Meendum Orumurai -17
பாகம்-17
காலை எழுந்ததில் இருந்து பூஜை அறையில் தான் இருந்தாள் வேலினி. குரு எழுந்ததும் அவளை தான் தேடினான். அவள் பூஜை அறையில் இருக்கவும் தானே இரண்டு தேநீர் கோப்பைகளை தயார் செய்தவன், அவளுக்ககாக சிறிது நேரம் காத்திருந்தான்.
ஆனால் அவள் வர நேரமாகவும் பூஜை அறையை எட்டி பார்த்தவன், அவள் அங்கிருந்து நகர்வதாக தெரியவில்லை என்றதும், தன் கோப்பையை முடித்துவிட்டு, இன்னொன்றை மூடி வைத்துவிட்டு குளிக்க சென்றான்.
அலுவலகம் சென்று ஒரு வாரத்திற்கு மேல் ஆகி இருக்க, இன்று சென்று வரலாம் என்று புறப்பட தயாராகி இருந்தான். அவன் தயாராகி வெளியில் வந்து பாரத்த பின்னும் கூட வேலினி பூஜை அறையில் தான் இருந்தாள்.
Advertisement
“என்னாச்சு இவளுக்கு”, என்று எண்ணியவாறு, உள்ளே எட்டிப் பார்க்க, கடவுள் முன்பாக அமர்ந்திருந்தவள், விடாமல் எதையோ முனுமுனுத்துக் கொண்டிருந்தாள்.
அவள் முகமே அவனுக்கு அவள் நிலையை உணர்த்தியது. வேலினியை பயம் பீடித்துக் கொண்டது. அவளின் இன்றைய நிலைக்கு தான் நேற்று கூறிய கனவு தான் காரணம் என்று விளங்கிக் கொண்டவன், கண்களை ஒரு முறை இறுக மூடி திறந்தான்.
பின் அவள் அருகில் சென்றவன், அவள் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டான். அவன் அரவம் உணரந்து கூட அவள் கண்களை திறக்கவில்லை. அவள் தோளில் கை வைத்து அவளை சுயத்திற்கு அழைத்து வந்தான்.
Advertisement
அவன் கைப் பட்டதும் பட்டென, கண்களை திறந்து அவனை திரும்பி பார்த்தவள், பார்வை எண்ண செய்தி கூறியது என்று அவனுக்கு புரியவில்லை.
Advertisement
அவள் கண்கள் செய்தியை முடிக்கும் முன்பே, பாவையின் கண்ணங்கள், அவள் விழி நீரால் நனைந்தது.
“என்ன டா?” என்று இவன் பதட்டமாக, அவள் விழி நீரை துடைத்துவிட, இவளுக்கு கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது.
இவன் அதற்கு மேல் எதுவும் யோசிக்காமல் அவளை எழுப்பி அங்கிருந்து வெளியே அழைத்து வந்தான். வந்ததும் முதல் வேலையாக அவளை இறுக்கி அணைத்து கொண்டான்.
Advertisement
“இங்க பாரு வேலினி, நான் சொன்னது எல்லாம் என் கனவு அவ்ளோ தான். நீ ஏன் இப்படி அதை நினைச்சு தவிக்கிற? அது கனவு தான் கனவாவே போயிடும், புரியுதா?”
அவள் எதுவும் பேசவில்லை அவளுக்கு தெரிந்த நிஜம் அவளை அதிகம் சுட்டது. இருந்தும் தன்னை எண்ணி இத்தனை தவிக்கும் தன் கணவனை இனியும் தவிக்கவிட மனமில்லாமல் வேலினி தன் வேதனைகளை உள் இழுத்துக் கொண்டாள்.
சிறிது நேரம் அவளிடம் பேசி அவளை சமாதானம் செய்தவன், தானே அவளை அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு சென்று விட்டுவிட்டு அலுவலகம் சென்றான். போகும் வழியிலேயே இருவரும் காலை உணவை முடித்துவிட, மதியத்திற்கும் அவளுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்துவிட்டான்.
மாலை வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய குரு வேலினியின் வருகைக்காக காத்திருந்தான். காலையில் சமாளித்து விட்டோம் இப்போது எப்படி இருக்கிறாளோ? என்று எண்ணிக் கொண்டு அமரந்திருந்தான்.
