Meendum orumurai -14
பாகம்- 14
ஜோசியர் ஐந்து நிமிடம் ஜாதகத்தை கையில் வைத்து பார்த்திருந்தவர், “அன்னைக்கு நீங்க வந்தப்போ உங்க வீட்டில ஒரு உயிர் சீக்கிரம் போக போறதை என்னால கணிக்க முடிஞ்சது. அந்த சமயத்துல என்னால பலன் எதுவும் சொல்ல முடியாதுங்கறதுனால தான், நான் அப்ப சொல்லல. இப்ப 30 நாள் முடிஞ்சிடுச்சு. இன்னைக்கு நான் இத பத்தி சொல்றேன். ஒரு உங்க பொண்ணு ஜாதகப் படி நல்ல கல்வி, தொழில், திருமணம்னு எல்லாமே அமோகம் தான். ஆனா இன்னும் ஒரு வருஷத்துல உங்க பொண்ணுக்கு ஒரு மரணம் கண்டம் இருக்கு . அந்த கண்டத்தில் இருந்து அவ தப்பிக்கணும்னா அதுக்கு முன்னாடி அவளுக்கு கல்யாணம் பண்ணி வைங்க. ஆனா அந்த கல்யாணத்துனால அவ கண்டிப்பா தப்பிச்சிருவான்னு நூறு சதவீதம் என்னால சொல்ல முடியாது. இது பாதி பாதி நம்பிக்கை மட்டும் தான். இந்த கல்யாணம் நடந்தா தப்பிக்கிறதுக்கான வாய்ப்பு இருக்கு. ஆனா எது நடந்தாலும் அந்த கடவுள் பார்த்துப்பானு அவன் மேல நம்பிக்கை வச்சுட்டு எந்த காரியத்தையும் செய்ங்க. இன்னும் சரியா அஞ்சு மாசத்துல திருக்கார்த்திகை வருது அன்னைக்கு உங்க பொண்ணுக்கு முருகன் கோயில்ல கல்யாணம் செஞ்சு வையுங்க” என்று வேற எதுவும் பேசாமல் அவர்கள் கையிலே அவர் ஜாதகத்தை கொடுத்து விட்டார். இவர்களுக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. ஆனால் எப்படியோ ஒரு வாய்ப்பு இருக்கிறது அதை செய்து பார்த்து விட வேண்டும் என்று முடிவோடு வீடு திரும்பினர் போனதும் முதல் வேலையாக ஆறுமுகம் கல்யாண தரகருக்கு அழைத்து பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று கூறி ஜாதகத்தை வாங்க வர சொன்னார்.
அலைபேசியில் பேசிவிட்டு அவர் திரும்ப அங்கு வேலினி நின்று இருந்தாள். கையை கட்டிக் கொண்டு தந்தையின் முறைக்காக பார்த்தவள், என்னப்பா இது? இப்படி ஒரு திடீர்னு ஒரு முடிவு அதுவும் பாட்டி இறந்து முப்பது நாள் தான் ஆயிருக்கு. அதுக்குள்ள ஏன் இப்படி யோசிச்சிட்டு இருக்கீங்க?” என்று அவள் கோபமாக கேட்க, பின்னாடி வந்த குரு அவளை தடுத்து நிறுத்தும் விதமாக,
“வேலினி ஏன் இப்ப நீ கோவப்படுற? அப்பா ஏதோ காரணத்துக்காக தான் அப்படி பண்ணி இருப்பாங்க. சும்மா எதுக்கு திடீர்னு இப்படி எல்லாம் பண்ண போறாங்க. அப்புறம் நாங்களும் உன் கூட தான வந்தோம் மறந்திட்டியா? சென்று குரலில் கண்டிப்பு காட்டிப் பேசினான்.
