Skip to content
Post Views: 503
“ என்ன கனவுல இருந்து வெளிய வந்தாச்சா” என்ற குரலுக்கு சொந்தமானவனை திகிலுடன் பார்த்தது என்னவோ ஒருசில மணித்துளிகளே. உடனே தன்னை சுதாரித்துக் கொண்ட பவித்ரா, அடுத்த கணம் தனது வண்டியை எடுத்துக் கொண்டு வேகமாகப் புறப்பட்டிருந்தாள் ஏய்…., ஏய்….. மெதுவா போ என்ற அறிவுச்செல்வனின் குரல் காற்றோடுதான் கலந்து போனது.
அனிச்சை செயலாக கல்லூரி வந்தடைந்தாள் பவித்ரா. மாணவர்களின் காலை வணக்கங்களை ஒரு சிறு தலையசைப்புடன் ஏற்றுக்கொண்டு ஆசிரியரின் அறைக்குச் சென்றாள். குட்மார்னிங் பவி என்ற சக ஆசிரியர்கள் கூறிய காலை வணக்கத்திற்குப் புன்னகையுடன் பதில் வணக்கத்தைக் கூறிக்கொண்டே அவளுடைய இடத்தில் அமர்ந்தாள்.
அவளுக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த பவியின் உயிர்த்தோழியும், சக பணியாளருமான (COLLEAGUE) கலைவாணியைப் பார்த்து, ஹாய்! கலை குட்மார்னிங் டி… என்றாள், அவள் கூறியதற்கு எந்த பதிலும் உரைக்காமல், அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் கலைவாணி.
இன்றைக்கு என்னென்ன வகுப்புகள் இருக்கிறதென்று கால அட்டவணையைப் பார்த்துக் கொண்டிருந்த பவித்ரா, தனது தோழியிடமிருந்து எந்த பதிலும் வராததை உணர்ந்து அவளைத் திரும்பிப் பார்த்தாள்.
Advertisement
அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த தோழியைப் பார்த்து. என்னடி அப்படி பார்த்துட்டு இருக்க என்றாள். “என்னாச்சு என்ன பிரச்சனை எனக் கேட்டாள் கலை,
‘ என்ன, என்ன பிரச்சனை யாருக்கு” எனக் கேட்டாள் பவித்ரா. அவளை முறைத்துக் கொண்டே ரொம்ப நல்லா நடிக்கிற எங்கிட்ட உன் நடிப்ப காட்டாத, நீ உள்ள வந்ததுல இருந்து பார்த்துட்டு இருக்கறேன், ரொம்ப பதட்டமா இருக்கற, கையெல்லாம் எப்படி நடுங்குதுபாரு, சொல்லு என்னாச்சு என்றாள்.
அதுதான் அவள் உயிர்த் தோழி கலை, தனக்கு ஏதாவது என்றாள் பதறிவிடுவாள், தனது முகத்தைப் பார்த்தவுடன் தனது மனநிலையைக் கவனித்து விடுவாள் என்பதை எப்படி மறந்தேன், ஐயோ, அந்த டென்ஷன்ல இவளை எப்படி மறந்தேன். அச்சோ பவி காலையில இருந்து ரொம்ப சொதப்புற என மானசீகமாக தன்னையே கொட்டிக் கொண்டு, கலையைப் பார்த்தாள்.
Advertisement
என்ன, என்ன பொய் சொல்லி இவள ஏமாத்தலாம்னு ஒத்திகை பார்த்துட்டையா என்று கோபத்துடன் கேட்டாள். சட்டென தன்னைச் சுதாரித்துக் கொண்டு, அச்சோ என் செல்லம்ல, அப்படியெல்லாம் இல்லடா, எனக்கு ஏதாவது ப்ராப்ளம்னா உங்கிட்ட தான் ஃபர்ஸ்ட் சொல்லப் போறேன்.
