Skip to content
Post Views: 2,478
15 (2)
“தாத்தா” மாறன் அழைக்க, எல்லாரும் கம்பீரமாக நடந்து வரும் இளங்காளையனை பார்த்தனர்.
Advertisement
“அப்பா” இளவேலன் அதிர்ந்து அவரை பார்க்க, ராதிகாவிற்கு தான் பயம் பிடித்தது.
“சொல்லு தாத்தா? உன்னோட பேரன் சரியான முட்டாள். சொல்லு?” இளந்திரையன் கத்தினான்.
Advertisement
Advertisement
மீசையை முறுக்கிக் கொண்டு ராதிகாவை பார்த்துக் கொண்டே அகிலரசன் முன் வந்தார்.
நீ சாகலையா?
Advertisement
உன்னோட தாத்தன் என்னோட போட்டியிட்டு தோத்து போயிட்டான். அவனால அவன் தோல்வியை ஏத்துக்க முடியல. அதுக்காக அடிக்கடி உன் பாட்டியிடம் சண்டை போட்டான். அவர் என்னிடம் வந்து, பஞ்சாயத்து தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க சொல்லி கேட்டார். நான் செய்ய மாட்டேன்னு உறுதியா நின்னுட்டேன்.
இந்த ஊர்க்காரவங்க தான என்னை ஜெயிக்க வச்சாங்கன்னு அவன் கலவரம் ஏற்படுத்தினான்.
அதற்கு முன் உன்னோட வீட்ல பொம்பளைங்களுக்கும் உன் அப்பாவுக்கும் தெரிந்து, பூவரசா என்னை பார்க்க வந்தான். என்னை பார்த்து விட்டு செல்லும் போது தான் கலவரமாகி அனைவரும் இறந்தாங்க. சிலர் உயிர்பயத்தில் ஊரை விட்டு போனாங்க. எல்லாரும் உன்னோட தாத்தனோட கைக்கூலிகள் தான்..
ஆதாரம் என்னோட கணக்கர் சரவேல். அவர் பேரரசனுக்கு பயந்து பாண்டி குடும்பத்தின் மீது பழியை போட்டான். தீரா அவனையும் அந்த கைக்கூலி பசங்களையும் வர வை..
ம்ம்! தாத்தா என்று அலைபேசியில் பேசினான் இளந்திரையன்.
அக்சராவும் சத்யாவும் வந்தனர். அவர்களுடன் செழியன் அந்த லாரி டிரைவருடன் வந்தான்.
டிரைவரை செழியன் அகிலரசன் முன் நிறுத்தினான்.
“அகிலய்யா உங்க தாத்தா சொல்லி தான் தமிழய்யாவை கொல்ல முயன்றேன்” அவர் சொல்ல, திகைத்து அவரை பார்த்தான் அகிலரசன்.
சரவேல் ஆட்களுடன் வருவதை பார்த்து…
“ஹே..நீங்க தான!” சத்யா சரவேல் அருகே சென்று, “நான் முதல் நாள் உங்க ஊருக்கு பேருந்தில் பயணித்த போது மோகனிடம் பாண்டி குடும்பத்து ஆட்கள் மேல தப்பு இல்லைன்னு சொன்னீங்க. நானும் அதை வைத்து தான் நிறைய கண்டறிந்தேன்” அவனறைக்கு சென்று சில புகைப்படங்களை கொண்டு வந்தான்.
அவர் அவனை பார்த்து, ஆமா..நீரு அங்க இருந்தீகள?
ம்ம்! அவர் ஆதாரமாக மாறி பேரரசன் தான் உன் அப்பாவையும், உன் குடும்பத்தையும், நம்ம ஊர்க்காரவங்களை கொல்ல திட்டமிட்டான். என்னோட பொண்டாட்டி இதை கேட்டு விட்டாள். அதனால் என்னை அழைத்து மிரட்டி பாண்டி குடும்ப ஆட்களை மாட்டி விட சொன்னார்.
அவர் எங்க குடும்பத்தை ஏதும் செய்து விடுவாறோ என்று பயந்து நானும் கூறிவிட்டேன்.
“குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க” இங்கிருக்க முடியாமல் குடும்பத்துடன் பட்டணம் சென்று விட்டேன். என்னை மன்னிச்சிருங்க காளையா? அவர் காலில் சரவேல் விழுந்தார்.
