Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

என்னுள்ளே💞14

அத்தியாயம் -14

என்ன சொல்ல போகிறாளோ என்று திக்… திக் என்றது பிரபாவுக்கு.

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் கிரான்ட் ஃபினாலேக்கு ஒரு இசையை போட்டு டென்ஷனை ஏற்றுவார்களே  அப்படி இருந்தது பிரபாவின் இதய துடிப்பின் தாள லயம்.



Advertisement

நீ… என்ன சொல்ற…? தட்டு தடுமாறினான்.

சொல்றேன்…  சொல்லி முடித்து இன்றைக்கே  முற்றுப்புள்ளி வைத்துடறேன்.

அவன் முகம் பாராது ஜன்னல் அருகில் நின்று சாலையை வெறித்தால்

Advertisement

எனக்கு திருவண்ணாமலை பக்கம் சாலவேடு தான் சொந்த ஊர்.

Advertisement

நான், என் அம்மா சுகந்தி, என் அப்பா தணிகாசலம், என் தம்பி விவேக் இது தான் எங்க குடும்பம்.

அவள் கண்கள் வழியே காட்சி விரிந்தது.

நடுத்தர குடும்பம் என்று கூட சொல்ல முடியாது. அதற்கும் கீழே… தினக்கூலி குடும்பம்.

Advertisement

சொந்தமாய் ஒரு ஓட்டு வீடு மட்டுமே உண்டு… நிலபுலன் ஏதும் இல்லை.

தணிகாசலம் தச்சு வேலை செய்பவர். ஊரிலேயே ஆக சிறந்த குடிமகன். எனவே அவர் வருமானம் நாட்டை காக்க டாஸ்மாக்கில் சரக்கு வாங்கவே சரியாக இதுக்கும்.

எப்போதாவது சண்டை போட்டு மண்டை உடைத்து ஐந்து பத்து வாங்குவார்  சுகந்தி.

சுகந்தி அந்த கிராமத்தில் பெரிய எலிசபெத் டெய்லர்(பெரிய டெய்லர் ப்பா )

அவர் காலாட்டி துணி தைத்து  சம்பாதிக்கும் காசில் தான் அடுப்பில் பூனை தூங்காமல் இருக்கிறது.

சுகந்தியின் கஷ்டம் உணர்ந்து பிள்ளைகள் இருவரும் நன்கு படித்தனர்.

எவ்வளவு கஷ்டத்திலும் ஐந்தாம் வகுப்பு  வரை பக்கத்து ஊரிலுள்ள நர்சரி பள்ளியில் படிக்க வைத்தார் சுகந்தி.

தணிகா தான் அந்த தெருவில் உள்ளவர்களுக்கு சிறந்த என்டர்டெயினர். சரக்கு உள்ளே போனால் நெஞ்சுக்கு மேல் ஏத்தி கட்டிய லுங்கியுடன் அடிக்காத லூட்டி எல்லாம் அடிப்பார்.

அவமானத்தில் குறுகி போவார் சுகந்தி. குழந்தைகள் அதை பார்த்து வளர்ந்தது துரதிர்ஷ்டம்.

வீடு எந்நேரமும்  மயான அமைதியோடு தான் இருக்கும்.

வீட்டில் சிறிய கலைஞர் தொலைக்காட்சி உண்டு. அதுவும் சுகந்தி பெரிய மனது பண்ணி என்றாவது வைத்தால் தான் உண்டு.

இப்படிபட்ட வெறுமையான, இறுக்கமான சூழ்நிலையில் தான் வாழ்ந்து வந்தார்கள்.

ஸ்வாதி படிப்பில் கெட்டி. … அரசு உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தாள். அவள் தம்பி விவேக் பக்கத்து ஊரில் உள்ள செந்தமிழ்  மெட்ரிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்தான்.

குடித்து விட்டு வந்து வீட்டிலுள்ள பொருட்களை போட்டு உடைத்து கொண்டிருந்தார் தணிகா.

