Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Neeyindri Vaazhveno

Neeyindri Vaazhvzaeno 32 2

மாலை விழா மிகவும் சிறப்பாக நடந்தது. ரிஷி சொன்னது போல் சாதனா விழா துவங்கும் நேரத்திற்குத் தான் வந்தாள். அதுவரை ரிஷியின் செயலாளர் உதய் நின்று தான் வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தான். சாதனா வருவதைப் பார்த்தும் ரிஷியே வாயிலுக்குச் சென்று அவளை வரவேற்றான்.

ராயல் ப்ளூ நிறத்தில் வழவழப்பான புடவை, அவளின் எழிலான மேனியை தழுவியிருக்க…. அதற்குப் பொருத்தமாகக் காதிலும், கழுத்திலும் வைரம் அணிந்து, மிதமான ஒப்பனையில்… அமெரிக்ககையான தோற்றம் அவளிடத்தில்.

ரிஷி அவளிடம் பூங்கொத்தை கொடுத்து வரவேற்க…. அவனைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தவள், எதவிதமான அலட்டலும் இல்லாமல்…. நிமிர்வான நடையுடன் உள்ளே சென்று அவளுக்கான இருக்கையில் அமர்ந்தாள்.

யார் வந்திருக்கிறார்கள்? வரவில்லை என்று அவள் எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை. அவள் பார்வை மேடையை மட்டுமே மையபடுத்தி இருந்தது.



Advertisement

ரிஷி நிறையப் பேரையெல்லாம் அழைக்கவில்லை. திரையுலகில் குறிப்பிட்ட சிலரை மட்டும் தான் அழைத்து இருந்தான். அதோடு சென்னையில் இருக்கும் முக்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள்.

ராஜ்மோகன், சந்தானம் இருவருமே விழாவுக்கு வரவில்லை… அவர்கள் வந்தால்.. கட்சி ஆட்களையெல்லாம் அழைக்க வேண்டும். அதோடு இது ரிஷியின் தனிப்பட்ட முயற்சி… அதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்பது எல்லோரின் விருப்பமும் கூட…

முதலில் மேடையில் இருந்த ஆள் உயர குத்து விளக்கை… ஜோதி ஏற்றினார். அவரோடு ப்ரீதாவும் ஏற்றினாள்.

Advertisement

அதற்கு அடுத்து ஒரு நடன நிகழ்ச்சி. அத்தனையும் பள்ளியில்  படிக்கும் சின்னப் பிள்ளைகள். அவர்கள் ஆடியதை வந்திருந்த அனைவருமே ரசித்துப் பார்த்தனர். படத்தில் ஆடும் நடிகர்கள் கூட அந்த மாதிரி ஆட முடியாது. அதை வந்திருந்த திரை நட்ச்சத்திரங்களே ஒத்துக்கொண்டனர்.

Advertisement

 

 

[the_ad id=”6605″]

Advertisement

 

 

அந்த நிகழ்ச்சி முடிந்ததும் ரிஷி மேடைக்கு வந்தான். ‘வாவ்… என்ன ஒரு ஹன்ட்சம். அப்படி எல்லோரும் சொல்வது போலத்தான் இருந்தான்.

மேடையில் நின்று அவன் ஆங்கிலத்தில் தெளிவாக உச்சரித்துப் பேசியதை கேட்க… அவ்வளவு நன்றாக இருந்தது. வந்திருந்த முக்கிய விருந்தினர்களை வரவேற்று பேசியவன், முதலில் திறப்பு விழாவை தொடக்க… சாதனாவை மேடைக்கு அழைத்தான்.

ரிஷியும் அங்கே இருக்கிறான் என்ற தைரியத்தில் சாதனா நிமிர்வாகவே மேடை ஏறினாள். ரிஷி அவளிடம் ஒரு ரிமோட்டை கொடுக்க…. சாதனா அதைப் புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள்.

விழா ஒருங்கிணைப்பாளர் பத்து, ஒன்பது என்று எண்ண துவங்க….. அவர் ஒன்று என்றதும், சாதனா ரிமோட்டை அழுத்த… திரை விலகி டிஜிட்டல் எழுத்தில் ‘சாதனா கிரியேஷன்ஸ்’ என்ற வார்த்தை திரையில் மின்னியது.

