Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நினைவே சிட்டாய் Ep-16 (final)

16

கோவில் திருவிழா முடிந்து “தீரன்- வைசு” திருமண நாளும் வந்தது. அவ்வூரே திருவிழா போல “இளந்திரையன்- வைஷ்ணவி தேவி” திருமணத்தை கொண்டாடினார்கள்.

மாறன் கொஞ்ச கொஞ்சமாக அவர்களின் குடும்பத்தோடு ஒன்ற ஆரம்பித்தான். செழியன் அக்சராவிடம் மறைத்திருந்த காதலை வெளிப்படுத்த தொடங்கினான்.



Advertisement

தீரன் திருமண நாளன்று அவர்கள் அறையில் வைசு அவனருகே வந்து அமர்ந்தாள்.

Advertisement

“சிட்டு” இளந்திரையன் அவளை கட்டிக் கொண்டான்.

Advertisement

மாமா, முதல்ல எனக்கு பிராமிஸ் வேணும்.

Advertisement

“பிராமிஸா?” அவளை தன் பக்கம் திருப்பி கேட்டான்.

ம்ம்.! உனக்கு ரெண்டு பொண்டாட்டின்னு வாழைமரத்துக்கு தாலி கட்டி வெட்டிட்டு தான் என் கழுத்துல்ல தாலி கட்டுன. எனக்கு அதெல்லாம் போதாது. என்னோட கண்ணா மாமா எனக்கு மட்டும் தான். நீ மனசால கூட வேற பொண்ணை நினைக்கக் கூடாது..

என்னோட சிட்டுக்கு இம்முட்டு பொறாமையா?

“ஆமா. என்னோட மாமா மனசுல எந்த நிலையிலும் வேற பொண்ணுக்கு இடம் கிடையாது” என்று அவன் கையை இழுத்து அவள் தலையில் வைத்து பிராமிஸ் செய்ய சொன்னாள்.

கண்டிப்பா பண்ணணுமா?

மா..மா..

பிராமிஸ். என்னோட சிட்டுவை தவிர என்னோட மனசுலையும் சரி வாழ்க்கையிலும் சரி யாருக்கும் இடமில்லை..

நானும் பிராமிஸ் மாமா. என்னோட கண்ணா மாமா தவிர என்னோட வாழ்க்கையில் யாருக்கும் இடமில்லை..இழுத்து “நம்ம பசங்களை தவிர” வெட்கப்பட்டாள்.

ஓ! அவன் புன்னகையுடன் அவளை அணைத்துக் கொண்டான்.

தாத்தா எப்படி இத்தனை வருசமா உங்க அறையிலே சமாளிச்சாரு..

அதெல்லாம் அவர் சமாளிச்சுட்டார்.

“மாமா” எனக்கு பசிக்குது ஸ்வீட்டை பார்த்தாள் வைஷ்ணவி. அவன் சிரிப்புடன் அவளை அணைத்து, “என்னோட பொண்டாட்டிக்கு எந்த நேரத்துல்ல பசிக்குது?”

மாமா, “உன்னோட தாடி இல்லாம ரொம்ப ஹண்ட்சம்மா இருக்க. ஊர்ல எல்லா பொண்ணுங்களும் உன்னை சைட் அடிப்பாங்க. வெளிய போகும் போது தாடிக்கு ஏற்பாடு செஞ்சுக்கோ”.

இளந்திரையன் சத்தமாக சிரித்து, “என்னோட சிட்டுக்காக இது கூட செய்ய மாட்டேனா?” புன்னகைத்தான்.

செழியனோ அக்சராவிற்கு செய்தி அனுப்பி அவளுக்காக காத்திருந்தான்.

அவள் வரவும் அவளை அணைத்து, சாரி அக்சா அன்றிருந்த சூழ்நிலையில் உன்னை ரிஜெக்ட் செய்துட்டேன்..

“அண்ணா” யாழினி சத்தமிட, “யாழு” அவன் தடுமாற,அவன் பக்கம் வந்து சிரித்தாள் அக்சரா.

“அக்சா” அவன் சினமுடன், இது என்ன விளையாட்டு? கேட்டான்.

“நான் என்னோட மாமா கூட விளையாடினேன்” யாழினி தோளில் கை போட்டு வசீகர சிரிப்பை சிதற விட்டாள். யாழினி தலையில் தட்டி செழியன் அவளை போக வைத்து, “இப்ப விளையாடலாமா?” வேஷ்டியை மடித்து கட்டினான்..