கணவனிடம் போராடி மல்லுக்கு நின்று கொண்டிருந்தார் சுகந்தி. கணவன் மனைவி சண்டை என்றாலும் குடிகாரனுடன் சண்டை அல்லவா… அவர் போதையில் எக்கு தப்பாய் பேசி… சுகந்தியின் அடர்ந்த கூந்தலை பற்றி இழுத்து விலாவில் உதைத்து கொண்டிருந்தார்.

அக்கம் பக்கத்தினர் பிக்பாஸ் பார்ப்பது போல வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனரே தவிர… யாரும் விலக்கி விட முன் வரவில்லை.

தாயின் கதறல் கேட்டு… விவேக் பயந்து அழ ஆரம்பித்து விட்டான்.

அப்பா… அம்மா பாவம் விடுப்பா… ஸ்வாதி கெஞ்சி கொண்டிருந்தாள்.

எதற்கும் செவி மடுக்காத தணிகா தன் வீர பிரதாபத்தை மனைவியிடம் காட்ட …. என்ன செய்வது என்று புரியாத ஸ்வாதி தலையை இடித்து சரிந்து கொண்டிருந்த ஓட்டை எடுத்து தந்தையின் தலையில் ஓங்கி அடித்தாள்.

அம்மா…. என்னை கொல்றாளே என்று மயங்கி சரிந்தார் தணிகா.

ஸ்வாதி என்ன பண்ணின… அய்யோ ரத்தம் ஆறா ஓடுதே… சுகந்தி பதை பதைக்க… அக்கம் பக்கம் கூடியது.

உள்ளூரில் சிறிய மெடிக்கல் வைத்து நடத்தி கொண்டிருக்கும் பெரிய டாக்டர் (இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரையாம் )வந்து வலிக்கு ஊசி போட்டு உடைந்த மண்டைக்கு ஆறு தையல் போட்டு போனார்.

ஸ்வாதியை பஜாரி என்று தெருவே திட்டி தீர்த்தது.

இருக்கிற நிலையில இந்த ஆளை அடித்து மண்டையை உடைத்து எனக்கு ஐநூறு ரூபாய் செலவு வச்சிட்டியே என்று மகளை வசை பாடினார் சுகந்தி.

கட்டினவனும் சரியில்லை பெத்ததும் சரியில்லை… இந்த கொடுமையை பார்க்காம எப்போ நிம்மதியா கண்ணை மூடுவேனோ என்று சுகந்தி புலம்ப ஆரம்பிக்க… நத்தையாய் சுருண்டு போனாள் ஸ்வாதி.

அன்று முதல் எல்லோரை விட்டும் விலகியே இருக்க ஆரம்பித்தாள்.

வீட்டு சூழ்நிலை கொடுத்த அழுத்தம் அவளுக்கு நண்பர்கள் என்று யாரையும் நெருங்கும் தைரியத்தை கொடுக்கவில்லை.

படிப்பு படிப்பு என்று படிப்பே அவளுக்கு மருந்தானது விருந்தானது.

பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்தாள்.

மேல்நிலை பள்ளிக்காக பக்கத்து ஊரின் மேல்நிலை பள்ளியில் கணிதம் உயிரியல் பிரிவு எடுத்து சேர்ந்தாள்.

இவள் பள்ளியில் சேர்ந்த அன்றே… அதே பிரிவில் சேர்ந்தான் ரூபேஷ்.

ரூபேஷ் பத்தாம் வகுப்பு வரை மெட்ரிக் பள்ளியில் படித்து விட்டு பதினொன்றாம் வகுப்பிற்கு  அரசு பள்ளிக்கு வந்திருந்தான்.

வகுப்பில் ஆசிரியரின் கேள்விக்கு அசராது பதில் அளிப்பவர்களாக இருவருமே இருந்தனர்.

முதல் மதிப்பெண் பெறுவதில் இருவருக்கும் போட்டா போட்டி.

ஸ்வாதிக்கு வறுமை தெரியும். ஆனால் ரூபேஷ் வசதியான வீட்டு பையன்.