Advertisement
வீட்டில் ஆட்கள் வந்த நேரத்தில் தந்தையிடம் இப்படி தான் பேசுவாயா? என்ற கண்டனம் அந்த குரலில் ஒலிக்காமல் ஒலித்தது. “ஐ அம் சோ சாரி உள்ள வாங்க, ஆன்ட்டி” என்று பவானியை அழைத்து அமர வைத்தவள், தந்தையிடமும் “சாரிப்பா” என்றாள்.
அவர்கள் இருவரும் திடீரென்று வந்திருக்க ஆறுமுகம் என்ன என்று விசாரித்தார். மற்றபடி மகள் கேட்ட எந்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்கவில்லை. அவளின் மன்னிப்பை மட்டும் ஏற்றுக் கொண்டார்.
பவானி அவர் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக, ஒண்ணும் இல்ல வேலினி காலேஜ் போயிட்டு வந்துட்டு இருந்தா வழியில் பார்த்தோம் அதான் அவளையும் கார்ல ஏத்திட்டு வந்தோம். நேத்து என்னால அம்மாக்கு சாமி கும்பிடும் போது வர முடியல. அதான் ஒரு எட்டு பாத்துட்டு போலாம்னு வந்தோம்” என்றவர்,
Advertisement
தொடர்ந்து, “அண்ணன் நீங்க தப்பா நினைக்காதீங்க. ஆரம்பத்திலையே தடங்கலா பேசுறேன்னு நினைக்க வேண்மா. அண்ணி சொல்லிருந்தாங்க வேலினி இரண்டு வருஷத்துக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு சம்மதம் சொல்லி இருக்கான்னு. நீங்க ஏன் இப்ப திடீர்னு கல்யாணம் பேச்சு எடுக்குறீங்க அவ ஆசைப்பட்ட மாதிரி ரெண்டு வருஷம் கழிச்சு பண்ணி வைங்களேன்”, என்று கேட்க,
Advertisement
“அது…. எப்படி மா சொல்ல, இவ ஜாதகத்துல இன்னும் அஞ்சு மாசத்துல கல்யாணம் நடக்கணும்னு இருக்குமா. என்னால என்ன பண்ண முடியும்” என்று என் குடும்பத்தில் எத்தனை வருடங்களாக நல்ல பழக்கத்தில் இருக்கும் பவானியிடம் என்றார் ஆறுமுகம்.
இருந்தும் அவருக்கும் கண்டம் பற்றி எல்லாம் கூற எந்த எண்ணமும் இருக்கவில்லை. அதனால் மேலோட்டமாக அவள் ஜாதகத்துல ஐந்து மாதத்தில் முடிக்க வேண்டி இருக்கிறது என்று மட்டும் தெரிவித்தார்.
பவானி, “அப்படியா எப்ப பாத்துட்டு வந்தீங்க?” என்று அவர் இயல்பாக விசாரிக்க, “இன்னைக்கு தான்மா இப்பதான் போயிட்டு வந்தோம். அஞ்சு மாசத்துல பண்ணிடுங்க இல்லனா அப்புறம் கல்யாணத்துல பெரிய சிக்கல் இருக்கும்னு அவர் சொன்னாரு. அதான் முடிஞ்ச அளவுக்கு வேகமாக பண்ணலாம்னு உடனே வந்ததும் புரோக்கர் கிட்ட பேசிட்டு இருந்தேன்”, என்று அவர் கூறவும்,
Advertisement
“நீங்க சொல்றது சரிதான்…. என்ற பவானி, ஏதோ கூற முடியாமல் அமைதியாகி விட, இப்போது தந்தையிடம் வேலினி, “அப்பா அவங்க எல்லாம் அப்படித்தான் சொல்லுவாங்க. ஆனா ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் நான் பொறுமையா பண்ணிக்கிறேன் ப்ளீஸ்”, என்றாள்.
