Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நமக்காக💞17

தலையில் இருந்த பூவைபிய்த்து எறிந்தவள் சுடிதாரை கழட்டி வீசிவிட்டு நைட்டிக்கு மாறினாள்.

மணி ஏழை கடந்துவிட்டது….

என்ன பாப்பாத்தி மருமக நடமாட்டத்தை காணோம்? பூமாலை மூடியிருந்த அறைக் கதவை பார்த்து கேட்டார்.

பாப்பாத்தி நடந்ததை கூறினார்.



Advertisement

அவன் சூழ்நிலை என்னவோ? என்றார் புரிதல் கொண்ட தந்தையாக….

கண்ணீருடன் கவிழ்ந்து படுத்திருந்தாள் சுபி.

மொபைல் அழைப்பு…. கணவனோ என்று ஆங்காரத்துடன் எடுத்து பார்த்தாள்.

Advertisement

நவமணி தான் போன் பண்ணினார்.

Advertisement

சொல்லுமா என்றாள் கலங்கிய விழிகளை துடைத்துக் கொண்டு.

சாயந்திரம் வரேன்னு சொன்னீங்க இன்னும் காணோம் எங்கே வந்துட்டு இருக்கீங்க? என்றார் நவமணி.

இருக்கும் கோபத்தில் காச் மூச் என்று கத்தி விடப்போகிறோம் என்ற பயம் சுபிக்கு. ஒரு நிமிடம் ஆழ மூச்சு எடுத்து தன்னை நிதானித்துக் கொண்டவள்,

Advertisement

அவருக்கு ஏதோ அவசர வேலையாம் அதுதான் இன்னைக்கு வர முடியலை என்றாள்.

அப்படியா….சரி மா, நைட்ல எங்க வந்து கஷ்டப்படுவீங்களோனு தான் போன் பண்ணினேன். உங்க அப்பா வேற ஒரே புலம்பல்… பிள்ளைய காணோம்… பைக்ல இவ்வளவு தூரம் வரணுமான்னு.

உனக்கு பிடிக்குமேனு அடை மாவு அரைத்து  அவியல் எல்லாம் செய்து வைத்தேன் என்றார் ஆசையாய்.

இன்னும் கொஞ்சம் கலங்கியது அவளுக்கு.

சாப்பிட்டியா? என்றார்

ம்ம்ம்ம் என்றாள்.

உங்க அண்ணி நீ வரேன்னு குதூகலாமா காத்திருக்கா…. என்றார் பெருமையாய்.

சாரிம்மா என்றாள் சலிப்புடன்.

“———————“

மணி எட்டரை ஆகப்போகுது இந்த பொண்ணு என்ன பண்ணுது? பாப்பாத்தி தயக்கமாய் கதவை தட்டினார்.

முனுமுனுப்புடன் கதவை திறந்தவளின் முகம் பார்த்து கொஞ்சம் சங்கடமாகிவிட்டது மாமியாருக்கு.

வாம்மா சாப்பிடலாம் என்றார் அக்கறையாக…

எனக்கு பசி இல்லை நீங்க சாப்பிடுங்க என்றாள் முகத்தை வேறு புறம் திருப்பி…

அது எப்படி பசிக்காம போகும்?  நீ மதியமே ஒழுங்கா சாப்பிடலை  ஒரு தோசையாவது சாப்பிடும்மா பரிவுடன் அழைத்தார்.

அத்தை எனக்கு நிஜமாவே பசி இல்லை அவர் வந்த உடனே சாப்பிட்டுக்கிறேன் நீங்க சாப்பிட்டு போய் படுங்க என்றாள்.

அவன் எந்நேரத்துக்கு வருவானோ…. அவனை எதிர்பார்த்து வயித்தை காயப்போடாதேன்னு தினமும் சொல்றேன்  கேட்க மாட்டேங்கிற…. உரிமையாய் திட்டி விட்டுப் போனார் பாப்பாத்தி.

