Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 1 1

அத்தியாயம்…1

கெளசல்யா சுப்ரஜா ராம

பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே

உத்திஷ்ட நர ஸார்தூல



Advertisement

கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

என்ற பக்தி பாடல்  கிருஷ்ணகிரி டவுனில்  இருந்து ஐம்பது கிலோ மீட்டர்  தொலைவில் உள்ள சீராழ்பட்டியில்(கற்பனை ஊர்) அமைந்திருந்த அந்த பிரம்மாண்டமான மாளிகையில், கடவுள் முன் நாப்பத்தியெட்டு வயதிலும் மிக இளமையுடன் இருக்கும் அந்த வீட்டின்  மூத்த மருமகள் வரலட்சுமி தன் இனிமையான குரலில் கடவுள் முன் பாடி கண் மூடியவளின் கண்ணோரம் இரு சொட்டு கண்ணீர் வர…

சட்டென்று தன் கண்ணீரை யாரும் பார்த்து விட்டார்களோ என்று சுற்றியும், முற்றியும் பார்த்துக் கொண்டே அவசர அவசரமாய் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டவளின் காதில்…

Advertisement

“என்ன இன்னுமா உன் வேண்டுதல் முடியல…? சீக்கிரம் உன் பிராத்தனை முடிஞ்சுடுச்சினா… அவங்க அவங்க அறைக்கு காப்பிய அனுப்புற சோலிய பாரு. அதுக்கு முன்ன என் கையில்ல காபி தண்ணிய   கொடுத்துட்டு போ…” என்று அதிகாரம் செய்தவர் வேறு யாரும் இல்லை. வரலட்சுமியின் மாமியார் தெய்வநாயகி.

Advertisement

தெய்வநாயகியின் சொல்லுக்கு ஏற்ப, அவர்   கையில் காபியை கொடுத்து விட்டு, அந்த வீட்டின்  இரண்டாம் மகன் சஞ்ஜீவரத்தினம், மூன்றாம் மகன் தில்லை நடராஜனின்  அறைக்கு  தயாரித்த காபியை  அந்த வீட்டில்   மேல் வேலை பார்க்கும் குந்தாணியிடம் கொடுத்த வரலட்சுமி, தனக்கும் தன் கணவருக்கும் இரு காபியை  கையில் எடுத்தவள்  வரண்டாவில் அமர்ந்து இருந்த  தெய்வநாகியை கடந்து  செல்லும் போது தன் மாமியார் சொன்ன…

“ஊமையனுக்கும்  காபியை குந்தாணி கிட்டவே கொடுத்து விடுறதுக்கு என்ன…?அந்த அறைக்கு போனாலே நேரம் சென்டு தான் வர…” என்ற மாமியாரின் பேச்சில் அடுத்த அடி எடுத்து வைக்கலாமா…? என்று வரலட்சுமி யோசித்து கொண்டே  தயங்கி நின்று விட்டாள்.

“சரி சரி  வெரசா  உன் புருஷனுக்கு  காபி தண்ணிய கொடுத்துட்டு,  நீயும் வாயில ஊத்திட்டு வேலய பாரும். இன்னிக்கு பத்திர பதிவு ஒன்னு இருக்கு. வூட்டு ஆம்பிளைங்க வெளி சோலிக்கு போகனும்.” என்று தன் இரண்டரை கட்டை குரலில் தன் மூத்த மருமகளுக்கு அதிகாரம் செய்து விட்டு , தான் அமர்ந்து இருந்த இடத்தை விட்டு எழும் போது கூட  தன் முன் இருந்த க்ளாஸை காண்பித்து…

Advertisement

 

 

[the_ad id=”6605″]

 

 

 

“போகும் போது இந்த லோட்டாவையும் எடுத்துட்டு போ.” என்று  தன் கடைசி கட்டளையும் பிறப்பித்து  விட்டு தான் தெய்வநாயகி அந்த இடத்தை விட்டு அகன்றார்.

