Nithirai Kalaiththa Maayaval 3
இதுவரை :
தன் வீடு நோக்கி ரயிலில் செல்லும் அன்பு… எதர்ச்சியாக பெண்ணை சந்திக்க.. அவள் ரௌடிகளால் துரத்த பட… தன்னிடம் இருக்கும் குழந்தையை அன்பிடம் கொடுத்து…. தற்கொலைக்கு முயற்சிக்கிறாள்
இனி :
Advertisement
உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு காத்து காத்து நின்னேனே
Advertisement
உன் முகம் பார்த்து நிம்மதியாச்சு
Advertisement
என் மனம் ஏனோ வாடிடலாச்சு
உன்னோட பாட்டு சத்தம் சேரும் என்ன பின்னாலே
எப்போ நீ என்னை தொட்டு பேசபோரே முன்னாலே
Advertisement
அந்த ரௌடிகளிடம் மாட்டிக்கொண்டு தும்புருவதை விட… இந்த உயிரை விடுவதே மேல் என்று எண்ணியவள்…
ரயிலின் நுழைவில் நின்று கிட்டத்தட்ட விழுந்தே விட்டாள்…
அவளின் பாதங்கள் தரையை விட்டு காற்றில் படும் நேரம்… அவளின் இடையை பற்றி ரயிலின் உள் இழுத்தது அந்த வலிய கரம்….
அவள் என்ன என்று புரிந்து கொள்ளும் முன்னே அவனின் ஐந்து விரல்களும் அவளின் கன்னத்தில் பதிந்து இருந்தது….
“யாருடா அது என்ன அடிச்சது” என்ற எரிச்சலுடன் பார்க்க அங்கு அன்பு ஒரு கையில் குழந்தையுடன் மறு கை அவளை பதம் பார்த்திருக்க… ருத்திர கோவத்தில் நின்றிருந்தான்…
“அப்பா என்னா அடி ” கன்னத்தில் கை வைத்து தடவி பார்த்தாள்
அவள் யோசனையில் இருக்கும் போதே அவளின் கைகளை பற்றி முரட்டு தனமாக இழுத்தவன்… அவர்கள் நின்றிருந்த நுழைவின் பின் இருந்த கழிவறையில் அவளை தள்ளியவன்
“இங்கயே இரு… நானே கதவு தட்டி கூப்பிடாத வரைக்கும் திறந்து கிட்டு வெளியே வராத”அதட்டும் தோணியிலேயே கூறி… கதவை உள் புறம் தாழிடும் படி கூறினான்…
அவன் கூறியது போலவே உள் புறம் தாழிட்டவள்… உடல் முழுதும் நடுக்கத்துடனே நின்றிருந்தாள்….
அவன் அவளை உள்ளே தள்ளி விட்டு திரும்பிய அடுத்த நொடி அந்த ரௌடிகள் அவர்களின் பெட்டியை நெருங்கி இருக்க…பெட்டி முழுவதும் தேடி அவள் இல்லாமல் போக.. அந்த பெட்டியின் இறுதியில் இருக்கும் கழிவறை நோக்கி வந்தவர்கள்…
அவர்கள் வருவதை கண்டுகொள்ளாதது போல் நின்று கொண்டு குழந்தைக்கு வேடிக்கை காட்டி கொண்டு இருந்தவன்..
அவனை தாண்டி அடுத்த பெட்டிக்கு செல்லும் முன் தான் அங்கு ஒரு கழிவறை மூட பட்டு இருப்பதை பார்த்தவர்கள்… அதை திறக்க சொல்லி தட்ட… அது திறக்காமல் போக… அதை உடைக்க முற்படும் போது….
[the_ad id=”6605”]
“என்ன பண்றீங்க….உள்ள என்னோட மனைவி இருக்காங்க…. அவுங்க வர வரைக்கும் வெயிட் பண்ணுங்க… இல்லாட்டி பக்கத்து பெட்டில பிரீயாக இருந்தா அங்கு போங்க” என்றான் அன்பு
“ஏய்… எங்கள பாத்தா அவசரத்தை அடக்க முடியாம திரியுறவங்க மாதிரி தெரியுதா…. நாங்க ஒரு பொண்ண தேடிகிட்டு இருக்கோம்… உள்ள இருக்கறது அவளா என்று பார்க்கணும்… உன் மனைவியை வெளிய வர சொல்… உறுதி படுத்திகிட்டு போயிடுறோம்”…
ரௌடிகள் என்ற மரியாதை சிறிதும் இல்லாமல்… கழிவறைக்கு அடித்து கொள்ளும் கூட்டம் போல் அவர்களை நக்கலடித்தால்… அதில் எகுற தானே செய்வார்கள்…
அவன் யோசித்து நிற்க… அதை கண்டவர்கள்….