“ஓ.கே மாமா” அவள் ஓட, அவளை இழுத்து முத்தமிட்டு காதலை தெரிவித்தான்.

              நாட்கள் வாரங்களாகி வருடமானது..

மாமா..மாமா.. எழுந்திருங்க…இளந்திரையன் மீது ஏறி அமர்ந்தாள் வைஷ்ணவி.

சிட்டு, தூங்க விடுடா…  

மா…மா…செல்லக்கோபமுடன் “இங்க பாரு” அவன் மீசையை பிடித்து இழுத்தாள்.

ஷ்ஆ! “சிட்டு” இளந்திரையன் கண்ணை திறந்தான்.

கையில் பிரக்னன்சி கிட்டை பார்த்து, “சிட்டு…” மேலும் அவன் கண்கள் விரிய குதூகலத்துடன் எழுந்து அவளை தூக்கி சுற்றினான். அவள் சிரித்தாள்.

“போதும் மாமா. இறக்கி விடுங்க” என்று இறங்கி, யாரிடம் சொல்லாதீங்க. நாம ஹாஸ்பிட்டல் சென்று உறுதி படுத்திட்டு வந்து சொல்லலாம்..

“நிக்கி குட்டிக்கு பாப்பா வரப் போறா” இளந்திரையன் கத்தினான்.

அவன் வாயை பொத்தி, “இல்ல, குட்டி தீரா வரப்போறானே!”

அவள் முகத்தை கையில் ஏந்தி முகமெங்கும் முத்தமிட்டான் தீரன்.

மாமா, “வாங்க இப்பவே கிளம்பலாம்” இருவரும் செல்ல, மாமா பைக் இப்ப வேண்டாம் குட்டி தீரா வந்துட்டான்ல்ல. கார் எடுக்கலாம்.

இப்பவாது காரை எடுக்க சொன்னீயே! வாங்கி ஒரு வருசமாச்சு…

கல்யாணத்தோட வாங்கியது. பேசிக் கொண்டே காரில் ஏறி கிளம்பினார்கள்.

பை பாஸ் அருகே செல்லும் போது இடப்பக்கமாக வேகமாக வந்த லாரியை பார்த்து, “மாமா…..”கத்திக் கொண்டே வைஷ்ணவி இளந்திரையன் அமர்ந்திருந்த பக்கம் கார்க்கதவை தள்ளி அவனை கீழே தள்ளி விட்டாள். அவன் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மயங்கினான்.

பயங்கர சத்தத்தில் லாரி காரை தூக்கி வீழ்த்தியது.  கார் குப்புற விழுந்து கிடந்தது. அருகே இருந்தவர்கள் ஓடி வந்தனர். வைஷ்ணவி தலையெங்கும் இரத்தம் வழிய கையை நீட்டினாள்.

ஒருவர் அவளை தூக்க, “மாமா கிட்ட போகணும்” அவள் சொல்ல, அவர் தீரனிடம் ஓடி அவனை தட்டி எழுப்பினார்.

வைஷ்ணவி அவன் காதருகே குனிந்து, “மா..மா.. உன்னோட வாழ ஆசையா இருக்கு” கண்ணீர் வடிய….

ஊஹூம்..நா..உன்னோடவே இருப்பேன். என்னை மறந்துறாத..”சொல்லி தலையை சரித்தாள்.

எழுந்தான் தீரன் மருத்துவமனையில்..

நடந்த சம்பவம் அவன் கண் முன் வர, “சிட்டு……” சத்தமிட்டான்

மாறன் கண்ணீருடன் அவனருகே அமர்ந்திருந்தான்.

மாறா, சிட்டு எங்க? வெளிய இருக்கா?

அண்ணா, “அண்ணிய நம்ம வீட்ட விட்டு போகக் கூடாதுன்னு பிராமிஸ் வாங்கினேன். ஆனால் அவங்க நம்மள விட்டு மொத்தமா போயிட்டாங்க” கதறி அழுதான்.

கண்ணீர் வழிய, இல்ல மாறா. இப்ப கூட என்று அமைதியான தீரனுக்கு வைஷ்ணவி கூறிய வார்த்தை கேட்டது.

இல்ல..இல்ல..என்று விரைந்து அறையை விட்டு வெளியே வந்தான். அவன் மொத்தக்குடும்பமும் அவனை பார்த்து மேலும் கதறினார்கள்.

