Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Vizhigalin Mozhi Ennavo

Un Vizhigalin Mozhi Ennavo 15

ஜெய் ஸ்ரீ ராம் 

EPI -15

 ஏற்காட்டில் இருந்து வந்த மறு நாளே அர்ஜுன்னும்,  தமிழினியும் சென்னை கிளம்பி விட்டனர். அவர்களுக்கு அடுத்த குழந்தை பிறக்கவும், சக்தி, மது குழந்தை பிறப்பதர்காகவும் குலதெய்வதிற்கு  வேண்டுதல் வைத்து, விரதம் இருப்பதால் பரிமாளாவும், யாழினியும் இன்னும் ஒரு வாரம் சென்று கிளம்புவதாக இருந்தது.

மனோவும்  அவர்களோடு சென்று விட்டான். ஏனோ கங்காவிற்கு தான் மனம் கஷ்டமாக இருந்தது. அவரும் திருமணத்திர்க்கு எத்தனை முறையோ கேட்டு பார்த்து விட்டார். பிடிகொடுக்காமல் இருப்பவணை என்ன செய்ய முடியும். “காவ்யா வேணாம்னா வேற பொண்ணு பாக்கலாம். இல்ல கூட வேலை செய்றவங்கள யாரயா வது  லவ் பண்றியான்னு “கேட்டும் பார்த்து விட்டார். 



Advertisement

அவனுக்கு திருமண பொருத்தம்  இப்போது விட்டால் இன்னும் மூன்று வருடம் கழித்து தான் இருக்கிறது.  சரி அதுக்குள்ள காவ்யா படிப்பு முடிஞ்சிரும் பொறுமையா பன்னிக்காலம் என்பது பழனியின் எண்ணம். 

கங்காவிற்கு எடுத்து சொல்லியும் விட்டார். அதை எல்லாம் கங்கா கேட்பதாக இல்லை. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை மகளிர் குழுவிற்காக இவர் சில பெண்கள் உடன் வங்கிக்கு சென்றவர். வேலை முடிந்ததும் வீடு திரும்ப நினைக்கயில் எல்லாரும் ஜூஸ் குடிப்பதர்காக  ஒரு காபி ஷாப் சென்றனர். 

அந்த மதிய வேளையில்,  கல்லூரி நேரத்தில் காவ்யா ஒரு  ஆடவனுடன் அமர்ந்து காபி குடித்து கொண்டிருந்தாள்.   

Advertisement

 பிரண்ட்டாக இருப்பான் எதாச்சும் முக்கியமான விஷயம் பேசிட்டு இருப்பாங்க நம்ம ஏன் டிஸ்டர்ப் பண்ணனும் என்று நினைத்தவர்.

Advertisement

 

[the_ad id=”6605″]

 

Advertisement

என்ன தான் இவர் தப்பாக என்னவில்லை என்றாலும் மற்ற பெண்மணிகள் அப்படி என்ன வாய்ப்பு இருப்பதால்.  இவளை கவனித்தாளும் கவனிக்காததுபோல் கடந்து சென்று விட்டார். 

காவ்யா,   கங்காவை கண்ட அடுத்த நொடி சத்தமில்லாமல் திருட்டு தனமாய்  வெளியேறிவிட்டாள். ஆரம்பதில் தவறாக என்னாத கங்காவின் மனம். கள்ளம் இருக்கும் இடத்தில் தான் திருட்டு இருக்கும். ஒரு வேளை அந்த பையனை  காதலிக்காராளோ! 

மனோவிற்கு அவள் மேல் விருப்பம் இருக்கும் பட்சத்தில், இவள் வேறொருவனை காதலித்தால், மனோ தாங்குவானா என்று அந்த தாயுள்ளம் துடித்தது , 

“டேய்  மனோ, இந்த 3 வருசதுக்குள்ள  காவ்யா யாரயாவது லவ் பண்ணிட்டா நீ என்னடா பண்ணுவ,  பேசாம இப்போவே கல்யாணம் முடிச்சிட்டு அப்புறம். அவ மது,தமிழ்  மாதிரி எவ்ளோ வேணா படிக்கட்டும். நான் அவளை பாத்துக்குறேன்”. 