“——————-“

என்ன அவசரமான வேலையாக கூட இருக்கட்டும்… இத்தனை முறை அழைத்து இருக்கிறேனே அவங்க அம்மாவும் அழைத்தாங்களே….. போனை எடுத்துப் பார்க்கக் கூடவா நேரம் இருக்காது? எவ்வளவு அலட்சியம்.

தனக்கு பிடித்ததாக சமைத்து வைத்து காத்திருந்த அம்மாவை எண்ணி, தன் வரவை ஆவலாய் எதிர்பார்க்கும் அண்ணியை எண்ணி அழுகையாய் வந்தது சுபிக்கு.

பொண்டாட்டி என்றால் அவ்வளவு இளப்பமா? சொன்னால் சொன்ன சொல்லை நிறைவேற்ற வேண்டாமா?

நானா கேட்டேன் ஊருக்கு போகணும்னு சும்மா இருந்த என்னை உசுப்பி ஊருக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி இப்படி ஏமாத்திட்டாரே….. ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது அவளுக்கு.

வீட்டில் இருக்கும் பொண்டாட்டி தானே என்ற அலட்சியம் தானே இப்படி நடக்க வைக்குது….? நாமும் வேலைக்கு போய் சம்பாதிக்கும் மனைவியாக இருந்தால் ஒரு வேலை மரியாதை கிடைக்குமோ…. எதை எதையோ எண்ணி தானாக புலம்பி அவளாகவே தன்னை மட்டம் என்று எடுத்துக் கொண்டாள்.

“——————“

மீண்டும் வந்து சாப்பிட அழைத்தார் பாப்பாத்தி.

புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தவள் கடுப்புடன் மூடி வைத்துவிட்டு…. அத்தை ப்ளீஸ் நான் சாப்பிட்டுக்கிறேன் நீங்க போய் படுங்க என்றாள் ஒருவித சங்கடத்துடன்.

ஒரு சில நேரம் ராத்திரிக்கு வராம கூட போயிடுவான். அதுக்காக சாப்பிட்டாம இருந்துடாதம்மா.

சரிங்கத்த என்றாள் இறுகிய குரலில்.

ராத்திரிக்கு வர முடியலைன்னா போன் பண்ணி சொல்லிடுவானே… தானாக பேசிக் கொண்டே போனார் பாப்பாத்தி.

என்னை கண்டா அவ்வளவு பிடிக்குது உங்க புள்ளைக்காரனுக்கு…. ஏன் போன் பண்ணி சொல்ல போறாரு? உள்ளுக்குள் கொதித்து போனாள்.

நேரே சமையலறைக்குள் நுழைந்தவள் தோசை மாவு, சட்னியை எல்லாம் எடுத்து பிரிட்ஜுக்குள் வைத்து மூடிவிட்டு ஒரு சொம்பு தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்தாள்.

பசிக்காமல் இல்லை…. சாப்பிட தான் பிடிக்கவில்லை.வயிறு பிரட்டி கொர கொரவென்று சத்தமிட்டது. மீண்டும் கொஞ்சம் தண்ணீர் குடித்தவள் அமைதியாய் வந்து படுத்துக் கொண்டாள்.

“————————-“

பதினொன்றே கால் மணிக்கு வந்தான்.

மனைவி உறங்குகிறாள் என்பதால் ஓசையின்றி உள்ளே வந்தவன் விளக்கு போடாமல் மெல்ல குளியலறை புகுந்து குளித்து உடைமாற்றி வந்து படுத்தான்.

பயங்கர பசி அவனுக்கு…. எழுந்து போய் சாப்பிடும் அளவிற்கு தெம்பில்லை. அவ்வளவு அசதி… மதியமும் சாப்பிடவில்லை. டேபிலில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ஒரே மடக்கில் குடித்தவன் அயர்ந்து கண்மூடிவிட்டான்.

