Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உனக்கென இருப்பேன் -4

உனக்கென  இருப்பேன் 4

குழந்தைக்கு தொட்டில் , ஸ்வெட்ட்டர் ,சாக்ஸ் ,டவல்,சிப்பர் , சத்துமாவு பாக்கெட் ,டயப்பர்  கீர்த்திக்கு இரண்டு நைட்டி நான்கு புடவை எல்லாம் வாங்கி இருந்தான் 

ப்ரூட்ஸ் ,பிஸ்கெட் ,முறுக்கு, நட்ஸ் என்று ஸ்நாக்ஸ் ஐட்டமும் வாங்கி வந்தான் .

     கீர்த்தி இப்போதைக்கு எனக்கு தெரிந்தவரை  குழந்தைக்கு வாங்கி வந்திருக்கேன் , உனக்கு ஏதாவது வாங்கணும்னா மஞ்சுமா கூட போய் வாங்கிக்கோ ! என்றான் .



Advertisement

தேங்க்ஸ் என்றாள் . அந்த ஒத்த வார்த்தையில் டன் கணக்கில் நன்றி தேங்கி கிடந்தது .

இவனை எவ்வளவு அருமையாக  வளர்த்திருக்கிறார்கள்  ! குறிப்பறிந்து நடக்கும் இந்த வித்தையை எங்கு கற்றான் ?அவனின்  ஒவ்வொரு செயலிலும் அவள் விழி விரிந்து நிற்கிறாள் .

இத்தனை சிறந்தவன் தன்னை துணையாய் தேர்ந்தெடுத்து தவறு செய்துவிட்டானே ….

Advertisement

“………………”

Advertisement

மொபைல் கூவி அழைக்கவே டிஸ்பிலேயை பார்த்தவள் சந்தடி இல்லாமல் போனை எடுத்துக் கொண்டு தோட்டத்து பக்கம் வந்து சேர்ந்தாள் அக்ஷயா .

சொல்லுண்ணா , நல்லா இருக்கியா ?

நான் நல்லா இருக்கேன் அச்சு .அம்மா அப்பா சாபிட்டாங்களா ? அவன் குரல் தவித்தது .

Advertisement

ம்கூம் …காபி மட்டும் குடிக்க்க வைத்தேன் என்றாள் .

கீர்த்தி ,தியாக்குட்டி என்ன பண்றாங்க ? ஆவலாய் கேட்டாள் .

அச்சும்மா அவ உன்னோட அண்ணி ….அப்புறம் தியாக்குட்டி தூங்கிட்டு இருக்கான் .

பாருடா இவரு பொண்டாட்டி பெயரை சொன்னதும் சாருக்கு சுர்ருன்னு ஏறுது .

ச்ச …ச அவ வினோத் மனைவியா  நம்ம குடும்பத்துக்குள்ள வரும்போதே உனக்கு அண்ணி தான்  .உன்னை விட ரெண்டு வயசு பெரியவ….

“பிறருக்கு மரியாதை கொடுப்பதில் என் தங்கை என்னை போல் தான் இருக்கணும் ….இருப்பா….” அவன் நிதானமாய் சிரிப்புடன் சொல்லி முடித்தான் .

சாரிண்ணா ….அக்ஷயா வருத்தமுற்றாள் .

சரிடா அச்சும்மா நீ எப்படியாவது அப்பா அம்மாவை சாப்பிட வை !

நான் பார்த்துக்கறேன் அண்ணா …சீக்கிரம் அவங்க மனசு மாறி உங்களை ஏத்துப்பாங்க !

அண்ணா …அண்ணி பாவம் இன்னும் பழசை போட்டு குழப்பிக்கிட்டு இருக்கப் போறாங்க. உனக்கு சொல்லத் தேவையில்லை “நீ அவங்களை கண்ணை இமைபோல் காத்து நிற்ப !” சரிண்ணா நான் வச்சிடவா ?

அச்சு தேங்க்ஸ்டா ! அவன் குரல் சன்னமாய் ஒலித்தது .

எதுக்குண்ணா ?

நீ என்னை சரியா புரிஞ்சவ …உனக்கு என் தேங்க்ஸ் புரியும் !

ம்ம்ம்ம்ம்ம் ….உன்  மனசு நினைச்சு எனக்கு பெருமையா இருக்குண்ணா .

சரிம்மா ஏதாவது முக்கியமான விஷயம்னா கால் பண்ணு !

அழும் குழந்தையை தோளில்  போட்டு தட்டிக் கொண்டிருந்தாள் கீர்த்தி .

கீர்த்திமா லன்ச் கொண்டு வந்திருக்கேன் கதவை தட்டி விட்டு உள்ளே வந்தார் மஞ்சுளா .

அப்போது தான் குளித்துவிட்டு வந்தான் அஸ்வின் .

கீர்த்திமா ஏன் குழந்தை அழறான் ?குழந்தையை வாங்கிக் கொண்டார் 

தெரியலைம்மா ….அழுதுட்டே இருக்கான் . பயந்து போனாள் கீர்த்தனா .

தாய் பால் கொடுக்குற தானே …?