“என்ன ரொம்ப யோசிக்குறே…இது சரி பட்டு வராது… உடைக்கடா கதவை” என்று ஆணை இட்டான் அந்த கூட்டத்தில் ஒருவன்…..
“அவர்களை இடை மரித்தவன்… அவளை கூப்பிடுவதில் ஒன்றும் இல்லை… ஆனால் எனக்கு உங்களை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது” முகத்தை பாவமாக வைத்து கொண்டு கண்ணில் குறும்புடன் கூறியவனை என்னடா சொல்ல வர என்பதை போல் பார்க்க
“அது ஒன்னும் இல்லைங்க….. என் மனைவிக்கு அம்மை போட்டு இருக்கு… முகம் எல்லாம் போட்டு இருக்கு… அதான் ஒரு ஆண் பார்த்தால் உங்களுக்கு தானே பதிப்புனு யோசிக்குறேன்” என்று பாவமான முக பாவத்தில் கூறியவனை நம்பிக்கை இன்றி பார்த்தவர்களை
“அது மட்டும் இல்லாமல் அவளுக்கு மஞ்ச காமாலை வந்து இருக்கு… அதுலயும் உடம்பு மொத்தமும் மஞ்சளா இருக்கு… இது போதாதுன்னு கண்ணு வேற செவந்து இருக்கு… மெட்ராஸ் ஐ மாதிரி தெரியுது… நானே அவளை அவுங்க அம்மா வீட்டுல தள்ளிட்டு வர தான் போய்ட்டு இருக்கேன் ”
பொண்டாட்டியின் கொடுமையில் தவிக்கும் கணவன் போலவே பரிதாபமாக அவன் கூறவும்….
அந்த கூட்டத்தில் ஒரு அளவிற்கு மட்டுமே நம்பியதாய் பட…. அவர்களை முழுவதும் கோவுக்க அவன் கடைசியாக ஒரு குண்டை தூக்கி போட்டான்…
இவளால எனக்கு இருக்க பிரச்னை பத்தாதுன்னு…. அவள் வேற இரண்டு வராமா ஒரே இரும்பல், தும்மல்னு ஒரே உயிரை எடுக்குறா…. அதான் இப்போ புதுசா எதோ கொரோன நோய் வந்து இருக்காமே..
அதுவா என்னனு ஊருக்கு போய் தான் பாக்கணும்….
“பரவலா நான் கதவை திறக்க சொல்லுறேன்…. நீங்க பாத்துட்டு செத்துடுங்க…. அதாவது சொல்லுங்க என்றான்”
அவன் அடித்த கடைசி ஆணியில் அந்த கூட்டமே படபடத்து போக… விட்டால் போதும் என்று ஓடியே விட்டார்கள்… அதிலும் போகும் முன் அந்த கூடட்டத்தில் இருந்து ஒருவன் மட்டும் வந்து அன்பின் தோல் தட்டி
“உன்னோட நிலைமை யாருக்கும் வர கூடாது பா ” என்று அனுதாபம் வேறு கூறி விட்டு சென்றான்….
அதில் வந்த சிரிப்பை அடக்கியவன்… “லூசு பசங்கள இருப்பானுக போல… இவனுகள ஏவி விட்ட இவனுகளோட முட்டா தலைவனையும் பாக்கணும்”(பின் நாளில் அவனின் இந்த அசை நிறைவேற போவதை இன்று அவன் உணர வில்லை)….