வேலினியின் மனதில் இருப்பதெல்லாம் பாட்டியின் விதியை தன்னால் மாற்ற முடியவில்லை. அப்படி இருக்கையில் இன்னும் ஒரு வருடத்தில் தனக்கு நிகழப் போகும் விதியை மட்டும் மாற்றிவிட முடியுமா? முடியாமல் போய்விட்டால் என்னவாகும். தன்னை மணந்து கொண்ட பாவத்திற்கு இன்னொருவன் வாழ்வும் பெரிதாக பாதிக்கப்படும் தானே? மனைவி இறந்துவிட்டால் திருமணம் செய்து கொள்வதில் ஆணுக்கு பெரிதாக விதிகளை இந்த சமூகம் விதிப்பதில்லை தான். என்றாலும், அவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது தான் நிஜம்.
அதுமட்டுமின்றி குறைவாகவே இருக்கப்போகும் இந்த நாட்களை தன் குடும்பத்துடன் செலவழித்தால் என்ன என்று அவள் எண்ணமாக இருந்தது. அதனாலேயே அவள் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள கூடாது என்று திடமாக இருந்தாள்.
ஆனால் ஆறுமுகம் தெய்வானையோ அவளின் பிடிவாதத்தை ஏற்கும் எண்ணத்தில் இல்லவே இல்லை. அவர்களுக்கு தன் மகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம். சாதாரணமாக தாய் தந்தைக்குள் இருக்கும் எண்ணம் தானே அவை.
தெய்வானை ஏற்கனவே பயத்திலும் வேதனையிலும் இருந்தவர், மகள் இப்படி கூறவும் உடனே கோபமாக, “உனக்கு என்ன தாண்டி பிரச்சனை? ஏன் இப்ப கல்யாணம் வேணாம்னு சொல்ற? வேற யாரையாவது லவ் பண்றியா அப்படியாவது சொல்லு நான் அவனையாவது உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்று கூறவும் அவளுக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது இப்படி பேசிவிட்டாரே என்று அதுவும் குருவும் பவானியும் இருக்கும் நேரத்தில். ஆறுமுகம் கூட, “தெய்வானை” என்று அதட்டல் போட்டார்.
வேலினி கலங்கினாலும் மனதில் திடத்தை வரவழைத்துக் கொண்டு, “அப்படியெல்லாம் யாரும் எனக்கு இல்லமா. எனக்கு தேவை ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் கல்யாணம் அவ்வளவுதான். இப்பதான் வேலைக்கே சேர்ந்து இருக்கேன். கல்யாணம் குழந்தைன்னு போயிட்டா அதுக்கப்புறம் என்னமா இருக்கு நான் செய்யறதுக்கு”, என்று கேட்க ”
“இதெல்லாம் ஒரு காரணமா? நீ சரியா காரணம் சொன்னாலும் சரி, இல்லைனாலும் சரி, என்னால நீ சொல்றத எல்லாம் கேட்க முடியாது.
ரெண்டு வருஷம் எல்லாம் கிடையாது, வேணா ரெண்டு மாசம் டைம் தரேன் அதுக்குள்ள நீயா ஒத்துக்கோ. இல்லன்னா உனக்கு நான் கட்டாய படுத்தி தான் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது இருக்கும். உனக்கு இன்னைல இருந்து அஞ்சாவது மாசம் திருக்கார்த்திகை அன்னைக்கு கல்யாணம். இதுல எந்த மாற்றமும் கிடையாது” என்று கோபமாக கத்தினார்.
“ஆன்ட்டி நீங்க எதுக்கு இப்போ அவ கிட்ட இவ்ளோ கோவமா பேசுறீங்க. உங்களுக்கு தெரியும் தானே அவளுக்கு டீச்சர் ஆகணும்னு ஆசைன்னு. அதை நிறைவேத்தி இப்பதான் அந்த வேலையிலே சேர்ந்து இருக்கா.