வேல்..எழுந்திரு..அவர் கூற, அவர் அகிலரசனிடம் சென்று,…
நான் சொன்னது சத்தியமான உண்மை.
“என் குடும்பத்தின் மீது சத்தியம் செய்கிறேன். உன் தாத்தா தான் உன் குடும்பத்தை கொன்றது. அவருக்கு துணை நின்றது உன் சித்தப்பாக்கள் எல்லாரும். உன் அப்பா அவருடன் சேரவில்லை என்பதாலும் காளையருக்கு விசுவாசமாக அவர் இருந்ததாலும் தன் மகனை அவரே கொன்றார்.
அவருக்கு உதவ வந்த தீரனை காட்டி உன் மனதில் நஞ்சை விதைத்தார். ஆனால் தமிழும், முகிலும் மட்டும் தான் உன் அப்பன் பூவரசன் போல நடந்து கொண்டனர். நீ மொத்தமா மோசமானவனா மாறிட்ட” அவர் சொல்ல சொல்ல, மனம் உடைந்து மண்டியிட்டு அமர்ந்தான் அகிலரசன்.
அகிலரசன் அருகே வந்து வைஷ்ணவி, “தீரன் சார்..இவன் தான் குடிலுக்குள் வந்தது. ஆனால் இவனிடம் அந்த பர்ஃபியூம் வாசனை அன்று வரலை. இருட்டான போது தான்…”என்று வைஷ்ணவி அவனை பார்த்தாள்.
சாரிம்மா, “தீரா மேல இருந்த கோபத்துல்ல அந்த மகாதேவ்வை நம்ம ஊருக்கு வர வைத்து உன் மேலுள்ள ஆசையை தீர்த்துக்க சொன்னேன். என்னை மன்னிச்சிரு” அகிலரசன் வைஷ்ணவி காலில் விழுந்தான்.
அகிலரசனை இளந்திரையன் சீறிக் கொண்டு அடிக்க வந்தான்.
“வேண்டாம் மாமா…விட்ருங்க” இளந்திரையன் கையை வைஷ்ணவி பிடித்தாள்.
அக்கா, இப்ப என்ன சொன்ன? அக்சரா கேட்க, மாமா….என்று கண்களை உயர்த்தி வைஷ்ணவி தீரனை பார்த்தாள்.
“சிட்டு” அவன் அவள் பக்கம் பார்க்க, எனக்கு நேற்று தான் தெரியும். “அம்மா சொன்ன கண்ணா மாமா நீங்க தான? நீங்க எல்லாரும் எங்க சொந்தம் தான?” வைஷ்ணவி கேட்க, கண்ணீருடன் இளந்திரையன் அவளை அணைத்துக் கொண்டான்.
சுப்ரியாவோ சோர்ந்த விழிகளுடன் இருவரையும் பார்த்து புன்னகைத்தாள்.
காளையன் தொண்டையை செரும, இருவரும் நகர்ந்தனர்.
அகிலரசன் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு விட்டு தன் தம்பி தமிழரசனை காண சென்றான். அங்கே யாருமில்லா அநாதையாக சீரியசாக இருந்தான் அவன்.
சற்று நேரத்தில் அவ்விடம் வந்தனர் காளையரின் குடும்பம். அகிலரசன் தன் தாத்தாவை எதிர்ப்பார்க்க அவரோ வீட்டிலே சாகவாசமாக உறங்கிக் கொண்டிருந்தார்.
அகிலரசன் கலையரசன் வீட்டிற்கு செல்லும் முன்னே அவனை மருத்துவமனை அழைத்து வந்து விட்டான். அவனையும் தமிழையும் பாரின் அழைத்து தனியே வாழ முடிவெடுத்தை தீரனிடம் கூறினான்.
பள்ளி, கல்லூரியில் நீ சொல்லி எதுவும் நடக்கலையா? குரு கேட்டான்.
இல்ல, மகா செய்யவும் வாய்ப்பில்லை. அவனுக்கு வைசு தான் வேண்டும். மற்றபடி அவன் யாரையும் குறி வைக்கவில்லை.
சத்யா அங்கே ஓடி வந்தான். தமிழ், “நல்லா இருக்கானா?”
ம்ம்! அகிலரசன் அவனிடமும் மன்னிப்பு வேண்டினான்.
