Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி.

21. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி..!

இருவரும் தங்களை உணர்ந்து பிரிந்து நிற்க… ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பார்வையாலே அவர்களைத் தாக்கிக் கொண்டிருந்தனர். அதை உணர்ந்த ஆரதி கண்ணனின் பின்னால் ஒளிய கண்ணன் சித்துவை இழுத்து முன்னால் நிறுத்திக் கொண்டு மறைந்து நின்றான்.

அலை அடித்து ஓய்ந்தது போல்… அனைவரும் பெருமூச்சு விட்டபடி உட்கார இடம் தேட… அங்குதான் வீடு அலங்கோலமாக இருந்ததே. ஒருவாறு ஒதுக்கிவிட்டு அமர்ந்தவர்கள் பார்வையை கண்ணனிடம் பதிக்க அதுவரை விளையாட்டாய் இருந்தவன் பொறுப்பாய்..,

“எப்ப என் ரதிய விரும்ப ஆரம்பிச்சன்னு தெரியல. அவளுக்கும் அப்படி தான். உங்ககிட்ட சொல்ல கூடாதுன்னு இல்ல. இந்த கண்ணாமூச்சி ஆட்டம் பிடிச்சி இருந்துச்சி. கொஞ்ச நாள் போனதும் சொல்லலாம்’னு நினைச்சேன். அதுக்குள்ள என்னென்னமோ ஆகிடுச்சு. ரதிய தான் நீங்க கேக்கறீங்கன்னு  நினைச்சு நானும் சம்மதம் சொன்னேன்.என் மனசுல ரதி தான் இருக்கா. இப்ப மட்டும் இல்ல எப்பவும்.”
அடுத்தாக மணிகண்டனிடம் சென்றவன்,
“சாரி அங்கிள். எங்க பிரச்சனையில உங்கள தொந்தரவு பண்ணிட்டோம். உங்க பொண்ணு மேல எந்த அபிப்பிராயம் இல்ல. வீட்ல பேசுனதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குற. தயவு செஞ்சி தப்பா எடுத்துக்காதீங்க.”



Advertisement

” சார் நான் தான் உங்க கிட்ட சாரி கேக்கணும். இந்த பிரச்சனையே என்னால தான். நான் மட்டும் வராம இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது. சாரி சார் … ” ரதிதேவியின் பேச்சு ‌கண்ணனுக்கும், சித்துவுக்கும் சாதாரணமாக இருக்க ஆரதி தான் தன் சந்தேக பார்வையை அவள் மீது செலுத்தி இருந்தாள்.

ரதிதேவிக்கே இதில் விருப்பம் இல்லை என்பதை உணர்ந்த பெற்றோர்களும் மனதை மாற்றிக் கொள்ள… ( வெறுப்புடன்… தன் காரியம் கெட்டு விட்ட எண்ணத்தோடு) அதுவே மஹாலட்சுமி நாராயணன் தம்பதியருக்கு நிம்மதியாக இருந்தது. பின்னே அவர்கள் தானே இதை ஆரம்பித்தே. ரதி தேவிக்கு அநியாயம் செய்ததாக எண்ணியவர்கள் இப்போது நிம்மதியாக உணர.. இதை வாய் விட்டே சொல்லி விட்டார் சரஸ்வதி.
கண்ணனே மருமகனாக வருவதில் இருந்த கோபமும் காணாமல் போக .. சிறு குற்ற உணர்ச்சி அவர்களுக்கு. ரதி தேவியே சாதாரணமாக எடுத்ததில் பெண் பிள்ளையின் பெற்றோராக ஆனந்தம் அடைந்தனர்.

“பஞ்சாயத்து முடிஞ்சிது..அப்புறம் என்ன எல்லாரும் வேலைய பாருங்க.. போங்க போங்க…”  என்ற சித்துவின் பேச்சுக்கு,

Advertisement

” நாங்க எதுக்கு பார்க்கனும். இந்த வீட்ல இருக்க ஒவ்வொரு பொருளையும் உடைச்சது நீங்க. அதனால அதை நீங்களே கிளீன் பண்ணிட்டு.. இந்த வீடு நேத்து எப்படி இருந்ததோ அதே மாதிரி அந்த அந்த இடத்தில அந்த அந்த பொருள் இருக்கணும். இருந்தே ஆகணும்.”

