மீண்டும் ஒருமுறை -8
இவளை புன்னகையுடன் பார்த்து கையை அசைத்து, “ஹாய்” என்று சின்னதான குரலில் கிசுகிசுப்பை ஏற்றி கூறியவன், ஜானவியிடம் ஹாய் என்று சாதாரணமாக கூறினான். அவளும், “ஹாய் ணா. என்ன இங்கே? என்று வேலினி கேட்காத அந்த கேள்வியை கேட்டு வைத்தாள்.
அவன் பதில் எதுவும் கூறாமல் புன்னகை முகத்துடனே பொறுப்பாளரின் அருகே வந்து நிற்க, அவர்கள் இருவரின் புன்னகையை பார்த்து குழப்பமாக நின்றனர். அப்போது பொறுப்பாளர் வேலினியிடம், “என்ன கடவுள் கண்ணுக்கு தெரிறாரா? இல்லையா? என்று கேட்டார். இவர் எதற்காக இப்படி கூறுகிறார் என்று புரியாமல் வேலினி இன்னும் குழம்பிப் போனாள்.
ஜானவிக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. “எனக்கு எதுவுமே புரியல. நீங்க என்னதான் சொல்றீங்க?”, என்று குழப்பமாக இருந்தவள்,
சட்டென்று, “குரு இவர் உங்களுக்கு தெரிஞ்சவரா? இவர் மூலமா தான் நான் சொன்ன விஷயத்தை ஏற்பாடு பண்ணீங்களா?” என்று ஓரளவுக்கு சரியாக கேட்டிட,
Advertisement
உடனே குரு, “சூப்பர்.. பயங்கர ஷார்ப் தான் நீ. ஆனால் இவர் வெறும் தெரிஞ்சவர்னு சொல்ல முடியாது வேலினி. எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து எனக்கு இவரை தெரியும்”,
இப்போது பொறுப்பாளரும், “ஆனா எனக்கு இவனை பிறந்ததிலிருந்து தெரியுமா”, என்று கூறவும் வேலினிக்கு சட்டென்று புரிந்து விட்டது. இருவரும் அண்ணன் தம்பிகள் என்று.
“நீங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பியா? இதை சொல்றதுக்கு என்ன? இப்படி சுத்தி வளச்சு பேசுறீங்க ரெண்டு பேரும்”, என்று சிரிப்போடு கூறினாள். “ஆனால் சார், நீங்க நிஜமாவே கிரேட் தான். உங்க தம்பி கேட்டதும், உடனே ஒத்துக்கிட்டீங்களே? அவ்ளோ பாசமா?”
Advertisement
“பாசம் தான் மா. ஆனா என் தம்பி முதல் முதலாக என்கிட்ட ஒரு விஷயம் கேட்டிருக்கான். இதுவரைக்கும் என்கிட்ட ஒரு சின்ன விஷயம் கூட கேட்க மாட்டான். நானா செஞ்சா கூட, நானே எனக்கு செஞ்சுக்குவேன்னு சொல்றவன் முதல் முறை ஒன்னு கேட்கும் போது அதை செய்யாமல் விட்டுற முடியுமா?” என்றார்.
Advertisement
இப்போது ஜானவி, “எனக்கு மட்டும் இப்படி ஒரு அண்ணன் கிடைச்சா. இஷ்டத்துக்கு எல்லாத்தையும் வாங்கி குவிச்சிடுவேன்”,என்று சொல்ல நால்வருக்கும் அப்படி ஒரு சிரிப்பு.
சிரித்து முடித்ததும் ஜானவி தான் ஏதோ யோசனை வந்தவளாக, அந்த பொறுப்பாளரிடம், “ஆமா உங்க பேர் என்ன? அதை கேட்கவே இல்லையே சார்” என்று கூறவும, அதற்கு வேலினி, “அத்தனை தடவை ஸ்டேஜ்ல சொன்னாங்களே. நீ கேட்கவே இல்லையா?”
“அப்ப நான் அங்க இல்லடி. பேரன்ஸ வரவேற்க முன்னாடி நின்றிருந்தேன். அதனால இங்க ப்ரோக்ராம் நடந்தப்ப நான் இங்க இல்ல”, என்று கூறவும், “சரி டி சார் சிவனேசன்”, என்று சொல்ல,
Advertisement
“ஓ ஓகே… சூப்பர் சார். உங்களுக்கு நானும் தேங்க்ஸ் சொல்லணும்னு நினைச்சேன். ஏன்னா இந்த வேலினி இருக்காலே பயங்கரமா புலம்பி தள்ளிட்டா. அன்னிக்கு பஸ்ல பொலம்பும்போது தான் குரு அண்ணா கூட கேட்டாங்க. அதை வச்சு தான் இன்னைக்கு உங்க ஹெல்ப் எங்களுக்கு கிடைச்சிருக்கு. ரொம்ப பெரிய தேங்க்ஸ் சார்”, என்று ஜானவியும் அவரிடம் பெரிய நன்றி கூறினாள்.