ஆனால் வேலினி அவன் நினைத்ததுக்கு மாறாக சாதாரணமாக தான் இருந்தாள். உள்ளே வந்ததும் தனக்கு முன்பாக வந்து அமர்ந்திருக்கும் கணவனை கண்டு மலர்ந்த முகமாக, “என்ன சீக்கிரம் வந்திட்டீங்க?” என்றாள்.
இவனுக்கு அவளின் இந்த சாதாரண பாவனை ஒரு அமைதியை தந்தது. அவள் கடினப் பட்டு முகத்தை சாதாரணமாக வைத்துக் கொள்ளவில்லை என்று உணர்ந்ததும், குருவுக்கு இதுவே போதும் என்ற மனநிலை தான்.
“ப்ரஸ் ஆகிட்டு வரேன். எங்கயாவது வெளிய போலாமா?” என்று கேட்க அவனும் சரி என்று தலையாட்டி வைத்தான்.
இருவரும் கிளம்பி வெகுதூரம் மகிழுந்தில் பயணித்தனர். ஊரைவிட்டு சில கிலோமீட்டர் சென்ற பின் ஒரு பூங்கா முன்பாக வண்டியை நிறுத்தினான். இருவரும் ஏதேதோ பேசிக் கொண்டு வந்தனர். பழைய நண்பர்களாக அவர்கள் பேச்சு இயல்பாக வந்தது.
பூங்காவின் உள்ளே சென்று அமர்ந்து கொண்டு சில நிமிடங்கள் அமைதியாக சுற்றி நடப்ப வற்றல் கவனிக்க தொடங்கினர். அங்கிருந்த அந்த அழகான இயல்பான சூழல் இருவருக்கும் இதம் அளித்தது.
“என்கிட்ட எதுவும் கேட்பன்னு நினைச்சேன்”
“என்ன கேட்பேன்னு நினைச்ச?”
“காலைல நடந்ததை பத்தி”
“நீயே எதோ யோசிச்சு அமைதியாகிட்ட மாதிரி தெரியுது. அப்புறம் நான் எதுக்கு கேட்டுகிட்டு?”
“ம்ம்”
மீண்டும் அமைதி சில நிமிடங்கள். பின் கார் ஆரம்பித்தான். “நமக்கு எத்தனை குழந்தைங்க” என்றான், விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் மேல் பார்வை மாறாமல். முதலில் இவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
புரிந்ததும் வெட்கம் தான் வந்து தொலைத்தது. அதனை அவனுக்கு காட்டாமல் மறைத்துக் கொண்டு, அவளும் அவனை போல் இயல்பாக, “உனக்கு எத்தனை வேணும்?” என்றாள்.
பட்டென்று இவன் அவள் புறம் திரும்பியவன், அவள் முகத்தில் இருக்கும் நமட்டு புன்னகையை கண்டு, கண்ணத்தில் கை வைத்து அவளை பார்த்தான். இவளால் அவன் பார்வையை எதிர் கொள்ள முடியவில்லை. இருந்தும் விடாமல் கெத்தாக அமர்ந்து இருந்தாள்.
“இந்த ஆறுமுகம் இருக்காருல அவரு எப்பப் பாரு அவங்க பொண்ணுங்க பெருமையா பேசிறாரு. அப்படி நானும் பிற்காலத்தில எம் பொண்ணுங்க பெருமை பேசனும்னு ஆசை. அதுக்கு ரெண்டு பொண்ணுங்க பெத்து போதும்”
தன் தந்தையை தான் குறிப்பிடுகிறான் என்று புரியவும் அவனை முறைத்து பார்த்தவள், கோபம் போல் முகத்தை வைத்துக் கொண்டாள். “அது என்ன உங்க சப்போட்டிக்கு மட்டும் ஆள் சேர்க்கிறது. எனக்கு சப்போட்டிக்கு ஆள் வேணாமா?”
குரு மூஞ்சி பிரகாசம் ஆகிவிட்டது, “உனக்கும் ஒன்னு ரெடி பண்ணிடலாம். எனக்கு ஓகே தான்”,
“அது எப்படி உங்களுக்கு ரெண்டு பேரு. எனக்கு மட்டும் ஒருத்தரா? எனக்கும் ரெண்டு பேர் தான்” என்றதும் இவன் உண்மையான ஆச்சர்ய பாவத்துடன்,. நான்கு விரலை காட்டி நான்கா? என்று செய்கையில் கேட்டான்.
