Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

kavalanin kaithi aval

காவலனின் கைதி அவள் -16 (1)

காவலனின் கைதி அவள்-16(1)

“குரு, கிளம்பலாமா? தேவையானத எடுத்து வச்சுட்டியா?”, என்றான் சிவா அதிகார குறலில்.

 

எல்லாம் எடுத்து வச்சுட்டேண்ணே. வண்டி எல்லாம் ரெடியா இருக்கு“, என்றான். மூன்று டாட்டா சுமோவில் பதினைந்து ரவுடிகளுடன் வண்டியில் ஏறினர். குரு ஓட்டினான். சிவா அவன் பக்கத்தில் உட்கார்ந்தான். அவர்கள் சிட்டியை தாண்டி செல்லும்போது, குருவின் போன் அடித்தது. அவன் வண்டியை ஓட்டிக்கொண்டே எடுத்து,ஹலோ! சொல்லு“, என்றான் அதிகார குரலில்.



Advertisement

 

…….

 

Advertisement

என்னடா சொல்ற? எப்ப?”, என்று காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான். பின்னால் வந்த கார்களையும் பிரேக் போட்டு நிறுத்தினர்‌.

Advertisement

 

………

 

Advertisement

சரி, நான் உடனே வரேன்“, என்று வைத்தான்.

 

என்ன குரு? என்னாச்சு?”.

 

அண்ணே! நம்ம ஆவடியில் இருக்க குடோன்ல நெருப்பு பிடிச்சிருச்சு“, என்றான் அதிர்ச்சியுடன்.

 

எப்ப நடந்தது? எப்படி?”, என்றான் கோபமாக.

 

அதுல இருந்த சரக்கு எல்லாம் எரிஞ்சு போச்சு“, என்றான் யோசனையுடன்.

 

எவன்டா இப்படி பண்ணுனது? காவலுக்கு வச்சவனுங்க சரக்கு போட்டுட்டு மட்டையாகிட்டானுங்களா?”,  என்றான் ஆக்ரோஷமாக.

 

தெரியலணே. நம்ம ஆளுங்களுக்கு அடிபட்டிருச்சு. உயிரோட இருக்காங்களா இல்லையான்னு போய் பார்த்தா தான் தெரியும்“, என்றான் யோசனையுடன்.

 

சரி, வண்டிய திருப்பு, நாம போலாம். மிருணாவ கண்டுபிடிக்க என்ன பண்ணுனாலும், ஏதாச்சும் ஒரு தடங்கல் வந்துகிட்டே இருக்கு“, என்றான் எரிச்சலுடன்.

 

அண்ணே! நீங்க ஊட்டிக்கு கிளம்புங்க, அண்ணிய கண்டுபிடிங்க. இங்க நான் பார்த்துக்குறேன்“, என்றான் உறுதியாக.

 

இருந்தாலும் டா“, என்றான் யோசனையுடன்.

 

அண்ணே! அண்ணிய கண்டுபிடிக்கிறது தான் முக்கியம்“.

 

ம்ம்.. சரிடா, நீ இந்த அஞ்சு பேர அழைச்சிட்டு போ. நான் பின்னாடி கார்ல கிளம்புறேன்“.

 

அண்ணே, எனக்கு எதுக்கு இவனுங்க? உங்களுக்கு தான் தேவை. நான் இங்க இருக்க ஆள வச்சு பார்த்துக்குறேன்“.

 

அப்படியா சரி, இன்னொரு டாட்டா சுமோவ கொண்டு வர சொல்றேன், அதுல கிளம்பு“.

 

அண்ணே, நான் வர சொல்லிகிறேன், நீங்க கிளம்புங்க“, என்று இறங்கினான். பின்னால் வண்டியில் இருந்த அடியாட்கள் இறங்கி இவர்கள் பக்கத்தில் வந்தனர்.

 

திடீரென்று நாளு பேர் இவர்கள் வண்டி மேல் இடித்து நின்றனர். துப்பாக்கி சத்தம் கேட்டது. டேய்! ஓடாதீங்க டா“, என்று கத்திக்கொண்டே எட்டு போலீஸ் வந்தனர்.

 

[the_ad id=”6605″]

 

 

 

சிவா மற்றும் அவன் காரில் இருந்த அடியாட்களும் கீழே இறங்கினர். குரு, இவனுங்க தானே மிருணாவ துரத்துனது?”, என்றான் கோவமாக.

