Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி.

17.காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி..!

17.காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி..!

“எதுக்கு டி என் தம்பிய அடிக்கிற… அவன அடிக்க எனக்கு மட்டும்தான் உரிமை இருக்கு. ” என்றவன் ஆரதியை நகர்த்தி அடிக்க துவங்க , அவனை நகர்த்தி இவள் அடிக்க… பொறுமை இழந்த சித்து இருவரையும் மெத்தையில் தள்ளி கிடைக்கும் பொருளால் அடித்து கொண்டிருந்தான். ஆரதியின் அறை பக்கமாக நகர்ந்த ரதி தேவிக்கு… சத்தம் கேட்க,

மகாலட்சுமியிடம் சொல்ல கீழே சென்றாள்.



Advertisement

அறைக்கதவு தட்டப்பட.. மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு விலகினார்கள். கண்ணன் குளியலறையில் ஒளிந்து கொள்ள, சித்து கதவைத் திறக்கச் சென்றான்.

Advertisement

“மகாலட்சுமியும் சரஸ்வதியும் ஒன்றாக நின்று இருக்க..”நீ என்னடா அவளோட ரூம்ல பண்ணிட்டு இருக்க.”என்றவர்கள் அறை இருந்த கோலத்தை பார்க்க,

Advertisement

அவர்களுடன் நின்று கொண்டிருந்த ரதிதேவியை தான் முறைத்து பார்த்திருந்தாள் ஆரதி.

Advertisement

வாய்க்கு வந்ததை சொல்லி சமாளித்த சித்துவை கேவலமாக பார்த்த இருவரும் அங்கிருந்து புறப்பட…,

“ஆதி ராசாத்தி அம்மா உன்கிட்ட என்னமோ பேசணும்னு சொன்னாங்க. நீ போய் என்னன்னு கேளு.”

ஆரதி கீழே சென்றதை உறுதி செய்துகொண்ட சித்து… ரதிதேவியின் நடவடிக்கையை அண்ணனிடம் சொல்ல,

இதுல என்ன முடிவு எடுக்குறது ன்னு தெரியல சித்து. அந்தப் பொண்ணு என்ன நெனச்சு இதெல்லாம் பண்ணுதுன்னு புரியல. ஆனா ஆரதிய அந்த பொண்ணுக்கு பிடிக்கல. இத அவசரப்பட்டு பேசிட முடியாது… நான் கொல்கத்தா போயிட்டு திரும்ப வந்து பேசுற. எனக்கு என்னமோ அவள பாத்தா தப்பான பொண்ணு மாதிரி தெரியல. மேலோட்டமா நடக்கிறத வச்சி முடிவு பண்ண வேணா சித்து. எனக்கும் ஆதிக்கும் நடுவுல அவ மட்டும் இல்ல வேற யாரும் வரமுடியாது.

கண்ணனின் எண்ணங்கள் சித்துவிற்கும் தெரியும் என்பதால்.. அமைதியாக தலையசைத்தான்.

ராசாத்தி அம்மாவிடம் பேச வந்த ஆரதிக்கு அப்போதுதான் அனிதாவின் பேக் தன்னிடம் இருப்பது ஞாபகம் வர அதையும் எடுத்துக் கொண்டு அவர் அறைக்கு சென்றாள்.

அவர்களிடம் இது அனிதாவின் பேக் என்பதை உறுதி செய்து கொண்டவள்… அவர்களிடமே கொடுக்க செல்ல, ஒரு நொடி நிதானித்தவள் கண்ணனுடன் பேசாமல் இருந்ததால்… சரியாக கவனத்தில் கொள்ளாமல் இருந்தவளின் மூளை பேக்கை திறந்து ஆராய கட்டளையிட..,

அன்று போல்… பை முழுக்க அவளது துணிகளே இருக்க… மொத்தமாக எடுத்து தலைகீழாக கவிழ்தவள் துணி ஏதும் இல்லாமல் இருந்த பையை பார்வையிட அடியில் இருக்கும்.. ஒரு ஜிப் கண்ணில் பட்டது. அதை கவனிக்காது இருந்தவளை மீண்டும் ஒருமுறை மனதில் திட்டிக்கொண்டு, திறந்து பார்க்க… டைரி ஒன்று கையில் சிக்கியது. ஆர்வமாக அதை எடுத்தவள் திறந்து பார்க்க….

