Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Avalaa – Short Story Part 1

அவளா. . . . .?
———————–

“ஆஆஆஆஆ . . . . .ஆஆ……ஆ . . .ஆ. . .ஆ. . . .ஆ!!!!!!” என்னைய விடு என்னைய விடு! விட்டுடு!!!! , கிட்ட வராதே!! பிளீஸ்! பிளீஸ்! ஐயோம்மா!! வலிக்குது!! விடுடா!!யாராவது வாங்களேன்!!”” ஆ! . . .ஆ…ஆ..ஆ!. ..”

பவித்ரா தலையை அப்படியும் இப்படியுமாக ஆட்டிக் கொண்டிருந்தாள்!
சந்துரு ஓடி வந்து அறையின் விளக்குகளைப் போட்டவன்,”
” ஏய்!!! பவித்ரா! எழுந்துக்கோடி!! என்ன இது? கனவா! எழும்புடி! முழிச்சிப் பாரு! ஏய்!ஏய்ய்ய்!” என்றபடி அவளை உலுக்கினான்!

ராஜி, அறையில் இன்னொரு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தவள், சாவகாசமாய் எழுந்து வந்து,” என்னண்ணா. என்ன ஆச்சு?” என்றாள். “”ம்ம். . .ம்ம்.. குழந்தை அழுதுச்சு!” என்றபடி அவளை முறைத்தவன்,” ”
ஏண்டி இவ இவ்வளவு ஹை டெசிபல்ல கத்திட்டு இருக்கா, எருமமாடு உனக்கு எப்படித்தான் இப்படி தூக்கம் வருதோ?” என்று கத்தினான்.



Advertisement

“ஆமாண்ணா! அவளுக்கு டெய்லி அதான் பொழப்பு! ராத்திரி சன் டிவில ஆதிரா பார்க்க வேண்டியது!அப்புறம் தூக்கத்துல சிரிக்கிறது, அழறது, கத்துறதுன்னு ஒரே ஆர்ப்பாட்டம்தான்!”

அதற்குள் பவித்ரா விழித்து சுற்று முற்றும் பார்த்தவள் , தான் கண்டது கனவு என்று உணர்ந்ததும், எழுந்து உட்கார்ந்தாள்! உடல் முகம் எல்லாம் தெப்பலாக வியர்த்திருந்தது!

” என்னம்மா! ஏதும் பயங்கர கனா கண்டியா?” என்று சந்துரு அவள் அருகில் அமர்ந்து கனிவாக வினவினான்!

Advertisement

” ஆமாண்ணா! அவங்க என்னை விரட்டிட்டே வந்தாங்க! நான் ஓடிட்டே இருந்தேன்! திடீர்னு ஒரு ஆள் என் முன்னாடி வந்து என் முடியைக் கொத்தா பிடிச்சிட்டான்! நான் விடு விடுன்னு கத்திட்டே போராடினேன்! அவன் நகம் என் கன்னத்துல கீறிடுச்சு! அப்புறம் முழிச்சிட்டேன்!” என்றாள்.

Advertisement

” என்னடி! நேற்றும் இதே கனவுதானே சொன்னே! இன்னிக்கு கொஞ்சம் வித்தியாசமா டிரை பண்ணி இருக்கலாமே!” என்றாள் ராஜி கேலியாய்!

“ஆமா இன்னிக்கு என்ன டிரஸ்டி? நேத்து கனவுல சிவப்பு பாவடை போட்ருந்த! அந்த குண்டு ஆள் பிரவுன் ஷேர்ட்! கரெக்ட்டா?” என்றாள் ராஜி!

சந்துரு அதட்டினான்!” ஏய்! கொஞ்சம் பேசாம இரு! அவ ரொம்ப பயந்து போயிருக்கிறது தெரியலியா? போ! போய் குடிக்க ஜில்லுன்னு தண்ணி கொண்டுவா!” என்றான் கோபமாய்!
பவித்ராவுக்கு கண்களில் குளம் கட்டியிருந்தது!

Advertisement

ராஜி பேசாமல் சென்று ஒரு பாட்டிலில் தண்ணீரும், பூஜை அறையிலிருந்து திருச்செந்தூர் இலை விபூதியையும் எடுத்து வந்து, திருநீற்றை அவளுக்குப் பூசி விட்டு, அவளது தலையணையின் அடியில் வைத்தாள்! பிறகு அவளைத் தண்ணீர் குடிக்க வைத்துப் படுக்க வைத்தாள். அவள் சற்று கண்ணயரத் துவங்கியதும், சந்துருவை அழைத்தவள்,”

” அண்ணா! எனக்கும் கவலையாயிருக்கு! இவள் மூணு நாளா ஒரே கனவையே பார்த்துட்டு இருக்கா! சம்பவங்கள் , டிரஸ் கலர் கூட டெய்லி அதேதான் சொல்றா!” என்றாள் கவலையோடு!