இல்ல…இல்ல…சிட்டு..நிகிதாவை பார்த்துக் கொண்டே, குட்டிம்மா “சிட்டு” சுப்ரியாவிடம் கேட்க,

மாமா, “அக்கா நம்மள விட்டு போயிட்டா” கத்தி கதறி அழுதாள்.

“சிட்டு போக மாட்டா” அவன் சொல்லிக் கொண்டிருக்க, வார்டுபாய் ஸ்ட்ரெச்சரை வெளியே இழுத்து வந்தான். தாத்தா அவனுடன் வந்தார்.

தாத்தா, என்னோட சிட்டு..

அவன் முகத்திரையை விலக்க, சி..ட்..டு…..மருத்துவமனையே அதிரும் வண்ணம் கத்தினான் இளந்திரையன். உடல் குலுங்க கதறி தீர்த்தான். எல்லாரும் அவனிருந்த அறைக்கு இழுத்து சென்றனர்.

நிகிதாவும் வைஷ்ணவியை தேடி அழுது கொண்டே இருந்தாள். யாராலும் சமாளிக்க முடியாத நிலையாகிப் போனது.

மாதம் கழிந்தும் அறையை விட்டு வெளியே வராத தீரனை எண்ணி தாத்தா உடல்நிலை மோசமானது. அவரும் சில நாட்களிலே இறந்து விட்டார்.

சுப்ரியா அவனிடம் சென்று, “மாமா” அழைக்க, அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

ஷேவ் செய்யாமல், தலைமுடி அடர்ந்து தன் சிட்டுவின் எண்ணத்துடனே சுழன்று கொண்டிருந்தான் இளந்திரையன்.

மாமா, நிக்கிக்காக வெளிய வாங்க மாமா. அவன் அமைதியாக இருந்தான்.

மாமா, ப்ளீஸ்.. நீங்க இப்படியே சரியாக சாப்பிடாமல் இருந்தால் உங்களுக்கும் ஏதாவது ஆகிடும். எங்களால தாங்க முடியாது அழுதாள். அவன் அவளை மீண்டும் பார்த்து விட்டு அமைதியானான்.

மாமா, “நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்” சுப்ரியா சொல்ல, சட்டென நிமிர்ந்த இளந்திரையன், “நோ..சிட்டு..அவ எனக்கு எல்லாமே! இங்க தான் இருக்கா. அவ சொன்னது எனக்கு நல்லா கேட்டது குட்டிம்மா. அவ என்னோடவே இருக்கிறதா சொல்லீட்டு தான்” கையை உயரே காட்டினான் கண்ணீருடன்.

மாமா..

இல்ல குட்டிம்மா, “என்னோட சிட்டு உடம்பு மட்டும் தான் இல்லை. அவ உசுரு இங்க” என்று தன் நெஞ்சை காட்டி “இருக்கு. பக்கத்துல்லயும் இருக்கா”  அழுதான். சுப்ரியாவும் அழுதாள்.

இருக்கேல்ல சிட்டு..இருக்கேல்ல….சிட்டு…மாமா கேக்குறேன்…சொல்லு சொல்லு  கத்தினான்.

மேசை மேலிருந்த அவர்களின் புகைப்படம் பறந்து அவன் முன் வந்து விழுந்தது.

சுப்ரியா இதை பார்த்து சன்னலை பார்த்தாள்.

எதையும் கண்டுகொள்ளவில்லை தீரன். பார்த்தேல்ல குட்டிம்மா. “இதோ இருக்கா பாரு” அவன் மேசை பக்கம் காட்டினான்.

அவன் எண்ணம் புரிந்து கொண்டு, “ஆமா மாமா அக்கா நம்மை விட்டு போகலை. இனி இதுபோல் கேட்க மாட்டேன்” என்று சன்னலை பார்த்துக் கொண்டே சென்றாள்.

  

(திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் இறந்த சிட்டுவுடனான நினைவுகள் தீரன் கனவில் வந்ததை தான் பார்த்தோம்)

                                       (தற்பொழுது)

                               (பத்து வருடங்களுக்கு பின்)

“சிட்டு…” படுக்கையில் அமர்ந்து மூச்செடுத்து விட்டு, “குட் மார்னிங் சிட்டு” இளந்திரையன் அமர்ந்து அவனுக்கு முன்னிருந்த சுவற்றில் மாட்டப்பட்ட வைஷ்ணவியின் பெரிய புகைப்படத்தை பார்த்தவாறு எழுந்தான்.