 

ஆமாண்ணே“, என்றான் வேகமாக.

 

டேய்! ஓடுன சுட்டுடுவேன், ஓடாத“, என்றார் ஓர் போலீஸ்.

 

சார், விட்டுங்க“, என்று அவர்களைப் பார்த்து நாளு பேரும் கெஞ்சினர்‌.

 

கான்ஸ்டபில், அவங்க கைல விளங்க மாட்டுங்க“, என்றான் முகிலன் அதிகாரமாக. மற்ற போலீஸ் நகர்ந்தனர் அவன் முன்னால் வருவதற்கு.

 

இவனுங்கள எதுக்கு பிடிக்கிற?”, என்றான் குரு அதிகாரமாக.

 

சார், இது எங்க வேலை. என்கிட்ட கேள்வி கேட்க உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்ல“, என்றான் அடிக்குரலில்.

 

டேய்! அவன் யாருன்னு தெரியுமா? குரு டா. அவன் கேட்டதுக்கு பதில் சொல்லாம, என்னடா பதில் கேள்வி கேட்குற?”, என்று கர்ஜித்தான்.

 

சிவாண்ணே! நீங்களா? உங்கள இங்க எதிர்பார்க்கல. இது உங்க காருன்னு  தெரியாது. இவனுங்கள நான் பார்த்துக்கிறேன்“, என்றான் நாளு பேரையும் முறைத்துக்கொண்டே.

 

டேய்! நீ என்ன வேலைக்கு புதுசா? உன்ன நான் பார்த்ததே இல்ல“, என்றான் உற்றுப் பார்த்தபடி.

 

ஆமாண்ணே புதுசுதான், கான்ஸ்டபிள் இவனுங்கள வண்டில ஏத்துங்க“, என்றான் அதிகாரமாக.

 

எதுக்கு இவனுங்கள பிடிச்சுட்டு போறன்னு இன்னும் நீ சொல்லவே இல்ல“, என்றான் குரு கோவமாக.

 

அது அண்ணே, ஸ்டூடன்ட்ஸ்கிட்ட போதை மருந்து வித்துருக்காங்க, அதனாலதான்“.

 

சரி, அவனுங்கள இங்கயே விட்டுடு, வேற யாரையாச்சும் அந்த கேஸ்ல தூக்கி போடு“, என்றான் அதிகாரமாக.

 

குரு என்ன பண்ற? இவனுங்கள வச்சு நாம என்ன பண்ண போறோம்?”, என்றான் சிவா வேகமாக.

 

அண்ணே, அத அப்புறம் சொல்றேன்“, என்றான் மற்றவர்களை கண்ஜாடை காட்டியபடி.

 

ம்ம்.. சரி இவங்கள விட்டுட்டு போ“, என்றான் அதிகாரமாக.

 

அண்ணே, ஆதாரம் இருக்குணே“, என்றான் பாவமாக.

 

நமக்கு என்னடா இதெல்லாம் புதுசா? வேற ஆள தூக்கி உள்ள போடு. அப்புறம் அப்படி ஆளு இல்லேன்னா சொல்லு, சில வெட்டி பயலுக தண்டமா இருக்கானுங்க அவங்கள அனுப்புறேன்“, என்றான் தோரணையுடன்.

 

அப்பொழுது ஒரு கார் இவர்கள் பக்கத்தில் வந்து நின்றது. அனைவரும் அதனை திரும்பி பார்த்தனர். ராகவ் டிரைவருக்கு பக்கத்திலுள்ள சீட்டிலிருந்து கம்பீரமாக இறங்கினான். விக்ரம் டிரைவர் சீட்டில் இருந்து சாதாரணமாக இறங்கி நின்றான்.

 

இங்க என்ன கூட்டம் கூடி வச்சிருக்கீங்க? அதுவும் ரெண்டு மணிக்கு“, என்றான் இவர்கள் பக்கத்தில் வந்து.

 

போலீசார்கள் சல்யூட் அடித்தனர். தலையை அசைத்து ஏற்றுக்கொண்டே, இங்க என்ன நடக்குது?”, என்றான் முகிலை கோவமாக பார்த்து.

 

சார், இவங்க நாலு பேரும் போத மருந்து ஸ்டூடன்ட்ஸ்கிட்ட வித்தானுங்க, அதுக்கு ஆதாரம் இருக்கு. சிவா அண்ணே அவங்க  ஆள இவனுங்களுக்கு பதுலா அனுப்புறேன்னு சொல்றாங்க“, என்றான் தயங்கியபடி.

