Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி.

26. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி..!

இறந்த பெண்ணின் உடற்கூறு ஆய்வுகள் உயிருடன் இருக்கும் மூவரையும் உயிரோடு சிதைத்து கிழித்து இருந்தது. அதுவும் ஆரதிக்கு இவை உண்மை தான என நம்புவதற்கே மனம் மறுத்தது. பத்திரிக்கை துறையை அவள் தேர்ந்தெடுத்ததற்கு காரணமே.. தன்னால் முடிந்த அளவு மட்டும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை இந்த உலகிற்கு பறைசாற்ற தான். தன் வேலையையும் இரண்டாம் பட்சமாக கருதி தனிப்பட்ட முறையில் அதற்காக அவள் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம். தன் கையிலிருக்கும் ரிப்போர்ட்டை படிக்க படிக்க ஏனோ பெண்ணுள்ளம் தன்னுடைய கர்ப்பப்பையை இழந்தது போல் உணர ஆரம்பித்தது. அப்பெண்ணே தவறு செய்து இருந்தாலும்… இந்த தண்டனை பெரிதாகவே தோன்றியது மூவருக்கும். படித்தவர்கள் இதிலிருந்து வெளியில் வராமல் இருக்க. .. இந்த அளவு செய்தவன் இன்னும் போக்குக் காட்டிக் கொண்டிருப்பது தான் மூவரையும் சினம் கொள்ள செய்தது. தன் வேலையில் வருங்கால மனைவி வருவதைக் கூட விரும்பாதவன் இன்று இருவருடன் சேர்ந்து ஆலோசிக்கும் அளவில் அவன் மனநிலை தேய்ந்து இருந்தது.



Advertisement

கண்ணனைப் போலவே சித்துவும் இரு அன்னைகளின் அன்பில் வளர்ந்தவன். ஆரதி அவனுக்கு இன்னொரு தாயாக, சகோதரியாக, தோழியாக கூடவே வாழ்ந்து வருபவள். இவர்களுக்கு மத்தியில் வாழ்ந்த இரு ஆண்களுக்கும் இனம் புரியாத வலி நெஞ்சில். ரதிதேவியின் விவகாரத்தில் கூட பொறுமையாக கையாண்டது பெண்ணுக்கு தரும் மரியாதைக்காகவே. மூவரும் ஒரே மாதிரியான மனநிலையில் இருக்க முதலில் பேச்சு ஆரம்பித்தது சித்து தான்.

“கண்ணா! உன்கிட்ட நான் பேச வந்த விஷயமே வேறு. இந்த ரிப்போர்ட்டை படிச்சதும் ஒரு மாதிரி ஆகிடுச்சு. இந்த பொண்ண பத்தின டீடெயில்ஸ் கிடைச்சுதா?”

ஆழ்ந்த பெருமூச்சு… வெளியிட்டவன், “இல்ல சித்து. காணாம போன பெண்களோட லிஸ்ட் இப்பதான் கைக்கு வந்து இருக்கு. அதிலிருந்துதான் என்ன ஏதுன்னு பார்க்கணும்.”

Advertisement

(சித்துவிடம் வீட்டில் கண்ணன் பேசியதை தெரிவித்திருக்க, அப்படியே அதை ஆரதியிடம் தெரிவித்திருந்தான். கூடவே, “இறந்த பொண்ண பத்தின டீடெயில்ஸ் கிடைச்சா ஓகே. இல்லன்னா இது அனிதாவா இருக்குறதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு ஆதி. எதற்கும் கண்ணன் கிட்ட பேசி பார்க்கலாம் வா.” எனக்கூறி தான் அழைத்து வந்திருந்தான்.

Advertisement

ஆரதியோ முதலில் மறுத்தாலும் எதற்கும் விசாரித்துப் பார்க்கலாம் என்று தான் இங்கு வந்து இருந்தாள். ஆனால்,அந்த ரிப்போர்ட்டை படித்ததிலிருந்து இது அனிதாவா இருக்கக்கூடாது என்பதுதான் அவளது வேண்டுதலாக இருந்தது.)

கண்ணனின் பதிலில் திரும்பி ஆரதியை பார்த்தவன் ‘சொல்’ என்பது போல் சைகை செய்ய,

“ஆழி!  எங்க ரெண்டு பேருக்கும் சின்னதா ஒரு அனுமானம் இருக்கு. இறந்த இந்த பொண்ணு ஏன் அனிதாவை இருக்கக்கூடாது.”

Advertisement

ஆரதியின் பேச்சில் சாய்ந்து இருந்தவன் நிமிர்ந்து அவளை பார்த்து, “இப்படி சொல்ற..”

