Meendum Orumurai -16-2
இருந்தும் வேலினி விடாமல் துறுத்துறுவி அவனிடம் கேட்டுக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் வெடித்து சிதறினான் குரு.
“அவன் உன்னை ஏதாவது பண்ணிடுவானோனு எனக்கு பயம். அதனாலதான் உன்னை நெருங்க விடலை போதுமா?” என்று கேட்கவும் இவளுக்கு குழப்பமாக இருந்தது.
“அவரால் எனக்கு என்ன ஆபத்து வரப்போகுது. ஆக்சுவலா அவர் பொண்ணு ஆபத்துல இருக்கும்போது நான் அவளை காப்பாத்தி இருக்கேன். அவர் எதுக்காக என்னை எதுவும் பண்ணப் போறாரு”, என்று அவள் கேட்க
“இந்த முறை காப்பாத்திட்ட போன முறை” என்று அவன் கேட்டதும் இவளுக்கு மொத்தமும் ஸ்தம்பித்த நிலை. தான் கேட்டது நிஜம் தானா என்று மீண்டும் அவனிடம் உறுதி செய்ய முயன்றாள்.
Advertisement
“என்ன சொ……. என்ன சொல்ற????” என்று திக்கி திக்கி வார்த்தை வந்தது.
“ஒன்னும் இல்ல விடு”, என்று அவன் நகரை போக,
“ப்ளீஸ் சொல்லு. என்ன சொல்ற? எனக்கு எதுவும் புரியல. போன முறை, என்றால் என்ன? சத்யாவை நான் ஒருமுறை தான் காப்பாத்தவே செஞ்சிருக்கேன்”, என்று அவள் கேட்கவும்,
Advertisement
“உன்னை முத முத நான் எங்க பார்த்தேன்னு உனக்கு தெரியுமா வேலினி”, என்று சம்பந்தமில்லாமல் ஒரு கேள்வியை எழுப்பினான்.
Advertisement
இவளுக்கு இவன் ஏன் இப்படி கேள்வி எழுப்புகிறான் என்று தோன்றிட, “முதல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு குரு”, என்றதும்
“உன் கேள்விக்கான பதில் இதுலதான் இருக்கு” என்றான்.
“எதுல இருக்கு?”
Advertisement
“முதன் முதலா நான் உன்னை எங்க பார்த்தேன்? உனக்கு தெரியுமா?”
“அன்னைக்கு ஃபயர் ஆக்சிடெண்ட் அப்போ…. அப்போ தானே?”
“இல்ல அதுக்கு முன்னாடி உன்னை நான் எங்க பார்த்தேன் தெரியுமா..?”.
“சாரி சாரி மறந்துட்டேன். பஸ்ல தானே பார்த்த”
“இல்ல வேலினி உன்னை நான் முதல் முதல்ல அன்னைக்கு தான் பார்த்தேன். ஆனா பஸ்லையோ பஸ் ஸ்டாண்ட்லையோ, இல்ல ஃபயர் ஆக்சிடென்ட் நடந்த இடத்தில்யோ இல்ல, என் கனவுல தான் மொத மொத நான் உன்ன பார்த்தேன்”, என்றான். இவளுக்கு பெரிதாக ஒரு இடியே விழுந்தது போல் இருந்தது.
இவன், “என்ன கூற வருகிறான்?”, இவனுக்கும் அனைத்தும் நினைவிருக்கிறது என்கிறானா? அப்படி என்றாலும் இவன் என் வாழ்வில் இருக்கவே இல்லையே. அது மட்டும் இல்லாமல், இந்த முறை தான் இவன் என் வாழ்விலேயே இருக்கிறான்.
அப்படி இருக்கையில் இவனுக்கு என்ன நினைவில் இருக்கிறது. எது இவன் கனவில் வந்தது” அனைத்தும் கேள்விகளாக இவளுக்குள் சுழன்றது. இவள் அப்படியே தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
அவள் அப்படி அமரவும் குரு வேகமாக “என்னாச்சு வேலினி?” என்றான். ஒன்னும் இல்லை என்றவள், அவன் கைகளை பிடித்துக் கொண்டு என்ன கனவு கண்ட அப்படி என்ன வந்துச்சு அதுல”, என்று கேட்க,
“இப்ப அத பத்தி பேசணுமா? வா போய் படுப்போம்” என்று இவன் சொல்ல.
