்சு விடுங்க. நா என் கார் பத்தி மட்டும் தான் பேசினேன். உங்க கார் பத்தி பேசவே இல்ல. உங்கள பத்தி எனக்கு நல்லாவே தெரியும்” என்றான் விக்ரம்.
அதற்குள் ஒரு பார்க் வந்ததால் ரோடு ஓரமாக இருந்த பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கி நடை பாதையில் நடக்க ஆரம்பித்தனர்.
அப்போது நான்கு ஐந்து டீனேஜ் பையன்கள் நடைப்பதையில் எதிரில் ஸ்கேட்டிங் போர்டில் வேகமாக வந்தனர். அதில் ஒருவன் வேண்டுமென்றே கொற்றவையை இடிப்பதுபோல் வந்தான்.
விக்ரம் சட்டென்று திரும்பி அவளை தன் வலது பக்கத்தில் இருத்தி கொண்டான். இடிக்க வந்தவனும் கிண்டலாக சிரித்து கொண்டே வேகமாக சென்று விட்டான்.
கொற்றவை விக்ரமிடம் “அவன் சும்மா விளையாட்டுக்காக கிட்ட வந்துருப்பான் மேன். இடிக்கவெல்லாம் மாட்டான். அப்படியே இடிச்சாலும் அவன நா சும்மா விட்ருவேனா” என்று கேட்டாலும் அவளுக்கு அவனிடம் பிடித்த விஷயங்களில் இதுவும் ஒன்று. அவளை எப்போதும் கேர் செய்வது.
இங்கு உள்ள ஆண்களிடம் இதை போல் பார்க்க முடியாது. ஏன் அவள் அப்பா கூட அது போல் செய்ய மாட்டார். தன் மகளுக்கு தன்னை பார்த்து கொள்ள தெரியும் என்பது அவருக்கு தெரியும். ஆனால் விக்ரம் அவளை பார்த்த நாள் முதல் அவ்வாறுதான் பார்த்து கொள்கிறான். கொற்றவைக்கு விக்ரமை முதல் நாள் பார்த்தது மனதில் ஓடியது.
கொற்றவையும் அவள் நண்பார்களும் சேர்ந்து அவள் நண்பன் ஒருவனுக்கு பப்பில் பர்த்டே பார்ட்டி கொண்டாடிவிட்டு டான்ஸ் ஆடி கொண்டிருந்தனர்.
ஆண் பெண் அனைவரும் சேர்ந்து ஆடி கொண்டிருக்கும்போது அந்த நாட்டை சேர்ந்த ஒருவன் வந்து கொற்றவையிடம் சேர்ந்து நடனமாட கூப்பிட்டான். அவள் மறுத்து கொண்டிருக்கும் போதே திடீரென்று அவள் இடுப்பில் கைப்போட்டு வழுக்கட்டாயமாக இழுத்தான்.
கொற்றவை அவனை ஓங்கி ஒரு உதை விடலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் போதே, அவளுக்கு பின்னாலிருந்து ஒரு கை வேகமாக வந்து எதிரில் இருந்தவனின் மூக்கில் குத்தியது. அவன் மூக்கை பிடித்து கொண்டு கீழே உட்கார்ந்து விட்டான்.
கொற்றவை ஆச்சரியமாக திரும்பி பார்த்தால், அங்கு நின்று கொண்டிருந்தான் விக்ரம். அவள் அவனிடம் பேச ஆரம்பிக்கும் போதே, விக்ரமுடன் கூட வந்தவன் அவன் கையை பிடித்து இழுத்து கொண்டு வெளியில் சென்று விட்டான்.
கொற்றவையும் அவன் பின்னால் செல்ல நினைத்த போது, அவளின் நண்பர்களும் குத்து வாங்கியவனின் நன்பர்களும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இறுதியில் குத்து வாங்கியவனே போதை தெளிந்து கொற்றவையிடம் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடித்து விட்டான்.
அதெல்லாம் முடிந்து வெளியில் வந்து பார்த்தால் விக்ரமை காணவில்லை. ஒரு பத்து நாட்கள் கொற்றவை அவனின் நினைவாகவே சுற்றி கொண்டிருந்தாள். அதே பப்பிலும் சென்று தேடி பார்த்தாள்.