Advertisement

“அம்மா நாங்க மூணு தான் உடைச்சோம் மீதி எல்லாம் உங்க கை பொறுப்பு.”

“செருப்ப எடுத்தா தெரியும் யாரு பொறுப்புன்னு. “

” அத்த… என்ன அத்த நீங்களா இப்டி பேசுறிங்க. “

Advertisement

” அண்ணியாது  சொன்னாங்க. நான் செஞ்சிடுவேன். ஒழுங்கு மரியாதையா மூணு பேரும் சேர்ந்து இந்த வீட்டை பழையபடி மாற்றி வைக்கிறிங்க.”

சித்து கண்ணனை திரும்பி பார்க்க .., அவனோ நல்ல பிள்ளையாக வீட்டை சுத்தம் செய்ய துவங்கி இருந்தான்.

‘ அடபாவி… உன்னால மட்டும் எப்படி டா டக்கு டக்குனு பர்ஃபாமென்ஸ் பண்ண முடியுது. ஆமா கூட ஒருத்தி ஒண்ணுமே தெரியாத மாதிரி.. மூக்கை உறிஞ்சிட்டு அழுதுட்டு இருந்தாலே எங்க அவ…’

சித்துவின் மனசாட்சிக்கு பதில் சொல்லவே வெளியில் வந்தால் ஆரதி.. கையில் குடும்பத்திற்கே பழச்சாறு எடுத்து கொண்டு. சித்துவின் முகத்தை வைத்தே அவன் எண்ணங்களை புரிந்து கொண்டவள்…”என்னை சித்து சும்மா நின்னுட்டு இருக்க. கண்ணன் கூட சேர்ந்து வேலைய பாரு. அப்புறம் உடைஞ்ச பொருளெல்லாம் ஆர்டர் பண்ணி விடு. என் மாமியார் சொன்ன மாதிரி.. பழையபடி இந்த வீடு இருக்கணும்.” என்றவள் முதல் பழச்சாறை ரதி தேவிக்கு தர அவளோ ஆரதியின் முகத்தை பார்க்காமலே வாங்கி கொண்டாள். அடுத்தடுத்து கொடுத்து வந்தவள் மஹாலட்சுமியிடம் வந்து நிற்க..,
அவரோ அங்கிருந்து எழுந்து சென்றார்.

மஹாலட்சுமியின் பின்னாலே சென்ற ஆரதி அவரிடம் பேச்சுக் கொடுக்க.., மஹாலட்சுமியோ அறைக்குள் சென்று கதவை சாத்த முயன்று கொண்டிருந்தார்.

“அத்த.. இப்படிலாம் பண்ணிங்க அப்புறம் உங்க பேர பிள்ளை கோச்சிக்கோம். “

ஆரதியின் வார்த்தையில் திடுக்கிட்டு கதவை நன்றாகத் திறந்து கொண்டு அதிர்ச்சியாக

“என்ன சொல்ற….”

வயிற்றில் கை வத்து கொண்டு கண்ணனின் பின்னால் சென்று நின்றுக்  கொள்ள, இன்னும்  அதிர்ச்சி சம்பவம் முடியலையா என்பதை போல அனைவரும் எழுந்து நின்றனர். கண்ணனே இதை எதிர் பார்க்காததால் கையில் உடைந்த பீங்கான் குவளையோடு நிற்க..

“அய்யோ ஆதி நானே மறந்துட்ட. இப்படியா வயித்துல குழந்தைய வச்சிட்டு கோவபடுவ. நாளைக்கே என் பொண்ணு வெளிய வந்து என்ன சித்தப்பா அம்மா இவ்ளோ கோவபடுறாங்கன்னு கேட்டா என்ன சொல்லுவேன். மொதல்ல இந்தா.. இந்த ஜூஸை  குடி. வந்து இப்டி உக்காரு. அம்மா அந்த ஃபேன கொஞ்சம் போடுங்க. அத்தை நீங்க ஆதிக்கு ஏதாச்சும் சாப்பாடு ரெடி பண்ணுங்க.” என்றவன் மிகவும் சிரத்தையாக.. ஜூஸை ஆரதிக்கு புகட்ட இதை ஆரதியே எதிர்பார்க்கவில்லை.