Advertisement
கூல் பேபி, இப்ப எனக்கு க்ளாஸ் இருக்கு, அதனால டுயூட்டி ஃபர்ஸ்ட் மத்தது நெக்ஸ்ட்,… ஈவ்னீங் இத பத்தி பேசலாம் சரியா, என அவளது தலையில் செல்லமாக தட்டிவிட்டு தான் முதல்நாளே எடுத்து வைத்த நோட்ஸை எடுத்துக் கொண்டு வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் பவித்ரா. தலையை இடவலமாக ஆட்டிக்கொண்டு தான் செல்லும் வகுப்பறை நோக்கிச் சென்றாள் கலைவாணி.
அன்றைய நாள் ஒருவழியாக முடிய, பவித்ராவும், கலையும் தங்களது இருசக்கர வாகனம் நிறுத்திய இடத்தில் நின்றிருந்தார்கள். கலை எதுவும் பேசாமல் பவித்ராவையே பார்த்துக் கொண்டிருந்தாள் இவ சொல்லாமல் விட மாட்டாள் என்பதை உணர்ந்து,
பக்கத்துல இருக்கிற காஃபி ஷாபுக்கு போலாம் வா, எனக் கூறிக்கொண்டே தனது வண்டியில் முன்னே சென்றாள். அவளைத் தொடர்ந்து சென்ற கலை, பவித்ராவின் வண்டியின் அருகே தனது வண்டியையும் நிறுத்தினாள். இருவரும் அந்த கடைக்குள் நுழைந்து, ஓரமாக இருந்த காலி இருக்கையில் அமர்ந்தனர்.
Advertisement
அளுக்ககொரு காஃபியை ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்தனர். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு வெளியே தெரிந்த மரத்தைப் பார்த்துக் கொண்டே துரை மாமா பையன் வந்துருக்கான் என்றாள் பவித்ரா. யார சொல்ற குமாரன்னா என ஆரம்பித்த கலை, ஏய்… அறிவண்ண வந்துருக்குதா,
எப்ப வந்தாங்க என்றாள், எங்கோ பார்த்துக் கொண்டிருந்தவள், அவளின் ஆர்ப்பரிப்பில் திரும்பி அவளை முறைத்துக் கொண்டே, வந்து ஒரு வாரத்துக்கு மேல ஆகுது. போன வாரம் அம்மா பேச்சுவாக்குல சொன்னாங்க, அப்ப இருந்து அந்த வீட்டுப் பக்கமே போகாம இருந்தேன்.
இன்னைக்குப் வேற வழி இல்லாம போய் அந்த வீணாப்போனவன் முகத்துல முழிச்சிட்டேன் என்றாள். என்னது வீணாப்போனவனா, ஹலோ மேடம் சார் யாரு தெரியுமா “டாக்டர் அறிவுச்செல்வன் MBBS, MD(PEAD) பெஸ்ட் சைல்ட் ஸ்பெஷாலிஸ்ட்ட” போய் வீணாப்போனவ்னு சொல்ற ம்ம்ம்ம்,……., உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல என்றாள் கலை. ஹேய் என்ன ஃபேன் பேஸ்ஸா ( FAN BASE ) அவனுக்கு, பெரிய கொடி புடிக்கிற என்றாள். பவி.
அடிப்பாவி நான் மட்டுமா ரசிகை, நாம ஸ்கூலுல படிகிறப்ப, சின்ன புள்ளையில இருந்து, இந்த ஊர்ல இருக்குற குமரிக வரைக்கும் அண்ணனோட ரசிகைகள் தான, அது மட்டுமா ஒரு காலத்துல நீயும் தான், என்றவளை கைக்காட்டி தடுத்து தன் வாய்மேல் வைத்து போதும் என்று சைகை காட்டினாள் பவித்ரா.
அத்துடன் கோபமாகக் கிளம்பியவளைக் கையைப் பிடித்து இழுத்து அமரவைத்தாள் கலை. எதுக்கு இப்போ இவ்வளவு கோபம். கொஞ்சம் பொறுமயா இரு எனக் கூறி சர்வர் கொண்டு வந்து வைத்திருந்த காபியை பவித்ராவிடம் நகர்த்தி வைத்து முதல்ல இந்த காபிய குடி, உங்கூட பேசி தொண்டையே வரண்டு போச்சு,
இந்த காபிய குடிச்சிட்டு நிதானமா பேசலாம் என்றாள். கலை ஒரே மொடக்கில் குடித்துவிட்டு டம்ளரை வைத்தவள், பவித்ராவைப் பார்த்து., இந்த ஆறிப்போன காபிய எத்தன நேரம் ரசிச்சு குடிப்ப எனக் கேட்டவளை, இல்ல டைம் ஆகிடுச்சு வீட்டுக்குப் போகனும்ல அதுக்குத்தான் என பயந்ததுபோல் கூறினாள்.