பாடம் சம்மந்தமாக அவ்வப்போது இருவரும் பேசி கொள்வார்கள்.

பருவத்திற்கே உரிய வளர்ச்சியில் பளீரிடும் அழகோடு இருந்தாள்   ஸ்வாதி.

ஸ்வாதியை குறுகுறுப்பாக பார்க்க தொடங்கினான் ரூபேஷ்.

வெக்டர் பகுதியில் ஒரு சந்தேகம் என்று அவள் அருகில் வந்தமர்ந்த ரூபேஷ்…. ஸ்வாதி என்ன உன் ஃபேசில்

பிம்பிள்ஸ் வந்திருக்கு..?

இப்படியே விட்டுட்டா நிறைய வந்துடும். முல்தான் மட்டி போடு. எங்கக்கா அது தான் போடுவா

ஸாரி… அதெல்லாம் எனக்கு தெரியாது. எங்க வீட்ல அதெல்லாம் வாங்கி கொடுக்க மாட்டாங்க.

மறுநாள் உணவு இடைவேளையில் காகித பொட்டலத்தை அவள் கையில் கொடுத்தான்.

என்ன இது?

நேத்து சொன்னேனே… முல்தான் மட்டி… அக்காவோடதில் கொஞ்சம் எடுத்திட்டு வந்தேன்.

இதை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசு. பத்து நிமிஷம் கழித்து வாஷ் பண்ணிடு. ஃபேஸ் பிரைட்டாகும்.

தேங்க் யூ ஸோ மச் என்றாள்.

“————-“

ரூபன் இந்தா… ஒரு பிளாஸ்டிக் டப்பாவை நீட்டினாள்.

என்ன இது..?

இதுவா.. இதுக்கு பேரு சிமிலி.

அப்படின்னா? உண்மையில் அவன் அறிந்திருக்கவில்லை.

அப்படின்னா… இதுல ராகி அடை போட்டு, எள், வேர்க்கடலை எல்லாம் வறுத்து போட்டு, வெல்லம், ஏலக்காய் போட்டு உரலில் இடித்து லட்டு மாதிரி உருண்டை பிடிப்பாங்க.

சாப்பிட்டு பாரு…. சூப்பரா இருக்கும், ரொம்ப ஹெல்தி கூட.

சூப்பரா இருக்கு ஸ்வாதி.. இப்போ தான் நான் பர்ஸ்ட் டைம் சாப்பிடறேன்.

இருவருக்குள்ளும் சிநேகம் அதிகமானது. படிப்பை தாண்டி பர்சனல் லைஃப் பற்றியும் பேசி கொள்ள தொடங்கினர்.

இது வரை ஸ்வாதி இது போல் யாருடனும் நெருக்கமாய் நட்பு பாராட்டியதில்லை.

அவள் குடும்ப விபரம் கேட்டறிந்து அவளுக்காய் இரக்கம் காட்ட ஆரம்பித்தான்.

ஸ்வாதி பிராக்டிகல் எக்ஸாம் வருது இல்லையா மைக்ரோ டிப் பென்சில் வாங்கினேன். அப்படியே உனக்கும் ஒன்னு வாங்கினேன்.

இதெல்லாம் ஏன் ரூபேஷ்…?

இருக்கட்டும் ஸ்வாதி… இது என்னோட பாக்கெட் மணியில் தான்  வாங்கினேன்.

உனக்கு ஹீரோ பென் வாங்கி தரட்டுமா..? ஹேண்ட்ரைட்டிங் அழகா இருக்கும்.

வேண்டாம் ரூபேஷ்… ஏற்கனவே எனக்கு நிறைய செய்திருக்க…. அவள் கூசி போனாள்.

அதனால் என்ன ஸ்வாதி…. நீ என்னோட பிரண்ட் தானே…?

“———–“

பயாலஜி ஈவினிங் ஸ்பெஷல் கிளாஸ் முடிந்து எல்லா மாணவர்களும் வெளியேறி கொண்டிருந்தார்கள்.

