Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

என்னுள்ளே💞13

அத்தியாயம் _13

ஸ்வாதி  நீ ஏஜ் டிஃபரென்ஸ் பார்த்து அவனை ரிஜெக்ட் பண்றியாம்மா ….?



Advertisement

அவள் பதில் கூறாது ….கடல் அலைகளில் பார்வையை தொலைத்தாள் .

அவன் டிவோர்ஸி என்றதை உன்னால ஏற்க முடியலையா …?

வேண்டாம் ….என்னை விட்டுடுங்க ….ப்ளீஸ் ….

Advertisement

என்னை கேள்வி  கேட்டு வதைக்காதீங்க …கை கால்கள் நடுங்க …ஓடி போய் ஆட்டோவில் ஏறிக் கொண்டாள் .

Advertisement

நான் கல்யாணிம்மாக்கு என்ன பதில் சொல்ல …? கடற்கரை  மணலில் மடங்கி உட்கார்ந்தான் .

நிச்சயம் ஸ்வாதிக்கு பிரபா மீது காதல் இருக்கிறது . ஏதோ ஒன்று அவளை தடுக்கிறது .

கல்யாணி அம்மாவிடம் இப்போதைக்கு எதுவும் பேசவேண்டாம் .

Advertisement

பிரபாவிடம்  மனம் திறந்து பேச வேண்டும் . நாம் ஸ்வாதியிடம் பேசுவதை விட அவன் பேசுவது தான் சரியாக இருக்கும் .

அவன் கண்களை நோக்கும் போது அவன் காதல் உணர்ந்து அவள் சம்மதிக்க கூடும் .

போர்வைக்குள் பொதிந்து புதைந்து கதறினாள் ஸ்வாதி .

பிரபா ஸார் உங்களுக்குள்  இப்படி ஒரு வேதனையா ? என் காயமே ஆறாத போது உங்க காயத்தை நான் எப்படி ஆற்ற முடியும் ?

அழுது ஓய்ந்து களைத்து உறங்கி போனாள் .

“——“

ஒரு வாரம்  ஹோட்டலுக்கு வராமல் இருந்த பிரபா இன்று தான் ஹோட்டலுக்கு வந்தான் .

வீட்டில் அவனுடன் பேசுவது ஏதுவாக இருக்காது என்று எண்ணி ஹோட்டலுக்கு வந்தான் பாலாஜி.

என்ன பிரபா உடம்பு பரவா இல்லையா ?

இப்போ பரவாயில்லை பாலா என்றான்  பிரபா…!

உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் பிரபா .

” சொல்லுடா கேள்வியாக நோக்கினான்  பிரபா..”

ஸ்வாதிக்கு ஒரு அலையன்ஸ்  சொல்லி இருந்தேன் இல்லையா  ?

அவங்க ரொம்ப கம்பெல் பண்ணி கேக்குறாங்க . ஸ்வாதியை  ஆதவனுக்கு  ரொம்ப பிடிச்சி இருக்காம் .

ஏற்கனவே உடல் நலம் குன்றி இருந்த பிரபா பாலாவின்  பேச்சில்  ஆவேசமானான் .

உனக்கு ஏன்டா இந்த புரோக்கர் வேலை என்று கோபமாய் முறைத்தான் .

டேய் கூல் கூல் இதுக்கு ஏன் பெரிய பேச்செல்லாம் பேசுற?

நம்மால் முடிந்த ஒரு சமூக சேவை அவ்வளவுதான் கண் சிமிட்டி சிரித்தான் பாலாஜி.

டேய் போய் ஹோட்டல் வேலையை பாருடான்னா புரோக்கர் வேலை பார்க்க வந்துட்டான்  போடா டேய் சற்று காட்டமாய் கத்தினான் பிரபா .

டேய் பித்தா ஆல்ரெடி நான் சுவாதி கிட்ட பேசியாச்சு அவளும் யோசிச்சு சொல்றேன்னு சொல்லி இருக்கா .