ம்ம்ம்ம்ம் என்று தலை அசைத்தாள் 

குழந்தை பசிக்கு அழும் , செரிமாணம் ஆகலைனாலும் அழும் , ஒன்னுக்கு போகலைன்னா அழும் ,புது இடம் மனுஷங்க இந்த சூழலுக்கு கூட அழும் . மஞ்சுளா சொல்லிக் கொண்டே போக ….வியப்புடன் பார்த்தான் அஸ்வின் .

குழந்தை வளர்ப்பு லேசுபாசான விஷயம் இல்லையே ….அது ஒரு கலை .

குழந்தைக்கு பேம்பர்ஸ் எல்லாம் போட்டு விடாதே …குழந்தைக்கு அதுவே இறுக்கமா இருக்கும்  ப்ரீயா விடு ! வீட்டில் இருக்கும்போது காட்டன் துணி கட்டி விடு  . நான் பழைய வாயில் புடவை கொண்டு வந்து கொடுக்கிறேன் அதை யூஸ் பண்ணிக்கோ !

குழந்தைக்கு வயிறு உப்புசமா தெரியுது . ரெண்டு பாலாடை சுடுதண்ணி கொடு ! பசும்பால் கொடுக்காதேம்மா வயிறு கட்டிக்கும் . தகுந்த அறிவுரை கூறினார் .

பாவம் கீர்த்தனா இருபத்து மூன்று  வயதில் அவள் எந்த குழந்தை வளர்ப்பை அறிந்தாள் ?

குழந்தைக்கு சுடுதண்ணீர் கொடுத்து தோளில் போட்டு தட்டியவுடன் ஏப்பம் ஏப்பமாய் வந்தது . மென்மையாய் தட்டிக் கொடுத்ததில் குழந்தை ஐந்து நிமிடத்தில் இயல்பாகி கண்ணயர்ந்தான் .

சரி தியானேஷ் குட்டியை நான் தூக்கிட்டு போறேன் …நீங்க சாப்பிடுங்க என்றவர் உறங்கும் குழந்தையை தூக்கிக் கொண்டு கிளம்பினார் .

நீங்க சாப்பிடுங்க என்றாள் கீர்த்தி .

நீ போய் குளிச்சுட்டு வா ! சேர்ந்து சாப்பிடுவோம் என்றான் .

மௌனமாய் குளிக்க போனாள் . சில்லென்ற தண்ணீர் சிரசில் பட்டதும் ஏதேதோ ஞாபகம் .

தன் வாழ்வில் எல்லாம் அவசரமாய் நடந்து முடிந்து விட்டது எண்ணி கண்ணீரில் கரைந்தாள் .

அஸ்வினை எப்படி எதிர் கொள்வது ? ஒரு பாதுகாவலனாக மட்டுமே இறுதிவரை அவனால் இருந்து விட முடியுமா ? அது பாவம் இல்லையா?

வினோத்துடன் பகிர்ந்த என் வாழ்வை அவன் அண்ணனோடு எப்படி ? எண்ணமே கூசியது .

நான் என்ன செய்வேன் ? அஸ்வின் தாலி கட்ட அனுமதித்திருக்க கூடாது மிகப் பெரிய பாவம் செய்து விட்டேன் .

மாமா சொல்லுக்கு கட்டுப்பட்டது தவறு …என் சுயநலத்திற்கு அஸ்வின் பலிகடா ஆகி விட்டாரே ….

அவரை பெற்றவர்கள் பாவம் …..தன் மகன் திருமணம் குறித்து எவ்வளவு கனவு கண்டிருப்பார்கள் ?

தண்ணீர் ஊற்ற ஊற்ற ….கண்ணீரும் தண்ணீரும் இரண்டற கலந்தது .

குளியலறை சென்றவள்  நெடுநேரம் வராமல் போகவே  கீர்த்தி …கீர்த்தி என்று குரல் கொடுத்தான் .

பதில் இல்லை ..குழாயில் தண்ணீர் கொட்டும் சத்தம் மட்டுமே ….

கீர்த்தி …கீர்த்தி ….என்னமா இன்னுமா குளிக்கிற ?     

பதட்டமாய் கதவு தட்டினான் .

கதவு திறந்து கொண்டது . அமர்ந்த நிலையில் விறைத்து போய் கண்மூடி இருந்தாள் .

கீர்த்தி ….ஓடிப்போய் அள்ளிக்கொண்டு வந்து சோஃபாவில் கிடத்தினான் .

தோகை கூந்தலில் இருந்து மழை கம்பியாய் நீர் இறங்கியது .

ஜன்னிக்கண்ட உடல் போல் நடுங்கியது அவளுக்கு .

அஸ்வினுக்கு தெள்ளத்தெளிவாய் அவள் நிலை புரிந்தது .

டவல் கொண்டுவந்து தலை துவட்டி …கை கால்களை சூடுபறக்க தேய்த்து விட்டான் .

ம்மா …மா….சிறு முனகலாய் ஒலி வெளிப்பட்டது .

கீர்த்தி …கீர்த்தி …என்னம்மா !எழுந்திருடா …… அவள் கன்னம் தட்டினான் .

