Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kaathal Theeyum Kaanal Neerum

அத்தியாயம் 13.1 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அத்தியாயம்  13

புயல் காற்றோ சூறாவளியோ

தென்றலோ சாமரமோ

அனைத்துமே உன் நினைவை



Advertisement

எழுப்பிச் செல்கிறது!!!

 

மொட்டை மாடியில் காய போட்டிருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி. அப்போது அங்கே அவள் கண்ணில் பட்டான் தினேஷ்.

Advertisement

 

Advertisement

“ஏய் நீ இங்க என்ன டா பண்ணுற?”

 

தேன்மொழி குரலை கேட்டு திரும்பி பார்த்தவன் “சும்மா தான், காத்து வாங்குறேன்”, என்றான்.

Advertisement

 

“எல்லாரும் கீழ இருக்காங்க. நீ என்ன தனியா காத்து வாங்கிட்டு இருக்க? ஆமா நீ என்ன இன்னைக்கு ஒரு மாதிரியா இருக்க?”

 

“அதெல்லாம் ஒண்ணும் இல்லையே”

 

“நம்பிட்டேன், ஒழுங்கா சொல்லி தொலை. நீ இப்படி இருந்தா இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் கண்டு பிடிச்சிருவாங்க. உன் முகமே காட்டி கொடுக்குது”

 

“தேனு…”

 

“என்ன?”

 

“சொன்னா, நீ தப்பா நினைப்பியா?”

 

“ஊமை கொட்டான், என்னன்னு சொல்லி தொலை”

 

“எனக்கு உன் தங்கச்சியை ரொம்ப பிடிச்சிருக்கு. நீ தான் எங்களை சேத்து வைக்கணும்”,என்று அதிரடியாக சொல்லியே விட்டான்.

 

“என்னது???”, என்று அதிர்ந்து போனாள் தேன்மொழி.

 

“நேத்து அவளை பாத்ததுல இருந்தே அவ நினைவாவே இருக்கு. அப்ப இது லவ் தானே?”

 

“அட பாவி என்கிட்ட கேக்குற லவ்வான்னு? லவ்வை பத்தி எனக்கு என்ன டா தெரியும்?”

 

“உனக்கு தான் கல்யாணம் ஆகிருச்சே? அப்ப உனக்கு தெரிஞ்சிருக்கும்ல?”

 

“நல்லா கேட்ட போ? உன் அண்ணன் என்னை அப்படியே காதல்ல குளிக்க வச்சிட்டான் நான் தெறிஞ்சிக்கிறதுக்கு. போடா எனக்கே தெரியாது. சரி நீ எதை வச்சு காதல் னு சொல்ற?”

 

“என் அண்ணன் உன்னை காதலிச்சு தான் கட்டிக்கிட்டான். சும்மா கதை விடாத. உன் விஷயத்தை விடு. என் கதைக்கு வா. எனக்கு தூக்கமே வரலை, அப்ப அது காதல் தானே??”

 

“அவன் என்னை காதலிச்சானா? கண்டிப்பா இருக்காது. இவன் கதை விடுறான்”, என்று எண்ணிக் கொண்டு “அடேய், கண்டது கழுதையை தின்னுட்டு செமிக்காம இருந்துருக்கும் தினேஷ். அதான் அப்படி இருக்கு”, என்றாள்.

 

அவள் பதிலில் முறைத்தவன் “உன்கிட்ட போய் சொன்னேன் பாரு, என்னை சொல்லணும்”, என்றான்.

 

“சரி சரி கோப படாதே, நீ மேல சொல்லு”

 

“பசிக்க மாட்டிக்குது”

 

“அட பாவி, நான் தானே டா உனக்கு மதியம் சாப்பாடு வச்சேன். கொஞ்சமா நான் வைக்கலையே”

 

இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அவளைப் பரிதாபமாக பார்த்தான்.

 

“சரி சரி அப்பிராணி மாதிரி எல்லாம் பாக்காத. இது காதல்னு ஒத்துக்குறேன். இப்ப என்ன டா செய்யுறது?”