வாய்விட்டு சிரித்தவன்” ம்மா அந்த டோராவாவது லவ் பண்றதாவது, பசங்கள பாத்தாளே பயந்து நடுங்கிடுவா, பயந்தாகோலிமா அவ,படிச்சி முடிக்கட்டும் அப்புறம் பாத்துகலாம்”. என்றவன் மனமோ “மாமா, அண்ணா மாதிரி என்னால கல்யாணம் பண்ணி பிரம்மசாரியா இருக்க முடியாதுபா”என்றது. 

கங்கா இவன் கிட்ட பேசறது வேஸ்ட், நம்ம சக்திகிட்டயும், மது கிட்டயும்  சொல்லி காவ்யாவ கவனிக்க சொல்லணும் என்று நினைத்து கொண்டார். 

  

 சக்தி மதுவின் இல்வாழ்க்கை தெளிந்த நீரோடையை போல் சென்று கொண்டிருந்தது. முன்பெல்லாம் படிப்பதை மட்டுமே வேலையாய் வைத்திருந்தவள். இப்போதெல்லாம் பரிமளாவின் மேற்பார்வையில்  வீட்டில் வேலை செய்வது, சமைக்கிறேன் பேர்வழி என்று சமையலறை பொருட்களை வீணாக்குவதுமாய் இருக்கிறாள்.

 சக்திக்கு தான் பொறுப்புகள் கூடியது கல்லூரிக்கு செல்வது,  மாலையில் தோட்டம் பார்ப்பது, மதுவிற்கு பாடம் கற்பிப்பதோடு இரவு வேளையில் அவளுக்கு உணவு ஊட்டுவதும் அவன் தான்.  

 

 மதுவின் தந்தை இருக்கும் வரை அவளுக்கு இரவு உணவு ஊட்டுவது அவளின் தந்தைதான்.  ஏன்! பரிமளா திட்டினாலும் செல்வம் சிரித்துக்கொண்டே ஊட்டி விடுவார். அவர் இறந்த பின் மது இரவு உணவை தவிர்க்க ஆரம்பிக்க பரிமளா “நான் ஊட்டுகிறேன்” என்று எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் அவரை மறுத்தவள். 

பின் ஒரு வருடம் ஆனது. இரவு உணவை சரியாய் சாப்பிட, தந்தையின் மறைவிற்கு பின் யாரையும் அவளுக்கு ஊட்ட அனுமதிக்க வில்லை. 

குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் தெரியும் என்பதால் சக்தி மதுவிற்கு உணவு ஊட்டுவதை ஆச்சரியமாய் பார்த்திருந்தனர். அவனுக்கும் அவன் தட்டில் மற்றவர்கள் கை வைத்தால் பிடிக்காதே !

வேறு ஒரு பெண் மனைவியாக வந்திருந்தாள்.தாய் தந்தைக்கு எதிரில் மனைவிக்கு உணவு ஊட்டுவது சங்கடமாக இருந்திருக்குமோ! என்னவோ !

இப்போது சந்தோசத்தை தான்  கொடுத்தது. தந்தைக்குப் பின் அந்த இடத்தை தனக்கு  அளித்ததை எண்ணி பெருமையாகவே உணர்ந்தான். எல்லா கணவரும் அடைய ஆசை படும்  இடம் இது தானே!

 எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த வேளையில். சக்திக்கு கல்லூரியில் என்னவென்று தெரியாத பிரச்சனையின் வேர் புரிய ஆரம்பித்தது. ஏதோ பிரச்சனை……… இருந்தாலும் தன்னால் தீர்த்துவிட முடியும் என்று தான் எண்ணினான். அந்தப் பிரச்சனை என்னவென்று தெரிந்த பின்பு தன்னால் இதில் என்ன செய்ய முடியும் என்று தளர்ந்து அமர்ந்துவிட்டான்.

அவன் நியமித்த மாணவர்கள் லைப்ரரியன் பற்றி  சொன்னதை நம்பவும் முடியாது, நம்பாமல் இருக்கவும் முடியாது திண்டாட்டமாய் இருந்தது. 

 டெல்லி, மும்பை,  சென்னை போன்ற பெரு நகரங்களில் நவ நாகரீக மங்கைகள் டேட்டிங்  செல்வது எல்லாம் சாதாரண விஷயம்தான். இந்த காலகட்டத்தில் மிகவும் சாதாரணமாகவே பார்க்கப்படுகிறது. ஆணிற்கும் பெண்ணிற்கும் சம்மதம் என்ற பின்.  ஆனால் இந்த கிராமப்புற பெண்களும் அப்படி இருப்பார்கள் என்று சத்தியமாய் சக்தி எதிர்பார்க்கவில்லை.