“நிக்கிம்மா” அவன் அழைக்க, “வந்துட்டேன் டாட்” அவனறையின் உள்ளறையிலிருந்து ஓடி வந்தாள் பத்து வயது சிறுமியாக நிகிதா.

இருவரும் அறையை விட்டு வெளியே வந்து அடுக்கலைக்கு சென்றனர்.

தாமரை நின்று கொண்டிருந்தார்.

தீரா, தயாராகி வருவன்னு பார்த்தால்..

“ம்மா..இன்று சன்டே. இன்று எங்களுக்கான என்ஜாய்மென்ட் டே. வாட் பேபி?” நிகிதாவை பார்க்க,

“தாமர உனக்கு தெரியாதா? சும்மா பேசிட்டு எங்க நேரத்தை வீணாக்காத. சித்தி, ரெடியாகிட்டியா?” சத்தம் போட்டாள் நிகிதா.

“வந்துட்டேன் செல்லம்” சுப்ரியா வயிற்றை தள்ளிக் கொண்டு வந்தாள்.

சித்தூ..எங்க?

அவன் காலையிலே வேலைய பார்க்க கிளம்பீட்டான்.

அம்மாடி, “மாப்பிள்ளையை மரியாதையா பேசு” மிருகராசன் சத்தமிட்டார்.

“தாத்தா” நிகிதா சத்தத்தில் அமைதியானார்.

பேத்தியை எதிர்த்து யாராவது பேசுனீங்க? மட்டுவார்குழலி தன் கண்ணாடியை சரி செய்து கொண்டே வந்தார்.

பாட்டி, ரொம்ப அளக்காத. நீ என்ன செய்தாலும் உன்னை நாங்க அழைச்சிட்டு போக மாட்டோம்..

“போடி. எம்மவன் என்னை அழைச்சிட்டு போவான்” அவர் கூறி இளவேலனை தேடினார்.

நிகிதா வாய் விட்டு சிரித்து, கொஞ்சம் பின்னாடி பாரு..

இளவேலன் தன் பேரனை தூக்கியவாறு வெளியே செல்ல, “ஏலேய் வேலா நில்லுடா குழலி” சத்தமிட்டார்.

“போம்மா, எம் பேரனுடன் இன்று தான் நான் நேரம் செலவழிக்க முடியும்” அவர் செல்ல, “மாமா இந்த கார்ப்பொம்மையை வாங்கிட்டு போங்க” ரூபினி அவளறையிலிருந்து ஓடி வந்தாள். சத்யா ரூபினிக்கு திருமணம் முடிந்து மகன் இருக்கிறான்.

“பெரிய சித்தி” நிகிதா கத்த, “ஏன்டி கத்துற? உன்னோட கத்தலில் சுதர் எழுந்துட்டான்” அக்சரா அவளை திட்டிக் கொண்டே வந்தான்.

ஏய், “நீ நிக்கியவே திட்டுறியா?” சுப்ரியா கேட்க, ப்ரியா சாப்பாடு எடுத்து வை. சீக்கிரம் சாப்பிட்டு போகணும்.

“இதோ பாருடா. உன்னோட சித்தூ உள்ள வந்ததும் கிளம்பணும்ன்னு சொல்றார். குட்டிப்பையா நீ அம்மாவை உதைக்காமல் உன் அப்பாவை உதை” இளம்மாறன் கன்னத்தில் இடித்தாள் சுப்ரியா. நிகிதா சிரித்தாள்.

வா நிக்கிம்மா.. குளித்து சாப்பிடலாம் என்று நிகிதாவிற்கு, அவள் அக்கா இடத்தை நிரப்பும் பொறுப்பை சுப்ரியா ஏற்றுக் கொண்டாள்.

நிகிதா தயாராகி வரவும் குரு வந்தான்.

“மாமா” நிகிதா அவனை அணைத்துக் கொண்டாள்.

பட்டு, “உன்னோட அப்பனை கல்யாணம் பண்ணிக்க சொல்லுடா?” குரு கேட்க, “குரு” சத்தமிட்ட இளந்திரையன்,” எத்தனை முறை சொல்வது? யாராவது கல்யாணம்ன்னு சொன்னீங்க. அப்புறம் நான் பொல்லாதவனாகிடுவேன். என்னோட சிட்டு என்னோட தான் இருக்கா. அவ கேட்டா கஷ்டப்படுவா” சீறினான்.