 

ராகவ் சிவாவின் பக்கம் திரும்பி பார்த்து, என்ன சிவா சார், எதுக்கு இப்படி எல்லாம் நடுரோட்டில் நின்னு பஞ்சாயத்து பண்ணுறீங்க?”, என்றான் தோரணையுடன்.

 

நீ எப்ப ஊட்டியிலிருந்து இங்க வந்த?”, என்றான் சிவா ஆச்சரியமாக.

 

நான் எதுக்கு ஊட்டி போகனும் சிவா சார்?”, என்றான் குழப்பமாக.

 

உன் சொந்த ஊர் ஊட்டி தானே?”, என்றான் யோசனையுடன்.

 

அது என் கொள்ளுத் தாத்தா இருந்தப்ப இருந்தது. இப்ப நாங்க கொடைக்கானல்ல இருக்கோம்“.

 

அப்ப ஊட்டில உன் வீடு இருக்குன்னு, கமிஷனர் ஒரு அட்ரஸ் கொடுத்தானே“, என்றான் யோசனையுடன்.

 

அது என் கொள்ளுத்தாத்தா வீடு. அங்க நாங்க யாருமே இல்லை சிவா சார். ஆமா என்ன எதுக்கு நீங்க தேடுனீங்க?”, என்றான் கூர்மையான பார்வையுடன்.

 

மிருணாவ பத்தி தகவல் கேட்க தான், வேற எதுக்கு உன்ன தேட போறேன்“, என்றான் கெத்தாக.

 

என்ன ராகவன், கண்டுபிடிச்சிட்டீங்களா எங்க அண்ணிய“, என்றான் நக்கலாக.

 

சிவா சார் நாளைக்கு ஆபீஸ் வாங்க. அங்க பேசிக்கலாம். அப்புறம் குரு, இப்படி நக்கல் பண்ற வேலைலாம் வேணா, உங்களால முடியலன்னு தானே என் உதவி கேட்டு வந்திருக்கீங்க, அத மறந்துறாத“, என்றான் முறைப்புடன்.

 

டேய்!”, என்றனர் அடியாட்கள் சத்தமாக. 

 

உஸ்…”, என்று தன் வாயின் மேல் விரல் வைத்து காட்டிவிட்டு,இந்த பூச்சாண்டி காட்டுற வேலை எல்லாம் என்கிட்ட வேணா சரியா, சிவா சார் உங்க ஆளுங்கள அடங்க சொல்லுங்க. என்கிட்ட லைசென்ஸ் துப்பாக்கி இருக்கு. நான் யாருக்கும் கணக்கு சொல்லத் தேவையில்லை, சுட்டு போட்டு போயிட்டே இருப்பேன்“, என்றான் கோவமாக.

 

[the_ad id=”6605″]

 

 

 

டேய்! அடங்கு டா, நீ ரொம்ப ஓவரா தான் பேசுற. இருந்தாலும் மிருணாக்காக விடுறேன், மிருணாவ பத்தி உனக்கு ஏதாச்சும் தெரிஞ்சுதா?”, என்றான் கோபமாக.

 

தெரியும் சார், ஆபீஸ் வாங்க. இந்த நாலு பேரையும் இழுத்துட்டு போ“, என்றான் முகிலிடம்.

 

அவங்க நாலு பேரும் எங்களுக்கு வேணும், உங்களுக்கு ஆள் வேணும்னா எங்க ஆள அனுப்புறேன்“, என்றான் குரு முறைப்புடன்.

 

ராகவ் யோசித்தான். டேய்! ரொம்ப யோசிக்காத குருதான் சொல்றான்ல“, என்றான் சிவா அதிகாரமாக.

 

உங்க ஆளுங்க நாலு பேரு எப்ப வருவாங்க?”, என்றான் அதிகாரமாக.

 

உனக்கு எப்ப வேணும்?”.

 

காலைல 7 மணிக்குள்ள அவனுங்க வரணும்“, என்றான் முடிவாக.

 

சரி, அனுப்புறேன். மிருணாவ பத்தி இப்பவே இங்கேயே சொல்லு“, என்றான் வேகமாக.

 

சிவா சார், இது பர்சனல் விஷயம். அத நடுரோட்டுல்ல வச்சு பேச வேணா. நாளைக்கு வாங்க பேசலாம். அப்புறம் குரு உன் அதிகாரம்லா என்கிட்ட காட்டாத. முகில் எல்லா போலீசையும் அழைச்சிட்டு கிளம்பு“.