“அனிதா வயசு தான் ரிப்போர்ட்டில் சொல்லி இருக்காங்க. முக்கியமா அவ எழுதின டைரியை படிச்ச நம்ம மூணு பேருக்கும் நல்லாவே தெரியும் அனிதா தீவிரமா காதலித்து இருக்கான்னு. இப்போ அந்த பொண்ணு காணாம போயிருக்காள். இறந்து மூணு மாசத்துக்கு மேல இருக்கும்னு ரிப்போர்ட்டில் சொல்லி இருக்காங்க. அப்படி பார்த்தா… அனிதா அம்மா இங்க வந்து விசாரிக்கும் பொழுது ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே அனிதா வேலையை விட்டு நின்னுட்டான் சொல்லி இருக்காங்க. அந்த ரெண்டு மாசமும் அவ வேலை செஞ்ச இடத்தில்தான் தங்கி இருந்திருக்கா. ராசாத்தி அம்மா ரெண்டு மாசம் கழிச்சு தான்  தேடிப்பார்த்து கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க. போலீஸ்காரங்க அதை உடனே எடுத்துக்காம ஒரு மாசம் கழிச்சு தான் எடுத்து இருக்காங்க. அனிதாவும் அந்த ஒரு மாசத்துல தான் கான்டக்ட் இல்லாம போயிருக்கா. எப்படி கணக்குப்போட்டு பார்த்தாலும் அந்த ரிப்போர்ட்ல  சொல்லியிருந்த மாசத்துக்கு முன்ன பின்ன தான் இருக்கும்.” சித்துவின் நீண்ட விளக்கத்தில் கண்ணனுக்கும் சிறு சந்தேகம் வர,

“நீ சொல்றது கரெக்ட் தான் சித்து. நீ சொல்லாம இருந்து இருந்தாலும்… காணாம போன லிஸ்ட்ல கண்டிப்பா அனிதா கம்ப்ளைன்ட் உம் இருந்திருக்கும். அப்போ விசாரிச்சு தான இருக்கணும். அதுக்கு இப்பவே முதல்ல இது அனிதாவான்னு விசாரிச்சா என்ன?”

“கரெக்ட் ஆழி. பட், ஒரு வேளை இது அனிதாவா இல்லன்னா … நம்மளே ராசாத்தி அம்மாவ பயமுறுத்துன மாதிரி ஆகிடும். அதனால முதல்ல வானதியை மட்டும் கூப்பிட்டு வந்து எதுவும் சொல்லாம டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாம். அது அனிதாவை இருந்தா மட்டும் அவங்க ரெண்டு பேர் கிட்டையும் சொல்லிக்கலாம்.”

ஆரதியின் வார்த்தையில் சரி என்பது போல் இருவரும் தலையசைக்க,
“நீங்க ரெண்டு பேரும் ஹாஸ்பிடல்ல இருங்க. நான் வானதியை கூட்டிட்டு வரேன்.”என்றவள் வீட்டிற்கு சென்று உறங்கிக்கொண்டிருக்கும் வானதியை எழுப்பி,

“வானதி! இன்னைக்கு உனக்கு சின்னதா செக்கப் இருக்கு. எனக்கு தெரிஞ்ச டாக்டர் கிட்ட உன்ன பத்தி சொன்னேன். உடனே உன்னை பாக்கணும் னு சொல்றாங்க. பத்து நிமிஷத்துல கிளம்பனும்” என்றவள் வானதி கிளம்ப உதவி செய்ய முன்பை விட இப்பொழுது நன்கு தேறி இருந்த வானதியும் ஆரதிக்கு சிரமம் வைக்காமல் கிளம்ப தயாரானாள்.

வந்திறங்கிய வானதியை கை தாங்களாக அழைத்து வந்தான் சித்து. கண்ணன் சொன்னதன் பேரில் வானதி இடம் அவளுக்கு சந்தேகம் வராதபடி சாம்பிள் மாதிரிகள் எடுக்கப்பட அத்தனைக்கும் வானதி ஒத்துழைத்தாள். கொஞ்சம் நேரத்தில் வானதி வெளியில் வர இந்த முறை கண்ணன் அவள் நடக்க உதவி செய்தான். வந்தவளுக்கு நீரை பருக கொடுக்க அதை மறுத்தவள்,

“அக்கா எங்க..? சார்……. நான் பார்க்கனும்.”

வானதியின் கேள்வியில் மூவரும் ஸ்தம்பித்து நிற்க, அவளது சந்தேகமும் உறுதியாகியது.  கண்ணில் நீரை தேக்கி பதிலுக்காக கண்ணனைப் பார்க்க,

அவனோ, “என்னடா சொல்ற புரியல.”என்றான் வார்த்தையில் தடுமாற்றம் கூட்டி.

