Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி.

8.  காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி….!

8.  காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி….!



Advertisement

அனிதா வேலை செய்யும் இடத்திற்கு வந்த கண்ணன், ஆரதி  இருவரும் அந்த கடையை நோட்டம் விட்டுக் கொண்டிருக்க….. சிறிது நேரத்தில் ஆரதி மட்டும் உள்ளே சென்றாள்.

அங்கிருக்கும் முதலாளியிடம் அனிதாவை பற்றி விசாரிக்க, அவரோ…”நீ யாரு மா.” கேட்க,

Advertisement

Advertisement

“நான் பத்திரிக்கை நிருபர் ஆரதி . அனிதா ன்ற  பொண்ணு காணாம போய் ஆறு மாசத்துக்கு மேல ஆகுது. கடைசியா இங்கே இருந்து தான் அவங்க அம்மா கிட்ட பேசி இருக்கா. அதான் அவளை பத்தி விசாரிக்க வந்த. அந்த பொண்ண பத்தி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.”

“அதை ஏம்மா கேக்குற வந்த புதுசுல அந்த பொண்ணு ரொம்ப நல்லா வேலை பார்த்துச்சி. லீவ் கூட எடுக்காது. ஒன்றரை வருஷத்துக்கு மேல இந்த கடையில தான் வேலை பார்த்துச்சி  மேடம். அவங்க அம்மா வந்து விசாரிக்கிறதுக்கு கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி அந்த பொண்ணோட நடவடிக்கை ஒன்னும் சரி இல்ல மேடம். அடிக்கடி லீவு எடுக்க ஆரம்பிச்சது. நேரத்திற்கு வேலைக்கு வரவும் செய்யல. எதுக்கு லேட்டா வரேன்னு கேட்டா சரியான பதிலும் சொல்லல.  அந்த பொண்ணு மேல… எனக்கு நம்பிக்கை குறைய ஆரம்பிச்சதால வேலைக்கு வர வேணாம்’னு சொல்லிட்டேன். அதுக்கப்புறமா ஒரு .. ஒரு வாரம் கழிச்சி திரும்பவும் நான் ஒழுங்கா வேலைக்கு வரேன் என்னை சேர்த்துக்கோங்கன்னு  சொல்லி கெஞ்ச ஆரம்பிச்சது. சரி ஒன்றரை வருஷமா நம்ம கிட்ட வேலை பார்த்த பொண்ணு’ன்னு நானும் நம்பி வேலைக்கு  வர சொன்ன. ஒரு ரெண்டு வாரம் நல்லா வந்திருப்பா மேடம். அப்புறம் திரும்பவும் பழைய மாதிரி ஆரம்பிச்சுட்டா. அதான் இனிமே இந்த கடை பக்கமே வராது’ன்னு விரட்டி விட்டேன். “

Advertisement

“அந்த பொண்ணை பத்தி வேற ஏதாவது  தகவல் தெரியுமா…” ஆரதி.

“இல்ல மேடம் எனக்கு ஒன்னும் தெரியாது. இங்க வேலை பார்த்துட்டு இருந்த ஒரு அம்மா தான் அந்த பொண்ண இங்க சேர்த்து விட்டாங்க. இப்போ அவங்களும் உடம்பு முடியாம வேலைக்கு வரது இல்ல. “

“ஒரு வாரம் கழிச்சு வந்ததா சொன்னீங்க ல. அப்போ அந்த பொண்ணு அனிதா கிட்ட ஏதாச்சும் வித்தியாசமான மாற்றம் தெரிஞ்சுதா.” ஆரதி.

சிறிதுநேரம் யோசித்துக்கொண்டிருந்த கடை முதலாளி.. “அந்த மாதிரி பெருசா எந்த மாற்றமும் இல்லை மேடம். ஆனா கண்ணெல்லாம் ரொம்ப வீங்கி இருந்துச்சு. ராத்திரி எல்லாம் தூங்காம அழுது இருக்கும் போல. நானும் வேலை இல்ல’ன்ற கஷ்டத்து ல அழுது இருக்கும்’னு நினைச்சு விட்டுட்டேன். 