 

“எனக்கு அவ வேணும் தேனு”

 

“அது எப்படி டா நடக்கும்? மாமாக்கு எங்க சித்தப்பாவை பிடிக்கவே செய்யாது. அது மட்டுமில்லாம நீ இப்ப தான் இன்ஜினியரிங் முடிச்சிருக்க. அவளும் இப்ப தான் காலேஜ் கடைசி வருஷம் படிக்கிறா. நீயும் இன்னும் பெரிய பையன் ஆகலை”

 

“லூசு தேனு, நான் என்ன நாளைக்கேவா கல்யாணம் பண்ண போறேன்னு சொல்றேன்”

 

“லூசா? ஏன் சொல்ல மாட்ட. சரி இப்ப நான் என்ன தான் செய்யணும் சொல்லு”

 

“என்னை அவளை லவ் பண்ண வைக்கணும்”

 

“ஆத்தாடி, இந்த தூது போற வேலைக்கு நான் வரலைப்பா”

 

“நீ ஒண்ணும் பண்ண வேண்டாம்”

 

“எருமை எருமை, அப்ப எதுக்கு டா என்கிட்ட கேட்டுட்டு இருக்க?”

 

 

[the_ad id=”6605″]

 

“நீ ஒண்ணுமே செய்ய வேண்டாம் தேனு. ஒரே ஒரு விஷயம் செஞ்சா போதும்”

 

“என்னன்னு சொல்லி தொலை”

 

“அவ போன் நம்பரை மட்டும் கொடு போதும். மத்தது எல்லாம் நான் பாத்துக்குறேன்”

 

“அதானே பாத்தேன், என்னை பெரிய சிக்கல்ல சிக்க வைக்கலாம்னு முடிவு பண்ணிட்ட”

 

“அப்படி எல்லாம் செய்வனா தேனு? நீ என் அண்ணி”

 

“போடா பண்ணி, நான் நம்பர் தரேன். ஆனா இப்ப கிடையாது. நீ உன் வாழ்க்கைல என்ன பண்ண போறன்னு முடிவு செஞ்ச பிறகு. உன்னை உடனே வேலைக்கு போ ன்னு நான் சொல்லலை. ஆனா ஏதாவது செய்யனும்ல? நீ காலேஜ் முடிச்சு ஆறு மாசம் ஆகுது. அதான் சொல்றேன்”

 

“என் அண்ணனுக்கு ஏத்த பொண்டாட்டி தான். அவனும் என்ன பண்ண போற ன்னு கேட்டுட்டே இருக்கான். சரி நான் கொடுத்து வச்சது அவ்வளவு தான். கூடிய சீக்கிரம் நீ சொன்னதை செஞ்சு அவ நம்பரை வாங்குறேன்”

 

“அது வரைக்கும் அவளை வேற எப்படியாவது சந்திச்சு காதல் பயிரை வளத்துராத டா. நான் தான் மேல படிக்கலை. அவளையாவது சித்தப்பா படிக்க வச்சிருக்காரு. அதோட அருமை எனக்கு தான் தெரியும். அவ படிப்பு முக்கியம்”

 

“சே சே நான் அவளை பாக்க கூட போக மாட்டேன் தெரியுமா?”

 

“சரி சரி, கீழ வா, தனியா காத்து எல்லாம் வாங்க வேண்டாம். அவ கண்டிப்பா உனக்கு கிடைப்பா. எதையும் நினைச்சு கலங்காத”

 

“சரி”, என்று சொல்லி அவளுடன் கீழே சென்றான். அதே நேரம் தேன்மொழி மற்றும் கதிர் குடும்பத்தை என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தான் ராஜேந்திரன்.

 

எப்படி யோசித்தும் அவனுக்கு என்ன செய்ய என்று மட்டும் தெரிய வில்லை. அறைக்குள் படுத்திருந்த அவனைக் காண வந்தார் அவனுடைய அப்பா சோலையப்பன்.