காலைல என்ன நடிக்காதனு சொன்னேல, இப்போ எனக்கு பயப்படுற மாதிரி நீ நடிக்காத என்றாள். சரி ரெண்டுபேருமே பெரிய நடிகைகள். நீ நல்லா நடிக்கிறேனு நானும், நான் நல்லா நடீக்கிறேனு நீயும் மாத்தி மாத்தி புகழ்ந்துக்கலாம் சரியா எனக் கிண்டலாகக் கூறிக் கொண்டே தனது பேக்கை எடுத்துக் கொண்டு வா கிளம்பலாம், இன்னும் கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டு இருந்தா, கடை ஓனர் நம்மை கழுத்த புடிச்சு தள்ளினாலும் தள்ளிடுவாரு,
வா வெளிய போய் பேசலாம் என சொல்லி பவித்ராவையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள் கலை.. வெளியே வரும்போது சரியாக பவித்ராவின் கைப்பேசி அலறியது. எடுத்துப் பார்த்தாள் அவளின் அம்மா தான் அழைத்திருந்தார். போனை ஆன் செய்து, ஹலோ அம்மா, நான் கலை கூட கொஞ்சம் வெளிய வந்தேன். ஒரு அரை மணிநேரத்தில் வீட்டிற்கு வந்துவிடுவேன் எனக் கூறி போனைக் கட் செய்தாள்.
பின் இருவரும் அவர்கள் ஊருக்கு அருகில் உள்ள ஒரு கோவிலில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினர். இங்க பாரு பவி, இது வரைக்கும் எல்லா விஷயத்தையும் என்னோட ஷேர் செஞ்சிருக்க, ஆனா அறிவு அண்ணன பத்தி பேச்சை எடுத்தா மட்டும் நீ அமைதி ஆயுடுவ. அதுல இருந்து நான் அவங்கள பத்தி உங்கிட்ட பேசறதையே விட்டுட்டேன். அந்த அண்ணாக்கும் உனக்கும் நடுவுல ஏதோ ப்ராப்ளம்னு தெரியுது. நடுவுல கொஞ்ச நாள் நீ ஆளே சரியில்ல, ஐ திங்க அப்ப இருந்து தான் உங்க ரெண்டு பேருக்கும் ஏதோ சரி இல்லைனு நானே புரிஞ்சிகிட்டேன். நீயே சொல்லாதப்ப அதப்பத்தி கேக்கக் கூடாதுனு விட்டுட்டேன். ஒரு நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இன்னைக்கு பார்த்த மாதிரி தான் கொஞ்ச நாள் இருந்த. இப்ப கேக்கறேன் சொல்லு, நீ அறிவு அண்ணன லவ் செய்றையா, அந்த அண்ணன் உன் லவ்வ அக்சப்ட் பண்ணலையா, அதனாலதான் அவரப் பார்த்து டென்ஷன் ஆயிடுறையா? ரொம்ப நாளா என் மனச அரிச்சிகிட்டு, இருந்த கேள்விய இதுவரைக்கும் உங்கிட்ட கேட்டது இல்ல. இப்ப கேக்குறேன் பதில் சொல்லு. உன்ன இப்படி பாக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு, பிளீஸ் சொல்லு, அட்லிஸ்ட் வேற என்ன பிரச்சனனாவது மனச விட்டு சொல்லுடி எனக் கூறிகொண்டிருக்கும் போதே தனது வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டிருந்தாள் பவித்ரா, (அடுத்த எபிசோட்ல ஒரு சின்ன கொசுவர்த்திச் சுருள் சுத்தும், அதாங்க ஃப்ளாஷ் பேக்)
என் இதயக் கூட்டை அடைந்தவனே- எப்பொழுது
உன்னில் என்னை நான் காண்பேனோ!
error: Content is protected !!