Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி.

3. பைங்(குழி)கிளி

இருவரும் குளிர்சாதன வசதி பொருந்திய சைவ உணவகத்திற்கு வந்திருக்க… சாப்பாடு வேண்டாம் என்றவளோ முதலில் தனக்கான உணவை எடுத்து வரச்சொல்லி உண்டு கொண்டிருக்க…



Advertisement

உணவகத்திற்கு வரச்சொன்னவனோ.. வேறும் மாதுளை பழச்சாறோடு நிறுத்திக்கொண்டேன்.

Advertisement

Advertisement

“சொல்லுங்க ரிப்பேரு….

நான் சென்னைக்கு வந்தது எப்படி தெரியும்…? “

Advertisement

“எல்லாம் அத்தை பண்ண பொங்கலால தான். உனக்கு அது தானா பிடிக்கும்…. மாமாவுக்கும் சித்துவுக்கும் பொங்கல் பிடிக்காது. அதனால அத்தை உனக்கு மட்டும் தான் செய்வாங்க. அதுவும் நெய்யிலையே பொங்கலை குளிக்க வேற வச்சிருப்பாங்க.  அந்த வாசனை தான் எடுபுடி கோலி கண்ணன் வந்த செய்தியை சொல்லுச்சு.” என்றாள்.

அவள் பேச்சை ஆரம்பிக்கும் போது சிரித்துக் கொண்டிருந்தவன் முடித்த கடைசி வரியில் கடுப்பாகி….”ஆதீதீ.. கோலி கண்ணன் னு சொல்லாதன்னு எத்தனை தடவை சொல்றது. இன்னொரு தடவை சொல்லு பல்ல உடைக்கிறேன்..”என்றவனின் பேச்சில் சிறிதும் பயம் இல்லை என்பது போல்…

” அப்படித்தாண்டா கோலி கண்ணன் சொல்லுவேன். என்ன பண்ணுவ” என்று இடக்கு மடக்காக பதில் கூற,

“ஓஹோ..!  மேடம் அப்படி தான் சொல்லுவீங்க. அப்படி தானே… சரி நீ சொல்றது சொல்லிக்க.நான் இந்த வீடியோவை  படவரி ல ( Instagram)  போடுறேன்

இப்ப வேற மேடம் ரொம்ப ஃபேமஸ். சோ தைரிய பெண்மணி… சாதனைப் பெண் ஆரதி வாயை பிளந்து கொண்டு தூங்கும் வீடியோ… கின்னஸ் ரெக்கார்டு அளவுக்கு பகிரப்படும்.”  என்றவன் தனது கைப்பேசியில் இருந்த காட்சிப் பதிவை அவளுக்கு காட்டியவாறு… அதிகாலை நடந்த சம்பவத்தை நினைக்கத் தொடங்கினான்.

அதிகாலை 3 மணிக்கு தன் இல்லத்திற்கு நுழைந்த ஆழி கண்ணன்.. தன்னிடமிருக்கும் சாவியைக் கொண்டு வீட்டை திறந்து தன் அறைக்கு சென்றான். நிலவு வெளிச்சம் ஜன்னல் வழியே உள்ளே இருந்தாலும்…. பெரும்பகுதி இருட்டாக இருந்ததால் அறையின் விளக்கை போட்டவனின் விழிகளில் விழுந்தது..  கட்டில் மெத்தையில் மூடு திரையை( bed sheet) உடல் முழுவதும் மறைத்துக்கொண்டு தாடையில் ஒரு கையையும், அருகிலிருக்கும் தலையணையில் ஒரு கையும் வைத்துக்கொண்டு சுகமாகத் தூங்கும் ஆரதி தான்.