 

“நீ எடுக்கும் லாய்க்கு இல்லைக்கு தெரிஞ்சு போச்சு. திங்குறதுக்காகவாது வா”, என்றார் சோலையப்பன்.

 

“அப்பா”

 

[the_ad id=”6605″]

 

 

“என்ன டா நொப்பா. அந்த தர்மதுரை குடும்பத்தையே பழி வாங்க நான் தேன்மொழியை உனக்கு பேசி முடிச்சா நீ அந்த கதையவே மாத்திட்ட”

 

“அவ பேரை கெடுக்கலாம்னு பாத்தேன் பா”

 

“உன்னால முடிஞ்சதா? என் பேச்சை கேட்டுருந்தா இந்நேரம் அந்த தேன்மொழி இங்க இருந்திருப்பா. அவளை வச்சு அவ மொத்த குடும்பத்தையும் நம்ம காலுல விழ வச்சிருக்கலாம்”

 

“அப்பா”

 

“பேசாதே, நீயெல்லாம் நல்ல கொட்டிக்கிறதுக்கு தான் லாய்க்கு. ஊருல இருக்குற எல்லாவனும் அந்த மதியையும் தர்மதுரை குடும்பத்தையும் தான் மதிக்கிறாங்க. என்னை ஒரு பொருட்டாவே மதிக்க மாட்டிக்கிறாங்க. அதை சரி செய்ய தான் என் தங்கச்சியை அந்த வீட்ல கட்டிக் கொடுத்தேன். அவளை அங்கயே இருந்து எல்லோரா நிம்மதியை கெடுக்க சொன்னா அவ அவளோட புருஷனை அந்த குடும்பத்துல இருந்து நான் பிரிக்க மட்டும் தான் சொன்னேன்னு நினைச்சு தனியா வந்துட்டா. இப்ப பாத்தியா அவ தான் தனியா இருக்கா. அவ புருஷன் கூட அவங்க கூட சேந்துட்டான். எனக்குனு வந்து சேந்துருக்கீங்க பாரு. வா வந்து கொட்டிக்கோ”, என்று அவர் சொல்லி விட்டு சென்றதும் கொலை வெறியில் அமர்ந்திருந்தான் ராஜேந்திரன்.

 

அப்போது “அத்தான், அம்மா எங்க? ஆச்சியை கூட காணும்”, என்று வாசலில் இருந்தே கேட்டாள் அங்கு வந்த கீதா.

 

“அம்மாவும் அத்தையும் டவுன் வரைக்கும் போயிருக்காங்க கீதா”,என்று சொன்னதும் அவளும் அவளுடைய தாத்தாவை பார்க்க சென்று விட்டாள்.

 

ஆனால் கீதாவை கண்ட ராஜேந்திரன் கண்களில் மின்னல் வந்தது. தேன்மொழியை வச்சு செஞ்ச என்னோட திட்டத்தை எதுக்கு கீதாவை வைத்து செய்ய கூடாது? கொஞ்சம் வயசு குறைவுனாலும் இவளும் என் அத்தை மக தானே? இவளை விட்டா இந்த ஊர்ல வேற நல்ல பொண்ணும் இல்லை. இவளை வச்சு துரைராசு மாமாவுக்கு குடைச்சல் கொடுத்தால் அவர் அவரோட அண்ணன்கள் கிட்ட தானே ஓடுவார். அந்த குடும்பத்தையே பொறுத்த வரைக்கும் தேன்மொழி வேற கீதா வேற இல்லையே. இவளை எப்படியாவது கடத்தணும் என்று திட்டம் போட்டான்.

 

தன்னுடைய அப்பாவுக்கு தெரியாமல் அம்மாவை சமாதான படுத்த வந்த கீதா அவன் கண்ணில் பட்டு பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்ள போகிறாள்.