அவன் செயல்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள் அவன் தர்மபத்தினி. பின்னே…. அவள் உறங்கினால் தானே….?

அவன் உள்ளே நுழையும்போதே கண்டு கொண்டாள். உறங்குவது போல் பாசாங்குடன் கண்களை அழுத்தமாய் மூடிக்கொண்டாள்.

அவன் படுத்தவுடன் உறங்கிவிட்டான். அவளுக்கு தான் அவ்வளவு சீக்கிரம் உறக்கம் தழுவவில்லை.

மூஞ்சிய பாரு… பெரிய கலெக்டர் இவரு! ரொம்ப பிஸி… எவ்வளவு சீன்…. பொருமிதள்ளினாள்.

“——————-‘

காலையில் ஐந்தரைக்கு அவள் எழுந்து விட்டாள். கடுமையான தலைவலி. இரவு சரியாக உறங்கவில்லை அல்லவா?

அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் கணவன்…

தூங்குறதை பாரு கும்பகர்ணன் மாதிரி…. மனதிற்குள் வைதாள்.

எழுந்து தன் வேலையை கவனிக்க சென்றுவிட்டாள்.

வாசல் பெருக்கி தண்ணீர் தெளித்து வைத்திருந்தார் பாப்பாத்தி….. கோலம் போட்டு முடித்தவள் டீ குடிக்க கிச்சனுக்கு சென்றாள்.

வாம்மா…. ராத்திரி மன்னர் வந்தானா? கவலையாய் கேட்டார் பாப்பாத்தி.

ம்ம்ம்ம்ம்ம் என்றாள் வேண்டா வெறுப்பாய்.

எப்போ வந்தான்?

தெரியல என்றாள் கடுப்புடன்.

சாப்பிட்டானா?

பதில் சொல்லாது வெளியேறிவிட்டாள்.

ஏற்கனவே தலைவலி கொல்லுது. இந்தம்மா வேற கேள்வி கேட்டு உசுர வாங்குது. நொந்து கொண்டாள்.

மருமகள் மனமறிந்தவர் அவரே டீ கொண்டுவந்து கொடுத்தார்.

டீ குடித்துக் கொண்டிருந்தவளின்முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

என்னத்த காலை டிபன்? தோசை மாவு கொஞ்சம் தான் இருக்கு. அவர் எதுவும் பேசும் முன் அவள் பேச்சை மாற்றினாள்.

சேமியா கிச்சடி செய்துடுவோமா என்றார்.

சரிங்கத்த… துணி துவைச்சுட்டு வரேன் என்றாள்.

“———————“

உருண்டு புரண்டு உறக்கம் கலைந்தவன் மணியை பார்த்து சட்டென்று எழுந்து அமர்ந்து விட்டான்.

ஏழு ஆகிடுச்சா? கொட்டாவி விட்டப்படி எழுந்தவன் பல் துலக்கி வந்தான். மீண்டும் கட்டிலில் அமர்ந்தவன் சுப்பு டீ என்றான்…. இன்னும் குறையாத சோர்வுடன்.

துணி காய வைத்தவள் காதில் விழாதது போல் தோட்டத்திலேயே நின்று கொண்டாள்.

பாப்பாத்தி கொண்டு வந்து டீ கொடுத்தார்.

எங்கம்மா சுப்ரஜா?

துணி துவைக்கிறாப்பா!

ராத்திரி எத்தனை மணிக்கு வந்த?

பதினோரு மணிக்கு மேல ஆகிடுச்சும்மா என்றான்.

போன் பண்ணா எடுக்கவே இல்லை… பாவம் சுபிக்கு ரொம்ப வருத்தம் போல…. ராத்திரி சாப்பிடலைன்னு பார்க்கிறேன்.வருத்தமாய் சொன்னார்.

ஒரு பிரச்னையான கேசும்மா… அதுதான் போன் அட்டன் பண்ற சூழ்நிலை இல்லை.