எஸ். அனிதா  என்ற பெயரோடு சில பல கிறுக்கர்கள் இருக்க… வானதியிடம் கேட்டு அது அனிதாவின் கையெழுத்து என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள். ராசாத்தியிடம் இதுவரை அனிதா சம்பந்தமான அனைத்தையும் கூறியவள்…, கையோடு டைரியை எடுத்து செல்ல…

ராசாத்தியின் தயக்கம் புரிந்தவளாய்.. “அம்மா உங்க பொண்ண

சந்தேகப்பட்டு இதை எடுத்துட்டு போல. கண்டிப்பா இதுல ஏதாச்சும் எழுதி வைச்சிருப்பா வேணும்’னா வானதியை கூட படிக்கச் சொல்லுங்க.” ஆரதியின் வார்த்தைக்கு மறுப்பாய் தலையசைத்தவர்,

“நீ படிக்கிறதால ஒண்ணும் இல்லம்மா. யாருமே உதவி செய்யாம… இருந்த எங்களுக்கு கடவுள் மாதிரி நீ வந்திருக்க. எனக்கு முழுசா நம்பிக்கை இருக்கு. இப்ப நான் தயங்கி நிற்கிறது அதுக்காக இல்லமா.. ” என்றவரை குழப்பமாக பார்க்க,

“ஏற்கனவே எங்களால உங்களுக்கு நிறைய பிரச்சனை. இதுல வீட்ல வந்து சும்மா உட்கார மனசு கேட்கல. இங்கே ஏதாச்சும் வேலை ஒன்னு ரெடி பண்ணி கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும் பாப்பா.” பெண்ணாய் அவரது வார்த்தையை உணர்ந்து கொண்டவள்… “சரி” என்று அங்கிருந்து நகர்ந்து, நாராயணனிடம் விஷயத்தைக் கூறி ராசாத்திக்கு ஒருவேளை ஏற்பாடு செய்தாள்‌.

அறைக்குள் செல்ல அண்ணனும் தம்பியும் ஆழ்ந்த யோசனையில் இருப்பது போல் தெரிய..  கண்டு கொள்ளாமல் இவளும் தன் பங்கிற்கு யோசனையில் மூழ்கி இருந்தாள்.

சிறிது நேரத்திலே அவளை திரும்பிப் பார்த்த கண்ணன்.., என்னவென பார்வையாலேயே கேட்க,

“இது அனிதா எழுதின டைரி ஆழி. இத்தனை நாளா இத பார்க்காம விட்டுவிட்ட. என்னோட பிரச்சனைக்காக நம்பி வந்தவங்கள காக்க வச்சிட்டன்னு கில்ட்டியா  இருக்கு… என்றவளை இருவரும் தேற்ற ஆரம்பித்தனர்.

‘டைரி கண்ணன் கைக்கு இடம் மாற.. முதல் இரண்டு மூன்று பக்கங்களில் அவளது பிடித்தமான பொருள், இடம், உணவு இடம்பெற்றிருக்க , இன்னும் சில பக்கங்களை திருப்பி பார்த்தான்.

இன்னைக்கு  எதுக்குடா வேலைக்கு போனோம்’னு இருந்துச்சு. எவ்ளோ அசிங்கமா போச்சு தெரியுமா. நான் திருடியா.. கேவலம் அந்த ஒரு போனுக்காகவா நான் திருட போற. நான் சொல்றத யாருமே நம்பல… ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்த வேலைய விட்டுட்டு ஊருக்கு போகலாம்னு தோணுது. கடைசியில போனு அவங்க கிட்டயே தான் இருந்துச்சு… ஒரு சாரி கூட கேட்கல. சம்பளத்துக்கு வேலை பார்த்தா நாங்கள்லாம் மட்டமானவங்க.’ என அனிதா எழுதியிருக்க அன்று சுபா கூறியதை கண்ணனிடம் மீண்டும் நினைவு படுத்தினால் ஆரதி.

“எனக்கு என்னமோ இங்க இருந்துதான் பிரச்சனை ஆரம்பிச்சு இருக்கும்னு தோணுது ஆதி.” என்றவன் அடுத்த பக்கங்களை திருப்ப அது அன்று அன்று நடந்த விஷயங்களை குறிப்பிட்டிருந்தது.

சில பக்கங்கள் சென்றபின்….

‘அன்னைக்கு என்னமோ அவ்ளோ பேசிட்டு… இன்னிக்கு வந்து சாரி கேக்குறாங்க. எனக்கு ரொம்ப கோபம் வந்து திட்டி விட்டுட்டேன். ஆனாலும் மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருந்துச்சு. என்னதான் இருந்தாலும் அன்னைக்கு கடையில சண்டை போட்டது அவங்க பிரண்டு தான. இவங்க அப்பகூட எனக்கு தான் சப்போர்ட் பண்ணிட்டு இருந்தாங்க. ரொம்ப நல்லவங்களா தான் இருப்பாங்க போல.  எப்பயோ நடந்து விஷயத்துக்கு இப்ப வந்து சாரி கேக்குறாங்க. அடுத்த தடவை அவங்களை பார்த்து.. தேங்க்ஸ் சொல்லணும். ‘