அண்ணா, “நம்ம அக்சரா, சுபாவை கொல்ல முயன்றது பேரரசன் மகன்கள் தான். அந்த கருப்புடையணிந்தவன் தேடி வந்தது வைசுவை. ஆனால் நடந்த குழப்பத்தில் மகாவின் ஆட்களும் பேரரசனின் ஆட்களும் கலந்துட்டாங்க. அவங்கள குடும்பத்தோட ஆதாரமுடன் கைது செய்துட்டேன்” அகிலரசனை பார்த்தான் சத்யா.
அவன் அமைதியாக இருக்க, முகில் எங்க?
“வெளிய தான் இருக்கான்” அகிலரசன் கூறி, “அந்த மகாவை உன் வாழ்க்கையிலிருந்து நகர்த்து தீரா. நினைத்ததை செய்யும் பிடிவாதக்காரன். என்றானாலும் பிரச்சனை வரும்”.
அண்ணா, “இன்றே போகலாம்” சத்யா சொல்ல, “முக்கிய வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு பார்க்கலாம்” இளந்திரையன் அகிலரசனிடம் கை கொடுத்து நகர்ந்தான்.
தீரா, அவங்கள மிரட்ட தான் அன்று பேசினேன். தாமரையை கொன்றது நானில்லை..மகா..
“தெரியும்” தீரன் சொல்ல, மற்றவர்கள் அவனை அதிர்ந்து பார்த்தனர்.
ராதிகா தயங்கி காளையனை பார்க்க, சத்யாவோ அவரிடம் சாதாரணமாக பேசினான்.
மாமா, தாத்தா இருக்கிறது உனக்கு முன்னமே தெரியுமா? அக்சரா கேட்க, தெரியுமே! நாங்க சமாதானமாகிட்டோம் என்று தன் பெற்றோரை பார்த்தான்.
“சத்யா” ராதிகா அழைக்க, சாரிம்மா..தாத்தா வீட்ல இருப்பது வெளிய தெரிய வேண்டாம்ன்னு தீரன் அண்ணா சொன்னாங்க. அவரும் நம்மை எண்ணி வருத்தப்பட்டிருக்கார். அதனால மன்னிச்சிட்டேன்.
காளையன் அவன் காதை திருகி, “நீ மன்னிச்சுயாலேய். என்னை பாடாய் படுத்தி எடுத்துட்டான்ம்மா உன் பிள்ளை” ராதிகாவை பார்த்து,
“என் சூழ்நிலை. ஊருக்காக அடுத்தவருடன் போட்டியிட்டு நான் என் மகன், மருமக, பேரனை ஏத்துக்காமல் போயிட்டேன். என்னை மன்னிச்சிரும்மா” கையெடுத்து கும்பிட்டார்.
ஐய்யோ மாமா! “நீங்க மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம்” ராதிகா அவர் கையை பிடித்தார். சுப்ரியா அன்று முழுவதும் சோர்ந்து காணப்பட்டாள்.
காலை விடியலில் அனைவரும் புத்துணர்ச்சியுடன் எழுந்தனர். காளையன் வீட்டு மக பிள்ளைகள் வந்துட்டாங்கன்னு ஒரு வாரமாக பேசிக் கொண்டிருந்த ஊரார் காளையனை பார்க்கவும் மகிழ்ந்தனர்.
கார் ஒன்று காளையன் வீட்டிற்குள் நுழைந்தது. யாரும் அன்று வெளியே செல்லாமல் வீட்டில் இருந்தனர். மாறனும் சுப்ரியாவும் விடுப்பு எடுத்திருந்தனர்.
கார் சத்தம் கேட்டு வெளியே வந்தனர்.
கார்க்கதவை திறந்து இறங்கினார் “இளவேந்தன்”. நம் கதாநாயகர்களின் தந்தை.
“அப்பா” செழியன் அழைக்க, அப்பாவா? மாறன் வேந்தனை பார்த்தான். அவர் மறுபக்கக் கதவை திறக்க, தாமரைச் செல்வி இறங்கினார்.
யாரோ.. என வேந்தனை பார்த்துக் கொண்டிருந்த சுப்ரியா, “தாமர” என்று ஓடி வந்து அணைத்தாள்.
அம்மாடி, “தள்ளி நில்லு” வேந்தன் சொல்ல, அவரை முறைத்துக் கொண்டே “தாமர, நீ இல்லாமல் எப்படி அழுதேன் தெரியுமா? சரா அந்த கொலைகாரப்பயக்கிட்ட எப்படி பேசினா தெரியுமா?” அவள் சொல்லிக் கொண்டிருக்க, “அம்மா..” அழைத்தான் இளந்திரையன்.