ஸ்வாதி மட்டும் அவஸ்தையாய் பெஞ்சில் கண்மூடி சாய்ந்திருந்தாள்.

என்ன ஸ்வாதி வீட்டுக்கு கிளம்பலையா…?

அது வந்து…நீ போ…ரூபேஷ்… அவள் தயங்கினாள்.

என்னாச்சு ஸ்வாதி…?

நீ போ… உனக்கு அதெல்லாம் புரியாது. அவள் வெட்கி குனிந்து கொண்டாள்.

மென்சஸ் டைமா? அவன் இயல்பாய் கேட்டான்.

ம்ம்ம்… என்று கூச்சத்துடன் தலையாட்டினாள்.

இது மன்த்லி வருவது தானே.. இதில்  என்ன இருக்கு…?

அது… அது என்னன்னா… ஒன் வீக் பிஃபோரா வந்துடுச்சு.

சரி நீ இரு… நான் வரேன்.. அவன் எங்கோ சென்று விட்டான்.

சற்று நேரம் கழித்து வந்தவன் கறுப்பு நிற கவர் ஒன்றை அவள்  கையில் கொடுத்தான்.

ஸ்டேஃபிரீ இருக்கு ஸ்வாதி… நீ டாய்லெட் போயிட்டு வா… நான் கிரவுண்டில் வெயிட் பண்றேன்.

ஸ்வாதிக்கு அவனை நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருந்தது.

நகரத்தில் படித்தவன் ஆதலால் அனைத்தும் தெரிந்து வைத்திருக்கிறான்.

எப்படி எல்லாம் என் மீது அன்பு செலுத்துகிறான்…?

ஸ்வாதிக்கு வீட்டில் கிடைக்காத அன்பும் அக்கறையும் ரூபேஷிடம் கிடைத்தது.

பதினொன்றாம் வகுப்பு முடித்து பனிரெண்டாம் வகுப்பு வந்து விட்டார்கள்.

இப்போதெல்லாம் படிக்கும் வேலை அதிகரித்து கொண்டே இருந்தது.

பப்ளிக் எக்ஸாம் எழுத வேண்டும் என்பதால் எல்லா மாணவர்களும் கண்ணும் கருத்துமாய் படித்து கொண்டிருந்தனர்.

ஸ்வாதி ரூபேஷ் நட்பு இறுகி கொண்டே வந்தது.

“———“

ஸ்வாதி நாளைக்கு என்னோட பர்த்டே

அப்படியா அட்வான்ஸ் விஷஸ் ரூபேஷ்.

நாளைக்கு எங்காவது வெளியில் போகலாமா ஸ்வாதி.

ம்கூம்… நான் மாட்டேன். என் வீட்டில் தெரிந்தால் என்னை கொன்னே போட்ருவாங்க.

எனக்காக கொஞ்ச நேரம் வர மாட்டியா ஸ்வாதி. அவன் முகம் வாடியது.

எங்கே போகணும்?

தெரியல!

என்ன சொல்ற..?

ஆமாம் எங்கே போக வேண்டும்  என்றெல்லாம் முடிவு பண்ணல… உன் கூட கொஞ்ச நேரம் எங்காவது லாங் ரைடு போனா சந்தோஷப் படுவேன்.

சைக்கிளிலா…? அவள் தயங்கினாள்.

நாளைக்கு எங்க அப்பாவோட ஸ்பிளென்டர் பைக் எடுத்துட்டு வரேன்.

யாராவது பார்த்துட்டா பெரிய பிரச்சனை ஆகிடும் ரூபேஷ் அவள் பயத்தில் நடுங்கினாள்.

நாளைக்கு வழக்கம் போல ஸ்கூல் வந்துடு. பிரேயர் டைமில் வெளியில் போயிட்டு பர்ஸ்ட் பீரியட் முடியும் போது வந்துடலாம்…. அவன் கெஞ்சினான்.

சரி தவறெல்லாம் அவளுக்கு தெரியவில்லை. ரூபேஷ் சந்தோஷப்படுவான் அது போதும்.