அவளுக்கு அதிலை நிறைய பண்ணனும்னு ஆசை இருக்கு. ரெண்டு வருஷம் டைம் அதுக்குத்தான் கேட்கிறா. நீங்க ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க. கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைப்பேன்னு சொல்றீங்க.
நீங்க என்னதான் அம்மாவா இருந்தாலும் அவளை இவ்வளவு போர்ஸ் பண்றதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இன்னொரு தடவை அப்படி போர்ஸ் பண்ற மாதிரி பேசாதீங்க” என்று குரு கோபமாக பேசி விட தெய்வானைக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
என்ன இப்படி பேசி விட்டானே என்று. தன் பெண்ணை கட்டாயப்படுத்த கூடாது என்று அவருக்கும் தெரியும்தான். இருந்தாலும் இப்படி ஒரு சூழலில் சிக்கிக்கொண்ட தாய்க்கு வேறு என்ன செய்துவிட முடியும்.
கண்களில் கண்ணீர் திரண்டு வந்துவிட, பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் ஏங்கி அழ ஆரம்பித்துவிட்டார். உடனே அனைவரும் அவரை சமாதானம் செய்ய ஆரம்பித்துவிட, இவனுக்கே ஒரு மாதிரியாகிவிட்டது,
“சாரி ஆன்ட்டி தப்பா நினைச்சுக்காதீங்க நான் வேணும்னு அப்படி பேசல. பட் நீங்க வேலினிய இப்படி கட்டாயப்படுத்தாதீங்க ப்ளீஸ்” என்றும் அவரிடம் மன்னிப்பு கேட்டான். பவானி அவனை நன்றாக திட்ட, ஆறுமுகம் அவரை தடுத்து நிறுத்திவிட்டு, தெய்வானையிடம்,
“தெய்வானை, நம்ம மகள பத்தி உனக்கு தெரியாதா. அவ பொறுமையா சொன்னாலே கேட்டுப்பா. அவ எடுக்கிற முடிவு சரியா தான் இருக்கும். நம்மளும் ஒரு முடிவெடுத்து இருக்கோம்னா அது என்னன்னு கேட்டு, அவளும் நம்ம சொல்றதுக்கு ஒத்துக்குவா.
இப்படி கட்டாயம்னு பேசினதுனால தான் குருவுக்கு கோவம் வந்துருச்சு. இனிமே இப்படி பேசாதை அமைதியா இரு”, என்றதும் தெய்வானை, “நீங்க சொல்றது சரிதான். என் மகளுக்கு பிடிச்சது செய்யணும்னு எனக்கும் ஆசை இருக்கு தான்.
கட்டாயப்படுத்தி எதையும் செய்யக்கூடாதுனு தான் நானும் நினைக்கிறேன். அதுவும் கல்யாணத்தை அப்படி பண்றதுல எனக்கு விருப்பம் இல்ல தான். ஆனா அவளுக்கு மரண கண்டம் இருக்கு செத்துப் போயிடுவான்னு சொன்னா நான் என்ன பண்றது. எனக்கு அவ ரொம்ப நாள் இருக்கனும்னு ஆசை இருக்கே” என்று அழுகை குரலில் ஒழுங்காக பேச முடியாமல் கூறி முடித்தார்.
அப்போதுதான் உள்ளே வந்த குழலினி அதைக் கேட்டு அதிர்ச்சியாகிவிட்டாள். அதிகமாக பாட்டியுடன் ஒட்டுதல் இருந்ததால் அவரை போலவே அவளுக்கும் ஜாதகத்தில் நம்பிக்கை இருந்தது. அக்காவிற்கும் மரண கண்டம் இருக்கும் செய்தி கேட்டதும், அக்கா தன்னை விட்டு சென்று விடுவாளா என்று பயந்து வேகமாக ஓடி வந்து அக்காவை கட்டிக்கொண்டாள்.
