Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Irulil Thedum Oliyaai Nee

Irulil Thedum Oliyaai Nee 8

ஒளி 8 ::

 

தந்தானே தந்தானே காற்று,மழையும் தந்தானே எல்லோரும் வாழத்தானே!

தந்தானே தந்தானே பாடலொன்று தந்தானே எல்லோரும் பாடத்தானே!



Advertisement

சிறுபிள்ளை போல் மனமிருந்தால் துயரில்லையே!

 பறவைப்போல் உடலிருந்தால் பயமில்லையே!

அது எனை வானவில்லில் கொண்டு சேர்த்து விடுகிறதே சில நேரம்!

Advertisement

 

Advertisement

நேற்றைய தாக்கம் மற்றும் வெகு நேர சிந்தனையில் தூங்காமல் இருந்தவள் நள்ளிரவு தாண்டியதும் தான் உறங்க ஆரம்பித்தாள்அவள் பெற்றோரும் அவளை எழுப்ப முற்படவில்லை, அவளின் பத்தாவது வயதில் இருந்து தந்தையுடன் காலை வாக்கிங் செல்லுவதால் அதிகாலை எழும் பழக்கம் உண்டு..

 

அவள் படிக்கும் காலத்தில் அவர்கள் வீட்டில் டிவி இல்லை ரேடியோ தான்.. அவளுக்கு அது மிகவும் பிடித்த ஒன்றும் கூட ,அதும் அதிகாலை மற்றும் இரவு நேர நிகழ்ச்சிகள் அவள் விரும்பி கேட்பவை.. 

Advertisement

 

அவள் வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் பாடலை ஓட விட்டு கூடவே பாடிக் கொண்டிருப்பாள்.. சின்ன சத்தமோ அல்லது சிறு வெளிச்சம் வந்தால் கூட உறக்கம் கலைந்து எழுந்து விடுவாள்..

 

அதிலும் இது அவளுக்கு பிடித்த பாடல் வேறு , இந்த பாட்டு போடும்போதெல்லாம்  எங்கிருந்தாலும் ஓடி வந்து விடுவாள்..அவள் அம்மாவை சுத்தி சுத்தி ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் அவரை சுத்தலில் விடுவாள்.

 

ஆனால் இன்று பாட்டு சத்தம் கேட்டும்  புருவ சுழிப்போடு ஏதோ மனபாரத்துடன் உறங்கிக் கொண்டிருக்கும் மகளைப் பார்க்கும் போது அவர்கள் மனமும் கனத்து போனது.. ராஜதுரையும் வாக்கிங் செல்லாமல் வீட்டிலே இருந்து விட்டார்.. 

 

காலை எட்டு மணி போல் எழுந்தாள்அவளுள் ஏதோ ஒரு தெளிவு , அவள் தந்தை சோர்வுடன் அமர்ந்திருப்பதை பார்த்து வருத்தமாகி அவர் அருகில் அமர்ந்து அவர் கையை இறுக்கமாக பிடித்து கொண்டு தோள் சாய்ந்து கொண்டாள்.. 

 

அவள் சாய்ந்ததை உணர்ந்ததும் தானாகவே அவர் கை அவள் தலை கோதியது… 

 

“என்னடா அம்மு !” 

 

“ஒண்ணுமில்லைப்பா .. நீங்க வாக்கிங் போகலையா ? என்னையும் எழுப்பல…”

 

“இல்லமா ! என்னவோ போக தோணல..” 

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

“ம்ம்ம்! அப்பா விஜி இன்னைக்கு காலேஜ்ல அப்ளிகேஷன் வாங்க போறேன்னு சொல்லிட்டு இருந்தா.. அவ கூட நானும் போறேன்ப்பா”

 

“ஏன்மாவேற ஏதும் முயற்சி பண்ணலாமே.. “

 

“இல்லப்பா வேணாம்.. நான் பிஎஸ்சி படிக்க போறேன்ப்பா..” 