“இப்ப நீ சொல்லி ஆகணும் சொல்லு” என்றதும்
“ஒன்னும் இல்ல அந்த கனவு கொஞ்சம் நீளமா இருந்துச்சு. அதுல சில விஷயம் ரொம்ப வித்தியாசமா இருந்தது. அது மட்டும் இல்லாம நிஜத்துல பாக்காத ஒரு பொண்ண கனவுல பார்த்து அவளை காதலிச்சு அவ பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தேன்” என்றான் குரு.
“அப்படி என்ன இருந்துச்சு அதுல வித்தியாசமா?”
“ஏண்டி நான் யாரையோ காதலிச்சேன்னு சொல்றேன். அதெல்லாம் கவனிக்காம. என்ன வித்தியாசமா இருந்துச்சுன்னு கேக்குற”
“குரூ ப்ளீஸ் விளையாடாத சொல்லு”, என்று அவள் சீரியஸாக கேட்க,
இவன், “நீ இப்ப எதுக்கு இவ்வளவு சீரியஸா இருக்க?” என்றான்.
“நான் சீரியஸா இல்ல. நீ சொல்லு எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு. அதனால நான் கேட்கிறேன்”
“அது ஒன்னும் இல்ல. அன்னைக்கு ஃபயர் ஆக்ஸிடன்ட் நடந்துச்சுல. அதே மாதிரி என் கனவுலயும் அந்த ஃபயர் ஆக்சிடென்ட் வந்துச்சு”
“அதுல என்ன ஆச்சு”
அவள் கேட்க, இவன் அவளை ஆழ்ந்து பார்த்த வண்ணம் இருந்தான்.
மௌன பாஷை மட்டும் அவன் பேசிக் கொண்டிருக்க, இவளுக்கு அவன் பேசும் மௌன மொழி என்ன என்ற கேள்வியை மனம் எழுப்பியது. தான் கேட்க வந்ததை மறந்து அவன் கண்கள் சொல்லும் பாஷைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்தில் மௌன மொழியை தவிர்த்து விட்டு, தன் குரல் எழுப்பி பேச ஆரம்பித்தான் குரு.
“அன்னைக்கும் இப்படித்தான் பஸ்ல வந்துட்டு இருந்தேன்.
அந்த பொண்ணு முகத்துல வெறும் பதட்டம் பயம் மட்டும் சூழ்ந்திருச்சு. ரொம்ப பதட்டமா பயத்தோட இருந்த அந்த பொண்ணுக்கு ஆறுதல் சொல்லணும் போல ஆசையா இருந்துச்சு.
ஆனா அவளை சுத்தி நண்பர்கள் கூட்டம் இருக்க, அவகிட்ட நெருங்கவே இல்ல. பஸ்ல இருந்து கீழ இறங்கி நின்னு அவளை திரும்பி பார்க்க, அவ திடீர்னு நெருப்புக்குள்ள மாட்டிக்கிட்டா.
அவளை காப்பாத்த முயற்சி பண்ண நினைக்க, அவ கையில இருந்த குழந்தைய தவறவிட்டிட்டா. அதனால அந்த குழந்தை நெருப்புக்கு இரை ஆயிடுச்சு”, என்று அவன் கூறி முடிக்கும் போது வேலினி கண்கள் அதிர்ச்சியை பிரதிபலித்தது.
இவன் உடனே, “அது வெறும் கனவுதான்”, என்று அவளை சமாதானப்படுத்தினான். அவள் “அப்புறம்”, என்று அவள் அதற்கு மேல் அவனை பேச தூண்டும் விதமாக கேள்வி எழுப்பினாள்.
“அப்புறம் அந்த பொண்ணு ரொம்ப அமைதியா பஸ்ல போயிட்டு இருந்தா. அப்ப ஒரு தடவை இன்னொரு பொண்ண திரும்பி பார்த்தா. அவ இவளை ரொம்ப கோபமாக முறைச்சு பார்த்துட்டு திரும்பிக்கவும், இவ முகத்தில் ஒரு வேதனை. அதை பார்த்தேன்.
