Skip to content
Post Views: 1,555
14(1)
ப்ரியாவிற்கு ஏதோ பிரச்சனை. ஒரு வேலை அந்த கொலைகாரனால் இருக்குமோ? சிந்தனையுடன் வகுப்பிற்குள் வந்தான் மாறன்.
அடுத்த வகுப்பு ஆரம்பமாகி இருந்தது. ஆனால் சுப்ரியாவின் மனநிலை மாறவேயில்லை. அவளிடம் ஒரு பதட்டம் இருந்து கொண்டே இருந்தது. மாறன் அடிக்கடி அவளை பார்த்தான். அவன் நண்பர்கள் என்னடா மச்சீ, அவளுக்கு ஆப்பு வைக்க போறானுக போல?
Advertisement
சும்மா இருடா. பல்லை கடித்தான் மாறன்.
Advertisement
“அவ மூஞ்சிய பாரேன். ஏதோ பெரிய பிரச்சனைன்னு தெரியுது. ஏன்டா மாறா, அந்த கொலகாரனுக இந்த பள்ளிக்குள் இவள கொல்ல வந்துட்டானுகளோ?” கேட்க, “ஸ்டாப் இட்” சத்தமாக கத்தினான் மாறா.
Advertisement
“மாறா” அவன் தோளில் ஒருவன் கை வைக்க, “ஒரு உயிரோட மதிப்பு தெரியாம பேசாத..” கத்தினான்.
Advertisement
மாறன், “என்ன பிரச்சனை? எதுக்கு சண்ட போடுறீங்க?” சார் கேட்க, அவன் எழுந்து நின்றான். எல்லாரும் மாறனை பார்த்தனர்.
சுப்ரியாவோ அவள் எண்ணத்திலிருந்து அப்போதும் வெளி வரவில்லை. மாறன் அவளை பார்த்தான். பின் தான் மகியும் அவளை பார்த்து, ஹே சுப்ரியா அழைத்தான்.
ஹ..அவள் அவனை பார்த்தாள்.
என்னாச்சு உனக்கு?
“ஒன்றுமில்லை” நின்று கொண்டிருந்த மாறனையும் சாரையும் பார்த்தாள்.
சார் அவளருகே வந்து, “என்னாச்சும்மா காய்ச்சல் ஏதும் இருக்கா?” கேட்டார்.
சுப்ரியா எழுந்து, “எனக்கு ஒருமாதிரி இருக்கு” சொல்லிக் கொண்டே மகேஷ் மீது மயங்கி சரிந்தாள்.
ஹே..அவன் பயந்து அவளை நகர்த்த, “தண்ணீர் எடுங்கடா” என்று தண்ணீரை அவள் மீது தெளித்து விழிக்க வைத்து சார் அவளை பார்த்தார்.
சார், எனக்கு…
வித்யா அவரிடம் வந்து, “சார் அவளை ரெஸ்ட் எடுக்க அழைச்சிட்டு போறேன்” வந்து நின்றாள். நடக்கும் எதையும் நம்ப முடியாமல் தவித்து நின்று கொண்டிருந்தான் மாறன்.
வித்யா தோளில் கை போட்டு நடந்து சென்றாள் சுப்ரியா. அறையில் அவளை படுக்க வைத்து வித்யா அவளருகே அமர்ந்திருந்தாள்.
என்னாச்சு சுபா? உன்னை இவ்வளவு வீக்கா பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு..
ஒன்றுமில்லை. நான் அதிகமா யோசிச்சா இப்படி தான் இருக்கும்.
ஏன்? அப்படி என்ன யோசிச்ச?
எனக்கு அக்காவை பார்க்கணும் போல இருக்கு..
“என்னாச்சுடி? காய்ச்சலாகவும் தெரியல” அவள் சொல்லிக் கொண்டிருக்க ராதிகா உள்ளே வந்தார்.
சுபா, மயங்கி விழுந்துட்டன்னு சொன்னாங்க..
ஆமா. ஆன்ட்டி…ஆன்ட்டி எனக்கு ஏதோ தப்பா நடக்கப் போற மாதிரி இருக்கு. பயமா இருக்கு. அக்காவை பார்க்கணும் போல இருக்கு..