நோ ஸ்வாதி அப்படி சொல்லி இருக்க மாட்டா… திட்டவட்டமாய் மறுத்தான் பிரபா.

அது எப்படி பித்ததா அவ்வளவு உறுதியா சொல்ற?

எனக்கு அவளை பற்றி நல்லாவே தெரியும் !

நீ அவளை  லவ் பண்றியா என்ன?

ஆமா …ஆமா! அவளை லவ் பண்றேன் …மூனு வருஷமா அவளையே நினைச்சு மனசுக்குள்ள புழுங்கிட்டு இருக்கேன்.

“லவ் பண்றன்னா அவகி ட்ட சொல்ல வேண்டியதுதானே ?”

“சொல்லணும் !”

“எப்போ இன்னும் 20 வருஷம் கழித்தா …? “

பேசணும் …என்னோட கடந்த காலத்தை அவகிட்ட சொல்லணும் . அவன் முகம் வாடியது .

அந்த கஷ்டம் எல்லாம் உனக்கு வேணாம் நான் ஏற்கனவே சொல்லியாச்சு.

என்னடா சொல்ற? சட்டென்று நிமிர்ந்து பார்த்தான் .

ஆமா ..நான் சொல்லியாச்சு அவ தான்  எந்த  பதிலும் சொல்லலை.

பாலா …!

யெஸ் … உன்னோட லேப்டாப் பாஸ்வேர்ட் பார்க்கும்போது எனக்கு புரிஞ்சு போச்சு

ஸ்வாதி மீதான உன் விருப்பம் .

அதுமட்டும் இல்லை பித்தா

அம்மாக்கு உன் லவ் மேட்டர் தெரிஞ்சிருச்சு.

” வாட் ..அதிர்ந்தான் “

என்கிட்ட போன் பண்ணி அம்மா அழுதாங்க . ஸ்வாதிகிட்ட பேசி உங்களுக்கு மேரேஜ் பண்ணி வைக்க சொன்னாங்க .

நான் நேத்து  ஸ்வாதியை  பார்த்து பேசியாச்சு.

உண்மையிலே அவளுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு ஆனா ஏதோ ஒன்று அவளை தடுக்குது .

எனக்கு தெரியும்டா நான் பாத்துக்குறேன்…நண்பனின் கரம் பற்றினான் .

பிரபா ஹார்ஷா ஹேண்டில் பண்ணாதே…!

வேணும்னா அம்மா கிட்ட சொல்லி அவங்களை  பேச சொல்லலாம்.

இல்ல பாலா நானே பேசுகிறேன்.

ஓகே பிரபா… இனி உன் வாழ்க்கையில் நல்லதே நடக்கட்டும் !

நான் கிளம்புறேன்…!

நண்பனின் கரம் பற்றி அழுத்தம் கொடுத்து விட்டு வெளியேறினான் பாலாஜி .

ஸ்வாதிக்கு அழைத்தான் மொபைல் ஸ்விச்டு ஆஃப் ஆகி இருந்தது .

ஹாஸ்டல் எண்ணிற்கு அழைத்தான் .

சோர்ந்து படுத்திருந்த ஸ்வாதியை  வார்டன் வந்து அழைத்தார் .

ஹலோ …சொல்லுங்க ! நான் ஸ்வாதி பேசறேன் …அவள் குரலிலேயே சோர்வு தெரிந்தது .

நான் பிரபா பேசறேன் .

சார் …நீங்க !

ஏய்  ..இரு ரிஸீவரை வச்சிடாதே …

அவள் நடுங்கும் கரத்துடன் ரிஸீவரை பற்றி இருந்தாள் .

கிளம்பி ஹோட்டலுக்கு வா …!

இல்லை …நான் வரலை !

வர்ற …நீ கண்டிப்பா வர்ற …!

