Skip to content
Post Views: 3,933
உனக்கென இருப்பேன் -26
வழிந்த நீரை துடைத்துக் கொண்டு ரிமோட்டை தாறுமாறாக மாற்றிக் கொண்டிருந்தாள் அக்ஷயா .
ஆம் ….தூங்கலாம் என்று கொட்டாவி விட்டபடி அறைக்குள் நுழைய எத்தணித்தவள் அண்ணன் அண்ணி சம்பாஷனையில் அப்படியே நின்று விட்டாள் .
இது காதல் …..இது தான் காதல் !
Advertisement
இனியாவது சந்தோஷமா அண்ணன் அண்ணி வாழட்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டாள் .
“……………………”
அண்ணி நான் மஞ்சு ஆன்டிக்கூட நைட் ஷோ சினிமாக்கு போறேன் . விஜய் சேதுபதி மூவி அண்ணி ….செம்மையா இருக்காம் .சோஷியல் மீடியாஸ் ரிவியூஸ் கூட பாசிட்டிவா இருக்கு .
Advertisement
அச்சு உங்க அண்ணனை கூட்டிட்டு போக சொல்றேன் என்றாள் கீர்த்தி .
Advertisement
வேணாம் அண்ணி ….நீங்க வீட்டுல தனியா இருப்பீங்க ! குழந்தையை வச்சிக்கிட்டு உங்களால் படம் பார்க்க முடியாது இல்லைனா பேமிலியா கூட போகலாம் .
அண்ணன் உங்க துணைக்கு இருக்கட்டும். நாங்க போயிட்டு வரோம் . மஞ்சு ஆன்டி கூட விஜய் சேதுபதி ஃபேனாம் . அவர்களுக்கு தனிமை கொடுக்க வேண்டி சினிமாவிற்கு கிளம்பிவிட்டாள் .
பெண்களை தனியே அனுப்ப மனமின்றி சரவணன் உடன் கிளம்பிவிட்டான் .
Advertisement
தியேட்டரில் எதனை ஐஸ்க்ரீம் கேட்ப ? ரகசியமாய் அவள் காதில் கேட்டான் .
அவள் புரியாது பார்க்க …வயிறுமுட்ட சாப்பிடற ….வெறித்தனமா சினிமால்லாம் பார்க்கிற ….ஐஸ்க்ரீமை வெளு வெளுன்னு வெளுக்குற . நான் மாச சம்பளக்க்காரன் மா ….லஞ்சம் வாங்கி பழக்கம் இல்லை . பாவம் போல் சொன்னான் .
இதை எல்லாம் என்கிட்டே சொல்றீங்க ? அவள் ங்கே ….என்று முழித்தாள் .
என் சம்பளத்தில் குடும்பம் பண்ண வேண்டியவட்ட தானே சொல்ல முடியும் ?
என்ன உளறிட்டு இருக்கீங்க ? சர்ரென்று ஏறிவிட்டது அவளுக்கு .
உளறல் இல்லை உண்மை ! சரி வா அவள் கரம் பற்றினான் .
ஹலோ வாட் ஐஸ் திஸ் ?பற்றியிருந்த அவன் கரத்தை சுட்டிக் காட்டினாள் .
அதனாலென்ன ? இன்னும் விடவில்லை அவன் .
எங்க அண்ணனுக்கு தெரிந்தால் அவ்வளவு தான் !
ஆல்ரெடி மச்சான் சாரோட பேசிட்டேன் அவர் அனுமதியோடு தான் உங்கிட்ட பேசுறேன் . மச்சான் சார் க்ரீன் சிக்னல் கொடுத்தாச்சு ! அவள் கரத்தை தன் கரத்தோடு வலுவாக கோர்த்து பற்றிக் கொண்டான்.
என்னங்கடா நடக்குது இங்கே …? குழம்பி போனாள்.
ரொம்ப யோசிக்காதே ….தலை வலி வரும் .வா…மூவி ஸ்டார்ட் பண்ணிட்டாங்க !
மஞ்சுளா பக்கத்தில் அச்சு அமர….அவள் பக்கத்தில் சரவணன் அமர்ந்தான்.