உங்க நன்றி எல்லாம் எதுவுமே எனக்கு வேண்டா ம்மா? நீங்களும் உங்க வீட்ல இருக்க மத்தவங்களையும் கூப்பிட்டு வந்து செக் அப் பண்ணிடுங்க. அது தான் எங்க கேம்ப்க்கு கிடைச்ச பெரிய வெற்றி. அதுவே போதும்”, என்று கூறிவிட்டு,
“சரி, இருட்டற மாதிரி இருக்கு சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பலாம். வாங்க நானே உங்கள டிராப் பண்றேன்” “என்ன நீ ட்ராப் பண்ண போறியா? உன் வீடு மேற்கன எங்க வீடு கிழக்க இருக்கு. நாங்க பஸ்ல போறோம் நீ கிளம்பு” என்று குரு தன் அண்ணனை வழியனுப்ப பார்க்க,
“டேய்” என்று ஏதோ கூற வந்தவரை தடுத்து, “நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு. நான் இன்னைக்கு இருந்துட்டு, நாளைக்கு லீவு தானே, நாளைக்கு வரேன்”, என்று அனுப்பி வைத்துவிட்டான். வேலினியும் ஜானவியும் பைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு தோழிகளிடமும் சொல்லிவிட்டு, அவர்களுடன் வரும் தோழிகளை அழைத்துக் கொண்டு பேருந்து நிலையம் வந்து நின்றனர்.
அனைவரும் அவர்கள் செல்ல வேண்டிய பேருந்தில் ஏறிக்கொள்ள, பேருந்து மெல்லமாக அதன் பயணத்தை தொடங்கியது. குரு எப்போதும் போல் வேலினி இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்தான். வேலினியிடம், “இப்போ உனக்கு சந்தோஷமா?” என்று கேட்க, “ரொம்ப சந்தோம்” என்றவள் மகழ்ச்சியை முகத்தில் பிரதிபலித்தாள். ஜானவிக்கு எப்போதும் போல் இவர்களின் இந்த நடவடிக்கைகள் எல்லாம் வேடிக்கைகளாக இருக்க அதனை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.
“வீட்ல வேற யாருக்கு செக் பண்ண போற நீ” என்று கேட்க “இப்போதைக்கு…” என்றவள், அவன் வீடு என்றதும் தாய் தந்தைக்காக தான் செய்ய நினைத்த விசயங்கள் மனதில் ஓடியது.
ஏன் தனக்கு இருக்கும் சந்தேகங்களையும் இவரிடம் தீர்த்துக் கொள்ளக்கூடாது என்ற எண்ணம் தோன்ற, குருவை திரும்பி தயக்கமான ஒரு பார்வை பார்த்தாள். “என்கிட்ட தயக்கம் பட, எதுவுமே இல்லை. என்கிட்ட நீ தயங்காம தாரளமா பேசலாம்”, என்று உடனே முகம் தைரியத்தையும் நம்பிக்கையும் பிரதிபலித்தது.
அவனிடம், “குரு எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா எனக்கு ஒரு ஐடியா இருக்கு. அதை இம்பிளிமெண்ட் பண்றதுக்கு எப்படி பண்ணனு எனக்கு தெரியல. என் அப்பா அம்மாவோட வாழ்க்கைய எப்பவும் உடல் உழைப்பாளை நலம் குறையாது தவிர, வருமானமோ சேமிப்பு எதுவுமே இருக்க மாட்டேங்குது. அவங்களுக்கு நான் ஏதாவது ஒன்னு பெருசா செய்யணும் நினைக்கிறேன்.
ஆனால் அது எப்படி செய்யறதுன்றது தான் எனக்கு தெரியல. நிறைய சந்தேகம் வருது, அதெல்லாம் நீங்க கொஞ்சம் கிளியர் பண்றீங்களா? நீங்களும் ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ண போறன்னு தானே சொன்னீங்க. அதனால தான் கேட்கிறேன்” என்று சொன்னாள். அவள் கூறியதை கேட்டவன் அவளை ஆச்சரியமாக பார்த்தான்.
சரி நிச்சயமா பண்றேன் என்று ஆச்சரியம் நீங்கி அவன் புன்னகையோடு கூற, “அப்போ நான் சொல்லவா?” என்று அவள் கேட்க, “சொல்லு” என்ற ஒற்றை சொல்லுக்கு வேகமாக அவள் தன் திட்டங்களை அவனிடம் மொழிய ஆரம்பித்தாள்
வருவாள்…..
மகாஆனந்த்……✨