“ஒன்றுமில்லைடா. நீ கம்மியா சாப்பிட்டு வந்துருப்ப” பேசிக் கொண்டே வித்யாவை போக சொல்லி கண்ணை காட்டினார்.
அவள் செல்லவும், “சொல்லு என்ன விசயம்?”
பிரின்சிபில் சார் விசாரித்ததை சொல்லி விட்டு, அதை தீரனிடம் சொல்லக் கூடாதுன்னு சொன்னதையும் கூறினார்.
“ஒன்றுமில்லை. நீ இங்கேயே இரு. வாரேன்” வேகமாக தனியே சென்று சத்யாவை அழைத்து, பள்ளியில் சுப்ரியாவிற்கு ஏதோ பிரச்சனை வரப் போகிறதுன்னு சொல்லி விட்டு அவளை பார்க்க சென்றார்.
மாறன் வெளியே நின்று கொண்டிருந்தான்.
நீ இங்க என்ன பண்ற?
நான் அவகிட்ட பேசணும்..
கிளாஸூக்கு போ..
அண்ணா அவள என்னோட பொறுப்புல தான் விட்டான்.
பொறுப்பா? உனக்கு இருக்கா? உனக்கு தேவை உன் அண்ணன் மட்டும் தான? தீரனை மட்டும் உன் பக்கம் வச்சுக்கோ. இது பெரியவங்க விசயம். உன்னால எதுவும் பண்ண முடியாது.
என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க?
எனக்கும் தெரியல. ஆனால் இன்னும் கொஞ்ச நேரத்துல்ல ஏதோ தப்பா தான் நடக்கப் போகுது. ஆனால் அது சுபாவுக்கு தானான்னு தெரியல..
என்ன சொல்றீங்க? எனக்கு புரியலை.
மேம், உங்கள பிரின்சிபில் சார் கூப்பிட்டார்.
இதோ சொல்லலை. ஒரே ஒரு உதவி நீ ராஜ் சாரிடம் உடனே சுபாவை பார்க்க வர சொல்லு. மதிய இடைவேளை நேரம் ஆக ஐந்து நிமிடம் தான் இருக்கு. எனக்கு இப்ப கிளாஸ் இல்லை. பிரின்சிபில் சார் கூப்பிடுறார்ன்னு நினைக்கிறேன்..சீக்கிரம் வரச் சொல்லு. அவர் வந்த பின் தான் பிரின்சிபில் சாரை பார்க்க நான் போகணும்.
அவர் எதுக்கு?
கேள்வி கேட்காத. சீக்கிரம் போ. ஐந்து நிமிடம் தான் இருக்கு.
எதுக்கு?
போ..சொன்னதை செய். நான்கு நிமிடம் தான்
“எதுக்கு இப்படி டைம் பாக்குறாங்க”
ராஜ் அவராகவே வியர்க்க வியர்க்க ஓடி வந்தார்.
“சார்” மாறன் அழைக்க, “மாறா நீ கிளாஸூக்கு போ. பசங்க யாரும் கிளாஸ் விட்டு வர வேண்டாம்ன்னு சொல்லு” சுப்ரியா இருக்கும் அறைக்கு ஓடினார்.
அங்கே யாருமில்லை.
மாறனை திரும்பி அவர் பார்க்க, அவனும் இவரை பார்த்தான்.
ஹே சுபா எங்க? அவர் கேட்க, ராதிகா மேம் கூட தான இருந்தா?
“இங்க யாருமில்லை. செட்” சுவற்றில் கையை குத்தினான் ராஜ்.
“என்னாச்சு?” மாறன் கேட்க, அபாய ஒலி கேட்டது. “பசங்க யாரும் வெளியே வர வேண்டாம்” அறிவிப்பை ஒரு ஆசிரியை வழங்கிக் கொண்டிருந்தார்.
மாறா, “நீ கேண்டின் பக்கம் போய் பாரு” ராஜ் எதிர்ப்பக்கம் ஓடினார்.
கேண்டின் அறை பக்கம் வந்தான் மாறன். யாரோ பேசும் அரவம் கேட்க எட்டி பார்த்தான்.
கருப்பு உடையணிந்த எருமை கிடாக்கள் போல நால்வர் அவ்வறையை நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அதில் ஒருவன் “ஹே, அங்க பாரு” என்று ஹிந்தியில் ஏதோ கூற, நால்வரும் அவன் காட்டிய இடத்தை பார்த்தனர்.
