Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Niththirai Kalaiththa Maayaval

Niththirai Kalaiththa Maayaval 1

 

                                 நித்திரை கலைத்த மாயவள்

 

                



Advertisement

 

                                       INTRO

 

Advertisement

இந்த தளத்துக்கு நானும் என் எழுத்தும் புதுசு… இந்த தளத்தில் நான் எழுதும் முதல் கதை இது…. 

Advertisement

 

நாயகன் :அன்புகிணியான்…. பெரிய கூட்டு குடும்பத்தின் ஒரே வாரிசு… பாசத்திற்கும் நேசத்திற்கும் பஞ்சம் இல்லை…. 

 

Advertisement

நாயகி:இனியாள்…. அக்கா மாமா மட்டுமே உலகம்…. இவளுக்கும் பணத்திற்கு பஞ்சம் இல்லை… ஆனால் குடும்ப பாசம் இன்னதென்றறியாத பெண்…. 

 

இரு வேறு உலகத்தவர்… ஒரு உலகில் வாழ விதி வழி செய்தால்…. 

 

இது தான் கதை கரு….

 

கதை படிக்குறவங்க கருத்தையும் பதிவு பன்னிட்டு போங்க…. 

 

                       நித்திரை கலைத்த மாயவள்”

 

நிழல் போல நானும் நடை போட நீயும்

தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்

கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்

மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது

நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே

நாள் தோரும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே”

 

“பயணிகளின் கனிவான கவனத்திற்கு… கன்னியாகுமாரி வரை செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் இன்னும் சிறிது நேரத்தில் இரண்டாவது ப்லாட்போர்மிற்கு வந்து சேரும்”

 

இதே அறிவிப்பை ஆங்கிலம் ஹிந்தி மொழிகளிலும் பல முறை அறிவிக்க பட்டு கொண்டு இருந்தது….. 

 

முழுநேரமும் பயணிகளால் நிறைந்தே இருந்தது நிசாமுதின் ரயில் நிலையம்…… மக்களின் ஆரவார சத்தமும்… புது இடத்திற்கு வந்த சந்தோசம் சிலரில்… இவ்விடத்தை விட்டு பிரியும் சோகத்தில் சிலரும் என  பரபரப்பாய் இயங்கி கொண்டு இருந்தது… 

 

எந்த வித பரபரப்பும் இல்லாமல்…. உற்சாகமும் இல்லாமல் மனதில் சோர்வுடன் இரண்டாம் நடைமேடையில் அமர்ந்திருந்தான் அவன்…. 

 

பெயர் :அன்புக்கினியான்…. ஒரு ஆண்மகனின் சராசரி உயரமும்… ராஜா தோரணையும் என… ஆண்மை குரிய கர்வத்துடன்… அதே அளவு மனசோகத்தில்…. 

 

எதையோ ஆழ்ந்து யோசித்து கொண்டு இருந்தவனின் சிந்தனையை கலைக்கும் விதமாய் அலறியது அவனின் கைபேசி… அதை கையில் எடுத்தவன்… அழைத்தது யார் என்று பார்த்து விட்டு,  அதை அணைத்து பாக்கெட்டில் போட்டு கொண்டான்… 

 

கைபேசி அலறுவது இது முதல் முறை இல்லை….. அரைமணி நேரமாக அவனுக்கு அழைப்பு வந்து கொண்டு தான் இருக்கிறது… இவன் தான் அதை எடுக்காமல் அமைதி காக்கிறான்…. 

 

இம்முறையும் அழைப்பு ஒலிக்க… அதை கையில் ஏந்தியவன்… அதில் தெரிந்தவரின் பெயரில் திடுக்கிதவன்… உடனே அதை எடுத்தவன் 

 

“என்ன தம்பி… மாமா உனக்கு காலைல இருந்து கூப்டுறகலாம்… நீ பேசவே இல்லையாமே”

 

“மன்னிச்சிடுங்க அப்பா… கொஞ்சம் வேலை இருக்கவும் எடுக்கல” தன் மனதின் சோகத்தை பெற்றவனிடம் காண்பிக்கும் தைரியம் இல்லாமல் தன் கணீர் குரலில் பதில் அளித்தான்… 

 

“தெரியும் தம்பி…. கெளம்பிடீங்களா தம்பி… ரயிலுக்கு நேரம் ஆகுதுல… மருமகளை பத்திரமா கூட்டிட்டு வாபா”

 

தந்தையின் அன்பில் அவர் மடியில் தலை வைத்து அழவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு வராமல் இல்லை…. அதை புறம் தள்ளியவன்… 

 

“கெளம்பியாச்சு அப்பா… ரயில் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடும்… ஏறிட்டு கூப்பிடுறேன்” முடிந்த வரை அழைப்பை வைக்கவே முயன்றான்… 

 

“சரி தம்பி… மருமகளை பத்திரமா கூட்டிட்டு வா தம்பி “

 

இருக்கும் ரணத்தில் மருமகள் என்ற சொல் அவனை மேலும் கீர… அவனுள் எழுந்த இயலாமை கோவமாக உருவெடுக்க ஆரம்பித்தது….. 

 

இல்லாதவளை எங்கு இருந்து கூட்டி செல்வது…. சரி என்று பதில் அளித்து வைத்தவன்… இதற்கு மேல் யாரிடமும் பேச மனம் இல்லாமல் அலைபேசியை அணைத்து வைத்தான்… 

 

அறிவிக்க பட்ட படி ரயிலும் நடைமேடைக்கு வந்து சேர்ந்தது…. ரயிலில் ஏறவும் மனம் இல்லாமல் … இதற்கு மேல் இந்த ஊரில் இருக்க பொறுமை இல்லாமல்…..

 

 ரயிலை வெறித்தவனுக்கு.. தன் இயலாமையை நினைத்து கோவம் தலைக்கேறியது… 

 

பின் ரயிலில் ஏறியவன்… தன் இருக்கையில் பைகளை வைத்து அமர… ஜன்னல் வழியே பார்த்தவனுக்கு ஒரு புத்தக கடை தென்பட… புத்தகம் ஏதேனும் வாங்கி படித்து தன் மனதை அமைதி பெற செய்ய எண்ணினான்…. 

 

ரயிலை விட்டு இறங்கியவன்… வாங்கி ஏறும் முன் ரயில் புறப்படும் ஹார்ன் அடித்து விட… ஓடி வந்து தன் பெட்டியில் ஏறி கொண்டான்… 

 

எறியவனுக்கு யாரோ தன்னை அழைக்கும் படி தோன்ற… பேட்டியின் வாசலில் இருந்து எட்டி பார்த்தவன்… கொஞ்சம் அதிர்ந்து தான் போனான்…. 

 

                           மாயம் தொடரும் 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!