“அக்கா என்னை விட்டு போயிடாத, ப்ளீஸ். என்ன விட்டு போயிடாத… பாட்டி போனதையே என்னால் தாங்க முடியலை” என்று அவள் அழ ஆரம்பிக்கவும், வேலினி ஏற்கனவே தாய் சொன்ன செய்தியில் அதிர்ச்சியாக இருந்தவள், இப்போது இன்னும் அதிர்ச்சிக்கு உட்பட்டாள்.
அவளுக்கு தான் தெரியுமே தன்னுடைய மரணம் என்பது விதியால் எழுதப்பட்டிருக்கிறது என்று. அப்படி இருக்கையில் தாயும் ஜாதகத்தில் கணித்து பார்த்து கூறினார்கள் என்று கூறும்போது என்ன சொல்ல என்றே தெரியவில்லை.
தன் தாய் தந்தை தான் இருக்கும் வரை நிம்மதியாக இருக்க வேண்டும். தான் இறந்த பிறகும் கூட தன்னை இழந்த வலி இருந்தாலும் அதை தாண்டி குழலினிக்காக அவர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று எண்ணியிருந்தவளுக்கு, இப்போது இந்த ஒரு வருடம் கூட அவர்கள் மனதில் நிம்மதி இல்லாமல் வாழ போகிறார்களே என்று மிகுந்த வேதனையாக இருந்தது.
பவானி வேகமாக தெய்வானை அருகே வந்து, “என்ன சொல்றீங்க அண்ணி” என்று கையைப் பிடித்து கேட்க, “ஆமாம் பவானி உங்களுக்கு தெரியாது. அவளுக்கு இன்னும் ஒரு வருஷத்துல மரணம் கண்டம் வரப்போதாம்.
அதிலிருந்து தப்பிக்க வழியே இல்லையாம். ஒரு கல்யாணம் பண்ணி வச்சா 50% வாய்ப்பு இருக்குனு ஜோசியர் சொல்லி இருக்காரு. அதுக்காக தான் இவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் இவ்வளவு அடம் பிடிக்கிறேன். இல்லன்னா என் பொண்ணுக்கு நான் ஏன் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்க போறேன்”, என்று மீண்டும் அழுக ஆரம்பிக்க, அவரை எப்படி சமாதானப்படுத்த வேண்டும் என்று பவானிக்கு தெரியவில்லை.
“ஆறுமுகம் குரலை உயர்த்தி, தெய்வானை நான்தான் அமைதியா இருன்னு சொல்றேன்ல. ஏன் இப்படி எல்லாரையும் கஷ்டப்படுத்துற மாதிரி நீ பேசிகிட்டு இருக்க”,என்றதும் சற்று அமைதியானார் தெய்வானை.
மேலும் அவர் ஏதோ பேச வரும் முன் அங்கு ஒலித்த அந்த குரல் அது கூறிய செய்தி, அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.
குரு ஆறுமுகத்திற்கு நேராக நின்று, “எனக்கு வேலினிய கல்யாணம் பண்ணி கொடுப்பீங்களா?” என்று கேட்டான். உடனே அனைவரும் அதில் ஆச்சரியமாக அவனை பார்த்து நிற்க, வேலினிக்கு அதிர்ச்சியாகிவிட்டது.
“குரு நீங்கள் என்னுடைய பிரண்ட்” என்று வேகமாக அவன் அருகே நின்று அவனை தன் புறமாக திருப்பி அவள் கேள்வி எழுப்ப, “ஆனால் நான் உன்னை வெறும் பிரண்டா மட்டும் பாக்கல வேலினி”, என்று அழுத்தமாக கூறினான்.
அவளுக்கு கோபம் கோபமாக வந்தது, “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க ஆளாளுக்கு என் வாழ்க்கையோட விளையாடிட்டு இருக்கீங்க?”
