Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உனக்கென இருப்பேன்-14

உனக்கென இருப்பேன்-14

 

பொக்கிஷமாய் எண்ணி எண்ணி நான்காண்டுகளாய் அவன் ரசித்த காதல் இப்போது பாறாங்கல்லாய் கணத்தது? 

 



Advertisement

என் காதல் இவளுக்கு எப்படி தெரிந்தது?

 

எங்கே என்னிடம் தவறு ? எதை வைத்து என்னை காமுகன் லிஸ்டில் சேர்த்தாள் ? மனம் ஆறவில்லை அவனுக்கு.

Advertisement

 

Advertisement

சுழலும் மின்விசிறியை வெறித்துக் கொண்டு படுத்திருந்தவனை  அலைபேசி அழைப்பு உலுக்கியது .

 

அக்ஷயா  தான் அழைப்பில் வந்தாள்.

Advertisement

 

நலம் விசாரிப்புகள் முடிந்த பின்னே “அண்ணா சரோ உன்னை ரொம்ப மிஸ் பண்ணுது போல “ கிண்டலாய் சிரித்தாள் .

 

நோ …அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று பெருமூச்சு விட்டவனுக்கு இப்போது தாய் மடியில் தலை  சாய்க்க வேண்டும் போல் இருந்தது .

 

நிஜமா தான் சொல்றேன் ஒரே புலம்பல் தான் . என்ன இருந்தாலும் நீ ஆண் வாரிசு இல்லையா ?  வெறுப்பேற்றி சிரித்தாள் .

 

ஆமாம் …நான்  அம்மாக்கு ஸ்பெஷல் தான் !அவங்க உயிரான செல்ல மகன் போதுமா ? சொல்லும் போதே கண்கள் கலங்கியது அவனுக்கு. 

 

ரொம்ப பெருமை பீத்திக்கிற ….இருக்கட்டும் எனக்கும் ஒரு காலம் வரும் என்றாள் .

 

அண்ணி என்ன பண்றாங்க ? தியானு தூங்கிட்டானா ?

 

ம்ம்ம்ம் ரெண்டு பேரும் தூங்குறாங்க என்றான் .

 

அண்ணா எனக்கு செமஸ்டர் ஹாலிடே வரப்  போகுது சந்தோஷமாய் கூறினாள் .

 

என்ஜாய் …. நல்லா தின்னுட்டு தூங்கு ! என்றான் .

 

அண்ணா நான் அங்கே  வரவா ? ஆசையாய் கேட்டாள்.

 

அம்மா நீ என்னை பார்க்க வரதை விரும்ப மாட்டாங்க அச்சு என்றான் . வருத்தம் அப்பட்டமாய் அவன் குரலில்.

 

நான் அப்பாட்ட பர்மிஷன் வாங்கியாச்சு ! துள்ளலாய்  சொன்னாள்.

 

அப்போ சரி  என்றவன் குரலில் உயிர்ப்பு இல்லை .

 

அண்ணா அண்ணி கூட எதாவது வாய்க்கா தகராறா ?

 

ச்ச….ச அதெல்லாம் இல்லை அச்சு…உடனடியாய் மறுத்தான் .

 

உன் குரலே சரியில்லை …அது தான் கேட்டேன் .

 

எப்படி இது சாத்தியம் ? முகபாவம் பாராது குரலை வைத்தே கண்டு கொண்டாளே !

 

தங்கையை எண்ணி அவன் உள்ளம் உவகை கொண்டது . அக்கா தங்கையோடு பிறப்பது வரம் . இவள் தங்கை ஆனாலும் தாய் போன்றவள் …சிலிர்த்து போனான் .

 

என்னைக்கு அச்சு  வர ?

 

புதன் கிழமை வரேன் என்றாள்.

 

சரி அச்சு நேரில் பார்ப்போம் என்றான் .

 

சாப்பிடாமல் படுத்து விட்டானே ….மனம் கேட்காமல் பால் கொண்டு வந்து டீப்பா மீது வைத்து விட்டு போனாள் .

 

திரும்பி பார்த்தவன் புரண்டு படுத்து கொண்டான் .

 

ஒரு டம்ளர் பால்  குடித்து விட்டு மாத்திரை போட்டுக் கொண்டு கீர்த்தியும் படுத்து விட்டாள் .