 நகரங்களில் ஒரு வீட்டில் கொலையே நடந்தாலும் பக்கத்து வீட்டிற்கு உடனே தெரிவது இல்லை. ஆனால் கிராமப்புறங்களில் சாதாரணமாய் ஒரு டவுனுக்கு சென்றால் கூட இத்தனை மணி பேருந்தில் சென்று,  எத்தனை மணி பேருந்தில் வந்திறங்கினார்கள் என்று துல்லியமாய் கூறுவார்கள்.

 யார் வீட்டிற்கு இன்று விருந்தினர் வந்துள்ளனர் என்பது வரை அனைத்து புள்ளி விவரங்களும் கிடைத்துவிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் பெண்கள். இது போல் சென்று வருவது சாத்தியமா,    தங்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களோடு அதுவும் அவர்கள் திருமணமானவர்கள் என்பதை சக்தியால் ஜீரணிக்க கூட முடியவில்லை.

 மாதா, பிதா விற்கு பிறகு நாம் சொல்வது குருவைத் தானே குருவிற்கு பின் தானே தெய்வமே!!!! என்ன தான் பெண்களுக்கு சம்மதம் என்றாலும் இவர்களை நம்பி கல்லூரிக்கு அனுப்பும் பெற்றோர்களை இப்படி ஏமாற்றலாமா, 

 ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் நாட்டின் கலாச்சாரம் எங்கே போனது. இவர்களுக்கு எல்லாம் கற்பு அவ்வளவு விளையாட்டாக போய்விட்டதோ!   இவ்வளவு ஏன் !!நாளை இந்தப் பெண்களின் பெற்றோருக்கு விஷயம் அறிந்து போலீஸ் கேஸ் என்று ஆனால்………. எல்லாவற்றிற்கும் மேல் இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் இந்த கல்லூரியின் பெயர் என்னவாகும்.

 சக்தி அமெரிக்காவிலிருந்து கல்லூரி  திரும்பிய பின் ஷேர் ஹோல்டர்மீட்டிங்கில்,  அதிக ஷேர் மதுவின் பேரில் இருப்பதால் மதுவை தான் சேர்மன் பதவியில் அமர சொன்னார்கள். ஆனால் மதுவால் அமர முடியாத பட்சத்தில்.கணவனான அவனை சேர்மன் சீட்டில்  அமரச் சொன்னார்கள்.

  அன்றே! தான் அந்த  சீட்டில் அமர்ந்திருந்தாள். ஓரளவு உண்மை தெரிந்திருக்குமோ !!!என்று சக்தி தனக்குள் எண்ணாமல் இல்லை. 

 

[the_ad id=”6605″]

 

அதோடு இப்போது சேர்மன்பதவியில் இருப்பவருக்கு இந்த பிரச்சனை   எப்படி தெரியாமல் இருக்கும்.இது தான் கல்லுரி நடத்தும் லட்சணமா, 

பெண்கள் தெரிந்தவரோடு வெளியில் சென்றால் அது வேறு,  இதே கல்லூரியில் லைப்ரரியன், ப்ரோபஸ்ஸோர் என்று தினம் ஒருவனோடு மால், சினிமா, பப், லாட்ஜ்ஜ் என்று சுற்றினால். பின்னால் இவர்களின் வாழ்கை என்னவாகும்.இப்போ ஜாலியா சுத்திநாளும் நாளைக்கு மற்றவர்களை face பண்ணும் தைரியம் இவர்களிடம் இருக்குமா என்றும் எண்ணினான். 

 வெளியில் தெரிந்தால்  ஷேர் ஹோல்டர் என்று மதுவின் பேரும்தான் அடிபடும். அவளுக்கு நல்லது செய்யும் நோக்கில் இப்படி கெட்ட பெயர் வந்து விடுமோ !என்று பயமும் சேர்ந்தே  வந்தது.

“ஒருவேளை மத்தவங்க பார்வையில் இதெல்லாம் சரியோ நமக்கு தான் தப்பா தெரியுதா, “என்று யோசித்து தலைவலி வந்தது தான் மிச்சம்.  