“சரிங்க சார் நீங்க சொல்றதை நான் நம்புறேன்.. இனிமே உங்களுக்கு ஏதாச்சும் தகவல் கிடைச்சா என்கிட்ட சொல்லுங்க” என ஆரதி தன்னுடைய கைபேசி எண்ணை அவரிடம் கொடுக்க செல்ல, எதிரில் இருக்கும் கண்ணாடியில்…. அங்கு வேலை பார்க்கும் பெண்ணொருத்தி பதட்டமாக அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்க , அதைக் கண்டும் காணாமலும் ஆரதி வெளியே வந்துவிட்டாள். 

பின்னர் அக்கடையின் முதலாளியை தொலைபேசியில் அழைத்து… அப்பெண்ணைப் பற்றி விசாரிக்க.. ” அந்தப் பொண்ணு அனிதா கூட நல்ல பேசும் மேடம். இங்க வேலை பாக்குறவங்க எல்லாருமே நாலு கடை தள்ளி இருக்க ஒரு வீட்டில்தான் தங்கி இருக்காங்க. திரும்ப வேலை கேட்டு வந்தப்ப கூட இந்த பொண்ணு தான் சேர்த்துக்க சொல்லி சப்போட்டா பேசிச்சி .” என்றவருக்கு நன்றி உரைத்து விட்டு அங்கிருந்து கண்ணனோடு புறப்பட்டாள்.

வீட்டிற்குள் நுழைந்ததும்… கண்ணன் தன் அறையில் அடைந்து கொள்ள, ஆரதியோ.. சித்துவின் அறைக்குள் சென்று  ” பித்து என்ன பண்ற…” என்று மெத்தையில் படுத்திருந்த சித்துவை கடுப்பேற்ற,

“நான் என்ன பண்ணா உனக்கு என்ன. நீ எதுக்கு அத கேட்குற . நான் யாருக்கும் நடுவுல வரல. எங்கிட்டயும் யாரும் வராதீங்க.”  என்றவன் அங்கிருந்து வெளியேற…..,

“பித்து இப்ப மட்டும் நிக்கல அவ்வளவுதான்.” என்றவள் செல்பவனை தடுத்து நிறுத்த,

அவனும் இவளை தள்ளி விட்டு வெளியேறினான்.

அதில் கடுப்பான ஆரதி ,அவன் பின்னே சென்று…. படிக்கட்டில் இறங்க விடாமல் அவன் காலை தடுத்துவிட… அவனோ கால் இடரி கீழே விழுந்தான்.

விழுந்தவனை தூக்கி விடாமல்… சத்தமாக சிரிக்க, சித்து கோபத்தில் அருகிலிருந்த பூச்சாடியை எடுத்து அவள் மீது ஏறிய , அது அவள் மீது படாமல் சரியாக தரையில் விழுந்து நொறுங்கியது. அச்சட்டத்தில் வீட்டில் இருந்த கண்ணன், மஹாலட்சுமி, நாராயணன் மூவரும் வெளியில் வந்து புரியாமல் பார்க்க, 

“மாமா! இங்க பாருங்க இவன் என்னை அடிக்கிறான்… ” ஆரதி.

“அப்பா! அவ சொல்றத நம்பாதீங்க அவ தான் என்னை கீழே தள்ளி விட்டா.” சித்து.

“பித்து பொய் சொல்லாத நீதான் என்னை முதல் அடிச்ச.”

” பாருங்கப்பா நீங்க எவ்வளவு அழகா வச்ச பேர கிண்டல் பண்ணி பேசுறான்னு. வரவர இவளுக்கு கொழுப்பு அதிகமா போச்சு. பேசுற வாய உடைச்சா சரியாயிரும்.”

