Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Amuthangalaal Nirainthaen

Thazhampoo Vaasam Nee 26 2

அன்று அப்படி ஒரு நிம்மதி இளாக்கும் லிங்காக்கும். மூர்த்தி அப்போதே கிளம்பிவிட்டார் கம்பெனியில் இருந்து. சகோதரர்கள் தான், சற்று நேரம் இருந்து வேலைகளை பார்த்து வந்தனர்.

அந்த இரண்டு மாதத்தில் சற்று தெளிந்திருந்தான் இளா. எக்ஸ்போர்ட் ஆர்டர் வகையில் கொஞ்சம் கவனம் கொண்டான். லிங்கா இப்போது ஆடர் எடுப்பதை வேலையாக கொண்டான். தயாரிப்பு, மேற்பார்வை இளா பார்க்க.. லிங்கா கணக்கு வழக்கு என பார்த்துக் கொண்டான்.

இந்த வாரத்தில், பழைய சரக்கு அனுப்பியதற்கு பணமும் வந்து சேரும். எனவே காவ்யாவின் கல்யாண வேலைகளை இனிதாகத் தொடங்க திட்டமிட்டனர் சகோதரர்கள்.

எல்லாம் முடித்து மதிய உணவு நேரம் கடந்துதான் வீடு வந்தனர் இருவரும். காமாட்சி படுத்திருந்தார் அவருக்கு அசதி. லதா, அம்முவுடன் இருந்தாள். சக்தி மட்டும் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.



Advertisement

இருவர் வந்ததும் உணவு பரிமாறி… எல்லாவற்றையும் எடுத்து வைத்து என சக்தி கொஞ்சம் கொஞ்சம் மருமகளாக மாறி இருந்தாள் இந்த நாட்களில்.

இப்போது, சக்தி அங்கே கீழேயே இருந்து கொண்டாள்.. லிங்கா சற்று நேரம் உறங்கினான். 

மாலையில் சற்று எல்லோரும் இலகுவாக பேசிக் கொண்டிருந்தனர். பின், காவ்யாவின் திருமணம் குறித்து திட்டமிட்டனர். பெண்கள் உண்ண அழைக்க.. சாப்பிட்டபடி பேச்சு சென்றது.

Advertisement

 

Advertisement

சக்தியின் வரவுக்காக லிங்கா காத்திருந்தான்.. மனதில் இன்று பெரும் நிறைவு… ஏதோ அழுத்தம் தீர்ந்த உணர்வு… குளித்து… பொறுமையாக மனையாளுக்காக காத்திருந்தான்.

சக்தி வந்தாள்… இப்போதெல்லாம் உடை மாற்ற.. லிங்காவை வெளியே அனுப்புவதில்லை சக்தி. எனவே குளித்து இரவு உடைக்கு மாறினாள்.. அதுவரை லிங்கா ஏதும் பேசவில்லை.

 

Advertisement

[the_ad id=”6605″]

 

 

 

சக்திக்கு பயம் பிடித்துக் கொண்டது… என்னாச்சு ஏதோ பிரச்சனையோ என யோசனையாக நைட் கிரீம் எடுத்து பூசிக் கொண்டே அவனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.. தொந்தரவு செய்யாமல்.

சக்தி தன்னவனை தெரிந்து கொண்டதில், ஒன்று நன்றாக புரிந்தது… அவனுக்கு எந்த உணர்வையும்.. சந்தோஷமோ, துக்கமோ…  எந்த உணர்வுகளையும் பூட்டி, ஒழித்து.. வைக்க தெரியாது என்பதுதான் அது. ஏனோ இன்று எதற்கு இந்த அமைதி என யோசித்தபடி இருந்தாள்.

 

இன்று அவனை பொறுத்தவரை விடுதலை நாள்… ம்.. இத்தனை நாள் தன்னை அடமானம் வைத்திருந்தானே.. அதான், அந்த கடன், கல்யாணம்.. என இருந்தவனின் கணக்குக்கு இன்றுதானே விடை கண்டான்.

அதுதான் இன்று தன் மாமனாருக்கு பணத்தை திருப்பி கொடுத்ததில் எல்லா வட்டம் சதுரமும் தீர்ந்திருந்தது. எனவே இதமான மனநிலையில் இருந்தான் லிங்கா. 

மனைவியாக ஏதாவது கேட்பாள் என பார்க்க.. அவள் தன் வேலையில்  கவனமாக இருந்தாள்.. அதற்கு மேல், லிங்காக்கு பொறுமையில்லை… “சக்தி…” என்றான். முகத்தில் ஏதோ புது கலை… சக்தியால் அதை வரையறுக்க முடியவில்லை.. ஆனால், அந்த அழைப்பு இதமாக இருந்தது…

“ம்…” என்றாள்.