மறுநாள் தன்  உண்டியல் சேமிப்பில் இருந்து பத்து ரூபாய் எடுத்து ஒரு டயரி மில்க் சாக்லேட் வாங்கி கொண்டாள்.  வழக்கம் போல் பள்ளிக்கு வந்தாள்.

பள்ளி வாயிலில் ரூபேஷ் பைக்கில்  காத்து நின்றான்.

ஸ்வாதி மருண்ட விழிகளுடன் அவனை இமை கொட்டி பார்த்தாள்.

சற்று தள்ளி வரும்படி சைகை செய்தான்.

அவளும் பயந்து பயந்து… புத்தகப் பையை அணைத்து கொண்டு சென்றாள்.

அவனுடன் வண்டியில் செல்வது அவளுக்குள் பெரிதாய் எந்த மாற்றத்தையும் உண்டு பண்ணவில்லை.

அவனுக்கு தான் அந்தரத்தில் மிதப்பதாய் இருந்தது.

அவன் கனவு தேவதை… அவனை உரசி அவன் பின்னால் அமர்ந்திருக்கிறாளே…?

எங்கே போறோம் ரூபேஷ்… ஷாலால் முகத்தை மூடி கொண்டாள்.

இப்படியே டென் மினிட்ஸ் போகலாம். பக்கத்தில் கந்தசாமி கோயில் இருக்கு போயிட்டு வந்துடலாம்.

கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டனர். நல்ல மதிப்பெண் பெற வேண்டும் அப்போது தான் அரசு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று மனமுருகி முருகனை  வேண்டி கொண்டாள்.

ரூபேஷ் இதெல்லாம் தப்பு… இனிமேல் என்னை இப்படி வெளியில் கூப்பிடாதேப்பா ப்ளீஸ்…. அவள் கெஞ்சினாள்.

ஓகே..இனிமேல் கூப்பிட மாட்டேன். அவன் வாக்கு கொடுத்தான்.

ரூபேஷ்… ஹேப்பி பர்த்டே … வாழ்த்து கூறி தன் ஜாமென்ட்ரி பாக்சில் வைத்திருந்த டைரி மில்க் சாக்லெட்டை எடுத்து அவனுக்கு கொடுத்தாள்.

தேங்க் யூ… ஸ்வாதி. இது உனக்கு… அவன் பதிலுக்கு ஸ்னிக்கர் பாரை எடுத்து நீட்டினான்.

சரி ரூபேஷ்.. கிளம்பலாம். மழை வர மாதிரி இருக்கு. அவசர படுத்தினாள்.

மகிழ்வோடு திரும்பினர்…. வரும் வழியிலேயே… மழை தூர ஆரம்பித்தது.

என்ன ஸ்வாதி மழை தூறல் ஆரம்பிச்சிடுச்சு..?

பரவாயில்லை ரூபேஷ்… பலத்த மழைக்குள் ஸ்கூலுக்கு போயிடலாம். கொஞ்சம் ஸ்பீடா போ…!

அவர்கள் அரை கிலோ மீட்டர் கூட கடந்திருக்க மாட்டார்கள்… மழை வலுக்க தொடங்கியது. ஓரிரு நிமிடத்தில்  தெப்பமாக இருவரும் நனைந்து விட்டனர்.

நிறுத்து ரூபேஷ்…. எனக்கு குளிருது…!

ஓடிப்போய் புளிய மரத்தடியில் நின்று கொண்டாள்.

ஏய் ஸ்வாதி…இடியும் மின்னலுமாய் இருக்கு… நீ போய் மரத்தடியில் நிற்கிற..

இங்கே வா… அவள் கை பற்றி பக்கத்தில் இருந்த மோட்டார் கொட்டகைக்கு அழைத்து சென்றான்.

கொட்டும் மழையில்… அங்கு மனித நடமாட்டமே இல்லை.

வெட வெடக்கும் மேனியை மார்பின் குறுக்காக கையால்  இறுக்கி கொண்டாள். குளிரில் அவள் மேனி  நடுங்கியது.