நீ வரலைனா நான் ஹாஸ்டலுக்கு வரேன் .

இல்லை …நானே வரேன் அவள் ஒரு முடிவோடு ஒப்புக் கொண்டாள் .

என்ன தான் தைரியமாக கிளம்பி விட்டாலும் அவள் இதயதுடிப்பின் வேகம் கட்டுக்குள் இல்லாமல் எகிறி கொண்டிருந்தது .

ஹோட்டலுக்கு நுழைந்து முன்பு வேலை பார்த்த செக்ஷனில் வந்து கம்பியூட்டர் முன்னால்  அமர்ந்தாள் .

அவள் வருகையை CCTV யில் பார்த்து கொண்டிருந்தான் பிரபா .

இன்டர்காம் அலறவே …எடுத்து காதில் பொருத்தினாள் .

ஸ்வாதி நான் உன்னை வேலைக்கு வர சொல்லலை …இங்கே உனக்கு வேலை இல்லை …சற்று இறுக்கமாய் இருந்தது பிரபாவின் குரல் .

வேலை இல்லைன்னா என்னை ஏன் வர சொன்னீங்க ? நான் கிளம்புறேன் …அவள் சீட்டில் இருந்து எழுந்தாள் .

உன்னோட பேசணும் …நான் ஆபிஸ் ரூமில் இல்லை . தேர்டு ப்ளோரில் இருக்கேன் .

நான் அங்கெல்லாம் வரமாட்டேன் ..!

நீ வருவ….எனக்கு தெரியும் !

நொடிப் பொழுதில் வியர்த்து கொட்டியது அவளுக்கு .

வேறு வழியில்லை …போய் பார்ப்போம் …இன்றோடு இந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவோம் .

லிஃப்ட்டில் ஏறி தேர்டு ப்ளோர் வந்தாள் .

காரிடாரில் நின்று கொண்டிருந்தவன் …கை அசைத்து அழைத்தான் .

அருகில் சென்று நின்றாள் . மிகவும் சோர்ந்து போய் பாவமாய் இருந்தான் .

வா …என்று அறை எண் 306 க்குள் அழைத்து சென்றான்

இங்கே ஏன் …? அவள் மிரண்டாள் .

பேசணும் ..!

ஆபிஸ் ரூமிலே…அவள் குரல் பதட்டத்திலும் பயத்திலும் நடுங்கியது .

ஆபிஸ் ரூமில் வைத்து பேச முடியாது . வெளியில் கூப்பிட்டா நீ வர மாட்ட

அறை கதவை திறந்து ஏசியை ஆன் பண்ணி ஒற்றை சோஃபாவில் உட்கார்ந்தான் .

எதிர் இருக்கையை அவளுக்கு காட்டினான் .

வேலை இல்லைனு சொல்லிட்டு பேச கூப்பிட்டிருக்கீங்க ? கூறிய விழியில் சிறிதளவு நடுக்கத்துடன் அவனை நோக்கினாள் .

ஆமா …ஹோட்டலில் உனக்கு இனி வேலை இல்லை . என் வீட்டில் எனக்கு மனைவியா என்னை கவனித்து கொள்ளும் பெரிய வேலை உனக்கு இருக்கு .

அதிர்ந்து நோக்கினாள் .

என்னடா …உடம்பு சரியில்லாம மூளை குழம்பிடுச்சான்னு யோசிக்கிறியா ?

தெளிவா தான் சொல்றேன் .  நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன் . சின்ன பையன் மாதிரி பிரபோஸ் பண்ண விரும்பல ….நேரடியா சொல்றேன் …உன்னை மேரேஜ் பண்ணிக்க ஆசைப் படறேன் .

ஸாரி ..நீங்க என்னை விரும்பினால் போதாது …நானும்  உங்களை விரும்பணும் .

எனக்கு உங்க மேல எந்த விருப்பமும் இல்லை …சற்று நிமிர்வாக அழுத்தமாகவே சொன்னாள் .