அப்புறம் ஒரு நாள் கைல போன வச்சுட்டு ரொம்ப அழுதுட்டு இருந்தா. எதுக்குன்னு தெரியல. ஆனா அப்புறமா தான் தெரிஞ்சது எக்ஸாம்ல ஃபெயில் ஆயிட்டான்னு.
அப்புறம் ஒரு நாள் அவ பிரண்டு கிட்ட போயி நான் பேசினேன் அந்த பொண்ணு
“உங்களுக்கு நான் ஹெல்ப் பண்றேன் ணா”, அப்படின்னு என்கிட்ட சொன்னா,
“உங்க காதல் உண்மையானது நான் கண்டிப்பா உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன் ணா” அப்படின்னு அவ சொல்ல அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு.
அதுக்கப்புறம் என் ஆளு படிப்பு முடிச்சுட்டு வேலை தேட ஆரம்பிச்சா. வேலை எதுவுமே கிடைக்கல. அவளை சுத்தி சோகம் மட்டும்தான் இருந்துச்சு. கொஞ்சம் கூட அவ சிரிப்பையே என்னால பார்க்க முடியல.
அவளை சிரிக்க வைக்க நானும் ஏதேதோ செய்றேன். ஆனால் என்னன்னு எனக்கே தெரியல. பாதி மட்டும் தான் எனக்கு ஞாபகம் வந்தது. அப்புறம் ஏதோ ஒரு வேலைக்கு போறா ரொம்ப கஷ்டப்படுறா.
அங்கிருந்து அவளை வேற வேலைக்கு மாத்தணும்னு நான் ரொம்ப முயற்சி பண்றேன். ஆனா என்னால முடியவே இல்லை.நான் அவளை நெருங்கவும் இருந்து இல்லை. அதுக்கு காரணம் கேட்ட அந்த பிரண்ட் கிட்ட, இப்ப வேணாம், அவ இன்னும் குழம்பிதான் போவான்னு சொல்றேன்.
அப்புறம் திடீர்னு ஒரு நாள் அவ பாட்டி இறந்துட்டாங்கன்னு கதறி அழுகுறா. என்னால் அவளை சமாதான படுத்த முடியல. ஏன்னா என்னால அவ பக்கத்தில போகவே முடியல. அப்புறம் அவ வேலைக்கு கஷ்ட படுறான்னு நானே ஒரு இன்ஸ்டிடியூட் ஆரம்பிக்கிறேன்.
அதுல அவ படிக்கிறா. நல்லா போகஸ் பண்ணி கத்துக்கிட்டதுல வேலையும் கிடைக்குது. அடுத்த ஒரு நாள் எனக்கு அவ பிரண்ட் கிட்ட இருந்து கால் வந்துச்சு, என் ஆளோட அம்மாக்கு ஏதோ உடம்பு முடியலனு சொன்னா.
நானும் போய் பார்க்க போனா அன்னைக்கு என் கண்ணு முன்னாடி எதோ வாழ்க்கையே தொலைஞ்ச மாதிரி நடந்து வந்துட்டு இருக்கா. இதுக்கு மேல இவ்வளவு தூரத்தில் இருந்து இவளை பார்த்திட்டு இருக்க கூடாதுன்னு பக்கத்துல போய் அவகிட்ட பேசணும்னு நினைச்சேன்.
“அப்பதான் ……அப்பதான் …….என்று திணறியவன், சட்டென்று கோபம் பொங்க. “பார்த்து வரமாட்டியா? வேலினி. ஏன் சுத்தி இருக்க வண்டி கூட உனக்கு தெரியாதா? அப்படி என்ன கவனம் குறைச்சல்? ரோட்ல ஒழுங்கா வர தெரியாதா?”. என்று கோபமாக வேலினியை கத்தி இருந்தான் குரு.