எனக்கு புரியுது மன்னரு, உன் பொண்டாட்டிக்கு புரிஞ்சுக்க கொஞ்ச காலம் ஆகும்.

சரிம்மா நான் பேசிக்கிறேன்.

“——————–“

கிச்சடியும் தேங்காய் சட்னியும் கொண்டு வந்து வைத்தாள்.

நிமிர்ந்து பார்க்கவும் இல்லை அவனுடன் பேசவும் இல்லை. பரிமாறிவிட்டு உள்ளே போய்விட்டாள்.

சாப்பிட்டு தங்கள் அறைக்குள் நுழைந்தவன் தலையணைக்கு உறை மாட்டிக் கொண்டிருந்த மனைவியிடம் வந்தவன் சுப்பு கிளம்பு ஊருக்கு போயிட்டு வரலாம் என்றான்.

அவள் பதில் பேசாது அழுக்கு உறைகளை எடுத்துக் கொண்டு வெளியேற முயன்றாள்.

அவள் கரம் பற்றி நிறுத்தியவன் சுப்பு உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் சாப்பிட்டு கிளம்பு என்றான்.

அவன் கரத்தை விலக்க முற்பட்டாள். போலீஸ்காரன் பிடி ஆயிற்றே…

கிளம்புன்னு சொன்னேன் என்றான் சற்று ஆயாசத்துடன்.

நான் எங்கேயும் வரலை என்று பலத்தை திரட்டி அவன் கரத்தை தட்டிவிட்டாள்.

என்னடி உன் பிரச்னை? சலிப்பு எட்டிப்பார்த்தது அவன் குரலில்.

அவன் முகத்தை பார்க்காமல் உஷ்ண பார்வையை எங்கோ செலுத்தினாள்.

நேத்து பெரிய கேஸ் ஒன்னு…. ஸாரி போன் கால் எதுவும் அட்டன் பண்ண முடியலை. பெரிய பிராப்ளம்… சோர்வுடன் கண் மூடினான் நாற்காலியில் சரிந்து.

அவள் விறுவிறுவென வெளியேறி தலையணை உறைகளை சர்ப் பவுடர் போட்டு ஊற வைத்தாள்.

சுபிம்மா உனக்கு போன் என்று மருமகள் கையில் கொடுத்துவிட்டு போனார் பாப்பாத்தி.

ஹலோ க்கா சொல்லுக்கா

குட்டி உன் வீட்டுக்காரர் நண்டு சாப்பிடுவாரா? என்றாள் தேவிகா

எதுக்கு?

எதுக்கா…? வீட்டுக்கு வர  மாப்பிள்ளைக்கு அசைவம் சமைச்சு போட வேண்டாமா? சிரித்தாள்.

வீட்டுக்கா? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

மாப்பிள்ளை போன் பண்ணி பேசினாறே… கிளம்பிட்டோம் மதிய சாப்பாட்டுக்கு வந்துடுவோம்னு.

ஓ….. இவன் திருவிளையாடலா?

குட்டி….. லைனில் இருக்கியா?

ம்ம்ம்ம் என்றவள் அவர் அசைவம் ரொம்ப விரும்ப மாட்டார் என்றாள்.

சரி நேரமா வந்து சேருங்க என்றாள் தேவிகா.

“——————-“

குறும்பூர் போக நேரம் இருக்காது திருச்சி போயிட்டு வந்துடுவோம் என்றான்.

பதில் பேசாது அமைதியாக கிளம்பினாள்.

பைக்கில் கள்ளக்குறிச்சி வந்து அங்கு ஸ்டாண்டில் பைக்கை நிறுத்திவிட்டு திருச்சிக்கு பஸ் பிடித்தனர்.

பேருந்து பயணத்தில் கூட அவள் மௌனமாகவே வந்தாள்.

சுப்பு சின்னக் குழந்தை மாதிரி பிஹேவ் பண்ற!  என் சூழ்நிலை உனக்கு புரியலையா?