அண்ணா, “சும்மா இரு” சுப்ரியா அவனை திட்டினாள்.

“வா நிக்கிம்மா” தீரன் நிகிதாவை அவனது பைக்கில் வெளியே அழைத்து சென்றான்.

“இன்னும் எத்தனை வருசம் தனியா இருப்பான்? யாராவது சொல்லுங்க?” குரு சினமுடன் கத்தினான்.

அண்ணா, “மாமா அக்காவை நினைச்சிட்டே வாழ்ந்திருவார். வேற பொண்ணை கல்யாணம் செய்து வைத்தால் அவர் சொன்னதை மறந்துட்டீங்களா?”

அப்படி சாகலாம் மாட்டான் சுபா..

அண்ணா, அக்கா விசயத்தில் மாமா நினைத்தால் செய்வாங்க. சிறுவயதிலிருந்தே அக்காவுக்காக காத்து கொண்டிருந்த மாமா, அக்காவுடன் ஒரு வருசம் ரொம்ப ரொம்ப சந்தோசமா வாழ்ந்தார்ண்ணா. அதுவே போதும் அவருக்கு.

“மறுபடியும் அவர் மனதில் அக்கா இடத்தை பிடிக்க யாராலும் முடியாது. அவர் நிக்கிக்காவும், அக்கா நினைவுகளுடன் வாழட்டும். அவருக்கு நாம இருப்போம்”

சொல்லி விட்டு கண்ணீருடன் அமர்ந்தாள்.

“ஆசையா வாழ்ந்துட்டு இருந்த புள்ளைகளை பிரிச்சுட்டீயே கடவுளே!” நெஞ்சில் அடித்து அழுதார் குழலி.

திருமணம் பற்றிய பேச்செடுத்தால் தானும் செத்துடுவேன்னு தீரன் குடும்பத்தினரை மிரட்டி தன் சிட்டுவின் நினைவிலே வாழ்ந்து கொண்டிருக்கிறான்..

தன் ராயல் என்பீல்ட்டில் நிகிதாவை முன் அமர வைத்து, “அவளிடம் போகலாமா?”

“போகலாம்” புன்னகையுடன் அவனை பார்த்தாள்.

“உனக்கு அம்மா இல்லைன்னு வருத்தமா இருக்காடா?” தீரன் கேட்டான்.

டாட், மம்மி நம்ம கூடவே தான இருக்காங்க. இப்ப கூட உங்க பின்னாடி தான தோளில் கை போட்டு அமர்ந்திருக்காங்க..

“உன்னிடம் பேச மாட்டேங்கிறாங்கன்னு கஷ்டப்படுறியா?” அவன் கேட்க, பாப்பா அமைதியானாள்.

“நிக்கிம்மா” இளந்திரையன் பைக்கை நிறுத்த, “அம்மாவுக்கு பேச்சு வராதுன்னு எனக்கு தெரியும் டாட்” என்று சுப்ரியா சொல்லிக் கொடுத்தவாறு பேசினாள்.

ம்ம்ம்! என்று இளந்திரையன் தன் தோளில் அவன் நினைவான சிட்டு கை மீது கை வைத்தான்.

                        “கனவே உனை வந்து சேர

                      நான் இங்கு வரம் ஒன்று கேட்பேன்

                         மரணம் நெருங்கிடும் போதும்

                     உன் நினைவில் வாழ்ந்திடுவேனே!

                          

                        தீராத துயரத்தில் நானும்

                      காற்றோடு கரைந்தாய் நீயும்

                

                        நீங்காத நிலவொளியானாய்

                             அன்பே! அன்பே!

                               

                      மறுஜென்மம் இருந்தால் கூட

                        உயிரே உன் கரம் பிடிப்பேனே!

                      உன் கால் தடம் நான் தொடர்வேனே!

                            அன்பே! அன்பே!….”

       சிட்டு உடல் இவ்வுலகில் இல்லை என்றாலும் நம் தீரன் உயிரில் கலந்து அவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்..

                          என்றும் அவன் காதல் சிட்டுவின் நினைவுகளுடன் தீரன்……….

                                                                 (முற்றும்)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!