“சார் நானும் படிச்ச பொண்ணு தான். எனக்கு நடக்குற ட்ரீட்மெண்ட்டுக்கும் மத்ததுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு முட்டாள் இல்லை. நீங்க ஆண்ட்டி கிட்ட பேசிட்டு இருந்ததை நானும் கேட்டேன். அது யாரோ இருக்கும்’னு நினைச்சேன். அப்போ என் அக்கா தானா..? சொல்லுங்க என் அக்கா எங்க…?” வானதியின் பேச்சில் ஆண்கள் இருவரும் ஒதுங்கி நிற்க,

ஆரதி தான் அருகில் அமர்ந்து அழுவதற்கு தயாராக இருந்த கண்ணைத் துடைத்து , “வானதி நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லை.  இறந்தது உன் அக்காவா இருக்கலாம்’னு ஒரு சந்தேகம். அது பொய்யாவும் இருக்கலாம். உங்க கிட்ட சொல்லி கஷ்டப்படுத்த வேண்டாம்’னு நான் தான் இந்த மாதிரி பண்ண சொன்னேன். அனிதாக்கு எதுவும் ஆகி இருக்காதுன்னு நம்புவோம். ரிசல்ட் வர வரைக்கும் தைரியமா இரு. என்ன நடந்தாலும் நாங்க உன் கூட தான் இருப்போம்.” என்றவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தால் வானதி.

“வானதி… இது நீ கவலைப்படுற நேரமில்லை. தைரியமா இருக்கணும். இங்க இருந்து முதல்ல கிளம்பலாம் வா. ரிசல்ட் வந்ததும் ஆரதி கூப்பிடுவா. அதுவரைக்கும் வெளியே எங்கேயாவது போயிட்டு வரலாம்.”

“இல்ல சித்து. நீ வானதியை வீட்டுக்கு அழைச்சிட்டு போ. ரிசல்ட் வர நாளைக்கு ஆகும். எங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வரோம்.”

அண்ணனின் பதிலில் தலையசைத்தவன் வர மறுத்த வானதியை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றான்.

“கண்ணா ஒவ்வொரு நிமிஷமும் பட படப்பா இருக்கு. யாரோ ஒருத்தருக்கு நடந்தாலே அதை பொறுத்துக்க முடியாது. இப்போ நம்ம கூடவே இருக்க ஒருத்தருக்கு நடக்கப்போகுதுன்னு நினைச்சாலே பயமா இருக்கு. ரிசல்ட்டை கொஞ்சம் சீக்கிரம் குடுக்க சொல்லு.”

“நானும் சொல்லி இருக்க ஆதி. நமக்காகத்தான் அவசர அவசரமா ரெடி பண்றாங்க. நீ அனிதா பத்தி எந்த அளவுக்கு விசாரிச்சு வைத்திருக்க.”

கண்ணனிடம் அனைத்தையும் சொல்லியவள் …’நீ’ என்பதை போல் பார்க்க அவனும் இதுவரை நடந்த அனைத்தையும் ஆரதியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

“கண்ணா இவ்வளவு நடந்திருக்கு அப்புறம் எதுக்காக ராபர்ட் மனைவி கிட்ட விசாரிக்காம இருக்க. இப்பவே அவங்ககிட்ட விசாரணையை ஸ்டார்ட் பண்ணு. அதுமட்டுமில்ல மைக்கேல் ல கடைசியில திருச்சியில் இறக்கி விட்டதா தான சொன்னாங்க. அங்க இருக்க எல்லார்கிட்டயும் அவனுடைய போட்டோவைக் கொடுத்து விசாரிக்க சொல்லு.”

“அதெல்லாம் சொல்லிட்ட ஆதி. அவனை பத்தின எந்த தகவலும் இல்லை. அஞ்சலை மேரிக் கிட்ட விசாரிக்காம இருக்கறதுக்கு காரணம்.. அவங்கள கண்காணிக்க தான். இந்த கொலையில அவர்களுக்கும் பங்கு இருக்கும்’னு சின்ன சந்தேகம். இப்ப வரைக்கும் அந்த மாதிரி எந்த சந்தேகமும் உறுதியாகல. இந்த டெட்பாடி மட்டும் கிடைக்காம இருந்திருந்தால் இந்நேரம் அவங்ககிட்ட விசாரணையை முடித்து இருப்பேன்.”

“நீ கிளம்பு கண்ணா. இங்க நடக்க வேண்டியதை நான் பாத்துக்குறேன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!