அச்சு …அச்சு ….ரகசியமாய் அழைத்தான் .
ச்சு…படம் பார்க்க விடாம நொய் நொய்ன்னு….அவள் முணுமுணுத்தாள்.
உன்னை பத்தி தெரிந்து தான் லவ் எல்லாம் செட்டாகாது டைரக்ட்டா மேரேஜ் பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டேன் ! அவள் கரத்தை காதலுடன் பற்றிக் கொண்டான் .
அவளுக்குள் முதல் முறையாய் மின்சாரம் பாய்ந்தது . காதல் அணுக்கள் அதன் வேலையை ஆரம்பித்து விட்டது போலும் .
“……………………………”
மோர் குழம்பு உங்களுக்கு பிடிக்கும் தானே ? சேப்பங்கிழங்கு ரோஸ்ட் நல்லா இருக்கு . இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க ! இன்னும் கொஞ்சம் சாதம் வைத்தாள் .
உன் பதி பக்தியை இப்படியா காட்டுவ ? விழி பிதுங்கி போனவன் கீர்திம்மா எய்ட்டி டூ குறையவே மாட்டேங்குது . நீ வேற சோத்தை அள்ளி அள்ளி வைக்கிற …. நான் இன்னும் வெயிட் போட்டா உனக்கு தான் கஷ்டம் பார்த்துக்கோ ! கண் சிமிட்டி அவன் சிரிக்க சிவந்து போனாள் அவன் மனையாட்டி .
அவள் வெட்கத்தை ரசித்தவன் அவளை பக்கத்தில் இழுத்து அமர்த்தி தட்டில் இருந்த மொத்த சாதத்தையும் அவளுக்கே ஊட்டிவிட்டான் .
சரியான ஆளு நீங்க …சிரித்துக் கொண்டே முறைத்தாள் .
ஆமா என் பொண்டாட்டிக்கு ஏத்த சரியான ஆளு தான் நானு !
அய்ய….பேச்சை பாரு ! அவள் முகத்தை வெட்டி திருப்பினாள் .
ஹே ….அவள் கரத்தை மென்மையாய் வருடினான் .
என்பொண்டாட்டி கையில் என்ன மேஜிக்கோ …..தேவாமிர்தமா சமைக்கிறா …அவள் கரம் பற்றி இதழ் பதித்தான் .
நிஜமா ? நம்பாத குறும்புப்பார்வை பார்த்தாள் .
எனக்கு போய் சொல்லிப் பழக்கம் இல்லை . அவன் அழகாய் கண்சிமிட்டி சிரித்தான் .
ஹலோ ….நாங்க மட்டும் மூட்டை மூட்டையா போய் சொல்றோமாக்கும் ? அவன் முதுகில் இரண்டு போட்டாள் .
நிறைய வடிவேலு கோவை சரளா காமெடி பார்ப்பியா ? அவன் கேட்ட தொனியில் கலகலவென்று சிரித்துவிட்டாள் .
இப்படி அவள் சிரித்து கொண்டிருந்தால் போதும் !அவன் மனம் சொன்னது .
“………………………….”
அந்தி பொழுது மங்கிய இரவின் ஆரம்பத்தில் தந்தையுடன் போனில் பேசிக் கொண்டிருந்த அக்ஷயாவின் எதிரில் வந்து நின்றான் சரவணன்.
சரிப்பா நான் வைச்சுடறேன் ! நாளைக்கு வந்துடுவேன் . அழைப்பை துண்டித்தாள் .
அவள் கையில் இருந்த மொபைலை பிடுங்கி தன எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தான் .
நான் நாளைக்கு ஊருக்கு போகணும் ….! சரவணன் முகம் பாராது மாடிப் படியின் கடைசியில் நின்று கொண்டு பேசினாள் .
அவன் முகம் வாடிவிட்டது . போய் தான் ஆகணுமா ? கலங்க தயாரான விழியுடன் கேட்டான் .
எனக்கு இன்னும் ஒரு செமஸ்டர் இருக்கு ….. அவள் இதழ் கடித்தாள் .