சரியென்று அவனை தேடுவதை நிறுத்தி விட்டு வேலையை பார்க்கலாம் என்று அவள் ரெஸ்டாரண்டுக்கு சென்று, வழக்கம் போல் அங்கு காலியாக இருந்த டேபிளில் அமர்ந்து மொபைல் பார்த்து கொண்டிருக்கும் போது பக்கத்தில் ஆர்டர் எடுக்க சர்வர் வந்து எக்ஸ்க்யூஸ் மீ மேம் என்றான்.
கொற்றவை நிமிர்ந்து பார்த்தால் அங்கு கன்னக்குழி சிரிப்போடு நின்று கொண்டிருந்தான் விக்ரம்.
“ஹே யூ… என்று கொற்றவை ஆரம்பிக்கும் போதே விக்ரமும் “நீயா.. என்று ஆரம்பித்தான்.
“ஹே நீ தமிழா” என்று கொற்றவை விக்ரமிடம் கேட்டு கொண்டிருக்கும் போதே அங்கு வந்தார் ரகுராம் கொற்றவையின் அப்பா.
கொற்றவையிடம் வந்தவர், “என்னடா ஒரு வழியா இன்னைக்கு இங்க வர மனசு வந்துடுச்சா” என்றார்.
அதற்கு “டாட்… என்று செல்லமாக சிணுங்கிய கொற்றவை “வேணுன்னா என் சேலரில கட் பண்ணிடுங்க. ஆனா நா இங்க வராததுக்கு இவர்தான் காரணம். இவர் நியாபகமா தான் என்னால ஒர்க்ல கான்சென்ட்ரேட் பண்ண முடியல” என்று வெளிப்படையாக அவள் விக்ரமை காட்டி கூறியதும், விக்ரம் ஆச்சர்யமாக அவளை பார்த்தான். ஆனால் ரகுராம் கொஞ்சம் கூட அலட்டி கொள்ளாமல்
“அப்படியா விக்ரம். என் பொண்ணுகிட்ட என்ன வம்பு பண்ண” என்றார்.
அதற்கு விக்ரம் புன்னகையுடன் “அத நீங்க அவங்ககிட்ட தான் கேக்கணும் சார்” என்றான்.
அதற்குள் கொற்றவை “டாட். எங்கிட்ட யாராவது வம்பு பண்ண முடியுமா” என்றாள்.
“அதான என் பொண்ணு உன்கிட்ட என்ன வம்பு பண்ணா விக்ரம்” என்று விக்ரமிடம் கேட்டவர் கொற்றவையிடம் “பாப்பா. பையன் நம்ம ஊருக்கார பையன். ரொம்ப நல்ல பையன். பார்த்து ஏதாவது பண்ணிவிடு” என்று விட்டு வெளியில் சென்று விட்டார்.
அவரை ஆச்சர்யமாக பார்த்த விக்ரம் கொற்றவையிடம் “என்ன முதலாளியம்மா உங்கப்பா உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு கூட யோசிக்காம கிளப்பிட்டாரு” என்று நக்கலாக கேட்டான்.
“ஹலோ விக்ரம். ஐயம் கொற்றவை தேவி. கால் மீ கொற்றவை. எங்கப்பாக்கு என் மேல அவ்ளோ நம்பிக்கை. அதான் கவலைப்படாம போறார். ஆனா நீ அன்னைக்கு தேவையில்லாம உள்ள புகுந்து அவன ஏன் அடிச்ச மேன்” என்று கொற்றவை கேட்டதும் வாயில் அடித்துக்கொண்ட விக்ரம்
“அடப்பாவிங்களா. இந்த ஊர்ல உதவி பண்ணவங்களுக்கு நன்றி சொல்லலைன்னாலும் பரவால்ல. இப்படிதான் திட்டுவீங்களா”
“ஏன் என்ன பாத்துக்க எனக்கு தெரியாதா. நீ வந்துதான் என்ன காப்பாத்தணுமா மேன்” என்று கொற்றவை கேட்டு முடிக்கவில்லை.