வைஷ்ணவி அதிர்ந்து அவனை பார்க்க, சுப்ரியா வேகமாக திரும்பி, “மாமா..தாமர..” பேசத் தொடங்க, “சுப்ரியா அவங்க எங்க அம்மா” செழியன் கூறினான்.
சுப்ரியா நகர்ந்து, உங்க அம்மாவா? என்று தாமரைச்செல்வியை பார்த்தாள்.
அக்சரா ஓடி வந்து தாமரை கையை பிடித்து, உனக்கு ஒன்றும் ஆகலைல்ல? எனக்கு இதுவே போதும். அந்த அகில் உன்னை கொன்னதா என்னிடமும் மாமாவிடம் சொன்னான். அப்பொழுதே எனக்கு நீ மாமாவோட அம்மான்னு தெரியும். என்னை மன்னிச்சிரு தாமர. நான் அதிகமா பேசிட்டேன்..
மாமா, “தாமரைக்கு ஒன்றுமில்லையா? நீங்க எப்படி?” அக்சரா கேட்க, சுப்ரியா நம்ப முடியாமல் “சரா” அழைத்தாள்.
“முதல்ல உள்ள போகலாமா? தாமரையால ரொம்ப நேரம் நிற்க முடியாது” வேந்தன் கூற, “தாமர நீ எங்கள ஏமாத்திட்ட” சுப்ரியா அழுது கொண்டே செல்ல, வைஷ்ணவி அவள் பின் சென்றாள்.
தாமரையை அமர வைத்த வேந்தன், பேசத் தொடங்க..”அண்ணா” அழைத்துக் கொண்டே இளந்திரையனிடம் ஓடி வந்தாள் யாழினி.
“யாழு” அவன் கண்ணீருடன் அவளை அணைக்க, மாறனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..
தாத்தாவை பார்த்த பாட்டி சிறுபிள்ளை போல ஓடி வந்தார்.
“குழலி பார்த்து வாங்க” அவர் தன் மனையாளை தாங்கி பேசினார்.
மேகலை உள்ளே வந்து எல்லாரையும் பார்த்து விட்டு, வைஷ்ணவியிடம் சென்று அவளை அணைத்துக் கொண்டார்.
அடுத்தடுத்து சொந்தங்களை பார்த்த சுப்ரியா தாமரை மீதுள்ள கோபம் மறந்து எல்லாரையும் கவனிக்க, மாறனால தான் எதையும் தாங்க முடியவில்லை.
“யாழு” அக்சரா அழைக்க, ஹே..சரு என்று யாழுவும் அவளும் கட்டிக் கொண்டனர். செழியனோ தன் தாய் தந்தை அருகே சென்று அமர்ந்து கொண்டான்.
“என்னோட பேரப்புள்ளைக எவ்வளவு வளர்ந்திருச்சுக?” பாட்டி பூரிப்புடன் தீரனை ஆசையாக தொட்டு பார்த்து மாறனிடம் வந்தார். அவன் முகத்தை திருப்பினான்.
ஏய்யா, “பாட்டி மேல கோபமா?” அவர் கேட்க, எனக்கு என்னோட அண்ணா, சித்தப்பூ தவிர யாருமில்லை சென்று அமர்ந்தான்.
“அவன் அப்படி தான் பாட்டி. நீ வருத்தப்படாத” அக்சரா சொல்லிக் கொண்டிருக்க, குருவுடன் வந்தார் மிருகராசன். யார் வந்ததும் அவனுக்கு தெரியாது.
தீரா, “உன்னோட மாமா வாராரு. மாலை தயாரா வச்சிருக்கியா?” குரு கேட்டுக் கொண்டே வர, “ஏன்டா நீ மரியாதையா கூப்பிட்டு வர்ற மாதிரி தெரியல” இருவரும் வாய் பேசிக் கொண்டே வந்தனர்.
யாழினியையும் மற்றவர்களையும் பார்த்து உறைந்து நின்றான் குரு.
“வாங்க மாமா” இளந்திரையன் அழைத்து வைஷ்ணவியை பார்த்தான்.
“அப்பா” அக்சரா ஓடிச் சென்று அவரை அணைத்துக் கொண்டாள்.