 

“……………”

 

காலை எழுந்து வந்து பார்த்தாள் .சோஃபாவில் உடலை குறுக்கிக் கொண்டு படுத்திருந்தான்.

 

தான் எவ்வளவு இளக்கமற்ற வார்த்தைகளை பேசி இருக்கிறோம் என்று புரிந்தவளுக்கு அழுகையாய் வந்தது  . டீப்பா மீது அவள் வைத்த பால்  எறும்பு விழுந்து ஏடு படிந்து கிடந்தது.

 

தன்  விதி அழுது மாய வேண்டும் என்பதாக இருக்கிறதே …கண்ணீரை துடைத்துக் கொண்டு துக்கப்பந்தை தொண்டை குழிக்குள் தள்ளிக் கொண்டு வேலையை தொடர்ந்தாள் .

 

டிபன் செய்ய தொடங்கியவள் அவன் அரவம் கேட்டு காபி கொண்டு போனாள் . அவளை பாராது குழந்தையை அணைத்தபடி காபி கோப்பையை எடுத்துக் கொண்டான்.

 

அவள் கையால் தண்ணீர் குடிக்க கூட அவனுக்கு விருப்பம் இல்லை தான். தான் சாப்பிடாவிட்டால் அவளும் பட்டினி கிடப்பாள் .விரும்ப தகாத நிகழ்வுகள் இன்னும் நடந்தேறுவதை  அவன் விரும்பவில்லை.

 

வாயால் சிரிக்காமல் கண்களால் சிரிக்கும் வித்தை கற்றவன் அவன் . அவளை கண்டாள் கண்களில் ஒரு LED பல்பு ஒளிரும் . இன்று அதெல்லாம் இல்லை.

 

மேற்கொண்டு அவனை நேர்பட காணும் சக்தி அற்றவளாய்                         கடைகண்ணால் அவனை பார்த்தாள் .

 

அவன் ஓரறிவு ஜீவ ராசியாக கூட அவளை கணக்கில் கொள்ளவில்லை.

 

இட்லி ,பூண்டு சட்னி, எள்ளு பொடி நல்லெண்ணெய் கொண்டு வந்து வைத்தாள் .

 

குழந்தைக்கு சிறு சிறு விள்ளலாய் ஊட்டியபடியே மூன்று இட்லியுடன் முடித்துக் கொண்டான் காலை உணவை .

 

வழமை போல் குழைந்தைக்கு முத்தமிட்டு அலுவலகம் கிளம்பினான். அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

 

அதுவரை தாக்கு பிடித்திருந்தவள் அவன் சென்ற பிறகு கட்டிலில் கவிழ்ந்து படுத்து குலுங்கி குலுக்கி அழுதாள் .

 

அவன் பாதுகாப்பில் இருந்து கொண்டு, அவன் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டு அவனை எவ்வளவு கீழ்தரமாய் பேசியிருக்கிறோம்?

 

நான் ஏன் பெண்ணாய் பிறந்தேன் ? இன்னும் என் வாழ்க்கையில் எவ்வளவு அடி விழும் ? நான் எவ்வளவு தான் தாங்குவேன் ? அம்மா..அம்மா… வாய் விட்டு கதறினாள்.

 

குழ்ந்தை பயத்தில் அழவே…. கண்ணீரை துடைத்துக் கொண்டு குழந்தையை தூக்கிக் கொண்டாள்.

 

“………………….”

 

மதிய உணவிற்கு அவனுக்கு பிடித்த சுண்டை வத்தல் குழம்பு , தக்காளி ரசம் , சுட்ட அப்பளம் .உருளை பொடி கறி எல்லாம் செய்து வைத்தாள்.

 

மணி இரண்டு ஆகியும் அவன் வரவில்லை .

 

அவனுக்கு போன் செய்யவும் அவளுக்கு தைரியம் இல்லை . ஒரு நிமிடம் தயங்கியவள் சரவணனுக்கு அழைத்தாள்.

 

அண்ணா அவங்க பிசியா ? லஞ்சுக்கு வரவேயில்லை.

 

இல்லம்மமா  சார் கேண்டினில் லெமன் ரைஸ் வாங்கி சாப்பிட்டார். நான் தான் வாங்கிட்டு வந்து கொடுத்தேன் என்றான் ,

 

தன்னை இவ்வளவு தவிர்க்கிறானா ? துடித்து போனாள்.