நடுங்கும் அவள் தளிர் மேனியை இமைக்காது நோக்கினான் ரூபேஷ்.

ஷாலை பிழிந்து கொண்டே… வ்வ்வவ்வ்… என்று பற்கள் கிட்டி கொள்ள கையை சூடு பறக்க தேய்த்து கன்னத்தில் வைத்து கொண்டாள்.

ஈரத்தில் அவள் நீண்ட  பின்னல்கள் இரண்டும் மார்போடு  ஒட்டி கொண்டது. ஈர உதடுகள் பனியில் நனைந்த ரோஜாவாய் மலர்ந்திருந்தது.

நடுங்கி நின்ற பெண்ணவளின் கரம் பற்றிய ரூபேஷ்….. ஸ்வாதி நீ ரொம்ப அழகா இருக்க… என்றான்.

அவள் பயமும் தயக்கமுமாய் கையை உருவி கொள்ள முயன்றாள்.

ஸ்வாதி என்னை உனக்கு பிடிக்காதா…. ஏக்கத்துடன் கேட்டபடி அவளை இழுத்து அணைத்து கொண்டான்.

பதில் பேச அறியா மடந்தை அவள் அவனை ஏறிட்டு பார்க்க இயலாமல் தலை கவிழ…

அவள் பால் போன்ற முகத்தை நிமிர்த்தி அவள் கண்களில் இதழ்  பதித்தான்.

பதினேழு வயதான அவள்…. கருத்து தெரிந்து அவள் தாயிடம் இருந்து கூட முத்தம் பெற்றதில்லை.

அவன் கொடுத்த சூடான முத்தம் அவளை நிலை குலைய வைத்து விட்டது.

தடுமாறி நின்றவளை அணைத்து இதழ் தொட்டு முத்தமிட்டான்.

அவளுக்கு சுதாரித்து விலக வேண்டும் என்பதெல்லால் உண்மையில் தெரியவில்லை.

அவளை அணைத்தவனின் சூடு அவளுக்கு இதமாய் இருந்தது.

அவள் அமைதியும், வெட்கமும் அவனை இம்சிக்க… மெல்ல அவளை தரையில் சாய்த்து அவள் மீது விழுந்தான்.

மழை விட்டுவிட்டது… அழுது அழுது வீங்கிய முகத்துடன் காலை கட்டி கொண்டு அமர்ந்திருந்தாள்.

ஸாரி ஸ்வாதி… இப்படி நடந்துடுச்சு… உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

நான் காலேஜ் எல்லாம் படித்து முடித்து வேலைக்கு போய் உன்னை  மேரேஜ் பண்ணிப்பேன்.

இது தப்பில்லையா ரூபேஷ்…? நானா இதுக்கு சம்மதித்தேன்…? அவள் கேவினாள்.

கொஞ்சம் தப்பு… கொஞ்சம் தப்பில்லை.

இது இந்த ஏஜில் வரும் பயாலாஜிக்கல் சேஞ்சஸ். ஹார்மோனல் சேஞ்சஸ் இப்படி எல்லாம் எதிர்பால் இனத்தவர் மேல் ஈடுபாட்டை ஏற்படுத்தும்.

அப்படியா…? அவள் அப்பாவியாய் கேட்டு கொண்டாள்.

இதனால் ஏதாவது பிரச்சனை

வருமா ரூபேஷ்?

நாம தான் மேரேஜ் பண்ணிக்க போறோமே… அதனால் தப்பில்லை… நீ பயப்படாதே ஸ்வாதி!  அவளை அணைத்து ஆறுதல் படுத்தினான்.

உண்மையில் ரூபேஷ் அவளை தொட்டு விட நினைக்கவில்லை. அவனுக்கு எப்போதுமே அவள் மீது ஈர்ப்பு இருந்தது…. ஆனால் சூழ்நிலையும் வாய்ப்பும் அவனை தவறு செய்ய தூண்டி விட்டது.

இதெல்லாம் சரியாக புரியவில்லை ஸ்வாதிக்கு. அவள் கிராமத்தில் பிறந்து வளர்ந்த சாதாரண குடும்பத்து பெண்.