அப்பாவா? சுப்ரியா இளந்திரையனை பார்க்க, ஆமா குட்டிம்மா “உன்னோட அப்பா”
மாமா, அம்மா? அவள் கேட்க, அவன் தலைகவிழ்ந்து நின்றான்.
“உன்னோட அம்மா அன்றே இறந்துட்டாம்மா” மிருகராசன் சுப்ரியாவை பார்த்து கையை நீட்டினார்.
“அப்பா” அவள் அவரிடம் செல்ல, “சிட்டு” இளந்திரையன் அழைக்க, “மாமா, இவரு அப்பாவா?” அவனை ஏறிட்டு கேட்டாள்.
ம்ம்! போ அவன் சொல்ல, “மாமா நிஜமாக தான? அப்புறம் அப்பா இவர் இல்லை. அவரும் இல்லைன்னு சொல்லக் கூடாது” வைஷ்ணவி கண்ணீருடன் பேச.. “கண்ணம்மா” தாமரை எழ முயன்றார்.
அவரை பார்த்து விட்டு “அப்பா” அவள் அவளது தந்தையை அணைத்துக் கொண்டாள்.
யாழினி ஏக்கமுடன் இளந்திரையனை பார்க்க, “சாரிடாம்மா. உன்னோட அப்பா இல்லை” என்றான்.
“அம்மா” அவள் மேகலையை அணைத்து அழுதாள். குரு அமைதியாக நகர்ந்தான்.
எங்கடா போற? தாத்தா உரக்க குருவை அழைத்து கேட்டார்.
நான் என்னோட வீட்டுக்கு போறேன்..
உன்னோட வீடா?
ஆமா, “இந்த வீட்ல என்னால உரிமை கொண்டாட முடியுமா?” குரு கேட்க, “ஏன் முடியாது?” மேகலை தன் மகளை விலக்கி கேட்டார்.
அத்த, என்னோட அப்பாவுக்கும் இவருக்கு சண்டை போடவே நேரம் சரியா இருக்கும். இதுல்ல நான் தலையிடல. நான் போறேன்.
“எல்லாரையும் கஷ்டப்பட்டு கண்டுபிடித்து சேர்த்து வச்சிட்டு நீ தனியா போகப் போறேங்கிற?” இளந்திரையன் சினமுடன் கேட்டான்.
“நான் கிளம்புறேன்டா. என்னால இவரையும் என் அப்பாவையும் போராடியெல்லாம் சேர்த்து வைக்க முடியாது. உங்களையே சேர்த்து வைக்க பதினெட்டு வருசமாச்சு. நான் கிழவனாகிடுவேன்” குரு சொல்ல, சிரித்த தாத்தா “பேரான்டி உன் அப்பனை வரச் சொல்லு”..
“வரச் சொல்றேன். ஆனால் இருவரும் சண்டை போட்டால் தீரா நீ தான் பொறுப்பு” அவன் சொல்ல, கண்டிப்பாடா மாமாவை வரச் சொல்லு..
அலைபேசியை எடுத்து குரு அவன் அப்பாவை வரச் சொன்னான். “வாரேன்” அவர் வைத்து விட்டார்.
இளவேலனோ தன் தாய்யை பார்த்துக் கொண்டே இருக்க, “குழலி உம் செல்லமவன் உன்னையே பார்த்துட்டு இருக்கான்” காளையன் கூற, “வேலா நல்லா இருக்கீயாய்யா?” அவர் தன் மகன் நெற்றியில் முத்தமிட்டார்.
சத்யா தன் தாய்யுடன் வந்து நின்றான்.
ம்மா..ராது அவர் கூற, எப்படியோ எம் மருமகள கூட்டிட்டு வந்துட்ட?
ஏலேய் பேரான்டி, “உன் தாத்தாவை நல்லா போடுடா” அவர் சொல்ல, “பாட்டி அதையெல்லாம் எப்பவோ குடுத்துட்டேன்” சத்யா கண்ணடித்தான்.
வேலா, உன்னை மாதிரி துடுக்கா இருக்காலேய்..
“ஆமாம்மா” சத்யாவை இளவேலன் பார்த்தார்.
“வீரன் வரவும் தாத்தா மாமாகிட்ட ஒழுங்கா பேசு” இளந்தியரையன் கூற, “எனக்கு தெரியும்லேய்” அவர் வீரனை தனியே அழைத்து சென்றார். இருவரும் பேசி சரி செய்து கொண்டனர்.