இவள் புன்னகை வெட்கம் எல்லாம் போட்டி போட, ஆமாம் என்று தலை அசைத்தாள். இவனுக்கு குஷி ஆகிவிட்டது.
“எப்ப ப்ளான் ஸ்டார் பண்ணலாம்” என்று கேட்க,
இவள் எதுவும் தெரியாதவள் போல், “என்ன ப்ளான்?” என்றாள்.
“அதான் பேபிஸ்” என்க, “இப்பவே கூட போலாம். போய் நமக்கு தேவையான நாளு குழந்தைங்களை தத்து எடுத்தக்கலாம். இதுக்கு எதுக்கு பிளான்” என்று கேட்கவும் இவனுக்கு புஸ் என்று ஆகிவிட்டது.
அவள் வெறுபேற்றுகிறாள் என்று புரிந்து “போடி” என்று கடுப்புடன் கூறிவிட்டு திரும்பி கொண்டான். இவளோ சத்தமாக சிரித்து இன்னும் அவனை வெறுப்பேற்றினாள்.
“அந்த அருண் சார் தான் என் மேல காரை ஏத்தினாரு இல்லை? அவரு பொண்ணை தவறவிட்டு கொன்னதுக்காக” என்று, அந்த இனிமையான சூழலை கெடுக்கும் விதமாக தான் இருக்கும், தான் கேட்கும் கேள்வி என்று தெரிந்தே கேட்டாள் வேலினி.
இவனுக்கு பட்டென்று இனிமை எல்லாம் காணாமல் போனது. “யாரையும் பாத்தியா?”
“இல்லை. யோசிச்சேன்..நீ சொன்ன கனவுக்கும் அவர் மேல உன்னோட வெறுப்புக்கும் என்ன சம்மந்தம் இருக்கும்னு…………
…….அது வெறும் கனவு தான் னா? அவர் மேல ஏன் அவ்ளோ கோபப்படனும் குரு”
“வெறும் கனவுன்னு சில விசயத்தை நான் கடந்து வந்த மாதிரி இதை கடக்க முடியலை. இப்ப நீ அவர் பேரை சொல்லும் போதே என்னை அறியாமலே என் உடம்பு இறுகுது. அதுக்கு காரணம் என்கிட்ட இல்லை. ஆனா நான் அவரை எந்த காரணத்துக்காகவும் உன்னை நெருங்க விடமாட்டேன். இப்ப கூட நீ அவரை மரியாதையா பேசின் உன் சொன்னதால இப்படி பேசுறேன். இல்லைன்னா அவன.. அவருக்கு மரியாதை குடுக்கனுமான்னு தான் எனக்கு தோனுது”
வேறு எதுவும் கேட்கவில்லை அமைதியாகிவிட்டாள் வேலினி. இவனுக்கு அந்த இறுக்கமான அமைதி சில நொடிகள் கூட பிடிக்கவில்லை.
அந்த சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டு அவன் ஏதோ பேச எண்ணி வாய் திறக்க, அதற்கு முன்பாக வேலினி வாயில் இருந்து அந்த வார்த்தைகள் உதிர்ந்தது.
“உன்னை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன் குரு. ஒருவேளை நம்ம ரெண்டு பேரும் ஒன்னாவே போகணும் விதி இருந்துச்சுன்னா கூட உனக்கு முன்னாடி இறந்து உனக்கு உயிர் போற வலிய நான் தரவே மாட்டேன்” என்று உறுதி அளிக்க, அவள் வார்த்தைகளுக்கு சம்மாக அவள் கண்கள் அளித்த உறுதியை தான் இவன் கண்டு கொண்டிருந்தான்.
அவளை அவன் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்க, இவளோ, “சரி வீட்டுக்கு போலாமா? பசிக்குது. போற வழியில சாப்பிட்டு போகலாம்”, என்று கூறி எழுந்து கொள்ள இவனும் அவளுடன் எழுந்து கொண்டான். அவள் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொள்ள, இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
இருவர் மனதும் இப்போது நிறைந்திருந்தது. “உனக்காக நான் எனக்காக நீ இது போதும் இந்த வாழ்வுக்கு” என்ற மனநிலைக்கு அவர்கள் வந்திருந்தனர். இது இந்த நிமிடம் உன்னுடன் நான் இருக்கிறேன் அதுவே எனக்கு போதுமானது என்பதுதான் வேலினியும் தற்போதைய மனநிலையாக இருந்தது.