அவன் தீண்டலில் தூண்டப்பட்டு வினாடிக்கு குறைவான நேரத்தில் விழுக்கென எழுந்து உட்கார்ந்துவிட்டாள் .

ஸாரி ..ஸாரி ….என்றாள் அவன் முகம் பார்க்கும் திராணியின்றி .

ஒன்னுமில்ல ….முதலில் போய் டிரஸ் மாத்திட்டு வா ! அவன் வெளியில் போய் நின்று கொண்டான் .

உடைமாற்றி அமர்ந்தவளின் கண்ணில்  நீர் மாரியாய் கொட்டியது . வினோத்தோடு  நானும் போயிருக்கணும் ….முழங்காலில் முகம் புதைத்து விம்மினாள்.

“……………….”

சாதம் வைத்து சாம்பார் ஊற்றி பொரியல் வைத்தவன் …சாப்பிடு என்றான்.

இல்ல …..நீங்க சாப்பிடுங்க ….தடுமாறியவள் தலை நிமிரவில்லை .

ம்ம்ம்ம்ச் கீர்த்தி …சொன்னா கேளு ! சற்றும் தயங்காமல் அவள் முகம் நிமிர்த்தி கண்ணீரை துடைத்து விட்டான் . 

தலையை சிலுப்பி நகர்ந்து கொண்டாள் , அவளுக்கு அவன் தீண்டல் ஒப்பவில்லை .

சாப்பிடு ! தட்டை அவள் முன்னே நகர்த்தி வைத்தான் .

வலித்த மனது பசியை மறக்க வைத்திருந்தது . வேண்டாம் என்பதாய் மறுப்புடன் தலை அசைத்தாள் .

“கீர்த்தி ….” முகம் சுணங்கியவன் கோபத்தை காட்ட இயலாமல் சோற்றை பிசைந்து அவள் வாயருகே கொண்டு போனான் .

அவனை  நிமிர்ந்து நேர்கொண்டு பார்த்தாள் . தெய்வம் எதிரில் அமர்ந்திருப்பதாய் உணர்ந்தாள் . கருணையை சுமந்த அவன் பார்வை அவளை  சில்லு சில்லாக நொறுக்கியது 

என்ன பார்க்கிற ? உனக்கு தாலிகட்டிடேன்னு அட்வான்டேஜ் எடுத்துக்கல …..

வினோத் அண்ணன் என்று பார்க்காதே . அம்மா அப்ப்பாவை  விட்டுட்டு வந்து நிற்கிற நீ என்னை உன் அம்மா அப்பாவா பாரு !

உன் அண்ணனுக்கு எவ்வளவு  செல்ல தங்கச்சியா இருந்த ….என்னை உன் அண்ணனா பாரு ! உன் பிரண்ட்ஸ் கூட மனசு விட்டுப் பேசுவ தானே ….? என்னை உன் க்ளோஸ் பிரண்டா பாரு !

நீ பயந்து நடுங்கும் அளவுக்கு இங்கே எதுவும் நடக்காது ! 

உனக்கு நான் இருக்கேன் கீர்த்தி . நமக்கு தியானேஷ் இருக்கான் , நீ நான் குழ்நதைன்னு ஒரு அழகான வாழ்க்கை இருக்கு !

நீ பட்டது போதும் . உன்னை பூ போல் தாங்கிக்க நான் இருக்கேன். நடந்தது எதையும் மாற்ற முடியாது தான் ஆனா நடக்கப் போறதை நாம நல்ல விதமா வடிவமைக்க முடியும் ! எதையும் யோசிக்காம இயல்பா இரும்மா ப்ளீஸ் .

அவன் பேச்சு அவளை இன்னும் விசும்பு வைத்தது .

 உன்னை உடல் தேவைக்காக நான் மேரேஜ் பண்ணியிருப்பேன்னு நீ நினைக்கிறியா ? விழிகள்  கலங்க  அவள் முகம் நோக்கினான்.

ம்கூம் ….என்று கேவியவள் தாவி அவன் சட்டையை கொத்தாய் பற்றிக்கொண்டு  அவன் மார்பில் முகம் புதைத்து சத்தமாய் அழுதாள் 

நெடு நாளாய் அவள் அடக்கி வைத்திருந்த கண்ணீர் வெள்ளம் உடைப்பெடுத்து விட்டது அவள் அணைகட்ட முயலவில்லை . 

அவள் வலியும் வேதனையும் கண்ணீரோடு கரைந்து காணாமல் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும் கண்ணீருடன்  பார்த்திருந்தான் அஸ்வின் .

என்ன பேசி அவளுக்கு ஆறுதல் கூறிவிட முடியும் ? அவள் இழப்பு எத்தனை பெரியது !  அவளின் கண்ணீர் அவன் இதயத்தில் குருதியை கசிய வைத்தது .

இதுவரை சொல்லி அழ கூட அவளுக்கு யாரும் இல்லையே …

தன்னிடம் அடைக்கலமாகி விட்டவளை லேசாய் தோளணைத்து ஒற்றைகரத்தால் அவள் தலை கோதினான் .

 

  

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!