என்னை என்னவோ செய்துட்ட அச்சு நீ ! உன்னை பார்க்காம நான் …..குரல் தடுமாறி தழு தழுத்தது .
எதுக்கு இவ்வளவு இமோஷன் ? அது தான் அண்ணாகிட்ட சொல்லிடீங்க தானே …? அப்புறம் என்ன ?
அஸ்வின் தங்கை அல்லவா ? அது தான் மிகத் தெளிவாக இருக்கிறாள் .
அவ்வளவு தானா ? ஏக்கமும் எதிர்பார்ப்புமாய் கேட்டான் .
வேற ….அவள் எதையும் காட்டிக் கொள்ளவில்லை .
ஒண்ணுமில்லை என்றான் .இறுக்கமாய்.
சரி …..என்றவள் துளிர்த்த கண்ணீரை அடக்கிக் கொண்டு மாடியேறினாள் .
சட்டென்று அவள் கரம் பற்றி இழுத்தான் , எதிர்பாராத அவன் செயலில் அவன் மார்பில் மோதி நின்றாள் .
இறுக்கி அணைத்து அவள் விழி நீரை துடைத்து விட்டு கையில் மொபைலை கொடுத்து போ என்றான் .
அவனை திரும்பி பாராது கண்ணீருடன் ஓடிவிட்டாள் .
“………………………”
அக்ஷயா மனமே இல்லாமல் ஊருக்கு கிளம்பினாள் .அவள் பத்து நாட்கள் ஆனது போலவே தெரியவில்லை .அவ்வளவு சீக்கிரம் நாட்கள் உருண்டோடிவிட்டது .
கீர்த்தியும் கண்ணீருடன் அவள் கரம் பற்றினாள் .
அண்ணி என்ன இது ? விழி தளும்பிய நெறெருடன் அண்ணியை அணைத்துக் கொண்டாள் .
நீ என்னோட உடன் பிறக்காம போயிட்டியே அச்சு ? தழு தழுத்தாள் .
என்மேல் உனக்கு எவ்வளவு அன்பு,அக்கறை ! நான் நிறைய புணணியம் இருக்கேன் அச்சு ….நீ என் அம்மா அச்சு ….கட்டியனைத்துக் கொண்டு கதறிவிட்டாள் .
என்ன அண்ணி நீங்க வேற ….இப்படி சென்டியை பிழியறீங்க ?
இந்த உலகத்தில் அன்பு மட்டுமே பிரதானம்னு எங்க அப்பா சொல்வார் .
என் அண்ணன் உங்க மேல் கொண்ட அன்பு எனக்கு புரிந்தது ! அது தான் அவர் லவ்விற்கு சப்போர்ட்டா இருதேன் .
அச்சு அப்படியே எங்க சரவணன் அண்ணன் உன் மேல கொண்ட அன்பையும் கொஞ்சம் கண்சிடர் பண்ணும்மா ! கண்சிமிட்டி சிரித்தாள்.
போங்க அண்ணி ….குங்குமத்தில் குளித்தது அவள் முகம் .
சரவணன் வெளியில் வரவே இல்லை . அவள் கிளம்புவதை காணும் சக்தி அவனுக்கு இல்லை .
மஞ்சுளா கணத்த மனதுடன் விடை கொடுத்தார் . அடுத்த செமஸ்டருக்கு கண்டிப்பா வரணும் என்ற கண்டிஷனோடு விடை கொடுத்தார்.
அவர் இல்லையா ஆன்ட்டி ?
ரூமில் ஏதோ படிச்சுட்டு இருக்கான் .கூப்பிடறேன் .
வேண்டாம் ஆன்ட்டி அவரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் ! நான் கிளம்பிட்டேன்னு சொல்லிடுங்க ! விடைபெற்றுக் கொண்டாள்.
தியானேஷ் கன்னம்பற்றி அழுந்த முத்தமிட்டவள் பட்டுக்குட்டி அத்தை உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்டா செல்லம் என்றாள் .