 

ஓகே சார்“, என்றான் வேகமாக. இவை அனைத்தையும் காரில் கையை கட்டிக்கொண்டு, சாய்ந்து நின்று வேடிக்கை பார்த்தான் விக்ரம். முகில் விக்ரமை பார்த்து யாரும் அறியாமல், கண்ணடித்து விட்டு கிளம்பினான்.

 

நாளைக்கு உன் ஆபீஸிக்கு வரேன்“.

 

இல்ல சார், வழக்கம்போல கமிஷனர் ஆபீஸிக்கு வாங்க. ஈவினிங் நாலு மணிக்கு அங்க வந்துடுறேன்“, என்று அதிகாரமாக சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல்  வண்டியில் ஏறினான். விக்ரமும் ஏறி காரை எடுத்தான்.

 

அண்ணே! இவனுக்கு ஓவர் திமிர்“, என்றான் போற காரை முறைத்துக்கொண்டே.

 

விடு குரு, ஆரம்பத்துல எல்லா போலீஸ்காரனும் இப்படித்தான் இருப்பான்னுங்க, நாள் ஆக ஆக மாறிடுவாங்க. சரி வா, நாம போகலாம்“, என்று ஏறினான். அடியாட்கள் அந்த நாலு பேரையும் சேர்த்து ஏற்றுக்கொண்டனர்.

 

கார் குடோனை நோக்கி சென்றது. மொத்த குடோனில் இருந்த பொருட்களும் எரிந்து இருந்தது. ஐந்து பேர் உயிர் இழந்தனர். பத்து பேர் ஹாஸ்பிடலில் இருந்தனர்.என்னடா குரு மொத்தம் இப்படி ஆயிடுச்சு? எவன் டா இப்படி பண்ணுனது? இங்க நம்ம மரம் மட்டும் இல்ல கஞ்சா, போதை மருந்து இதெல்லாம் வச்சிருந்தோம் எல்லாம் போச்சு“, என்றான் கோவமாக.

 

ஆமான்ணே, மரத்துல தீ பத்திக்க ஆரம்பிச்சுருச்சு, அனைக்கவே முடியலையான்னு ஃபயர் ஆபீஸர் சொன்னானுங்க“, என்றான் கவலையாக.

 

சரி விடு, மொத்த சரக்கும் என் தோப்பு வீட்லதான் இருக்கு. இங்க கொஞ்சம் தானே இருந்தது. இது போன போயிட்டு போகட்டும் நாம சம்பாதிச்சுக்கலாம். நல்ல வேல சிலைய இங்க வைக்கல“, என்றான் இரகசியமாக.

 

ஆமாண்ணே!”, என்றான் இரகசியமாக. பிறகு ஹாஸ்பிடல் சென்று அடியாட்களை பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்றனர்.

 

டேய்! ராக்கி, கலக்குற டா. என்ன கெத்தா பேசிட்டு வர, செம்ம டா“, என்றான் வண்டியை ஓட்டிக் கொண்டே.

 

ஈஈஈஈஈஇவன தடுக்க தானே, அவசர அவசரமா ஃப்ளைட் பிடிச்சு ஓடி வந்திருக்கோம். அவன் முன்னாடி பதட்டமாக பேசுனா கண்டு பிடிச்சிட்டுவான்ல. அதான் உஷாராயிட்டேன்“, என்றான் சிரிப்புடன்.

 

ம்ம்.. முகிலும் சொல்லக்கூடாதுடா, நல்லா நடிச்சான்“, என்றான் சிரிப்புடன்.

 

அவனுக்கு நடிக்க சொல்லியா தரனும்“, என்றான் சிரித்துக்கொண்டே.

 

ஆனா விக்கி, இப்ப அவனோட ஆளுங்க நாலு பேரு நமக்கு எதுக்குடா? அவன பத்தி தான் முழுசா நமக்கு தெரியுமே“, என்றான் யோசனையுடன்.

 

நாம விஷயத்த ஆளு வச்சு பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டோம். நமக்கு தெரியாம இன்னும் ஏதாச்சும் விஷயம் இருக்கான்னு பார்க்கனும், அதுக்கு தான்“.

 

அதுக்கு தான் நம்ம ஆளு அந்த கும்பல்ல இருக்கானே டா“.