அவளுக்கு பாலியல் கல்வி பற்றிய புரிதல் இல்லை. அன்புக்கு ஏங்கிய அவளுக்கு அன்பை கொட்டி கொடுத்த ரூபேஷை பிடித்து விட்டது…. இருவரும் ஏதோ நிலையில் அறிந்தும் அறியாமலும் இணைந்து விட்டனர்.

“———-“

அதன் பிறகு ஸ்வாதி குற்ற உணர்வில் அவனை பார்ப்பதையே தவிர்த்தாள்.

அவனுக்கு அவளை பார்க்க வருத்தமாய் இருந்தது.

நாட்கள் அதன் போக்கில்  சென்று கொண்டிருந்தது.

அன்று பப்ளிக் பிராக்டிகல்… கெமிஸ்ட்ரி லேபிள் பொட்டாஷியம் பர்மாங்கனேட்டை கோணிக்கல் கிளாசில் பிடித்தவளுக்கு தலை சுற்றியது.

அப்படியே சரிந்து விழுந்தாள்.

மற்ற மாணவர்கள் கத்தி கூச்சலிட… ஆசிரியர்கள் ஓடி வந்தனர்.

Pt மிஸ்ஸை அழைத்த ஹெட்மாஸ்டர் பக்கத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்ல கூறினார்.

அங்கு மயக்கம் தெளிந்து எழுந்து அமர்ந்த ஸ்வாதியை  பரிசோதித்த மருத்துவர் ஏன் மயக்கம் வந்தது என்று கேட்டார்…?

தெரியலையே…. ஒரு வாரமா இப்படி தான் இருக்கு என்றாள்.

வேறென்ன சேஞ்சஸ் இருக்கு?

வாமிட் வர மாதிரி இருக்கு…. தூக்கம் தூக்கமா வருது என்றாள்.

பீரியட்ஸ் ரெகுலரா?

இல்லை முன்ன பின்ன வரும் என்றாள்.

சரி… இந்த கிட்டை எடுத்துட்டு டாய்லெட் போ…. என்றவர் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று விளக்கினார்.

இது எதுக்கு…? அவள் அஞ்சி நடுங்கினாள்.

அவளை பார்த்து பரிதாப பட்ட மருத்துவர்…. போயிட்டு வா சொல்றேன் என்றார்.

அவர் எதிர்பார்த்த மாதிரியே பாசிட்டிவ் என்று தான் இருந்தது.

எனக்கு என்னாச்சு? அவள் தேம்பினாள்.

நீ யார்கிட்டேயும் எதுவும் சொல்லக் கூடாது. நாளைக்கு உன்னோட அம்மாவை அழைச்சிட்டு வா…! என்றார்.

எனக்கு ஏதாவது பிரச்சனையா…? ப்ளீஸ் என்கிட்டேயே சொல்லிடுங்க அவள் அழுதாள்.

நீ நாளைக்கு உன் அம்மாவோட வா… அவளை  வெளியில் அனுப்பி விட்டார்.

என்னாச்சு டாக்டர் என்ற PET டீச்சரிடம்…. அந்த பொண்ணு சாப்பிடாம இருந்திருக்கா… எம்டி ஸ்டமக்கில் இருந்தவளுக்கு  லேபிள் கெமிக்கல் ஸ்மெல்  மயக்கத்தை கொடுத்திருக்கு  என்றார்.

நான் பயந்துட்டேன் டாக்டர். நல்ல பொண்ணு… நல்லா படிப்பா… எப்போதுமே ஸ்கூல் பர்ஸ்ட் இவ தான் என்றார்.

ஊப்ப்ப்…. வாயால் ஊதி கொண்டே நாற்காலியில் சாய்ந்தார் டாக்டர்.

அழுகையோடு சென்ற அந்த பச்சிளங்குழந்தை போன்ற முகம் கொண்ட அப்பெண்ணின் முகம் அவரை வருத்தி எடுத்தது.

——–தொடரும் ——

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!