“வா…” என்றான்… கையசைத்தபடி… மனையாள் அசையவில்லை… அந்த திவானில் இன்னும் ஸ்திரமாக அமர்ந்து கொண்டாள்.

லிங்கா அருகில் வந்தான்… அகத்தில் இருந்த பாரமெல்லாம் விலகியதால்… குரலில் ஒரு இளக்கம் வந்திருந்தது.. “சக்தி… என்னோட சக்தி… என்னோட ப்ரியா” என்றான் பிதற்றலாக.

சக்திக்கு ஏற்கனவே அவனின் குரலும்… அழைப்பும்.. மையலை தந்திருந்தது.. இப்போது காதுமடல் வரை அவளின் முகசிவப்பு விரிந்தது… “ம்… என்ன… என்ன வேணும்…” என்றாள் அவளும் பிதற்றலாக.

“ம்கூம்… இப்போ எதுவும் வேண்டாம்… நான் ஒன்னு சொல்லுவேன்… அமைதியா கேட்கணும்.. என்னை புரிஞ்சிக்க ட்ரை பண்ணனும்” என்றான் பெரிய பீடிகையாக ஆரம்பித்தான்.

சக்தி “ம்… இப்போ உங்களை நான் புரிஞ்சிக்கலையா.. இன்னும் வேற புரிஞ்சிக்கனுமா” என்றாள் அவனின் வார்த்தை விளையாட்டு இவளுள்ளும் புகுந்திருந்தது போல…

“ம்… நல்லா புரிஞ்சிகிட்ட… ஆனா, இது வேற… “ என்றான்.

“என்ன..” என்றாள்

லிங்கா எழுந்து அமர்ந்தான்… அவளை விட்டு விலகி அமர்ந்து கொண்டான் அவள் தூக்கி கிளிப் செய்திருந்த அவளின் சிகைக்கு.. விடுதலை தந்தான்.. தன்னவளை ஒரு பார்வை பார்த்தான்.. சக்திக்கு அதன் அர்த்தம் புரியவில்லை.. ‘என்ன’ என்றாள் புருவம் உயர்த்தி… உயர்த்திய புருவத்தை.. தன் விரல் கொண்டு நீவினான் மெல்ல… “ம்…. சக்தி, நான் உன்னை அன்னிக்குத்தான் முதல் முதலில் நான் பார்த்தேன்…  அப்போ நான் ரொம்ப ரொம்ப கஷ்ட்டத்தில் இருந்தேன்…. எப்படி சொல்றதுன்னு தெரியலை… ஆனா, உன்னை பார்த்ததுக்கு அப்புறமாதான்… எனக்கு ஒரு சக்தி கிடைச்சது.. அந்த கஷ்ட்டத்தை எல்லாம் நீதான் மாத்தின…” என்றான் மென்மையான குரலில்.

சக்தி புரியாது கணவனை பார்க்க… 

மீண்டும் கணவன் “ம்…. உனக்கு இது புரியாது. எனக்கு, அது அவ்வளோ முக்கியம் அப்போன்னு. ம்… அது யாருக்கும் புரியாது… ஆனா, அவ்வளோ முக்கியம் எனக்கு அது. 

அது வேணும்.. அதை நான் எடுத்தாதான்.. எனக்கு வாழ்வுன்ற நிலை சக்தி. உன்னால்தான் கிடைச்சுது… உன்னை பார்த்ததால்தான் கிடைச்சுது. அதுதான், சொல்லபோனால்.. நீதான் அந்த பவர்… சக்தி.” என்றான் அமைதியாக,

சக்தி குழப்பமாக தன்னவனை பார்க்க.. 

மனையாளின் அந்த குழப்ப முகம் எப்போதும் போல அவனை ஈர்க்க… அவளின் இதழ்களை மென்மையாக முத்தமிட்டான்.. அவனின் மென்மை அவளுக்கு புதிதாக இருந்தது… எப்போதும் அவளிடம் அவன் வேகம்தான்… தீயாகதான் தீண்டுவான்.. இன்று மெல்ல மெல்ல ஏதோ பூவாக அவளை தீண்டிக் கொண்டிருந்தான்.. சக்தி அதனை கண்மூடி வாங்கிக் கொண்டாள். விடவே முடியாதவனாக தானே தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.

சக்திக்கு என்னவோ ஏதோ என தோன்ற… “என்னங்க…” என்றாள் வாஞ்சையாய்…

அதில் லிங்கா உடைந்தான்… அவளின் மடியில் தலை சாய்த்தான்… “ம்… அப்போ பெரிய பிஸ்னஸ் லாஸ்… இளா…” என்றான்.