இப்போது தெய்வநாயகி ஊமை என்று சொன்னாரே…அது வேறு யாரும் இல்லை. சங்கரலிங்கத்திற்க்கும், தெய்வநாயகிக்கும் பிறந்த அவ்வீட்டின்  மூத்த மகன் கமலக்கண்ணன் தான். மூன்று வயது வரை கமலக்கண்ணனுக்கு உள்ள குறை யாருக்கும் தெரியவில்லை. தெரிந்த பின்  விட்டு விலகவில்லை என்றாலும், அனைவரிடமும் ஒரு  ஒதுக்கம் தானாக தோன்றி விட்டது.

அதுவும் அடுத்து அடுத்து தெய்வநாயகியின் கருவறையில் உதித்த சங்கரி,சஞ்ஜீவரத்தினம், தில்லை நடராஜன்  வரவுகளின்  மூலம். கொஞ்சம் தள்ளி நிறுத்தியவர்கள்.  ஒரே அடியாக ஒதுக்கி விட்டனர்.

இந்த உரையாடல்கள் அனைத்தும் வரண்டாவில் நடந்ததால், மச்சி வீட்டில் மேல் மாடியில் தன் அறையில் இருந்து வெளி வந்து காலை நேரக்காற்றை  அனுபவிக்கும் பொருட்டு  தன் இரு கண்ணையும் மூடி, மூச்சை இழுத்து  பிடித்து தன் சுவாசத்திற்க்கு, தூய்மையான காற்றை அனுப்பிக் கொண்டு இருக்கும் போதே…

இடையில் செவிக்கு முதலில் தன் அன்னை பாடிய பக்தி பாடலும், அடுத்து அடுத்து தன் அப்பாத்தா பேசிய  விரும்பதகாத வார்த்தைகளும் விழ…

சட்டென்று தன் கண்ணை திறந்த  நம் கதையின் நாயகி மணிமேகலைக்கு, தன் அன்னையை நினைத்து கோபம் கோபமாய் வந்தது.

இவங்க நான் வாய் திறப்பதே காலையில்  சாமிக்கு  முன்னாடி பாட மட்டும் தான், என்று ஏதாவது சபதம்,  எடுத்து இருக்காங்கலோ…என்று  தினம் தினம்  தன் அன்னை பேச்சு வாங்கும் போது  எல்லாம் நினைப்பதையே இன்றும் நினைத்துக் கொண்டாள்.

அதுவும் தன் தந்தையை ஊமையன் என்று சொல்லும் போது… சொல்லும் அந்த வாயை அப்படியே கிழித்தால் என்ன…? என்று தோன்றுமே தவிர,  இவளும் இது வரை வாய் திறந்து  யாரையும் எதிர்த்து பேசியது கிடையாது.

இந்த ஊமையன் என்ற பட்ட பெயர் தன் தந்தையோடு நின்று போகாது…தங்களையும் ஊமையன் மகள். ஊமையன் மனைவி என்று ஊரில் சொன்னால் கூட பரவாயில்லை, வீட்டு ஆட்களே சொல்லும் போது தான் அவளுக்கு கை அறுந்த நிலை என்பார்களே அது போல் இருக்கும் தன் நிலையை அறவே வெறுத்தாள்.

முதலில் தான் நன்கு படித்து  நல்ல வேலையில் அமர வேண்டும். அதுவும் இந்த ஊரிலோ…இந்த நாட்டிலோ இல்லாது வெளிநாட்டில் வேலைக்கு அமர்ந்து, அங்கு இருக்கும்  வெளிநாட்டவனை மணந்து தனக்கு க்ரீன் கார்ட் கிடைத்ததும், தன் தந்தையையும் தாயையும் தன்னோடு அழைத்துக் கொள்ள வேண்டும்.

தான் பிறந்ததில் இருந்து கேட்டு வரும் ஊமையன்,ஊமையனின் மனைவி, ஊமையனின் மகள் என்ற வார்த்தைகள் காதில் விழாது தூர தேசத்திற்க்கு போக வேண்டும்

நம் நாயகி மணிமேகலைக்கு இது தான் வாழ்வின் லட்சியம். லட்சியம் என்று சொல்லிக் கொண்டு வாழ்க்கையின் வசந்தத்தை அனுபவிக்காது  வாழ்பவள் இல்லை.