 

துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி. கதிரும் அதே அறையில் அமர்ந்து தான் தன்னுடைய உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

 

இருவரும் மௌனமாகவே இருந்தனர். அப்போது தினேஷ் சொன்ன கதிரின் காதல் பற்றி தேன்மொழிக்கு நினைவு வந்தது. அதை கேக்கலாம் என்று எண்ணி “அத்தான் உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்”, என்றாள்.

 

“என்ன?”, என்று வாயால் கேட்காமல் கண்களால் கேட்டான் கதிர்.

 

“துரை வாயை திறந்து பேச மாட்டாரோ?”, என்று எண்ணிக் கொண்டு உங்களுக்கு “தூக்கம் வராத மாதிரி இருக்கா?”, என்று கேட்டாள்.

 

அவள் கேள்வியில் குழம்பி போனவன் “இப்ப தான் நான் நல்லா தூங்குறேன், ஏன் அதையும் கெடுக்கணும்னு ஏதாவது ஐடியா வச்சிருக்கியா?”, என்றான்.

“இவனை”, என்று பல்லைக் கடித்தவள் “சரி உங்களுக்கு பசிக்காம இருக்கா?”, என்றாள்.

 

“இவளுக்கு லூசு தான் பிடிச்சிருச்சு”, என்று எண்ணிக் கொண்டு “நான் இப்ப தான் சந்தோஷமா ரசிச்சு ருசிச்சு சாப்பிடுறேன் போதுமா? அப்புறம் என்ன புதுசா அத்தான் எல்லாம். வழக்கம் போல நாயே பேயே எடு பட்ட பய, விளங்காதவன்னே சொல்லு. அம்மா அத்தானு சொல்ல சொன்னதுக்காக இந்த ரூம்குள்ள எல்லாம் நடிக்க வேண்டாம்”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

 

“இவனுக்கு காதல்க்கான அறிகுறியே இல்லை. இதுல இவன் என்னை லவ் பண்ணுறானாம். எனக்கும் இந்த அறிகுறி எல்லாம் இல்லையே. அப்ப நானும் தானே இவனை லவ் பண்ணலை. ஆமா இவன் மேல லவ் வந்துட்டாலும். இந்த பாட்டி சொன்னாங்கன்னு கொஞ்சம் நல்லவன்னு நினைச்சு மரியாதை கொடுத்தா ரொம்ப தான்”, என்று எண்ணிக் கொண்டு தன் வேலையை தொடர்ந்தாள்.

 

அவள் கேட்ட கேள்விக்கு “என் மனசுக்கு புடிச்ச பொண்டாட்டி என் பக்கத்துல இருக்கும் போது நான் நல்லா தூங்காம இருப்பேனா, நல்லா சாப்பிடாம இருப்பேனா?”, என்று அவன் பதில் சொல்லி இருந்தால் அனைத்தும் முடிந்திருக்கும். அவள் கேள்வியின் அர்த்தம் புரியாமல் அவனும் பதில் சொல்லி விட்டான்.

 

அடுத்த நாள் இருவரும் ஊட்டிக்கு செல்ல கிளம்பி கீழே வந்தார்கள்.

 

[the_ad id=”6605″]

 

அங்கே மதியும் தினேஷும் தீவிரமாக எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். செல்வாவும் அன்னமும் டி‌வி பார்த்துக் கொண்டிருந்தார்கள். வேணி கதிர் தேன்மொழிக்கு இரவுக்கான உணவை செய்து அடைத்துக் கொண்டிருந்தாள்.

 

“என்ன ஆச்சுப்பா? ஏதோ தீவிரமா ரெண்டு பேரும் பேசிட்டு இருக்க மாதிரி இருக்கு”, என்று கேட்டான் கதிர்.

 

அவன் குரலில் அனைவரின் கவனமும் அவர்கள் பக்கம் சென்றது. “இல்லை கதிர், தினேஷ் படிச்சு முடிச்சு நாள் ஆச்சு, எவ்வளவு நாள் வீட்லே இருக்கப்பான்னு கேக்குறான். அதான் பேசிட்டு இருக்கோம்”, என்றார் மதியழகன்.