ராதிகா காலை அணிந்திருந்த பச்சை நிற புடவை கண்ணில் தெரிந்தது. மாறன் பதட்டமாக பார்த்தான்.
அவனுகள திசை திருப்பலாமா? சிந்தித்தான்.
அவர்கள் ராதிகாவை கீழே இழுத்தனர். அவர் கப்போர்ட்டிலிருந்து பொத்தென கீழே விழுந்தார்.
வாவ்! “க்யூட் பிரிட்டி லேடி” ஒருவன் ஆங்கிலத்தில் அவரை புகழ, ராதிகா ஏதோ ஹிந்தியில் கூறினார்.
ராதிகா கழுத்தை பிடித்து அவன் கத்திக் கொண்டே தூக்கினான்.
மாறன் அதிரடியாக உள்ளே சென்று விறகுகட்டையை எடுத்து குதித்து ராதிகா கழுத்தை பிடித்து தூக்கியவன் பின் தலையில் ஓங்கி அடித்தான்.
“பச்சா” அவன் மாறனை அடிக்க கையை ஓங்க, அவனை எத்தி தள்ளினான் குருபிரசாத்.
“யாரு மேல கைய வைக்கிற?” ஹிந்தியில் கேட்டுக் கொண்டே அவன் மாறனை அடிக்க வந்தவனை அடித்தான். ராசுவின் ஆட்கள் அவன் பின்னே வந்து மற்றவர்களை பிடித்தனர்.
குருவை ஆச்சர்யமாக மாறன் பார்க்க, “மாறா சுபா எங்க?” குரு கேட்க, அவன் ராதிகாவை பார்த்தான். அவர் தொண்டையை சரி செய்து கொண்டே வேகமாக உள்ளே ஓடினார்.
சமையல் செய்யும் பாத்திரங்கள் சிதறி இருந்தது.
சுபா, “எங்க இருக்க?” ராதிகா சத்தமிட, “ப்ரியா..ப்ரியா” மாறன்
அழைத்துக் கொண்டே மேலும் உள்ளே சென்றான். அங்கே மாறனுடனே இருக்கும் நண்பன் கீழே கிடந்தான்.
டேய், நீ இங்க என்ன பண்ற?
அவன் கையை ஓர் பக்கம் காட்டினான்.
ப்ரியாவா?
“ஆமா” தலைசையத்த அவன் மீண்டும் கையை காட்டினான்.
மாறனும் ராதிகாவும் அவ்விடம் செல்ல, சுப்ரியா வியர்க்க வியர்க்க நின்று கொண்டிருந்தாள்.
“ப்ரியா” மாறன் அழைக்க, வராத…
“மாறா நில்லு” ராதிகா கூற, அவன் அவரை பார்த்தான்.
“அவ பக்கத்துல யாரோ இருக்காங்க” அவர் கண்ணாலே சைகை செய்தார்.
கண்ணை மூடி மூடி சுப்ரியா திறக்க, அவளை கூர்ந்து பார்த்தனர் இருவரும்.
அவளது கழுத்தில் கம்பி ஒன்று கட்டப்பட்டு இருந்தது.
மேம்..
ம்ம்! கண்கலங்கிய ராதிகா, ஏதோ யோசனையுடன் அலைபேசியை பார்த்தார்.
“சத்யா” அவர் அழைக்க, மாறன் அதிர்ந்து அவரை பார்த்தான். துப்பாக்கி சத்தம் கேட்டு இருவரும் சுப்ரியாவிடம் ஓடி வந்தனர்.
“மாமா” கதறியவாறு அழுது கொண்டே கையிலிருந்த கட்டை பிரிக்க முயன்றாள்.
சுப்ரியாவை கொல்ல எண்ணியவனை சத்யா தூரத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டிருந்தான். சத்யாவை பார்த்துக் கொண்டே சுப்ரியா அழுதாள்.
“ஒன்றுமில்லைடா” ராதிகா அவளை அணைக்க, அவள் கழுத்தில் இருந்த தடம் பார்த்து, “மேம் நீங்க நகருங்க” அவளது கைக்கட்டை அவிழ்த்து, கழுத்தில் இருந்த கம்பியை கழற்றி அவளது கழுத்தில் பதிந்திருந்த அச்சை தொட்டு பார்த்தான்.