 

 மாலை கல்லூரி முடிந்து இருவரும் வீடு திரும்ப சக்தியின்   அமைதியை பார்த்து மது “என்னப்ரோப்லம் ” என்று ஐந்து முறை கேட்டுவிட்டாள். சக்தி பதில் ஏதும் அளிக்காமல்,

”  ஏன்!! ஸ்ரீ நீ  டேட்டிங் போறத பத்தி என்ன நினைக்கிறாய்” என்று கேட்க,  அவளோ!!!” அது அவங்க அவங்க பர்சனல் விஷயம் அதைப்பற்றி நான் நினைக்க என்ன இருக்கு மாமா “என்று முடித்துவிட்டாள்.

” இல்ல ஸ்ரீ ஒருவேளை நீ கல்யாணம் ஆகாம இருந்தா இந்த மாதிரி டேட்டிங்  எல்லாம் போய் இருப்பியா, “என்ற சக்தியின் கேள்விக்கு ஒரு நொடி அமைதியாய் யோசித்தவள். 

“எனக்கு விருப்பம் தான். ஆனா,  நான் யார் கூட போகனும்னு நினைக்கிறேனோ !!!அவங்க என்ன கூட்டிட்டு போய் இருப்பாங்கன்றது கொஞ்சம் டவுட்டு தான்”

“என் கல்யாணம் முடிஞ்சு ஹனிமூன்கே!மூணு வருஷம் கழிச்சு தான்,  நானா அடம் பிடிச்ச பிறகு கூட்டிட்டு போனாங்க” என்று சிரிப்போடு முடிக்க, 

 அவ்வளவு யோசனைகளிலும்  சக்தியின் முகத்தில் ஒரு நொடி புன்னகை வந்துவிட்டு  போனது. பின் “கல்யாணம் ஆன பிறகு வேறவங்க கூட போறது பத்தி என்ன நெனைக்கிறே!”

“ம்ம்ம்ம் ஒரு மண்ணும்   நினைக்கல, லூசு மாதிரி கேள்வி கேக்கறீங்க, கல்யாணம்  ஆனா பிறகு வேறஒருத்தன் கூட யாராவது போவாங்க ளா “இப்படி எல்லாம் அசிங்கமா பேசுனீங்க அண்ணாகிட்ட சொல்லிடுவேன். “

“ஒழுங்கா ஐஸ்கிரீம் பார்லர்ல வண்டி நிறுத்துங்க, யாழிக்கு வாங்கணும்”என்று அவள் உள்ளே சென்று விட, அங்கு யாரோ ஒருவன்,  ஒரு பொண்ணுடன் நெருங்கி அமர்ந்து, அனைத்தவாரு ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருக்க, அந்த பெண்ணை பார்த்தால் ஏதோ கல்லூரி மாணவியை போல் இருந்தது.

”  ச்ச் ச, பப்லிக்ல எப்டி பிஹேவ் பண்றதுனு தெரியறது இல்லை. யூஸ்லெஸ்”, என்று நினைத்தவன் ஏதோ தோன்றவும்  அந்த ஆணின் முகம் பார்க்க, அது லைப்ரரியன். இப்போ அவனுக்கு ஒர்கிங் டைம் இங்க என்ன பன்றான். என்று அவனை கேக்க அருகில் நெருங்கி செல்ல, 

 சக்தியை பார்த்ததும் ஒரு நொடி பயந்து, பின் இவனோடு மதுவை பார்த்ததும். ஒரு அர்த்தமான புன்னகையை சிந்தி கிளம்பி விட்டான். அந்த புன்னகையின் அர்த்தம்.” என்ன மாதிரி நீயும் கரெக்ட் பண்ணி தான கூட்டிட்டு வந்த” என்றது. 

“அடிங்க” என்று அவனை அடிக்க கிளம்பும் முன்.” மாம்ஸ்  சீக்கிரம் போலாம் ஐஸ்கிரீம் மெல்ட்டு ஆகிட்டு இருக்கு “என்று மது அவசர பட “மவனே நாளைக்கு இருக்குடா, உனக்கு கச்சேரி “என்று உள்ளே கருவினான். 