சந்துரு,” சரிம்மா! அவ பக்கத்துலேயே கட்டில்ல படுத்துக்கோ! லைட் எரியட்டும்! காலையில் பவித்ராகிட்ட பேசலாம்!” என்றான்.

மறுநாள் காலை!
பவித்ரா சீக்கிரமே எழுந்தவள், முந்தைய இரவின் சுவடு கூட இன்றி சுறுசுறுப்பாக வேலைகளை முடித்தவள், குளித்து விட்டு வரவும், அவளைக் கண்ட ராஜி அதிர்ந்தாள்!
அவள் அணிந்திருந்தது, அவள் கனவில் அணிந்திருந்ததாய்க் கூறிய அதே சிவப்பு பாவாடை….!!!!!

மதுரை டோக்நகர் ஏரியா. அமைதியான அந்த கிளைச்சாலையில் , இடதுபுறம் திரும்பினால் ஒரு தெரு.அந்த தெருவின் கடைசியில் இரண்டு வீடுகள். முதல் வீட்டில் அண்ணன் திருமலைநாதன் மனைவி விசாலம். அது மாடியிலும் இரண்டு அறைகள் ,ஒரு நீள வெராந்தா என சற்றே பெரிய வீடு!

எதிர்த்த வீடு தம்பி தணிகாசலம் கல்லூரி விரிவுரையாளர், மனைவி பிரேமா வங்கியில் பணி. அவர்களுக்கு மூன்று குழந்தைகள்.இரண்டு ஆண் குழந்தைகள். பெரியவன் ஆறாவது, சின்னவன் நான்காவது படிக்கின்றனர். கடைசியில் ஒரு பெண்குழந்தை யூகேஜி.
அண்ணன் தம்பி இருவரும் ஒன்றாக அந்தப் பெரிய வீட்டில்தான் இருந்தனர்.

திருமலைநாதன் இயல்பிலேயே மிகவும் சபலம் உடையவர். வேலைக்கு வரும் பெண்களிலிருந்து, சற்றே வறுமையான அவரிடம் உதவி கேட்டு வரும் பெண்கள் வரை எல்லோரிடமும் சில்மிஷம் செய்பவர். படிந்தால் கொண்டாட்டம்தான். அவர்கள் வீட்டிற்கு காய்கறி கொண்டு வரும் முத்து போன்ற பெண்கள் அவர் அவ்வப்போது தரும் அதிக காசுக்காக சில பல வழிசல்கள், உரசல்களைப் பொறுத்து போவதும் நடப்பதுதான்.

பிரேமாவுக்கு அவரது மேய்ச்சல் பார்வை பிடிக்காமல் போனதில், இருவரும் எதிர்த்த வீட்டை வாங்கி குடி போய்விட்டனர். விசாலத்திற்கும் கணவனது புத்தி தெரிந்தே இருந்ததால் அமைதி காத்தார்.

விசாலம் வசதியான வீட்டிலிருந்து வந்தவர்தான். ஆனால் கோழை. அப்பா அம்மா கிடையாது. எதற்கும் பயந்து பணிந்து போய்விடுவார். கணவரின் நடத்தையால் அவமானமும், மன உளைச்சலுமாய் இருந்தவருக்கு, இத்தனை வருடங்கள் கழித்தும் குழந்தை இல்லாமலிருந்தது அவரை அதீத மனச் சோர்வுக்கு ஆளாக்கியது. வயது நாற்பத்தி ஒன்று. எனினும் ஒவ்வொரு மாதம் நாட்கள் சிறிது தாமதமானாலும், ஆர்வமாகிப் பின் இல்லை என்னும்போது அழுது கரைந்து என உடல்நிலையும் குன்றியது. அதுவும் உற்றம், நண்பர்கள் என,” இன்னும் நல்ல சேதி இல்லையா?” என்கையில் அதீத மன அழுத்தத்தில் ஆழ்ந்தார். திருமலைநாதன் இதையுல்லாம் சட்டை செய்வதே இல்லை! இந்த சமூகமும் பெண்களை நோக்கித்தானே சுட்டு விரல் நீட்டிக் கேள்வி எழுப்பும்!