கண்ணீர் பூக்க நாத்தனார் வடிவிலான இனிய தோழிக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தாள் கீர்த்தி.
“………………………..”
கடலூர் பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து விருத்தாசலம் பேருந்தில் ஏற்றிவிட்டவன் அச்சு விருத்தாசலம் டூ திட்டக்குடி பஸ் ஏறிடு என்றான்.
சரிண்ணா நான் பார்த்துக்கிறேன் என்று சிரித்தாள் .
தனியா போகிற பார்த்து பத்திரமா போகணும் என்றான் .
அம்மா அப்பாவை கவனிச்சுக்கோ . இந்த செம்மிலும் நல்ல மார்க் ஸ்கோர் பண்ணனும் ! இதை வச்சுக்கோ என்று ஒரு கட்டு பணத்தை கையில் திணித்தான் .
இருபதாயிரம் இருக்கலாம் !
அண்ணா எனக்கு எதுக்கு இவ்வளவு பணம் ?
இருக்கட்டும் அச்சு உன் சேவிங்க்சில் வச்சுக்கோ !
வீட்டுக்கு போயிட்டு போன் பண்ணு !
இந்த பையில் அம்மா அப்பாக்கு ஸ்னாக்ஸ் இருக்கு என்று அகர்வால் ஸ்வீட்ச்சில் வாங்கிய பையை கொடுத்து தங்கைக்கு பை சொல்லி வழி அனுப்பினான் .
பேருந்தில் அமர்ந்தவள் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது .
போனை எதுத்து பை மிஸ்டர் சரோ என்று மெசேஜ் அனுப்பினாள் .
அவளிடமிருந்து மெசேஜை அவன் எதிர் பார்த்திருக்க கூடும் !
உடனே படித்து விட்டான் என்று ப்ளூ டிக் காட்டி கொடுத்தது . அவனிடமிருந்து பதில் தான் இல்லை .
பத்து நிமிடம் பொறுத்து பார்த்தவள் “ஸாரி “ என்று அனுப்பினாள் .
எதுக்கு ? என்றது அவனது பதில் .
காதலில் சிக்கி எங்க அண்ணன் சின்னாபின்னம் ஆனது வரை போதும் !
ஒரு காதல் கொடுத்த வலியே எங்க குடும்பத்தை ஆட்டி படைச்சுடுச்சு .
“நானும் லவ் என்று போய் நிற்க விரும்பலை “
தெரியும் ! அதனால் தான் உன்கிட்ட லவ் சொல்லாமல் உங்க அண்ணன்கிட்ட பொண்ணு கேட்டுட்டேன் . வீட்டில் கலந்து பேசிட்டு சொல்றேன்னு சொல்லியிருக்கார் .
எங்க வீட்டில் என்ன முடிவு சொல்றாங்களோ அது தான் என் முடிவு !
தெரியும் என்றான் ….சற்று பயத்துடன் .
“……………………………..”
அச்சு இல்லாம வீடே கலையிழந்து போயிருக்குங்க ….புலம்பினாள் கீர்த்தி ,
ம்ம்ம்ம்ம்ம் என்றான் ஆமோதிப்பாய் !
ரொம்ப நல்ல பொண்ணு ! இன்டிரஸ்டிங் கேரக்டர் ….நாத்தியை புகழ்ந்து தள்ளினாள் .
அப்போ நல்ல பையன் இல்லைங்கிற ? மீசையை திருகினான் .
நான் எப்போ சொன்னேன் ? அவள் பயந்துவிட்டாள் .
அச்சு நல்ல பொண்ணுனா ….அவன் அண்ணன் மாதிரின்னு அர்த்தம் ! காலரை தூக்கி விட்டுக் கொண்டான் .
ஹைய்ய….ரொம்ப தான் …ஆளும் பேச்சும் ! நொடித்து அவள் முகத்தை திருப்பியது கண்டு கலகலவென்று நகைத்து விட்டான்.
ஆளு சோக்கு சுந்தரன் தான் ….முகவாயை தோளில் இடித்துக்கொண்டு போனாள் .