“புரிந்து கொள்ளேன் ப்ளீஸ்” என்ற மன்றாடல் அந்த குரலில் இருந்தது.

வேதாளம் மரம் இறங்கவில்லை.

ஸாரி  ஃபோன் அட்டன் பண்ணி பேசற அளவிற்கு நேற்று சூழ்நிலை இல்லை. அரசியல்வாதி பொண்ணு சூசைட் அட்டம்ட்.

அவள் ம்ம்ம்ம்ம்ம் சொல்ல கூட இல்லை.

அவனுக்கு மேற்கொண்டு என்ன பேசவேண்டும் என்று தெரியவில்லை. மன்னருக்கு மனம் சுணங்கி போய்விட்டது. இந்த பெண் ஏன் இப்படி இருக்கிறாள்?  நேற்று இல்லை என்றால் இன்று அழைத்து போகிறேன் அவ்வளவு தானே… இது என்ன பிடிவாதம். சொல்வதை புரிந்து கொள்ள தெரியாத அளவிற்கு அவள் ஒன்றும் சிறுபிள்ளை இல்லையே..

இந்த பிடிவாதம் அவனுக்கு  பிடிக்கவில்லை.

அரேஞ்ச்டு மேரேஜில் முதல் படிநிலையே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் தானே…

இதோ ஒரு மாதம் ஆகப்போகிறது திருமணம் முடிந்து…. எந்த செயலிலும் என் விருப்பத்திற்கு அவளை வளைக்கவில்லையே… அவளுக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறேனே…

என்னடா இது வாழ்க்கை என்று நிறைய பேர் புலம்ப கேட்டிருக்கிறான். இன்று தானே புலம்பும் நிலை வந்துவிடுமோ என்று பயந்தான்.

அதன் பிறகு அவன் எதுவும் பேசவில்லை.

இன்னும் அசதி மிச்சம் இருந்தது. அடுத்த பத்து நிமிடத்தில் உறங்கிவிட்டான்.

இவனை என்ன செய்தால் தகும் என்னும் அளவிற்கு அவளுக்கு கோபம் இன்னும் இருந்தது.

“—————————-“

இரண்டே முக்கால் மணி நேரத்தில் வர வேண்டிய பயணம் டிரைவரின் உருட்டலில் மூன்று மணி நேரம் ஆகி விட்டிருந்தது.

மணி ஒன்றரை ஆகியிருந்தது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இறங்கி பேருந்து நிலையத்தை ஒட்டிய ஜூஸ் செண்டரில் கிரேப் ஜூஸ் வாங்கி கொடுத்தான். பசியில் அவள் சோர்ந்திருப்பது புரிந்து தான் ஜூஸ் வாங்கி கொடுத்தான்.

அவள் பக்கத்தில் இருக்கும் பழமுதிர் சோலையை பார்த்துக் கொண்டிருக்க புரிந்து கொண்ட மன்னர் அந்த கடையில் பழம் வாங்கினான்.

அக்கா மகள் லக்க்ஷனாவிற்கு எதுவும் வாங்கவில்லையே என்று யோசித்தாள்.

எதுவும் வாங்க வேண்டுமா என்று அவனும் கேட்கவில்லை.

தேவிகா ஃபோன் செய்திருந்தாள் தன் கணவரை CBS அனுப்புகிறேன் என்று.

வேண்டாம் பஸ் பிடித்து வந்துவிடுகிறோம் என்றான்.

மினி பஸ் பிடித்து ஆறு கிலோ மீட்டர் தூரம் உள்ள தில்லை நகர் சென்றடைந்தனர்.

அங்கு தென்னூர் ரோட்டில் இறங்கிய உடனே அங்குள்ள புகழ் பெற்ற மஹாவீர் ஸ்வீட் ஸ்டாலில் இனிப்பு காரம் கேக் என்று நிறைய வாங்கினான்.