கண்கள் சிவந்து வியர்வையில் குளித்து அவனை பார்த்த சுப்ரியா, “மேம்” அவள் அழைக்க, மேலும் சிலர் வந்தனர்.
மாறா, “சுபாவை சீக்கிரம் உன்னோட வீட்டுக்கு அழைச்சிட்டு போ” சத்யா கையில் துப்பாக்கியுடன் அவர்களை நோக்கி வந்தான்.
மாறா, போ..ராதிகா இருவரையும் தள்ளி சுப்ரியாவை கொல்ல வருபவர்களை நோக்கி சென்றார்.
“ம்மா..போகாதீங்க. அங்க நிறைய பேரு இருக்கானுக” சத்யா கத்திக் கொண்டே வந்தான். மாறன் சுப்ரியா கையை பிடித்துக் கொண்டு அவர்களை பார்த்துக் கொண்டே இழுத்து சென்றான்.
மாறனையும் சுப்ரியாவையும் தான் தேடிக் கொண்டிருந்தான் குரு.
மாறனும் சுப்ரியாவும் அவர்களின் வகுப்பறை பக்கம் வர, “மாறா அந்த பக்கம்” என்று சன்னல் வழியே அவன் வகுப்பு பசங்க சத்தமிட்டனர். ஆனால் அவன் நண்பர்கள் அடிபட்டு கிடந்தவன் தவிர எவனும் இல்லை. அவர்கள் கூறிய திசையில் மாறன் சுப்ரியாவை இழுத்து செல்ல, “மாமா..என்னால முடியல” மூச்சிறைத்தவாறு கூறினாள்.
அவளின் மாமாவை மாறன் பதட்டத்தில் கவனிக்கவில்லை.
“கொஞ்ச நேரம். ஏதோ பிளான் வச்சிருக்காங்க ப்ரியா” என சொல்ல, அவள் அங்கேயே அமர்ந்து விட்டாள்.
“ப்ரியா வா” அவன் அவள் கையை பிடித்து இழுக்க, “முடியல. நீ போ” அழுதாள் சுப்ரியா.
மூச்சை இழுத்து விட்டு மண்டியிட்டு, “என்னோட தோளில் உப்புமூட்டை ஏறிக்கோ” என்றான்.
இவனா சொல்கிறான்? அவனை சுப்ரியா பார்க்க, “ப்ரியா…நேரமில்லை. எந்நேரமும் அவங்க வந்திருவாங்க. ஏறு” கத்தினான். அவளும் ஏறிக் கொண்டாள்.
அவளை தூக்கிக் கொண்டு வராந்தாவில் ஓடினான். யாருமே அங்கு இல்லை..
நிழல் ஒன்று தெரிய நின்று மெதுவாக நகர்ந்தான்.
மகி தான் மெதுவாக எட்டி பார்க்க, “ச்சீ…நீயா?” மாறன் சொல்லிக் கொண்டிருக்க, மகி அவன் கையிலிருந்த கட்டையை மாறனை நோக்கி எறிந்தான்.
மாறன் நகர, அவன் பின்னே வந்தவன் மீது கட்டை விழுந்தது.
மாறா, “இந்தா சைக்கிள் எடுத்துட்டு போ. சீக்கிரம்” மகேஷ் அவன் கையில் சைக்கிளை கொடுத்து விட்டு மற்றொரு கட்டையை எடுத்து அவனை அடிக்க ஓங்கினான். அந்த அடியாள் கட்டையை பிடித்து விட ராசு ஆள் ஒருவன் வந்து விட்டான்.
“ஏலேய்! இங்க ஒருத்தன் இருக்கான்” என்று ராசு ஆள் சத்தமிட, அங்கே சிலர் வந்தனர்.
தம்பி, நீங்க நம்ம மதுரவீரன் கோவிலுக்கு போங்க. வீட்டுக்கு போறது கஷ்டம். ஊருக்குள்ளையும் இந்த ஆளுங்க வந்துட்டானுக.
“என்ன தான் நடக்குது?” மாறன் தலையை பிய்த்துக் கொண்டு கேட்டான்.
அங்க காலேஜ்ல்ல படிக்கிற பொண்ணு கையில கத்தியால குத்திட்டானுக. பாவம் நம்ம செழியன் ஐய்யா தான் அங்க கஷ்டப்பட்டுட்டு இருக்கார்.