 

அவன் அங்கேயே இருக்கட்டும் டா. அவன அடிக்கடி தொந்தரவு பண்ணா, அந்த சிவாவுக்கு சந்தேகம் வந்துரும். அதனால தான் இப்படி ஒரு ஏற்பாடு, அதுவுமில்லாம ஒதுக்கப்பட்டவனுக்கு தான் அவனோட வலி தெரியும். இப்ப நம்ம கிட்ட நாலு பேரை அனுப்பப் போறானே, அவங்க வலிய நாம கேக்கப்போறோம்அவங்க வலிய கேட்க ஆள் கிடைச்சனால, மனசுல்ல இருக்குறத கொட்ட போறானுங்க. மைனஸ் இன் டூ மைனஸ் நமக்கு பிளஸ் டா அவ்வளவுதான்“, என்றான் சிரிப்புடன்

 

சூப்பர் டா, வீட்ல போய் நல்லா ரெஸ்ட் எடுக்கணும் டா. செம்ம டயர்டா இருக்கு“.

 

ஆமாடா“, என்று சென்னையில் இருக்கும் அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.

 

மறுநாள் மூன்றரை மணிக்கே சிவா மற்றும் குரு கமிஷனர் ஆபீஸ்க்கு வந்துவிட்டனர். ஐயோ! இன்னைக்கு என்ன கலவரம் நடக்க போகுதோ தெரியல‘, என்று மனதிலே புலம்பினார் கமிஷனர்.

 

நாலு மணிக்கு சரியாக ராகவ் வந்தான். என்ன சிவா சார் முன்னாடியே வந்துட்டீங்களா?”, என்றான் பொய்யான சிரிப்புடன்.

 

[the_ad id=”6605″]

 

 

ம்ம்.. ஆமா மிருணா எங்க இருக்கன்னு சொல்லு? “, என்றான் எழுந்து. குரு மற்றும் கமிஷனர் எழுந்தனர்.

 

சொல்றேன் சார். அதுக்கு முன்னாடி நீங்க கண்டுபிடிச்ச விஷயத்த சொல்லுங்க. மிருணா வீட்டைவிட்டு, எப்ப கிளம்புனாங்க தெரியுமா?”.

 

ஒரு ரெண்டு மணி போல இருக்கும்னு நேத்து பார்த்தேல, அந்த நாலு எருமைங்கஅவனுங்க அவள துரத்திட்டு போயிருக்கானுங்க. இரண்டு போலீஸ்காரங்க மெயின் ரோட்டிலிருந்து அவள காப்பாத்தி அழைச்சிட்டு போயிருக்காங்க“, என்றான் கோவமாக.

 

நம்ம கிட்டயே நம்மல பத்தி சொல்லுது பாரு கூமுட்ட‘, என்று மனதில் நினைத்துக்கொண்டே, அந்த போலீஸ் யாருன்னு தெரியுமா?”, என்றான் பொய்யான யோசனையுடன்.

 

அது தெரிஞ்சா, உங்க கிட்டல்லாம் நாங்க ஏன் வரப்போறோம்?”, என்றான் குரு  நக்கலாக.

 

டேய்! உன்கிட்ட நேத்தே சொன்னேல்ல. இந்த நக்கலு நயாண்டி இதெல்லாம் என் கிட்ட வச்சுக்காதன்னு“, என்றான் கோவமாக.

 

டேய்!”, என்று அடிக்க வந்தான்.

 

குரூ, அமைதியா இரு“, என்று தடுத்து நிறுத்தி, நீ சொல்லு மிருணா எங்க இருக்கா?”, என்றான் ராகவிடம்.

 

சிவா சார், ரெண்டு மணிக்குன்னு சொல்லி இருக்கீங்க, எப்படியும் அந்த பொண்ணோட வீட்ல இருந்து மெயின் ரோடு நடந்து வர பதினைந்து நிமிஷம் ஆகும். இந்த பொண்ணு ஓடிவந்து இருக்கு, அப்ப பத்து நிமிஷம்னு வச்சுக்கலாம். அந்த போலீஸ் கிட்ட போயி சொல்லிருந்தா, அவனுங்க அந்த நாலு ரவுடி பசங்கள மிரட்டி அனுப்பனும். அதுக்கு ஒரு பத்து நிமிஷம் வச்சுக்கோங்க, எப்படி இருந்தாலும் அங்க இருந்து கிளம்ப ரெண்டரை மணி இருக்கும், ஃப்ளைட், டிரெயின்ல நேம் சொல்லணும், பஸ்லனா அதுல்லா சொல்லத் தேவையே இல்ல“, என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது இடையிலே,

 

நாங்க தான் அண்ணி போட்டோவ காட்டி பஸ் ஸ்டாண்ட்ல கேட்டோமே!”, என்றான் குரு வேகமாக.

