Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Neeyaen Viruppapizhai

Nazri’s Neeyaen Viruppapizhai 1

பிழை :1

 

செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான்; அல்லிடத்துக்

காக்கின்என்? காவாக்கால் என்?



Advertisement

 

(பொருள்: தன் கோபம் செல்லும் இடமாகிய மெலியார் மீது கோபப்படாது தன்னை காத்துக்கொள்பவனே அருளானன் ஆவான். தன்னிலும் வலியாரிடத்துத் தனக்கு வரும் கோபத்தை அவன் அடைக்காவிட்டால் என்ன பயன்?).

 

Advertisement

திருக்குறள் அதிகாரம்: 31

Advertisement

வெகுளாமை“….

 

    மதுரையை  ஆண்ட  பாண்டிய மன்னர்களில் சிலருக்கு  அவர்களின் தைரியத்தையும்  துணிச்சலையும்  அவர்களின் மகிழ்ச்சியையும் போற்றும்  விதமாக  “மாறன்”  என்ற அடைமொழி கொண்டு அழைப்பது வழக்கம்.

Advertisement

 

இரண்டாயிரத்தி  ஐநூறு  ஆண்டுகள்  பழமை  வாய்ந்த  மதுரை மாநகரம்பத்து  லட்சத்துக்கும்  மேற்பட்ட  பலதரப்பட்டட மக்கள் வசிக்கும்  தமிழகத்தின்  மூன்றாம் பெருநகரம்வைகை  ஆற்றங்கரையில்  அமைந்துள்ள  இந்நகரம்  மீனாட்சி  அம்மன்  கோவிலினாலே  மிகவும் அதிகமான  புகழ்  பெற்றது… 

 

தொடர்ந்து மக்கள் வசித்துவரும் உலகின்  சில நகரங்களில்  ஒன்று என்று பெயர்   பெற்ற நகரம்கி.மு நான்காம்  ஆண்டு  முதல் கி.பி இரண்டாம்  நூற்றாண்டு  வரை பல தமிழ் மொழி அறிஞர்களைக்  கொண்டு மூன்றாம்  தமிழ்ச்  சங்கம்  அமைக்கப்பட்டு  தமிழை  வளர்த்த பெருமையுடைய  நகரம் மதுரைமதுரை மாநகரில்  இருந்து சற்றே  தொலைவில்  அமைத்திருக்கும்  நிறைய கிராமங்களை  உள்ளடக்கிய ஊர் திருமங்கலம்

 

திருமங்கலம் ஊருக்கு  வெளியில்  ஒதுக்குபுறமாக  இருந்தது அந்த பழங்காலத்து வீடுவீட்டை  சுற்றி  பசுமையான  தோட்டம்…  அந்த வீட்டுக்கு  பின்னே முழுவதும் வயல்வெளி  கிட்டத்தட்ட கண்ணுக்கு  எட்டிய  தூரம்  வரை வயல்வெளி…. குறைந்தது  ஒரு இருநூற்று  ஐம்பது  ஏக்கர்  இருக்கும்அதில்  பாதி   நெற்கதிர்கள்  தலையாட்டமீதி  கரும்பு  வாழை மா மற்றும் பல காய்கறிகள்  பயிரிடப்பட்டு  இருந்ததுஅந்த வீடு பழங்காலத்து முறை படி கட்டிருந்தாலும் உள்ளே நவீன  வசதிகள்  அனைத்தும்  இருந்தது…   

 