 

“இதை தான் நானும் அவன் கிட்ட கேட்டுட்டு இருக்கேன். என்ன செய்ய போற டா. பேசாம சென்னை பேங்க்ளூர் போய் உன் படிப்புக்கு ஏத்த வேலை தேடுறியா? நான் ஏற்பாடு பண்ணவா?”, என்று கேட்டான் கதிர்.

 

“அட பாவி, கீதா நம்பர் வாங்குறதுக்கு அதுக்குள்ள களத்துல இறங்கிட்டியா?”, என்று எண்ணிக் கொண்டு தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள் தேன்மொழி.

 

“இல்லண்ணா, நான் இங்க இருந்து வெளியூர் எல்லாம் போகல. உங்களை எல்லாம் பிரிஞ்சு இருக்க முடியாது”, என்று தினேஷ் சொன்னதும் “அது எப்படி இருக்க முடியும்? அவன் ஆளு இங்க இருக்காளே. ஆனா பொய்யை பாரு எல்லாரையும் பிரிஞ்சு இருக்க முடியலையாம்”, என்று மனதுக்குள் பேசிக் கொண்டாள் தேன்மொழி.

 

“ஆனா உனக்கு இங்க என்ன வேலை டா செய்ய முடியும்? உன் படிப்புக்கு ஏத்த வேலை கண்டிப்பா இருக்காது., இங்க எல்லாமே விவசாயம் தான்”, என்றான் கதிர்.

 

“படிப்புக்கு ஏத்த வேலை எல்லாம் வேண்டாம்ணா. மனசுக்கு ஏத்த வேலை போதும். இங்கயே ஏதாவது செய்றேன்”

 

“அப்பா, இவனுக்கு விவசாயம் எல்லாம் சரி பட்டு வராது. ஆனா இங்கயே இருக்கணும்னா, ஒண்ணு செய்யலாம். நம்ம மருது அண்ணன் ரைஸ் மில்லை விக்குற மாதிரி பேசிக் கிட்டார். பேசாம அதை இவனுக்கு வாங்கி கொடுத்தா அதை இவன் பாத்துக்கட்டும்”, என்று கதிர் சொன்னதைக் கேட்டு அனைவர் முகமும் மலர்ந்தது.

 

“நல்ல யோசனை கதிர். உனக்கு சரி தானா டா?”, என்று கேட்டார் மதியழகன். “அண்ணா கொஞ்ச நாள் கூட இருந்து சொல்லிக் கொடுத்தா நான் கத்துகிட்டு செய்வேன் பா”, என்று சொன்னான் தினேஷ்.

“சரி எதையும் இப்ப பேச வேண்டாம். கதிர் நீ ஊருக்கு போயிட்டு வந்த அப்புறம் பேசிக்கலாம். இப்ப ரெண்டு பேரும் கிளம்புங்க”, என்றாள் அன்னம்.

 

“சரியா சொன்னீங்க அத்தை. அப்புறம் தேனு, நைட்டுக்கு மட்டும் சாப்பாடு வச்சிருக்கேன். எப்படியும் அங்க நைட் போய்றுவீங்க. அப்ப போல ஹோட்டலை தேடி அலைஞ்சிட்டு இருக்க வேண்டாம். சப்பாத்தியும் குருமாவும் வச்சிருக்கேன்”, என்று சொல்லி ஒரு பையை அவளிடம் கொடுத்தாள் வேணி.

 

“சரிங்க அத்தை, அப்புறம் செல்வா அங்க உள்ள டிக்கட் எல்லாம் உன்கிட்ட தந்தேனே? அதை எங்க வச்ச?”, என்று தேன்மொழி கேட்டதும் “ஐயையோ, அதை கதிர் அண்ணன் கிட்ட கொடுக்கணும்னு நினைச்சு எங்கயோ வச்சிட்டேனே. இப்ப பாக்குறேன்”, என்றான் செல்வா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!