அந்த சமயத்தில்தான் அவரது சித்தப்பா வழி அண்ணன் உறவில் அவரது மனைவி, வாய்க்காலில் குளிக்கும்போது, சுழலில் அகப்பட்டு, நீரின் வேக இழுப்பும், அலசிக்கொண்டிருந்த நான்கைந்து புடவைகள் காலில் சிக்கியதுமாய் காப்பாற்ற முடியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார். அந்த அண்ணன் தினமும் குடித்தே சீரழிபவர். விக்கிரமசிங்கபுரம் மில்லில் வேலை பார்த்தாலும் குடியில் எப்போதும் இருப்பவரால் குழந்தைகளைப் பார்க்க முடியவில்லை.

அவருக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்தவள் காதலித்தவனுடன் ஓடிப் போய் எங்கேயோ கண் காணாமல் வாழ்கிறாள்.தொடர்பு இல்லை. அடுத்தது மீனா. கடைசியில் லோகு! மீனாவை விசாலத்தின் துணைக்கு அனுப்பினர்.

பவித்ராவின் குடும்பம் திருமலைநாதன் வீட்டின் மாடிக்கு குடி வந்து ஐந்து மாதங்கள் முடியவில்லை. பவித்ரா ஏழாம் வகுப்பு படிக்கிறாள்.அவளுக்கு மூத்தவள் ராஜி இப்பொழுதுதான் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கிறாள். பெரியவன் சந்துரு பி.காம்.எல்.எல்.பி. மூன்றாவது வருஷம். தாய் இல்லை. தந்தை நாக்பூரில் இரயில்வேயில் வேலை! அவர்களது தாய்மாமா குடும்பம். மதுரையில் கலைநகரில்தான் இருக்கிறார்கள். மாமா வெங்கடாசலம் ஒரு மருத்துவர்.ஜெனரல் பிசிஷியன். எம்டி. யும் கூட. அவர்களது கண்காணிப்பில் பிள்ளைகள் அந்த ஊரில் இருப்பது அம்பலவாணன், அவர்களது தந்தைக்கு நிம்மதி்.

விசாலத்திற்கு பவித்ராவின் குடும்பத்தை மிகவும் பிடித்தது! ராஜியின் சூட்டிகை, பவித்ராவின் அமைதி அவர்கள் வீட்டில் எந்நேரமும் அலறும் டிவி திரில்லர் சீரியல்கள், பவித்ரா ஹாரர் படங்கள் பார்த்து விட்டு செய்யும் அலப்பறைகள், சந்துருவின் அதட்டல் என அவர்கள் வீட்டில் இருக்கும்போதெல்லாம் விசாலத்திற்கு சந்தோஷமாய்ப் பொழுதுகள் கழியும். ஏதாவது சமைப்பதைக் கொடுத்து விடுவார்.ஸ்பெஷலாக ஏதாவது செய்தால் ராஜி வாசம் பிடித்தபடி வந்து விடுவாள். விசாலத்தின் மனஅழுத்தம் கொஞ்சம் குறைந்தது!

இந்த வீட்டுக்கு வந்த புதிதில், எல்லாம் நன்றாகவே இருந்தது. பத்து பதினைந்து நாட்களில் பவித்ராவின் நடவடிக்கைகளில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது! தனியே போய் ஓர் இடத்தை வெறித்துப் பார்ப்பதும், எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று எழும்பி அசையாமல் நின்று மௌனமாய் எதிரேயோ, கீழேயோ பார்த்தபடி நிற்பதும் ராஜிக்குப் புரியவில்லை. பவித்ராவை உலுக்கினாலும் அவள் அந்த நிலையிலிருந்து மாறுவதில்லை. பின் தானாய் இயல்புக்கு வந்த பின் அவள் கேட்பது,” நான் இப்பொழுது என்ன செய்தேன்?”

சந்துருவுக்கும் கவலையானது. மாமாவிடம் பகிர்ந்து கொள்ள அவர் பவித்ராவுக்கு எல்லா சோதனைகளும் செய்து பார்த்து எல்லாம் நார்மல் என்றதும், ” ஏதோ மனக்குழப்பம் போல இருக்கு. அவளிடம் மெதுவாகப் பேசி ஸ்கூலில் எதுவும் நடந்ததான்னு கேட்போம். கொஞ்ச நாளைக்குத் தனியே விட வேண்டாம் . தேவைன்னா கவுன்சலிங் கூட்டிட்டு போறேன்!” என்றார்.