அந்த வீட்டின்  மாடியில் இருக்கும் உடற்பயிற்சி  கூடத்தில்  இருந்த ட்ரெட்மில்லில்  வேகமாக ஓடிக்கொண்டு  இருந்தான் மகிழ்  மாறன்ஆறடி  உயரம் நன்றாக உடற்பயிற்சி செய்து முறுக்கேறிய  கட்டுடல்அடர்ந்த தலை கேசம்எதிரிகளை  நடுநடுங்க  வைக்கும்   தீர்க்கமான  கண்கள்…. நான் எப்பவுமே சிரிக்க  மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லும்  அழுத்தமான  உதடுகள்…   முகம் முழுதும் கோபம்கோபம் அது ஒன்றே  என்னுடன் எப்பவும் இருக்கும்  அழியா சொத்து என்பதை போல எப்பவும் கோபம்..எதிலும்  கோபம் எப்பவும் அவன்   உடன் இருக்கும்… 

 

மாறன் குரூப்  ஆப்  கம்பெனியின் ஒரே ஏகபோக  வாரிசுவயது முப்பதை  கடந்து ஒரு வருடம் ஆகிவிட்டதுஏழு வருடங்களாக  தங்களது குடும்ப தொழிலை திறன்பட நடத்தி  வருபவன்அவனுடைய தாத்தா  சிறுவயதில் இருந்தே செய்துவந்த  விவசாயத்தை  இன்றும் திறன்பட செய்துக்கொண்டு இருக்கும் வாரிசு  அவன்அது மட்டும் அல்லாமல்   அவனின் தாத்தா சிறிய அளவில் குறைந்த வட்டிக்கு மக்களுக்கு பணம் கொடுத்து அதற்கு இணையாக தங்கமோ அல்லது வெள்ளியோ     வாங்கிக்கொண்டு அந்த ஊரில் இருந்த மக்களுக்கு உதவி செய்து வந்தார்அதை மகிழின்  தந்தை சிறிய கடையாக வைத்து செய்து வந்தார்..  

 

[the_ad id=”6605″]

 

 

அந்த தொழிலையே மகிழ் தனக்கு அடிப்படையாக வைத்து அவன் திறமையை நிரூபிக்க, இப்போது இந்தியா முழுவதும் மாறன் பைனான்ஸ்  பிரைவேட்  லிமிடெட்  கிட்டத்தட்ட  

மூவாயிரத்தி ஐந்நூறு கிளைகளுக்கு  மேல் கொண்டு செயல்பட்டு  வருகிறதுதங்களது மாறன் அரிசி  ஆலை,  

சர்க்கரை  ஆலை மற்றும் காய்கறி மற்றும் பழங்கள் ஏற்றுமதி நிறுவனம் என்று மாறன் குரூப் கம்பெனி அனைத்தையும் திறன்பட நடத்துபவன் மகிழ் மாறன் ஒருவனே…. பாண்டிய மன்னர்களின்  வீரமும்  தைரியமும்  துணிச்சலும்  ஒருங்கே  பெற்று தனது பெயரில் இருக்கும் மாறன் என்ற பெயருக்கு பொருத்தமானவன்  மகிழ் மாறன்… 

 

ஆனால் தனது பெயரில் இருக்கும் மகிழ்ச்சி மட்டும் இப்பொழுது  அவனிடம் இல்லைவீரமான  ஆண்மகன் . எதையும்  துணிச்சலுடன்  தைரியமாக பயம்கொள்ளாமல்  எதிர்கொள்ளும்  ஆண்மகன்.. ஆனால் அவன் வாழ்க்கையின்  பொக்கிஷத்தை  தெரிந்த தொலைத்த முட்டாள்…  அவன் மகிழ்ச்சியே இல்லாமல் இருக்க

ஒருவள் தான் காரணம்.. 