நம்ப முடியாத ஆச்சரியத்தில்… அவளருகில் அமர்ந்தவன் மெல்ல அருகிலிருக்கும் தலையணை எடுக்க போக.. அதை இழுத்து திரும்பவும் அணைத்து கொண்டு உறங்கும் ஆரதியை கண்டவனுக்கு சிறுவயதில் இருக்கும் 7 வயது ஆரதி கண் முன் வர மெல்ல அவள் அருகில் படுத்தவன் ‘ரதி உன் பழக்கம் இன்னமும் மாறவே இல்லை டி. சின்ன வயசுல… என்னோட தலகானியையும் சேர்த்து அணைச்சி கிட்டு தூங்கிடுவ. உன்கிட்ட இருந்து அதை வாங்குறதுக்குள்ள எனக்கு பொழுது விடிஞ்சிடும். உன்னோட சின்ன வயசு சேட்டை எல்லாம் இப்ப வரைக்கும் எனக்கு ஞாபகம் இருக்கு. உனக்கு மறந்து இருக்கும்னு நினைச்சேன் ரதி. இங்க தூங்குறதை பார்த்ததுக்கு அப்புறம் தான்  நீயும் எதையும் மறக்கல ன்னு புரிஞ்சுகிட்டேன். நீ இங்க வரும் போது நான் இருக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன் ரதி. நடுவுல ஒரு முக்கியமான வேலை வந்ததுனால இருக்க முடியாம போயிடுச்சு. எப்படா அங்கிருந்து  தப்பிச்சி வந்து உன்னை பாப்போம்னு தவிச்சிக் கிட்டு இருந்தேன் தெரியுமா. அதனாலதான் வேலை முடிஞ்ச கையோட கிளம்பி வந்துட்டேன். உன்னோட ரூமுக்கு தான் முதல் போகலாம்னு நினைச்சேன். சரி இந்த நேரத்துல போக கூடாதுன்னு…. வந்தா நீ இங்க என் ரூம்ல இருக்க. எனக்கு இப்போ இந்த நிமிஷம் எப்படி இருக்கு தெரியுமா……….. அப்படியே இந்த உலகத்துல நானும் நீயும் மட்டும் தான் இருக்க மாதிரி இருக்கு. என்ன தேடுனியா ரதி. இத்தனை நாள் எனக்கு பெருசா தெரியாத இந்த மெத்தை இன்னைக்கு……. ஏதோ உலகத்துல இருக்க.. மொத்த பூவும் ஒண்ணா சேர்ந்து பஞ்சு மெத்தையா மாறி என் உடம்பை சுமந்துகிட்டு இருக்க மாதிரி இருக்கு ரதி. இங்க ஒருத்தன்  ரசிக்கிறது உனக்கு எப்ப தான் தெரிய போகுதோ ரதி. அச்சோ! தூங்கும் போது கூட எவ்வளவு அழகா இருக்கா என் ரதி. ஆனாலும் இப்ப வரைக்கும் வாய திறந்துக்கிட்டே தூங்குறதை நீ மாத்தவே இல்லையா டி. பாரு இன்னமும் ஜொள்ளு வழியுது. எப்படி இருந்தாலும் என் கண்ணுக்கு ரொம்ப அழகா தெரியுற டி ராட்சசி.  என்னோட அறையில யா வந்து படுத்துட்டு இருக்க. இத வச்சே உன்னை எப்படி பழி வாங்குறன்னு  பாரு.  என் அழகு ரதி…. தூங்குற அழகை  அப்படியே என் கண்ணுக்குள்ள சேமிச்ச மாதிரி இந்த ஃபோன்’லையும் சேமிச்சி வைக்கலாமா…. ‘ என …அவனது அலாரம் அடிக்கும் வரை மனதில் ஆரதியோடு கொஞ்சம் கொண்டிருந்தவன்.. சட்டென அவள் தூக்கம் கலைவதற்கு முன்னர் நிறுத்திவிட்டு தனக்கு வேண்டிய உடைகளை எடுத்துக் கொண்டு ஆரதி அறைக்கு சென்று தன்னை தூய்மை படித்துவிட்டு வேலைக்கு கிளம்பியதை நினைத்துக் கொண்டிருந்தவன்…………

அஆ….ஆஆஆஆஆஆஆஆஆ……ஏய்! விடு டி அய்யோ…. யாராது  பார்க்க போறாங்க விடு டி…. ஏய் ரிப்பேரு….. இப்ப மட்டும் நீ விடல இத ஊருக்கே தெரியபடுத்திடுவேன்…..

 அம்ம்ம்மாமாமா

 அஆஆஆஆஆஆஆஆஆஆ………..

 ஏய் !! எதுக்கு டி இப்படி அடிக்கிற…..

“எதுக்கு அடிக்கிறனா… உன்னை கொன்னே இருக்கனும். வந்ததும் என்னை எழுப்பி இருக்கலாம். இல்லையா நான் எந்திரிக்கிற வரைக்கும் வெயிட் பண்ணி இருக்கலாம்.  அதெல்லாம் விட்டுட்டு நான் ஜொள்ளு வழிய தூங்குறதை வீடியோ எடுத்ததும் இல்லாம இவ்வளவு தூரம் என்னை வர வச்சி… அசிங்கப்படுத்தி இப்படி காலையிலேயே கடுப்பேத்திட்டு இருக்கியே அதுக்குத்தான் . “

“ஆஆஆஆ …..ஏஏஏ…ய்ய்… ஆ நீ நல்லா தூங்கிட்டு இருந்த ஆதி அதான் உன்னை எழுப்பாம வந்துட்டேன். இப்பவும் சொல்றேன் நானா உன்னை வர சொன்னேன்.ஆஆ…

உனக்கு உன் வேலை….ஆஆஆ.. முக்கியம் என்ற மாதிரி எனக்கு என் வேலை முக்கியம்……”

“சரி அது எப்படி யாருக்கும் தெரியாம …அத்தை கரெக்டா இன்னைக்கு பொங்கல் பண்ணுனாங்க.”