அதேநேரம் மேடையில் மத்தாப்போடு வெடியும் வெடிக்க… ரிஷி சாதனா இருவர் மீதும் வண்ண வண்ண காகிதங்கள் மழையாக கொட்டியது.

திடிரென்று கேட்ட சத்தத்தில் சாதனா பயந்து கண்ணை மூடி இருந்தாள். ரிஷி அவளைத் தோளோடு சேர்த்து அணைத்தவன், மென்மையாக அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் “கண் திறந்து பாரு சாதனா …” என்றான்.

சாதனா மெதுவாகக் கண் திறந்து மீண்டும் ஒருமுறை திரையைப் பார்த்தாள். மனதளவில் ரொம்பவே நெகிழ்ந்து போய் இருந்தாள். அவன் சத்தியமாகத் தன்னுடைய பேரில் கம்பெனி ஆரம்பிப்பான் என்று அவன் நினைக்கவில்லை…. தான் அவனுடைய இத்தனை அன்புக்கு தகுதியானவளா என்ற எண்ணம் தான் அப்போது.

“என்னை அழ வைக்கறீங்க ரிஷி.” என்றவள், அவனிடமிருந்து விலகி நிற்க…

“இப்ப ஹப்பி ஆகிடுவ பாரு…” என்றவன், ஒருங்கிணப்பாளரிடம் கண்ஜாடை காண்பிக்க…. அவர் நடனம் ஆடிய அத்தனை குழந்தைகளையும் மேடைக்கு அழைத்தார்.

ரிஷி அவர்களுக்குப் பரிசை சாதனாவை கொண்டு கொடுக்கச் சொல்ல… அவள் முகம் மேலும் மலர்ந்தது.

ஒவ்வொருவருக்காகப் பரிசு கொடுத்துக்கொண்டே வந்தவள், மிகவும் நன்றாக ஆடிய சிறுவனைப் பார்த்ததும், குனிந்து அவனிடம் “நீ எப்படி டா இப்படி ஆடுற?… உன் உடம்புல எலும்பு இருக்கா இல்லையா…” என அவனைத் தொட்டு பார்க்க….” அந்தச் சிறுவன் வெட்கத்துடன் சிரித்தான்.

“ஆண்டி ஒரு டாக்டர்… எங்க போனாலும் அதை மறக்க மாட்டாங்க.” ரிஷி கேலி செய்ய… சாதனா புன்னகை முகமாகவே மேடையில் இருந்து இறங்கி, மீண்டும் அவள் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

வந்திருந்த திரைத்துறையினரில் முக்கியமான சிலரை மேடைக்கு அழைத்துக் கௌரவித்த ரிஷி, நேகாவிற்கு மேடையில் பேச மட்டும் வாய்ப்பளித்தான். அவளைக் கௌரவிக்க எல்லாம் இல்லை…..

சாதனா அப்போது தான் அவளைப் பார்த்தாள். நேகா மிகவும் அழகாக வந்திருந்தாள். அவளுக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துக்கொள்ள வேண்டும் அல்லவா…. அதனால் அழகாகவும் பேசினாள்.

“தமிழ் படத்தில் நடிப்பதே.. தனக்கு மிகவும் விருப்பம். அதனால் ஹிந்தி படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை விட்டுவிட்டு வந்ததாக… அவள் கதை விட…” மேடையில் உட்கார்ந்து அதைக் கேட்ட ரிஷி நக்கலாகச் சிரித்தான்.

பேசிவிட்டு திரும்பிய நேகாவின் பார்வையில், அவனின் நக்கலான சிரிப்பு பட்டு விட…. அவளுக்குக் கடுப்பாக இருந்தது.

எதோ அவளுக்காகவே ரிஷி படக் கம்பெனி ஆரம்பித்தது போல்… வெளியே படம் காட்டி கொண்டிருந்தவளுக்கு, தன் மனைவி பேரில்… அதுவும், தன் மனைவியை வைத்தே, மிகவும் சிறப்பாக அவன் விழாவை நடத்தியதை பார்க்க பொறுக்கவில்லை… முகத்தில் எதையும் காட்டாமல் இருக்க… பெரும் பாடு பட்டு கொண்டிருந்தாள். இல்லையென்றால் அத்தனையும் வீடியோவில் பதிவு ஆகுமே.