அதற்குள் விக்ரம் “அதான் பாத்தேனே. அவன் உங்கள இழுத்து டான்ஸ் ஆடற வர பாத்துட்டு தான இருந்தீங்க மேடம். இந்த ஊர்ல எப்படியோ மேடம், எங்க ஊர்ல எங்க வீட்லயெல்லாம் பொண்ணுங்களுக்கு ஒரு ஆபத்துன்னா யோசிக்காம உதவி பண்ணனும்னு சொல்லி குடுத்திருக்காங்க. ஆமா நீங்க என்ன படிக்கிறீங்க. பாத்தா ஸ்கூல் போற பிள்ளை மாதிரி இருக்கீங்க. அதுக்குள்ள இந்த பார்ட்டி பப்பெல்லாம் தேவையா மேடம்” என்றான்.
“கிண்டலா மேன். நா எம்பீஏ ஹாவர்ட் யூனிவர்சிட்டி ஸ்டுடென்ட் தெரியும்ல. இந்த ஊர்ல பத்து வயசுலேயே பப் க்கு போய்டுவாங்க”
“ஓ அப்ப டேட்டிங் எத்தனை வயசுக்கு மேடம் போனீங்க”
“எனக்கு டேட்டிங் கான்செப்ட் பிடிக்கல மேன். எங்க பாட்டி அப்பா மாதிரி ஒருத்தர் கூடதான் லைஃப் ஷேர் பண்ணனும். அது போகட்டும். உன்ன பத்தி சொல்லு மேன்” என்று அவனிடம் பேசி பழகியதை யோசித்து கொண்டிருந்த கொற்றவையை “அவன் இடிச்ச பிறகு, நீங்க என்ன பண்ணா என்ன. எப்போதுமே வருமுன் காப்பது சிறந்தது மேடம” என்ற விக்ரமின் தற்போதைய பேச்சு கலைத்தது.
“சரி மேன். லெக்ச்சர் எடுக்காத” என்ற கொற்றவை பார்க்கின் உள்ளே இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
பக்கத்தில் விக்ரமும் அமர்ந்தவுடன் “என் மேல இவ்ளோ அக்கறையா இருக்க. எப்போதும் என்ன கேர் பண்ற. கேட்டா என்ன பிடிக்கும்னு சொல்ற. அப்புறம் ஏன் லவ் இல்லன்னு சொல்ற மேன்” என்று கேட்டாள்.
“அதான் சொன்னேனே மேடம்” என்று விக்ரம் ஆரம்பித்தவுடன் கடுப்பான கொற்றவை “ப்ச் மொதல்ல இந்த மேடம கட் பண்ணு மேன். இரிடேட் ஆகுது. உங்க ஊர் லாஜிக் படி பாத்தாலும் உன்ன விட நா வயசும் கொறச்சல் தான” என்றாள்.
“வயசு கொறச்சல்னாலும் நீங்க மொதலாளி கொற்றவை மேடம். சரி அத விடுங்க. இப்ப சொன்னீங்களே. உங்க ஊரன்னு. என்ன லவ் பண்றேன்னு சொல்றீங்களே. என்ன லவ் பண்ணா, என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு நீங்க எங்க ஊர்ல அதாவது தமிழ்நாட்ல வந்து இருக்கணும். முடியுமா உங்களால” என்று விக்ரம் கேட்டவுடன்
“ஓ. கண்டிப்பா கஷ்டம்தான். ஆனா முடியாததுன்னு இல்ல. உனக்காகன்னு யோசிச்சா வரலாம். நீ அந்த அளவுக்கு ஒர்த் ஆன ஆள் தான்” என்று கொற்றவை கூறவும் அவளை ஆச்சரியமாக பார்த்த விக்ரம்
“சரி மேடம். அப்புறம் எங்க ஊரு நடை உடை பாவனை எல்லாம் மாற வேண்டியிருக்கும். இதெல்லாம் தேவையா சொல்லுங்க. நீங்க மூணு தலைமுறையா இங்க இருக்கீங்க. எதுக்கு ரிஸ்க் எடுக்கரீங்க”
“சரி மேன். அப்படியே பாத்தாலும் அதெல்லாம் என் கஷ்டம். உனக்கு என்ன கஷ்டம், என்னை லவ் பண்றதுல”