 

இப்பொழுது அவள் எங்கே இருக்கிறாள்…? என்ன செய்கிறாள்…?  அவள் இருக்கிறாளா…?  இல்லையா..? எதுமே அவனுக்கு  தெரியாது.. ஆனால் அவனுடைய ஒட்டுமொத்த  மகிழ்ச்சியும்  அவள் ஒருவளே…  அவனும் கடந்த நான்கு வருடமாக  அவளை தேடிக்கொண்டு  இருக்கிறான்ஆனால் அவள் கிடைத்தபாடு இல்லைஅவள் இல்லாத இந்த நான்கு ஆண்டுகளும்  மனதுக்குள்ளே   சித்ரவதை பட்டு  நரக வேதனை  அனுபவிக்கிறான்…  அவன் வாழ்க்கையில் அவன் விரும்பி  செய்த பிழை அவள்அவளே  அவனின் விருப்பப்பிழை…. காலம் கடந்து அவளை புரிந்துக்கொண்டவனால்  அவளை திரும்ப பெற  முடியாமல் போனது  அவன் செய்த பிழையா  இல்லை விதி செய்த சதியா..?

 

அந்த வீட்டின் மாடியில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்தில் ட்ரெஅட்மில்லில் அரைமணிநேரமாக  மூச்சிரைக்க  வேகமாக ஓடிக்கொண்டு  இருந்தான் மகிழ்.. அடுத்து மற்ற உடற்பயிற்சிகளை  அடுத்த   இருபது நிமிடம் செய்தவன்உடற்பயிற்சியை  முடித்துக்கொண்டு ஒரு  பூத்துவாலையால் தான் கட்டுமஸ்தான  உடலை துடைத்துக்கொண்டே படி இறங்கி தனது அறைக்கு சென்றான்… 

 

அவன் அறை மூன்று அடுக்குகளை  கொண்டதாக  இருந்ததுமுதலில் ஒரு வரவேற்பறை  உள்ளே அவனின்  படுக்கறை அதை ஒட்டியே ஒரு அலுவலக அறை.. அலுவலக அறை மிகவும் பெரியதாக இருக்க அங்கே  அலுவலுக்கென்று சிறிய இடமே மீது இடம் அழகான நீச்சல்   குளத்துடன் இருந்தது…. அந்த குளத்தை ஒட்டியே பால்கனி…  அங்கிருந்து மகிழுக்கு சொந்தமான இருநூற்று  ஐம்பது  ஏக்கர்  நிலத்தையும்  பார்க்கும் படி இருந்தது… 

 

அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்ததாலும்  மனஅழுத்தம்  இருந்ததாலும் அவன் இங்கே தான் நீச்சலில்  இருப்பான்…  அவன்  படுக்கை  அறையை ஒட்டியே சகல  வசதிகள் கொண்ட குளியலறை  உடை மாற்றும் அறையுடன்  இருந்ததுமாடியில் இருந்து இறங்கிய மகிழ் அவனின் அறையில் இருக்கும் படுக்கையில் சென்று விழுந்தான்… 

 

 

[the_ad id=”6605″]

 

கண்களை மூடி சிறிது நேரம் படுக்க அவன்  கண்களுக்குள் அவனின்  கண்ணம்மாவாவின்  அழகிய முகமேஅதுவும் அவன் படுத்திருப்பது  அவனின் கண்ணம்மாவின் மடியில் அவள் ஆசையாக  அவனுடைய தலை   கோதுவது போல இருக்கஅன்று நிஜமாக  இருந்தது இன்று கற்பனையாக  இருப்பதை  எண்ணி தாங்கிக்கொள்ள  முடியாதவன்  அறையில்  இருக்கும்  குளியலறைக்கு  சென்றான்… 

 

அங்கே ஷவரை  திறந்துவிட்டு  அடியில் நின்றான்அவன் கண்களை மூடி நிற்க அவன் கண்களுக்குள் அவனின் கண்ணம்மாவின்  அழகிய முகமே தெரியஎங்கே கண்களை திறந்தாள் போய்விடுவாளோ…?  என்று நினைத்து கண்களை திறக்காமலே  அரைமணி நேரத்திற்கு மேலாக  நின்றவன்கடமை  அழைக்க அலுவலகம் செல்ல வேண்டி சீக்கரம் குளியலை முடித்துக்கொண்டு உடை மாற்றும் அறைக்கு வந்தான்… 

 