ரிஷி, சாதனாவை பற்றிய வதந்திகளுக்கும் இதன் மூலம் ஒரு முற்றுபுள்ளி வந்தது. அவன் மனைவி மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் என வெளிப்படையாகக் காட்டிவிட்டான். அவன் நேகாவை எந்த இடத்தில் வைத்திருக்கிறான் எனவும் தெளிவாகியது. வந்திருந்த பத்திரிக்கையாளர்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தனர்.

விழா முடிந்து வந்திருந்த விருந்தினர்கள் கிளம்பிய பின்னர்ப் பத்திரிகையாளர்களையும் அனுப்பி விட்டு வந்த ரிஷி வெற்றியின் அருகில் சென்று அமர்ந்தான்.

வந்திருந்த சொந்த பந்தங்களோடு பேசிக்கொண்டிருந்த சாதனா அப்போது தான் அஷோக்கை கவனித்துவிட்டு அவனை வரவேற்க செல்ல…. அவன் குடும்பத்தினருடன் வந்திருக்க… சாதனா அவர்களோடு பேசிக்கொண்டு இருந்தாள்.

ரிஷியும் வெற்றியும் அருகருகே அமர்ந்திருப்பதைப் பார்த்து அங்கே வந்த ப்ரீதா “அண்ணா, அண்ணி போட்டிருக்கிறது வைர செட் தான… அது எப்ப வாங்கினது?” எனக் கேட்க…

அதைக் கேட்ட வெற்றி, போச்சு என்பது போல் தலையில் கைவைக்க…. அவனைப் பார்த்து சிரித்த ரிஷி “வைரம் தான். ரெண்டு நாள் முன்னாடி தான் வாங்கினேன். ஏன் கேட்கிற?” எனச் சுவாரசியமாகக் கேட்க….ப்ரீதா திரும்பி வெற்றியை முறைத்தாள்.

 

 

[the_ad id=”6605″]

 

 

“பாருங்க எங்க அண்ணனை.. பொண்டாடிக்கு வைரம் வாங்கித் தந்திருக்கார். அதோட எங்க அண்ணி பேர்ல கம்பெனி ஆரம்பிச்சு இருக்கார்.” என அவள் பொரிய தொடங்க…

“இனி நான் ஆரம்பிக்கப் போற கம்பெனி எல்லாம் சாதனா பேர்ல தான்.” என ரிஷி மேலும் அதில் எண்ணையை ஊற்ற….

“டேய் ! அடங்க மாட்டியா நீ….” என வெற்றி ரிஷியை பார்க்க… ரிஷிக்குச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை….

“பதிலுக்கு நீங்க ஒரு கம்பெனி என் பேர்ல ஆரம்பிக்கிறேன்னு சொல்றீங்களா…. எங்க அண்ணனை தான திட்றீங்க.” ப்ரீதா சிணுங்க….

“ஏற்கனவே எங்க அப்பா ஆரம்பிச்சதையே எனக்குப் பார்க்க நேரம் இல்லை… நான் இதுல புதுசா என்ன ஆரம்பிப்பேன் ப்ரீதா…” வெற்றிப் பரிதாபமாகக் கேட்க….

“எதாவது ஆரம்பிங்களேன்.” என்றாள் ப்ரீதா.

“சரி மதுரையில ஒரு மால் கட்ட போறேன். அதுக்கு உன்னோட பேர் வைக்கிறேன்.” என்று வெற்றிச் சொன்னதும், ப்ரீதா சமாதானம் ஆகிவிட்டாள். வெற்றியும் ரிஷியும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

“ஜெயிச்சிடீங்க சாதனா…” அஷோக் சொல்ல…எதை என்பது போல் சாதனா பார்க்க…

“ரிஷியோட மனசை சொல்றேன். இன்னைக்கு அவன் உங்களைத் தவிர வேற யாரையும் பார்த்தானான்னு கூட எனக்குத் தெரியலை…” எனச் சொல்லிவிட்டு அஷோக் சிரிக்க….
“எனக்கு இதுல எந்த ஆச்சரியமும் இல்லை… கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தாங்களோ எனக்குத் தெரியாது? கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க என்னோட ரிஷியா மட்டும் தான் இருந்திருக்காங்க.” என்றாள் சாதனா உறுதியாக.