அவனுக்கு அந்த கனவின் தாக்கம் அப்படி இருந்தது. உண்மையில் நிஜம் தானே அவன் கனவாக வந்திருக்கிறது. அதனை புரிந்து கொண்ட வேலினி வேகமாக அவன் தோள்களை அமர்த்தி,
“சாரி தெரியாம பண்ணிட்டேன், தெரியாம பண்ணிட்டேன்”, என்று அவனிடம் மன்னிப்பு கேட்க, அவன் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
“தயவுசெஞ்சு கவன குறைவா மட்டும் இருக்காத ப்ளீஸ்”
“சரி சரி நிச்சயம் அப்படி பண்ண மாட்டேன்”, என்று அவனுக்கு உறுதி அளித்தாள்.
இப்போது அவனைப் பார்த்தவள் “அந்த கனவுல வந்த காட்சில எல்லாம் இருந்தது நான் தான் இல்ல. நீ சொன்ன நிறைய விஷயம் எனக்கும் நடந்திருக்கு. அதெல்லாம் வச்சு தான் எனக்கு ஏதோ ஆயிடும்னு பயந்துட்ட அப்படித்தானே?” என்று அவள் கேட்க
“ஆமா உனக்கு எதாவது ஆயிடுச்சின்னா நான் என்ன பண்றது? எனக்கு யாரு இருக்கா?
தொடர்ந்து அவன் கூறிய செய்தி அவளுக்கு இப்போது இடியை அவள் தலையில் இறக்கியது போல் அவளை சுக்கு நூறாக்கியது.
அன்னைக்கு நீ கார்ல் அடிபட்டு கீழ விழுந்து ரத்தத்தில மிதந்துட்டு இருந்த, உன் கிட்ட வர நான் முயற்சி பண்ணேன். ஆனா அதுக்குள்ள என்னையும் ஏதோ இடிச்சு கீழ் தள்ளிடிச்சு. என்னை சுத்தியும் ஒரே ரத்தம்.
உன் கைய பிடிக்க முயற்சி பண்ணேன். முடியலை
பக்கத்தில தான் நீ இருந்த, உன் கண்ணு மூடி இருந்துச்சு. என்னால உன்னை அப்… அப்படி பாக்….பாக்க முடியல” திணறிய வார்த்தைகளை முடிக்க முடியாமல் அவனுக்கு அப்படி ஒரு தடுமாற்றம்.
வேலினி இதற்கு முன்பு இதே வேதனையை குருவிடம் கண்டது, அவன் தாயை பறிகொடுத்த அன்று தான்.
“எனக்கு உன்னை விட்டா யாரும் இல்லைன்னு சொல்லிட்டு நானும் கண்ணை மூடிட்டேன்……….அப்புறம் என்ன? கண்ணை முழிச்சு பாத்தா நான் வீட்டில தூங்கிட்டு இருக்கேன்” என்று அனைத்தையும் உள்ளே மறைத்துவிட்டு சிரித்தான்.
“என்ன டா இது நமக்கு இப்படி ஒரு கனவுன்னு தோனுச்சு. ஒரு பொண்ண லவ் பண்ணி அவளுக்காக செத்துப் போற அளவுக்குனு நினைச்சேன். அதுவும் எனக்கு யாரும் இல்லைன்னு வேற சொல்றேன்..” என்று சிரித்தவன்,
“பாத்தா உண்மையிலேயே இப்படி ஒரு பொண்ணு என் முன்னாடி வந்து நிக்கிறா. அவளை பாத்ததும் பயந்து பாக்காம போகனும்னு தான் நினைச்சேன். ஆனா அப்படி விட்டிட்டு போக முடியல. அதான் சரண்டர் ஆகிட்டேன்….
ஆனா கனவுல உன்னை விட்டா யாரும் இல்லைன்னு சொல்லும் போது புரியல. இப்போ புரியுது அம்மா என்னை சீக்கிரம் விட்டிட்டு போயிருப்பாங்கன்னு” என்றவன் குரல் கலங்கலாக ஒலித்தது.
வேலினிக்கு அத்தனையையும் விளங்கியது.
ஒன்றை தவிர, “தனக்கு ஒன்று என்றால் நிச்சயம் இவன் தாங்க மாட்டான் தான். அதே சமயம் இவனுக்கு ஏதாவது என்றால் நான் என்ன செய்வேன்?” என்று இவள் மனம் அடித்துக் கொண்டது.
வருவாள்….
மகாஆனந்த்.✨