அவனுடைய உடைகள்  அடிக்கிருக்கும்   

 அலமாரியை  திறந்தவன்  கண்களில் அங்கே மேலே அருகிருந்த  கருப்பு நிற சட்டை கண்ணில் பட்டதும்… ‘உங்களுக்கு இந்த கருப்பு நிற சட்டை ரொம்ப அற்புதமாக  இருக்கு மகிழ்…’ என்று அவன் கண்ணம்மாவின் குரல் நிஜம் போல அவன் காதின்  அருகில் ஒழிக்க

 

என்றுமே என்னால் உன்னை விட்டு உன் ஞாபகம் இல்லாமல் இருக்க முடியாதுடீப்ளீஸ் நீ எங்க தான் இருக்க…? நீ இருக்கியா  இல்லையா…? எனக்கு தெரியாமல் தினம் தினம் எனக்குள்ளேயே  உன்னை தேடி தேடி செத்துக்கொண்டு  இருக்கிறேன்நீ இருக்கும் போது உன்ன  சரியா மதிச்சி  நடந்துக்கவில்லைஉன்னை ரொம்ப உதாசீன படுத்துனதுக்கு  இப்ப உன்ன என்னோட கண்ணால  கூட பார்க்க முடியாம  ரொம்ப கஷ்ட படுறேன்டீப்ளீஸ் டீ கண்ணம்மா என்னால முடியல…. நீ எங்க இருந்தாலும் என்கிட்டே வந்துடுடீ….   

 உன்ன என்னோட கண்ணுக்குள்ள  வைச்சு பார்த்துக்கிறேன்நீ எங்க தான் இருக்க…?” என்று அவன் அந்த கருப்பு நிற சட்டையை  கையில் எடுத்து வைத்துக்கொண்டு புலம்பிக்கொண்டு இருந்தான்…. 

 

அந்த சட்டையை  எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு வேறு உடை அணிந்துக்கொண்டான்அவனுடைய கண்ணம்மா பிரிந்து சென்ற இந்த நான்கு வருடத்தில் ஒரு முறை கூட அவன் அவளுக்கு பிடித்த இந்த கருப்பு சட்டையை அணியவில்லைஅவள் ரசிக்கவே  அவன் அவள் ரசித்த  கருப்பு நிறத்தை  அவள் இல்லாமல் அணிந்து யாரும் பார்க்க விருப்பம் இல்லாமல்.

 

அதே வீட்டில் இருந்த மற்றொரு அறையில் இருந்த பெண் அழகான  கனவில் இருந்து சிரித்துக்கொண்டே  எழுந்து காலைக்கடன்களை  முடித்துக்கொண்டு காலை உணவு அருந்த உணவு மேஜைக்கு  வந்தாள்.. அவள் மகிழ் மாறனின்  தங்கை சொர்ணா… 

 

மணிமாறன்  மற்றும் சாவித்ரி  அம்மாவிற்கு ஒரு பையன் பெயர் இளமாறன்இளமாறனின்  மனைவி யசோதாஇளமாறன் யசோதா  தம்பதியரின்  மகனே  மகிழ் மாறன் அவர்களின் செல்ல மகள் சொர்ணாஅவள் பிறந்த பொழுது தங்கத்தை வார்த்து  குழந்தையாக  செய்ததுபோல  நல்ல நிறமாகவும்  அழகாகவும் இருந்ததால் அவளுக்கு இளமாறன் ஆசையாக  தங்கம் என்னும் பொருள் வருவதை போல பெயர் வர வேண்டும் என்று விருப்பம் கொண்டு சொர்ணா என்று பெயரிட்டார்… 

 

மகிழ் அமைதியானவன்  என்றால் சொர்ணா அடாவடியானவள்இருவருக்கும் அண்ணன் தங்கை பாசமெல்லாம்  சாதாரணமாக தான் இருக்கும்அவள் அண்ணன் என்று உருகவும் மாட்டாள்அவன் எல்லாம் என் தங்கை தான் என்றெல்லாம் இருக்க மாட்டான்.. இருவரும் வேறு வேறு எண்ணம் செயல் எல்லாம் கொண்டவர்கள்… 