“ம் விட மாட்டீங்க. ஆனா நா சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது. நா லவ் பண்ற பொண்ணு தமிழ்நாடு கல்ச்சர்ல இருக்கணும். அதாவது அழகாவும் இருக்கணும். அதே சமயம் அடக்கமா, நளினமா, என் குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா இருக்கணும்” என்று விக்ரம் கூறியதும் அவனை வேற்றுகிரகவாசி போல் பார்த்த கொற்றவை
“ஏன் மேன். நீ சொல்ற படி பொண்ணுங்கல்லாம் தமிழ்நாட்லயே இப்பல்லாம் இருக்க மாட்டாங்க மேன். இல்ல என்ன கழட்டி விடறதுக்காக இப்படிலாம் சொல்லிட்ருக்கியா ”
“ஏன் இல்ல. நீங்க சங்கவிய பாத்திருக்கீங்கல்ல. அழகு, அடக்கம் ஏன் ஹார்வர்ட் யூனிவர்சிட்டில வந்து படிக்கிற அளவுக்கு அறிவும் கூட” என்று விக்ரம் கூறியதும்
“ஓ அப்ப சங்கவிய லவ் பண்றியா மேன்” என்று கேட்ட கொற்றவைக்கு முதல் முறையாக வலித்தது.
“ஆமா. உங்கட்ட பேசும்போதுதான் தோணுச்சு. அவ எனக்கும் என் குடும்பத்துக்கும் செட் ஆவான்னு” என்று சொல்லும்போதே கொற்றவை
“ஏன் மேன். நீ உனக்காக கல்யாணம் பண்றியா. இல்ல உன் குடும்பத்துக்காகவா” என்று கேட்டாள்.
அதற்கு “எங்க ஊர் கல்யாணம் தனி மனிதனுக்காக மட்டும் இல்ல. குடும்பத்துக்காகவும் தான்” என்றான் விக்ரம்.
“கல்யாணம் ஓகே மேன். ஆனா லவ். நீ சங்கவி” என்று பேசிக்கொண்டே யோசித்து பார்த்த கொற்றவை “ம்ஹும். ஏன் மேன். எங்க பாட்டி சொல்வாங்க. சில தமிழ்நாட்டு ஆண்கள் என்னதான் படிச்சாலும், பெண்கள் குறிப்பா வைப் அவங்களுக்கு கீழ அடங்கிதான் இருக்கணும்ன்னு நினைப்பாங்களாம். நீயும் அதுக்காகத்தான் சங்கவிய சூஸ் பண்றியா” என்று வெளிப்படையாக கேட்டதும் கோபம் வந்தது விக்ரமிற்கு.
“ஏன். சங்கவி என்ன விட என்ன கீழ இருக்கா. அழகு அறிவு எல்லாம் இருக்கு. பொண்ணுன்னா வெட்கம் நளினம் சின்ன தயக்கம் இதெல்லாம் இருக்கணும். நீ லவ் சொல்லும்போது கூட வெட்க படல. ஆனா இயல்பாவே சங்கவிகிட்ட அது எல்லாம் இருக்கு. அதான் எனக்கு அவளை பிடிச்சிருக்கு” என்று சட்டென்று விக்ரம் கூறியதும்,
கொற்றவைக்கு மனதில் வலி இருந்தாலும் முதல் முறையாக (விக்ரமிற்காக மட்டுமே)மனதில் உள்ளதை வெளியே காட்டாமல் “சரி ஏன் கோபப்பட்ற மேன். உனக்கு உண்மையாவே சங்கவிய பிடிச்சிருக்கு. நா ஒத்துக்கிறேன்” என்று சொன்னாள்.
அதற்கும் கோபம் வந்தது விக்ரமிற்கு. “நீ என்ன அக்சப்ட் பண்றது. நீ தமிழ்நாட்டு பையன்களுக்கும் குடும்பத்துக்கும் செட் ஆக மாட்ட. குறிப்பா எனக்கு செட்டே ஆக மாட்ட” என்று பட படவென்று பேசிவிட்டு எழுந்து சென்று விட்டான்.
கொற்றவை அப்படியே வெகு நேரம் அமர்ந்திருந்தாள் யோசித்து கொண்டு.
,