அங்கிருந்த அனைவரும் மீண்டும் கண்ணனை வெறிகொண்டு முறைக்க…”அம்மா அதலாம் ஒண்ணும் இல்லம்மா. உன் பைய உத்தமன்.”

” என்னது உத்தமனா… நம்பாதிங்க யாரும் நம்பாதிங்க.  உலகத்துலையே பெரிய அயோக்கியன் இவன் தான். இரண்டு நாளுக்கு முன்னாடி கூட இவ ரூம் ல தான் தங்கி இருந்தான். ரதி தேவிக்கு கூட இது தெரியும் வேணும்’னா கேட்டு பாருங்க. ” என தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இந்த முறை தன் பர்பாமென்ஸை ஆரம்பித்திருந்தான் சித்து.

“உன்னைக் காப்பாற்றி இருக்க கூடாது அப்படியே வண்டில  தள்ளிவிட்டு சாகடிச்சி இருக்கனும் டா  ” மீண்டும் அங்கு பொருட்கள் உடைய

பொறுமை இழந்த ராசாத்தி…” அட தம்பிங்களா போதும் நிறுத்துங்க இனிமே இந்த வீட்டுல உடைக்க பொருள் எதுவும் இல்ல. படிச்ச பிள்ளைங்க மாதிரியா நடந்துக்குறிங்க. உங்களை நம்பி வேற என் பொண்ண கண்டுபிடிக்கச் சொல்லி உட்கார்ந்து இருக்கேன். நீங்க என்னடான்னா ஒவ்வொன்னா உடைச்சு விளையாட்டு இருக்கீங்க.”
அமைதியின் உருவமே கோபம் கொள்ள… அதன்பின் சண்டை நிறுத்தப்பட்டது.

“அண்ணி இவங்க சொல்றது உண்மையான கேளுங்க…” மஹாலட்சுமி.

“ஐயோ அண்ணி இன்னுமா இதுங்க பேச்ச நம்புறீங்க. பார்த்தாலே தெரியல மூணு பேர் மூஞ்சியும். நம்ம பெத்ததுங்க சரியான கிரிமினலுங்க வாய தொறந்தா… சரளமா பொய் வரும். இதுங்கள நம்பி எப்படி தான்… வேலையை தராங்களோ. பேசாம வாங்க அண்ணி. இதுங்க பண்ண இம்சையில சாப்பிடக் கூட இல்ல. லவ் பண்றத வெளியே சொல்லவே…. இந்த முக்கு முக்குதுங்க . இதுல குழந்தை ஒண்ணுதான் குறை. நம்ம பெத்த ரத்தினங்க  சரியான பைத்தியங்க.”சரஸ்வதியின் பேச்சிற்கு பதில் கூற வந்த சித்துவை தடுத்த ரதி தேவி..,

“ரத்தினங்க… பைத்தியங்க… ரைமிங் செம்மையா இருக்கு அதான் சொல்ல வந்தீங்க..”

‘இவ்வளவு நேரம் நல்லா தனமா பேசின… கொஞ்ச நேரத்துல உன்ன நம்பிடனே. நீ எப்பவுமே சதி தேவி தான். ‘ ‌தன் எண்ணங்களை யூகித்த ரதி தேவியை மனதில் திட்டியவன் வெளியில் வாயை மூடிக் கொண்டு அமைதியாக அமர்ந்து கொண்டான்.

சரஸ்வதியின் வார்த்தையில் தெளிந்த மஹாலட்சுமி… இந்த முறை உண்மையாகவே கோபம் கொண்டு செல்ல, அதை கவனித்த கண்ணன் தான் பார்த்துக் கொள்வதாக ஆரதியிடம் சைகை செய்தான்.

ஊருக்கு கிளம்புவதாக சொன்ன ரதிதேவி தடுத்து சரஸ்வதி “இந்த மாதிரி நடக்கும்’னு நான் எதிர்பார்க்கல. நடந்தது நடந்து போச்சு.. இவ்ளோ நாள் இருந்துட்ட இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போ. அப்பா அம்மா வேலை இருந்தா கிளம்பட்டும். இத்தனை நாள்  இருந்துட்டு திடீர்னு போனா சங்கடமா இருக்கும் .”