அனைவரிடமும் அமைதி மட்டும் அவளுக்கு பதிலாக கிடைக்க, எனக்கு ஒன்னும் புரியல குரு. இப்ப எனக்கு மரண கண்டம் இருக்கு அவ்வளவுதான். அதுக்காக என்கிட்ட இப்படி ஒரு பொய் சொல்லணும் எந்த அவசியமும் இல்லை.”
“நான் உன்கிட்ட இப்ப பொய் சொல்லவே இல்ல. நான் சொல்றது உண்மை. இப்ப இல்ல இன்னும் ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் உன்னை கண்டிப்பா நான் பொண்ணு கேட்டு வந்து இருப்பேன். உன்ன கல்யாணம் பண்ணி இருப்பேன்” என்று அழுத்தம் திருத்தமாக கூறினான் சிவகுரு.
அவன் குரலில் ஒலித்து அழுத்தமே அவளுக்கு தெளிவாக உணர்த்தியது இவனிடம் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என்று.
வேகமாக பவானியை நெருங்கியவள், “ஆன்ட்டி உங்கள் பையனுக்கு சொல்லுங்க. எனக்கு மரணகண்டம் இருக்குன்னா உங்க பையனோட வாழ்க்கை என்ன ஆகும்னு யோசிங்க. தயவுசெய்து அவரை இங்கிருந்து கிளம்ப சொல்லுங்க”, என்று அவள் கண்ணை மூடிக்கொண்டு கோபமாக கத்தினாள்.
பவானி முதலில் அவளை கவலையாக பார்த்தவர், மகனை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் வேலினியிடம் திரும்பி, “எனக்கு அவன் உன் மேல வச்சிருக்க விருப்பம் ஏற்கனவே தெரியும் டா. அவன் இப்ப இல்ல ரொம்ப வருஷமாவே உன்னை காதலிச்சிட்டு தான் இருக்கான். எந்த காரணத்துக்காகவும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டான். அவன் ஒரு பிடிவாதக்காரன்”, என்று அவர் கூற வேலினிக்கு இவர் பேச்சு நமக்கு ஏன் சாதகமாக இல்லாமல் இருக்கிறது.
தன் மகன் வாழ்வை வாழ்க்கை பற்றி இவருக்கு கவலை இல்லையா என்று அவளுக்கு இன்னும் கோபம் கோபமாக வந்தது. “உங்களுக்கு உங்க பையன் வாழ்கைய பத்தி கவலையே இல்லையா?” என்றதும், குரு கோபமாக, “போதும் நிறுத்து வேலினி” என்றான்.
“என் அம்மாவுக்கு அவங்க பையன் வாழ்க்கைய பத்தின கவலை நிறைய இருக்கு. அதனால தான் அவங்க நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு சம்மதம் சொல்றாங்க. உனக்கு அது புரியலையா?” என்றதும்,
“என்ன அக்கறை இருக்கு எனக்கு புரியல. என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் வாழ்க்கை நல்லா இருக்காது. நான் கொஞ்ச நேரத்துல இறந்து போய்டுவேன்னு சொல்றாங்க. ஆனா அவங்க ஏத்துக்காம பேசிட்டு இருக்காங்க. நீயும் அப்படித்தான் பேசிட்டு இருக்க குரு. என்ன நெனச்சிட்டு இருக்க?” என்று இத்தனை நாள் அவன் மீது வைத்த அந்த மரியாதையை கூட மறந்துவிட்டு அவள், நீ, வா, போ என்று பேச ஆரம்பித்துவிட்டாள்.
ஆறுமுகம் தான் விசயத்தை சமாளிக்கும் விதமாக, “போதும் வேலினி, நீ என்ன பேசிட்டு இருக்க. அவர்கிட்ட இப்படி மரியாதை இல்லாம தான் பேசுவியா” என்று கோபமாக கேட்டார். ஆறுமுகம் தம்பதிக்கு வேலினி பேசும்போது தான் ஒரு விஷயம் உறைத்தது.