“அதுக்கு நீங்க தான் காரணம்.”

“நான் இல்லை ரிஷி தான்.”

அஷோக் எதோ மறுத்து சொல்ல வர… அவனைத் தடுத்த அவனுடைய மனைவி “நீங்க இன்னைக்கு நைட் முழுக்க நின்னு இதையே சொன்னாலும், சாதனா ஒத்துக்க மாட்டாங்க.” என்றதும், அசோக் வாய் விட்டு சிரிக்க… சாதனா திரும்பி ரிஷியை பார்த்தாள்.

சாதனாவின் பார்வையில் காதல் நிரம்பி வழிய… அதைக் கண்டுகொண்ட ரிஷிக்கு, அதற்கு மேல் அவளைவிட்டு விலகி இருக்க முடியுமா என்ன… அவளருகில் வந்தவன், அவளைத் தள்ளிக்கொண்டு தனிமையான இடத்திற்குச் சென்றான்.

“என்ன டி ஒரு மார்கமா பார்க்கிற? நீச்சல் குளம் நியாபகம் வந்துடுச்சா….” என்று அவன் கண் சிமிட்டி சொல்ல… அவன் தலையைக் கலைத்து விளையாடிய சாதனா “உங்களுக்கு வேற நினைப்பே இல்லையா…” எனக் கேட்க…

“இல்லை…” என்று உடனே ஒத்துக்கொண்டவன் “எப்ப டா வீட்டுக்கு போவோம்னு இருக்கு. இப்பவே எல்லோருக்கும் பாய் சொல்லிட்டு கிளம்பிடலாமா…” என்றான் கிறக்கத்துடன்.

“ஹான்… அப்ப விருந்தாளிகளை யார் கவனிக்கிறது?”

“அதுக்குத்தான் ஒரு நல்லவன் உங்க அண்ணன் இருக்கானே அவன் பார்க்க மாட்டான்.”

“எதோ எங்க அண்ணனை நல்லவர்ன்னு  ஒத்துகிட்டீங்களே…ரொம்பச் சந்தோஷம்.”

“இப்போ அது ரொம்ப முக்கியம் போகலாமா…”

 

 

[the_ad id=”6605″]

 

 

“மத்தவங்க சாப்பிடாம நாம கிளம்பினா நல்லா இருக்காது ரிஷி.” சாதனா சொல்ல…” ரிஷி, எல்லோரையும் அப்போதே வற்புறுத்தி சாப்பிட வைத்தவன், அவர்கள் சாப்பிட்டதும், “ஒரு முக்கியமான வேலை இருக்கிறது.” எனச் சாதனாவுடன் கிளம்பி விட்டான்.

அன்று மட்டும் இல்லை அதற்குப் பிறகு வந்த நாட்களும் ரிஷிக்கும் சாதனாவிற்கு ம் உல்லாசமாகச் சென்றது. திங்கள் முதல் வெள்ளி வரையான நாட்களைத் தங்கள் வேலைக்கு என்று ஒதுக்கியவர்கள், வார இறுதி நாட்களில் அவர்கள் இருவர் மட்டும் எங்காவது கிளம்பி விடுவார்கள்.

சாதனாவின் பிறந்த நாளுக்கு ரிஷி அவளை அழைத்துக்கொண்டு மாலத்தீவு சென்றான்.

“அக்கம் பக்கம்

யாருமில்லா பூலோகம் வேண்டும்.
அந்திப் பகல்  உன்னருகில்

நான் வாழ வேண்டும்.” என்பதற்கு ஏற்ப… அங்கிருந்த ஆள் இல்லாத தீவுக்கெல்லாம் இருவரும் சென்று விட்டு வந்தனர்.

அந்தப் பயணம் இருவருக்கும் மறக்க முடியாத விதத்தில்… சாதனா அங்கிருந்து வந்த பிறகு கருவுற்றாள். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையில் சந்தோஷத்திற்குக் குறைவே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!