“யாரு வாயை யாரு உடைக்கிறாங்கன்னு  இப்போ பார்க்கலாம….” என்றவள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் அவன் மீது  எறிய, அவனும் பதிலுக்கு கையில் கிடைக்கும் பொருட்களை எறிய ஆரம்பித்து இருந்தான்.

இவ்விருவரின் சேட்டையில்… பதறிய மஹாலட்சுமி , நாராயணன் இருவரையும் தடுக்க செல்ல, அந்நேரம் ஆரதி தூக்கி அடித்த பென் ஸ்டாண்ட் கண்ணனின் காலை பதம் பார்க்க…. ஆரம்பித்தது. சித்துவும் தன் பங்கிற்கு கண்ணனின் மற்றொரு காலை பதம் பார்க்க … கண்ணன் இரண்டு காலையும் மாற்றி மாற்றி பிடித்துக்கொண்டு தரையில் அமர்ந்தான்.

அதைப் பார்த்த மஹாலட்சுமி சித்துவை திட்டி வர…, அவன் ஆரதியை அடிக்க செல்ல , நாராயணன் மருமகளை காக்க போராட ‌.. ,

கண்ணன் தன் பங்கிற்கு இருவரையும் அடிக்க துரத்த… என்று சிறிது நேரத்திலேயே அந்த வீடு கலவர பூமியாக மாறி கொண்டிருக்க .. அங்கிருந்த வேலைக்காரர்கள்  தான் பேந்த பேந்த முழிக்க ஆரம்பித்திருந்தனர். 

அலுவலகத்திற்கு வந்த கண்ணனுக்கு .., நேற்று உடற் கூறாய்வுகாக அனுப்பி வைக்கப்பட்ட மருத்துவச் சான்றிதழ் தயாராக இருப்பதாக தகவல் வர அங்கு விரைந்தவன் .. மருத்துவர்களிடம் விசாரிக்க,

“சார் இந்த டெட்பாடி ஒரு ஆணோடது. இவர் இறந்து ஒரு ஆறிலிருந்து ஏழு நாள் ஆகி இருக்கலாம். இது கொலை தான். ஏன்னா அவரோட மண்டையில பலமாகத் தாக்கப்பட்டு இருக்கு. அதுமட்டுமில்லாம கால்லயும் அதே மாதிரி இருக்கு. அவரோட  உடம்புல அங்கங்க  ரத்தம் கட்டி இருக்கு. ஏதாச்சும் ஒரு இரும்பு பொருளா ல இவரைத் தாக்கி இருக்கலாம். அதுமட்டுமில்லாம கழுத்தை நெரித்தற்கான  தடயமும் இருக்கு. முக்கியமா சொல்லணும்’னா பாதி உயிர் இருக்கும் போதே.. பாலித்தீன் கவராலா  அவருடைய முகத்தை இறுக்கி கட்டி இருக்காங்க. ஏற்கனவே அடிப்பட்டு பாதி உயிரா இருந்தவரு இந்த கவர் கட்டினதால  மூச்சு விட முடியாம திணறி இறந்திருக்காரு. அதுவும் இல்லாம அவரோட உடம்புல ஆல்கஹால் இருந்ததற்கான ஆதாரம் இருக்கு.  குடிச்சிட்டு ரெண்டு பேருக்குள்ள சண்டை நடக்கும் போது இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பிருக்கு . “

“எதை வச்சு சொல்றீங்க… டாக்டர்” என்ற கண்ணனுக்கு, 

“அவரோட மூக்குல பலமா தாக்கி எலும்பு உடைந்து இருக்கு. பொதுவா  சண்டை நடக்கும் போது எதிரில் இருக்க ஆள் ..ஒன்னு கண்ணத்து ல அடிப்பாங்க. இல்ல’னா மூக்கை பார்த்து குத்த  அதிகமாக வாய்ப்பு இருக்கு. ” என்ற மருத்துவரை பார்த்து,

“இந்த டெட்பாடி பத்தி வேற ஏதாச்சும் தகவல் இருக்கா”   கண்ணன் கேட்க,

“இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னாடி  அவருடைய தலையில இரண்டு இடத்துலையும், முதுகுல ஒரு இடத்துலையும் , கனு காலுக்கு மேல ரெண்டு இடத்துலயும் வெட்டு விழுந்து தையல் போட்டதற்கான தழும்பு இருக்கு. என்று மருத்துவர் கூற,

“அப்போ இறந்தவன் ஒரு ரவுடியா இருக்க அதிகம் வாய்ப்பு இருக்கு அப்படித்தானே டாக்டர்.” 