 

தன் தவறு உணராத பிடிவாதக்காரி அல்ல அவள் . தவறு தன்  மீது என்றால் இறங்கி வந்து மன்னிப்பு கேட்க தயங்க மாட்டாள்.

 

சாரி என்று வாட்சப் மெசேஜ் பண்ணினாள் . அவனிடமிருந்து பதில் வராது என்று தெரியும்! இருப்பினும் அவள் மனதிருப்திக்கு அந்த மன்னிப்பு.

 

ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு ஒருமுறை வாட்சப் பார்த்தாள். ஒரு பதில் அனுப்பிவிட மாட்டானா ? என்ற நப்பாசை .

 

அவன் வந்து சாப்பிடவில்லை என்ற எண்ணமே அவளுக்கு பசியை கொடுக்கவில்லை . மருந்தென எண்ணி நாலு வாய் சாப்பிட்டு படுத்துக் கொண்டாள். 

 

“…………………..” 

மாலை அஸ்வின் வீட்டுக்கு வரும்போது ஒரு டாடா ஏஸ் வண்டி வந்து நின்றது . அதில் இருந்து பெரிய அட்டை பெட்டியை இறக்கி வைத்துவிட்டு போனாரக்ள்.

 

IFB வாஷிங் மெஷின் …. உண்மையில் அவன் வாங்கியது கீர்த்திக்காக தான்.கைபிள்ளைக்காரி கையால் துணி துவைக்க சிரமப்படுகிறாள் என்று எண்ணியவன் ஒரு மாதமாகவே வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான். இன்று வாங்கி வந்து விட்டான்.

 

கீர்த்தனாவோ அவன் துணியை நான் துவைக்க கூடாது என்று தான் இந்த ஏற்ப்பாடு …. என்று அவளாய் ஒரு காரணம் கற்பித்துக்கொண்டு உள்ளுக்குள் உடைந்து அழுதாள் .

 

“………………….”

 

அவளைதான் கண்டு கொள்ளவில்லை ,குழந்தையோடு அவ்வளவு கொஞ்சல் குலாவல் .

 

இப்போதெல்லாம் அவன் மார்பில் குழந்தையை போட்டுக் கொண்டு படுத்துக் கொள்கிறான் ,  அவன் மார்பு சூட்டுக்கு குழந்தையும் பழகி விட்டிருந்தான் .

 

குழந்தைக்கு நிகராக மழலை மொழி பேச …அது கிளுக்கி சிரிக்கிறது .

 

அவன் மொழிக்கு மறு மொழி பேச முயற்சிக்கிறது குழந்தை.

 

ப்பா…பா…குழந்தை பொக்(கே)கை வாய் திறந்து எச்சில் ஒழுக மிழற்ற ….. அப்பாவா சொன்னீங்க செல்லம் ! பட்டுக்குட்டி அப்பா சொல்லிட்டிங்களா? ஹே சூப்பர் செல்லம் இன்னும் ஒரு முறை அப்பா சொல்லுங்க !  அவன் அழுத்தமாய் சொல்லிக் கொடுக்க கிளி பிள்ளையாய் குழந்தை ப்பா…பா என்று மீண்டும் துள்ளி சிரித்தது. வாரி அணைத்து முத்த மழை பொழிந்து விட்டான். 

 

“…………………..”

 

இரவு படுக்கையில் புரண்டவளுக்கு அவன் கூற்று நினைவிற்கு வந்தது.

 

//உன்னை நினைத்த மனதில் இன்னொருத்தியை நினைக்க கூடாதுன்னு கல்யாணமே வேண்டாம்னு இருந்தவன்டி நான் //

 

நேற்று இருந்த மன நிலையில் அவள் ஆதி அந்தம் பார்க்கும் நிலையில் இல்லை.

 

இப்போது அவன் பேச்சு நினைவில் அலை அலையாய் வந்து மோதியது . 

 

அஸ்வின் என்னை உயிராய் விரும்பி இருக்கிறான் . தம்பிக்காக தன்  காதலை விட்டுக் கொடுத்திருக்கிறான்.

 

என்னை விரும்பியதினால் தான் நான் கைகுழந்தையோடு நிராதரவாக நின்று விடக்கூடாது என்று எனக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறான் …..நிதானமாக யோசிக்க அவளுக்கு எளிதாய் புரிபடத் தொடங்கியது .