தன் மகளுக்கு மரணகண்டம் இருக்கு என்ற செய்தி தெரிந்தால், யாரும் நிச்சயம் பெண் கேட்டு வரப்போவதில்லை. மேலும் ஒருவேளை உண்மையிலேயே கண்டம் உண்மையாகி விட்டால், அதன் பிறகு இன்னொருவனின் வாழ்க்கையும் பாதிக்கப்பட தான் செய்யும் என்பதை அவர்கள் அப்போதுதான் நினைவு கூர்ந்தனர்.
தொடர்ந்து வேலினியும் குருவும் மாறி மாறி பேசிக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் ஆறுமுகத்திற்கு வேலினியின் பேச்சு கோபத்தை வரவழைத்தது. அதனால்தான் அவர் அவளிடம் கோபத்தை காட்டினார் வேலினி அவரின் கோபத்தில் தன் தவறு புரிந்து, அமைதியாகிவிட்டாள்.
உண்மையில் அவளுக்கு இப்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அனைவரும் ஒரு முடிவுடன் இருக்கின்றனர் என்று விளங்கியது. அதனால் அமைதியாக அங்கிருந்த இருக்கையிலே அமர்ந்த விட, ஆறுமுகமும் தெய்வானையும் தயக்கத்தில் இருந்தனர்.
அவர்களால் பவானியிடம் நேரடியாக இது குறித்து பேச முடியவில்லை மரண கண்டம் இருப்பது தன் மகளுக்கு, அப்படி இருக்கையில் தான் நான் அவளை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று அவர் மகன் கூறிவிட்டாலும் அதற்கு அதன் பின்வரும் பாதிப்புகள் அதிகம் குருவிற்கு தானே வந்து சேரும். அதனால் வந்த தயக்கம் தான் அது.
பவானி தான் பேச்சை ஆரம்பித்தார். “குரு சொன்ன மாதிரி, ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் நிச்சயமா உங்க பொண்ணு நாங்க கேட்டிருப்போம் அண்ணே.
நீங்க அவனுக்கு சம்மதம் சொல்லணும்ங்கறதுக்காகவே அவன் அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் ஆரம்பிக்க வேண்டிய, கம்பெனியை அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சான். நாலு பேர்ல ஆரம்பிச்ச அந்த கம்பெனி இப்போ நானூறு பேர் வேலை பார்க்கிற அளவுக்கு முன்னேறி இருக்கு.
அதுக்கு அவன் கடும் உழைப்பு எந்த அளவுக்கு காரணமோ அதே அளவுக்கு வேலினி மேல அவன் வச்சிருந்த காதலும் காரணம்தான். என்னடா நண்பன்னு சொல்லிட்டு இருந்தவன் காதலன்னு சொல்கிறானே நினைச்சு அவனை தப்பா நினைச்சுக்காதீங்க.
அவன் எண்ணத்துல அவ மேல காதல் இருந்ததே தவிர, மத்தபடி எந்த தப்பான நோக்கமோ என்னமோ கிடையவே கிடையாது. இத நீங்க புரிஞ்சுக்கணும்”, என்று தாயாக தன் மகன் புறம் இருக்கும் நியாயத்தை எடுத்து கூறிக் கொண்டிருந்தார் பவானி.
ஆறுமுகம் உடனே, “நாங்க எப்பவும் குருவ பத்தி தப்பா நினைக்க மாட்டோம். இப்ப கூட அவளுக்கு மரண கண்ட இருக்குன்னு சொன்னாதும், நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு எந்த யோசனை இல்லாம சொன்னவரு தம்பி. அவர் மேல எங்களுக்கு எந்த தப்பான எண்ணம் வராது பவானி மா”, நிச்சயம் தன் மகன் குறித்து ஒருவர் இப்படி கூறும் போது பெருமையாகத்தான் இருந்தது பவானிக்கு.