‘இன்னைக்கு திரும்பவும் அவங்கள பார்த்தேன். கடையை விட்டு வெளிய வரும்போது எதிரில் நின்னுட்டு இருந்தாங்க. பார்த்து சிரிச்சாங்க… சிரிக்கும்போது ரொம்ப அழகா இருந்தாங்க. அடிக்கடி… என்ன எட்டி எட்டி பாத்துட்டு இருந்தாங்க. எதுக்காக பார்க்குறாங்கன்னு ஒன்னும் புரியல. ஒருவேளை திரும்பவும் சாரி கேட்க நினைக்கிறாங்களோ… ‘

நேத்து என்ன நடந்துச்சு தெரியுமா…காலையில ரொம்ப உடம்பு முடியல. லீவு கேட்டு வெளியே வரும்போது… அவங்க நின்னுட்டு இருந்தாங்க. உடம்பு முடியாம நடந்து போறத பார்த்து விசாரிச்சாங்க. நான் சொல்லாம அமைதியா நடந்த.. உடனே அவங்க பைக்கை ல ஏற சொல்லி கட்டாயப்படுத்தினாங்க. எனக்கும் உடம்பு முடியலையா… அங்க கூட பைக்ல போக சம்மதிச்சேன். வீட்ல விடுவாங்கன்னு  பார்த்தா நேரா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனாங்க. நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவே இல்ல தெரியுமா.  அங்க எல்லா செலவும் அவங்கதான் பார்த்தாங்க. வீட்டு கிட்ட இறக்கிவிடும் போது…. சாப்டியா ன்னு கேட்டாங்க.என்ன இந்த மாதிரி யாரும் கேட்டதில்லை. ரொம்ப நல்லவங்களா இருக்காங்க. அவங்க பேரு என்னன்னு கூட தெரியல. எதுக்காக என்கிட்ட இப்படி நடந்துக்குறாங்க. அன்னைக்கு சாரி கேட்டாங்க. இன்னைக்கு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனாங்க… ஆனா எனக்கு இதெல்லாம் பிடிச்சிருக்கு. ஏற்கனவே அவங்களுக்கு நான் தேங்க்ஸ் சொல்லணும். இப்போ நேத்து பண்ணதுக்கு சேர்த்து இரண்டு தேங்க்ஸ் சொல்லணும். அப்புறம் அவங்க பேரு கேட்கணும். பைக்ல போகும்போது செம்மையா இருந்துச்சு. ஊர்ல பக்கத்து வீட்டு அண்ணா கூட பைக்ல இரண்டு தடவை போய் இருக்க… ஆனா அத விட இந்த பைக் நல்லா இருந்துச்சு. அந்த பைக்கை விட அவங்க என் கிட்ட காட்டினா பாசம் ரொம்ப நல்லா இருந்துச்சு. ‘

‘இன்னைக்கு திடீர்னு வந்து முன்னாடி நிக்கிறாங்க. நான் பயந்தே போய்ட்டேன். திட்ட நினைச்சா… அவங்க பதிலுக்கு என்ன திட்றாங்க. முந்தா நேத்து தான உடம்பு முடியல அதுக்குள்ள எதுக்கு வேலைக்கு வந்த. ரெஸ்ட் எடுக்காம… லீவு போட்டுட்டு ரெஸ்ட் எடுன்னு கோவமா பேசினாங்க. ஒரு நாள் லீவு போட்டா சம்பளம் பிடிப்பாங்கன்னு சொன்னதுக்கு.. பரவால்ல பிடிச்சா பிடிக்கட்டும் நான் தரேன். நீ லீவு எடு…ன்னு சொன்னாங்க தெரியுமா. எனக்கு அப்போ ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. படிக்கணும்னு ரொம்ப ஆசை… ஆனா அம்மா அப்பாவால வேலைக்கு வந்துட்டேன். உடம்பு முடியாம போனா கூட ஒரு நாள் ரெஸ்ட் எடுக்க முடியாது. சம்பளம் போயிட்டா அம்மாக்கு என்ன பதில் சொல்றதுன்னு யோசிச்சு வேலைக்கு போய்டுவேன்….. என்னை பத்தி முதல் முதல்ல யோசிச்ச ஒரு ஆள். அன்னைக்கு என்னை அடிக்காத குறையா திரும்ப வீட்டுக்கு அனுப்பிவிட்டாங்க. ரொம்ப மாசத்துக்கு அப்புறம்…. முழு நாள் ரெஸ்ட் எடுத்தேன். ஒவ்வொரு தடவையும் அவங்ககிட்ட தேங்க்ஸ் சொல்லனும்னு நினைச்சிகிட்டே இருக்க.. கேட்க முடியல. அடுத்த தடவ பார்த்தா கண்டிப்பா கேட்கணும்.’

அம்மு இளையாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!