 

“பீஸ் கம்மியா இருக்கும்.. இப்பலாம் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்க்கு நிறைய மதிப்பு இருக்குநான் அதே படிக்க போறேன்என் ஸ்கூல் பிரண்ட்ஸ் நிறைய பேர் அந்த காலேஜ் தான்ப்பாவிஜியும் கூட அங்க தான் சேர போறா.. நானும் அங்கேயே போறேன்ப்பா…” 

 

“சரிடா! உன் விருப்பம் தான்பணம் இப்ப ஏதும் கட்டணுமா?”

 

“இல்லப்பா முதல்ல அப்ளை பண்ணணும்ப்பாஅப்பறம் அவங்களே ஒரு தேதி சொல்லுவாங்க அப்ப போய் பணம் கட்டி சேரணும்ப்பா…”

 

“ம்ம்ம் ! நீ போயிட்டு வந்து விவரம் சொல்லு, நான் பார்த்துகிறேன்.. தனியா போறிங்களா ?”

 

“இல்லப்பாவிஜி அப்பா வருவாங்கனு நினைக்கிறேன் , எப்படியும் பிரண்ட்ஸ் எல்லாரும் கூட வருவாங்க .. விஜிக்கிட்ட இனி தான் கேக்கணும்ப்பா…” 

 

“சரி பார்த்து போயிட்டு வாங்க ..” 

 

“ம்ம்ம் சரிப்பா!” 

 

இதுவரை இருவரும் பேசுவதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த தாயிடம் திரும்பி ,”அம்மா! எனக்கு தண்ணி காய வச்சுடுங்கஅப்படியே  பசங்க சாப்பிட ஏதும் செய்து கொடுங்கம்மா .. போனதும் எல்லாம் கேட்குங்க”.. 

 

“அம்மு ! உனக்கு வருத்தமா ? முகமே சரியா இல்ல..” 

 

“அம்மா எனக்கு ஒண்ணுமில்லை , எனக்கு என்ன வேணுமோ அது செலக்ட் பண்ணிட்டேன் .. எனக்கு ஹாப்பி தான் .. நீங்க கவலைபடாதீங்க..”

 

“ஏன் அம்மு ? உங்க சித்தப்பாங்களாம் கவர்ன்மென்ட் வேலைக்கு போறாங்கல அது போல நீ ஏதும் பண்ண முடியாதா ?”

 

சாந்தி அப்படி கேட்டதும் அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது ..” அம்மா ! அது தாத்தாங்க அவங்க பசங்களுக்கு காசு கொடுத்து அந்த காலத்திலே வாங்கி கொடுத்தது.. இப்பலாம் அப்படி இல்ல படிச்சு எக்ஸாம் எழுதி போகணும்மா… “

 

“சரி நீயும் அப்படி படிச்சு ஏதும் வாங்க முடியாதா ?”

 

“அம்மா ! எனக்கு அதல விருப்பம் இல்ல .. அந்த இடம்லாம் செட் ஆகாது.. “

 

“ம்ம்ம்ம் …” 

 

“அம்மா ! நான் முதல்ல படிச்சு முடிக்கிறேன் அப்புறம் அதெல்லாம் பார்த்துக்கலாம் ..”

 

“சரி ! தண்ணி ஏற்கனவே போட்டு வச்சிருக்கேன் நீ போய்  குளிச்சுட்டு வா .. நான் போய் சமைக்கிறேன்” என எழுந்து சென்றார்.

 

அதன் பின் ரெடியாகி விஜி வீட்டிற்கு சென்றாள், அவளும் அவள் அப்பாவுடன் கிளம்பியிருந்தாள்

 

“ஹே ! ரதி ! வா வா !” 

 

“உள்ள வாம்மா..” என விஜியின் தந்தை அழைக்க

 

“எப்படி இருக்கீங்க அங்கிள் ? ஆன்ட்டி எங்க காணோம்?”