 

மகிழ் பார்க்க கடினமானவன்  போல தோன்றினாலும் ரொம்ப நல்லவன்அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்றும்அவனால் முடிந்தவரை  முடியாதவர்களுக்கு  உதவ வேண்டும் என்று நினைப்பவன்அனைவரிடமும் கடுமையாக  நடந்துகொள்வதை  போல தோன்றினாலும்…. உள்ளுக்குள்  அவர்களை எந்த வகையில் உயர்த்துவது  என்று என்னும் அளவு அவனுடைய எண்ணம் இருக்கும்…. அவனுடைய தொழிலாளர்கள்  அனைவரையும் சமமாக நடத்துபவன்தான் நிறைய பணம் படைத்தவன்  என்ற நினைவே  இல்லாதவன்… 

 

 

[the_ad id=”6605″]

 

 

ஆனால் சொர்ணா அண்ணனுக்கு அப்படியே எதிர் பதமானவள்வெளியே பார்க்க அழகானவள்  ஆனால் உள்ளே ஒரு சில விஷயங்களில் அவள் நடந்துகொள்வது சரி இல்லை என்று உடனே தெரியும்அதற்காக அவள் கெட்டவள் என்று இல்லைஅவளும் நல்லவளே ஒரு சில வியாசங்களை தவிர.. அவளுக்கு பிறந்தது முதலே தான் பெரும் பணம் படைத்த குடும்பத்தை சேர்ந்தவள் என்ற செருக்கு இருக்கும்அதனால் அவளுக்கு கீழே இருக்கும் மனிதர்களை மதிக்க மாட்டாள்… 

 

தங்களுடைய தொழிலை தற்போது அண்ணனுடன் சேர்ந்து பார்த்துக்கொள்கிறாள் ஒரு ஆறு மாத காலமாய்திறமையானவளே ஆனால் அவர்கள் தொழிலாளர்களை கூட மதிக்க மாட்டாள்இந்த ஒரு விஷயம் சொர்ணா மதிக்கொள்வாளா என்று தெரியவில்லைஅவள் தனக்கு கீழே இருக்கும் மனிதர்களை மதிக்காமல் இருக்கும் குணத்தினால் தன்னுடைய விருப்பமான வாழ்க்கை மட்டும் இல்லாமல்…. தெரிந்தும் தெரியாமலும் தன்னுடைய அண்ணன் வாழ்க்கையிலும் பல சிக்கல்களை உண்டாக்க போகிறாள்… 

 

அவள் அந்த குணத்தை விட்டுவிட்டு மனிதர்களை மதிக்க கற்றுக்கொள்வாளா…? இழக்க இருக்கும் அவள் வாழ்க்கையை மீண்டும் உயிர்ப்புற செய்வாளா…? அண்ணன் வாழ்க்கையிலும் சிக்கலை ஏற்படுத்தி என்ன செய்ய போகிறாள்…? எல்லாம் அவன் கையில் நம்மை படைத்தவன் கையிலே இறுதி தீர்ப்பு.

 

மதுரையின் வீரமகனோ நீ

கையில் கிடைத்த சொர்க்கத்தை

தொலைத்த முட்டாள் அல்லவோ?

தொலைத்துவிட்டு தேடி அலைகிறாய்!

மீண்டும் வருவாள் தேவதை

ஆனால் உடன் இருக்கும் ராக்ஷஸி

என்ன செய்வாள் உன் தேவதையை?

மீண்டும் மீண்டும் வருந்த செய்வாயோ?

மீண்டும் சொர்க்கத்தை தொலைப்பாயோ?

அவளே நீ செய்த விருப்பபிழை.

 

_ பிழை விருப்பமாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!