அண்ணி ப்ளீஸ் அழாதீங்க ! சங்கடமாய் அவள் தோள் தட்டினாள் அச்சு .
எனக்கு இதெல்லாம் சத்தியமா தெரியாது அச்சு …. உங்க அண்ணன் என் மேல் இவ்வளவு கருணை காட்டி இருக்காறே …எத்தனை ஜென்மம் எடுத்து இந்த நன்றி கடனை அடைப்பேன் ! தேம்பி தேம்பி அழுதாள் .
பேசி பழகாத என் மேல் இவ்வளவு நெசமா நேசமா ? நான் எங்கேயும் இவ்வளவு அன்பை கேள்வி பட்டது கூட இல்லை .
Advertisement
கடவுள் என் வாழ்வை பறிச்ச்சுட்டாருன்னு கோபமா இருந்தேன் …பறித்ததற்கு ஈடான வாழ்வை திருப்பி கொடுத்துட்டாரு! எவ்வளவோ பாவம் பண்ணியிருந்தாலும் கொஞ்சம் புண்ணியம் பண்ணியிருக்கேன் போல ….முகத்தை மூடி அவ்வளவு அழுதாள் .
அண்ணி அண்ணாவோட காதல் பவித்ரமானது . பல போராட்டங்களுக்கு பிறகு அது கை கூடி இருக்கு . வினோத் காதலியை எங்க அண்ணன் லவ் பண்ணலை ….எங்க அண்ணன் ஒருதலையா நேசித்த கீர்த்தியை தான் வினோத் லவ் பண்ணி மேரேஜ் பண்ணினாரு .
தயவு செய்து நீங்க அவரை தெய்வமா நினைத்து பூஜை பண்ணனாம கணவனா நினைத்து அவரோட சந்தோஷமா வாழுங்க ! அவரோட காத்திருப்பு, வேதனை, வலி எல்லாம் எனக்கு தான் தெரியும் . கீர்த்தியின் கரம் பற்றி மென்மையாய் அழுத்தினாள் அக்ஷ்யா .
இல்லை ஆன்ட்டி நான் அண்ணியோட சாப்பிட்டுக்கிறேன் மதியம் உங்க கூட லன்ச் சாப்பிடறேன் . அப்போ தான் நிறைய வெரைட்டி இருக்கும் அழகாய் சிரித்தாள் .
சாப்பிட்டுக் கொண்டிருந்த சர்வணனுக்கு மனசெல்லாம் அவளையே சுற்றி சுற்றி வட்டமடித்தது .
“……………………………”
இன்னும் ஒரு வடை வச்சிக்கோங்க ! சட்னி…. இன்னும் ஊற்றினாள் .
போதும் ….போதும் ஏற்கனவே மூணு வடை சாப்பிட்டாச்சு .
இந்த வயசுல நாலு வடை சாப்பிடறதுனால ஒன்னும் ஆகிடாது .
அவன் அமைதியாகி சாபிட்டான் . மதியம் லஞ்சுக்கு வந்துடுங்க என்றாள் .
ம்ம்ம்ம்ம்ம் என்றான் அவளை பார்த்தபடி .
என்றும் இல்லாமல் அவன் பார்வையில் சிவந்து தலை கவிழ்ந்தாள் .
குழந்தைக்கு பொங்கல் ஊட்டினான் .
வேண்டாம் ….அவனுக்கு செரிக்காது ! நான் கஞ்சி செய்து ஊட்டிக்கிறேன் என்றாள் .
ம்ம்ம்ம் என்றவன் ஆபிஸ் கிளம்பினான் .
ஏதாவது வாங்கிகிட்டு வரணுமா ? ஓர விழியில் பார்த்து கேட்டான் . இன்று அவ்வளவு பொலிவுடன் இருந்தாள் . பார்வையை விலக்க சிரமப்பட்டான். உடல் நடுங்கி முறுக்கியது .
வேண்டாம் எல்லாம் இருக்கு …ஈவினிங்க் சீக்கிரம வாங்க ! அச்சுவை எங்காவது கூட்டிட்டு போய் வரலாம் என்றாள்
சரி என்றவன் குழந்தையிடம் திரும்ப …..தியானு குட்டி அப்பாக்கு பை சொல்லுங்க என்றாள் . குழந்தையின் பிஞ்சு கரம் பற்றி டாடா காண்பித்தாள் .
அச்சு எங்கே ?
மஞ்சுமா வீட்டில் இருக்கா எ.