“கண்டிப்பா இருக்கும் சார். பெரும்பாலும் விபத்துல இந்த மாதிரி வெட்டு படாது. கத்தி, அருவாள் இந்த மாதிரி ஆயுதத்தால தான் இவ்வளவு  ஆழமான வெட்டு  ஏற்படும். ” என்ற மருத்துவரிடம் இருந்த உடற்கூறாய்வு தகவலை வாங்கிக் கொண்டு தனது அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றான் கண்ணன்.

அனிதா வேலை செய்த கடையில் உள்ள வேலையாட்கள் அனைவரும் வேலையை முடித்து விட்டு அங்கிருந்து தங்கள் வீட்டுக்கு புறப்பட்டு செல்ல.., அந்த கடையின் முதலாளி மட்டும் செல்லாமல் ஆரதி காக காத்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே அவரை அழைத்து ஆரதி.. அங்கு வேலை செய்யுற  எல்லாரையும் வீட்டிற்கு அனுப்பிட்டு நீங்க மட்டும் வெயிட் பண்ணுங்க. நான் வரேன் என்ற தகவலை சொல்லி இருந்ததால் அவளுக்காக காத்திருந்தார்.

அவரை வெகு நேரம் காக்க வைக்காமல் வந்த ஆரதி….”சார் இன்னிக்கு முழுக்க ஓடுன சிசிடிவி புடேஜ் நான் பாக்கணும்” எனக் கேட்க,

அவரும் ஆரதிக்கு கடையில் உள்ள… எட்டு கேமராவில் பதிவாகியுள்ள காட்சி பதிவையும் போட்டுக் காட்ட ஆரம்பித்தார். 

“சார்! சரியா நான் வந்து போன பின்னாடி  இருந்த பதிவை மட்டும் காட்டுங்க” .  என்று சொல்ல, 

அவரும் அதை காட்ட… அதில், 

ஆரதி அனிதாவைப் பற்றி விசாரித்து கொண்டிருக்க அதை பின்னால் நின்று கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண்… சிறிது நேரத்திலே அங்கிருந்த மற்றொரு கடைக்காரப் பெண்ணிடம் எதுவோ சொல்ல, அவரும் அந்தப் பெண்ணிடம் ஒரு கைபேசியை கொடுதாதார். 

அங்கிருந்து வேகவேகமாக பின் வாசலுக்கு சென்ற அந்தப் பெண்… யாருக்கோ அழைப்பு விடுத்தாள். அது எடுக்கவில்லை போல திரும்பவும் அழைப்பு விடுக்க ஆரம்பித்திருந்தாள். அதே போல நான்கைந்து முறை   அழைக்க….  பதில் கிடைக்காமல் இருக்க தனக்குள் வாய்விட்டு எதையோ புலம்பிக்கொண்டே… கடைக்குள் வந்தவள் கைப்பேசியை கொடுத்து விட்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள். கைகள் வேலை செய்தாலும் ஏனோ அவள் முகம் மட்டும் பதட்டமாகவே தெரிந்தது ஆரதிக்கு.

கணினியில் இருந்த வீடியோ காட்சியை தனியாக  எடுத்தவள் … கடைக்காரரிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து  புறப்பட்டு நேராக நின்றது கடையிலிருந்து  நான்கு கட்டிடம் தாண்டி அந்தப் பெண் தங்கியிருக்கும் வீட்டில் தான். 

அம்மு இளையாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!