“நீ வீடு அப்பதான் நான் சொல்லுவேன்”

“நீ சொல்லு அப்போதான் நான் விடுவேன்.”

“ப்ளீஸ் !! யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க. நான் ஒரு போலீஸ்காரன் . ” என்றவனின் பேச்சுக்கு மதிப்பளித்து… கொத்தாகப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்த அவனது முடியை விட்டால் ஆரதி.

“அம்மாக்கு காலையில போன் பண்ணி நான் தான் பொங்கல் பண்ண சொன்னேன். சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு வரலாம்னு நினைச்சேன். அதுக்குள்ளே மீட்டிங் வந்துருச்சு. ….. ஆஹா… ஆ ஆ ஆ….. இப்ப எதுக்குடி திரும்பவும் முடியை பிடிக்கிற… அம்ம்..மா மண்டையில இருக்க மொத்த முடியும் கையோட வந்திட போது ரிப்பேரு விடு டி….”

“விட முடியாது. அத்தைக்கு போன் பண்ணி இருக்க. அதை எனக்கு பண்ணி இருக்கலாம்’ல. நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். ..” உன் ஆபீஸ்ல இருந்த அந்த அண்ணா என்னை எப்படி பார்த்தாங்க தெரியுமா…… அதுவும் நியூஸ்லலாம் என பார்த்திருப்பாங்க தானே… யாரோ ஒரு பொண்ணு மாதிரி முறைக்கிறாரு.”

“ஆமா இவ பெரிய உலக அழகி. இவளை.. அப்படியே எல்லாரும் ஞாபகம் வச்சுக்க. உன்னோட ஒரே ஒரு போட்டோ மட்டும் தான் எல்லா நியூஸ் சேனலையும்  வருது …. அப்படியே வகை வகையா போட்டோ வந்தாலும் பாக்குற மூஞ்சா டி இது…. ஏஏஏஏஏ அடிக்குதடி…. இதுக்கு மேல அடிச்ச அவ்ளோதான்…ஆ..ஆ …..ஆஆ…

சரி இவங்க இப்படி சண்டை போட்டுட்டே இருக்கட்டும் நம்ம இவங்க குடும்ப வரலாறை பார்த்துட்டு வருவோம்.

மதுரை பக்கத்தில் உள்ள மத்திமேடு தான் நாராயணன் சண்முகம் இருவருக்கும் பூர்விகம். சண்முகத்தின் குடும்பம் அந்த ஊரிலேயே பெரிய தலைக்கட்டு. நாராயணன் குடும்பமும் ஓரளவுக்கு வசதி படைத்த குடும்பம்தான். சிறுவயதிலிருந்தே நாராயணனும் சண்முகமும் நெருங்கிய நண்பர்கள்.   கல்லூரி படிப்பை முடித்த சண்முகம் விவசாய தொழிலை கையில் எடுக்க..  நாராயணன் அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் சண்முகத்திற்கு  வீட்டில் வரன் பார்க்க ஆரம்பிக்க… சொந்தத்தில் சரஸ்வதி என்ற பெண்ணோடு திருமணம் இனிதே முடிக்கப்பட்டது. அடுத்ததாக நாராயணனுக்கு பெண் பார்க்க தொடங்க… தன் தந்தையிடம் சென்ற நாராயணன் கல்லூரியில் படிக்கும் போதிருந்தே ஒரு பெண்ணை காதலித்து வருவதாகக் கூற அதற்கு தடை ஏதும் சொல்லாமல் பெண்ணின் குடும்பத்தை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

மகாலட்சுமிக்கு அப்பா அம்மா இருவரும் இல்லை. பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர். கஷ்டப்படும் சூழ்நிலையில் இருந்தாலும்… பேத்தியின் ஆசைக்காக கல்லூரி வரைக்கும் படிக்க வைத்தார் மகாலட்சுமியின் பாட்டி. மகாலட்சுமியும்… அரசு வேலைக்காக முயற்சித்துக் கொண்டிருந்தார். மகாலட்சுமியின் குடும்ப பின்னணியை அறிந்த நாராயணனின் பெற்றோர்கள்… கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாராயணன் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காத அவர்கள்.. நாராயணனுக்கு அவசர அவசரமாக பெண் பார்க்க ஆரம்பித்தனர். இந்நிலையில் மகாலட்சுமியின் பாட்டியும் இறந்துவிட, வேறு வழியில்லாது நாராயணன் மகாலட்சுமியை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்ல…. அந்த வீடே போர்க்களமானது.