தாமரை வைஷ்ணவியை பார்த்துக் கொண்டே இருந்தார்.
இளவேந்தன் அவளை அழைத்து அருகே அமர வைத்தார்.
வைசு, பேசுற? தாமரை வார்த்தையை மென்று விழுங்கி கேட்டார்.
உடம்பு சரியாகலையா? வைஷ்ணவி கேட்க,
“ஆமாம்மா, சீரியசான நிலையில் தான் நான் தாமரையை பார்த்தேன். வயிற்றுப்பகுதியும் தொண்டையும் அதிக பாதிப்பாக இருந்தது. இப்ப தான் கொஞ்ச கொஞ்சமா பேசி நடமாட தொடங்கினாள். உங்களை தான் முதலில் தேடினாள். அதான் உடனே அழைச்சிட்டு வந்துட்டேன்” என்று இளந்திரையனை பார்த்தார் இளவேந்தன். அவன் தாமரை முன் மண்டியிட்டு அமர்ந்தான்.
“மன்னிச்சிருப்பா உன்னோட அறியாத வயதில் உன்னை விட்டு போயிட்டேன்” கண்ணீருடன் பேசினார்.
பரவாயில்லைம்மா. இப்பவாது வந்தீங்களே! ஹாஸ்பிட்டலில் சேர்க்கணுமா? அவன் கேட்க, இல்ல தீரா. ஓரளவு பரவாயில்லை. ஒரு வாரம் ஓய்வெடுத்தால் போதும்..
எல்லாரும் குடும்பமாய் மகிழ்வுடன் இருந்தனர். மாறன் மட்டும் சோகமாக அவனறைக்கு சென்றான். சுப்ரியா அவன் பின்னே செல்ல, இவர்களை பார்த்த வேந்தனும் அவர்களை பின் தொடர்ந்தார்.
மாறா, என்னாச்சு?
ப்ரியா, இனி அண்ணா என்னை கண்டுகொள்ளவே மாட்டான்.
யார் சொன்னா? மாமா உன்னை பார்க்காமல் இருக்கவே மாட்டார். நீ தனியாக இருக்காமல் எல்லாரிடமும் பேசிப் பழகு..
என்ன பேசணும்? அவன் கோபமாக கேட்க, சுப்ரியா அவனை அமர வைத்து, “கடந்த காலம் முடிந்து விட்டது மாறா. அதையே எண்ணிக் கொண்டிருந்தால் வாழ்க்கையை சரி செய்ய யாராலும் முடியாது”.
ம்ம்! இப்ப என்ன பண்ணணும்?
முதல்ல உன்னோட பெற்றோரிடம் பேசு..
எப்படி பேசுறது?
ஏ…ய்..என்னிடமேவா? உனக்கு பேசவே தெரியாதா? அவள் கேட்க, ப்ரியா அவன் அழைக்க..”சொல்லு..சொல்லு..சொல்லு..” அவள் உதட்டை சுருக்கி குவித்து செல்லமாக கேட்க, அவன் அவ்விடம் முத்தமிட்டு “லவ் யூ” என்றான்.
கண்களை விரித்து அவனை பார்த்து வேகவேகமாக வாயை சரி செய்து நகர்ந்து அமர்ந்தாள்.
“ப்ரியா” அவன் அழைக்க, சுயம் வந்து அவனை அடித்து, “ஏன்டா லவ்வ சொல்லி கை பிடிச்சி காதலிக்கும் போது கிஸ் பண்ணனும். அதுக்குள்ள பண்ணீட்ட?” அவள் அவனை முறைத்தாள்.
லவ் யூ சொன்னேனே!
“தெண்டம்..தெண்டம்…உன்னை..” பல்லை கடித்து, ஒரு பொண்ணுகிட்ட பிரப்போஸ் பண்ணும் போது அவளோட கண்ணை பார்த்து தைரியமா சொல்லணும். பட்டென்னு நேரா கிஸ்ஸூக்கு போயிட்ட?
ஓ! எனக்கு இதெல்லாம் தெரியாது..
ஆமா, உனக்கு எப்படி தெரியும்? அந்த உதவாதவனுகளோட சுத்த தான தெரியும்? பிடிச்சிருக்கான் பாரு ப்ரெண்ட்ஸ..