அக்காவையுமா? சுப்ரியா பதறினாள்.
தம்பி, முதல்ல இந்த பொண்ணை தீரன் அண்ணாவிடம் சேர்த்திடுங்க. நாங்க அவங்களுக்கு உதவ போறோம். சக்தி க்ரூப்ஸ் ஏற்கனவே போயிட்டானுக..
“ப்ரியா.. கெட்டியா பிடிச்சுக்கோ” மாறன் சைக்கிளில் சுப்ரியாவுடன் மதுரைவீரன் கோவிலுக்கு விரைந்தான்.
அவர்கள் செல்லும் போது கார் ஒன்று அவர்களின் சைக்கிளில் மோதியது. இருவரும் கீழே விழுந்தனர்.
“மாறா” சுப்ரியா அவனிடம் கையை நீட்டினாள். அவன் எழுந்தான். அதற்குள் காரிலிருந்து ஒருவன் இறங்கினான். அவனை பார்க்க வெளிநாட்டவன் போல இருந்தது மாறனுக்கு.
“ப்ரியா” மாறன் அவனை பார்த்துக் கொண்டே சுப்ரியா அருகே சென்றான்.
காளையனூர்க்காரன் ஒருவன் வெளிநாட்டவனை தடுக்க அவன் மார்பில் கை வைத்து நிறுத்தினான். அவன் பார்வையை பார்த்த மாறன் சுப்ரியாவை தூக்கி விட்டு, “ப்ரியா இவனை பார்த்தாலே சரியில்லை. வந்துரு” என்று சொல்லி அவளை இழுத்துக் கொண்டு, “குருவைய்யா போயிருங்க” கத்தினான்.
மாறா, “புள்ளைய பத்திரமா கூட்டிட்டு போ” அவனை உக்கிரமாக முறைத்து அவர் கதிரருக்கும் அரிவாளால் அவன் கையை வெட்டினார். மறுநிமிடம் துப்பாக்கி துளைத்து அவர் இறந்தார்.
இதை பார்த்த மாறன், “ப்ரியா..பக்கத்துல்ல வந்துட்டோம்” சைக்கிளை எடுத்து ஓட்டினான்.
வெளிநாட்டவன் கையிலிருந்த துப்பாக்கியால் சைக்கிள் டயரை குறி வைத்து சுட்டான். மறுபடியும் இருவரும் விழுந்தனர்.
மாமா, “நீ போயிரு. இதுக்கு மேல ஒரு அடி கூட என்னால எடுத்து வைக்க முடியாது” சுப்ரியா அழுதாள்.
“ப்ரியா வா” அவன் கொன்றுவான்..
“என்னால முடியல. என்னால மாமா உன்னையும் இழந்துறக் கூடாது” அழுதாள்.
“இல்ல, என்னால உன்னை விட்டு போக முடியாது” என்று அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தவனை பார்த்துக் கொண்டே மாறன் சுப்ரியாவை தூக்கினான். அவனுக்கு நேராக அந்த வெளிநாட்டவன் துப்பாக்கியை காட்டினான்.
இதே நிலையில் மரத்தடியில் கையில் அக்சரா மயங்கி கையில் இரத்தக்கட்டுடன் சட்டையில்லாமல் செழியன் தூக்கி நின்று கொண்டிருந்தான். அவனுக்கு எதிரேயும் ஒரு வெளிநாட்டவன் துப்பாக்கியை நீட்டியவாறு நின்று கொண்டிருந்தான்.
“மாமா என்னை விட்டு போயிரு” சுப்ரியா மாறன் சட்டையை பிடித்துக் கொண்டு அழுதாள்.
வெளிநாட்டவன் விரல் ட்ரிகரை அழுத்தும் வேலை பறந்து வந்து அரிவாள் ஒன்று அந்த வெளிநாட்டவன் கழுத்தை பதம் பார்த்தது. அவன் கழுத்து வெட்டப்பட்டு உடலுடன் கீழே விழுந்தான். மாறனும் சுப்ரியாவும் அதிர்ந்து அவனை ஆக்ரோசமாக வெட்டிய குருவை பார்த்தனர்.
மழை சடசடவென கொட்டத் தொடங்கியது.