கழிவரையின் கதவை திறந்தவன்…. அந்த பக்கம் தன்னையே முறைத்து கொண்டு நிற்பவளை பார்த்தவன்…நமட்டு புன்னகை புரிந்து… முன் நடக்க….. அவனை பின் தொடர்த்தவள் அவனை அர்ச்சித்த வாறே நடந்து கொண்டு வந்தாள்…
“எதோ காப்பாத்துறான்னு பார்த்த… இரண்டே நிமிஷத்துல என்னை எத்தனை நோயிக்கு நோயாளியா ஆகிவிட்டான்”
“மஞ்ச காமாலைனு சொல்றான்… மெட்ராஸ் ஐனு சொல்றான்… அம்மை போட்டு இருக்குனு சொல்றன்… இதுல சொன்னான் பாரு கடைசியா அதுக்காகவே அவனுக்கு பெருசா அடி படமா வழுக்கி விழணும் ஆண்டவா ”
அவர்களின் இருப்பிடம் வந்து விட… அதில் அமர்ந்தவள்… எதிரில் அமர்ந்தவனை பார்க்க பார்க்க கோவம் தான் வந்தது…. முசுடு, அரைபோதை, லூசு அவள் இஷ்டத்துக்கு மனத்தால் திட்டி கொண்டு போக
அவளின் மண் கண்ணை படித்தவன்…
“என் கைல இருந்து குழந்தையை வாங்குற எண்ணம் இல்லையா… இப்படியே உக்காந்து என்னை பார்த்துகிட்டு தான் இருக்க போறியா” மிரட்டவே செய்தான்….
குழந்தையை வாங்கிவள்… தன் மடியில் போட்டு தட்டி தூங்க வைக்க….. அவள் அடுத்து என்ன… எங்கே போவது என்ற சிந்தனையில் மூழ்க துவங்கினாள்
மறு புறம் அவனோ இறங்கியவுடன் நடக்க இருப்பவற்றை எண்ணி சிறு பயத்துடமே இருந்தான்….
இதில் சில மணி நேரம் கடந்து இருக்க… இருவரும் மறந்தும் ஒருவருடன் ஒருவர் பேசி கொள்ளவில்லை…
காத்திருந்தார் போல வந்து சேர்ந்தது அடுத்த பிரச்னை…டிக்கெட் செக்கிங் ரூபத்தில்…
வந்தவர் அன்பின் பயணசீட்டை கேட்டவர்… அன்பின் அருகில் இருந்தவளை கேட்க… அவளோ சொல்வது அறியாது முழித்தாள்
“நீங்க இவரோட மனைவி தானே…..உங்க ரெண்டு பேருக்கும் முன் பதிவு இருக்கு… ஆனால் குழந்தை” என்று இழுத்தவரின் மன ஓட்டத்தை சரியே புரிந்து கொண்ட அன்பு
[the_ad id=”6605″]
“ஆமாம் சார்…. குழந்தையை கூட்டி வர கடைசி நிமிஷத்துல தான் முடிவு பண்ணோம்… அதனால எடுக்க தவறிட்டோம்… மன்னிச்சிடுங்க”
“அதெல்லாம் செல்லாது தம்பி… குழந்தையாக இருந்தாலும் டிக்கெட் எடுக்கணும்… இப்போ அதுக்கு அபராதம் காட்டுங்க”
அபராதம் 1500ஐ கேட்க… எடுக்க சென்ற அன்பை மரித்தவள்…தன்னுடைய கைப்பையில் இருந்து 2000 தாளை நீட்ட… அதை பெற்றவர்…
“மீதம் சில்லறை இல்லை… நீங்க திண்டுக்கல்ல தானே இறங்குவீங்க… நான் அங்க குடுத்துடுறேன் ” என்றவர் குழந்தைக்கான டிக்கெட்டின் பின்னே குறித்து அதை அவளின் கையில் கொடுத்தான்….
அவர் சென்ற பின் அவளை கேள்வியாய் பார்த்தவன்…
“இப்போவே நீங்க எனக்கு ரொம்ப உதவி பண்ணிடீங்க… என் கிட்ட பணம் இருந்துது அதான் நானே கொடுத்துட்டேன்… ரொம்ப நன்றிங்க ” மொத்தமாக முடித்தாள்
சரி என்பதை போல் தலை அசைத்தவன்… எதோ கேட்க வாய் எடுக்க….
அதற்குள் தூங்கும் குழந்தை அழ ஆரம்பித்தது..
மாயம் தொடரும்…..