அவள் எதிர்காலத்தை பற்றி, முக்கியமாக அவளுக்கு நடக்கப் போவதாக எண்ணிக் கொண்டிருக்கும் எந்த சம்பவத்தை எண்ணவே இல்லை. முழுக்க முழுக்க இந்த நிமிடம் தன் கணவன் ஒருவனுக்காக, அவன் தன் மேல் கொண்டிருக்கும் இந்த தீராத அன்புக்காக மட்டும் அவள் வாழ வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.
நாட்கள் கடக்க ஆரம்பித்தது வேலினி அந்த மாதத்திலேயே தன் தாயே இரண்டு முறை பரிசோதனைக்கு அழைத்து சென்றிருந்தாள். ஏற்கனவே அவருக்கு புற்றுநோய் தொற்று வருவதற்காக இருந்த அறிகுறிகள் கூட இப்போது இல்லை அவர் நன்றாக குணமாகிவிட்டார் என்று மருத்துவர் கூறிய பின்பும் அவள் விடாது அந்த தொடர் பரிசோதனை செய்த பின்னே மனநிம்மதி கொண்டாள்.
குழலினி அந்த வருடம் கல்லூரியில் நடந்த கேம்பஸில் வெற்றி கண்டு, ஒரு வேலையில் அமர்ந்திருந்தாள். நல்ல சம்பளத்தில் பணிபுரிய தொடங்கியிருக்க, அவளைக் கேட்டு அவளைப் பெண் கேட்டு குருவின் நண்பனாக கதிரவன் வந்திருந்தான். அவன் அவளை பலமுறை குருவின் வீட்டு விசேஷங்களில் கண்டிருக்க, அவனுக்கு அவளை பிடித்து போனது. இருந்தும் அவளிடம் நேரடியாக பேசி அவளை சங்கடத்திற்கு உள்ளாக்காமல், திருமண பேச்சை குரு மூலம் எடுத்தான். குரு தன் மனைவியின் குடும்பத்திடம் கதிரவனின் நல்ல குணங்களை எடுத்துக் கூறி, அவனை குழலினிக்கு திருமணம் செய்து வைத்தாள் அவள் நன்றாக இருப்பாள் என்று அவர்கள் விருப்பம் கேட்டான். கூடவே குழலினி இடமும் தான். அஆறுமுகம் தம்பதியருக்கு தன் மூத்த மாப்பிள்ளை சொன்ன பிறகு என்ன மாற்று கருத்து இருக்கப் போகிறது. மனதார கதிரவனை ஏற்றுக் கொண்டனர். குழலினி பெற்றவர்கள் எப்போது சொன்னாலும் திருமணம் செய்து கொள்ள தான் தயார் ஒ
என்று கூறிவிட்டாள். சரி என்று அப்போதைக்கு பேச்சு வார்த்தையாகஸமட்டும் அது இருந்தது.
வேலினி குரு வின் முதல் திருமண நாள் வர ஒன்றரை மாதம் இருக்கிறது, சம்மந்தி இறந்தும் இன்னும் முப்பது நாள் ஆகவில்லை. அதனால் திருமணத்தை இரண்டு மாதங்களுக்கு பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தனர்.
பவானி அம்மாவிற்கு அன்று 30வது நாள் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தனர். குருமுன்பு போல் மிகவும் சோர்ந்து காணப்படவில்லை/ அவன் இப்போது தெளிவாக இருந்தான். பெரியப்பா குடும்பத்தினர் அனைவருக்கும் அவனின் இந்த மாற்றம் நிச்சயம் நிம்மதி அளித்தது.
அவன் தன் தாயின் மரணத்தை ஏற்றுக் கொண்டான். இந்த பூமியை விட்டுச் செல்லும் போது தன் தாய் நிச்சயம் மகிழ்ச்சியும் நிம்மதியுடன் தான் சென்று இருப்பார். எந்த குறையும் அவருக்கு இருந்திருக்காது என்று முழுதாக நம்பினான்.
இனியும் குறை இல்லாமல் இருக்க, தான் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே போதும் என்று முடிவுக்கு வந்தான். சாமி கும்பிட்டு விட்டு அன்று அனைவருமே அவரவர் வீட்டிற்கு புறப்பட்டு இருக்க, அடுத்த இரண்டு நாட்கள் வேலினியும் குருவும் அலுவலகம் கல்லூரி என்று தங்கள் பணிக்கு சென்று வந்து கொண்டிருந்தனர்.