ரதி தேவிக்கும் மணிகண்டனுக்கும் இங்கு இருப்பது விருப்பமில்லை என்றாலும் சரஸ்வதியின் வார்த்தைக்காக ரதிதேவி மட்டும் இங்கே இருந்து கொண்டு தன் பெற்றோர்களை வழியனுப்பி வைத்தாள்.

“ஆழி அத்த இன்னுமும் என் மேல கோவமா தான் இருக்காங்க. உன்ன அன்னைக்கு திட்டினது ல இருந்து என் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல. ரொம்ப கஷ்டமா இருக்கு. “

அவளின் கைப்பிடித்து அருகில் இழுத்தவன்..” ரதி அம்மாக்கு என்னை திட்னதால  கோபம் இருக்காது. நீ வேற ஏதாச்சும் பண்ணி இருப்ப நல்லா யோசி.”

கண்ணனின் வார்த்தையில் இன்னும் தெளியாமல் இருப்பவளை கண்ட சித்து, “ஆதி கண்ணன் சொல்றது சரிதான். நீ என்ன பேசுனனு யோசிச்சி பாரு. அம்மாக்கு எங்க மேல கூட கோவம் இருக்கும். உன் மேல கண்டிப்பா இருக்காது. நாங்களே இன்னும் அம்மாகிட்ட அன்னைக்கு நடந்ததை பற்றி பேசல. இப்போலாம் உன்னோட நிதானம் ரொம்ப தவறுது. கண்ணன்  உன்னோட பலம். அதையே பலவீனமாக்காத.”  தீவிரமாக பேசியவனின் தலையில் தட்டிய கண்ணன்,

“உன்னை இப்ப யாராச்சும் கூட்டங்களா. எப்பப்பாரு இவ பின்னாடியே சுத்திகிட்டு இருக்க. போய் வேலையை பாருடா…”

“ப்ச்..!! எதுக்கு ஆழி அவனை திட்டுற. பாவம் பித்து. நம்ம ரெண்டு பேர விட இவன் தான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கான். என் பேபிய திட்டாத.”

“ஆமா ஆமா பேபி தான். உன் பேபி பண்ண காரியம் தெரியுமா. மொத்தமா உன்ன விட்டு போக பார்த்தான். நான் மட்டும் வரலைன்னா இந்நேரம் உன் பேபி எமதர்மன் கூட எங்கேஜிமெண்ட் நடத்தி இருப்பான்.”என்றவன் வரும் வழியில் சாலையில் சித்து தன்னை மறந்து வந்ததை கூற,

“பித்து யாரு என்ன சொன்னா என்ன.  அதுக்காக இப்டியா பண்ணுவ. ஆழி மட்டும் இல்ல நீயும் என்னோட பலம் தான். ரெண்டு பேர்ல யாரு இல்லன்னாலும் என்னால நிம்மதியா இருக்க முடியாது. இனிமே இப்படி பண்ணாத பித்து.” ஆரதியின் வார்த்தையில் கரைந்திருந்த சித்து அவள் அருகில் மண்டியிட்டு அமர்ந்து மடி மீது தலை வைக்க சென்ற நேரம்..,

சித்துவின் தலையை தன் கைகளில் தாங்கிய கண்ணன்.. போதும் போதும் ஃபில் பண்ணது. பலம் பாலம் லா அப்புறம் பேசிக்கலாம் இப்ப போய் வேலையை பாரு. நைஸா வேலையில
இருந்து தப்பிக்க பிளான் பண்ணதா.

‘கிராதகா… எப்படித்தான் கரெக்டா கண்டு பிடிக்கிறானோ…’வழக்கம்போல் வெளியில் சொல்லாமல் தன் வேலையை  கவனிக்க சென்றவனை பார்த்துக் கண்ணன் சிரித்து விட, அவனை ஏகத்துக்கும் முறைத்துக் கொண்டிருந்தாள் ஆரதி.

அம்மு இளையாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!