அதே நேரம் செழியனை காப்பாற்ற தீரன் தன் கையால் எதிரே இருந்தவனை வெட்டி சாய்த்து, பயங்கரமாக கத்தினான்.
“அண்ணா” செழியன் அழைக்க, அவனிடமிருந்து அக்சராவை வாங்கி மருத்துவமனைக்கு ஓடினான். செழியன் அரிவாளை எடுத்து அருகே இருந்தவனிடம் கொடுத்து விட்டு அவனும் இளந்திரையன் பின் ஓடினான்.
சுப்ரியா மாறனிடமிருந்து இறங்கி, “அண்ணா” என்று குருவிடம் சென்று அவனை அணைத்து கதறினாள்.
அண்ணாவா? மாறன் குருவை பார்த்தான்.
“ஒன்றுமில்லைடா” சுப்ரியாவை அணைத்தவாறு மாறனிடம் கையை நீட்டினான்.
மாறன் நடந்து கொண்டே பலவாறான சிந்தனையுடன் செல்ல, ராசு ஆட்கள் குரு வெட்டிய அரிவாளை எடுத்து சென்றனர்.
“என்ன நடக்குது இங்க? யாரு இவனுக எல்லாம்? நீ ப்ரியாவோட அண்ணனா?” மாறன் வினாக்களை தொடுத்தான்.
எங்களுக்கு தெரியல. இவனுக யாருன்னு தெரியல. ஆனால் இவனுக நம்ம வைசு, சுபா, சராவை கொல்ல தான் வந்துருக்காங்க.
உங்க பிரின்சிபில் சார் சுபாவை அழைத்ததன் காரணம்..இவனுக தான். இவங்க ஏதோ பேசி இருக்காங்க அவரிடம். அதான் கன்பார்ம் பண்ண அவர் அழைத்து விவரம் கேட்டிருக்கார்.
இவங்க பேச்சில் பிரச்சனை இருக்குன்னு புரிந்து தான் அவர் உங்களை பாதுகாக்க எண்ணி மைக்கில் எச்சரிக்கை செய்ய வைத்தார். ஆனால் நாங்க உசாராகும் முன் அவனுக பள்ளிக்குள் நுழைஞ்சுட்டானுக.
நல்ல வேலை பசங்க, பொண்ணுங்களுக்கு ஏதும் ஆகலை. ஆனால் மாறா “கதிர்” என்று அவனை பார்த்தான்.
கதிருக்கு என்ன?
கதிர் செத்துட்டான்.
என்ன சொல்றீங்க? மாறன் குரு சட்டையை பிடித்தான்.
மாறா, உன்னோட ப்ரெண்ட்ஸ் ஒருத்தன் கூட உதவ வரலை. அவனுக இப்ப பள்ளியிலே இல்லை. மத்த பசங்க போலீஸார் உதவியுடன் பாதுகாப்பா இருக்காங்க..
பள்ளி, கல்லூரி வரை வந்துருக்கான். அவன் யாருன்னு அண்ணா இன்னுமா கண்டுபிடிக்கலை?
இல்லை..
சுபா, அக்சரா கையில் கத்தி குத்தி அவ மயங்கிட்டா. அவளை ஊருக்குள்ள கொண்டு வர்றதுக்குள்ள படாத பாடா போச்சு சக்திக்கு..
சுப்ரியா நடுவீதியில் அமர்ந்து அழுதாள்.
அவளருகே அமர்ந்த குரு, “போகலாமா?”
வைசு அக்கா? அவளுக்கு ஒன்றுமில்லைல்ல?
வா..போகலாம்..
“சொல்லுங்க?” சுப்ரியா குருவை பார்த்தாள்.
வைசு வீட்ல தான் பாப்பாவுடன் பத்திரமா இருக்கா. அவருக்கு பாதுகாப்பா வீட்ல ஆள் இருக்காங்க.
யாரு இருக்கா? மாறன் கேட்டான்.
அவனுக ஆளுங்க எல்லாரும் இப்பொழுதைக்கு தான் தப்பிச்சி போயிருக்காங்க. ஆனால் நம்ம ஊரு ஆளுங்களுக்கு ரொம்பவே அடிபட்டிருக்கு..
குருவிற்கு அழைப்பு வர, இளந்திரையன் தான் பேசினான்.