 

மிருணா முகத்தை மூடி இருந்தா? இப்ப எல்லா இடத்திலேயும் பொண்ணுங்க கண்ணு மட்டும் தான் தெரியுற மாதிரி  வெளில வராங்க“.

 

ம்ம்.. அப்படியும் இருக்கலாம். இருக்க வாய்ப்பு இருக்கு“, என்றான் சிவா யோசனையுடன்.

 

மிருணாவோட ஏரியால இருந்து கிளம்புன டைம் வச்சு கால்குலேட் பண்ணி பார்த்தா, கோயம்பேடு போக எப்படியும் ஒரு மணி நேரத்துக்கும் மேல இல்ல கம்மியா கூட  ஆயிருக்கலாம். அந்த டைம்ல பெங்களூர் , மும்பை, பாண்டிச்சேரி, திருநெல்வேலிக்கு பஸ் போயிருக்கு, அப்ப இந்த நாலு ஊர்ல ஏதோ ஒரு ஊருக்கு தான் போயிருக்கனும்“, என்றான் உறுதியாக.

 

ஒருவேல முன்னாடியே புக் பண்ணி இருந்தா, கண்டிப்பா நேம் இருக்கணுமே“, என்றான் குரு வேகமாக.

 

அப்படி பேரு இருந்த தான் உங்களுக்கு தெரிந்திருக்குமே. அப்ப கண்டிப்பா புக் பண்ணி இருக்க வாய்ப்பில்ல, கிடைக்கிற பஸ்ல தான் ஏறிப் போயிருக்கணும்“, என்றான் பொய்யான யோசனையுடன்.

 

யோவ்! போலீஸு நீ சொன்ன ஊர்ல எல்லாம் பசங்க தேடினாங்க அங்க இல்ல“, என்றான் கோவமாக.

 

என்ன சிவா சார், நான் சொன்ன ஊருக்கு இங்க இருந்து டைரக்டா வானத்துல்ல இருந்தா குதிக்க முடியும். நடுவுல எத்தன ஊர் இருக்கு? அங்க எங்கேயாச்சும் இறங்கிருந்தா, அந்த ஊர்லல போய் பார்த்திங்களா?”, என்றான் கூர்மையான பார்வையுடன்.

 

சிவா குருவை யோசனையோடு பார்த்துவிட்டு, மிருணா சிட்டில வளர்ந்த பொண்ணு, அவ எப்படி கிராமம் மாதிரி இருக்க ஊர்ல இருப்பா?”, என்றான் யோசனையுடன்.

 

சிவா சார், இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல, அவங்கள அங்க போயி தேடி பாருங்க. அப்புறம் மிருணாவோட ஃப்ரெண்ட் சுதா ஹஸ்பன்ட என்ன செஞ்சீங்க?”, என்றான் அடிக்குரலில்.

 

மிருணா எங்கனு கேட்டேன், தெரியல தெரியலன்னு அந்த பொண்ணு சொல்லிட்டே இருந்துச்சு. அதான் அவ புருஷன லேசாக தட்டி, ஹாஸ்பிடல்ல படுக்க வச்சுட்டேன்“, என்றான் சத்தமாக சிரித்துக்கொண்டே.

 

ராகவிற்கு வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, சிவா சார், நீங்க இவ்ளோ முட்டாளா இருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்ல“, என்றான் நக்கலாக.

 

டேய்! எங்க அண்ணனையே முட்டாளுன்னு சொல்றியா?”, என்று சட்டையை பிடித்தான். பதிலுக்கு ராகவும் குருவின் சட்டையை பிடித்தான். கமிஷனர் பயத்தில் நடுங்கினர்.

 

டேய்! குரு விடு டா. அவன் ஏதோ சொல்ல வரான், அத முதல்ல கேளு“, என்று விலக்கிவிட்டு, “டேய்! என்னையே முட்டாள்ன்னு சொல்றியா? உன்ன“, என்று கர்ஜித்தான்.

 

தொடர்ச்சி அடுத்த லிங்க்கில்…………………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!