டேய் உனக்கு நேரமாகலையா ? கிளம்பு இங்கிருந்து …..சிரிப்புடன் விரட்டினார்.
சரவணன் எந்த பெண்ணிடமும் இப்படி உரிமையாய் சீண்டி பேசியதில்லை.
மஞ்சுளாவுக்கு மகன் நகை முகம் கண்டு அவ்வளவு ஆனந்தமாக இருந்தது .அவன் கலகல ரகம் இல்லை கொஞ்சம் அழுத்தமான ஆள். ஏதோ ஒரு நினைப்பு சடுதியில் அவருக்குள் ஒடி மறைந்தது .
“…………………..”
ரெடியா பீச்சுக்கு போகலாமா ?
ம்ம்ம்ம் நாங்க ரெடி…..ஷாலை பின் பண்ணிக் கொண்டு வந்து நின்றாள் அச்சு .
மஞ்சுமா சரவணன் கூட வராங்க ? என்று உடை மாற்ற சென்றான் .
அனைவரும் காரில் கிளமினார்கள் .
தேவனாம்பட்டினம் சில்வர் பீச் …..
சரவணன் குழந்தையோடு அலையில் கால் நனைத்து கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தான். அக்ஷ்யா மணலில் வீடு கட்டிக் கொண்டிருந்தாள்.
காலாற நடந்து வருவதாக மஞ்சுமா நடக்காத தொடங்கிவிட்டார் .