மீனாவுக்கு விசாலம் நாலைந்து செட் புதுத்துணிகள், கவரிங்கில் புது மாடலாய் வளையல், செயின், கம்மல் என எடுத்துக் கொடுத்திருந்தார். நல்ல சாப்பாடு , ஓய்வு, துணிமணி என ஆளே மாறி விட்டாள். கறுப்புதான். ஆனால் களையான முகம். இப்போது சதை பிடித்து பெரிதாய் விம்மித் தணியும் மார்பகங்களும், சதைப்பிடிப்பான பின்னழகுமாய் ஆளை அசத்தும் வடிவழகில் இருந்தாள். போன வருடம்தான் வயதுக்கு வந்திருந்தாள். போஷாக்கு உடல் வனப்பையும் மினுமினுப்பையும் தந்திருந்தது. விசாலத்திற்கு அவரது கணவரை நினைத்து ஒரு பயம். ஆனாலும் மீனா சின்னக் குழந்தைதானே என நினைத்திருந்தார். திருமலைக்கும் மீனாவைக் கண்டாலே ஆகாது. அவர் கண்களில் படக்கூடாது, ஹால் சோஃபாவில் எல்லாம் உட்காரக் கூடாது, ஊஞ்சல் தட்டு, அவரது அறைப் பக்கமெல்லாம் கால் படக்கூடாது என ஏகப்பட்ட கெடுபிடிகள். சோற்றுக்கு வழியில்லாமல் வந்தவள் என இளக்காரம்.விசாலத்திற்கு ஒரு வகையில் நிம்மதி.

வாசலில் காலிங்பெல் அடிக்கவும் சென்று கதவைத் திறந்தவள் மூர்த்தியைக் கண்டதும்,” வாங்க!” என்றபடி உள்ளே சென்றாள். மூர்த்தி திருமலைநாதனின் பால்யகால நண்பர். குடும்பம், குழந்தைகுட்டி எதுவும் கிடையாது. தனிக்கட்டை!

“வாடா! என்ன காலங்கார்த்தால..,.?”

“ஏன் ஒரு வாய் காப்பி தரமாட்டியா”

“பேஷா!” என்றவர் உள்ளே பார்த்து “விசாலம். .!” என்றவர், “மூர்த்திக்கு காப்பி கொண்டு வா!” என்றார்.
காப்பியைக் கப்பில் ஊற்றியதும்,
” அத்தை நான் கொண்டு போறேன் !” என்றாள்
விசாலத்திற்கு வால்பிடித்தபடி வந்த மீனா! குழந்தை மனதை நோகடிக்க விருப்பமின்றி விசாலம் தலையசைத்தார்.

மீனாவைக் கண்ட மூர்த்தியின் விழிகள் தெறித்து விடும்போல்
அகன்றது!

மேல் வீட்டில் பவித்ரா,
” ஹேய், மீனாதானே அது அங்க. .!” என்றாள்

ஒரு சுவற்றைப் பார்த்தபடி! ராஜி புரியாமல் அவளைப் பார்த்தவள்,

“எங்கேடி? டிவியிலா. ்?” என்றாள்.

“யாரு டிவியில். .?” – பவித்ரா.

“யாரோ மீனான்னு சொன்னியே!”

“மீனாவா அது யாரு?”

ராஜி குழம்பினாள்.
‘இவளுக்கு என்ன ஆச்சு?’

திருமலை நாதன் மீனாவின் கையிலிருந்த கப்பை ஓங்கி உதைத்தார்.

“பிச்சைக்கார கழுதை இன்னொரு தடவ இங்கே வந்த, கழுத்தை திருகிருவேன்!”

பயந்து ஓடினாள் மீனா.

“நீ ஏண்டா இப்படி பேயறைஞ்ச மாதிரி இருக்க?”

“டேய்! பாக்கவே அருவெறுப்பா அழுக்கா இருந்த பொண்ணா இது. .? சும்மா தளதளன்னு. . . . உடம்பு சூடாகுதுடா. .!”

“ச்சைக் வேலைக்காரிடா. .உளறாத. .!”

“வேலைக்காரியா? வீட்டுக்காரி மாதிரி மினுமினுப்பா இருக்கா. வெளியே எங்கேயும் விடாம பொத்தி வை. யாராவது இழுத்துட்டு ஓடிருவாங்க!”

திருமலைநாதனின் பார்வை இப்போதெல்லாம் மீனாவை யாருமறியாமல் மேய்ந்தது.
“மூர்த்தி சொன்னது சரிதான். என்ன ஒரு உடல்வாகு. .! இவ்வளவு நாள் கவனிக்காம விட்டேனே!”

“ராஜி அங்க யாரோ அழறா மாதிரி இருக்கு!”

“எங்கேடி?”

“அந்த மாடிப்படி கீழ. .! சிவப்பு பாவாடை கூட தெரிஞ்சது!”

“அவங்க வீட்டுக்கு யாராவது வந்திருப்பாங்க. நமக்கெதுக்கு? நீ போய் முகம் கழுவிட்டு ஹோம்வொர்க் செய். நான் உனக்கு குடிக்க ஏதாவது தரேன்.!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!