லட்சியம் அது ஒரு பாட்டுக்கு இருந்தால், தான் எப்போதும் செய்யும் காலை காற்றை சுவாசித்ததும் தன் பைனாகுலோர் வழியாக பின் கட்டில்  பால் கரக்கும் செஞ்கோடையனை சைட் அடிக்க அரம்பித்தால்,  காலேஜ் போகும் வழியில் இருக்கும் டீ கடை  மாஸ்ட்டர் சேட்டன் விஜயனை அவ்வழியாக  செல்லும்  போது அவன் டீ ஆத்தும் அழகை பாராது காலேஜ் சென்று விட்டால், அன்று முழுவதும் அவளுக்கு ஏதோ இழந்தது போலவே இருக்கும்.

“படிக்கும் வயதில் படிப்பு எவ்வளவு முக்கியமோ… அதே போல் தான் சைட்  அடிக்கும் வயதில் சைட் அடிக்காது குழந்தை குட்டி பெற்ற பிறகு தன்  மகளோடவா சைட் அடிக்க முடியும்…?”

தன்னுடன் படிக்கும், தன் ஊரே ஆன, ஒரே உற்ற தோழியான வசுந்தரா  “ஏன்டி  அவன் நம்ம காலேஜ் ப்யூனுடீ. அவன கூட விட்டு வைக்க மாட்டியா…?” என்று கேட்கும்  போது எல்லாம் இப்படி தான் சொல்வாள்.

படிப்பில் கெட்டி, வீட்டு வேலையிலும் கெட்டி, வீட்டில் உள்ளவர்களிடம்  வாய் திறந்து எதிர்த்து ஒரு வார்த்தை இது வரை அவள் பேசியது கிடையாது. இனியும் பேச மாட்டாள் தான். அவள் அம்மா பேச விட மாட்டாள்.

ஆனால் மனதில் பல ஆண்டாக…. ‘நான் பேச மாட்டேன் செயல்ல நான் யாருன்னு உங்களுக்கு காட்டுறேன்.’

“தோசை மெலிசா சுட தெரியாதா…? நீ என்ன செஞ்சு என்ன கிழிக்க போறியோ…?போ.” என்று   தன் சித்திமார்கள் திட்டும் போது எல்லாம் இப்படி நினைத்துக் கொள்வாள்.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

பகையாளி குடும்பத்தை உறவாடி கெடு என்பார்கள். இவர்களோடு உறவாடி நான் இவர்களை கெடுக்க போவது கிடையாது.  ஆனால் தன் அம்மாவையும் அப்பாவையும், தன்னையும் இவர்கள்  படுத்தியதற்க்கு தக்க பதிலடிக்க கொடுத்து விட்டு தான் இந்த நாட்டை விட்டு போவேன்.

காலையில் எப்போதும்  போல் தன் அன்னை வாங்கிய பேச்சில் தன் சூடான மனதை குளிர்விக்க கைய்யோடு  எப்போதும் வைத்துக் கொண்டு இருக்கும் பைனாக்குலோர் வழியாக  நம் செங்கோடையன் பால் கரக்க ஏதுவாய் தன் வேஷ்டியை  ஒன்று சேர்த்து இடுக்கில்  சொருகி விட்டு, குத்துக்கால் இட்டு  அமர்ந்தவன்,  பால் கரக்க ஏதுவாய் தன் இரு தொடை நடுவில் பால் பாத்திரத்தை  அழுத்தி பிடித்த வாறே…

பசுவின் காம்பில் நீரை வாரி இறைத்துக் கொண்டே…பாலை கரந்துக் கொண்டு இருந்தான்.