அன்று காலை பரபரப்பாக வேலினி கிளம்பி கொண்டிருக்க, கல்லூரிக்கு சில பொருட்களை அதிகமாக எடுத்துக்கொண்டு செல்வதால் குடையை மட்டும் வெளியே வைத்துவிட்டாள்.
குரு அப்போதுதான் எழுந்தவன், அவள் செய்வதை கண்டு விட்டு, “குடைய இன்னைக்கு வச்சிட்டு போகப்போற மழை பேஞ்சு ஃபுல்லா நனைய போற பாரு”என்றான்.
“இப்போதைக்கு பயங்கரமா வெயில் தான் அடிக்குது. சாயந்திரம் கிளைமேட் மாறுச்சுனா என் குரு வந்து என்னை கூட்டிட்டு போவான்”, என்று கூறிவிட்டு, அவனுக்கு உணவு சமைத்த உணவை குறிப்பிட்டு அவனை எடுத்துக்கொள்ள சொல்லி முடித்து வீட்டில் இருந்து வெளியேறினாள்.
ஆனால் அவளின் துரதிர்ஷ்டம் அவ்வளவு நேரம் கொளுத்திக் கொண்டிருந்த வெயில் சற்றென்று மொத்தமாக மாறி மழையாக பொழிய ஆரம்பித்தது.
குரு குளித்துக் கொண்டிருந்தவன் வெளியே மழை சட சடவென்று பெய்யும் சத்தம் கேட்டதும் வேகமாக குளித்து முடித்து தயாராகி காலை உணவையும் ஒரு டப்பாவில் போட்டு எடுத்துக்கொண்டு மகிழ்ந்தை இயக்கி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த தன் மனைவியின் முன்பாக நிறுத்தினான்.
அவளை பார்த்து நமட்டு சிரிப்பொன்றை சிரித்துக் கொண்டே, கண்களால் வருமாறு சைகை செய்தான்.
அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டே இவளும் மகிழுந்தின் இருக்கையில் ஏறி அமர்ந்தவள் அவனிடம் திரும்பி, “என்ன வாயோ?” என்று கேட்டு முதுகில் இரண்டு போடு போட்ட பின்பே சற்று அமைதியானாள்.
“நல்லா நனைஞ்சிட்ட வேதாள குட்டி. நம்ம வேணா வீட்டுக்கு போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரலாமா?” என்று அவன் நிதானமாக கேட்க, அவளோ அதுக்கெல்லாம் டைம் இல்லை. நீங்க என்ன காலேஜ்லயே கொண்டு போய்விடுங்க. அதுக்குள்ள டிரஸ் காஞ்சிரும்”, என்றாள்.
போகும் வழி எல்லாம் அவன் காதல் பாடலை இசைத்து அவளை சீண்டி கொண்டு வர, எப்போதும் போல் அவனிடம் போலி கோபம் காட்டிக் கொண்டு வந்தாள் வேலினி.
மகிழ்ந்து கல்லூரி வாசலில் வந்து நிற்கவும் இவள் தன் பையை எடுத்துக்கொண்டு இறங்க தயாராக, அவன் அவள் கைகளை பிடித்து இழுத்து நச்சென்று, அவள் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தான்.
“இப்படி ஈரத்தோட இருந்த பொண்டாட்டிக்கு முத்தம் கூட கொடுக்காம, இத்தனை நேரம் அமைதியா இருந்ததே பெரிய விஷயம். ஆனா என் நேரம் இப்ப கூட உனக்கு லிப்லாக் கொடுக்க வாய்ப்பு எனக்கு கிடைக்கல. காலேஜ் வாசல்ல நிக்கிறோமே. அதனால இதோட நிறுத்திக்கலாம்னு நினைக்கிறேன்” என்று உரைத்தான் குரு மயக்கும் குரலில்.
எப்போதும் இவனின் இந்த செயலுக்கு கோபம் காட்டுபவளுக்கு இன்று ஏதோ வெட்கம் சூழ்ந்து கொண்டது. அவளால் அதற்கு மேல் அவன் அங்கு இருக்க முடியாமல் சட்டென்று கதவை திறந்து கொண்டு வெளியேறிவிட்டாள்.
வருவாள்……
மகாஆனந்த்..✨