  வீடு வந்தபின்னும் திரும்பத் திரும்ப மது  அழைத்துக் கொண்டே!!!! அவன் முகத்தைப் பார்க்க,  அவன் கவனம் இவள் மேல் இல்லை. என தெரிந்ததும் அருகில் வந்து அவனை அழைக்க, 

“என் பொண்டாட்டியவா தப்பா நெனச்சி பாத்த, இந்நேரம் செத்துறுப்ப டா,  நீ !!அவ வந்த தாள தப்பிச்ச,”உள்ளுக்குள் உறுமி கொண்டிருந்தான். சக்தி  இருந்த மன உளைச்சளில் இவளை கண்டு கொள்ளவே இல்லை.

 அவளும் எவ்வளவு நேரம்தான் பொறுமையாய் இருப்பாள். அவன் தாடையை பிடித்து,  முகத்தை அவளை நோக்கி திருப்பியவள். “என்ன மாம்ஸ் ப்ரோப்லம், எல்லாம் சரியாயிடும். ஓகே, டோன்ட் ஒர்ரி “என்று கூறிக்கொண்டே…….. இருக்கும் வேளையில். 

 

[the_ad id=”6605″]

 

யாழி அவர்களின் ரூமின் உள்ளே வந்து”அத்தை எனக்கு” என்றது. 

மது “என்னவேணும் என் டாலி பேபி க்கு, ஐஸ்கிரீம் தீந்து போட்டுச்சு டா செல்லம்” என்க, 

 டாலி “அய்யோ!!!!உம்மா அத்தை,  அப்பா, அம்மாக்கு தரும் போது எல்லாம் எனக்கும் தருவாங்க” என்றதுமே”!மதுவும் அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “எனக்கும் டாலி மாதிரி ஒரு பேபி வேணும் மாம்ஸ்” என்று சிணுங்க, 

“இப்போ அது தாண்டி குறைச்சல். உங்க அண்ணன் குழந்தை முன்னாடி ரொமான்ஸ் பன்றான். நீ அவ முன்னாடியே!பேபி வேணும்னு கேளு,  எப்போ! என்ன பேசணும்னு அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் அறிவே இல்லை”. என்று முணுமுணுத்து வெளியில் சென்று விட்டான்.

” என்னடா ஆச்சி இந்த அய்யனார்க்கு ஈவினிங்ல இருந்து ரொம்ப காரமா இருக்கு, டேட்டிங் போறத பத்தி வேற கேட்டுச்சு, நமக்கு தெரியாமல் சைடுல எதாச்சும் ரெடி பண்ணுதா என்று என்னியவள். 

அடுத்த நொடியே !!”!ம்ம்ம்ம் க்கும் இதுக்கு எல்லாம் ஏது அவ்ளோ அறிவு,  நானா ஓகே சொன்னதால தான் என்கூடவே குடும்பம் நடத்துது”. 

“இல்லைனா இன்னும் பிரம்மசாரியா தான் இருந்திருக்கும். “என்று என்னியது அவளின் மனச்சாட்சி. 

எது எப்டி இருந்தாலும் எல்லா தலைமுறை பெண்களுக்கும் தன் கணவன் மேல் இருக்கும் அதே நம்பிக்கை, ஆனால் என்னம் மட்டுமே வேறுபாடு 

சென்ற  தலைமுறை  பெண்கள்” என் புருஷன் என்ன தவிர யாரையும் கனவுல கூட நெனைக்க  மாட்டாரு, அவரு ஸ்ரீ ராமன்” என்றார்கள்.

 இந்த தலைமுறையினரோ!

“அதுக்கு ஏது அவ்ளோ அறிவு “என்கிறார்கள். இது மட்டுமே வித்தியாசம். இருந்தாலும் நம்ம சக்தி ஸ்ரீ ராமன் தான். சக்தி மாதிரி ராமன்கள்  இருக்கும் ஊரில் ஒரு சில இராவணன்களும் இருக்க தான் செய்கிறார்கள். 

சொல்லபோனால்  வாய்ப்பு கிடைக்கும் வரை எல்லாம் ராமனாகாத்தான் இருக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்த பின் இராவணன்னாக மாறிவிடுகிறார்கள். 

சக்தி, அர்ஜுன் , மனோ போல் ஒரு சிலரே இதற்கு விதிவிலக்கு 

 

மொழி தொடரும்……… 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!