தீரா தான். அக்சராவை மருத்துவமனையில் வச்சிருக்காங்கலாம். உங்களையும் அங்கே அழைச்சிட்டு வரச் சொன்னார்.
சத்யா மாமா, ராது அத்தை..சுப்ரியா கேட்க, “எல்லாரையும் முறை சொல்லி அழைக்கிற?” மாறன் கேட்டான்.
அழைத்தால் என்ன? அண்ணா அவங்க நல்லா இருக்காங்கல்ல?
ம்ம்..சத்யா அவன் அம்மாவை பார்த்துக்கிட்டான்.
அக்காவை பார்க்க போகலாமா?
ம்ம்
குரு முகத்தில் எப்போதிருக்கும் புன்னகை துணி வைத்து துடைத்தாற் போல அழிந்து இருந்தது.
பாப்பாவை குருவின் தந்தையிடம் கொடுத்து வைஷ்ணவி உள்ளே சென்றாள். சக்தி அவளிடம் கையை காட்டினான். வைஷ்ணவியை பார்த்த அவ்வூர் மக்கள் திகைத்து அவளை பார்த்தனர்.
ஏடி..நம்ம தேவியம்மா மாதிரி இருக்கு பாரு..
ஆமாய்யா. மாதிரி இல்லைய்யா அவுகளே தான்..
பலர் வைஷ்ணவியை அடையாளம் கண்டு பேசினார்கள்.
இளந்திரையன் அமர்ந்திருப்பதை பார்த்து வைஷ்ணவி அவனிடம் வந்தாள்.
சார், “சராவுக்கு ஒன்றுமில்லைல்ல?” அவள் அவன் கையை பிடிக்க, அவள் கையை எடுத்து அவன் முகத்தில் வைத்துக் கொண்டான். அவன் கண்ணீர் அவள் கையில் படவும் அவளுக்கு பதட்டமானது..
சீனியர்…வைஷ்ணவி செழியனை பார்த்தாள்.
அவன் முகத்தை அழுந்த துடைத்து, “கத்தி ஆழமா இறங்கி இருக்கு வைசு. ப்ளட் லாஸ் அதிகமாகிடுச்சு. ட்ரீட்மென்ட் போய்ட்டு இருக்கு” செழியன் கண்ணீருடன் கூறினான்.
மாறனால் தன் அண்ணன்கள் இவ்வாறு கண்ணீர் வடிப்பதை நம்ப முடியவில்லை.
மருத்துவமனைக்குள் சத்தம் அதிகமாக வைஷ்ணவி இளந்திரையனிடமிருந்து கையை எடுத்தாள்.
மதுரை மாவட்ட கலெக்டர் வந்து கொண்டிருந்தார்.
இளந்திரையன் எழுந்து நிற்க, “என்னடா தீரா இதெல்லாம்? நீ இருக்கும் வரை பிரச்சனை வராதுன்னு நினைச்சேன்” அவர் சாதாரணமாக இளந்திரையனை அணைத்து பேசினார்.
செழியன் தன் அண்ணனை ஆழ்ந்து பார்த்தான்.
சார், வரக் கூடாதுன்னு தான் நினைச்சேன். எவனோ வட நாட்டுக்காரன் தான்.
“பள்ளி மாணவன் இறந்துட்டானாமே!” அவர் கேட்க, “ஆமா சார்” என்று அவரை தனியே அழைத்து சென்றான் இளந்திரையன்.
கலெக்டர் எப்படி மச்சான் இவனுக்கு பழக்கம்? வீரன் இளவேலனிடம் கேட்டார்.
தெரியல மாமா..
அவன் தான் அடிக்கடி மதுரைக்கு போயிட்டு வருவான்ல்ல. பழகி இருப்பான்.
“உங்க மருமகன் விட்டால் முதலமைச்சருடன் கூட பழகிடுவான்” குரு அவன் அப்பாவிடம் கூறினான்.
ஆமாடா, “நீ உருப்படியா எதுவும் செய்யாமல் அவன் பின் வால் போல சுத்திக்கிட்டே இரு” அவர் திட்டினார்.
சத்யா அவர்களை பார்த்துக் கொண்டே வந்தாலும் அவன் கண்கள் தீரனை தேடியது.1
error: Content is protected !!