முகத்தில் பெருமை பொங்க நின்றிருந்த பவானி, வேலினியை பார்க்க அவளை கண்டதும் முகம் வேதனையை பிரதிபலித்தது. அவள் அருகே அமர்ந்தவர் அவரின் வேதனையை நன்றாக அறிந்திருந்தார்.
அவரும் ஒரு பெண் தானே அதுவும் தனியாக இந்த சமூகத்தில் போராடி தன் மகனை வளர்த்தவர் ஆகிற்றே. அவரால் அவளின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது. அவள் அருகே அமர்ந்து கைகளை பற்றி,
“நீ பேசுனது அவனை பத்தின அக்கறைல தான், எனக்கு புரியுது. அந்த அக்கறையே போதும் அவன் கூட நீ நல்லா சந்தோஷமா ரொம்ப வருஷம் வாழ்வேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ தைரியமா இரு உனக்கு எதுவும் ஆகாது. ஒருவேளை உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லனா முக்கியமா அவனை கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பம் இல்லனா மட்டும் என்கிட்ட சொல்லு. நான் உனக்காக உன் கூட நிற்பேன்”, என்றதும் அவளுக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை.
நிச்சயம் உங்க மகனை எனக்கு பிடிக்காது என்று அவர் முகத்திற்கு நேராக அவளால் கூற முடியாது. ஏனெனில் அவனை அவளுக்கு பிடிக்கும் நான். ஆனால் காதல் என்ற கண்ணோட்டத்தில் அவள் அவனை பார்க்கவே இல்லையே. என்று “என் தோழியாக இருப்பாயா?” என்று கை கொடுத்தானோ அன்றிலிருந்து காதல் என்ற பார்வையை அவள் மொத்தமாக தவிர்த்துவிட்டு நண்பன் என்ற பார்வையை மட்டும் செலுத்திக் கொண்டிருந்தாள்.
அவன் தன் மீது காட்டும் அக்கறை அன்பு பாசம் அனைத்தும் அவளுக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கத்தான் செய்தது. ஆனால் அதெல்லாம் எந்த விதத்திலும் நண்பன் என்ற தன் பார்வையில் இருந்து அவனை மாற்றியதே இல்லை.
அப்படி இருக்கையில் திடீரென்று நண்பனாக இருந்தவன் தனக்கு கணவனாக போகிறான் என்பதை அவள் மனது ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தது. கூடவே தன் வாழ்வு முடிந்துவிடும் நேரத்தில், அவன் வாழ்க்கையையும் பாழாக்க அவள் மனம் நிச்சயமாக இடம் கொடுக்கவில்லை.
பவானி கேட்கவும் நிமிர்ந்து அனைவரின் முகத்தையும் ஒருமுறை கூர்ந்து பார்த்தவளுக்கு புரிந்தது, நிச்சயம் தான் தவிர்த்தாலும் இது நடந்தே தீரும் என்று. அதுவும் குருவின் முகத்தில் இருந்த அந்த தீவிரம் தெளிவாக புரிய வைத்தது. அமைதியாக அனைத்தையும் ஏற்க ஆரம்பித்தாள்.
காலங்கள் கடக்க ஆரம்பித்தது இரண்டு மாதங்கள் யாரும் எதுவும் பேசவில்லை. இரண்டாம் மாதம் முடிவில் தான் திருமண பேச்சு தொடங்கியது. குருவின் பெரியப்பா குடும்பத்திடம் ஜாதகம் பற்றி எல்லாம் கூறவில்லை பவானி.
அவன் விருப்பம் என்று மட்டும் உரைக்க, அவர்களுக்கு தான் வேலினியை ஏற்கெனவே பிடிக்குமே மகிழ்ச்சியோடு பேசி முடித்தனர். அடுத்தடுத்து வேகமாக அனைத்தும் நடந்தேற நிச்சயம் முடிந்து ஒரு மாதத்தில் திருமணம் என்று வந்து நின்றது.
வருவாள்….
மகாஆனந்த் ✨