 

அஸ்வின் பற்றி  கேள்வி பட்டிருந்தாளே தவிர அவன் முகம் பார்த்ததில்லை.

 

முதன் முதலில் அஸ்வினை பார்த்ததே அவள் வீட்டில் வந்து வினோத்திற்காக பெண் கேட்கும் போது தான்.

 

அவன் காதலுக்கு தான் தகுதியானவளா?என்ற கேள்வி அவளை உழப்பியது . 

 

தன் இடத்தில அஸ்வின் இருந்து அவனுக்கு திருமணமாகி அவன் மனைவி இறந்து கையில் குழந்தையோடு அவன் நின்றிருந்தால் நான் அவனுக்கு  வாழ்க்கை கொடுத்திருப்பேனா ? 

 

நிச்சயம் மாட்டேன் ….அவ்வளவு பரந்த மனது எனக்கிருக்காது .

 

வேறொருத்தியோடு வாழ்ந்தவனை ஏற்க என் மனம் ஒப்பி இருக்காது .

 

அவன் எவ்வளவு பெரிய செயலி செய்திருக்கிறான் ! எண்ணி எண்ணி பிரம்மித்து போனாள் .

 

ஹாலில் படுத்திருக்கும் அஸ்வினை நோக்கி ஓடினாள் . ஏதோ ஒன்று அவளை ஓட வைத்தது , ஆயினும் ஏதோ ஒன்று அவளை தடுத்தது .

 

அவன் முகத்தை புதியதாய் பார்ப்பது போல் பார்த்தாள். கள்ளம் கபடமின்றி நிர்மலமாய் உறங்கிக் கொண்டிருந்தான் .குழந்தை முகமா ? கடவுளின் முகமா ?  பிரம்மையில் நின்றாள்.

 

இனி என்னோடு கடமைக்கு தான் வாழ்வதாக சொன்னாயே….அதுவே எனக்கு அதிகம் ! உன் நிழல் போதும் எனக்கு . உன் தகுதி தராதரம் என்ன ! உன் உயர்ந்த குணம் என்ன? நீ கோபுர கலசம் . நான் தூரத்தில் இருந்து தொழுது கொள்கிறேன். மௌனமாய் அவன் முகம் பார்த்திருந்தவளுக்கு விழி வெள்ளம் பெருக்கெடுத்தது.

 

அழுகை கட்டுக்கடங்காமல் கேவல் வரவே …. அவன் எழுந்துவிடப் போகிறான் என்று வேகமாய் உள்ளே ஓடிப்போனாள் .

 

கண்ணீர் விட்டு கதறியபடி ஓடும் தன் காதல் மனையாளை எண்ணி அவன் மனம் மௌனமாய் விம்மியது .

 

ஆரத்தழுவி அவள் கண்ணீரை துடைத்து நான் இருக்கிறேன் உனக்கு என்று சொல்ல மனம் தவியாய் தவித்தது .

 

“…………………….”

காலை உணவை உண்ணும் போதே …லன்ச் பேக்கை பக்கத்தில் கொண்டு வந்து வைத்தாள்.

 

அஸ்வினுக்கு புரிந்தது . நான்கு நாளாய்  லன்சுக்கு வரவில்லை என்று கையோடு கொடுத்து அனுப்புகிறாள்.

 

நெடுமூச்சுடன் அலுவலகம் கிளம்பினான் . அவனுக்கு ஏன் சங்கடம் என்று அவன் கண்ணில் படாமல் அறைக்குள் இருந்து கொண்டாள்.

 

பேசவில்லை எனினும் அவள் முகத்தை ஜாடை மாடையாக பார்த்துவிட்டு தான் அலுவலகம் சென்றான் இன்று அந்த வாய்ப்பு கிட்டவில்லை .

 

குழந்தைக்கு பை சொல்லி விடை பெற்றவனை கதவிடுக்கின் வழியாக கண்களில் நிரப்பிக் கொண்டாள்.

 

“…………………….”

 

மாலை மூன்று மணி அளவில் கதவு தட்டும் ஓசை கேட்டு கதவை திறந்தவள் விழி விரித்தாள்.

 

அஸ்வின் கரம் கோர்த்துக் கொண்டு புன்னகையோடு  அக்ஷயா  நின்றாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!