சக்தி “இளா மாமா பிரச்சனையா.. அத்தை சொன்னங்க.. நீங்கதான் பொறுப்பா பார்த்தீங்கன்னு சொன்னாங்க” என்றாள் பெருமையாய்.

லிங்கா “ம்… எப்படி பார்த்தேன்னு தெரியுமா… எல்லாம் உன் மூலமாதான்” என்றான் அதிராமல்.

சக்தி நம்பாமல் “ச்சு… என்னங்க…” என்றாள்.

கணவன் “கோவப்பட கூடாது… சக்தி… அப்போ எனக்கு வேற வழி தெரியலை… அத்தோட இது தப்பு இல்லையே… அதான், என்னை அடமானம் வைச்சேன் சக்தி… உங்க அப்பாகிட்ட…” என்றான் பொறுமையாக.

“என்ன அடமானம் அது இதுன்னு…” என்றாள்.

“மாமா, உன்னை கல்யாணம்.. செய்துக்க சொன்னார், பணம் தரேன்னு சொன்னார், அதான்… உடனே கலயாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்… இது யாருக்கும் புரியாது… என்னை நானே பணையம் வைச்சேன் சக்தி… உங்ககிட்ட” என்றான் முகத்தை அவளுக்கு காட்டாமல் திரும்பிக் கொண்டு.

 

[the_ad id=”6605″]

 

 

 

சக்தி “என்னங்க….” என்றாள்.. என்னோட அப்பாவா அப்படி சொன்னது என மனம் அங்கேயும் சென்றது சக்திக்கு.

அதில் சக்தியின் முகம் வாடியது “அதான்.. என்னை நிச்சயத்தில் பார்க்க கூட இல்லையா… ” என்றாள்.. அழுகையில் கண்கள் கலங்க.

கணவன் “நோ… இல்ல சக்தி, அழாத.. ப்ளீஸ்… அப்போது என் பிரச்சனையே வேற, அம்மா சொன்னாங்கல்ல… வீட்டில் நாங்க எல்லோரும் எப்படி இருந்தோம்ன்னு, அப்படி ஒரு நிலையில் நிச்சயம்.. எப்படி சக்தி நான் இயல்பா இருக்க முடியும்…” என்றான்.. உண்மையான வலியை கண்கள் காட்டியது.

சக்தி அமைதியாக யோசித்தாள்… என்ன சொல்லுவது என தெரியவில்லை.. “அப்போ அப்பாதான் பொய் சொன்னாங்களா..” என்றாள்.

“ம்கூம்… அப்படி சொல்ல முடியாது… நானும் எங்க வீட்டில் அப்படிதான் சொன்னேன்… அதனால அவரும் சொன்னார்…” என்றான் மாமனாரை விட்டு கொடுக்காமல்… கொஞ்சம் கரகரப்பான குரலில் மறுத்தான்.

சக்தி “ஆக, ரெண்டுபேரும் ப்ராட் அப்படிதானே…” என்றாள்.

“ச்சு… ஏன் என்னை பிடிக்கலையா.. நான் உன்னை ஒழுங்கா பார்த்துக்கலையா… “ என்றான் சுறு சுறுவென கோவம் கொண்டவனாக.

சக்தி அமைதியாக இருந்தாள் “போனத விட்டுடு சக்தி… இப்போ… இது… நிஜம்… நான்… என்னால… தனியா இந்த ரூமில் இருக்க முடியும்ன்னு தோனல சக்தி… 

ப்ளீஸ்… புரிஞ்சிக்க மாட்டியா… இப்போ கூட பாரேன்… நான் உன்கிட்ட இத சொல்ல கூடாதுன்னு இருந்தேன்.. உன் அப்பாகிட்ட கூட சொல்ல கூடாதுன்னு சொல்லி இருந்தேன்… இப்போ நானே உளறிட்டேன்.. அப்படி உன்மேல பித்தா இருக்கேன்… அதாவது பைத்தியமா இருந்கேன் டி… ப்ளீஸ்…” என்றான் உருகி, கரைந்து.

சக்தி “என்னை வைச்சி நல்லா விளையாடி இருக்கீங்க…” என்றாள்.

“அடிச்சு பல்ல பேத்துடுவேன்… என்னடி விளையாடுனாங்க… என்ன இப்போ, எனக்கு கல்யாணம்தானே செய்து கொடுத்திருக்காங்க… பார்த்தா… என்னை வைச்சு தானே விளையாடி இருக்கேன்.” என்றான் கோவமாக.

மீண்டும் கணவன் “இதே பொண்ணு பார்க்க வந்து கல்யாணம் செய்திருந்தா அமைதியா இருந்திருப்ப… அப்படிதானே… “ என்றான் கோவ குரலில்.

