Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மழை 16

மழையோடு வீடு சேர்ந்த ஆனந்தன் முகத்தில் மழையின் ஈரம் சேர்ந்திருக்க, மனதிலோ வாரிதியோடு கதைத்த வார்த்தைகளின் ஈரம். எதையும் கேட்காமல் சில நேரம் ஆறுதலை மட்டும் தருபவர்கள் எல்லாம் எல்லார்க்கும் கிடைப்பதில்லை. நாம் நாமாக இருப்பதுதான் இவ்வுலகிற்கும் நமக்கும் செய்யக்கூடிய ஆகச்சிறந்த செய்கை என்பார்கள். வாரிதி ஒன்றும் பெரிதான ஆறுதல் சொல் சொல்லவில்லை. 



Advertisement

அவள் அவளாக இருந்தாள். அவளுக்குப் பிடித்ததைப் பேசினாள், பகிர்ந்தாள். அவ்வளவுதான்! அது ஆனந்தனுக்கு நிறைவினை கொடுத்தது. முதலில் இருந்த அலைப்புறுதல் நீங்கி மண்ணை நனைத்திடும் புதுமழையின் போக்கோடு வீட்டினுள் நுழைந்த மகனைப் பார்த்தார் கார்த்திகேயன். 

“என்னடா? படம் நல்லாயிருந்ததா?” என்று கேட்க

Advertisement

 

Advertisement

“சூப்பர் படம் பா, காமெடி த்ரில்லர். உங்களை ஒரு நாள் அழைச்சிட்டுப் போறேன்” என்ற ஆனந்தனை ஆராய்வதா இல்லை அவனை கண்டு ஆனந்திப்பதா என்று புரியாமல் தவித்தார் கார்த்திகேயன். போகும்போது எங்கே போகிறேன் என்று கூட சொல்லாத மகன் முகத்தில் இப்போது ஒரு தெளிவு. அலைப்புறுதலின்றி ஒரு அமைதியான பாவனை. படம் பார்க்க போகும் முன் நேரமாகும், வாரிதியோடு படம் பார்க்க போகிறேன் என்று அப்பாவுக்குக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.

Advertisement

உண்மையில் முத்து சொன்னது போல வாரிதி ஆனந்தன் வாழ்க்கையில் வந்த வாய்ப்போ? என்றெல்லாம் கூட யோசனை வந்தது. இல்லை இயல்பான நட்பினை தனது கற்பனை சக்தியால் தான் அதிகம் யோசித்து காதல் அத்தியாயம் எழுத நினைக்கிறேனோ என்று கூட கார்த்திகேயன் நினைத்தார். 

“சற்று முன் நீங்கள் சிரித்தீர்களா?” என்று கேட்ட மகனின் கேள்வியில் சத்தமாக சிரித்தார் கார்த்திகேயன். அடுத்த அரை மணி நேரமும் ஆனந்தனின் வார்த்தையெல்லாம் வாரிதிப் பற்றியும் அவள் பகிர்ந்தவை பற்றியும் இருக்க, கார்த்திகேயன் மகனை ஆராய்ச்சியாகப் பார்த்தார். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!