அம்மா வீட்டுக்கு போகும் போது ஸ்னாக்ஸ் வாங்கினப்போ அவ்வளவு முறைச்சாரு….. இப்போ இவ்வளவு வாங்குறாரு. உதட்டை பிதுக்கினாள்.

ஸ்ரீ சுப்பிரமணிய சாமி சந்நிதி தெருவில் உள்ள தேவிகாவின் வீட்டிற்குள் நுழையும் போது மணி 2.30 தாண்டி விட்டது.

வாங்க வாங்க என்று இன்முகமாய் வரவேற்றனர் தேவிகாவும் அவள் கணவர் சௌந்தர் ராஜனும். சித்தி என்று பாய்ந்து வந்து கட்டிக் கொண்டாள் லக்க்ஷனா.

வாங்க என்று உரக்க அழைத்தார் தேவிகாவின் மாமியார் பர்வதம்.

பசியோட இருப்பீங்க வாங்க முதல்ல சாப்பிடுங்க என்று அழைத்தாள் தேவிகா.

சாதம், சாம்பார், ரசம் பொரியல், கூடுதலாக இறால் தொக்கும் முட்டை ஆம்லெட்டும் செய்திருந்தாள்.

சாப்பிட்டு முடித்த பிறகே தெம்பாய் உட்கார்ந்து பேசினாள் சுப்ரஜா.

“————————-“

நேத்தே குரும்பூர் வறீங்கன்னு தேவிகா சொன்னா என்றார் சௌந்தர் ராஜன்.

இல்லண்ணா நேத்து கிளம்ப முடியல…. ஒரு பிரச்னைக்குரிய கேஸ்.

என்ன அடிதடியா? வெட்டு குத்தா? சிரித்தார்.

Self immolation என்றான்.

வாட்? அதிர்ந்து விட்டார் சௌந்தர் ராஜன்.

பொலிட்டிஷியன் பொண்ணு! இருப்பதாறு வயசு.

இன்னும் அதிர்ச்சி!

ஏன்?

லவ் மேரேஜ்,பேரன்ட்ஸை எதிர்த்து கல்யாணம் பண்ணி இருக்காங்க.

அப்புறம் ஏன்? தேவிகாவும் அங்கேயே அமர்ந்து விட்டாள்.

ஹஸ்பன்ட் டார்ச்சரா?

இல்லை…. பொண்ணோட பிடிவாதம், ஆணவம் என்றான் சலிப்புடன்.

எல்லோரும் ஒரு சேர அவனையே பார்க்க….

அவ ஹஸ்பண்ட் தங்கமான ஆளா இருக்கான்.  அவளை ராணி மாதிரி தாங்கி இருக்கான் IT ல ஒர்க் பண்றான்.

எதுக்கெடுத்தாலும் பிடிவாதம், அழுகைன்னு அவனை படுத்தி இருக்கா… அவனும் அவ ஆசைப்பட்ட மாதிரி எல்லாம் தான் வாழ்ந்திருக்கான்.

இன்னைக்கு மூட் ஆஃப்…. நீங்க வேலைக்கு போக வேண்டாம் வாங்க மூவிக்கு போகலாம்னு கூப்பிடிருக்கா.

சிக் லீவ் இல்லை…. இன்னைக்கு லீவ் போட முடியாது சன்டே பார்த்துக்கலாம்னு சொல்லியிருக்கான்.

அவ்வளவு தான் பெட்ரோல் எடுத்து ஊத்திட்டு அவனை மிரட்ட நினைத்து தீ வச்சிக்கிட்டா.

அப்பன் அரசியல்வாதி அதுவும் ஆளுங்கட்சி.

பொண்ணு பக்காவா ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்கா.

அந்த பொண்ணு எப்படி இருக்கா?

எப்படியும் பிழைச்சுக்குவான்னு நினைக்கிறேன் என்றான் எரிச்சலுடன்.

————தொடரும்——–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!