சரி நான் கிளம்புறேன் ! கண்களால் விடைபெற்றான் தலை அசைத்து விடை கொடுத்தாள் .
அம்மா நான் ஆபிஸ் கிளம்புறேன் என்றான் சரவணன் .
சரவணனும் அஸ்வினும் ஒரே பைக்கில் கிளம்பினார்கள் .
அண்ணன் கிளம்பிட்டாரா ?
ம்ம்ம்ம் இப்போ தான்
சரி வா சாப்பிடலாம் !
நீங்க அண்ணனோட சேர்ந்து சாப்பிடறத்துக்கு என்ன ?
அதுக்கு தான் மேடம் மஞ்சுமா வீட்டில் டேரா போட்டுட்டு வாரீங்களா? பெருமையாய் நாத்தனார் கரம் பற்றினாள் .
புரிஞ்சா சரி ! குறும்பாய் கண்சிமிட்டினாள் .
பேச்சும் சிரிப்புமாய் இரு பெண்களும் உண்டு முடித்தனர். கையோடு மதிய சமையலும் செய்யத் தொடங்கிவிட்டனர் .
அண்ணி நான் தியானுவை குளிப்பாட்டவா ? ஆசையாய் கேட்ட்டாள் .
சரி ….நீயும் பிராக்டிஸ் பண்ணிக்கோ ! சீக்கிரம் அந்த நிலை வரும் .
ஐய்ய ….போங்கண்ணி வெட்கத்தில் சிவந்து போனாள் அச்சு
“………………………..”
அச்சு இன்னைக்கு லன்ச் என்கூட தான் …உரிமையாய் அழைத்தார் மஞ்சுளா .
அண்ணி நான் ஆன்ட்டி கூட சாப்பிட்டுகிறேன் நீங்க அண்ணன் வந்தா சாப்பிடுங்க ! குழந்தையை கொஞ்சிக் கொண்டே சென்றுவிட்டாள் .
“…………………………..”
அஸ்வின் வர இன்னும் நேரம் இருக்கிறதி என்று படுத்தவள் மெல்ல கண்ணயர்ந்தாள் .
ஷர்ட்டை கழட்டி ஹேங்கரில் மாட்டிவிட்டு முகம் கழுவி வந்தான்
கீர்த்தி படுத்திருந்த கோலம் கண்டு துணுக்குற்றான் .
காலையில் நல்லா இருந்தாளே ….தலை வலியா? தயங்கியபடியே மெல்ல அவள் நெற்றியை தொட்டு பார்த்தான் .
அவன் ஸ்பரிசத்தில் கண்விழித்தவள் ….சாரி என்று வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தாள்
ஹே …ரிலாக்ஸ் …முடியலைன்னா படுத்துக்கோ ! நான் எடுத்து போட்டு சாப்பிட்டுக்குவேன் என்றான் .
இல்லை எனக்கு ஒன்னும் இல்லை சும்மா படுத்தேன் அப்படியே லேசா தூங்கிட்டேன் .
வாங்க சாப்பாட்டைக்கு எடுத்து வைக்கிறேன் ! அவள் பரிமாற தொடங்கினாள் . ஏனோ அவள் சோர்வுடன் இருப்பதாக பட்டது .
நீ சாப்பிட்டியா ?
நீங்க சாப்பிடுங்க! நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன் .
மணி ஒன்னேகால் ஆகுது ! அப்புறம் எப்போ சாப்பிட்டப்போற ? அவளுக்கும் தட்டு எடுத்து வைத்தான் .
வேறு வழி இல்லாமல் அவளும் அமர்ந்தாள் .
இன்னும் கொஞ்சம் கூட்டு வச்சிக்கோ … அவளுக்கு சௌசௌ கூட்டை நிறைய அள்ளி வைத்தான் .
கேரட் தானே …..சாப்பிட என்ன ? மிச்சம் வைக்காம சாப்பிட்டு ! அவன் அதட்டலில் பிடிக்காத கேரட் பொரியலை பயந்து முழுங்கினாள்
இவ என்ன சின்ன பிள்ளை மாதிரி சாப்பிட்றா ? இவ்வளவு நாளா இதை கவனிக்காம விட்டுட்டோமே …..
நல்லா சமைக்க தெரிந்தா போதாது …நல்லா சாப்பிடவும் தெரியணும் ! இனி சரியா சாப்பிடணும் ! நீயே இந்த லட்சணத்துல சாப்பிட்டா உன்னை பார்த்து வளரும் குழந்தை எப்படி சாப்பிடுவான் ?