மாறன் அவளை முறைத்து பார்க்க, இப்படி முறைத்து லவ்வ சொன்னால் கூட நல்லா தான் இருக்கும்..
“அப்படியா!” சரா குரலில் இருவரும் எழுந்தனர். வேந்தனும் கையை கட்டிக் கொண்டு இருவரையும் பார்த்தனர்.
“ஐய்யய்யோ மாமா!” சுப்ரியா மாறனை பார்க்க, “இப்ப எதுக்கு பயப்படுற?” மாறன் அவள் கையை பிடித்தான்.
மாறா, “நாம லவ் பண்ணும் போது பேரண்ட்ஸ் பார்த்தால் நாம பயப்படணும் இல்லைன்னா காதலுக்கு மரியாதை இருக்காது” சுப்ரியா சொல்ல, வேந்தன் சிரித்தார்.
தாமர, உன்னை பற்றி சொன்னது சரிதான். சீரியசான நேரத்தை கூட வேடிக்கையாக்குற?
“அதெல்லாம் திறமை மாமா” அவள் சொல்ல, “அப்படியா மேடம்? இதை தாமரையிடம் நான் சொல்லவா?” அக்சரா கேட்க, “சொல்லு. நீ செழியன் மாமாவுக்கு பிரப்போஸ் செய்து அவர் ரிஜெக்ட் செய்ததை நான் சொல்றேன்” சுப்ரியா சொல்ல, வேந்தன் அக்சராவை பார்த்தார்.
கண்கலங்க அவள் வேகமாக கீழே ஓடினாள்.
“யோசிச்சு பேசு ப்ரியா” மாறன் அவளை அதட்டி விட்டு அக்சரா பின் ஓடினான்.
குருவும் அவன் அப்பாவும் அவர்கள் வீட்டை விட்டு மொத்தமாக இவர்களுடன் சேர்ந்து வாழ வந்து விட்டனர்.
என்னடா, “உன்னோட கிளியிடம் பேசலையா?” இளந்திரையன் குருவிடம் கேட்டான்.
“அண்ணா” யாழினி இருவருக்கும் இடையில் வந்து அமர்ந்தாள்.
தேனு கூட இருந்த?
ஆமாண்ணா, “அவ மாடிக்கு போனா. நான் இங்க வந்துட்டேன்” குருவை பார்த்தாள்.
என்ன வேணும்? தீரன் கேட்க, வந்து அண்ணா..நானும் இங்க சருவோட காலேஜ் சேரணும்.
அதான் வந்தீயா? இளந்திரையை குருவை பார்த்தான்.
“மாமா” வைஷ்ணவி அழைக்க, “நீங்க பேசுங்க. நான் சிட்டுவை பார்த்துட்டு வாரேன்” வெளியே வந்தான்.
சற்று நேரத்தில் உள்ளே வந்த தீரன், குருவும் யாழினியும் கை கோர்த்து கொஞ்சிக் கொண்டிருந்ததை பார்த்தான்..
டேய், “என்னடா நடக்குது?” தீரன் கேட்க, வெட்கமுடன் வெளியே ஓடி விட்டாள் யாழினி.
இல்லடா மச்சான்..
சரிதான். புரிஞ்சுபோச்சு அவன் நகர்ந்தான்.
இளந்திரையனும் வைஷ்ணவியும் ஜோடியாக அமர்ந்து பேசுவதை பார்த்த தாத்தா பாட்டியும் கவனித்துக் கொண்டனர்.
குடும்பமாக எல்லாரும் சேர்ந்து கோவிலுக்கு சென்றனர். அவ்வூருக்கே மகிழ்ச்சி இக்குடும்பத்தின் மீட்சி..
காளையனும், “அவ்வூரில் கலவரத்தின் போது உடைந்த குடும்பத்தினர் உலகில் எம்மூலையில் இருந்தாலும் அவர்கள் குடும்பத்துடன் சேர்த்து வைப்போம்” என்று உறுதியளித்தார். அனைவரும் மகிழ்ந்தனர்.
அதே நேரம் இளந்திரையன்- வைஷ்ணவி தேவிக்கு திருமண தேதி அறிவிக்கப்பட்டது.
இளந்திரையன், குரு, சத்யா திட்டமிட்டு சென்னை சென்று மகாதேவ்வின் மொத்த உலகையும் அவனையும் சரித்து விட்டு வந்தனர்.
error: Content is protected !!