சக்தி “என்னை காதலிக்கிறேன்னு சொன்னது தப்புதானே.. அதனாலதானே நான் உங்க முகத்தை முகத்தை பார்த்தேன்… இப்படி பொண்ணு பார்க்க வந்திருந்தீங்கன்னா… நான் ஏன்… அப்படி எதிர்பார்க்கிறேன்” என்றாள்.. இதை சொல்லும் போது சற்று கூச்சமாக இருந்ததுதான் அன்றைய நிலையில்.. ஆனால், தவறெல்லாம் இவர்கள் செய்துவிட்டு… என்னை அன்று என்ன பாடு படுத்தினான் என கொஞ்சம் உரிமையான கோவம் வந்தது மனையாளுக்கு..

சட்டென தளர்ந்தான் காதல் கணவன்… “கால்ல விழட்டா, தப்புதான்… நான்தான் தப்பு பண்ணினேன்… என்னை மன்னிச்சிடு…” என்றான் தன் நிலை தாழ்ந்து.. கூச்சமே இல்லாமல் மன்னிப்பு கேட்டான்.

சக்தி அமைதியாக இருக்கவும் “சக்தி…. என் சக்தி… என் ப்ரியா… என் ப்யார்…” என அழைக்க.. சக்தி அமைதியாக இருந்தாள்.

மீண்டும் மீண்டும் லிங்கா அவளிடம் மன்னிப்பு கேட்டான்… “சாரி.. சாரி… எனக்கு இத தவிர வேற சொல்ல தெரியலை… என் நிலையை கொஞ்சம்… யோசிக்க கூடாதா…” என்றான்.

சக்தி அமைதியாக இருந்தாள் என்ன செய்வது என தெரியவில்லை… மீண்டும் மடியில் படுத்துக் கொண்டான்.. கணவன். அவனை விலக்கவில்லை.. மெல்ல அவளின் முகவடிவை அளக்க தொடங்கினான்.. அதையும் தடுக்கவில்லை சக்தி, அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

லிங்கா எதையும் எதிர்பார்க்காமல் அவளின் மடியிலேயே… அவளின் அந்த சிறு மெல்லிடையை கட்டிக் கொண்டு… நிம்மதியாக உறங்கினான்.. 

 

[the_ad id=”6605″]

 

 

 

சக்தியின் காதல் கொண்ட மனது இதையெல்லாம்… மனதில் அசைபோட்டு கொண்டிருந்தது… லிங்காவை இன்னும் அவளால்… எந்த கட்டுக்குள்ளும் அடக்க முடியவில்லை… நீண்டு.. வளர்ந்து… கிடந்து… சாய்ந்து… என அவனின் பராக்ரமம் சொல்ல முடியாத அளவை கொண்டு நின்றது.

இதோ இப்போதும்… அமைதியாக உறங்குகிறான்… முகத்தை என் வயிற்றிலிருந்து எடுக்க மாட்டேன் என பிடிவாதமாக உறங்குகிறான்.. இவனை நான் ஒதுக்க முடியுமா… அப்படி நினைக்க கூட முடியவில்லை அந்த காதல் மனைவியால்..  லேசாக வெட்கமான கோவம் வந்தது… “ச்சீசி…” என தன்னை தானே சொல்லிக் கொண்டாள்.

அருகில் இருந்த போனை எடுத்தாள்… 

“அரசனே… அடிமையே….

என் கிறுக்கனே… அரக்கனே…

என் இமையே இமையே… இமைக்காதே…

இது கனவா.. நனவா… குழப்பம் சமைக்காதே….

ஏய்.. உன்னை ஏய் உன்னை.. சிருசிருதாய் எய்த்தேனே…

ஓஓஒ…

நான் உந்தன் வலையில் விழுந்தேனே…

அஹா… ஹா…” என சத்தமாக ஒலிக்க தொடங்கியது

அதில் லிங்கா நிமிர்ந்தான்….

மனையாள் சுவாரசியமாக பாடிக் கொண்டிருந்தாள்.. அந்த பாட்டுடன் சேர்ந்து…. 

“புல்லாங்ககுழலே…. வெள்ளை வயலே…

பட்டாச்சொலியே… கிட்டார் ஒலியே…

மிட்டாய் குயிலே.. ரெக்கை முயலே…” என அவள் பாட…

“ப்ரியா…. “ என சொல்லி அவளை அனைத்துக் கொண்டான்.

“போடா….” என்றாள் கோவமாக…

லிங்கா நிஜமாக அரக்கனாக மாறினான்.. அந்த அழகியிடம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!