 

“அம்மா  இப்ப தான் பக்கத்துல கடைக்கு போய் இருக்காங்க.. இரு நான் உனக்கு காபி போடறேன் …” 

 

“ஹே! விஜி அதெல்லாம் வேணாம் .. நான் சாப்பிட்டு தான் வந்தேன் .. நானும் அப்பிளிகேஷன் வாங்க உன்கூட வரேன் அதான்..” என்று ரதி தயக்கமாக சொல்ல,

 

“ரதி, உனக்கு தான் டென்டல்க்கு கவுன்சில்லிங் வந்துடுச்சே அப்பறம் என்ன?”

 

“அதெல்லாம் அப்பறம் சொல்றேன் விஜி, இப்ப உன்கூட என்னையும் கூட்டிட்டு போ.. நீ கிளம்பிட்டியோனு சீக்கிரம் வந்தேன்…”

 

“சரி என்னவோ சொல்ற.. கிளம்பிட்டோம் தான் போகலாம் வா …”

 

“அப்பா ! ரதியும் நம்ப கூட வராளாம்..” 

 

“ஏன்மா? அந்த பாப்பா ஏதோ  பல் டாக்டருக்கு தானே படிக்க போகுதுனு சொன்ன..என குழப்பமாய் கேட்க .. 

 

“அதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம்ப்பாஇப்ப கிளம்பலாம் …”

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

“சரி வாங்க போகலாம் .. வாம்மா ரதி ..”என மூவரும் கிளம்பினர்

 

காலேஜ் சென்றதும் அங்கிருந்த மத்த தோழியரை கண்டதும் அவளுக்கு மற்றது மறந்தது.. விடுமுறை முடிந்த பின் நண்பர்களை சந்தித்தால் பேசி சிரிக்க விஷயமா இருக்காது.

 

 ரதியை அங்கு பார்த்தது எல்லாருக்கும் கேள்வியாக இருந்தாலும் அதை விடுத்து அரட்டை அடித்துக்கொண்டும் அவள் எடுத்து வந்த உணவை சாப்பிட்டுக்கொண்டும் ரதிக்கு நேரம் இனிமையாக சென்றது.

 

தோழிகளை சென்று சந்தித்ததில் மனம் ஏனோ இன்னும் அமைதியானது , அதற்கு ஆயுள் குறைவு என அறியாமல் காலேஜில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.இரவு எப்போதும் போல தந்தை வந்ததும் சாப்பிட அமர்ந்தனர்

 

“அம்மு! போன வேலை என்னாச்சும்மா?” என ராஜதுரை கேட்க ,

 

“ஆஹ்ன் வாங்கிட்டேன்ப்பாஅங்கேயே பில் பண்ணிட்டேன் நீங்க சைன் பண்ணிட்டீங்கன்னா  நாளைக்கு எடுத்துட்டு போய் கொடுத்துடுவேன்…” 

 

“ம்ம்ம் ..சரிமாகாலைல போடறேன்..”

 

“என்னப்பா… என்னவோ போல இருக்கீங்க ?” ரதி கேட்க அவரோ அமைதியாக இருக்க,

 

“என்னங்க.. என்ன யோசனை ??”என சாந்தியும் கேட்க

 

“ஒன்னும் இல்ல.. அத்தை நாளைக்கு அம்முவை கூட்டிட்டு அங்க காலைல வர சொல்லி இருக்காங்க.. அதான் எதுக்குனு யோசனையாவே இருக்கு…”

 

ரதிக்கு நேற்றைய அனுபவத்தால் அதிர்ச்சியாக இருக்க , சாந்திக்கோ குழப்பமாக இருந்தது

 

என்னவாக இருக்கும் என அவர் அவர் யோசனையில் மூழ்க , ராஜதுரை தான் அதை கலைத்தார் . “விடுங்க காலைல அங்க போய் பார்த்தா தெரிய போகுது சாப்பிட்டு போய் தூங்குங்க, எல்லாம் நல்லதாவே நடக்கும்என அவர்களுக்கு சொல்லுவது போல தனக்கும் சொல்லிக்கொண்டு எழுந்து சென்றார்.

 

ஆடம்பரங்கள் எதிர்பார்க்கவில்லை! 

ஆயுள் முழுமைக்கும் இந்த ஏழையின் இளவரசியாக இருக்க தான் 

ஆசைப்படுகிறேன் !!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!