அதுவும் அவன் ஒவ்வொரு தடவையும் நீரை பசுவின் காம்பில்  அடிக்கும் போது… அவன் ஓசை எழுப்பும் உஸ்ஸிலும், பசுவின் மடியில் இருந்து பாலை கரக்கும் போது வரும் அந்த சத்தமான சர்…சர் என்ற சத்தத்திலும் இது வரை விழுந்த வார்த்தைகள் மறைந்து மனதில் அமைதி பெற்றது என்றால்,

செங்கோடையன் இழுத்து சொறுகிய வேஷ்ட்டியின்  இடையில் தெரிந்த அவன்  சதைப்பற்றான  தொடையையும், பால் கரக்கும் போது அவன் கையின் வனப்பிலும் கண் குளிர அவள்  பார்த்துக் கொண்டு இருக்கும் போது… யாரோ மாடி படி ஏறி வரும் பாத சத்தத்தில், கீழ்நிலையில் பிடித்துக் கொண்டு இருந்த பைனாக்குலோரை  மேல் நோக்கி உயர்த்தியவள்…

“பறவை என்னம்மா  சொய்யிங்குன்னு பறக்குது.” என்று சொன்னளின் தலை தட்டியது ஒரு கை.

அந்த தலை தட்டலிலேயே வந்தது யார்…? என்று புரிந்துக் கொண்ட மணி மேகலை… “ஓ…நீ தானா…?” என்று  வசந்தராவை பார்த்து  சொன்னவள்…பின்  பைனாக்குலோரை  எப்போதும் பிடிக்கும் வாட்டில் பிடித்துக் கொண்டாள்.

“சொய்யூங்கா சொய்யூங்…இருக்குடீ உனக்கு என்னைக்காவது இருக்கு. உன் தில்லாலங்கடி வேலை வீட்ல தெரிஞ்சது…இந்த சொய்யூங் கொய்யூங் ஆக போகுது பாரு.” என்று சொன்னவளின் பேச்சில் பைனாக்லோரை தன் கண்ணில் இருந்து எடுத்தவள் அவளை பார்த்து…

“நான் யார்…?எப்படி பட்டவள் என்று தெரிவதற்க்குள்.” கையை பறப்பது போல் பாவனை செய்தவள் … “ஓடி போயிடுவேன்.”

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

“என்னவோ போடி. உனக்கு ஏற்கனவே வீட்டில் பிரச்சனை. நீயா ஏதாவது எழரைய கூட்டிக்க போறையோன்னு  தான் சொன்னேன்.”

ஆம்  வசுந்தரா எப்போதும் மணிமேகலையிடம் கூறும் வார்த்தை இது தான்.  இந்த வார்த்தையை வசுந்தரா மணிமேகலையிடம் எப்போது இருந்து   கூற ஆரம்பித்தால் என்றால்…

அவளின் பதினான்காவது வயதில் இருந்து. அதாவது அம்மணி வயதிற்க்கு வந்த அன்றிலிருந்து மணிமேகலையை பார்க்கும் போது எல்லாம் வசுந்தரா கூறும் அறிவுரைகள் இது தான்.

இருவருக்கும் அந்நாள் இப்போது நினைவுக்கு வந்து விட்டது போல்… இருவரின் நினைவலைகளும் அந்நாளில் மூழ்கி விட்டது. அன்று தான் அவளின் ஒன்பதாம் தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்தவள்…

எப்போதும் போல் அம்மா எங்கு இருப்பார்கள் என்று தேடாது நேராக  சமையல் கட்டுக்குள் நுழைந்தவளின் மூக்கில் நெய் வாசம் தூக்கலாய் நுழைய… “அம்மா இன்னைக்கு என்னம்மா  விசேஷம் பணியாரம்  சுடுறிங்க…?” என்று அன்னையிடம் கேட்டுக் கொண்டே அங்கு  தட்டில் சுட்டு போட்ட சூய்யத்தை வாயில் போட்டுக் கொண்டவள் அன்னை சொன்ன…

“உன் சித்தியோட தம்பி  பட்டணத்தில் இருந்து வர்றாங்க.”

வரலட்சுமி மகளிடம் கூட பேச்சை அளந்து தான் பேசுவாள். மகளிடம் பேசும் இந்த ஒன்று இரண்டு  வார்த்தைகள் கூட மற்றவர்களிடம் பேச மாட்டாள். அந்த மற்றவர்களில் கணவரும் அடக்கமே….

வாயில்  சூய்யத்தை  அரைத்தவள், தன் அன்னையிடம்  பேச்சில் தன் சித்திமார்களை  அரைத்து தள்ளிக் கொண்டு இருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!