பொய் …!

நான் ஏன் உங்ககிட்ட பொய் சொல்ல போறேன் ?

அப்படியா …என் கண்ணை பார்த்து சொல்..!

விருப்பம் இல்லாதவள் என் தீண்டலில் கரைந்து போவாளா ? என் முத்தத்தில் தொலைந்து போவாளா ?

அவளுக்கு உடல் தள்ளாட தொடங்கியது .

இவனுடன் பேச இயலாது என்று கதவை நோக்கி போனாள் .

ஸ்வாதி …இது ஆட்டோமேட்டிக் லாக் . உன்னால் கதவை திறக்க முடியாது.

அப்படியே நின்றாள் .

பயந்துட்டியா ?

நான் ஏன் பயப்படணும் ? நீங்க ஒன்னும் தவறானவர் இல்லை .

அப்படியா …? அப்போ எனக்கு பதில் சொல்லிட்டு போ …!

சோஃபாவில் சாய்ந்து கண் மூடி இருந்தான் .

பதில் சொல்லு …பதில் சொல்லுன்னா …என்ன சொல்றது ?

பிடிக்கலைன்னா விட்டு தொலைக்க வேண்டியது தானே ..? ஏன் உயிரை வாங்கறீங்க …! எரிந்து விழுந்தாள் .

என்னை பிடிக்கலைன்னா என்ன காரணம் ?

என்னோட ஏஜ்ஜா ? நான் டிவோர்ஸிங்கிறதா ?

ஏன் ஸார் கூப்பிட்டு வைத்து டார்ச்சர் பண்றீங்க …! அவள் கலங்கிய விழிகளுடன் முறைத்தாள் .

என்னை பிடிக்கலைன்னா அவனை பிடிச்சிருக்கா ? அவன் கண்கள் உக்கிரமாய் இருந்தது .

எவன் ? வெடுக்கென நிமிர்ந்தாள் .

ஹோட்டலில் வந்து கன்னத்துல தட்டிட்டு போனானானே அவன்  .

அதெல்லாம் உங்களுக்கு தேவை இல்லாத விஷயம் .

எது எனக்கு தேவை இல்லை …?

பிடிக்கலைன்னு பளிச்ச்சுன்னு சொல்லிட்டேன் …அப்புறம் என்ன..?

அது தான் ஏன் பிடிக்கல ?

நான் உனக்கு பொருத்தம் இல்லாதவன்னு நினைக்கிறியா ? இவன் ஏற்கனவே ஒருத்தி கூட வாழ்ந்த எச்சில் இலை என்று ஒதுக்குறியா …? அவள் கன்னம் பற்றி இறுக்கி இருந்தது அவன் விரல்கள் .

நீங்க மட்டும் எச்சில் இலை இல்லை …நானும் தான் …அவன் கரத்தை விலக்கி ஜன்னலோரம் போய் நின்று கொண்டாள் .

ஆடி போய் நின்றான் பிரபா .

என்ன சொல்ற …ஸ்வாதி …!

ஆமாம் ….பத்மஜா பண்ணின தப்பை நானும் பண்ணிட்டு ஏழு வருஷமா நடை பிணமா வாழ்ந்துகிட்டு இருக்கேன் …பொங்கிய கண்ணீரை துடைத்து கொண்டே ….ஜன்னலில் முகம் புதைத்தாள் .

என்ன சொல்ற ..? ஏழு வருஷம் முன்னாடின்னா …உன்னோட பதினேழு வயசிலா ?

ஆம் என்பதாய் தலை அசைத்தாள் .

அப்போவே உனக்கு மேரேஜ் ஆகிடுச்சா ? விக்கித்து போனான் .

நான் மேரேஜ் ஆனதுன்னு சொல்லலையே ….அவனை பார்க்க இயலாமல் முகம் இறுகி நின்றாள் .

——-தொடரும் ——-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!