நான் சோக்கு சுந்தரன் தான் ,நீ சொப்பண சுந்தரி ….. கண்சிமிட்டி அவன் சிரிக்க அவள் முகம் சிவந்து உள்ளே ஓடிவிட்டாள் .
“………………………………”
எப்படி இருக்கா உங்கண்ணன் தேடி கட்டிக்கிட்ட மேனா மினுக்கி ?ராகம் பாடினார் சரோஜினி .
அந் மேனா மினுக்கியை உங்க மருமகள் என்றும் சொல்லலாம் ! உதட்டை பிதுக்கினாள் அச்சு .
அது கிடக்கு உன்னை நல்லா கவனிச்சு அனுப்பினாளா ? மூஞ்சை தூக்கி வச்சிகிட்டாளா ?
ம்ம்மா …..அண்ணி குணத்தில் தங்கம்! அண்ணனை தெய்வமா நினைக்கிறாங்க . உன் வளர்ப்பை அப்படி புகழ்ந்து தள்ளிட்டாங்க .
நீங்க ரெண்டு பிள்ளைகளையும் முத்தா வளர்த்திருக்கீங்களாம் !
இல்லையா பின்ன ? அதற்கும் நொடித்துக் கொண்டவருக்கு அவ்வளவு கர்வ்மாக இருந்தது .
பத்து நாளும் ஜாலியா இருந்துச்சுமா .கோயிலுக்கு போனோம் ,பீச்சுக்கு போனோம்., சினிமாக்கு போனோம் .அண்ணி சூப்பரா சமைக்கிறாங்க ! என்னை நல்லா பாரு ! நாலு கிலோ ஏறிட்டேன்னு நினைக்கிறேன் .
நாலு செட் சுடிதார் , ஹேண்ட் பேக் எல்லாம் சீமாட்டியில் வாங்கி கொடுத்தாங்க அண்ணி .இந்த பணத்தை என் செலவுக்கு கொடுத்தார் அண்ணன் .
குட்டிபையன் பேசத் தொடங்கிட்டான்மா தை த்தைன்னு என்னை விடவே இல்லை தெரியுமா ? வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தவள் இது பாரு போட்டோஸ் என்று மொபைலில் எடுத்த செல்பிக்களை தாயிடம் காட்டினாள் .
குழந்தையை பார்த்ததும் சரோஜினி மனம் சாந்தம் கொண்டது . கூடவே தன மகன் முகம் கண்டும் ! இதுவரை இல்லாத பொலிவுடன் அவ்வளவு மகிழ்ச்சியுடன் மகன் இருப்பது கண்டு அவருக்கு கண் கலங்கியது
இதுதான் சந்தர்ப்பம் என்று அச்சு அண்ணன் காதலித்த பெண் கீர்த்தி என்றும் நடந்த அனைத்தும் சொன்னாள் .
மெய்யாலுமா ? என்னை சமாதானப்படுத்த அள்ளிவிடறியா ? சந்தேகமாய் கேட்டார் .
இரு வரேன் என்று உள்ளே சென்றவள் அஸ்வின் டைரியை கொண்டு வந்து காட்டினாள் .
கீர்த்தியை மனசில் நினைச்சுகிட்டு தான் அண்ணன் கல்யாணம் வேணாமுன்னு சொன்னுச்சு தெரியுமா ? அவள் விழிகள் கலங்கியது .
சரோஜினிக்கு ஏதோ மனதை பிசைந்தது . என் பிள்ளை காதலித்தானா ? அவன் ஆசைப்பட்ட பெண்ணுக்கு அவனே கல்யாணம் செய்து வைத்தானா ? உள்ளம் நொந்து போனது அவருக்கு
குழந்தை முகமும் கீர்த்தி முகமும் அவர் கண்முன் வந்து நின்றது .
வினோ அவர் தூக்கி வளர்த்த பிள்ளை . பெரியம்மா,பெரியம்மா என்று அவர் காலை சுற்றி வளர்ந்தவன் அல்லவா ? இருக்கும் குழந்தை இறந்தவனின் அடையாளம் என்பார்கள் .
error: Content is protected !!