தகவல் அறிந்து அங்கு வந்த சண்முகம்… நாராயணன் பெற்றோர்களை சமாதானப்படுத்தினார். ஆனாலும் அவர்கள் முடிவாக மகாலஷ்மியை மறுக்க.. மகாலட்சுமி இனிமே சண்முகத்தோட தங்கச்சி. அவளுக்கு அண்ணனா நான் இருக்கேன். எந்த சூழ்நிலை வந்தாலும் என் தங்கச்சிக்கு என்ன செய்யணுமோ அதை நான் சரியா செஞ்சிருவேன் என்று நாராயணன் பெற்றோர்களுக்கு உறுதிமொழி அளிக்க… ஒருவாறு அவர்களும் கல்யாணத்திற்கு சம்மதித்தனர்.

பெற்றோர் சாணத்திலிருந்து சண்முகம் சரஸ்வதி இருவரும் மகாலட்சுமி நாராயணன் கல்யாணத்தை நடத்தி வைக்க…. அடுத்த ஓராண்டில் ஆழிக்கண்ணன் பிறந்தான். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையிலும் சரஸ்வதி தாய்மை உண்டாகாமல் இருந்தார்.

ஆழிக்கண்ணன் மகாலட்சுமியிடம் இருந்ததைவிட சரஸ்வதியிடம் இருந்ததே

அதிகம். இதற்கிடையில் நாராயணனுக்கு அரசு உத்தியோகமும் அதே ஊரில் கிடைத்தது.

வருடங்கள் நான்கை கடக்க… சரஸ்வதி கருவுற்றிருந்தார். சரஸ்வதி கர்ப்பமாக இருக்கும் அதேநேரம் மகாலட்சுமியும் சித்தேஷ் கண்ணனை சுமந்திருந்தார்.

சித்தேஷ் கண்ணன் பிறந்த ஒரு வாரத்தில் ஆரதியும் இந்த பூமியில் கால் பதித்தாள். ஆழிக்கண்ணன் ஆரம்பத்தில் இருந்தே.. சரஸ்வதியிடம் வளர்ந்ததால்… ஆரதி அவனுக்கு செல்லமாகி போனாள். ஒரே வயதுடைய சித்தேஷ் ஆரதி இருவரும்..பிறந்த நாள், பள்ளிக்கு செல்வது என எங்கு சென்றாலும் கைகோர்த்துச் செல்வதை பார்த்து ஆழிக்கண்ணன் பொறாமை கொள்ள… அதன் பலனாக வீட்டில் சித்தேஷ் ஆழி இருவருக்கும் போர்க்களமே நடக்கும்.

ஆழிக்கண்ணனின் பதினான்காவது வயதில் நாராயணனுக்கு பணியிட மாற்றம் வர… அவ்வூரிலிருந்து மாற்றலாகி சென்னைக்கு வந்தார்.

முதலில் ஆரதியை விட்டு வர மறுத்த ஆழியை சரஸ்வதி தான் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். ஆரம்பத்தில் நெருக்கமாக இருந்த உறவுகள்… பணியின் காரணமாக விலகி இருக்க ஆழி கண்ணன் ஆரதி உறவும் விலகி இருந்தது.

பள்ளி விடுமுறை நாட்களில் மட்டும்… ஆழி ,சித்து இருவரும் ஆரதி இடத்திற்கு சென்று விடுவார்கள். பெண் பிள்ளை மீது ஆசை கொண்ட மகாலட்சுமிக்கு ஆரதி செல்லமாக மாறி இருந்தாள்.  பருவ வயதை தொட்ட மூவரும் தங்களுக்குள் நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ள… தள்ளி இருந்த உறவுகள் மீண்டும் நெருக்கமாகி போனதன் பலனாக ஆரதி என்பவள் இவ்வீட்டில் வருங்கால மருமகளாக போகிறாள்.

சண்முகம் சரஸ்வதி இருவருக்கும்… ஆரதியை மகாலட்சுமிக்கு மருமகளாகவே ஆசை. மகாலட்சுமி நாராயணன் இருவருக்கும் கூட அதே ஆசை தான்.

இவர்கள் ஆசை நிச்சயம் நிறைவேறும்.ஆனால் ……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!